ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

வாங்க சாதிக்கலாம்

3 posters

Go down

வாங்க சாதிக்கலாம் Empty வாங்க சாதிக்கலாம்

Post by M.M.SENTHIL Wed Mar 12, 2014 1:02 pm

உலகம் முழுவதும் பல்வேறு காலகட்டங் களில் பலப்பல சாதனையாளர்கள் தோன்றிக் கொண்டே இருக்கிறார்கள். ஒரு சிலர் மிகச்சிறிய வயதிலேயே சாதிக்கிறார்கள். வெகுசிலரே மிகச்சரியான வயதில் சாதிக்கிறார்கள். வேறு சிலரோ காலம் கடந்து வயதான பின்னர் சாதிக் கிறார்கள். ஒன்று மட்டும் நிச்சயம். மன உறுதியுடன் சாதித்தே தீர வேண்டும் என்ற நோக்கத்தில் தொடர்ந்து உழைப்பவர்கள் நிச்சயம் சாதிக்கிறார்கள். ஒன்று மட்டும் நிச்சயம். மன உறுதியுடன் சாதித்தே தீர வேண்டும். என்ற நோக்கத்தில் தொடர்ந்து உழைப்பவர்கள் நிச்சயம் சாதிக்கிறார்கள். இந்த உலகத்தில் பிறக்கும் அனைவருக்குமே சாதிக்க வேண்டும் மக்களிடையே புகழ் பெற வேண்டும் என்ற எண்ணம் இளம்வயதில் தோன்றுவது இயற்கையே. ஆனால் திறமை உள்ள எல்லோ ராலும் சாதிக்க முடிவதில்லை.

வாழ்க்கையில் சாதிக்க என்ன செய்ய வேண்டும் என்று கேட்டால் பலரும் கடுமையாக உழைக்க வேண்டும் என்று சொல்லுவார்கள். ஆனால் கடுமையாக உழைத்தால் மட்டும் சாதித்துவிட முடியாது. எல்லா சாதனை களுக்கும் அடிப்படை உழைப்புதான் என்பதை மறுக்க முடியாது. ஆனால் அதையும் தாண்டி சில விஷயங்கள் இருக்கின்றன. அப்படி யென்றால் சாதிக்க என்ன செய்ய வேண்டும் என்றகேள்வி எழுகிறதல்லவா?

உழைப்பு, விடாமுயற்சி, நேர்மை, கருணை உள்ளம், பிறரிடம் அன்பு பாரட்டும் குணம், எளிமை, ஒவ்வொரு செயலிலும் தனித்தன்மையோடு விளங்குதல், துணிச்சலாய் முடிவெடுக்கும் திறமை, எந்த ஒரு செயலையும் மனப்பூர்வமாய் செய்தல், மனநிறைவு, பிறரை பாராட்டும் பெருந்தன்மை, தன்னம்பிக்கை இது போன்ற பலவிதமான குணங்கள் ஒன்று சேர எவருக்கு இருக்கிறதோ அவரே மக்கள் மனதில் நிரந்தரமாய் இடம் பிடிக்கமுடியும். உலகம் போற்றும் பெரிய பெரிய சாதனையாளர்கள் ஒவ்வொருவரும் ஒருவிதமான தனித்தன்மை யோடு விளங்குவதைக் காணலாம்.

பிரெஞ்சு நாவலாசிரியர் ஜீல்ஸ் வர்ன். அவர் 1873 ஆம் ஆண்டில் “உலகைச் சுற்றி வர எண்பது நாட்கள்” என்றொரு அறிவியல் நூலை எழுதினார். அவர் அந்த நூலை புத்தகமாக்க விரும்பி பிரபலமான பல பதிப்பகங்களை அணுகினார். ஆனால் ஜீல்ஸ் வர்ன் அப்போது பிரபலமில்லாதவர் என்றகாரணத்தினால் எவரும் அதை பதிப்பிக்க முன்வரவில்லை. வெறுத்துப் போன ஜீல்ஸ் வர்ன் அந்த கையெழுத்துப் பிரதியினை தன் மனைவியிடம் கொடுத்து எரித்துவிடும்படி சொன்னார்.


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

வாங்க சாதிக்கலாம் Empty Re: வாங்க சாதிக்கலாம்

Post by M.M.SENTHIL Wed Mar 12, 2014 1:02 pm

மனைவியோ கணவன் சொல் மந்திரம் என்று கண்ணை மூடிக்கொண்டு செயல்படுவர் அல்ல. என்ன செய்யலாம் என்று அமைதியாக யோசித்தார். அப்பகுதியில் அதிகமாக பிரபல மில்லாத ஒரு பதிப்பகத்தாரை அணுகினார். அவர்களும் அந்த கையெழுத்துப் பிரதியை வாங்கி பரிசீலித்தார்கள். சில மாதங்களில் அதைப் புத்தகமாகவும் கொண்டு வந்தார்கள். வெளிவந்த சில காலத்திற்குள்ளாகவே அந்த புத்தகம் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டது. நல்ல விற்பனையும் ஆனது. இதைத் தொடர்ந்து பல புத்தகங்களை எழுதி அவர் மிகப்பிரபலமான எழுத்தாளராக ஆகிவிட்டார். உலகம் முழுவதும் அவர் புகழ் பரவியது.
ஒருவர் பிரபலமாகி சாதிக்க வேண்டு மென்றால் திறமை மட்டும் போதாது. தம்மிடம் இருக்கும் திறமையை வெளிக்கொணரும் வழிகளைத் தெரிந்திருக்க வேண்டும். இதனால்தான் பலர் திறமை இருந்தும் வெளியே வராமல் தவித்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஒருவன் வாழ்க்கையில் சாதிக்க வேண்டும் என்று முடிவு செய்தால் மூன்று விஷயங்களை தவறாமல் கடைபிடிக்க வேண்டும். முதல் விஷயம் நம்மால் நிச்சயம் சாதிக்க முடியும் என்றதன்னம்பிக்கை. நாம் தினமும் வீட்டை விட்டு வெளியே சென்று நமது செயல்களை முடித்து விட்டு வீட்டிற்குத் திரும்ப வேண்டும் என்றால் அதற்கும் ஒருவித நம்பிக்கை அவசியம். இரண்டாவது மனதை ஒரு முகப்படுத்தும் தன்மை. எந்தத் துறையில் சாதிக்க விரும்பு கிறோமோ அந்தத் துறையில் நம் மனம் முழுவதையும் குவித்து உழைக்க வேண்டும். மூன்றாவது சரியான நேரத்தில் துணிச்சலுடன் சரியாக முடிவெடுக்கும் திறமையை வளர்த்தக் கொள்ள வேண்டும். இவை மூன்று விஷயங் களையும் எவன் ஒருவன் சரியாக பின்பற்று கிறானோ அவனால் நிச்சயம் சாதிக்க முடியும்.

அமெரிக்க ஐனாதிபதிகளாக பதவி வகித்தவர்களில் அதுவரை எவருமே அடிமைப் பட்டுக் கிடந்த மக்களின் வாழ்க்கை முன்னேற் றத்தைப் பற்றி சிந்திக்கவே இல்லை. அத்தகைய மக்களின் துயரத்தை அறிந்து அவர்கள் மீது அன்பு வைத்து கருணை காட்டியதாலேயே ஆபிரகாம் லிங்கன் அமெரிக்காவின் ஜனாதிபதி யாகி மக்கள் மனதில் இன்றுவரை நிறைந்திருக் கிறார். நேர்மை மற்றும் எளிமையான வாழ்க்கை முறையினால் காந்தி, சாஸ்திரி, காமராஜர் போன்றதலைவர்கள் இன்னமும் மக்கள் மனதில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். நீங்கள் சாதிக்க விரும்பும் துறையில் ஏற்கனவே சாதித்தவர்களின் வாழ்க்கை வரலாறுகளை கட்டாயம் படியுங்கள். அத்தகையவர்கள் எப்படியெல்லாம் கஷ்டப் பட்டு சாதனை செய்தார்கள் என்பது உங்களுக்கு ஒரளவிற்குப் புரியும். கையில் பெரிய முதலீடு ஏதுமின்றி அறிவையும் உழைப்பையும் மட்டுமே முதலீடாக்கி கோடி கோடியாக பணத்தைக் குவித்தவர்கள் இருக்கிறார்கள். தற்போது வாழ்ந்து கொண்டிருப்பவர்களில் இன்ஃபோசிஸ் நாராயணமூர்த்தி அவர்களை இதற்கு உதாரண மாய்ச் செல்லலாம்.

இன்ஃபோசிஸ் நாராயணமூர்த்தி, இந்த பெயர் தற்போது உலகம் முழுக்க பிரபலமாகி விட்டது. 1946ஆம் ஆண்டில் மைசூருக்கு அருகில் அமைந்த சித்தலகட்டா என்றஊரில் பிறந்தவர் நாராயணமூர்த்தி. தந்தையார் ஒரு பள்ளி ஆசிரியர். நாராயணமூர்த்தி மிகச் சிறப்பாக படித்தார். இந்தியாவின் தலைசிறந்த நிறுவனங் களில் முதன்மையான ஐஐடியில் பட்டம் பெற வேண்டும் என்பது அவருடைய குறிக்கோளாக இருந்தது. முயன்று படித்தார். இந்திய அளவில் பதினேழாவது இடத்தைப் பிடித்தார். ஆனால் குடும்பத்தின் பொருளாதார சூழ்நிலை காரணமாக அவரால் ஐஐடியில் சேர்ந்து படிக்க இயலாமல் போய்விட்டது. எனவே மைசூர் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த தேசிய பொறியியல் கல்லூரியில் சேர்ந்து பட்டம் பெற்றார். இதைத் தொடர்ந்து அவருடைய விருப்பப்படியே கான்பூர் ஐஐடியில் எம்டெக் படித்து பட்டம் பெற்றார்.


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

வாங்க சாதிக்கலாம் Empty Re: வாங்க சாதிக்கலாம்

Post by M.M.SENTHIL Wed Mar 12, 2014 1:03 pm

எம்டெக் பட்டம் பெற்று சில நிறுவனங் களில் பணிபுரிந்த நாராயணமூர்த்தி பின்னர் மும்பையில் இருந்த பட்னி என்றமென்பொருள் நிறுவனத்தில் ஆலோசகராய் பணியில் சேர்ந்தார். பட்னி நிறுவனத்தில் அவரைப் போலவே துடிப் பான சில இளைஞர்கள் பணிபுரிந்து வந்தார்கள். அனைவருக்குமே சொந்தமாக ஒரு நிறுவனத் தைத் தொடங்க வேண்டும் என்ற ஆர்வம் இருந்தது. நாராயணமூர்த்தி, நந்தன் நிலேக்னி, தினேஷ், கோபாலகிருஷ்ணன், ராகவன், சைபால், அசோக் அரோரா ஆகிய ஏழு நண்பர்களும் இணைந்து ஆளுக்கு பத்தாயிரம் முதலிட்டில் 1981 ஆம் ஆண்டில் பூனே நகரத்தில் ஒரு நிறுவனத்தைத் தொடங்கினார்கள். தாங்கள் தொடங்கிய நிறுவனத்திற்கு அவர்கள் சூட்டிய பெயர் இன்ஃபோசிஸ் கடின உழைப்பின் மூலமாக இன்ஃபோசிஸ் மெல்ல மெல்ல வளர்ந்து இன்று புகழின் உச்சியில் நின்று கொண்டிருக்கிறது.

வெறும் எழுபதாயிரம் ரூபாய் முதலீட் டோடு தொடங்கப்பட்ட நிறுவனமான இன்ஃ போசிஸ் இன்று பல ஆயிரம் கோடி ரூபாய் சம்பாதித்திருக்கிறது. இமாலய வெற்றியை அடைய பணம் பிரதானமல்ல உழைப்பே என்பதை உலகிற்கு நிரூபத்திருக்கும் ஒரு சிலருள் நம் நாராயணமூர்த்தியும் ஒருவர். நம்பிக்கை மீது முழு நம்பிக்கை வைத்தால் வெற்றி நம்மைத் தேடி வரும்.

நம் எல்லோரிடத்திலும் திறமை இருக்கிறது. திறமையை வெளிப்படுத்தக் கூடிய அளவிற்கு ஆற்றலும் இருக்கிறது. சாதனை செய்யத் தேவையான விடாமுயற்சி, மனஉறுதி போன்றவற்றைநாம் சிறுவயதிலிருந்தே வளர்த்துக் கொள்ள வேண்டும். சாதனை செய்தவர்களைப் பார்த்து பொறாமைப்பட்டால் மட்டும் போதாது. அவர்கள் எப்படி சாதித்தார்கள், சாதித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை கூர்ந்து நோக்க வேண்டும். மனதை எந்த நேரமும் உற்சாகமாக வைத்துக் கொள்ளப் பழக வேண்டும். உற்சாகமானவர்களுடன் சேர்ந்து உழைக்க வேண்டும்.

ஒவ்வொருவருக்கும் சாதனை என்பது கைக்கெட்டும் தூரத்திலேயே இருக்கிறது. ஆனால் அந்த தூரத்தை யாரும் அவ்வளவு சுலபத்தில் அடைந்துவிட முடியாது. சாதனை என்பது மிக மிக நீண்ட பயணம். அந்த பயணம் மற்றபயணங்களைப் போல் அல்லாமல் மிகவும் சிரமமானதாகத்தான் இருக்கும். சாதிக்க வேண்டும் என்று நினைத்தால் மனதில் உறுதி யோடும் உற்சாகத்தோடும் இலக்கை அடையும் வரை அப்பயணத்தைத் தொடர்ந்து கொண்டே இருக்க வேண்டும். அப்படிச் செய்தால் நிச்சயம் இலக்கைத் தொட்டு விடலாம். சரித்திரத்தில் நிரந்தரமாய் இடமும் பெற்று விடலாம்.

Author: பதி ஆர்.வி
Jul 2010 | Posted in Articles


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

வாங்க சாதிக்கலாம் Empty Re: வாங்க சாதிக்கலாம்

Post by ஜாஹீதாபானு Thu Mar 13, 2014 12:55 pm

வாங்க சாதிக்கலாம் 103459460 வாங்க சாதிக்கலாம் 1571444738 


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

வாங்க சாதிக்கலாம் Empty Re: வாங்க சாதிக்கலாம்

Post by Dr.S.Soundarapandian Thu Mar 13, 2014 8:32 pm

M.M.SENTHIL wrote:


உழைப்பு, விடாமுயற்சி, நேர்மை, கருணை உள்ளம், பிறரிடம் அன்பு பாரட்டும் குணம், எளிமை, ஒவ்வொரு செயலிலும் தனித்தன்மையோடு விளங்குதல், துணிச்சலாய் முடிவெடுக்கும் திறமை, எந்த ஒரு செயலையும் மனப்பூர்வமாய் செய்தல், மனநிறைவு, பிறரை பாராட்டும் பெருந்தன்மை, தன்னம்பிக்கை இது போன்ற பலவிதமான குணங்கள் ஒன்று சேர எவருக்கு இருக்கிறதோ அவரே மக்கள் மனதில் நிரந்தரமாய் இடம் பிடிக்கமுடியும்.


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

வாங்க சாதிக்கலாம் Empty Re: வாங்க சாதிக்கலாம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum