புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வாழ்க்கையையே தவம் ஆக்கலாம்! Poll_c10வாழ்க்கையையே தவம் ஆக்கலாம்! Poll_m10வாழ்க்கையையே தவம் ஆக்கலாம்! Poll_c10 
284 Posts - 45%
heezulia
வாழ்க்கையையே தவம் ஆக்கலாம்! Poll_c10வாழ்க்கையையே தவம் ஆக்கலாம்! Poll_m10வாழ்க்கையையே தவம் ஆக்கலாம்! Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
வாழ்க்கையையே தவம் ஆக்கலாம்! Poll_c10வாழ்க்கையையே தவம் ஆக்கலாம்! Poll_m10வாழ்க்கையையே தவம் ஆக்கலாம்! Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
வாழ்க்கையையே தவம் ஆக்கலாம்! Poll_c10வாழ்க்கையையே தவம் ஆக்கலாம்! Poll_m10வாழ்க்கையையே தவம் ஆக்கலாம்! Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
வாழ்க்கையையே தவம் ஆக்கலாம்! Poll_c10வாழ்க்கையையே தவம் ஆக்கலாம்! Poll_m10வாழ்க்கையையே தவம் ஆக்கலாம்! Poll_c10 
19 Posts - 3%
prajai
வாழ்க்கையையே தவம் ஆக்கலாம்! Poll_c10வாழ்க்கையையே தவம் ஆக்கலாம்! Poll_m10வாழ்க்கையையே தவம் ஆக்கலாம்! Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
வாழ்க்கையையே தவம் ஆக்கலாம்! Poll_c10வாழ்க்கையையே தவம் ஆக்கலாம்! Poll_m10வாழ்க்கையையே தவம் ஆக்கலாம்! Poll_c10 
8 Posts - 1%
Guna.D
வாழ்க்கையையே தவம் ஆக்கலாம்! Poll_c10வாழ்க்கையையே தவம் ஆக்கலாம்! Poll_m10வாழ்க்கையையே தவம் ஆக்கலாம்! Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
வாழ்க்கையையே தவம் ஆக்கலாம்! Poll_c10வாழ்க்கையையே தவம் ஆக்கலாம்! Poll_m10வாழ்க்கையையே தவம் ஆக்கலாம்! Poll_c10 
7 Posts - 1%
mruthun
வாழ்க்கையையே தவம் ஆக்கலாம்! Poll_c10வாழ்க்கையையே தவம் ஆக்கலாம்! Poll_m10வாழ்க்கையையே தவம் ஆக்கலாம்! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வாழ்க்கையையே தவம் ஆக்கலாம்!


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Mar 20, 2014 9:22 pm

வாழ்க்கையையே தவம் ஆக்கலாம்! E_1394195772

கார்ப்பரேஷன் ஆபிஸில் தவமாய் தவம் கிடந்து, ஒரு வழியாக வீட்டிற்குத் தண்ணீரைக் கொண்டு வந்தே. குழாயில் அடைப்பை அறுத்தெறிந்து, உடைப்பிற்கு ஒட்டு போட்டு என்று இது பெரிய வேலையாகி விட்டது. ன்று பூமிக்குக் கங்கையைக் கொண்டு வர தவம் செய்த பகீரதனை, இன்று வீட்டிற்குக் கார்ப்பரேஷன் தண்ணீரைக் கொண்டு வர தவம் செய்யச் சொல்ல வேண்டும். அப்போது தெரியும் எந்தத் தவம் கடினம் என்று எனப் பேசினாள் பக்கத்து வீட்டு பார்வதி. பேச்சுக்குப் பேச்சு தவம், தவம் என்கிறாளே என்று மனம் தவம் என்ற பொருளிற்கு தாவியது.

தவம் என்றால் உருக்குதல், மாற்றுதல், பக்குவம் செய்தல், ஒரு குறிக்கோளைப் பெற வலியவே துன்பத்தை மேற்கொள்ளுதல் என்றெல்லாம் பொருள்படும். மணிவாசகர் ஊனினை உருக்கி உள்ளொளி பெருக்கித் தானே தவம் செய்தார். தென் தமிழ்நாட்டில் கோமதி அம்மனின் தவசு பற்றிப் பேசும் மக்கள், உணவைச் சமைத்துப் பக்குவப்படுத்துபவரையும் தவசி பிள்ளை என்பர். உடலும், மனமும் பக்குவமாவது போல், உணவும் உருகி, பெருகி கரைந்து, பக்குவமாகிறது என்பது பொருள்.

பொதுவாக நற்பண்புகளை அடைய நாம் செய்யும் அனைத்துச் சாதனைகளும் தவம் தான். காமம், குர÷ாதம், லோபம், மோகம், மதம், மாச்சரியம் முதலிய தீய பண்புகளை விடுத்து அன்பு, சத்தியம், தர்ம வாழ்க்கை, தானம் செய்தல், இன்முகத்தோடு இன்சொல் கூறல் முதலிய பல நற்குணங்களை முயற்சி செய்து கடைபிடித்தலே தவமாகும். லோபத்தை மாற்ற செய்யும் தவம் தானம். உடற்பயிற்சிகள் உடல் வலிமை பெற செய்யும் தவம். இன்சொல், மென்சொல், குறைந்த அளவான சொற்கள் கோபத்தைக் குறைக்க செய்யும் தவம். மௌனமும் ஒரு தவமே. கீதை படிப்பது, தோத்திரம் படிப்பது, நல்ல நூல்களை மறுபடி மறுபடி ஆழ்ந்து படித்தல் எல்லாமே மனதை மாற்றச் செய்யும், ஒருவரது அடிப்படைக் குணத்தைப் புடம் போடச் செய்யும் தவம் தான்.

துரியோதனன் கதையைப் படித்தாலே பொறாமை, பேராசை முதலிய தீயகுணங்களைத் தள்ள வேண்டும் எனப் புரியும். மகாபாரத துருபதனின் கோப வார்த்தைகளும், பழிவாங்கிய துரோணரின் வாழ்வும் கோபம், பழிவாங்குதல், மன்னிக்காத பான்மை இவற்றின் தீய விளைவுகளைப் படம் பிடித்துக் காட்டும். நம் மனதைப் புடம் போட்டு அறிவைத் தெளிவாக்கும்.

ஒரு முகப்பட்ட, கண்ணாடி போன்ற தெளிவான அறிவின் மேன்மையை விளக்குகின்றனர் துருவனும், ப்த பிரகலாதனும். தாங்கள் பெற்ற பெரும்பேற்றால் தூல சரீரத்தை உருக்கி, அந்தக் கொழுப்பை எரித்து அல்லது உருக்கி இளைப்பதே கடினமென்றால் சூக்சுமமாக உள்ள மனதை மாற்றுவது எத்தனை கடிய தவம். வள்ளுவர் ஓர் அழகிய விளக்கம் தருகிறார் தவத்திற்கு. உற்ற நோய் நோன்றல் உயிர்க்கு உறுகண் செய்யாமை அற்றே தவத்திற்கு உரு. தனக்கு வந்த கஷ்டங்களை, நோய்களைப் பிறரைக் குறை கூறாமல், கிரகங்களின் மீது பழி ஏற்றாமல், விதிக்கு மதியில்லை என விசாரப்படாமல், ஏற்றுக் கொண்டு கர்மயோகமாக வாழ்வதே தவம். பிறரால் துன்பம் வந்தால் துன்பத்தைப் போக்க முயல வேண்டுமே ன்றிப் பழவாங்க நினைக்கக் கூடாது.

அதே சமயம் பிறருக்குத் தீங்கு இழைக்கக் கூடாது. எனக்குப் பிறரால் வந்த கஷ்டங்களை நான் பொறுப்பேன். அவ்வாளே அவர்களுக்கு என்னால் வரும் கஷ்டங்களை ஏற்றுக் கொள்ளட்டும் என்று வாதம் செய்தால் நற்பண்புகள் வளரா. பாபமும், பழியும் தான் வரும்.நம் மீது சுடுநீர், கொதி நிலையில் விழுந்தால் தீப்புண் ஏற்படுகிறது. காயத்தின் தீவிரம் அதிகம் ஆனால் மரணம் கூட நேரிட்டு விடும். அமிலமும் கொடிய புண்ணை உண்டாக்குகிறது. வெளிக்காயத்திற்கே இந்த கதி. வயிற்றில் உள்ளே சதா கோபத்தினால் ஓர் அமிலம் சுரக்கும், பொறாமையால் ஓர் ஊழித்தீயும் தோன்றிக் கொண்டே இருந்தால் உடல் நலனும், உள்ளப் பாங்கும், அமைதியான அறிவின் தெளிவும் கெட்டு விடாதா? அதனால் தான் நல்ல பண்புகளைத் தேடித் தேடி பயில வேண்டும்.

தாயுமானவர் பாடுகிறார். "உண்டோ நமைப் போல வஞ்சர்' என்று. ஒருவன் தன் பகைவனை அழிக்க நினைப்பான். நமது எண்ண ஓட்டமே பகையாகி நம்மையே அழித்தால் என்ன செய்வது? கவலைப்படாதே. என்னைப் போல் தவம் செய். நான் ஒரு நல்ல பாட்டைச் சொல்லித் தருகிறேன். எளிய சொல் - அரிய கருத்து. அருமையான வாழ்க்கை நெறி என்கிறார் பாரதியார். பேசாப் பொருளைப் பேச நான் துணிந்தேன். கேட்கா வரத்தைக் கேட்க நான் துணிந்தேன். மண் மீதுள்ள மக்கள், பறவைகள், விலங்குகள், பூச்சிகள், புற்பூண்டு, மரங்கள் யாவும் என் வினையில் இடும்பை தீர்த்தே இன்பமுற்று அன்புடன் இணைந்து வாழ்ந்திடமே செய்தல் வேண்டும் தேவ தேவா என்று தவம் செய்ய வேண்டுமாம்.

தவம் செய்வார் தம் கருமம் செய்வார் என்கிறார் வள்ளுவர். ஒவ்வொருவருக்கும் தம் கருமம் என்பது என்ன? நமது முன்னோர்கள் வாழ்நாள்களை நான்கு வகையாகப் பிரித்தனர். பிரம்மச்சரியம், கிருஹஸ்தம், வானப்ரஸ்தம், சந்நியாசம் என்பவை அவை. மாணவ பருவம்தான் பிரம்மச்சரியம் என்பது. எளிய வாழ்க்கை, படிப்பில் கவனம் இவைதான் வாழ்க்கை நெறி. ஷேர் மார்க்கெட்டில் பணம் பண்ணுகிறேன் விலையுயர்ந்த கார், போன் எல்லாம் வாங்கப் போகிறேன் என்றெல்லாம் போய் வழி தவறிய மாணவர்கள் உண்டு. உணவில் விளக்கெண்ணெய் வாசம் வருகிறது என்று கூறிய மாணவனையே, உன் கவனம் படிப்பில் இருந்து திசை மாறிவிட்டது என்று குருகுலத்தை விட்டு வெளியேற்றிய ஆசான்களைக் கொண்ட நாடு நம் பாரதம்.

மாணவனுக்குக் கல்வியே கர்மயோகம். கல்வியும், தார்மிக நாட்டமுமே தவம். எளிய வாழ்க்கை உயர்ந்த நோக்கம் சிறிய தேவை சீரிய சிந்தனை என்பது தாரக மந்திரம்.அடுத்து, கிரஹஸ்த நெறி திருமணமானவனுக்கு. வாழ்க்கை வசதிகளும் உண்டு. சமுதாய கடமைகளும் உண்டு. அவன் தர்ம நெறியில் பொருளீட்டுவான். மனைவி மக்களை காப்பது மட்டும் கடமையல்ல. துறவறத்தார்க்கு உணவளிப்பதும் அவனே. பெற்றோர், முதியோரைக் காப்பதும் அவனே. நீத்தார் கடனும் அவன் பொறுப்பே. தெய்வ வழிபாடும், பஞ்ச யக்ஞம் என்று சொல்லப்படுகிற கடமைகளும் அவன் பொறுப்பே. என்ன கஷ்டம் வந்தாலும் பொருட்படுத்தாமல், மேன்மக்களாக வாழ முயல வேண்டும். என்ன வறுமை வந்தாலும் தம் நெறி தவறக் கூடாது என்பதை நாலடியார் "நரம்பெழுந்து நல்கூர்ந்தார் ஆயினும் சான்றோர் குரம்பெழுந்து குற்றம் கொண் டேறார்' என்று புகழ்கிறது.

இவ்வாறு கடமை செய்வதே தவமா? வேறு தவம் கிடையாதா என்று கேட்கலாம். பின்னாளில் வைத்தியர் சொல்லித் தான் உணவைக் குறைக்க வேண்டுமா? இப்போதே வாரம் ஒரு நாள், ஒரு வேளை என்றெல்லாம் உபவாசம் இருந்து பழகலாம். மனக்கட்டுப்பாடு, புலனடக்கம் வரும். மாதம் ஒரு நாள் சில மணி நேரம் பேசாமல் இருந்து பழகலாம். இந்தக் காலத்தில் ஒரு நாள் முழுவதும் டி.வி. பார்க்கவில்லை, யாரையும் நானாக ஒரு நாள் முழுவதும் போனில் கூப்பிடவில்லை, வந்த அழைப்புகளுக்கு மட்டும், தேவை என்றால் பேசினேன் என்பதே பெரிய தவம் தான்.

தொடரும்..............



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Mar 20, 2014 9:25 pm

வாழ்க்கையையே தவம் ஆக்கலாம்! Images?q=tbn:ANd9GcQMhm7H10z-suoSsJtVD0R9zH-EHjj7dsiX2M5ZgFKFZ4dxF5jE

பகவான் கிருஷ்ணர் உடலால், வாக்கினால், மனதினால் செய்யும் மூன்று வகை தவங்கள் எனவும், மனிதர்கள் அவரவர் குணத்திற்கு ஏற்ப செய்யும் சாத்விக தவம், சற்றுக் கடுமையான ராஜ தவம், கொடுமை நிறைந்த தாமச தவம் என்பதாக மூன்று தவங்கள் எனவும் வேறு பிரிக்கிறார்.
கிரஹஸ்த நிலைக்கு அடுத்த நிலை பொறுப்புகள் முடிந்து, வேலையில் ஓய்வு பெற்று குழந்தைகள் பெரியவர்கள் ஆனபின் வரும் வானப்ரஸ்தம் என்றால் காட்டிற்கு போக வேண்டாம். குழந்தைகள் கூட இருந்தாலும், இல்லாவிட்டாலும் பேச்சைக் குறைத்து, உணவைக் குறைத்து விவகார ஈடுபாடுகளைக் குறைத்துக் கொள்ளும் நிலை. அடுத்த தலைமுறைக்கு இடமளித்து ஓதுங்கும் நிலை. ஜபம், தீபங்களைக் காட்டி, நல்ல நூல்களை ஆழ்ந்து படிக்க வேண்டும். இவ்வாறு வாழ்வதே தவம். இதுநாள் வரை ஓடி உழைத்த சரீரமும், மனமும் தேவையின்றிப் பிறர் விஷயங்களில் ஈடுபட முயற்சிக்கும். வீணாகப் பேசி வம்பு செய்வதால் தான், எந்த வீட்டிலும் சிறியவர்கள் பெரியவர்களை ஒதுக்குகிறார்கள். இப்பொழுதே மனக்கட்டுப்பாட்டுப் பயிற்சியும், நாவடக்கம் அடுத்துப் புலனடக்கமும் வந்தால் அதுவே அடுத்த நிலையான சந்நியாசத்திற்கு வழி வகுக்கும். சந்நியாச நிலையில் தவம் செய்வதும், படிப்பதும் இவற்றிற்காகப் புலனடக்கம், மனவடக்கம் பயிற்சியில் நிற்றலும்தான் கடமை. இவ்வாறு தவம் செய்பவர்களைப் பாவம் அண்டாதாம். விளக்கு ஒளியில் இருள் ஓடுவது போல், தவத்தைக் கண்டு பாவங்கள் ஓடிவிடுமாம்.

விளக்கு புகஇருள் மாய்ந்தாங் கொருவன்
தவத்தின்முன் நில்லாதாம் பாவம் - விளக்கு நெய்
தேய்விடத்துச் சென்றிருள் பாய்ந்தாங்க நல்வினை
தீர்விடத்து நிற்குமாம் தீது

என்பது நாவலடியார்.

ஆன்மிக வாழ்வில் நாட்டமே இல்லை. எங்களிடம் தவத்தைப் பற்றி ஏன் பேச வேண்டும் என்று சிலர் கேட்கலாம். வாழ்வில் பணமா, புகழா எது அடைய வேண்டுமானாலும் கடும் முயற்சி தேவை. கடும் முயற்சியே நோன்புதான். தவம் தான். சிலருக்குத் தான் கடும் முயற்சி இருப்பதால் சிலர் தான் வாழ்வில் வெற்றி பெறுகிறார்கள்.
செய்கதவம் செய்கதவம் நெஞ்சே தவம் செய்தால் எய்தவிரும்பியதை எய்தலாம் என்கிறாரே பாரதியார். இதை வள்ளுவரும் எதிர்மறையாக,
இலர்பலர் ஆகிய காரணம் நோற்பார்
சிர்பலர் நோலா தவர்
என்கிறார். அதாவது பலர் தவம் இன்மையால் செல்வம் அற்றவர் ஆகினர். சிலர் தவத்தின் மேன்மையால் செல்வந்தர் ஆகினர் என்கிறார்.

வானபிரஸ்தமாகிய மூன்றாம் நிலையைக் காவல் காக்கும் நிலை என்கிறார் வேதாத்ரி மகரிஷி அவர்கள். அதாவது சொற்களில் கட்டுப்பாடு வேண்டும். நாவடக்கம் நாலும் அடங்கும். யோசித்துப் பேசுவதால் வம்பும் இல்லை. வார்த்தை தடிப்பும் இல்லை. எப்பொழுதும் அறிவு விழித்த நிலையில் இருக்கும். அடுத்துச் செயல்களையும் வள்ளுவர் கூறுவது பேல,எண்ணித் துணிக கருமம் துணிந்தபின் எண்ணுவம் என்பது இழுக்கு எனறபடி ஆராய்ந்து செய்ய வேண்டும். இந்தச் சொல் கட்டுப்பாடு, செயல்கட்டுப்பாடு அடுத்த நிலையான எண்ண கட்டுப்பாட்டை வளர்க்கும். மனம் ஒருமைப்படும். மனம் ஒருமுகப்பட, அது குணத்தில் பிரதிபலிக்கும். கடைசியாகச் சும்மாவே இருந்தால் போதுமா? இருதயத்தைக் கவனி. அன்பால் அதை நிரப்பு. அது நன்கு வேலை செய்ய அதற்கு உழைப்பையும் கொடு என்கிறார் ஞானி. இவ்வாறு வாழ்வதால் காவி உடுத்தினாலும், உடுத்தாவிட்டாலும் பற்றற்ற சந்நியாச மனம் வந்து விடும்.

இந்த மனம் வந்தால்தான் தவம் கைகூடும். தவம் செய்யச் செய்யத் தான் சித்த சுத்தி வரும். ஒரு போகத்தை அனுபவிக்க தவம் செய்ய வேண்டும் என்கிறோம். அனுபவித்து அனுபவித்துப் பழகிய போகங்களில் இருந்து விடுதலை பெற இன்னும் அதிக தவம் தேவை. மின்விசிறி வாங்க பணம் வேண்டும். தவமுடையார்க்குத் தான் அது முடியும் பணம் கிடைக்கும் என்றால், விசிறி காற்றிற்கு அடிமையான உடல், அந்தச் சுகத்தை விட இன்னும் அதிக முயற்சி, மனக்கட்டுப்பாடு, தவம் தேவை. அதனால் தான் வள்ளுவர் தவமும் தவமுடையார்க்கு ஆகும் என்கிறார்.

தவத்தினால் பெயர், புகழ் எல்லாம் வரும். சில சித்திகளும் கை கூடும். இந்த மாயாஜால சித்திகளில் மயங்கி அவற்றில் இறங்கினால், விசுவாமித்திரர் திரிசங்குவிற்குச் சொர்க்கம் படைத்த கதையாகி விடும். வித்யாரண்யரும், பஞ்சதசியில் இந்தச் சித்திகளில் மயங்காதே என எச்சரிக்கிறார். எண்ணெய் வேண்டும் என்று எண்ணெய் அரைப்பவன், எண்ணெயை விட்டு விட்டு, புண்ணாக்கை எடுத்த கதையாகக் கூடாதே என்பதே அருளாளர்களின் நினைப்பு.

நம்மைப் போன்ற சாதாரண மனிதர்களுக்குக் கர்மயோகமே, தார்மீக வாழ்வே முதல் தவம். வாழ்வின் எந்த நிலையையும் இறை அருளாகவும், வரும் நலம் தீங்கை இறைவனது அருட்கொடையாகவும், செய்யும் எல்லாச் செயலையுமு" இறைப் பணியாகவும் கொண்ட வாழ்வதே கர்மயோகம். இவ்வாறிருக்க மணிவாசகரைத் திருவிளையாடல் புராணம் தவத்தை சிறையிலிட்டு அவரே தவமாம், தவத்தின் உருவாம் என்று பாடி புகழ்கிறது. பாரதியார், இந்த நூற்றாண்டின் அத்துவைத ஞானி தவம் புரியும் வகையறியேன் என முடித்து விடுகிறார்.

தவமே புரியும் வகையறியேன்
சலியாது நெஞ்சறியாது
சிவமே நாடி பொழுதனைத்தும்
தேங்கி தேங்கி நிற்பேனே
நவமாமணிகள் புனைந்தமுடி
நாதா கருணாலயனே தத்
துவமாகிய தோர் பிரணவமே
அஞ்சேல் என்று சொல்லுதியே.

- கோமதி ராஜ்குமார்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக