ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Today at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Today at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Today at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Today at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

Top posting users this week
ayyasamy ram
பண்டாரப் பாட்டு! Poll_c10பண்டாரப் பாட்டு! Poll_m10பண்டாரப் பாட்டு! Poll_c10 
heezulia
பண்டாரப் பாட்டு! Poll_c10பண்டாரப் பாட்டு! Poll_m10பண்டாரப் பாட்டு! Poll_c10 
mohamed nizamudeen
பண்டாரப் பாட்டு! Poll_c10பண்டாரப் பாட்டு! Poll_m10பண்டாரப் பாட்டு! Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

பண்டாரப் பாட்டு!

Go down

பண்டாரப் பாட்டு! Empty பண்டாரப் பாட்டு!

Post by சாமி Sun Mar 02, 2014 5:07 pm

ஆன்ம வீரம், படை வீரத்தினும் பெரிதென்னும் உண்மையைப் பல நூற்றாண்டுகளுக்கு முன்னமே தமிழ்நாடு அறிந்துகொண்டது. நாடாளும் வேந்தரது மறப்படையையும் வெல்லும் ஆற்றல், அறப்படையை எடுத்து ஆளும் ஆன்ம வீரரிடம் உண்டு என்பது பண்டைத் திருத்தொண்டர் சரித்திரத்தால் நன்குணரப்படும்.

சைவ சமயத்தை தமிழ்நாட்டில் நிலை நிறுத்திய நால்வருள் ஒருவராய திருநாவுக்கரசரை ஒரு சிறந்த ஆன்ம வீரராகக் கருதி, அவர் வாழ்க்கையையும் வாய்மொழியையும் பாரதியார் நன்கு உணர்ந்துள்ளார். மாநில வேந்தரது மறப்படையின் வலிமையை அறப்படையால் வெல்லலாகுமென்று ஆயிரத் திருநூறு ஆண்டுகட்கு முன்னரே உலக மக்களுக்கு அறிவித்தவர் திருநாவுக்கரசர். அவரது ஆன்ம வீரம் பாரதியார் உள்ளத்தில் புகுந்து உந்துவதாயிற்று.

இவ்வுலகில் புயவலியும் படைவலியும் படைத்தோரே வீரராகக் கருதப்படுகின்றனர். புயவலியினும், படைவலியினும் பெரிய ஆன்மத் திறல் படைத்த வீரராகத் திருநாவுக்கரசர் விளங்கினார். சமண சமயத்தைக் கைவிட்டு அப்பெரியார், சைவ நெறியைச் சார்ந்தபொழுது, சமண மன்னன் சீற்றமுற்றான். இதனால் நாவுக்கரசரைக் கொணருமாறு வேம்படை தாங்கிய வீரரைப் போக்கினான். அவ்வீரர், அப்பர் இருந்த இடம் போந்து வீரமொழி பேசி ஆரவாரித்தனர் எனினும், அவரது உருண்டு திரண்ட மேனியைக் கண்டு அப்பர் சிறிதும் அஞ்சினாரல்லர்; அவர் கையிலமைந்த படைக்கலங்களைக் கண்டு இறையளவும் கலங்கினாரல்லர்; ""நாமார்க்கும் குடியல்லோம், நமனை யஞ்சோம்'' என்று வீரப்பாட்டிசைத்தார். இவ்வாறு மன்னனது பரந்த படையின் முன்னே தமியராய், அஞ்சா நெஞ்சினராய் நின்று, அவன் மறப்படையைத் தம் ஆன்மவலியால் வென்ற அப்பரது வீரப்பாட்டு பாரதியார் உள்ளத்தைக் கவர்ந்தது.

யார்க்குங் குடியல்லேன் யான்என்ப
தோர்ந்தனன் மாயையே - உன்தன்
போர்க்கஞ் சுவேனோ பொடியாக்கு
வேன்உன்னை மாயையே


என்று தம்மை அச்சுறுத்திய மாயையைப் பழித்துப் பாடியுள்ளார். இப்பாட்டில் திருநாவுக்கரசரது வீரவுள்ளம் விளங்கக் காணலாம். பாரதியார் பாடிய வீரப்பாடல்களுள் தலையாய நிற்கும் தகுதி வாய்ந்தது, "அச்சமில்லை' என்று தொடங்கும் "பண்டாரப் பாட்டே' யாகும். அப்பாட்டிலே,

பச்சைஊன் இயைந்தவேற் படைகள்வந்த போதினும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே


என்றெழுந்த அடிகள், நாவுக்கரசரை எதிர்த்து நின்ற மன்னன் படையைப் போன்ற மறப்படையைக் குறிப்பன என்று கருதுவது பொருத்தமுடையதாகும். மேலும், திருநாவுக்கரசரைத் துன்புறுத்தக் கருதிய அரசன், அவரை நீற்றறையிலிட்டான். அந்நீற்றறையின் வெம்மையை,""மாசில் வீணையும் மாலை மதியமும்'' எனப்பாடி நாவுக்கரசர் தம் மனச் செம்மையால் வென்றார்.

ஏழு நாள் நீற்றறையில் ஏதமின்றி இருந்து வெளிப்பட்ட நிலையிலும் அவர் பெருமையை அரசன் அறிந்தானில்லை. பிறகு நஞ்சு கலந்த உணவை ஊட்டச் செய்தான். அந்த நஞ்சு கலந்த மாந்தரை நாவுக்கரசர் பகைவரெனக் கருதினாரல்லர்; அவரிட்ட சோற்றை உண்டு மகிழ்ந்தார். இங்ஙனம் பகைவரிட்ட நஞ்சையும் நண்பரிட்ட நல்லமுதெனக் கருதியுண்ட நாவுக்கரசர், "பெயக்கண்டும் நஞ்சுண்டு அமைவர்'' என்னும் திருக்குறளுக்கு நனி சிறந்த சான்றாயினார். இவ்வாறு நாவுக்கரசர் ஆற்றிய அருஞ்செயலை வள்ளுவர் அருளிய கருத்தோடு கலந்து,

நச்சைவாயி லேகொணர்ந்து நண்பர்ஊட்டு போதினும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே


என்று பாரதியார் நல்ல தமிழ் விருந்தளித்தார். ""ஊனம் ஒன்றில்லாத இறைவனுக்கு ஆட்பட்ட உத்தமர்'' வேறொன்றையும் பொருளாகக் கருதார். மண்ணும் விண்ணும் நிலைகுலைந்தாலும், ஞாயிறும் திங்களும் திசை மாறினாலும் அன்னார் மனந் துளங்குவதில்லை. இவ்வுண்ணையை,

வானந் துளங்கிலென் மண்கம்ப மாகிவென்....
ஊனமொன் றில்லா ஒருவனுக்கு ஆட்பட்ட உத்தமர்க்கே

என்று அப்பர் தம் தேவாரத்தில் அருளிப் போந்தார். அவ்வான்மத் திறலின் அருமையறிந்த பாரதியார்,

உச்சிமீது வானிடிந்து வீழுகின்ற போதினும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே


என்று கற்றாரும் கல்லாரும் அறியும் முறையில் விளக்கிப் போந்தார். உரன் என்னும் கருவியால் ஐம்பொறிகளையும் காத்து நின்ற அப்பரை வெல்ல இயலாது வான் மங்கையர் தோற்றொழிந்தனர். காதல் புரியும் மாதரார்,

கண்கள் வீசு போதினும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லை


என்ற பாரதியார் பாட்டு இவ்வரலாற்றை நினைவூட்டுகின்றது. ஆகவே, முற்காலக் கவிஞராகிய திருநாவுக்கரசரது வீர வாழ்க்கையும் வீரப்பாடலும் பாரதியார் உள்ளத்தைக் கவர்ந்து வீரக் கவிதையை விளைத்தன என்று கூறுதல் மிகையாகாது. - (ரா.பி.சேதுப்பிள்ளை, நூல்: "தமிழின்பம்'.)
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011

http://arundhtamil.blogspot.in

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum