ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 8:39 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சஹாரா சுப்ரதா ராயை போலீசில் சிக்க வைத்தவர் யார் தெரியுமா..?

3 posters

Go down

சஹாரா சுப்ரதா ராயை போலீசில் சிக்க வைத்தவர் யார் தெரியுமா..? Empty சஹாரா சுப்ரதா ராயை போலீசில் சிக்க வைத்தவர் யார் தெரியுமா..?

Post by soplangi Tue Mar 04, 2014 11:57 am

சஹாரா சுப்ரதா ராயை போலீசில் சிக்க வைத்தவர் யார் தெரியுமா..? 04-km-abraham-300-jpg

சஹாரா குழுமத்தின் தலைவரான சுப்ரதா ராய் இன்று போலீஸ் பிடியில் தவித்துக் கொண்டிருக்கிறார். அவருக்கு இந்த நிலை ஏற்பட யார் காரணம் தெரியுமா... ஒரு நேர்மையான ஐஏஎஸ் அதிகாரியான கே.எம். ஆப்ரகாம்தான். செபியைச் சேர்ந்த அதிகாரியான ஆப்ரகாம் போட்ட கிடுக்குப் பிடியால்தான் இன்று ராய் போலீஸிடம் சிக்கியுள்ளார். தான் புத்திசாலி என்று ராய் கில்லாடித்தனமாக செயல்பட்டால் அவரை விட தான் அதி புத்திசாலி என்பதை ஆப்ரகாம் நிரூபித்து விட்டார். தனி மனிதராக இவர் எடுத்த அதிரடி மற்றும் அயராத நடவடிக்கைகள் காரணமாகத்தான் இன்று சுப்ரதா ராய் கைது செய்யப்பட்டுள்ளார்.

செபி இயக்குநர்

செபி அமைப்பில் 2011ம் ஆண்டு ஜூலை மாதம் வரை முழு நேர இயக்குநராக இருந்தவர் ஆப்ரகாம். ஆனால் அதற்குப் பின்னர் அவருக்கு பணி நீட்டிப்பு வழங்கப்படவில்லை. இவர் நேர்மையானவர் என்பதால் அரசியல் ரீதியாக ஏற்பட்ட நெருக்குதல்களே காரணம் என்று கூறப்படுகிறது.

மோசடிகள் கண்டுபிடிப்பு

ஆனால் ஆப்ரகாம் விடவில்லை. சஹராவின் மோசடிகளை முழுமையாக கண்டுபிடித்து தோண்டித் துருவி எடுத்து அத்தனயையும் வெளிப்படுத்தி சஹாராவை நிலைகுலைய வைத்து விட்டது ஆப்ரகாமின் வேலைகள். செபியாலோ அல்லது உச்சநீதிமன்றத்தாலோ கூட இதைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்பதுதான் ஆச்சரியம். அந்த அளவுக்கு அக்கு வேறு ஆணி வேறாக சஹாராவின் மோசடிகளை ஆப்ரகாம் கொண்டு வந்து விட்டார்.

நிழல் நிறுவனங்கள்

சஹாராவின் இரண்டு மோசடியான நிழல் நிறுவனங்களை இவர்தான் வெளிச்சத்திற்குக் கொண்டு வந்தார். அதில் உள்ள தவறுகளை, மோசடிகளையும் வெளிக் கொணர்ந்தார்.

கேரள அதிகாரி

தற்போது கேரள மாநில அரசின் கூடுதல் தலைமைச் செயலாளராக பணியில் இருக்கிறார் ஆப்ரகாம். சஹாராவின் ராய்க்கு இன்று ஏற்பட்டுள்ள நெருக்கடிகளுக்கு இவர்தான் முழுக் காரணமும் ஆவார். சஹாரா இந்தியா ரியல் எஸ்டேட் கார்ப்பரேஷன் மற்றும் சஹாரா ஹவுஸிங் இன்வெஸ்ட்மென்ட் நிறுவனம் ஆகியவை தொடர்பாக இவர் 2011ம் ஆண்டு ஜூன் 23ம் தேதி போட்ட உத்தரவுதான் இன்று ராய் சிறைக்குப் போகக் காரணம்.

மோசடி அம்பலம்

ஆனால் இந்த இரு நிறுவனங்களின் மோசடிகளும் தற் செயலாகத்தான் ஆப்ரகாமின் கண்ணில் பட்டுள்ளது. சஹாரா நிறுவனம் பொது மக்களிடமிருந்து வசூலிக்கப்பட்ட முதலீட்டுப் பணத்தை இந்த ரியல் எஸ்டேட் நிறுவனத்திற்கு மாற்றி முதலீடு செய்துள்ளனர். அதுகுறித்து ஆப்ரகாமுக்கு வந்து சந்தேகமடைந்து அதை ஆய்வு செய்தபோதுதான் சஹாராவின் மோசடி தெரிய வந்ததாம்.

செபி உத்தரவு

இதையடுத்து இனிமேல் நீங்கள் பொதுமக்களிடமிருந்து முதலீடுகளைப் பெறக் கூடாது, நிதி வசூலிக்கக் கூடாது என்று இரு நிறுவனங்களுக்கும் முதலில் செபி உத்தரவிட்டது. ஆனால் அதை சஹரா கண்டுகொள்ளவில்லை. மாறாக கோர்ட்டை நாடி செபிக்கே சிக்கலை ஏற்படுத்த முனைந்தது. செபி சார்பில் லக்னோ உயர்நீதிமன்ற பெஞ்ச்சில் வழக்குத் தொடரப்பட்டது. அதை விசாரித்த கோர்ட், செபி உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்தது.

சாதகமான தீர்ப்பு

இதையடுத்து செபி, உச்சநீதிமன்றத்தை நாடியது. ஆனால் உச்சநீதிமன்றமும் சஹாராவுக்கு சாதகமாகவே தீர்ப்பு அளித்தது. மேலும் சஹாரா தொடர்பான வழக்கை விரைவாக விசாரிக்க லக்னோ உயர்நீதிமன்றக் கிளைக்கு அது உத்தரவிட்டது.

நீதிமன்ற அவமதிப்பு

மறுபக்கம் சஹாரா ஒவ்வொரு கோர்ட் கொடுத்த உத்தரவையும் வாங்கி வைத்துக் கொண்டதே தவிர செபிக்கு அது ஒத்துழைப்பு தரவில்லை. கோர்ட் உத்தரவையும் அது முழுமையாக மதிக்கவில்லை. கடைசியில் அதற்கு எதிராகவே அதன் செயல் திரும்பி உச்சநீதிமன்றத்தால் சுப்ரதா ராய்க்கு எதிரான உத்தரவு வரக் காரணமாக அமைந்து விட்டது.

பூமராங்

சட்டம், நீதி, செபி என எதையுமே மதிக்கும் வகையில் ராய் மற்றும் அவரது நிறுவனங்கள் நடந்து கொள்ளவில்லை. மாறாக கோர்ட்டுகளை தனக்கு சாதகமாக பயன்படுத்த முனைந்தார் ராய். கடைசியில் அது பூமராங் போல அவருக்கே எதிராகவே திரும்பி விட்டது.
soplangi
soplangi
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013

Back to top Go down

சஹாரா சுப்ரதா ராயை போலீசில் சிக்க வைத்தவர் யார் தெரியுமா..? Empty Re: சஹாரா சுப்ரதா ராயை போலீசில் சிக்க வைத்தவர் யார் தெரியுமா..?

Post by T.N.Balasubramanian Tue Mar 04, 2014 4:23 pm

இந்தியாவில் பல பண முதலைகள் செய்கின்ற காரியம்தான் இது. இதற்கு உடந்தை பல அரசியல் வாதிகள் ,IAS ,IPS ,நீதித்துறை வல்லுனர்கள் ,கணக்கு ஆய்வாளர்கள். சில லக்ஷங்கள் பெற்றுக் கொண்டு , கோடி கணக்கில் உழல் செய்ய உதவுபவர்கள்.
கீழ் நிலையில் இருந்து ,எவன் ஒருவன் 10 ஆண்டுகளில் , கோடீஸ்வரன் ஆகிறானோ , நிச்சயமாக அவன் சேர்த்த பணம் நேர்வழில் சேர்த்த பணமாக இருக்காது. பலரை ஏமாற்றிய பணமாகதான் இருக்கும் .
ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

சஹாரா சுப்ரதா ராயை போலீசில் சிக்க வைத்தவர் யார் தெரியுமா..? Empty Re: சஹாரா சுப்ரதா ராயை போலீசில் சிக்க வைத்தவர் யார் தெரியுமா..?

Post by balakarthik Tue Mar 04, 2014 5:03 pm

விரைவில் இந்த வழக்கும் ஸ்பெக்ட்ரம் போலே மூடி மறைக்கப்படும் இல்லை ஆதாரங்கள் தொலைக்கபடும் - பிரதமர் அலுவலகம்


ஈகரை தமிழ் களஞ்சியம் சஹாரா சுப்ரதா ராயை போலீசில் சிக்க வைத்தவர் யார் தெரியுமா..? 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

சஹாரா சுப்ரதா ராயை போலீசில் சிக்க வைத்தவர் யார் தெரியுமா..? Empty Re: சஹாரா சுப்ரதா ராயை போலீசில் சிக்க வைத்தவர் யார் தெரியுமா..?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» ஸ்பாட் பிக்சிங் சூதாட்டம்: போலீசில் ஸ்ரீசாந்தை சிக்க வைத்தது டிராவிட்?!!
» ஃபேஷியல் செய்து கொள்ளக்கூடாதவர்கள் யார் யார் தெரியுமா?
» உலகின் பெரிய வழிபாட்டுத்தளம் எது என்பது உங்களுக்கு தெரியுமா ? அதை யார் கட்டினார்கள் என்பது தெரியுமா ?
» உங்களுக்கு யார் ரத்த தானம் செய்யலாம் தெரியுமா?
» யார் தெரியுமா இவுங்க????

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum