புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
viyasan
30 வகை குட்டீஸ் ரெசிபி - Page 3 I_vote_lcap30 வகை குட்டீஸ் ரெசிபி - Page 3 I_voting_bar30 வகை குட்டீஸ் ரெசிபி - Page 3 I_vote_rcap 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
30 வகை குட்டீஸ் ரெசிபி - Page 3 I_vote_lcap30 வகை குட்டீஸ் ரெசிபி - Page 3 I_voting_bar30 வகை குட்டீஸ் ரெசிபி - Page 3 I_vote_rcap 
197 Posts - 41%
ayyasamy ram
30 வகை குட்டீஸ் ரெசிபி - Page 3 I_vote_lcap30 வகை குட்டீஸ் ரெசிபி - Page 3 I_voting_bar30 வகை குட்டீஸ் ரெசிபி - Page 3 I_vote_rcap 
192 Posts - 40%
mohamed nizamudeen
30 வகை குட்டீஸ் ரெசிபி - Page 3 I_vote_lcap30 வகை குட்டீஸ் ரெசிபி - Page 3 I_voting_bar30 வகை குட்டீஸ் ரெசிபி - Page 3 I_vote_rcap 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
30 வகை குட்டீஸ் ரெசிபி - Page 3 I_vote_lcap30 வகை குட்டீஸ் ரெசிபி - Page 3 I_voting_bar30 வகை குட்டீஸ் ரெசிபி - Page 3 I_vote_rcap 
21 Posts - 4%
prajai
30 வகை குட்டீஸ் ரெசிபி - Page 3 I_vote_lcap30 வகை குட்டீஸ் ரெசிபி - Page 3 I_voting_bar30 வகை குட்டீஸ் ரெசிபி - Page 3 I_vote_rcap 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
30 வகை குட்டீஸ் ரெசிபி - Page 3 I_vote_lcap30 வகை குட்டீஸ் ரெசிபி - Page 3 I_voting_bar30 வகை குட்டீஸ் ரெசிபி - Page 3 I_vote_rcap 
9 Posts - 2%
Rathinavelu
30 வகை குட்டீஸ் ரெசிபி - Page 3 I_vote_lcap30 வகை குட்டீஸ் ரெசிபி - Page 3 I_voting_bar30 வகை குட்டீஸ் ரெசிபி - Page 3 I_vote_rcap 
8 Posts - 2%
Guna.D
30 வகை குட்டீஸ் ரெசிபி - Page 3 I_vote_lcap30 வகை குட்டீஸ் ரெசிபி - Page 3 I_voting_bar30 வகை குட்டீஸ் ரெசிபி - Page 3 I_vote_rcap 
7 Posts - 1%
T.N.Balasubramanian
30 வகை குட்டீஸ் ரெசிபி - Page 3 I_vote_lcap30 வகை குட்டீஸ் ரெசிபி - Page 3 I_voting_bar30 வகை குட்டீஸ் ரெசிபி - Page 3 I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
30 வகை குட்டீஸ் ரெசிபி - Page 3 I_vote_lcap30 வகை குட்டீஸ் ரெசிபி - Page 3 I_voting_bar30 வகை குட்டீஸ் ரெசிபி - Page 3 I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

30 வகை குட்டீஸ் ரெசிபி


   
   

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Mar 21, 2014 1:07 am

First topic message reminder :

பிரெட் க்ரிஸ்பிஸ்


தேவையானவை: பிரெட் ஸ்லைஸ் - 10, வெங்காயம் - 2, தக்காளி - 3, இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன், கடுகு, பெருஞ்சீரகம் - தலா கால் டீஸ்பூன், மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன் (அல்லது காரத்துக்கேற்ப), பொடியாக நறுக்கிய கொத்தமல்லித் தழை - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
30 வகை குட்டீஸ் ரெசிபி - Page 3 1
செய்முறை: பிரெட் ஸ்லைஸ்களை சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். வெங்காயம், தக்காளியை மிகவும் பொடியாக நறுக்கவும். வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு,  பிரெட் துண்டுகளை வறுத்து எடுத்து, தனியே வைக்கவும். பின்னர் வாணலியில் 4 டேபிள்ஸ்பூன் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு, பெருஞ்சீரகம் தாளித்து, வெங்காயத்தை சேர்த்து வதக்கவும். வெங்காயம் நன்கு வதங்கியதும் தக்காளி, உப்பு, இஞ்சி - பூண்டு விழுது, மிளகாய்த்தூள் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை நன்கு கிளறி. அதில் அரை கப் தண்ணீர் ஊற்றிச் சூடாக்கவும். ஒரு கொதி வந்ததும் வறுத்து வைத்துள்ள பிரெட் துண்டுகள், கொத்தமல்லித் தழை சேர்த்துக் கிளறி, இறக்கவும்.

இது, லஞ்ச் பாக்ஸில் வைத்து அனுப்ப ஏற்றது.


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Mar 21, 2014 1:52 am

சீஸ்  வெஜிடபிள் ஆம்லெட்


தேவையானவை:  மைதா மாவு - அரை கப், துருவிய பனீர் - 50 கிராம், பால் - அரை கப், பச்சை மிளகாய் - 2, வெங்காயம், குடமிள காய் - தலா ஒன்று, கேரட் துருவல் - ஒரு டேபிள்ஸ்பூன், சீஸ் துருவல் - ஒரு டேபிள்ஸ்பூன், தக்காளி சாஸ் - தேவையான அளவு, மிளகுத்தூள் - கால் டீஸ்பூன், பொடியாக நறுக்கிய கொத்தமல்லித் தழை - சிறிதளவு, நெய், உப்பு - தேவையான அளவு.
30 வகை குட்டீஸ் ரெசிபி - Page 3 21
செய்முறை: பச்சை மிளகாய், வெங்காயம், குடமிளகாயை மிகவும் பொடியாக நறுக்கவும். மைதாவை பாலில் சேர்த்து கட்டிகள் இல்லாமல் கலக்கவும். இதனுடன் துருவிய பனீர், உப்பு, மிளகுத்தூள் சேர்த்து நன்கு கலந்துகொள்ளவும். பொடியாக நறுக்கி வைத்த வெங்காயம், பச்சை மிளகாய், குடமிளகாய், கொத்தமல்லித் தழை, கேரட் துருவல், சீஸ் துருவல் ஆகியவற்றை கலந்து வைக்கவும்.

தோசைக்கல்லில் நெய் தடவி மைதா - பனீர் கலவையை சற்று கனமாக ஊற்றி மேலும் சிறிது நெய் விட்டு, அதன் மீது காய்கறி - சீஸ் கலவையை தூவி ஒரு மூடி போட்டு வேகவிடவும். வெந்ததும் அதன் மீது தக்காளி சாஸை லேசாக தடவி, சாப் பிடக் கொடுக்கவும்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Mar 21, 2014 1:53 am

டொமேட்டோ ஆம்லெட்
தேவையானவை: கடலை மாவு, பொட்டுக்கடலை மாவு - தலா அரை கப், கோதுமை மாவு - 2 டேபிள்ஸ்பூன், பெரிய வெங்காயம், தக்காளி - தலா 2 (மிகவும் பொடியாக நறுக்கவும்),  நறுக்கிய கொத்தமல்லித்தழை - சிறிதளவு,  மிளகுத்தூள், சீரகத்தூள் - தலா அரை டீஸ்பூன், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், சமையல் சோடா - ஒரு சிட்டிகை, எண்ணெய், உப்பு - தேவையான அளவு
30 வகை குட்டீஸ் ரெசிபி - Page 3 22
செய்முறை:  உப்பு, எண்ணெய் நீங்கலாக மற்ற எல்லாவற்றையும் நன்கு கலக்கவும். அதனுடன் தேவையான தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து இட்லி மாவு பதத்தில் நன்கு கரைக்கவும். அடுப்பில் தோசைக்கல்லை வைத்து எண்ணெய் தடவி, மாவை சின்னச் சின்ன ஆம்லெட்டுகளாக ஊற்றி, சுற்றிலும் எண்ணெய் விட்டு, வேகவிட்டு எடுக்கவும்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Mar 21, 2014 1:54 am

க்ரிஸ்பி பால்ஸ்
தேவையானவை: அரிசி மாவு - ஒரு கப், மோர் - 2 கப், சின்ன வெங்காயம் - 8 (பொடியாக நறுக்கவும்), மிளகுத்தூள், சீரகம் - தலா அரை டீஸ்பூன், நறுக்கிய கொத்தமல்லித் தழை - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
30 வகை குட்டீஸ் ரெசிபி - Page 3 23
செய்முறை:  அகலமான வாணலியில் மோரை ஊற்றி (அடுப்பை 'சிம்மி’ல் வைத்து) லேசாக சூடு பண்ணவும். அதனுடன் மிளகுத்தூள், சீரகம், உப்பு ஆகியவற்றை சேர்க்கவும். பிறகு அரிசி மாவைச் சிறிது சிறிதாகச் சேர்த்துக் கிளறிக்கொண்டே இருக்கவும். இதில் சின்ன வெங்காயம், கொத்தமல்லித் தழை சேர்த்து, கலவை சற்று கெட்டியான பதம் வரும் வரை கிளறவும். பின்னர் அடுப்பை அணைத்துவிட்டு மாவை இறக்கி சிறிது நேரம் ஆறவிடவும்.  கையில் எண்ணெய் தொட்டு, செய்து வைத்த கலவையை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி, சூடான எண்ணெயில் பொன்னிறமாக பொரிக்கவும்.

இதற்கு தொட்டுக்கொள்ள டொமேட்டோ கெட்சப் ஏற்றது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Mar 21, 2014 1:55 am

பனீர்  வெஜ் ரோல்ஸ்
தேவையானவை: சப்பாத்தி - 8, துருவிய பனீர் - 200 கிராம், குடமிளகாய், பெரிய வெங்காயம் - தலா ஒன்று, வெங்காயத்தாள் - 4, சீரகத்தூள், மிளகாய்த்தூள் - தலா ஒரு டீஸ்பூன், ஆம்சூர் பொடி - கால் டீஸ்பூன், கேரட் துருவல் - 2 டேபிள்ஸ்பூன், பொடி யாக நறுக்கிய கொத்தமல்லித் தழை - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
30 வகை குட்டீஸ் ரெசிபி - Page 3 24
செய்முறை:  குடமிளகாய், பெரிய வெங்காயம், வெங்காயத் தாள் ஆகியவற்றை மிகவும் பொடியாக நறுக்கவும். வாணலி யில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் முதலில் வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும். பிறகு குடமிளகாய், கேரட் துருவல் சேர்த்து வதக்கவும். துருவிய பனீரை அதனுடன் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும். அதில் சீரகத்தூள், மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து வதக்கி... கொத்தமல்லித் தழை, ஆம்சூர் பொடி சேர்த்து நன்கு கிளறி இறக்கினால்... ஃபில்லிங் ரெடி.

சப்பாத்தியின் நடுவில் இந்த ஃபில்லிங்கை நீளவாக்கில் நிரப்பி, பொடியாக நறுக்கிய வெங்காயத் தாளை மேலே தூவி நன்கு இறுக்கமாக சுருட்டி, அலுமினிய பாயில் (அ) பட்டர்பேப்பரில் வைத்து சுருட்டி... லஞ்ச் பாக்ஸில் போட்டு கொடுத்து அனுப்பலாம்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Mar 21, 2014 1:57 am

பனானா சப்பாத்தி
தேவையானவை: கோதுமை மாவு - ஒரு கப், பச்சை வாழைப்பழம் - ஒன்று (நன்கு மசித்துக் கொள்ளவும்), நெய் - 2 டீஸ்பூன், சர்க்கரை - 2 டேபிள்ஸ்பூன், எண்ணெய் - நெய் கலவை - தேவையான அளவு, உப்பு - ஒரு சிட்டிகை.
30 வகை குட்டீஸ் ரெசிபி - Page 3 25
செய்முறை: எண்ணெய் - நெய் கலவை நீங்கலாக மற்ற எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்து, தேவையான நீர் தெளித்து பிசைந்து கொள்ளவும். பிறகு வட்ட வட்ட சப்பாத்திகளாகத் தேய்த்து, தோசைக்கல்லில் போட்டு... எண்ணெய் - நெய் கவலையை சுற்றிலும் ஊற்றி வேகவிட்டு எடுக்கவும்.

சாப்ஃட்டான இந்த சப்பாத்திக்கு ஃப்ரூட் ஜாம் தொட்டுக்கொள்ளலாம்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Mar 21, 2014 1:58 am

வொயிட் சென்னா ரோஸ்ட்
தேவையானவை:  வெள்ளை கொண்டைக்கடலை - ஒரு கப், பச்சரிசி - 2 கப்,  பச்சை மிளகாய், காய்ந்த மிளகாய் - தலா 3, இஞ்சி - சிறு துண்டு, தேங்காய் துருவல் - 2 டேபிள்ஸ்பூன், பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன், சீரகம் - ஒரு டீஸ்பூன், பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை, கொத்தமல்லித் தழை - சிறிதளவு, வெங்காயம் - ஒன்று (பொடியாக நறுக்கவும்), எண்ணெய்,  உப்பு - தேவையான அளவு.

செய்முறை: வெள்ளை கொண்டைக்கடலையை 8 மணிநேரம் ஊறவைக்கவும். பச்சரிசியை ஒரு மணி நேரம் ஊறவைக்கவும். ஊறிய சென்னாவை நன்கு கழுவி... அரிசி, இஞ்சி, தேங்காய் துருவல், பச்சை மிளகாய், காய்ந்த மிளகாய், பெருங்காயத்தூள், உப்பு சேர்த்து இட்லி மாவு பதத்தில் அரைக்கவும்.
30 வகை குட்டீஸ் ரெசிபி - Page 3 26
வாணலியில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் சீரகம், பொடியாக நறுக்கிய வெங்காயம், பொடியாக நறுக்கிய கொத்தமல்லித் தழை, கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் ஆகியவற்றை தாளித்து, மாவில் சேர்த்துக் கலக்கவும். மாவை தோசைக்கல்லில் மெல்லிய தோசைகளாக ஊற்றி, சுற்றிலும் எண்ணெய் விட்டு, வெந்ததும் எடுக்கவும்.

இதற்கு டொமேட்டோ கெட்சப் தொட்டு சாப்பிட்டால்... சூப்பர் சுவையில் இருக்கும்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Mar 21, 2014 2:00 am

ஹனி சப்பாத்தி
தேவையானவை:  கோதுமை மாவு - 2 கப், தேன் - தேவையான அளவு, கறுப்பு எள் - ஒரு டேபிள்ஸ்பூன், நெய் - 2 டீஸ்பூன், எண்ணெய் - நெய் கலவை - தேவையான அளவு, உப்பு - ஒரு சிட்டிகை
30 வகை குட்டீஸ் ரெசிபி - Page 3 27
செய்முறை:  கோதுமை மாவுடன் தேன், நெய், எள், உப்பு சேர்த்துக் கலந்து தேவையான நீர் தெளித்து நன்கு பிசைந்துகொள்ளவும். மாவை சின்னச் சின்ன சப்பாத்திகளாக  திரட்டி தோசைக்கல்லில் போட்டு எண்ணெய் - நெய் கலவையை சுற்றிலும் ஊற்றி, வேகவிட்டு எடுக்கவும்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Mar 21, 2014 2:02 am

பிங்க் பூரி
தேவையானவை: கோதுமை மாவு - 2 கப், காய்ந்த மிளகாய் - 10 (அல்லது காரத்துக்கேற்ப), கரம் மசாலாத்தூள், சீரகம் - தலா ஒரு டீஸ்பூன், எண்ணெய், உப்பு, பீட்ரூட் வேகவைத்த நீர் - தேவையான அளவு.
30 வகை குட்டீஸ் ரெசிபி - Page 3 28
செய்முறை:  காய்ந்த மிளகாய், சீரகத்தை சேர்த்து மிக்ஸியில் நைஸாக அரைக்கவும். இதனை கோதுமை மாவுடன் கலந்து உப்பு, கரம் மசாலாத்தூள் சேர்த்து, பீட்ரூட் வேகவைத்த நீர் தெளித்து நன்கு பிசையவும். இந்த மாவை சிறு பூரிகளாகத் தேய்த்து, சூடான எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.

இதற்குத் தொட்டுக்கொள்ள வெள்ளரி ராய்தா பெஸ்ட் சாய்ஸ்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Mar 21, 2014 2:07 am

காலிஃப்ளவர் ரோஸ்ட்
தேவையானவை: தோசை மாவு - 2 கப், சின்ன காலிஃப்ளவர் - ஒன்று, பெரிய வெங்காயம், தக்காளி - தலா 2, இஞ்சி - பூண்டு விழுது - 2 டீஸ் பூன், தேங்காய் துருவல் - 2 டேபிள் ஸ்பூன், முந்திரி - 6, மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன் (அல்லது காரத்துக்கேற்ப), கடுகு, பெருஞ்சீரகம் - தலா அரை டீஸ் பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
30 வகை குட்டீஸ் ரெசிபி - Page 3 29
செய்முறை: காலிஃப்ளவரை மிகவும் சிறு சிறு துண்டுகளாக நறுக்கி, உப்பு கலந்த நீரில் சிறிது நேரம் போட்டு வைக்கவும். பெரிய வெங்காயம், தக் காளியை மிகவும் பொடியாக நறுக்கவும். தேங்காய் துருவல் - முந்திரியை மிக்ஸியில் விழுதாக அரைக்கவும்.

வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு, பெருஞ்சீரகம் தாளித்து... பொடியாக நறுக்கிய வெங்காயம், உப்பு சேர்த்து வதக்கவும். பிறகு பொடியாக நறுக் கிய தக்காளி, காலிஃப்ளவர், இஞ்சி - பூண்டு விழுது, மிளகாய்த்தூள் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கி, தேங்காய் - முந்திரி விழுது சேர்த்து நன்கு கிளறி இறக்கவும்.

மாவை மெல்லிய தோசைகளாக ஊற்றி, அதன்மீது இந்த காலிஃப்ளவர் மசாலாவைத் தடவி, சுற்றிலும் எண்ணெய் விட்டு மடித்து எடுக்கவும்.

இதை ஆனியன் ராய்தா தொட்டு சாப்பிடலாம்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Mar 21, 2014 2:11 am

ஃப்ரூட்ஸ்  நட்ஸ் பூரி
தேவையானவை: கோதுமை மாவு, பால் - தலா 2 கப், பொடியாக நறுக்கிய ஆப்பிள், ஆரஞ்சு, வாழைப்பழம் (மூன்றும் சேர்த்து) - 2 கப், வறுத்த முந்திரி, திராட்சை - தலா 10, சர்க்கரை - 4 டேபிள்ஸ்பூன், நெய் - 2 டீஸ்பூன், உப்பு - ஒரு சிட்டிகை, எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு.
30 வகை குட்டீஸ் ரெசிபி - Page 3 30
செய்முறை: கோதுமை மாவுடன் நெய், உப்பு சேர்த்து, தண்ணீர் தெளித்து நன்கு பிசைந்து, சிறு பூரிகளாகத் திரட்டி, சூடான எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.

பாலை சுண்டக் காய்ச்சி, சர்க்கரை சேர்த்து, கரைந்ததும் இறக்கி ஆற விடவும். பிறகு, அதில் பொடியாக நறுக்கிய பழத்துண்டுகள், முந்திரி, திராட்சை சேர்த்து, பூரி மீது ஊற்றி சாப்பிடக் கொடுக்கவும்.

விகடன்

Sponsored content

PostSponsored content



Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக