ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இதய மாற்று சிகிச்சைக்குக் காத்திருப்பவர்களுக்கு செயற்கை இதயம் ரெடி

2 posters

Go down

இதய மாற்று சிகிச்சைக்குக் காத்திருப்பவர்களுக்கு செயற்கை இதயம் ரெடி Empty இதய மாற்று சிகிச்சைக்குக் காத்திருப்பவர்களுக்கு செயற்கை இதயம் ரெடி

Post by Powenraj Mon Mar 03, 2014 8:08 am

உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகளும் செயற்கை உறுப்புகளைப் பொருத்தும் முறைகளும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இவற்றின் உச்சகட்ட வளர்ச்சியாக, இதயம் செயலிழந்து, இதய மாற்று சிகிச்சைக்குக் காத்திருப்பவர்களுக்கு மாற்று இதயம் கிடைக்கும் வரை உயிரைப் 'பிடித்து' வைக்க செயற்கை இதயத்தைப் பொருத்தும் அறுவை சிகிச்சையும் தற்போது பிரசித்தமாகி வருகிறது. சமீபத்தில் பிரான்சில் 'கார்மட்' எனும் உயிரி மருந்தியல் துறை நிறுவனம் புதிய செயற்கை இதயத்தை வடிவமைத்து சாதனை புரிந்துள்ளது.
மாரடைப்பு வந்தவரின் இதயத்தில் எல்லா தமனி ரத்தக் குழாய்களும் அடைபட்டு ஆஞ்சியோ பிளாஸ்டி, பைபாஸ் சிகிச்சை எதுவும் பலனளிக்காமல் போனால், அவருக்குச் செயற்கை இதயத்தைப் பொருத்தலாம். இதயத்தின் கீழறைகள் இரண்டும் மிகவும் பாதிக்கப்பட்டு, மகா தமனிக்குள்ளும், நுரையீரல் தமனிக்குள்ளும் ரத்தத்தைச் செலுத்த முடியாத அளவுக்கு இதயம் செயலிழந்து போனாலும் இதைப் பொருத்தலாம். இதய இடைச் சுவர்களில் துளை விழுந்து அல்லது இதயத்தில் உள்ள எல்லா வால்வுகளும் பழுதடைந்து, இதயம் பலூன்போல் விரிந்துவிட்டால் செயற்கை இதயம் பயன்படும்.
இப்படிப் பலருக்கும் பயன் தருகின்ற செயற்கை இதயத்தைக் கண்டுபிடிக்கும் முயற்சி 50 ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கிவிட்டது. அமெரிக்காவிலுள்ள ஹூஸ்டன் மருத்துவமனை ஆராய்ச்சியாளர்கள்தான் இதில் முன்னோடிகள். இந்த மையத்தைச் சேர்ந்த டாக்டர் ராபர்ட் ஜார்விக் என்பவர் 1982ல் வடிவமைத்த 'ஜார்விக் & 7' (Jarvik 7) எனும் செயற்கை இதயம், மருத்துவ உலகில் மிகவும் பிரபலம்.
இது பாலியுரேத்தேன் எனும் பிளாஸ்டிக்கால் உருவாக்கப்பட்டது. ஒரு நெல்லிக்காய் அளவு பேட்டரியில் இயங்குகின்ற 'ஜார்விக் &7' கருவியை நோயாளி யின் பழுதடைந்த இதயத்தோடு பொருத்தி விடுகிறார்கள். இதில் 2 பலூன்கள் இதயத்தை ஒட்டி யிருக்கும். ஒரு சிறிய குழாய் மூலம் பலூனுக்குள் காற்று செல்கிறது. அக்காற்று தருகின்ற அழுத்தத்தில் பலூன்கள் விரிந்து சுருங்கும்போது இதயமும் இயங்குகிறது. பேட்டரி சார்ஜ் குறைந்துபோன காரை 4 பேர் பின்பக்கத்திலிருந்து தள்ளிவிட்டு நகரச் செய்வதைப் போலத்தான் இதுவும்.
இதைப் பயன்படுத்துவதில் பல சிரமங்கள் இருந்தன. இதன் பேட்டரி இணைந்த கருவி ஒரு பெரிய கேமரா அளவிற்கு இருக்கும். இதை இடுப்பில் எந்நேரமும் சுமந்து கொண்டிருப்பது நோயாளிகளுக்குச் சிரமத்தைத் தந்தது. இது காற்றைச் செலுத்தும்போது ரத்தம் உறைந்து போனது. இது தருகின்ற காற்றழுத்தம் நுரையீரல்களின் செயல்பாட்டைத் தடுத்தது. இதன் செயற்கை வேதிப்பொருள்களை உடல் ஏற்றுக்கொள்ளாமல் நிராகரித்தது. எல்லாவற்றுக்கும் மேலாக, இது அதிகபட்சமாக 6 மாதங்களே செயல்பட்டது. ஆகையால், இதைவிட சிறந்த கருவியைக் கண்டுபிடிக்க ஆராய்ச்சியாளர்கள் முடுக்கிவிடப்பட்டனர்.
இதன் பலனாக போனிக்ஸ்&7 (Phoenix 7), அபியோகோர் (AbioCor), சின்கார்டியா (SynCardia) என்று பல செயற்கை இதயங்கள் செயலுக்கு வந்தன. இவை டைட்டானியம் மற்றும் பிளாஸ்டிக்கால் செய்யப்பட்டவை. இதயத்தின் வெளிப்பக்கத்திலிருந்து 'ஜார்விக்&7' இயங்கியது என்றால், இவை நோயாளியின் இதயத்துக்குள்ளேயே பொருத்தப்பட்டு செயல்பட்டன. பழுதடைந்து போன இதயத்தின் இரண்டு கீழறைகளையும் 4 வால்வுகளையும் அகற்றி விட்டு, அந்த இடத்தில் இக்கருவி ஒன்றை இணைத்து விட்டனர். இவற்றில் 2010ல் சிட்னி& செய்ன்ட் வின்சென்ட் மருத்துவமனையில், 50 வயது முதியவர் ஆஞ்சலோ தைகோனோ என்பவருக்குப் பொருத்தப்பட்ட சின்கார்டியா செயற்கை இதயம் மட்டும் 4 வருடங்களுக்குச் செயல்பட்டது. இதுவும் காற்றழுத்தம் மூலம் இதயத்தை இயங்கவைத்த காரணத்தால்... இதிலும் ரத்த உறைவு மற்றும் நுரையீரல்களில் காற்றழுத்தப் பிரச்னைகள் ஏற்பட்டன.
இன்னும் மேம்படுத்தப்பட்ட கருவிகளைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் இப்போது 'கார்மட்' எனும் செயற்கை இதயம் மூலம் பலன் கிடைத்துள்ளது. இதை உருவாக்கிய டாக்டர் அலென் கார்ப்பென்டியர் கூறுகையில், “எங்கள் நிறுவன ஆராய்ச்சியாளர்கள்தான் இக்கருவியைக் கண்டுபிடித்தார்கள் என்றாலும், டென்மார்க்கைச் சேர்ந்த ஐரோப்பிய ஏரோநாடிக் டிஃபன்ஸ் மற்றும் ஸ்பேஸ் நிறுவனம் இதை மேம்படுத்திக் கொடுத்தது. பாரீஸில் உள்ள ஜார்ஜஸ் போம்பிடௌ மருத்துவ மனையில் இதயம் செயலிழந்த 75 வயது முதியவருக்கு இது பொருத்தப்பட்டது. டாக்டர் கிறிஸ்டியன் லேட்டர்மெளலி இந்த அறுவைச் சிகிச்சையை மேற்கொண்டார்.
இது லித்தியம் பேட்டரி மூலம் இயங்குகிறது. பேட்டரியை இடுப்பில் அணிந்துகொள்ள வேண்டும். இது, சில உயிரிப்பொருள்களுடன் பசுவின் திசுக்களும் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளதால், இயற்கை இதயத்துக்கு நிகராக இது கருதப்படுகிறது. ஆகவே, இதை உடல் எளிதாக ஏற்றுக்கொண்டது. இயற்கை இதயத்திலிருந்து செயற்கை இதயத்துக்கு ரத்தம் வருகின்ற இடம் பிளாஸ்டிக் இழைகளால் தயாரிக்கப்படாமல், பசுவின் திசுக்களால் தயாரிக்கப்பட்டதாலும், காற்றுக்குப் பதிலாக ஹைட்ராலிக் திரவத்தின் அழுத்தம் கொண்டு இது இயக்கப்படுவதாலும் ரத்தம் உறைந்து கட்டியாவது தடுக்ப்பட்டுள்ளது. இதில் சென்சார் மற்றும் கணினி தொழில்நுட்பமும் இணைந்துள்ளதால், காய்ச்சல், அயர்ச்சி, மகிழ்ச்சி போன்ற நோயாளியின் உடல், மன மாறுதல்களுக்கு ஏற்ப தன் இயக்க சக்தியை மாற்றிக் கொள்ளும் திறனும் இதற்கு உண்டு. இதன் எடை 900 கிராம். இது 5 ஆண்டுகளுக்கு நீடித்து உழைக்கும்” என்கிறார்.
'கார்மட்' இதயம், அறிவியல் கண்டுபிடிப்பில் ஓர் அரிய வரம்!

Nandri Dinakaran


நம்பிக்கையுள்ள மனிதனுக்கு, எப்போதும் ரோஜாதான் கண்ணில் படும்;முட்கள் இல்லை...!
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

Back to top Go down

இதய மாற்று சிகிச்சைக்குக் காத்திருப்பவர்களுக்கு செயற்கை இதயம் ரெடி Empty Re: இதய மாற்று சிகிச்சைக்குக் காத்திருப்பவர்களுக்கு செயற்கை இதயம் ரெடி

Post by ஜாஹீதாபானு Mon Mar 03, 2014 5:27 pm

பகிர்வுக்கு நன்றி


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum