ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 4:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:16 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

Top posting users this week
ayyasamy ram
அந்த நாள் ஞாபகம்.. - Page 2 Poll_c10அந்த நாள் ஞாபகம்.. - Page 2 Poll_m10அந்த நாள் ஞாபகம்.. - Page 2 Poll_c10 
Dr.S.Soundarapandian
அந்த நாள் ஞாபகம்.. - Page 2 Poll_c10அந்த நாள் ஞாபகம்.. - Page 2 Poll_m10அந்த நாள் ஞாபகம்.. - Page 2 Poll_c10 
heezulia
அந்த நாள் ஞாபகம்.. - Page 2 Poll_c10அந்த நாள் ஞாபகம்.. - Page 2 Poll_m10அந்த நாள் ஞாபகம்.. - Page 2 Poll_c10 
i6appar
அந்த நாள் ஞாபகம்.. - Page 2 Poll_c10அந்த நாள் ஞாபகம்.. - Page 2 Poll_m10அந்த நாள் ஞாபகம்.. - Page 2 Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

அந்த நாள் ஞாபகம்..

+4
ராஜா
ஜாஹீதாபானு
krishnaamma
சின்னக் கண்ணன்
8 posters

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Go down

அந்த நாள் ஞாபகம்.. - Page 2 Empty அந்த நாள் ஞாபகம்..

Post by சின்னக் கண்ணன் Tue Mar 04, 2014 6:35 pm

First topic message reminder :

1. டூரிங்க் டாக்கீஸ்.!.

கல்லூரி முடித்திருந்த காலகட்டம்.. வேம்பு என்ற ஒருவர் என் நண்பனின் அண்ண்னின் நண்பர் எம்.எஸ்ஸி மேத்ஸ் எம்ஃபில் எனப் படித்து வேலை தேடிக் கொண்டிருந்தார்..ஒரு நாள் எங்களை திருமோகூர்பக்கம் வந்தால் அவர் ஊர் திருவாதவூருக்கு வாருங்கள் எனச் சொல்லி இருந்தார்..ஸோ அந்த நாளும் வந்தது..திருமோகூர் சென்று ஒம்மாச்சி சேவித்துவிட்டு வந்த மொஃபசல் பஸ் பிடித்து திருவாதவூர் இறங்கினால் எதிரில் வேம்பு..கண்டும் காணாதவர் போல் செல்ல ஹ்லோ..வேம்பு.. பட்டெனத் திரும்ப..

ஓ.. நீங்கள் வேம்புவின் நண்பர்களா வாங்க..வேம்பு வீட்ட்ல இருக்கான் நான் அவன் அண்ணன் என (பேர் மறந்துவிட்ட்து)ச் சொல்லி வீட்டிற்கு அழைத்துச் சென்றால் முகமலர்ந்த வேம்பு உள்ளே தங்கைக்கு ஜாடை காட்ட பின் வந்தது சுடச் சுட தண்ணீர் கலக்காத கள்ளிச் சொட்டுக் காஃபி..

பின் வேம்பு வாங்க பக்கத்துல அண்ணன் வேலை பாக்கற இடம் இருக்கு..அங்க போய்ப் பேசலாம்..எனச் சொல்ல போனால் அது ஒரு டூரிங்க் டாக்கீஸ்

காலை வேளை என்பதால் பளபளவென் வெயில் மேக்கப் போட்டது போல் அடித்துக் கொண்டிருக்க உள்ளே சென்று மரபெஞ்சில் நான், உடன் வந்த என் நண்பர்கள் இருவர் வேம்பு என அமர்ந்து.. ஆமா ஒங்க அண்ணன் இங்க என்னவா இருக்கார்..

வேம்புவின் கண்கலில் குட்டியாய்ச் சிரிப்பு..இங்க ஒரு டீக்கடை வைத்திருக்கிறார்..என்ன படிச்சுருக்காரா..எம்.எஸ்ஸி ஸூவாலஜி...

எங்களுக்குப் பேச்சு வராமல்..என்ன வேம்பு..இப்படிச் சொல்றீங்க..ம்ம் என்ன பண்ண வேலை கிடைக்கும் வரை இப்படி கடை வைத்திருக்கிறார் எனச் சொல்லி எதிரே தெரிந்த வெண் திரையை ஒரு நிமிடம் வெறித்துப் பார்த்துவிட்டு..பின் சொன்னார்..

”உங்களுக்குத் தெரியுமா சாவித்திரி ப்டம்.. ஓ..மேனகா நடிச்சது தானே..யா. அதை இந்தத் தியேட்டர்ல போட்டாங்க ரெண்டு மாசத்துக்கு முன்னால.. சுத்த பத்த ஊரெல்லாம் வண்டி கட்டிக்கிட்டு பாக்க வந்துட்டாங்க..சத்யவான் சாவித்திரி படம்னு நினச்சு..பின்ன என்ன..மாட்னி ஃபுல் ஈவ்னிங்க் ஈ காக்கை கூட வரலை..படத்தை எடுத்துட்டோம்.!.”

பின் பேசி முடித்து மறுபடி வேம்புவின் வீடு வந்தால் அமர்க்களமான சாப்பாடு..மோர்க்குழ்ம்பு, பால் பாயசம், தயிர்வடை, தயிர்ப் பச்சடி.. வேம்பு எங்களுக்கு எதுக்கு இவ்ளோ கிராண்டா..

மறுபடியும் சிரித்த வேம்பு..”நல்லா இருக்குல்ல..ஒரு ரகசியம் சொல்லட்டா.. நேத்துக்கு கரெண்ட் கட்..தியேட்டர் ஓடலை..வாங்கின பால்லாம் மீந்து.. சரியா நீங்க வந்தீங்க..வேஸ்ட் ஆக்லை..”.. எதுவும் சொல்லாமல் ஒரு வித கனத்துடன் பிரிந்தொம்(வேம்புவிற்கு அருப்புக்கோட்டையில் லெக்சரர் வேலை பின் கிடைத்தது..அவர் அண்ணனைப் பற்றி மறந்து விட்டது)..

நினைவுகள் அவ்வப்போது தொடரும்..!

சின்னக் கண்ணன்
சின்னக் கண்ணன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 410
இணைந்தது : 19/12/2013

Back to top Go down


அந்த நாள் ஞாபகம்.. - Page 2 Empty Re: அந்த நாள் ஞாபகம்..

Post by சின்னக் கண்ணன் Wed Mar 05, 2014 5:30 pm

நன்றி ராஜா.. மறுபடியும் அனுபவங்கள் த்ரெட்ல போடறதுக்கு கொஞ்சம் சோம்பலா இருக்கு..இதுலயே கண்டின்யூ பண்றேனே..
சின்னக் கண்ணன்
சின்னக் கண்ணன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 410
இணைந்தது : 19/12/2013

Back to top Go down

அந்த நாள் ஞாபகம்.. - Page 2 Empty Re: அந்த நாள் ஞாபகம்..

Post by ராஜா Wed Mar 05, 2014 6:12 pm

சின்னக் கண்ணன் wrote:நன்றி ராஜா.. மறுபடியும் அனுபவங்கள் த்ரெட்ல போடறதுக்கு கொஞ்சம் சோம்பலா இருக்கு..இதுலயே கண்டின்யூ பண்றேனே..
அனுபவங்கள் திரிக்கு , நகர்த்திட்டேன் .... நீங்க தொடர்ந்து பதிவிடுங்கள் புன்னகை
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

அந்த நாள் ஞாபகம்.. - Page 2 Empty Re: அந்த நாள் ஞாபகம்..

Post by சின்னக் கண்ணன் Wed Mar 05, 2014 6:35 pm

நன்றிங்க ராஜா..இதோ அடுத்து..
சின்னக் கண்ணன்
சின்னக் கண்ணன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 410
இணைந்தது : 19/12/2013

Back to top Go down

அந்த நாள் ஞாபகம்.. - Page 2 Empty Re: அந்த நாள் ஞாபகம்..

Post by சின்னக் கண்ணன் Thu Mar 06, 2014 10:34 am

பிறந்து வளர்ந்து படித்தது மதுரை..அப்பாவிற்கு சொந்த பிஸினஸ்.சகோதர சகோதரியரெல்லாம் உண்டு..பின் பல ஆண்டுகள் அன்னிய நாடுகளில் வேலை பார்த்துக் கொண்டிருக்கிறேன்,இன்னும் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருக்கிறேன் என்று சொல்லி விட்டு (ஹாஆஆவ்.. யார்ப்பா அங்ககொட்டாவி விடறது) என் சின்ன அனுபவங்கள்..தொடரும்... புன்னகை

**
2. டெலிபோன் மணி போல் சிரிப்பவன் இவனா...

*

இது தானே ரூம் நம்பர்..”

“ஆமாம்”

“நீ தானே இங்க இருக்கே துணையா..”

“ஆமாம்”

கேள்வி கேட்ட நர்ஸ் என்னைக் கொஞ்சம் விழித்துப் பார்த்தாள். குட்டி அரை டிராயர்.. அக்கா குவைத்திலிருந்து கொண்டு வந்திருந்த கறுப்புக்கலரில் நீலக் குட்டி வட்டங்கள் போட்ட சட்டை, மொழுமொழவென ஆவின் பால் குடித்து வளர்ந்திருந்த சாது முகம்.ம்ம்

சொல்ல மறந்து விட்டேனே..புள்ளி வைத்து ஃபார் எ சேஞ்ச் சதுரம் போட்டால் அப்போது எட்டாவது படித்துக் கொண்டிருந்த பருவம்

உலகவழக்கங்களில் அடிபடாமல் இருந்த சமயம்..

அக்காவிற்கு இரண்டாவது பெண் குழந்தை பிரசவத்தின் போதே முதுகில் கட்டி போன்று ப்ராப்ளம் இருக்க, பிரசவம் பார்த்த சிம்மக்கல் டாக்டர் பங்காரு நீங்கள் ஆப்பரேஷன் வேண்டுமானால் செய்து பாருங்கள் என்று சொல்லி விட பிறந்து சில நாட்களான குழந்தையையும் அக்காவையும் அப்போது மதுரை வைகை ஆற்றின் அக்கரையில் கலெக்டர் ஆபீஸ் தாண்டி இருந்த அண்ணா நகரில் கார்த்திக் கிளினிக் என்ற இடத்தில் சேர்த்து பின் ஆப்பரேஷன் எல்லாம் முடிந்த சில நாட்களில் இருக்க நேர்ந்த சமயம் அது..

அத்திம்பேர் எங்கேயோ மூத்த பையனை எடுத்துக் கொண்டு சென்று விட அறையில் அக்கா, குழந்தை, நான் (கையில் பைண்ட் செய்யப் பட்ட ராஜமுத்திரை முதல்பாகம்- சே 48 வது அத்தியாயம் மிஸ்ஸிங்க்) படித்துக் கொண்டிருக்கையில் தான் அந்த வெண்ணுடை சாதாரண தேவதை வந்து சொன்னாள்..”உனக்குப் போன்”

“எனக்கா..ஃபோனா.. யாராக இருக்கும்…” என நினைக்கையிலேயே சிலிர்ப்பாக இருந்தது..

அதுவரை ஃபோனில் பேசுவதை சினிமாக்களில் மட்டுமே பார்த்திருக்கிறேன்..

ஃபோன் எங்கள் வீடு இருந்த தெருவில் இரண்டோ அல்லது மூன்றோ வீடுகளில் மட்டுமே இருந்த காலம்.. பக்கத்துச் செட்டியார் வீடு, தெருமுனையில் சின்னக்காவின் சினேகிதி குண்டு மைதிலியின் வீடு(,வக்கீல் பொம்மையன் வீடு என்று நினைவு..

அப்பாவின் கடைக்குப் பக்கத்து கணபதி கடையிலும் இருந்தது..
ஆனால் இதுவரையில் பேசியதில்லை…

அதில் பேசினால் எப்படி இருக்கும்..குரல் தெளிவாகக் கேட்குமா..வேலைமெனக்கட்டு அண்ணா நகரில் இருக்கும் என்னிடம் யார் பேசுவார்களாயிருக்கும்..

சிந்தனை என்னமோ நீளமாக இருந்தாலும் ஆஸ்பத்திரி கொஞ்சம் குட்டி தான் என்பதால் வெராந்தாவைத் தாண்டி ஃபோனிருந்த அறை வந்து விட, ஏதோ கோபம் கொண்டாற்போல்கவிழ்ந்து படுத்திருந்த ரிஸீவரை எடுத்து, “ஹலோ”

மறுமுனையில் கணீர்க் குரல் “கண்ணா..கரெக்டா எழுந்துச்சயா.. ராமன் (என் அண்ணன்) டிஃபன் கொண்டு வருவான்..குழந்தை எப்படி இருக்கு..அக்கா(பெயர் சொல்லி) எப்படி இருக்கா.. அத்திம்பேர் எங்க..” என இன்னும் சில கேள்விகளுடன் விசாரணைகள்..

\யார் என்று பிடிபடாமல் முழிமுழி என முழித்தவண்ணம் ஆன்ஸர் செய்தேன்..மறுமுனையில் கேள்வி கேட்டவரே இன்னொரு கேள்வியும் கேட்டார்..

“சரி.. நான் யார்னு தெரியறதோன்னோ”

திடீரென்று மனதுக்குள் ட்யூப் லைட் எரிய பிரகாசமாக “தெரியாம என்ன.. நாராயணச் சித்தப்பா தானே..”

“அடப்பாவி… நான் உன் அப்பா டா..!”

*****


சின்னக் கண்ணன்
சின்னக் கண்ணன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 410
இணைந்தது : 19/12/2013

Back to top Go down

அந்த நாள் ஞாபகம்.. - Page 2 Empty Re: அந்த நாள் ஞாபகம்..

Post by ஜாஹீதாபானு Thu Mar 06, 2014 1:54 pm

ம்ம்ம்ம்ம்ம்ம்ம் அப்புறம் என்னாச்சு?


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

அந்த நாள் ஞாபகம்.. - Page 2 Empty Re: அந்த நாள் ஞாபகம்..

Post by சின்னக் கண்ணன் Thu Mar 06, 2014 2:05 pm

அவ்ளோ தாங்க..புன்னகை வீட்ல போனா திட்டுவார்னு பார்த்தா இவனுக்குப் பாரேன் குறும்பைன்னு சொல்லிச் சிரிச்சார்..


அடுத்த அத்தியாயம் சண்டே தரப் பார்க்கறேன்..

ஜாஹீதாபானு wrote:ம்ம்ம்ம்ம்ம்ம்ம் அப்புறம் என்னாச்சு?
சின்னக் கண்ணன்
சின்னக் கண்ணன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 410
இணைந்தது : 19/12/2013

Back to top Go down

அந்த நாள் ஞாபகம்.. - Page 2 Empty Re: அந்த நாள் ஞாபகம்..

Post by ஜாஹீதாபானு Thu Mar 06, 2014 2:40 pm

சின்னக் கண்ணன் wrote:அவ்ளோ தாங்க..புன்னகை வீட்ல போனா திட்டுவார்னு பார்த்தா இவனுக்குப் பாரேன் குறும்பைன்னு சொல்லிச் சிரிச்சார்..


அடுத்த அத்தியாயம் சண்டே தரப் பார்க்கறேன்..

ஜாஹீதாபானு wrote:ம்ம்ம்ம்ம்ம்ம்ம் அப்புறம் என்னாச்சு?

ம்ம்ம் சரிங்க தம்பிபுன்னகை


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

அந்த நாள் ஞாபகம்.. - Page 2 Empty Re: அந்த நாள் ஞாபகம்..

Post by சின்னக் கண்ணன் Mon Mar 10, 2014 10:22 am

3. நானே நானா யாரோ தானா மெல்ல மெல்ல மாறினேனா

பக்கத்து வீட்டுச் செட்டியாருக்கு இசையில் ஆர்வமுண்டா என எனக்குத் தெரியாது..ஆனால் அவருக்கு ஏழு ஸ்வரங்களைப் போல் ஏழு பிள்ளைகள்..கடைக்குட்டி செல்வராஜ் என்னுடைய செட்..
திடீரென்று செல்வாவைப் பற்றிச் சொல்லக் காரணம் பஞ்சமலையின் நினைவு..

எட்டாம் வகுப்பு படித்திருந்த சமயம்.. ஒரு நாள் என் தலையைப் பார்த்து விட்டு என்னடா கரையான் புத்துக்குள்ள விட்டுட்டயா எனக் கேட்டான்.. கரையான்புற்றை அந்த சமயத்தில் பார்த்திராவிட்டாலும் சொன்ன கிண்டல் புரிந்து சற்றே கண்ணோரம் நீர் வந்த்து..மனதுக்குள் பஞ்ச மலையைத் திட்டினேன்..

பஞ்ச மலை.. மதுரையில் எங்கள் வீட்டிலிருந்து வெளிவந்தால் இட்து பக்க முக்கில் வொர்க் ஷாப் ரோட் எனச் சொல்லப் பட்ட திருவிக சாலை..சென்று இட்து பக்கம் திரும்பினால் எதிர்ச்சாரியில் முறையே எம் ஆர் எஸ் சைக்கிள் கடை, பஞ்சமலை கடை, சாப்பாட்டு மற்றும் வெற்றிலைபாக்கு ஜோடா கடை, பின் தேவி தியேட்டரின் வெளி வாசல் (யெஸ். பார்த்திபன்.ஹவுஸ் ஃபுல் எடுத்த தியேட்டர்)

பஞ்சமலை ஆதி காலத்திலிருந்தே எனக்கு ஆஸ்தான தலை (முடி) வெட்டுபவர்..சற்றே முன்வழுக்கை..கொஞ்சம் சாம்பல் நிறம் எட்டிப்பார்க்கும் தலை..சின்னப் பானை போன்ற தொப்பை..

அவரது கடையில் அவரது இளமை கருப்பு வெள்ளை புகைப்படம் சின்ன ஃப்ரேமில் பின் ஓரிரு காலண்டர்கள் கலர்ப்படம் ப்ரேமிடப் பட்டு தொங்க அதற்குள் சீனாவோ ஜப்பானோ ஏதோ தேசத்துப் பெண்கள் இடுப்பு மட்டும் சின்னத் துணி மட்டும் போட்டுக்கொண்டு விட்டேத்தியாய் சிறைப்பட்டிருப்பினும் வா வெனக் கண்களால் அழைப்பார்கள்..

அவர் கடைக்கு அதி அதி காலையில் சென்றாலும் முன்னிருந்த மூன்று நாற்காலிகள் ரொம்பி வழிய பெரிசுகள் கன சுவாரஸ்யமாய் தினத்தந்தி புரட்டிக் கொண்டிருப்பார்கள்..பார்த்தால் விடமாட்டான்.. கொஞ்சம் நில்லு.. இவர்க்கு முடிச்சுட்டு உன் கிட்ட வர்றேன்..என்பான்..

அப்படி முதல் நாள் அவன் கடைக்குப் போய்விட்டு வந்த்தில் தான் இந்த க.பு கமெண்ட்.. மறு நாள் செல்வா பேச்சு கா விடலாம் என இருந்த போது அவன் அழைத்தான்.. கண்ணா..கவலைப் படாதே அடுத்த தடவை இந்தப் பக்கம் சந்தையைத் தாண்டி எதிரில் ஒரு சலூன் இருக்கு..அங்க போ..கொஞ்சம் லேட்டஸ்டா வெட்டுவான்..

சில மாதங்கள் பின் ஒரு நாள் செல்வா சொன்ன கடையை ட்ரை பண்ணலாம் என்றுகாலையில் கிளம்பினால், அப்பா, “எங்கடா போறே”. சொன்னேன்.. இந்த முறை இந்தக் கடை – ராணி சலூன் என நினைவு- போறேன்.. சரி என்று விட்டு உள்ளே சென்றுவிட்டார்..

ராணி சலூன் கொஞ்சம் நீட்டாக இருந்த்து..உள்ளே இருந்த கடைக்கர்ர அண்ணன் என்னைக் கண்களால் வரவேற்று காலிச்சேரைக் காட்டிவிட்டு ஜஸ்ட் ஒரு அஞ்சு நிமிஷம் என்று சொல்லி தன் முன்னால் இருந்த க்ரீம் முகத்தில் ஆழ்ந்து போனார்..

தின மணி மட்டும் தான் இருந்த்து.. ஒரு புரட்டுபுரட்டுவதற்குள் வாங்க தம்பி..என்றார்..

சரி என அமர்ந்தால் எப்படி வேணும். முடி குறைக்கட்டுமா

இல்லை.. கொஞ்சம் கட்பண்ணா போதும்..

“சரி”என்று விட்டு ஒரு நல்ல வெள்ளைத் துணியை கழுத்தைச் சுற்றிப் போர்த்திவிட்டு என் தலைமுடியில் கத்திரியால் விளையாட்த் துவங்க சுற்றிலும் நான் நோட்டமிட்ட போது கொஞ்சம் பகீர் என்றது..

காரணம் கட்டண விவரம்: பெரியவர்களுக்கு மூன்று ரூபாய்.. சிறுவர்களுக்கு 1.50..

அச்ச்ச்சோ பஞ்சமலை ஒரு ரூபா தானே வாங்குவான்..இங்க இப்படி ப் போட்டிருக்கே என்ன செய்வது..

நினைத்த சில நிமிடங்களில் வயிற்றுக்குள் இனம்புரியாத கலக்கும் உணர்வு..என்ன செய்யலாம்..ஒம்மாச்சி காப்பாத்து.. மேலமாசிப் பிள்ளையாரே ஒனக்கு பன்னிரண்டு தடவ சுத்தி பத்து பைசா உண்டியல்ல போடறேன்..அச்ச்ச்சோ பைசா கொஞ்சமா இருக்குன்னு சலூன்ல சொல்றது கேவலமில்லை..என்ன செய்யறது..ஸ்லோகம் சொல்ல்லாமா..கஜான்னம் பூத..அடுத்த வரி மறந்து போக..

அசரீரியாய் ஒரு குரல்..

இது அப்பா குரல் போல இருக்கே..கொஞ்சம் திரும்பினால்..கடை வாசலில் அப்பா..

பளீர்வேஷ்டி, வெளிர் நீல அரைக்கைச் சட்டை ..நெற்றியில் ஆரம்பித்து முன் வழுக்கை வரை கன கம்பீரமாய் ஒற்றைக் கோடு.. ராலே சைக்கிளிலிருந்து ஒற்றைக்கால் ப்ளாட்பாரத்தில் ஊன்றியிருக்க ஆஹா..கிட்ட்த் தட்ட பெருமாளாகவே எனக்குத் தென்பட..க.அ.விடம்
கொஞ்சம் போய்ப் பார்க்கறேன் எனச்சொல்லித் துணியெடுத்து அவரிடம் சென்றால்..

”சொல்ல மறந்துட்டேண்டா. ஒரு பத்து மணிவாக்கில கடையாட்டம் வா”(அப்பாவுக்கு பிஸினஸ் உண்டு)

“சரிப்பா.. ஒரு எட்டணா கொடேன்”

ஏன் என்றெல்லாம் கேட்காமல் ஒரு புதிர்ப் பார்வை பார்த்து சட்டைப் பை பர்ஸிலிருந்து ஒரு ரூபாய் கொடுத்தார்.. வந்துடு என்ன..

சைக்கிள் மிதித்துச் சென்று விட சந்தோஷமாகப் போய் மீதியை முடிக்கச் சொன்னேன்..

பத்து மணிக்குக் கடை சென்ற போது என்னத்துக்கு என விஷயத்தைக் கேட்டு விட்டு,”ஆமா நான் வராட்ட என்ன செஞ்சிருப்ப”

”ஒண்ணும் ப்ராப்ளம் இல்லைப்பா..வீட்டுக்குப் போய் எடுத்துட்டு வர்றேன்னு சொல்லியிருப்பேன்” என்றேன் கொஞ்சம் திமிராக..பிரச்னை முடிந்த தெம்புடன்..!

ஆனால் அதற்கப்புறம் ப்ளஸ்டூ முடிக்கும் வரையில் பஞ்சமலை தான்..

ப்ளஸ் ஒன் சமயத்தில் முகத்தில் அங்கங்கே கோரைப் புற்கள் போலக் கொஞ்சம் முளைவிட ஆரம்பித்திருக்க பஞ்சமலையிடம் “கொஞ்சம் ஷேவ் பண்ணு” என்ற போது ஏதோகெட்டவார்த்தை கேட்ட்து போல் துடித்துப் பார்த்தான்..

”ஏன் இப்ப ஏன் எடுக்கணும்..”

“கொஞ்சம் எடேன்..கசகசன்னு இருக்கு”

இப்ப வேணாம்யா..ஒனக்கும் ஒங்க அப்பா மாதிரி முரட்டுக் கன்னம்.. அப்புறம் பின்னால அவஸ்தைப் படுவ..”

நான் கம்ப்பெல் பண்ண மனசே இல்லாமல் எடுத்துத் துவக்கி வைத்தான்..
இன்னும் அவஸ்தை தொடர்கிறது..

ஒரு லீவு நாளில் சோம்பல் பட்டு ஷேவ் செய்யாமல் இருந்தால் என்னய்யா.. நான் என்ன ரொம்ப்ப் படுத்தறேனா ஏன் இப்படி சோகமா இருக்கே– என வீட்டில் குரல் கேட்கும்..

ம்ம்.. டி.ராஜேந்தர் கொடுத்துவைத்தவர்..!
சின்னக் கண்ணன்
சின்னக் கண்ணன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 410
இணைந்தது : 19/12/2013

Back to top Go down

அந்த நாள் ஞாபகம்.. - Page 2 Empty Re: அந்த நாள் ஞாபகம்..

Post by ஜாஹீதாபானு Mon Mar 10, 2014 1:42 pm

சூப்பர் தம்பி தொடருங்கபுன்னகை


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

அந்த நாள் ஞாபகம்.. - Page 2 Empty Re: அந்த நாள் ஞாபகம்..

Post by சின்னக் கண்ணன் Mon Mar 10, 2014 5:17 pm

நன்றி பானு அக்கா
சின்னக் கண்ணன்
சின்னக் கண்ணன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 410
இணைந்தது : 19/12/2013

Back to top Go down

அந்த நாள் ஞாபகம்.. - Page 2 Empty Re: அந்த நாள் ஞாபகம்..

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum