ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஓரினப்புணர்ச்சி வழக்கு: அன்வாருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை!

4 posters

Go down

ஓரினப்புணர்ச்சி வழக்கு: அன்வாருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை! Empty ஓரினப்புணர்ச்சி வழக்கு: அன்வாருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை!

Post by சிவா Fri Mar 07, 2014 11:23 pm

ஓரினப்புணர்ச்சி வழக்கு: அன்வாருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை! 1796461_637276629678771_1960313514_n

அன்வார் இப்ராகிமின் ஓரினப் புணர்ச்சி மீதிலான வழக்கை விசாரித்த மேல்முறையீட்டு நீதிமன்றம் அவருக்கு இன்று 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தது.

கடந்த 2008ஆம் ஆண்டில் தனது உதவியாளர் முகமட் சைபுல் புக்காரி மீது ஓரினப் புணர்ச்சி நடவடிக்கையில் ஈடுபட்டார் என்பது மீதிலான வழக்கில் உயர் நீதிமன்றத்தால் அன்வார் விடுதலை செய்யப்பட்ட முடிவை எதிர்த்து மத்திய அரசாங்கம் செய்திருந்த மேல் முறையீடு மீதிலான விசாரணை நேற்றும் இன்றும் நடைபெற்றது.

இன்று வழக்கின் முடிவில் அன்வார் குற்றவாளி எனத் தீர்ப்பளித்த மூன்று நீதிபதிகளைக் கொண்ட அமர்வு, அவருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

இருப்பினும், உச்ச நீதிமன்றத்திற்கு அவர் மீண்டும் மேல் முறையீடு செய்ய அனுமதி வழங்கிய நீதிமன்றம் அதுவரை அவருக்கு பத்தாயிரம் ரிங்கிட் ஜாமீன் வழங்கியதோடு, ஒரு நபர் உத்தரவாதத்தையும் நிர்ணயித்தது.

ஆனால், நீதிமன்ற தீர்ப்பு வெளியிடப்பட்ட தருணத்தில் நீதிமன்ற அலுவலகம் மூடப்பட்டுவிட்ட காரணத்தால், அன்வார் தனது ஜாமீன் தொகையை திங்கட்கிழமை காலை 11 மணிக்குள் செலுத்தவேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அன்வார் வழக்கில் சமர்ப்பிக்கப்பட்ட அன்வாரின் விந்து சம்பந்தப்பட்ட ஆதாரங்களை உயர் நீதிமன்றம் முறையாக அணுகவில்லை எனக் காரணம் கூறி மேல்முறையீட்டு நீதிமன்றம் இந்த முடிவை எடுத்தது.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஓரினப்புணர்ச்சி வழக்கு: அன்வாருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை! Empty Re: ஓரினப்புணர்ச்சி வழக்கு: அன்வாருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை!

Post by சிவா Fri Mar 07, 2014 11:24 pm

அன்வாரின் சிறைத்தண்டனை: பக்காத்தான் முழுவதும் ஆத்திரமும் சோகமும்! தலைவர்கள் கண்டனம்!

எதிர்பாராத திருப்பமாக அன்வார் இப்ராகிம் மீது 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருப்பதைத் தொடர்ந்து பக்காத்தான் ராயாட் கூட்டணியில் இன்று ஆத்திரமும் சோகமும் கரைபுரண்டோடத் தொடங்கியது.

இது அன்வாருக்கு எதிரான மற்றொரு சதி என்று பக்காத்தான் தலைவர்கள் குறை கூறியதோடு தங்களின் கடுமையான கண்டனங்களையும் புலப்படுத்தியுள்ளனர். அன்வாரின் மீதான குற்றச்சாட்டு உறுதிப்படுத்தப்பட்டு தண்டனையைக் குறைப்பது மீதான தங்களின் வாதங்களை ஒரு மணி நேரத்தில் சமர்ப்பிக்க வேண்டுமெனஅன்வாரின் வழக்கறிஞர்களுக்கு நீதிபதிகள் உத்தரவிட்ட கணம் முதல், பிரபல நட்பு ஊடகமான ட்விட்டர் மூலம் குறுந்தகவல்கள் தீயாகப் பரவத் தொடங்கின.

அன்வாரின் சிறைத்தண்டனையும் அந்த கணம் முதல் பரவலாக எதிர்பார்க்கப்பட்டது.

அன்வார் மீதான தீர்ப்பு வழங்கப்பட்டதும் அன்வாரின் மனைவியும் மகள்களும் அவரைக் கட்டிப் பிடித்து கண் கலங்கினர்.

ட்விட்டரில் தனது கருத்துக்களை குறுந்தகவல்களாக உடனுக்குடன் பதிவு செய்த ஜசெக தலைவர் லிம் கிட் சியாங், அன்வாரின் சிறைத் தண்டனையை அடுத்து கர்ப்பால் சிங்கும் தேச நிந்தனை வழக்கில் அடுத்ததாக சிறைத் தண்டனையைப் பெறுவாரா எனக் கேள்வி எழுப்பியிருந்தார்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஓரினப்புணர்ச்சி வழக்கு: அன்வாருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை! Empty Re: ஓரினப்புணர்ச்சி வழக்கு: அன்வாருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை!

Post by சிவா Fri Mar 07, 2014 11:26 pm

ஓரினப்புணர்ச்சி வழக்கு: அன்வாருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை! Karpal-Singh1

அவசரம் அவசரமான தீர்ப்பு – கர்ப்பால் கருத்து

“எனது நீண்ட கால வழக்கறிஞர் தொழிலில் இதுபோன்று அவசரம் அவசரமாக தீர்ப்பு வழங்கப்பட்ட வழக்கை நான் சந்தித்ததில்லை” என்று அன்வார் சார்பில் வாதாடிய கர்ப்பால் கருத்து தெரிவித்துள்ளார்.

அன்வாரின் மீது வழங்கப்பட்ட சிறைத்தண்டனையைக் குறைப்பதற்கு வாதங்களை சமர்ப்பிக்க அன்வாரின் மருத்துவ அறிக்கை தேவைப்படுகின்றது என்றும் அதனை ஏற்பாடு செய்ய மேலும் ஒரு வாரம் அவகாசம் தேவைப்படுகின்றது என்றும் கர்ப்பால் கேட்டுக் கொண்டாலும் அதனை ஏற்க நீதிபதிகள் மறுத்துவிட்டனர்.

இதனைத் தொடர்ந்து இந்த நீதிமன்றம் நியாயமில்லாமல் நடந்து கொள்கின்றது என்றும் கர்ப்பால் நீதிபதிகள் முன்னிலையில் கடும் கண்டனம் தெரிவித்தார்.

மேலும் அன்வாரின் ஓரினப் புணர்ச்சி வழக்கால் நாடு தேசியப் பாதுகாப்புப் பிரச்சனையை எதிர்நோக்கியுள்ளது என அரசாங்கத் தரப்பு வழக்கறிஞர் ஷாபி கூறியுள்ள கருத்துக்கும் கர்ப்பால் சிங் தனது எதிர்ப்பைத் தெரிவித்துள்ளார்.

“நான் இல்லாவிட்டாலும் கட்சி மேலும் வலுவாகும்” – அன்வார் உறுதி

தனது தீர்ப்பு பற்றி கூறும்போது 16 ஆண்டுகளுக்குப் பிறகு நான் எல்லாவற்றையும் மீண்டும் சந்திக்க வேண்டியுள்ளது என்று விரக்தியுடன் கூறிய அன்வார், இருப்பினும் தான் இல்லாவிட்டாலும் பிகேஆர் கட்சி மேலும் வலுவுடன் திகழும் என்றும் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.

“இது ஒரு நீண்ட காலப் போராட்டம். எனது போராட்டம் ஓயாது. என்னைச் சிறையில் தள்ளினாலும் ரிபோர்மாசி (மறுமலர்ச்சி) இயக்கம் மேலும் வலுவுடன் பெரிதாகும்” என்றும் அன்வார் முழக்கமிட்டுள்ளார்.

தான் காஜாங் தொகுதியில் போட்டியிடாவிட்டாலும், காஜாங்கில் மேலும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் பிகேஆர் மீண்டும் அந்தத் தொகுதியை வெல்ல முடியும் என்றும் அன்வார் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

செல்லியல்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஓரினப்புணர்ச்சி வழக்கு: அன்வாருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை! Empty Re: ஓரினப்புணர்ச்சி வழக்கு: அன்வாருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை!

Post by சிவா Sat Mar 08, 2014 3:39 pm

அன்வார் வழக்கின் தீர்ப்புக்கு மனித உரிமைக் குழுக்கள் கண்டனம்

முறையீட்டு   நீதிமன்றத்தில், அன்வார்  இப்ராகிம்  மீதான  குதப்புணர்ச்சி  வழக்கில்  அவருக்கு  ஐந்தாண்டுச்  சிறைத்  தண்டனை  வழங்கப்பட்ட  தீர்ப்பை,  உள்நாட்டையும்  வெளிநாடுகளையும்  சேர்ந்த  மனித  உரிமைப்  போராளிகள்  கண்டித்துள்ளனர்.

“நீதியின் பெயரால் அன்வாருக்கு  இழைக்கப்படும்  முடிவில்லா  கொடுமைகள்  மலேசிய  நீதித்துறையில்  படிந்துள்ள சகிக்க  முடியாத  ஒரு கறையாகி  விட்டது”,  எனப்  பன்னாட்டு  மனித  உரிமை கூட்டமைப்பின்  தலைவர்  கரிம்  லஹிட்ஜி  கூறினார்.

“நேற்றைய  அதிர்ச்சிதரும்  தீர்ப்பு  அன்வாருக்கு எதிரான  ஆளும்  கூட்டணியின்  15-ஆண்டுக்கால  பழிவாங்கும்  படலத்தின்  புத்தம்புது  அத்தியாயமாக  அமைகிறது”,  என  கரீம்  மலேசியாவின்  மனித  உரிமை  அமைப்பான  சுஹாகாமுடன் இணைந்து  வெளியிட்ட  அறிக்கை  ஒன்றில்  கூறினார்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஓரினப்புணர்ச்சி வழக்கு: அன்வாருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை! Empty Re: ஓரினப்புணர்ச்சி வழக்கு: அன்வாருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை!

Post by சிவா Sat Mar 08, 2014 4:07 pm

ஜாஹீதாபானு wrote:உதவியாளர் முகமட் சைபுல் புக்காரிக்கு தண்டனை கிடையாதா?

அன்வார் மலேசிய எதிர்க்கட்சித் தலைவர், எப்பொழுதெல்லாம் தேர்தல் நடைபெறுகிறதோ அப்பொழுதெல்லாம் இவர் மீது இவ்வாறு குற்றச்சாட்டுக்கள் திணிக்கப்பட்டு பிரச்சாரம் செய்ய விடாமல் தடுப்பார்கள்.

இப்பொழுது இவர் காஜாங் இடைத்தேர்தலில் நின்றூ வெற்றி பெற்று தான் முதலமைச்சர் பதவியை ஏற்றுக் கொள்கிறேன் என அறிவித்திருந்தார். இது ஆளும் கட்சிக்கு வெறுப்பை ஏற்படுத்த்தியதால் இவர் மீது அவசர அவசரமாக விசாரணையை நடத்தி தண்டனை வழங்கியுள்ளார்கள்

இது ஒரு பொய் வழக்கு என்பதும், இந்தத் தண்டனை இவருக்கு இழைக்கப்பட்ட துரோகம் என்பதும் அனைத்து மலேசியர்களுக்கும் தெரியும். ஆனால் அரசை எதிர்த்து எவனும் கேள்வி கேட்க முடியாது.

உடனே அந்தத் துரோகியை நாடு கடத்துங்கள் என்று அனைத்து ஆளும் கட்சி அமைச்சர் முதல் ஜால்ரா வரை அறிக்கை விடுவார்கள்.

இந்தப் பதிவைப் படித்து என் மீதும் தேச நிபந்தனைச் சட்டம் பாயலாம், அப்பொழுது நீங்கள் தான் வந்து என்னைக் காப்பாற்ற வேண்டும்!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஓரினப்புணர்ச்சி வழக்கு: அன்வாருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை! Empty Re: ஓரினப்புணர்ச்சி வழக்கு: அன்வாருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை!

Post by ஜாஹீதாபானு Sat Mar 08, 2014 5:01 pm

சிவா wrote:

மக்களால் அரசை எதிர்க்க முடியாது தான். ஆனால் ஓட்டு போட்டு எதிர்க்கலாமே.....

நான் வந்து காப்பாத்தனுமா? ஹல்லோ... ஹல்லொ... ஹல்லெ... ஹல்... ஹ...சிக்னல் இல்லப்பா இங்க அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை 

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Post by Muthumohamed Sat Mar 08, 2014 10:25 pm

உங்க ஊரு சேதியா சரி ஆகட்டும்

தப்பு செஞ்சா தண்டனை அனுபவிக்கனும் அது தான் எனது விருப்பம்

ஓரினப்புணர்ச்சி வழக்கு: அன்வாருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை! Mஓரினப்புணர்ச்சி வழக்கு: அன்வாருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை! Uஓரினப்புணர்ச்சி வழக்கு: அன்வாருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை! Tஓரினப்புணர்ச்சி வழக்கு: அன்வாருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை! Hஓரினப்புணர்ச்சி வழக்கு: அன்வாருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை! Uஓரினப்புணர்ச்சி வழக்கு: அன்வாருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை! Mஓரினப்புணர்ச்சி வழக்கு: அன்வாருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை! Oஓரினப்புணர்ச்சி வழக்கு: அன்வாருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை! Hஓரினப்புணர்ச்சி வழக்கு: அன்வாருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை! Aஓரினப்புணர்ச்சி வழக்கு: அன்வாருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை! Mஓரினப்புணர்ச்சி வழக்கு: அன்வாருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை! Eஓரினப்புணர்ச்சி வழக்கு: அன்வாருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை! D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

ஓரினப்புணர்ச்சி வழக்கு: அன்வாருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை! Empty Re: ஓரினப்புணர்ச்சி வழக்கு: அன்வாருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை!

Post by ayyasamy ram Mon Mar 10, 2014 8:46 am

தப்பை தப்பில்லாமல் செய்ய கத்துக்கணும்...!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83988
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ஓரினப்புணர்ச்சி வழக்கு: அன்வாருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை! Empty Re: ஓரினப்புணர்ச்சி வழக்கு: அன்வாருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை!

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

- Similar topics
»  டுபாயில் இலங்கையருக்கு 3 மாத சிறைத் தண்டனை
» கெட்ட வார்த்தை பேசிய மைனாப்பறவைக்கு சிறைத் தண்டனை !!
» புலிகளுக்கு உதவியதாக சிங்கப்பூரைச் சேர்ந்தவருக்கு அமெரிக்காவில் சிறைத் தண்டனை
» மூலிகை பெட்ரோல் ராமர் பிள்ளைக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனை
»  சிகிச்சைக்கு வந்த பெண்ணை கற்பழித்த டாக்டருக்கு 10 ஆண்டு சிறைத் தண்டனை

Permissions in this forum:
You cannot reply to topics in this forum