ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அறிவியல் வானின் விடிவெள்ளிபிப்ரவரி 28 சர்.சி.வி.ராமன்தேசிய அறிவியல்

Go down

அறிவியல் வானின் விடிவெள்ளிபிப்ரவரி 28 சர்.சி.வி.ராமன்தேசிய அறிவியல் Empty அறிவியல் வானின் விடிவெள்ளிபிப்ரவரி 28 சர்.சி.வி.ராமன்தேசிய அறிவியல்

Post by கவின் Fri Feb 28, 2014 6:55 am

ஒரு நிமிடம்... மின்சாரமோ, தொலைபேசியோ இல்லாத
இந்த
உலகை சற்று கற்பனை செய்து பாருங்கள்.
அப்பா! என மலைப்பாக
இருக்கிறதா?

நினைத்துப்பார்க்கவே முடியாதபடி அயர்ச்சியாக இருக்கிறதா?

ஆம்! அறிவியல் இல்லா உலகம்
அதிர்ச்சி தரும்.ஏனென்றால்
உங்கள் நாகரீகத்தின்
அடிப்படை அறிவியல் தான்.
ஒவ்வொரு காலக்கட்டத்திலும்
நம் வாழ்க்கையை மேம்படுத்த அறிவியல்
நம்மோடு துணையாக
பயணிக்கிறது.
இதற்கு முக்கியக் காரணம்
அறிவியல் அறிஞர்கள்.

தமிழக மண்ணில் பிறந்த
அறிவியல்
மேதை சர்.சி.வி.ராமனின்
நுண்ணறிவினையும்,
திறமையையும்,
ஆராய்ச்சிகளின் சிறப்பையும்
உணர்ந்து 1930ஆம்
ஆண்டு பிப்ரவரி 28ம்
தேதி அவருக்கு நோபல்
பரிசு வழங்கப்பட்டது.
தேசத்தலைவர்கள் மற்றும் விடுதலைப் போராட்ட
தியாகிகளைக்
கொண்டாடுவது போலவே அறிவியல்
மேதைகளையும் போற்ற
வேண்டும் என்ற
அடிப்படையில் இந்திய அரசு சர்.சி.வி.ராமன் நோபல்
பரிசு பெற்ற தினமான
பிப்ரவரி 28ம் தேதியை 1987ம்
ஆண்டு தேசிய அறிவியல்
தினமாக அறிவித்தது.

நோபல் பரிசு வென்ற முதல்
ஆசியர்

1888ம் ஆண்டு நவம்பர் மாதம் 7ம்
தேதி மாங்குடி என்ற ஊரில்
சந்திரசேகரய்யர்,
பார்வதி அம்மாள்
தம்பதியருக்கு மகனாகப்
பிறந்தவர் சர்.சி.வி.ராமன். இயற்பெயர் வெங்கட்ராமன்.
இளம்
பருவத்திலேயே கணிதம்
மற்றும் ஆங்கில பாடங்களில்
திறமையோடு விளங்கினார்.
இளங்கலையில் தங்கபதக்கம் பெற்றுத் தேர்வானார்.
அவருடைய 18 வயதில்
அவரது முதல்
ஆய்வு அறிக்கை லண்டனில்
அறிவியல் சஞ்சிகையில்
பிரசுரமானது. அப்போதே அறிவியல் உலகம்
அவரை கவனிக்கத்
தொடங்கியது.

1917 முதல் 1933
வரை பேராசிரியர்
பதவி வகித்தார் ராமன்.
அப்போது தான்
அறிவியலில் அவர் ஆற்றிய
பங்கை அங்கீகரிக்கும் வகையில் 1929ம் ஆண்டில்
இந்தியாவில் செயல்பட்ட
பிரிட்டிஷ் அரசாங்கம்
ராமனுக்கு ‘சர்‘ பட்டம்
வழங்கி கவுரவித்தது. 1933
முதல் 10 ஆண்டுகள் பெங்களூர் இந்திய அறிவியல்
நிறுவன இயக்குனராகப்
பணியாற்றினார்.

1943ம் ஆண்டு தமது பெயரில்
பெங்களூரில்
ஆராய்ச்சி நிறுவனம்
ஒன்றைத் தொடங்கினார்.
1948ல் அவர் தேசியப்
பேராசிரியர் ஆனார். பலப்பல விருதுகளும் பதவிகளும்
அவரைத்தேடி வந்தன. 1954 ல்
நாட்டின் மிக உயரிய
விருதான ‘பாரத் ரத்னா‘
விருதும், 1957ல் ‘சர்வதேச
லெனின் விருதும்‘ அவருக்கு வழங்கப்பட்டன.
உலகம் போற்றும் மேதையாக
விளங்கிய சர்.சி.வி.ராமன்
1970ஆம் ஆண்டு நவம்பர் 21ம்
தேதி தமது 82வது வயதில்
காலமானார்.

ராமன் விளைவு

1921ம் ஆண்டு, லண்டனில்
உலகப் பல்கலைக் கழகங்கள்
இணைந்து நடத்திய
சபையில், கல்கத்தா பல்கலைக்
கழகத்தின் சார்பில்
சர்.சி.வி.ராமன் பங்கேற்றார். அப்போது அவர் மேற்கொண்ட
கடல் பயணத்தின்போது,
கப்பலின் மேல் தளத்தில்
அமர்ந்து கடலின்
அழகை ரசித்தபடி பயணம்
செய்துக் கொண்டிருந்தார். அப்போது அவரது மனதில்,
கடலுக்கு நீல நிறம்
எப்படி வந்தது?

வானத்தின் நிறமா? வானம்
மேகமூட்டத்துடன் கறுப்பாக
இருக்கும்போதும்,
தொடர்ந்து அலைகள்
வரும்போதும் கடல்
எப்படி நீலநிறமாக உள்ளது, என்று பலப்பல கேள்விகள்
உருவானது.
திடீரென்று சூரிய
ஒளியை நீர்த் துளிகள்
பிரதிபலிப்பதால்தான் கடல்
நீலநிறமாக உள்ளது என்பதை உணர்ந்தார்.

சூரிய ஒளி தண்ணீரிலும்,
ஐஸ் கட்டியிலும்,
மற்றப்பொருட்களிலும்
எவ்வாறு பயணிக்கிறது என்பதை
ஆராய்ந்தார். முப்பட்டகக்
கண்ணாடியின் வழியே ஒளிக்கதிர்கள்
செல்லும்போது பல்வேறு வண்ணங்களாகப்
பிரிவதை 1928ல்
கண்டுபிடித்தார்.

ஒளி அவ்வாறு பல்வேறு பொருட்களில்
பயணிக்கும்போது புதிய
கோடுகள்
உருவாவதை அவர்
கணித்துக் கூறினார். அந்த
முக்கியமான கண்டுபிடிப்புக்கு அவரது பெயரே சூட்டப்பட்டது.
அந்தக் கோடுகள் “ராமன்
கோடுகள்” என்றும், அந்த
விளைவு “ராமன்
விளைவு” என்றும் இன்றும்
அழைக்கப்படுகிறது.

ஒளிச்சிதறல்
பற்றி அறிக்கை தயாரித்து,
ராயல் சொசைட்டி ஆப்
லண்டன்
கழகத்துக்கு அனுப்பினார்.

அந்த முறை நோபல்
பரிசு தனக்குத்தான்
கிடைக்கும் என்று தன்
படைப்பின் மீது அதீத
நம்பிக்கை கொண்ட அவர்
நவம்பர் மாதம் நடைபெறும் விழாவிற்காக ஜுன்
மாதமே டிக்கெட்
எடுத்து வைத்துக்கொண்டார்.
அவர் நம்பிக்கை வீண்
போகவில்லை.

இந்தக் கண்டுபிடிப்புக்காக
அவருக்கு இயற்பியலுக்கான
நோபல்
பரிசு அளிக்கப்பட்டது.
வெள்ளையர் அல்லாத
ஒருவருக்கு முதல் முதலாக நோபல்
பரிசு அளிக்கப்பட்டதும்
அப்போதுதான். நோபல்
பரிசு பெற்ற அவரின்
கண்டுபிடிப்பான ‘ராமன்
நிறத்தோற்றம்‘ அறிவியல் துறையின் அடிப்படை.
தேசிய அறிவியல் தினத்தில்
சர்.சி.வி.ராமனை நினைவு கொள்வதோடு மட்டுமின்றி அறிவியல்
சிந்தனைகளை வளர்த்து,
புதிய
கண்டு பிடிப்புகளை வரவேற்று, வளர்ச்சிகளைப்
பாராட்டி விஞ்ஞானிகளை ஆதரிப்பதே அவருக்கு நாம்
செலுத்தும் நன்றிக்கடன்.

நம் வாழ்வை மாற்றிய சில
கண்டுபிடிப்புகளும்,
கண்டுபிடிப்பாளர்களும்

* ஐசக் நீயூட்டன்-
பூவியீர்ப்பு விசை(1687)

* தாமஸ் ஆல்வா எடிசன்- மின்
விளக்கு(1879)

* மேரிகியூரி- ரேடியம்(1898)

* அலெக்ஸாண்டர் பிளம்மிங்-
பென்சுலின்(1928)

* அலெக்ஸாண்டர் கிரஹாம்
பெல்- தொலைபேசி(1876)

* மார்டீன் கூப்பர்- மொபைல்
தொலைபேசி (1973)

* ஜான் லோகி பெயர்டு-
தொலைக்காட்சி(1926)

* ஜான் எண்டர்ஸ்-
போலியோ தடுப்பூசி(1948)

* வானொலி-
மார்க்கோனி(1895)

* ஆகாய விமானத்தைக்
கண்டுபிடித்தவர்கள்-ரைட்
சகோதரர்கள்(1903)


-தினகரன்
கவின்
கவின்
பண்பாளர்


பதிவுகள் : 170
இணைந்தது : 30/09/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum