புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜய வருட ராசிபலன்கள் - ஜோதிட ரத்னா கே.பி.வித்யாதரன்


   
   

Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Mar 24, 2014 1:18 am

First topic message reminder :






சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Mar 24, 2014 1:26 am

மகரம்

இலவசங்களை விரும்பாத நீங்கள், பதவியில் இருப்பவர்களைவிட தன் பத்து விரல்களை மட்டுமே நம்புபவர்கள். உங்கள் ராசிக்கு 9-ம் வீட்டில் இந்த ஜய வருடம் பிறப்பதால், தொலை நோக்குச் சிந்தனை அதிகரிக்கும். உங்கள் மீது உங்களுக்கே இருந்து வந்த அவநம்பிக்கைகள் நீங்கும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். வி.ஐ.பிகள் அறிமுகம் கிடைக்கும். சமூகத்தில் மதிக்கத்தகுந்த அளவுக்கு கௌரவப் பதவிகள் தேடி வரும்.

உங்கள் ராசிக்கு தனஸ்தானத்தில் சுக்ரன் நிற்கும்போது இந்தப் புத்தாண்டு பிறப்பதால், மாதக் கணக்கில் தடைப்பட்டு வந்து தள்ளிப்போன காரியங்களெல்லாம் விரைந்து முடியும். அயல்நாட்டில் இருக்கும் நண்பர்களால் ஆதாயமடைவீர்கள். சொந்த-பந்தங்கள் மதிக்கும்படி நடந்துகொள்வீர்கள்.  கல்வித் தகுதிக்கேற்ப ஒரு உத்தியோகம் இல்லாமல் இருந்தவர்களுக்கு, நல்ல நிறுவனத்திலிருந்து அழைப்பு வரும். வாகனப் பழுதை சரிசெய்வீர்கள். 

ஆனி, ஆவணி, ஐப்பசி, கார்த்திகை, பங்குனி மாதங்களில் திடீர் பணவரவு, வீடு, வாகனச் சேர்க்கை உண்டாகும்.

ஜூன் 12 வரை குருபகவான் உங்கள் ராசிக்கு 6-ம் வீட்டில் மறைந்திருப்பதால், முதல் முயற்சியிலேயே சில வேலைகளை முடிக்கமுடியாமல் இரண்டு, மூன்று முறை போராடி முடிப்பீர்கள். வீண் பழிகள் வரக்கூடும். ஜூன் 13-ம் தேதி முதல் குரு 7-ம் வீட்டில் அமர்ந்து உங்கள் ராசியைப் பார்க்க இருப்பதால், உங்களின் திறமைக்கு ஓர் அங்கீகாரம் கிடைக்கும். திருமணம் தள்ளிப் போனவர்களுக்கு கூடி வரும். பழைய பிரச்னைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள். திருமணம், சீமந்தம், கிரகப்பிரவேசம் போன்ற சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். நல்லவர்களின் நட்பு கிடைக்கும்.

ஜூன் 20-ம் தேதி வரை கேது உங்கள் ராசிக்கு 4-ம் வீட்டில் நிற்பதால், வேலைச்சுமை இருந்துகொண்டேயிருப்பதாக ஆதங்கப்படுவீர்கள். ஜூன் 21-ம் தேதி முதல் கேது 3-ம் வீட்டில் அமர்வதால் தடைகள், எதிர்ப்புகள் குறையும். இளைய சகோதர வகையில் ஆதரவு கிட்டும்.

ஜூன் 20-ம் தேதி வரை ராகு 10-ல் நிற்பதால், சிலர் உங்களை மதிக்காமல் போவார்கள். அதற்காகக் கவலைப்பட வேண்டாம். உத்தியோகத்தில் விரும்பத்தகாத இடமாற்றங்கள் ஏற்படும். உங்களைப் பற்றிய வதந்திகளை சிலர் பரப்புவார்கள். ஜூன் 21-ம் தேதி முதல் ராகு 9-ம் வீட்டில் நுழைவதால், அநாவசியச் செலவுகளால் சேமிப்புகள் கரையும். கடன் வாங்க வேண்டிய சூழ்நிலையும் உருவாகும்.

டிசம்பர் 15 வரை உங்கள் ராசிநாதன் சனிபகவான் 10-ம் வீட்டிலேயே நிற்பதால், கடந்த காலத்தில் ஏற்பட்ட வெற்றிகள், பாராட்டுகளை நினைவுகூர்ந்து மகிழ்வீர்கள். சொந்த ஊரில் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள். டிசம்பர் 16 முதல் சனிபகவான் உங்கள் ராசிக்கு லாப வீடான 11-ம் வீட்டில் நுழைவதால், பிரபலங்கள் பட்டியலில் இடம் பிடிப்பீர்கள்.

வியாபாரத்தில் கடந்த ஆண்டைவிட இந்த வருடம் லாபம் அதிகரிக்கும். பெரிய நிறுவனத்துடன் புது ஒப்பந்தம் செய்வதன் மூலம் உங்கள் நிறுவனத்தின் புகழ் கூடும். இரும்பு, மூலிகை, கன்ஸ்ட்ரக்ஷன், துணி வகைகளால் ஆதாயமடைவீர்கள். 

உத்தியோகத்தில் சூழ்ச்சியாலும், மறைமுக எதிரிகளாலும் இழந்த சலுகைகள், பதவிகளை மீண்டும் பெறுவீர்கள். அலுவலகத்தில் மதிப்பு மரியாதை கூடும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும்.

கலைத்துறையினரே! உங்களுடைய படைப்புகள் வெளியாவதில் இருந்த தடைகள் நீங்கும். மக்களால் பாராட்டப்படுவீர்கள்.

மாணவ-மாணவிகளே! படிப்பில் மதிப்பெண் கூடும். விரும்பிய கோர்ஸில் சேருவீர்கள். அயல்நாடு சென்று படிக்கும் வாய்ப்பும் தேடி வரும். 

கன்னிப் பெண்களே! உங்கள் மனத்துக்கேற்ப  நல்ல வாழ்க்கைத்துணை அமையும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டு. பெற்றோரின் அன்பும் அரவணைப்பும் உங்களை  மகிழ்ச்சியில் ஆழ்த்தும். 

அரசியல்வாதிகளே! உங்களின் கோரிக்கையை மேலிடம் பரிசீலிக்கும். தொகுதியில் நடக்கும் நல்லது கெட்டதில் கலந்துகொண்டு மக்களின் அனுதாபத்தை பெறுவீர்கள்.

மொத்தத்தில் இந்த ஜய வருடம் உங்களின் அடிப்படை வசதிகளை அதிகப்படுத்துவதுடன், அந்தஸ்தையும் வழங்கி உயர்த்துவதாக அமையும்.

பரிகாரம்:

சுவாமிமலையில் அருள்பாலிக்கும் ஸ்ரீமுருகப் பெருமானை வியாழக்கிழமையன்று நெய் தீபமேற்றி வணங்குங்கள். ஆதரவற்ற முதியவர்களுக்கு உதவுங்கள்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Mar 24, 2014 1:27 am

கும்பம்

குடியிருந்த கோயிலாம் பெற்ற தாயாரை மானசிகக் கடவுளாக மதித்து நடப்பவர்களே! உங்கள் ராசிக்கு 5-ம் வீட்டில் குரு வலுவாக அமர்ந்திருக்கும் நேரத்தில், இந்த ஜய வருடம் பிறப்பதால், எதிர்ப்புகள் அடங்கும். தள்ளிப் போன அரசாங்க விஷயங்கள் நல்ல விதத்தில் முடிவடையும். குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். பணப்புழக்கம் கணிசமாக உயரும். எதிர்த்தவர்கள் நண்பர்களாவார்கள். மனைவிவழி உறவினர்கள் மத்தியில் மதிப்பு, மரியாதை கூடும்.

உங்கள் ராசிக்கு 8-ம் வீட்டில் சந்திரன் நிற்கும்போது இந்தப் புத்தாண்டு பிறப்பதால், அலைச்சலுடன் ஆதாயம் உண்டாகும். சவால்களைச் சமாளிக்கும் வல்லமை கிடைக்கும். ஆனி, ஆடி, ஆவணி மாதப் பிற்பகுதி, ஐப்பசி, கார்த்திகை, மார்கழி, பங்குனி ஆகிய மாதங்களில் ஓரளவு பணவரவும், பதவியும் வந்து சேரும். மகளுக்குத் திருமணத்தைச் சிறப்பாக முடிப்பீர்கள்.  உங்கள் ராசிக்கு 8-ல் செவ்வாய் நிற்கும்போது ஜய வருடம் பிறப்பதால், அடிவயிற்றில் வலி, சிறுசிறு விபத்துகள், சகோதர வகையில் மனத்தாங்கல், சொத்து வாங்குவது, விற்பதில் சிக்கல்கள் வந்து செல்லும்.

ஜூன் 12-ம் தேதிவரை குருபகவான் சாதகமாக இருப்பதால், திருமணம், சீமந்தம், கிரகப் பிரவேசம் போன்ற சுப நிகழ்ச்சிகள் வீட்டில் ஏற்பாடாகும். குழந்தை பாக்யம் கிடைக்கும். மகனுக்கு அயல்நாடு தொடர்புடைய பெரிய நிறுவனத்தில் வேலை கிடைக்கும். சொந்த-பந்தங்கள் மதிக்கும்படி நடந்துக் கொள்வீர்கள். ஜூன் 13-ம் தேதி முதல் குருபகவான் உங்கள் ராசிக்கு 6-ம் வீட்டில் மறைவதால், வரவுக்கு மிஞ்சிய செலவுகள் இருக்கும். சில நேரங்களில் நெருக்கடிகளையும், தர்மசங்கடமான சூழ்நிலைகளையும் சமாளிக்க வேண்டி வரும்.

ஜூன் 20-ம் தேதி வரை கேது உங்கள் ராசிக்கு 3-ம் வீட்டில் நிற்பதால், தைரியம் கூடும். சொத்துச் சேர்க்கை உண்டு. ராகு 9-ம் வீட்டில் நீடிப்பதால், தந்தைக்கு வேலைச்சுமை, டென்ஷன், அவருடன் கருத்து மோதல்கள் ஏற்படும். ஜூன் 21-ம் தேதி முதல் கேது உங்கள் ராசிக்கு 2-ம் வீட்டிலும், ராகு 8-லும் மறைவதால், யதார்த்தமாக நீங்கள் பேசுவதைக்கூட சிலர் தவறாகப் புரிந்துகொண்டு உங்களை விமர்சிப்பார்கள்.

டிசம்பர் 15-ம் தேதிவரை உங்கள் ராசிநாதன் சனிபகவான் 9-ம் வீட்டில் நிற்பதால், எல்லாப் பிரச்னைகளிலிருந்தும் நூலிழையில் வெளிவருவீர்கள். வழக்கில் எதிர்பார்த்தபடி நல்ல தீர்ப்பு வரும். தந்தைவழியில் ஆதாயமடைவீர்கள். புது வேலை கிடைக்கும். டிசம்பர் 16-ம் தேதி முதல் 10-ம் வீட்டில் சனி நுழைவதால், வீண் வதந்திகள், அக்கம்பக்கத்து வீட்டாருடன் பிரச்னைகள், உத்தியோகத்தில் வேலைச்சுமை, அடிக்கடி இடமாற்றங்கள் ஏற்படும்.

வியாபாரத்தில், ஏற்ற இறக்கங்கள் இருக்கத்தான் செய்யும். எனினும், லாபம் கணிசமாக உயரும். லாபத்தை இன்னும் அதிகப்படுத்த விளம்பரம் மற்றும் நவீன யுக்தி களைக் கையாளுவீர்கள்.  கடன் உதவியால் புது இடத்துக்கு கடையை மாற்றுவீர்கள். அரசாங்கத்தால் நெருக்கடிகளைச் சந்திக்க நேரிடும்; கவனம் தேவை.

உத்தியோகத்தில் உங்களின் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். எனினும் சக ஊழியர்களின் விடுப்பின் காரணமாக அவர்களது வேலைகளையும் சேர்த்துப் பார்க்கவேண்டிய சூழல் உருவாகும். நீங்கள் எதிர்பார்த்த சம்பள உயர்வு, பதவி உயர்வு கிடைப்பதற்கு தாமதமாகும்.   

கலைத்துறையினரே! கிடைக்கின்ற வாய்ப்பை சரியாகப் பயன்படுத்தி முன்னேற முயற்சிக்கவேண்டும். சம்பள பாக்கி கைக்கு வரும். மாணவ-மாணவிகள், படிப்பில் கூடுதல் கவனம் செலுத்துவது அவசியம். வகுப்பறையில் ஆசிரியரிடம் சந்தேகங்களைக் கேட்கத் தயங்காதீர்கள்.

கன்னிப்பெண்களுக்கு, நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும். திருமணம் தாமதமானாலும் நல்லபடியாக முடியும். அரசியல்வாதிகளுக்கு செல்வாக்கு கூடும். தொகுதி மக்களின் வீட்டு விசேஷங்களில் கலந்துகொண்டு, அவர்களது நம்பிக்கைக்குப் பாத்திரமாவீர்கள். எதிர்க்கட்சியினர் மூலம் வழக்குகளைச் சந்திக்க நேரிடும். எனவே, பேச்சிலும் செயலிலும் கவனம் தேவை. கோஷ்டிப் பூசலில் சிக்கிக் கொள்ள வேண்டாம். அதன் மூலம் உங்களுடைய புகழும் பெயரும் கெடுவதற்கு வாய்ப்பு உண்டு.

மொத்தத்தில் இந்த ஜய வருடம், உங்களின் எதிர்பார்ப்பு களை ஒரளவு நிறைவேற்றுவதுடன், உற்றார்-உறவினர்களின் மத்தியில், உங்கள் மீதான மதிப்பு- மரியாதையை உயர்த்துவதாக அமையும்.

 பரிகாரம்:

ஆலங்குடியில் அருளும் ஸ்ரீஆபத்சகாயேஸ்வரரையும், ஸ்ரீதட்சிணாமூர்த்தியையும் புனர்பூசம் நட்சத்திர திருநாளில் சென்று வணங்கி வாருங்கள்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Mar 24, 2014 1:28 am

மீனம்

மாற்று வழியில் யோசிக்கும் சாமர்த்தியசாலி நீங்கள். உங்கள் ராசிக்கு 7-ம் வீட்டில், ஜய வருடம் பிறக்கிறது. உங்களின் அறிவாற்றலை வெளிப்படுத்த வாய்ப்பு அமையும். அழகு, இளமை கூடும். எல்லா பிரச்னைகளுக்கும் தீர்வு கிடைக்கும். தள்ளிப்போன திருமணம் உடனே முடியும். பலவீனங்களை மாற்றிக்கொள்வீர்கள். சுக்கிரனும் புதனும் சாதகமான நட்சத்திரத்தில் செல்லும்போது ஜய வருடம் பிறப்பதால், கனிவான பேச்சால் காரியம் சாதிக்க முயல்வது சிறப்பு எனும் முடிவுக்கு வருவீர்கள். பணப் பற்றாக்குறையை சமாளிக்க கூடுதலாக உழைப்பீர்கள். மனைவிவழி உறவினர் மத்தியில் மதிப்பு கூடும்.

ஜூன் - 12 வரை, உங்கள் ராசிநாதன் குரு 4-ல் நிற்பதால் வீடு- வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். தாயாரின் உடல் நிலை பாதிக்கும். உங்களைப் பற்றிய விமர்சனங்களும் அதிகரிக்கும். ஜூன் - 13 முதல் குரு உங்கள் ராசிக்கு 5-ல் நுழைவதால் வசதி, வாய்ப்புகள் ஒரளவு பெருகும். வி.ஐ.பி-களின் நட்பு கிடைக்கும். கல்யாணம், கச்சேரி என்று வீடு களைகட்டும்.    வெகு நாட்களுக்கு முன் வாங்கிப்போட்ட மனையில் வீடுகட்டி முடிப்பீர்கள். குழந்தைக்காக காத்திருக்கும் அன்பர்களுக்கு, அழகான வாரிசு உருவாகும். மகளுக்கு நல்ல வரன் அமையும். மகன் பொறுப்பாக நடந்துகொள்வார். பூர்வீகச் சொத்து கைக்கு வரும். அரசாங்க விஷயங்களில் இருந்து வந்த தேக்க நிலை மாறும்.     

ஜூன்- 20 வரை, ராகு 8-ம் வீட்டிலும், கேது 2-லும் நிற்பதால் கணவன்- மனைவிக்குள் வீண் சந்தேகங்கள், ஈகோ பிரச்னைகளால் சச்சரவு எழலாம். பல், காது மற்றும் தொண்டை வலி வரக்கூடும். சிறு சிறு விபத்துகள் நிகழக்கூடும். ஜூன் - 21 முதல் கேது உங்கள் ராசிக்குள் நுழைவதால், ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்துங்கள். ராகுவும் 7-ம் வீட்டில் அமர்வதால் விரக்தி, விரயம் வந்துபோகும். பணத்தட்டுபாடு இருக்கும். மனைவிக்கு ஃபைப்ராய்டு, முதுகுத் தண்டில் வலி, சிறு சிறு உடல் உபாதைகள் வந்துபோகும். பொய் சொல்ல வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டாலும் தவிர்க்கப்பாருங்கள். டிசம்பர் - 15 வரை அஷ்டமத்துச் சனி நடைபெறுவதால், புதிய நபர்களை வீட்டுக்கு அழைத்து வராதீர்கள். மற்றவர்களை நம்பி பெரிய முடிவுகள் எடுப்பதைத் தவிர்க்கவும். நகை, பணம், முக்கிய சொத்து ஆவணங்களை வங்கி லாக்கரில் பாதுகாப்பாக வைப்பது நல்லது. வீட்டில் களவு போக வாய்ப்பிருக்கிறது. வழக்கில் வழக்கறிஞரை மாற்றவேண்டிய சூழ்நிலை வரும். பழைய பிரச்னைகள் மீண்டும் தலைதூக்குமோ எனும் பயம் அடிமனத்தில் இருந்து

கொண்டே இருக்கும். உடல்நலனில் அக்கறை செலுத்தவும். குறுக்கு வழியில் ஆதாயம் தேட வேண்டாம்.

டிசம்பர் - 16 முதல், சனி உங்கள் ராசிக்கு 9-ம் வீட்டில் நுழைவதால் மனப்போராட்டங்களிலிருந்து விடுபடுவீர்கள். குடும்பத்தில் சச்சரவுகள் விலகும். தைரியமாகச் சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். ஷேர் மூலம் பணம் வரும். பிரிந்த தம்பதியினர் ஒன்று சேருவார்கள். வைகாசி, ஐப்பசி, கார்த்திகை, மார்கழி, தை மாதங்களில் பணவரவு அதிகரிக்கும்; வேலை கிடைக்கும்; சொத்து சேரும்.

வியாபாரத்தில் லாபம் கணிசமாக உயரும். எனினும் அஷ்டமத்துச் சனி தொடர்வதால், புதியவர்களை நம்பி முதலீடுகள் செய்து ஏமாற வேண்டாம். ஆனால் ஜூன் - 13 முதல் ராசிநாதன் குரு உச்சமடைவதால் லாபம் இரட்டிப்பாகும். கடையை மாற்றுவீர்கள்; சிலர் விரிவுபடுத்துவீர்கள். பங்குதாரர்களின் தொந்தரவுகள் குறையும். புது திட்டங்களை செயல்படுத்துவீர்கள். கல்வி, ஸ்டேஷனரி, உணவு, ரியல் எஸ்டேட், வாகன உதிரி பாகங்கள், ஏற்றுமதி-இறக்குமதி வகைகளால் ஆதாயம் உண்டு.

ஜூன்- 13 முதல் குரு 5-ல் அமர்வதால், உத்தியோகத்தில் பழைய பிரச்னைகள் எல்லாம் விலகும். உங்களின் நிர்வாகத் திறமை வெளிப்படும். சலுகைகளும், சம்பள உயர்வும் கிடைக்கும். உங்களை குறை கூறிய உயரதிகாரி வேறிடத்துக்கு மாற்றப்படுவார். எனினும், அஷ்டமத்துச்சனி தொடர்வதால் இடமாற்றம், மறைமுக எதிர்ப்புகளைச் சந்திக்க வேண்டிய சூழல் வரும். கலைத் துறையினர், கௌரவிக்கப்படுவர். பெரிய நிறுவனங்களில் வாய்ப்புகள் கிடைக்கும்.  மாணவ- மாணவிகளுக்கு படிப்பில் உற்சாகம் பிறக்கும். விளையாட்டில் பதக்கம் உண்டு. கன்னிப் பெண்களுக்கு, வேலை கிடைக்கும். பெற்றோர் விருப்பப்படி திருமணம் முடியும். அரசியல்வாதிகள், தலைமையின் நன்மதிப்பை பெறுவர்.

மொத்தத்தில் இந்த ஜய வருடத்தின் முற்பகுதி கசந்தா லும், மையப் பகுதி- மகிழ்ச்சியையும்; இறுதிப் பகுதி- வசதி, வாய்ப்புகளையும் அதிகப்படுத்துவதாக அமையும்.

பரிகாரம்:

ஸ்ரீகாஞ்சி காமாட்சி அம்மனை பூரம் நட்சத்திரத்தன்று குங்குமார்ச்சனை செய்து வணங்குங்கள். புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுங்கள்.

விகடன்

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Mon Mar 24, 2014 1:37 am

பகிர்வுக்கு நன்றி தல



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Mar 24, 2014 1:39 am

பாலாஜி wrote:பகிர்வுக்கு நன்றி தல

மகிழ்ச்சி தல... இப்பொழுதுதான் இதன் முதல் பதிவில் உள்ள படங்களை அழுத்தினால் அந்தந்த ராசிபலனைக் காட்டும் சுட்டிகளை இணைத்து முடித்தேன்!

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Mon Mar 24, 2014 1:45 am

சிவா wrote:
பாலாஜி wrote:பகிர்வுக்கு நன்றி தல

மகிழ்ச்சி தல... இப்பொழுதுதான் இதன் முதல் பதிவில் உள்ள படங்களை அழுத்தினால் அந்தந்த ராசிபலனைக் காட்டும் சுட்டிகளை இணைத்து முடித்தேன்!

நீங்க ஒரு சகலகலா வல்லவர் தல ..ஆனாலும் அதை நான் கவனிக்கவில்லை . எனக்கான ராசியை நானே தேர்வு செய்து படித்தேன்



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Mar 24, 2014 2:14 am

பாலாஜி wrote:
சிவா wrote:
பாலாஜி wrote:பகிர்வுக்கு நன்றி தல

மகிழ்ச்சி தல... இப்பொழுதுதான் இதன் முதல் பதிவில் உள்ள படங்களை அழுத்தினால் அந்தந்த ராசிபலனைக் காட்டும் சுட்டிகளை இணைத்து முடித்தேன்!

நீங்க ஒரு சகலகலா வல்லவர் தல ..ஆனாலும் அதை நான் கவனிக்கவில்லை . எனக்கான ராசியை நானே தேர்வு செய்து படித்தேன்

நீங்கதான் திறமைசாலியாச்சே! அதனாலதான் நீங்களே கண்டுபிடிச்சு படிச்சிட்டீங்க! மத்தவங்க பாவம் கண்டுபிடிக்க முடியாதல்லவா, அதனால் தான் முதல் பதிவில் சுட்டிகளை இணைத்தேன்!

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Mon Mar 24, 2014 2:19 am

சிவா wrote:
பாலாஜி wrote:
சிவா wrote:
பாலாஜி wrote:பகிர்வுக்கு நன்றி தல

மகிழ்ச்சி தல... இப்பொழுதுதான் இதன் முதல் பதிவில் உள்ள படங்களை அழுத்தினால் அந்தந்த ராசிபலனைக் காட்டும் சுட்டிகளை இணைத்து முடித்தேன்!

நீங்க ஒரு சகலகலா வல்லவர் தல ..ஆனாலும் அதை நான் கவனிக்கவில்லை . எனக்கான ராசியை நானே தேர்வு செய்து படித்தேன்

நீங்கதான் திறமைசாலியாச்சே! அதனாலதான் நீங்களே கண்டுபிடிச்சு படிச்சிட்டீங்க! மத்தவங்க பாவம் கண்டுபிடிக்க முடியாதல்லவா, அதனால் தான் முதல் பதிவில் சுட்டிகளை இணைத்தேன்!

ஜ .. வஞ்சபுகழ்ச்சி அணி



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Mar 24, 2014 2:32 am

பாலாஜி wrote:

ஜ .. வஞ்சபுகழ்ச்சி அணி

அப்படியெல்லாம் சொல்லப்படாது, உண்மையை சொன்னா ஏத்துக்கனும்!

avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Mon Mar 24, 2014 1:05 pm

எனக்கு ராசியே கிடையாதே.


Sponsored content

PostSponsored content



Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக