ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:32 am

» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Today at 7:23 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am

» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:39 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:13 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 8:59 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:46 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 7:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 4:38 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:32 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

காணாமல் போகும் கண்மாய்கள்!

Go down

காணாமல் போகும் கண்மாய்கள்! Empty காணாமல் போகும் கண்மாய்கள்!

Post by சிவா Sat Mar 08, 2014 12:54 am



தமிழ்நாடு முழுவதும் கண்மாய்கள் நீர் தேக்கமில்லாமல் குப்பைகளைச் சேகரிக்கும் இடமாக மாறியிருப்பதை புகைப்பட ஆதாரங்களுடன் அள்ளி வீசுகின்றனர் "விழித்தெழு மதுரை' அமைப்பினர். கண்மாய்கள், நாள்தோறும் நெகிழிக் (பிளாஸ்டிக்) குப்பைகள், மிருகக் கழிவுனுகள் டன் கணக்கில் கொட்டும் இடங்களாக உருமாறியுள்ளது. எல்லா கண்மாய்களும் கருவேல மரப் புதர்கள் மண்டி, நிலத்தடி நீரை முழவதும் உறிஞ்சப்பட்டு மண் வெடித்து, வறண்டு கிடக்கிறது. இதனால் வரும் காலங்களில் பெரிய அளவில் தண்ணீர் பஞ்சம் ஏற்படும் அபாயம் ஏற்படும் என்கின்றனர்.

வைகை அணையில் தண்ணீர் அளவு 34 அடிதான் உள்ளது. இது வருங்காலத் தேவைக்குப் போதாது. மதுரை மாநகராட்சிக் குழாய்களில் நான்கு நாட்களுக்கு ஒருமுறைதான் தண்ணீர் வருகின்றன. வீதியில் வரிசையில் நீருக்காக ஏங்கும் குடங்களைக் காணும்போது பயம் உருவாகின்றது. இப்போதே இப்படி என்றால், கோடையில்... மதுரை மக்களிடம் தண்ணீர்ப பற்றாக்குறை பயம் கடுமையாகப் பற்றிக் கொண்டிருக்கிறது. ஏன் இந்த நிலைமை?

"மதுரையில் மொத்தம் 38 கண்மாய்கள் இருந்துள்ளன. ஆனால் தற்போது 20 கண்மாய்தான் உள்ளன. அதுவும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. அதைக் காப்பாத்தணும்' என்கிறார் "விழித்தெழு மதுரை' அமைப்பின் தலைவர் செல்வம் இராமசாமி. "நிலத்தடி நீர் பற்றாக்குறைதான் வறட்சிக்குக் காரணம். மதுரையில் உள்ள கண்மாய் பயன்பாட்டை முறைப்படுத்தினாலே தேவையான அளவுக்கு நிலத்தடி நீரைத் தேக்க முடியும்' என்கிறார்.

மதுரையில் உள்ள கண்மாய்கள் குறித்த தகவல்களைச் சேகரித்து, அதில் தற்சமயம் எவை எவை பொதுப்பணித்துறையிடம் உள்ளன, எவை எவை வருமான வரித்துறையிடம் உள்ளன என அறிந்து கொள்ளப்பட்டது. அரசு ரிக்கார்டில் உள்ள கண்மாய் பரப்பளவு, அதில் பயனடைந்த விவசாய நிலம், தற்போது பயன்படும் கண்மாய் பரப்பளவு, விவசாயம், கண்மாயைச் சார்ந்து வாழும் பல்லுயிர்கள் குறித்த தகவல்களைப் புள்ளி விவரங்களுடன் சேகரிக்கப்பட்டது. இதில் உடனடி கவனம் பெற வேண்டிய கண்மாய் என கொடிக்குளம் கிராமத்தையும், பரசுராம்பட்டி கண்மாயையும் தேர்ந்தெடுத்து தங்களின் களப்பணியினைத் தொடங்கி உள்ளனர்.

களப்பணியின் முதல் கட்டமாக கிராம மக்களிடம் கண்மாய் குறித்த தகவல்களையும், கண்மாயின் இன்றைய நிலை, எதிர்காலத் தேவை ஆகியவற்றைப் பற்றியும் விவரித்தனர். ஊராட்சி ஒன்றிய தலைவரின் உதவியுடன், கண்மாய் சீரமைப்புப பணியின் தேவை குறித்து விளக்கி, கிராமக் கூட்டம் ஒன்றுக்கு ஏற்பாடு செய்தனர். அப்பகுதியிலுள்ள இளைஞர் நற்பணி மன்றம், கபடி, கிரிக்கெட் விளையாட்டுக் குழுக்களையும், ரசிகர் மன்றங்களையும் அக்கூட்டத்துக்கு அழைத்து, நீரின் அவசியம், கண்மாய் பராமரிப்பு குறித்த தகவல்களை எடுத்துரைத்து கண்மாய் சீரமைப்புப் பணியினைத் தொடங்கினர்.

செல்வம் இராமசாமி, "மக்கள் நீரின் தேவையை உணர்ந்தால் மட்டுமே கண்மாயின் பராமரிப்பின் அவசியம் புரியும். இன்று விவசாயம் செய்யும் நிலங்கள் குறுகிவிட்டன. தண்ணீருக்காகப் பல மைல்கள் நடக்க வேண்டிய தேவையும் கூடியுள்ளது. குடிநீர் லாரிகளை நம்பியே மக்கள் உளளனர். இந்த நிலைமை மாற வேண்டும். தற்சமயம் பள்ளி, கல்லூரிகளின் முதல்வர்களின் உதவியை நாடி, என்.எஸ்.எஸ். அமைப்பின் மூலம் எல்லா நாட்களிலும் கண்மாய்களைத் தூய்மைப்படுத்தும் பணியை மேற்கொண்டு வருகிறோம்' என்றார்.

அவர் மேலும், "செல்லூர், கொடிக்குளம், பரசுராம்பட்டி, மயிலநேந்தல் ஆகிய நான்கு கண்மாய்களில் இதுவரை குப்பைகளை அகற்றி இருக்கிறோம். ஒவ்வொரு கண்மாயும் 60 லிருந்து 900 ஏக்கர் பரப்பளவு கொண்டது. அதில் முடிந்தவரையில் கருவேல மரங்களை அகற்றி மண்டிய மண் மேடுகளை நீக்கியிருக்கிறோம். அரசு அதிகாரிகளிடம் ஓரளவுக்குத்தான் ஒத்துழைப்பு கிடைக்கிறது. மாதம் ஒரு கண்மாயை எடுத்துக்கிறோம். 1993ல் வெள்ளம் வந்து செல்லூரே மூழ்கடித்தது. அப்புறம்தான் எல்லாருக்கும் தெரிந்தது, செல்லூர் கண்மாய் நிறைந்து அடுத்த கண்மாய்க்குப் போகாமல் வெள்ளம் ஊருக்குள் புகுந்தது என்று. இப்ப மயிலநேந்தல் பக்கத்திலுள்ள கண்மாய் முழுசாக முடிக்கிடக்கு. அரசும் கவனிக்கவில்லை. குப்பைக் கொட்டி மேடாகி, ஊரில் சிலர் அந்த நிலத்தை ஆக்கிரமித்த விற்றுவிட்டார்கள். உடனே கண்டு பிடிக்க வில்லையானால் பிறகு மீட்க முடிவதில்லை. கண்மாய் காணாமலே போய்விடுகிறது. அதனால்தான் முதல்ல கண்மாயில் ஆக்கிரமிப்பை நிறுத்தணும்' என்றார்.

"கொடிக்குளம் கண்மாயில் ரெண்டு ஆள் உயரத்துக்கு மண் இருந்தது. இவங்க வந்து சரி செஞ்சாங்க' என்கிறார் கொடிக்குளம் தலைவர் பெரியசாமி.

"அரசியல்வாதிகள் ஆக்கிரமிப்பை ஒண்ணும் பண்ண முடியலை. 20 பேர் குழுவாகவும், 50 பேர் அவர்களுக்குத் துணையாகவும் இருக்காங்க. பி.எம்.டபிள்யு.யிலிருந்து வருவாய்த் துறைக்கு கொடிக்குளம் கண்மாயை மாற்றியிருக்காங்க. அந்த இடத்தில் அண்ணா பல்கலைக்கழகம் வருவதாக இருந்தது. அதுக்கப்புறம்தான் மக்களுக்குத் தெரிந்து பொது திட்டத்றை கண்மாயை யாரும் தொடக் கூடாதுன்னு சட்டமே இருக்கு. அப்புறம் எப்படி இங்கு கட்டடம் கட்டலாம்னு கேட்டு நிறுத்தினாங்க' என்கிறார் விவசாயி பாண்டி.

"இந்த வேலைப் பற்றிக் கேள்விப்பட்ட நடிகையும் சமூக ஆர்வலருமான ரோகிணி இந்த இடங்களைப் பார்வையிட்டு இன்னும் யார் யாரைப் பார்த்தா உதவி கிடைக்கும்னு சொல்லிட்டுப் போனாங்க' என்றார் ஆவணியாபுரம் கூட்டுறவு சங்கப் பணியாளர் ஜோதிராமலிங்கம்.

"வரும் ஆண்டுக்குள் 20 கண்மாய்களையும் தூர்வாரி முடிக்கத் திட்டமிட்டிருக்கோம். கண்மாய் மீட்டுப் போராட்டம்தான் எதிர்காலத் திட்டம்' என்றார் செல்வம் இராமசாமி.

- மதுரை சரவணன்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum