புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
viyasan
அந்த நாள் ஞாபகம்.. - Page 3 I_vote_lcapஅந்த நாள் ஞாபகம்.. - Page 3 I_voting_barஅந்த நாள் ஞாபகம்.. - Page 3 I_vote_rcap 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அந்த நாள் ஞாபகம்.. - Page 3 I_vote_lcapஅந்த நாள் ஞாபகம்.. - Page 3 I_voting_barஅந்த நாள் ஞாபகம்.. - Page 3 I_vote_rcap 
197 Posts - 41%
ayyasamy ram
அந்த நாள் ஞாபகம்.. - Page 3 I_vote_lcapஅந்த நாள் ஞாபகம்.. - Page 3 I_voting_barஅந்த நாள் ஞாபகம்.. - Page 3 I_vote_rcap 
192 Posts - 40%
mohamed nizamudeen
அந்த நாள் ஞாபகம்.. - Page 3 I_vote_lcapஅந்த நாள் ஞாபகம்.. - Page 3 I_voting_barஅந்த நாள் ஞாபகம்.. - Page 3 I_vote_rcap 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
அந்த நாள் ஞாபகம்.. - Page 3 I_vote_lcapஅந்த நாள் ஞாபகம்.. - Page 3 I_voting_barஅந்த நாள் ஞாபகம்.. - Page 3 I_vote_rcap 
21 Posts - 4%
prajai
அந்த நாள் ஞாபகம்.. - Page 3 I_vote_lcapஅந்த நாள் ஞாபகம்.. - Page 3 I_voting_barஅந்த நாள் ஞாபகம்.. - Page 3 I_vote_rcap 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
அந்த நாள் ஞாபகம்.. - Page 3 I_vote_lcapஅந்த நாள் ஞாபகம்.. - Page 3 I_voting_barஅந்த நாள் ஞாபகம்.. - Page 3 I_vote_rcap 
9 Posts - 2%
Rathinavelu
அந்த நாள் ஞாபகம்.. - Page 3 I_vote_lcapஅந்த நாள் ஞாபகம்.. - Page 3 I_voting_barஅந்த நாள் ஞாபகம்.. - Page 3 I_vote_rcap 
8 Posts - 2%
Guna.D
அந்த நாள் ஞாபகம்.. - Page 3 I_vote_lcapஅந்த நாள் ஞாபகம்.. - Page 3 I_voting_barஅந்த நாள் ஞாபகம்.. - Page 3 I_vote_rcap 
7 Posts - 1%
T.N.Balasubramanian
அந்த நாள் ஞாபகம்.. - Page 3 I_vote_lcapஅந்த நாள் ஞாபகம்.. - Page 3 I_voting_barஅந்த நாள் ஞாபகம்.. - Page 3 I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
அந்த நாள் ஞாபகம்.. - Page 3 I_vote_lcapஅந்த நாள் ஞாபகம்.. - Page 3 I_voting_barஅந்த நாள் ஞாபகம்.. - Page 3 I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அந்த நாள் ஞாபகம்..


   
   

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

சின்னக் கண்ணன்
சின்னக் கண்ணன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 410
இணைந்தது : 19/12/2013

Postசின்னக் கண்ணன் Tue Mar 04, 2014 6:35 pm

First topic message reminder :

1. டூரிங்க் டாக்கீஸ்.!.

கல்லூரி முடித்திருந்த காலகட்டம்.. வேம்பு என்ற ஒருவர் என் நண்பனின் அண்ண்னின் நண்பர் எம்.எஸ்ஸி மேத்ஸ் எம்ஃபில் எனப் படித்து வேலை தேடிக் கொண்டிருந்தார்..ஒரு நாள் எங்களை திருமோகூர்பக்கம் வந்தால் அவர் ஊர் திருவாதவூருக்கு வாருங்கள் எனச் சொல்லி இருந்தார்..ஸோ அந்த நாளும் வந்தது..திருமோகூர் சென்று ஒம்மாச்சி சேவித்துவிட்டு வந்த மொஃபசல் பஸ் பிடித்து திருவாதவூர் இறங்கினால் எதிரில் வேம்பு..கண்டும் காணாதவர் போல் செல்ல ஹ்லோ..வேம்பு.. பட்டெனத் திரும்ப..

ஓ.. நீங்கள் வேம்புவின் நண்பர்களா வாங்க..வேம்பு வீட்ட்ல இருக்கான் நான் அவன் அண்ணன் என (பேர் மறந்துவிட்ட்து)ச் சொல்லி வீட்டிற்கு அழைத்துச் சென்றால் முகமலர்ந்த வேம்பு உள்ளே தங்கைக்கு ஜாடை காட்ட பின் வந்தது சுடச் சுட தண்ணீர் கலக்காத கள்ளிச் சொட்டுக் காஃபி..

பின் வேம்பு வாங்க பக்கத்துல அண்ணன் வேலை பாக்கற இடம் இருக்கு..அங்க போய்ப் பேசலாம்..எனச் சொல்ல போனால் அது ஒரு டூரிங்க் டாக்கீஸ்

காலை வேளை என்பதால் பளபளவென் வெயில் மேக்கப் போட்டது போல் அடித்துக் கொண்டிருக்க உள்ளே சென்று மரபெஞ்சில் நான், உடன் வந்த என் நண்பர்கள் இருவர் வேம்பு என அமர்ந்து.. ஆமா ஒங்க அண்ணன் இங்க என்னவா இருக்கார்..

வேம்புவின் கண்கலில் குட்டியாய்ச் சிரிப்பு..இங்க ஒரு டீக்கடை வைத்திருக்கிறார்..என்ன படிச்சுருக்காரா..எம்.எஸ்ஸி ஸூவாலஜி...

எங்களுக்குப் பேச்சு வராமல்..என்ன வேம்பு..இப்படிச் சொல்றீங்க..ம்ம் என்ன பண்ண வேலை கிடைக்கும் வரை இப்படி கடை வைத்திருக்கிறார் எனச் சொல்லி எதிரே தெரிந்த வெண் திரையை ஒரு நிமிடம் வெறித்துப் பார்த்துவிட்டு..பின் சொன்னார்..

”உங்களுக்குத் தெரியுமா சாவித்திரி ப்டம்.. ஓ..மேனகா நடிச்சது தானே..யா. அதை இந்தத் தியேட்டர்ல போட்டாங்க ரெண்டு மாசத்துக்கு முன்னால.. சுத்த பத்த ஊரெல்லாம் வண்டி கட்டிக்கிட்டு பாக்க வந்துட்டாங்க..சத்யவான் சாவித்திரி படம்னு நினச்சு..பின்ன என்ன..மாட்னி ஃபுல் ஈவ்னிங்க் ஈ காக்கை கூட வரலை..படத்தை எடுத்துட்டோம்.!.”

பின் பேசி முடித்து மறுபடி வேம்புவின் வீடு வந்தால் அமர்க்களமான சாப்பாடு..மோர்க்குழ்ம்பு, பால் பாயசம், தயிர்வடை, தயிர்ப் பச்சடி.. வேம்பு எங்களுக்கு எதுக்கு இவ்ளோ கிராண்டா..

மறுபடியும் சிரித்த வேம்பு..”நல்லா இருக்குல்ல..ஒரு ரகசியம் சொல்லட்டா.. நேத்துக்கு கரெண்ட் கட்..தியேட்டர் ஓடலை..வாங்கின பால்லாம் மீந்து.. சரியா நீங்க வந்தீங்க..வேஸ்ட் ஆக்லை..”.. எதுவும் சொல்லாமல் ஒரு வித கனத்துடன் பிரிந்தொம்(வேம்புவிற்கு அருப்புக்கோட்டையில் லெக்சரர் வேலை பின் கிடைத்தது..அவர் அண்ணனைப் பற்றி மறந்து விட்டது)..

நினைவுகள் அவ்வப்போது தொடரும்..!




ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Mar 10, 2014 5:34 pm

சூப்பர் சின்னகண்ணன் . வேலை அதிகமாக உள்ளது அதனால் ஈகரை வந்தாலும் ஒன்னும் படிக்க முடியல சோகம் . அதனால் தான பதிலளிக்க முடியவில்லை. நீங்க தொடருங்கள் அருமையா இருக்கு

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Mar 10, 2014 8:58 pm

யதார்த்தமான நடை.
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
சின்னக் கண்ணன்
சின்னக் கண்ணன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 410
இணைந்தது : 19/12/2013

Postசின்னக் கண்ணன் Mon Mar 10, 2014 9:30 pm

மிக்க நன்றி ராஜா..மிக்க நன்றி ரமணீயன் ஐயா..

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84046
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Mar 11, 2014 8:23 am

-
 அந்த நாள் ஞாபகம்.. - Page 3 3838410834 
-
இரண்டு நாள் தாடியை சொறிவதிலும்
சுகம் இருக்கு..!!

சின்னக் கண்ணன்
சின்னக் கண்ணன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 410
இணைந்தது : 19/12/2013

Postசின்னக் கண்ணன் Tue Mar 11, 2014 10:04 am

 அந்த நாள் ஞாபகம்.. - Page 3 1571444738  அய்யாசாமி சார்.. புன்னகை

ayyasamy ram wrote:-
 அந்த நாள் ஞாபகம்.. - Page 3 3838410834 
-
இரண்டு நாள் தாடியை சொறிவதிலும்
சுகம் இருக்கு..!!


M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Tue Mar 11, 2014 2:46 pm

அந்த நாள் ஞாபகம்
இந்த நாளில் வரும்போது
அதை நினைத்து பார்ப்பதில்தான்
எத்தனை எத்தனை சுகம்,
இந்த ஞாபகம் மட்டும் இல்லையெனில்
மனக்குறை கொண்டே மடிந்திருப்போம்.

அருமை சின்ன கண்ணன்.



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
சின்னக் கண்ணன்
சின்னக் கண்ணன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 410
இணைந்தது : 19/12/2013

Postசின்னக் கண்ணன் Tue Mar 11, 2014 4:16 pm

நன்றி எம்.எம்.செந்தில் தங்கள் கவிதையான பாராட்டிற்கு..

M.M.SENTHIL wrote:அந்த நாள் ஞாபகம்
இந்த நாளில் வரும்போது
அதை நினைத்து பார்ப்பதில்தான்
எத்தனை எத்தனை சுகம்,
இந்த ஞாபகம் மட்டும் இல்லையெனில்
மனக்குறை கொண்டே மடிந்திருப்போம்.

அருமை சின்ன கண்ணன்.


சின்னக் கண்ணன்
சின்னக் கண்ணன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 410
இணைந்தது : 19/12/2013

Postசின்னக் கண்ணன் Thu Mar 13, 2014 12:34 pm

. 4.மாப்பிள்ளையாகி ஆனந்தமாக மணமாலை சூடிடும் கல்யாணம் .. ஆ..ஆ..ஆ கல்யாணம்[/

ருக் ருக் ருக் ஹரேபாபா ருக் என குட்டைப்பாவாடையில் தபு குதித்துக் குதித்துப் பாடுவதாகவும்,தேவிகா நளினமாக நெஞ்சத்திலே நீ நேற்று வந்தாய் என டீஸண்டாக குறும்புடன் சொல்வதாகவும் கனவுகளில் வந்து கொண்டிருந்த கால கட்டம் அது..

சமர்த்தாய் காலையில் எழுந்து குளித்து ஆஃபீஸ் போய் பின் இரவு வேலை முடித்து வந்து முடிந்தால் விசிஆரில் அக்கா, அக்கா பெண்ணுடன் அமர்ந்து படம் பின் தூக்கம் பின் மறுபடி காலை மறுபடி ஆஃபீஸ் என ப் போய்க்கொண்டிருந்த காலம்..அக்காவின் வீட்டில் தங்கியிருந்த காலம்..(இடம்-துபாய்)

பார்த்தால் ஒரு நாள் மாலை ஆஃபீஸ் முடிந்து வந்தவுடன் அத்திம்பேர் கூப்பிட்டார்..சமர்த்தாய் உடனே அருகில் எல்லாம் செல்லாமல் பாத்ரூம் போய் வாய்க் கொப்பளித்து ( நாலு நாள் முன்னால் பூண்டு சாப்பிட்டதைக் கூட டபக்கெனச் சொல்லிவிடுவார்) கிட்டக்கச் சென்றால்,” சரி சரி..உனக்குப் பெண் பார்த்தாயிற்று.. சகலை (இன்னொரு அக்காவின் கணவர்) ஏற்பாடு பண்ணிவிட்டார்..பொண்ணுல்லாம் நல்லாத்தான் இருக்காம்..நாளைக்கழித்து நல்ல நாள்.. நாளைக்கு ஆஃபீஸில் சொல்லி நாளை இரவு கிளம்பிப் போய்ப் பார்த்து ஓ.கே சொல்லி(?!) விட்டு வா” என்றார்..

“மாமோய்..எனக்கு ஆஃபீஸ்ல எக்கச்சக்கமா வேலை இருக்கே..எப்படி விட்டுவிட்டு வரது..லீவ்லாம் தருவாங்களான்னு தெரியலை”

‘அதெல்லாம் எனக்குத் தெரியாது..எமெர்ஜென்ஸி லீவ் எடுத்துகினு போய்ட்டு வா..இல்லாங்காட்டி கீசிடுவேன்”

ஒருவழியாய் ஆஃபீஸில் சொல்லி ஒரு மூன்று நாள் லீவ் வாங்கி – ஏர்லங்கா ஃப்ளைட்டில் (அது தான் கிடைத்த்து) ஏறி கொழும்பில் சிலமணி நேரம் இருந்து பின் மறுபடி ஏறி மெட் றாஸப் பட்டினம் பளபளவென வெளுப்பாய் இருந்த காலை பத்து மணியளவில் ஏர்போர்ட் விட்டு வெளியே வந்தால்..

கோல்கேட் ஸ்மைலுடன் சின்ன அத்திம்பேர்..வாவா என வரவேற்று என்னுடைய குட்டி ப்ரெளன் லெதர் சூட்கேஸை எடுத்து காரில் வைத்து சமர்த்தாய் ஜாஃபர்கான் பேட் கூட்டிச் சென்றார்..வழியில் கேட்ட கேள்விகளுக்கு எதுவும் பதில் சொல்லவில்லை..

ஏற்கெனவே இரவில் விமானப் பயணம் அதில் ஒருவிதமான டென்ஷன் வேறு..கற்பனை ஓராயிரம் ஒருமுறைபார்த்தால் என்ன என்று ஒய் விஜயாவே ஏர்ஹோஸ்டஸ் வடிவில் பாடுவதாக பிரமை.. இவரும் எதுவும் சொல்லவில்லை..எல்லாரும் காத்துக்கிட்டிருக்காங்க என்பதைத் தவிர..

ஜாஃபர் கான் பேட் நகர் வீட்டில் போய்க் கார் நின்றவுடன் ஆச்ச்சர்யம்.. மதுரையிலிருந்து அண்ணா, மன்னி, இன்னொரு அக்கா அவர்களின் குழந்தைகள் என ஒரு மினி கும்பலே வரவேற்புரை சொல்ல..என்னடா இது மதுரைக்கு வந்த சோதனை என நினைத்தபடி நான் உள் செல்ல சின்னக்கா மினிகோல்கேட் ஸ்மைலுடன் வரவேற்று காஃபி கொடுத்தார்..

பின் உட்கார்ந்து சொந்தஙக்ளுடன் பேசிப்பேசியே ஒரு மணி நேரம் கழிய சரி போய்க் குளிச்சுட்டு வா கண்ணா.. லைட்டா சாப்பிட்டுட்டு பொண்ணு பார்க்கப் போலாம்..

“ஏதாவது ஃபோட்டோ கீட்டோ இருக்கா மன்னி”

“அய்ய்ய்ய..அக்கா ஒங்கிட்ட காமிக்கலையா..” என ஒரு ஃபோட்டாவை நீட்ட படக் படக்கென இருதயத்துடிப்பு எகிற வாங்கிப் பார்த்தால் குட்டி ஏமாற்றம்..

ஏனெனில் படத்தில் இருந்த்து மூன்று பெண்கள்.. ஒன்று பேரிளம் பெண்..ஸோ அதாய் இருக்காது..இன்னொன்று ஒல்லியாய் சிகப்பாய் கொஞ்சம் வெளிறிய முகத்துடன் புன்முறுவல் செய்யலாமா வேண்டாமா என்ற பயத்துடன் இருந்த ஒரு பெண்.. அவளருகில் நன்றாக முழியும் முழியுமாய் கருகரு முடியுடன் கிட்ட்த் தட்ட மலையாளச் சாயலில் இன்னொரு பெண்.. ஒருவேளை இவளாய்த்தான் இருக்குமோ.. நன்னா இருக்காளே..

மன்னியிடம் கேட்டால் புன்சிரித்து எல்லாம் அங்கே போய் பாத்துக்கலாம்.. (என்னஒரு சஸ்பென்ஸ்) போய்க் குளிச்சுட்டு வா..

ம்ம் இப்படிச் சொல்ல மாட்டேங்கறாங்களே என்ற ஆதங்கத்துடன் கைப்பையைத் திறந்து சாவி எடுத்து சூட்கேஸைத் திறந்தால்..ம்ஹீம்.. திறக்கவே இல்லை..என்ன காரணம்..கொஞ்சம் உற்றுப் பார்த்த்தில் அது என் சூட்கேஸே இல்லை..!!

என் சூட்கேஸின் இன்னொரு பதிப்பாய் இருந்து பெயர் வீர வர்த்தனே என எழுதியிருக்க..
அவ்வளவு தான்.. சின்ன அத்திம் தான ஆபத் பாந்தவனாய் காரெடுக்க முப்பது நிமிடங்களில் மறுபடி ஏர்போர்ட்..

ஏர்போட்டில் அசோகவன சீதை போல் கவலை கொண்ட முகத்துடன் அந்த கன்ன்ங்கரேல் கட்டை குட்டை வீர வர்த்தனே. .. ஓஹ்..உங்களுக்காகத் தான் வெய்ட்டிங்..நிஞ்ஞள் என்னுடைய சூட்கேஸ் எடுத்துக்கிட்டயள் எனச் சொல்ல..சாரி சொல்லி சமர்த்துக்கண்ணாய் உட்கார்ந்திருந்த என் சூட்கேஸைஎடுத்து மறுபடி கார் மறுபடி ஜா.பே.வீடு வரும்போது மணி ஒன்றரை..

உடன் குளித்துக் கிளம்பி டி.நகர் பெண் வீட்டுக்குப் போனால் அங்கேயும் ஒரு சின்னத் திருவிழாக் கும்பல்..பெண்ணுக்கு உடன் பிறப்புகள் அறுவராம்..(என்னுடைய உ.பி ஐந்து பேரில் மூவர் தான் அட்டெண்டென்ஸ்) ப்ளஸ் அந்த வடக்கு உஸ்மான் தெருவில் உள்ள முக்கால் வாசிப் பேரும் வந்திருப்பார்கள் போல..

“மாப்பிள்ளை (மாப்பிள்ளையா?..இன்னும் பொண்ணே பாக்கலையேய்யா) நன்னாத்தான் இருக்கார்..அது என்ன டார்க் ப்ளூ பேண்ட் அண்ட் வொய்ட் ஷர்ட் ஆஃபீஸ் போறா மாதிரி” சின்னக்கா கொஞ்சம்வழிந்து அவனுக்கு இப்படி டிரஸ் பண்ணத் தான் பிடிக்கும்.. (என்னை ஓரக்கண்ணில் சின்னதாய் முறைத்தார்)

பெண் வந்தாள்..ஃபோட்டோவில் ஒல்லிஒல்லியாய் இருந்த பெண்..பாவம் பட்டுப்புடவையால் சுற்று சுற்றென சுற்றியிருந்தாலும் ஒல்லியாய்த் தான் இருந்தாள்..

பிடிச்சிருக்கா என சி.அத்திம் கேட்டார்.. நான் எதையோ உற்றுக் கேட்பதைப்பார்த்து “ என்ன”.

.”இல்ல அத்திம்பேர்..மெலிசா யாரோ சிரிக்கறா மாதிரி இல்லை”

“இல்லியே”

“ அத்திம்..அது விதி...!.எனக்குப் பொண்ணைப்பிடிச்சுருக்கு..அவளுக்கு”..

சரி கேட்டுசொல்றேன் எனக் கேட்டு வந்து அங்கயும் ஓகே..சரி நிச்சயதார்த்தம் நாலரைக்கு வச்சுக்கலாமா..

இவ்ளோ சீக்கிரமாவா எனக் கேட்டால் மதுரை அக்கா அண்ணா..”பின்ன வேல மெனக்கட்டு நாங்கள் எதற்கு வந்திருக்கோம்..போய் டிரஸ் சேஞ்ச் பண்ணிக்கிட்டு வா..”

நான் எதுவும் எடுத்து வரலையே..

இதோ நான் எடுத்து வச்சுருக்கேன் என்று சின்னக்கா ஒரு சட்டையைக் காண்பிக்க அது என்னுடையதில்லை..பெரிய சகோதரியின் ப்ளஸ்டூ பையனின் சட்டை..அழகாய் ஆரஞ்சு நிறத்தில் வெகு அழகான அழகிகளின் சித்திரங்கள் வரையப்பட்ட்து..இது வேணாமே.. இப்படி எல்லாம் நான் போட்டுக்கிட்டதே இல்லையே.. சும்மா போட்டுக்கடா..சும்மா ஜம்னு இருக்கும்!

போட்டுக் கொண்டு மறுபடி நிச்சயதார்த்தம் வீட்டிலேயே நடக்க..வந்திருந்த சாஸ்திரிகள் சரி இப்ப என்ன ஜூலை மாசம்.. இன்னும் ஒருமாசம் விட்டு அடுத்த மாசத்துல மூணாம் தேதி நல்ல முகூர்த்தம்..வெச்சுக்கலாமா..

அத்திம்பேர் ஆஹா வெச்சுக்கலாம் எனச் சொல்லி (ஹையா..என்ன மாதிரி இவனும் கஷ்டப் படப்போறான் என நினைத்தாரோ என்னவோ)என் முதுகில் ஒரு தட்டு தட்டினார் சந்தோஷமாய்..

**

போன செப்டம்பர் அந்த நாளின் காலையில் வீட்டில் சின்ன கன்ஃபெஷன்..

“இது நாள் வரையில் நான் உன்னை எவ்வளவோ திட்டியிருந்ததைப் பொருட்படுத்தாமல் எனக்கு சேவை செய்த்தற்கு மிக்க நன்றி.. எதையும் மனதில் வைத்துக் கொள்ளாதே..என்னை மன்னித்துக்கொள்.. உன்னை அடைந்ததற்கு நான் மிகவும் பாக்கியம் செய்திருக்க வேண்டும்..”

என்று சின்சியராய்ச் சொன்னதற்கு ஒரு ஸ்ட்ரேஞ்ச் பார்வை பதிலாய் வந்தது..பின்னர் வந்த வார்த்தைகள் “ இப்படி எல்லாம் நீ பேசாதே..இது உனக்கு சூட் ஆகலை!!”

**



ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Mar 13, 2014 3:18 pm

அருமை விதி எல்லார் வாழ்விலும் ஏதோ ஒரு ரூபத்தில் சிரிக்கிறது.

கல்யாணமாகி எத்தனை வருடங்கள் ஆகிறது.



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
சின்னக் கண்ணன்
சின்னக் கண்ணன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 410
இணைந்தது : 19/12/2013

Postசின்னக் கண்ணன் Thu Mar 13, 2014 3:58 pm

பானு அவர்களுக்கு நன்றி.. 21 வருடங்கள்..ஆகிவிட்டன..

Sponsored content

PostSponsored content



Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக