புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜய வருட ராசிபலன்கள் - ஜோதிட ரத்னா கே.பி.வித்யாதரன்


   
   

Page 5 of 5 Previous  1, 2, 3, 4, 5

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Mar 24, 2014 1:18 am

First topic message reminder :






krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Mar 25, 2014 1:17 pm

சிவா wrote:
பாலாஜி wrote:பகிர்வுக்கு நன்றி தல

மகிழ்ச்சி தல... இப்பொழுதுதான் இதன் முதல் பதிவில் உள்ள படங்களை அழுத்தினால் அந்தந்த ராசிபலனைக் காட்டும் சுட்டிகளை இணைத்து முடித்தேன்!

நன்றி சிவா புன்னகை சூப்பர் ஆக இருக்கு அந்த பட்டன்கள் !  அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் 



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Mar 25, 2014 1:23 pm

பாலாஜி wrote:
ஆமாம் தல இவங்க Bad Boys  என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது  .இவங்க கூட நாம சேரவேண்டாம்
ஆமாம் வாங்க நாம அப்படியே பம்புசெட் பக்கமா போயிடுவோம், இளநீர் குடிச்சா உடம்புக்கு நல்லதாம் (மிக்சிங்க்கு பயன்படுத்திப்போம்)

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Tue Mar 25, 2014 3:41 pm

ராஜா wrote:
பாலாஜி wrote:
ஆமாம் தல இவங்க Bad Boys  என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது  .இவங்க கூட நாம சேரவேண்டாம்
ஆமாம் வாங்க நாம அப்படியே பம்புசெட் பக்கமா போயிடுவோம், இளநீர் குடிச்சா உடம்புக்கு நல்லதாம் (மிக்சிங்க்கு பயன்படுத்திப்போம்)

சரி வாங்க எங்க ஊர்ல எங்களுக்கு இரண்டு பம்புசெட் இருக்கு .....இளநீர் , பனை நீர் எல்லாம் கிடைக்கும் வாங்க



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Mar 27, 2014 7:00 am

krishnaamma wrote:
சிவா wrote:
பாலாஜி wrote:பகிர்வுக்கு நன்றி தல

மகிழ்ச்சி தல... இப்பொழுதுதான் இதன் முதல் பதிவில் உள்ள படங்களை அழுத்தினால் அந்தந்த ராசிபலனைக் காட்டும் சுட்டிகளை இணைத்து முடித்தேன்!

நன்றி சிவா புன்னகை சூப்பர் ஆக இருக்கு அந்த பட்டன்கள் !  அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் 

நன்றி அக்கா!

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Apr 12, 2014 3:13 am

ஜய வருட ராசி பலன்கள் - மங்கையர் மலர்


மேஷம்: இந்த ஜய வருடம் உங்களுக்கு பல மேன்மைகள் தரக்கூடியது. எதிலும் நிதானமாகச் செயல்பட்டால் வெற்றி நிச்சயம். எக்காரணம் கொண்டும் மேலதிகாரிகளிடம் வாக்குவாதம் வேண்டாம். மிக மென்மையான குணம் படைத்த நீங்கள், மரியாதை கொடுக்காத இடத்திலிருந்து சாமர்த்தியமாக நகர்ந்து விடுவீர்கள். எந்தக் காரியத்தையும் திட்டமிட்டுச் செய்த வெற்றி காண்பீர்கள். அருகாமையில் உள்ள சிவன் கோயில் நந்தவனத்தில் ஒருமுறை வில்வமரக்கன்றை உங்கள் கைகளால் நட்டு விடவும் சிரத்தையுடன் குலதெய்வ வழிபாட்டினை மேற்கொள்வதன் மூலம் இந்த ஒரு வருடத்திற்குள் உங்கள் வாழ்வில் மகிழ்ச்சிகரமான காரியங்கள் நிறைவேறும்.

பரிகார ஸ்தலம்: வருடத்திற்கு ஒருமுறை பஞ்ச பூத ஸ்தலங்கள் ஏதேனும் ஒரு கோயிலுக்கு சென்று வரவும். உதாரணம் (காஞ்சிபுரம், காளஹஸ்தி, திருவண்ணாமலை, திருவானைக்காவல் மற்றும் சிதம்பரம்)

குறிப்பு: கோபத்தை குறைத்துக் கொள்ளுங்கள்.




ரிஷபம்: பிரிந்து போனவர்கள் ஒன்று கூடும் வருடம் இது. வழக்குகளில் வெற்றியும், வெளிநாடு செல்லும் வாய்ப்பும் ஏற்படும். பிறரை தம் வசப்படுத்தி கொள்ளும் திறமை உடைய நீங்கள் திட்டங்கள் தீட்டுவதில் வல்லவர்கள். விட்டுக் கொடுக்கும் மனப்பான்மையை சற்று வளர்த்துக் கொள்ள வேண்டும்.

காலத்தை வீணடிக்காமல் உடனுக்குடன் செயல்படுவீர்கள். இராஜபோகம் அனுபவிப்பதில் உங்களுக்கு நிகர் நீங்கள்தான். தியாகம், ஆன்மிகம், போன்றவற்றில் ஈடுபாடு இருக்கும்.

இளமையிலேயே முதிர்ந்த அறிவு பெற்ற நீங்கள் கடின உழைப்பாளிகள். ஆடி மாதம் பதினாறு சுமங்கலிகளுக்கு தாம்பூலத்துடன் தளசிக்கன்றை கொடுக்கவும்.

பரிகார ஸ்தலம்: வருடத்திற்கு ஒருமுறை நவதிருப்பதி சென்று வரவும். (இடம்: திருநெல்வேலி)

குறிப்பு: கவலைகளைத் தவிர்த்திடுங்கள்




மிதுனம்: உங்களுடைய திறமைகள் அனைத்தும் வெளிக்கொண்டு வரும் அருமையான வாய்ப்பு இந்த வருடம் பெறுவீர்கள். உணர்ச்சி வசப்பட்டு வாக்குறுதிகளைக் கொடுக்காதீர்கள். வாழ்க்கைப் பாதையில் பலமான அடி வீழ்ந்தாலும் கூட அதி விரைவில் பழைய நிலைக்குத் திரும்பி விடுவீர்கள். மூடர்களையும், முட்டாள்களையும் அண்டவிடமாட்டீர்கள். உங்கள் சக்திக்கு மிஞ்சி உழைக்க நேரிடுவதால் உங்கள் உடல் நலத்தை நீங்கள்தான் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். இந்த வருடம் மேன்மைகள் பல பெற, ராஜ மாதங்கி பூஜையை செய்து வரவும், கோயிலில் நடைபெறும் யாகத்திற்கு பசு நெய்யை வாங்கித் தரவும். வெள்ளைநிறப் பூக்கள் கொண்ட மரக்கன்றை ஆலய நந்தவனத்தில் உங்கள் கைகளால் ஒருமுறை நடவும்.

பரிகார ஸ்தலம்: வருடத்திற்கு ஒரு முறை கேரளாவில் உள்ள அனந்த பத்மநாப சுவாமி கோயிலுக்கு சென்று பெருமாளை தரிசிக்கவும்.

குறிப்பு: பதற்றம் வேண்டாம் அவசர முடிவுகள் எடுக்காதீர்கள்.




கடகம்: பரந்த உள்ளம் கொண்டவர்கள் வேகமாகவும், விறுவிறுப்பாகவும், செயல்படக் கூடியவர்கள். நீங்கள் பணத்தை ஒரு பொருட்டாகவே மதிக்கமாட்டீர்கள். நல்லவர் யார் என்று அறிந்துக்கொண்டு நீங்கள் செயல்பட வேண்டும். உங்கள் மனதை நெருடும் நிகழ்ச்சிகளில் இருந்து நீங்கள் வெளி வரவேண்டும். மற்றவர்களுடைய உணர்வுகளை மதிக்கக் கற்றுக் கொள்ளுங்கள். அம்பாள் பூஜை, செய்வீர்களானால் உங்களுடைய காரியங்கள் அனைத்தும் நிறைவேறும். வன்னி மரத்து பிள்ளையாரைத் தொடர்ந்து ஒரு மண்டலம் சுற்றி வருவீர்களானால் உங்களுடைய புதிய முயற்சிகள் அனைத்தும் வெற்றிபெறும்.

பரிகார ஸ்தலம்: வருடத்திற்கு ஒருமுறை ராமேஸ்வரத்தில் உள்ள ராமநாத ஈஸ்வரரைத் தரிசித்த வரவும்.

குறிப்பு: குடும்பத்தாரிடம் எதையும் மறைக்க வேண்டாம்.





சிம்மம்: சுய கௌரவம் மிக்கவர்கள். பணம் கிடைத்துவிட்டால், அதன் அருமை தெரியாமல் செலவு செய்துவிடுவீர்கள். இயற்கையாகவே கூர்மையான அறிவு படைத்தவர்கள். வசதிக்குறைவு, அவமானத்தைத் தாங்க மாட்டீர்கள். உங்களைப் புகழ்ந்து பேசினால், எத்தகைய கடினமான வேலையும் செய்து முடித்து விடுவீர்கள். உங்களுக்கு நல்ல வாழ்க்கைத் துணை அமைந்துவிட்டால் உங்களது வாழ்க்கை பிரகாசமாக இருக்கும். எதைச் செய்தாலும், சிறப்பாக செய்ய வேண்டும் என்று எண்ணுவீர்கள். உண்ணும் உணவிலும், தூக்கத்திலும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். வயிற்றில் ஏதேனும் நோய் பாதிக்கப்படும். ஜாக்கிரதையாக இருக்கவும்.

பரிகார ஸ்தலம்: வருடத்திற்கு ஒருமுறை கொல்லிமலை சென்று அருபலீஸ்வரரை தரிசித்து வரவும்.

குறிப்பு: குடும்பத்தாரை அனுசரித்து செல்லவும்.




கன்னி: உங்களுக்குத் தெரியாதது ஒன்றுமில்லை. சகல கலாவல்லவர்கள் நீங்கள். எந்த செயலையும் அலசி ஆராய்ந்து சரியான முடிவை எடுப்பீர்கள். உங்களுக்கு ஜோதிடம், நடிப்பு, மருத்துவம், கணக்கு, இயல், இசை, நாடகம், எதுவாக இருப்பினும் இயல்பாக வரும். இளமையில் கஷ்டப்பட்டு, முதுமையில் வளமாக வாழ்வீர்கள். தெய்வ அனுகூலம் அமையப் பெற்றவர்கள். இடையிடையே இடையூறு ஏற்படும். இறுதி வெற்றி உங்களுக்கே. உங்களுடைய இஷ்ட தெய்வத்தை பூஜை செய்ய மறக்காதீர்கள்.

பரிகார ஸ்தலம்: வருடத்திற்கு ஒருமுறை மதுரையில் உள்ள கள்ளழகரைத் தரிசித்து வரவும்.

குறிப்பு: யாரையும் பகைத்துக் கொள்ள வேண்டாம்.




துலாம்: கற்பனை வளம்மிக்கவர்கள். விட்டுக் கொடுக்கும் சுபாவம் உடையவர்கள் உங்களுடைய குழந்தைகளை உயர்ந்த நிலைக்கு கொண்டு வர பாடுபடுவீர்கள். இந்த ராசிப் பெண்கள் சிறந்த இல்லத்தரசிகளாக விளங்குவீர்கள். உங்களை மற்றவர்கள் புரிந்து கொள்வது அரிது. நீங்கள் பிறர் செய்யும் தவறுகளை எளிதில் மன்னித்து விடுவீர்கள். அநாதைக் குழந்தைகளுக்கு உங்களால் இயன்ற உதவி செய்யுங்கள். இது உங்களது பிற்கால சந்ததியைக் காக்கும்.

பரிகார ஸ்தலம்: வருடத்திற்கு ஒருமுறை திருநெல்வேலியில் உள்ள நாங்குநேரி வானமாமலை பெருமாளைத் தரிசித்து வரவும்.

குறிப்பு: பிரச்னைகளை எதிர்க்கொள்ளும் திறன் வேண்டும்.




விருச்சிகம்: இளமையில் கஷ்டப்பட்டாலும் பிற்காலத்தில் உயர்ந்த நிலையை அடைவீர்கள். எந்தக் காரியத்தை செய்தாலும் விடா முயற்சியுடன் செயல்படுவீர்கள். பண பற்றாக்குறையை சமாளிப்பதில் வல்லவர்கள். உங்களை யாரும் அதிகாரம் செய்ய அனுமதிக்கமாட்டீர்கள். அதுபோல பிறரிடமும் அவ்வாறே நடந்து கொள்வீர்கள். வெட்டு ஒன்று துண்டு இரண்டு ன்று பேச்சாற்றல் படைத்தவர்கள். உங்களை யாராலும் எளிதில் புரிந்து கொள்ள இயலாது. எப்போது புதிய வீடு, வாகனம் கூடுகின்றதோ அன்று முதல் ஒரு மாதத்திற்குள் நல்வாழ்வு அமையும். குல தெய்வ வழிபாடு செய்வதன் மூலம் நன்மையெல்லாம் தானாகவே வந்து சேரும்.

பரிகார ஸ்தலம்: வருடத்திற்கு ஒரு முறை காஞ்சி காமாட்சியை தரிசித்து வரவும்.

குறிப்பு: கோபத்தை குறைத்துக் கொள்ளவும்.




தனுசு: வேகமாக செயல்படும் வல்லமை படைத்தவர் நீங்கள். நீதிக்கும் நேர்மைக்கும் தலைவணங்கி தலைமை பதவி ஏற்கும் தகுதிபடைத்தவர்கள். மனதில் எதையும் மறைத்து வைத்துக் கொள்ள மாட்டீர்கள். ஒழுக்கத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பீர்கள். பெரியோர்கள் மீது அன்பும் மரியாதையும் வைத்திருப்பீர்கள். உஷ்ணத்தால் கஷ்டப்படுவீர்கள். நண்பன் பகைவன் ஆவான். பகைவன் நண்பன் ஆவான். எச்சரிக்கையுடன் நடந்து கொள்ளவும்.

பரிகார ஸ்தலம்: வருடத்திற்கு ஒருமுறை திருச்சிக்கு அருகில் உள்ள திருவானைக்காவலில் உள்ள ஸ்ரீஜலகண்டேஸ்வரர் மற்றும் அகிலாண்டேஸ்வரியை தரிசிக்கவும்.

குறிப்பு: பொருள் இழப்பு நேரிடலாம் கவனம் தேவை.




மகரம்: மகர ராசியில் பிறந்த நீங்கள் சுறுசுறுப்பாக சோர்வின்றி உழைப்பவர். உங்களுக்குக் கோபம் வரும் ஆனால், அதனை சிறிது நேரத்திலேயே மறந்து விடுவீர்கள். நீங்கள் யாரையும் நம்ப மாட்டீர்கள். எத்தகைய வேலையையும் பொறுப்புடன் செயலாற்றுவீர்கள்.

ஆடை ஆபரணங்கள் மீது அதிக ஆசை இருக்காது. யாரிடமும் சுலபமாக ஏமாற மாட்டீர்கள். உங்களது பேச்சால் அனைவரையும் கவர்ந்து விடுவீர்கள். உங்கள் குல தெய்வத்தைத் தொடரந்து வழிபட்டால் தடைப்பட்ட சுபகாரியங்கள் நிறைவேறும். அரசாங்க ஊழியர்களைப் பகைத்துக் கொள்ளாதீர்கள்.

பரிகார ஸ்தலம்: வருடத்திற்கு ஒருமுறை மதுரை மீனாட்சி அம்மனையும், சொக்கநாதரையும் தரிசிக்கவும்.

குறிப்பு: வாக்கில் மிகவும் கவனமாக இருங்கள்.




கும்பம்: நீங்கள் தெய்வ பக்தியும் இரக்க குணமும் கொண்டவர்கள். நல்ல உழைப்பாளி. ஞாபக சக்தி அதிகம் உடையவர். அடுத்த என்ன நிகழும் என்பதைக் கச்சிதமாகக் கணிப்பதில் வல்லவர். நீங்கள் மற்றவர்களுக்கு உபதேசம் செய்வீர்கள். புகழ்ச்சிக்கு மயங்குவீர்கள். பிறருக்கு ஏணிப்படியாக இருந்து வழிகாட்டுவீர்கள். உங்களுக்கு எந்த வழியிலாவது பணம் வந்து சேரும். தற்பெருமை உண்டு. சொன்ன சொல் தவற மாட்டீர்கள். முன் பின் தெரியாதவர்களை எடை போடுவதில் வல்லவர்கள்.

பரிகார ஸ்தலம்: வருடத்தில் ஒருமுறை நாமக்கல் ஆஞ்சநேயரைத் தரிசித்து வரவும்.

குறிப்பு: பேச்சில் வேகத்தையும் படபடப்பையும் குறைத்துக் கொள்ளவும்.




மீனம்: சிரித்த முகத்தோடு இருப்பீர்கள். விடா முயற்சியினால் உழைத்து முன்னேறுவீர்கள். தன்னம்பிக்கை கொண்டவர். ஆன்மிக விஷயங்களைத் தெரிந்து கொள்ள ஆசைப்படுவீர்கள். வாக்குப் பலிதம் மிக்க உங்களுக்கு ஜோதிடம் இயல்பாகவே வரும். வீட்டில் இடம் இருந்தால் பவழமல்லி மரம் ஒன்றை நடவும். அல்லது கோயில் நந்தவனத்தில் நடவும். பசு மாட்டிற்கு சனிக்கிழமைதோறும் கோதுமையால் செய்த பண்டத்தைக் கொடுக்கவும்.

பரிகார ஸ்தலம்: வருடத்திற்கு ஒருமுறை சமயபுரம் அருகில் உள்ள பிரம்மன் கோயிலுக்கு சென்று வரவும்.

குறிப்பு: வீண் செலவுகளைத் தவிர்க்கவும்.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35026
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Apr 12, 2014 5:26 pm

நன்றி , நல்ல பலன்களே கூறி இருக்கிறார்.

ரமணியன்

Sponsored content

PostSponsored content



Page 5 of 5 Previous  1, 2, 3, 4, 5

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக