புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
"ஏமாற்றத்தை சகித்துக்கொள்ள கற்றுக்கொடுப்போம் " ! Poll_c10"ஏமாற்றத்தை சகித்துக்கொள்ள கற்றுக்கொடுப்போம் " ! Poll_m10"ஏமாற்றத்தை சகித்துக்கொள்ள கற்றுக்கொடுப்போம் " ! Poll_c10 
6 Posts - 60%
வேல்முருகன் காசி
"ஏமாற்றத்தை சகித்துக்கொள்ள கற்றுக்கொடுப்போம் " ! Poll_c10"ஏமாற்றத்தை சகித்துக்கொள்ள கற்றுக்கொடுப்போம் " ! Poll_m10"ஏமாற்றத்தை சகித்துக்கொள்ள கற்றுக்கொடுப்போம் " ! Poll_c10 
2 Posts - 20%
heezulia
"ஏமாற்றத்தை சகித்துக்கொள்ள கற்றுக்கொடுப்போம் " ! Poll_c10"ஏமாற்றத்தை சகித்துக்கொள்ள கற்றுக்கொடுப்போம் " ! Poll_m10"ஏமாற்றத்தை சகித்துக்கொள்ள கற்றுக்கொடுப்போம் " ! Poll_c10 
2 Posts - 20%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

"ஏமாற்றத்தை சகித்துக்கொள்ள கற்றுக்கொடுப்போம் " !


   
   

Page 1 of 2 1, 2  Next

DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி
பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

PostDERAR BABU Tue Feb 25, 2014 4:32 pm

அந்தச் சிறுவனுக்குப் பதினோரு வயது. முகத்தில் மீசை அரும்புவதன் அறிகுறிகூடத் தெரியவில்லை. அவன் விஷம் குடித்துத் தற்கொலை செய்ய முயன்றிருக்கிறான். நல்லவேளையாகக் காப்பாற்றப்பட்டு, சிகிச்சைக்குப் பின் மனநல ஆலோசனைக்காக என் முன் அமர்ந்திருந்தான்.

“ஏம்ப்பா மருந்தைக் குடிச்சே?”

“டீச்சர் திட்டிட்டார் சார்.”

“திட்டினதுக்கா சாக நினைச்சே?’’

“ஃப்ரெண்ட்ஸ் எல்லார் முன்னாலயும் திட்டிட்டார் சார்.”

அந்த வாரத்தில் அவன் மூன்றாவது சிறுவன்.

இன்னொரு நிகழ்ச்சி. அவர் ஓர் அரசுப் பள்ளி ஆசிரியர். “தூக்கமே வரவில்லை டாக்டர்.’’ என்றார். எனக்குத் தூக்கிவாரிப்போட்டது. ஏனென்றால், மன அழுத்தம் தாங்காமல், ஏற்கெனவே தினம் மூன்று மாத்திரைகள் போட்டுத்தான் தூங்குகிறார் அவர். “நான் பரவாயில்லை. எங்கள் பள்ளித் தலைமை ஆசிரியர் தினம் ஐந்து தூக்க மாத்திரைகள் போட்டுக்கொள்கிறார். அவரைவிட நான் ஆரோக்கியமாக இருக்கிறேன். எல்லாம் இந்த பசங்க தரும் டென்ஷன்தான் டாக்டர். லேசா ஏதாவது சொன்னாலே பொசுக்குனு தூக்குல தொங்கிடறாங்க. யாரையும் எதுவும் சொல்ல முடியவில்லை” என்றார்.

இரண்டும் ஒரே பிரச்சினையின் இருவேறு பக்கங்களே. இன்றைய இளம்வயதினர், சிறு ஏமாற்றத்தை, அவமதிப்பை, தோல்வியைக் கூடத் தாங்கிக்கொள்ள இயலாதவர்களாக இருக்கிறார்கள். தன்னைப் பற்றிய சுய பிம்பத்துக்கு அளவுக்கு அதிகமான முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்.

என்னுடைய சிறுவயதைப் பற்றிச் சற்று நினைத்துப் பார்த்தேன். இவன் வயதில் தற்கொலை என்பதை சினிமாவில் வில்லனால் ஏமாற்றப்பட்ட கதாநாயகனின் தங்கை விஷம் குடிக்க முயன்று, கடைசி நேர மாறுதலுக்கு உட்பட்டுக் கதாநாயகனால் முறியடிக்கப்படும் ஒரு செயலாக மட்டுமே அறிந்திருந்தேன்.

என் தந்தையின் தலைமுறையினரைப் பள்ளியில் சேர்க்கும்போதே பெற்றோர்கள் “கண்ணை மட்டும் விட்டுட்டு உடம்புல எங்க வேணாலும் அடிங்க சார்” என்று சொல்லியே சேர்ப்பார்கள். அவர்கள் எத்தனையோ அடிவாங்கினாலும், தற்கொலை என்பது எந்த மொழிச் சொல் என்றுகூட அறிந்திருக்க மாட்டார்கள். மிஞ்சிமிஞ்சிப்போனால், ஊரைவிட்டு ஓடிப்போவார்கள்.

குழந்தைகளைக் கண்டிக்கக் கூடாது; திட்டக் கூடாது; அடிக்கவே கூடாது என்பதெல்லாம் சிறுவர்களுடன் பழகுவதன் பாலபாடமாகவே போதிக்கப்பட்டிருக்கிறது. எள்முனையளவு மூளை இருக்கும் எவருமே இதை ஒப்புக்கொள்வார்கள். ஆனால், இது பிரச்சினையின் ஒரு பகுதிதான். குழந்தைகளை அடிக்கும், காரணமின்றித் தண்டிக்கும் வழக்கம் வெகுவாகக் குறைந்திருக்கிறது. ஆனால், சிறுவயதிலேயே தற்கொலை முயற்சிகள் அதிகரித்துக்கொண்டே இருக்கும் முரணை நாம் எப்படி விளக்குவது?

நம்முடைய குழந்தைகளுக்கு கராத்தே, குதிரையேற்றம், ஸ்பானிஷ் மொழியெல்லாம் கற்றுக்கொடுக்கிறோம். ஆனால், ஏமாற்றத்தைத் தாங்கக் கற்றுக்கொடுக்கிறோமா? இல்லை என்றே தோன்றுகிறது. ஏமாற்றமெனும் சிறு ஊசிகூட வீங்கிப்போன பலூன் போன்ற ஈகோவை நொடிப்பொழுதில் உடைத்துவிடுகிறது. தன்னைப் பற்றிய பிம்பத்துக்கு அளவுக்கு அதிகமான முக்கியத்துவம் கொடுக்கக் காரணங்கள் எவை?

கூட்டுக் குடும்பம் என்பது பலவிதமான மனிதப் பறவைகள் வசிக்கும் கூடாக இருந்தது. அம்முறை சிதைந்து, ஒரு குடும்பத்தில் ஒன்று அல்லது அதிகபட்சம் இரண்டு குழந்தைகளே இருக்கும்போது அவர்களுக்குக் கொடுக்கப்படும் முக்கியத்துவம் மிகவும் அதிகம். பிறருக்கு விட்டுக்கொடுக்க வேண்டும், பிறரது உணர்வுகளைப் புரிந்துகொள்ள வேண்டும் என்பது போன்ற பயிற்சிகள் இல்லாமல் தன்முனைப்பாகவே வளர்கிறார்கள்.

கூட்டுக் குடும்ப முறை மறைந்தது மட்டுமின்றி, குடும்பத்துக்குள்ளேயே கூடியிருந்து உரையாடும் வழக்கம் வெகுவாகக் குறைந்துவிட்டிருக்கிறது. இன்று ஒவ்வொருவரும் தனித்தனித் தீவுகளாகத்தான் இருக்கின்றனர். நண்பர்கள் மத்தியிலும் அப்படியே. நான்கு சிறுவர்கள் ஒன்றாக இருந்தாலும், ஆளுக்கொரு செல்பேசியைக் கையில் வைத்துக்கொண்டு அதிலுள்ள விஷயங்களையே பெரும்பாலும் பகிர்ந்துகொள்கின்றனர்.

இதன் விளைவாக எல்லாத் தேர்வுகளிலும் முதல் மாணவனாக வர வேண்டும், எல்லாப் போட்டிகளிலும் முதல் பரிசு பெற வேண்டும் என்கிற தன்முனைப்பு வெறியாக மாறுகிறது. தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் முதல் பரிசு கிடைக்காமல் கதறி அழுகிறவர்களைத்தான் நாளும் காண்கிறோம்.

வாழ்வே பொருள்மயமாக மாறிப்போன சூழலில், ஒரு மாணவனின் இயல்பான ஆர்வம் பற்றி அறிந்துகொள்ளாமல் பள்ளிக்கூடங்கள் ஒரே மாதிரியான பிரதிகளை உருவாக்கும் தொழிற்சாலைகளாக மாறியிருக்கின்றன. இரா.நடராசனின் கதையில் வரும் ஆயிஷாவைப் போன்றவர்களின் சிறகுகள் முளைக்கும் முன்னேயே கத்திரிக்கப்படுகின்றன. இச்சூழல், ஏமாற்றமெனும் காளான் எளிதில் முளைக்க உரம் போடுகின்றது.

எல்லாக் கோபங்களுமே ஏமாற்றங்களில்தான் பிறக்கின்றன. தன்மீது வரும் கோபம் தற்கொலை முயற்சியாக மாறுகிறது. பிறர்மீது வரும் கோபம் விதிமீறல், வன்முறை ஏன் கொலைவரை கொண்டுசெல்கிறது. பள்ளி மாணவன் ஆசிரியரைக் கொலை செய்வதும் கல்லூரி ஆசிரியரை மாணவர்களே வெட்டிச் சாய்ப்பதும் சமுகத்தைப் பீடித்திருக்கிற பெருநோயின் அறிகுறிகள். ஆசிரியர்கள், மாணவர்கள் என்று இரு தரப்பினரையுமே மன அழுத்தத்தில் தள்ளியிருக்கிறது இந்த நிலைமை.

விளம்பரம் ஒன்றில், ஒரு சிறுவன் இரண்டாம் பரிசு பெற்றதை இனிப்போடு கொண்டாடுவான். அந்தப் போட்டியில் கலந்துகொண்டதே இரண்டு பேர்கள் என்பதுதான் வேடிக்கை! இதுபோன்று ஏமாற்றங்களையும் தோல்விகளையும் ரசிக்கக்கூட வேண்டாம். குறைந்தபட்சம் ஏற்றுக்கொள்ளவாவது நம் குழந்தைகளைப் பழக்குவோம். அந்தத் தலைமையாசிரியரும் ஓரிரு தூக்க மாத்திரைகளைக் குறைத்துக்கொள்வார்.

- ஜி. ராமானுஜம், மனநல மருத்துவர்,

the hindu

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Feb 25, 2014 5:28 pm

நல்ல பதிவு நன்றீ



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Feb 25, 2014 5:43 pm

அருமையான  பகிர்வு பாபு புன்னகை சூப்பர் ! நல்ல விழிப்புணர்வு பதிவும் கூட !  அன்பு மலர் 

சகிப்புத்தன்மை என்பதே பசங்களுக்கு இல்லாமல் போய்விட்டது இந்த காலத்தில். அவாளை ஒன்றுமே.........சொல்லகக் கூடாது என்று நினைக்கிறார்கள் ;(

பசங்க தப்பு செய்தால் கூடா பெத்தவாளே பார்த்து சிரிச்சுண்டு இருக்கா............... எனவே அது தப்பு என்றே அவாளுக்குத் தெரியலை. நம்ப அப்பா அம்மாவே ஒண்ணும் சொல்லாதப் போது இவாளுக்கு என்ன என்று மற்றவாளை நினைக்கத் தோன்றுகிறது சோகம் . வீட்டிலேயே இந்த கதி என்றால் வெளி இடங்கள் மற்றும் ஸ்கூல் இல்........... கேட்கவே வேண்டாம்.

எதிர்காலத்தை நினைத்தால் பயமாகவே இருக்கு...............கட்டுரையில் சொன்னது போல ஏமாற்றம் நமக்கு வரும், அதை எப்படி தாங்குவது என்று குழந்தைகளுக்கு சொல்லித்தரணும் நாமதான். அவர்கள் குறிப்பிடும் விளம்பரம் நானும் பார்த்திருக்கேன் புன்னகை சூப்பர் ஆக இருக்கும்.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Feb 25, 2014 6:00 pm

ஆனால் பாபு, தலைப்பை இப்படி மாற்றி வையுங்களேன். ஒரு சக்ஜிஷன் தான் புன்னகை

"ஏமாற்றத்தை சகித்துக்கொள்ள கற்றுக்கொடுப்போம் "



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி
பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

PostDERAR BABU Tue Feb 25, 2014 6:37 pm

நல்லது அக்கா . பாசிட்டிவான தலைப்பு . ஆனால் திருத்து அப்சனையெ காணோமே .நீங்களே மாற்றி விடுங்கள் ........

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Tue Feb 25, 2014 6:54 pm

மிக மிக அருமையான பதிவு.

நாள் தோறும் வகுப்பில் ஒரு ஐந்து அல்லது பத்து நிமிடங்கள் இது போல செய்திகளையெல்லாம் பேசுகிறேன். அவர்களையும் கருத்துகளைக் கூற வைக்கிறேன்.



"ஏமாற்றத்தை சகித்துக்கொள்ள கற்றுக்கொடுப்போம் " ! A"ஏமாற்றத்தை சகித்துக்கொள்ள கற்றுக்கொடுப்போம் " ! A"ஏமாற்றத்தை சகித்துக்கொள்ள கற்றுக்கொடுப்போம் " ! T"ஏமாற்றத்தை சகித்துக்கொள்ள கற்றுக்கொடுப்போம் " ! H"ஏமாற்றத்தை சகித்துக்கொள்ள கற்றுக்கொடுப்போம் " ! I"ஏமாற்றத்தை சகித்துக்கொள்ள கற்றுக்கொடுப்போம் " ! R"ஏமாற்றத்தை சகித்துக்கொள்ள கற்றுக்கொடுப்போம் " ! A"ஏமாற்றத்தை சகித்துக்கொள்ள கற்றுக்கொடுப்போம் " ! Empty
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Feb 25, 2014 7:13 pm

DERAR BABU wrote:நல்லது அக்கா . பாசிட்டிவான தலைப்பு . ஆனால் திருத்து அப்சனையெ காணோமே .நீங்களே மாற்றி விடுங்கள் ........

நான் மாற்றி விடுகிறேன் பாபு புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Feb 25, 2014 7:15 pm

Aathira wrote:மிக மிக அருமையான பதிவு.

நாள் தோறும் வகுப்பில் ஒரு ஐந்து அல்லது பத்து நிமிடங்கள் இது போல செய்திகளையெல்லாம் பேசுகிறேன். அவர்களையும் கருத்துகளைக் கூற வைக்கிறேன்.

சூப்பர் ஆதிரா புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Feb 26, 2014 12:40 am

"ஏமாற்றத்தை சகித்துக்கொள்ள கற்றுக்கொடுப்போம் " ! 3838410834 "ஏமாற்றத்தை சகித்துக்கொள்ள கற்றுக்கொடுப்போம் " ! 103459460 

எங்க சகிப்பு தன்மையைப் பார்த்து அந்த ஏமாற்றமே ஏமாந்து போச்சுல்ல புன்னகை




அனுராகவன்
அனுராகவன்
பண்பாளர்

பதிவுகள் : 224
இணைந்தது : 08/02/2014

Postஅனுராகவன் Wed Feb 26, 2014 8:23 am

"ஏமாற்றத்தை சகித்துக்கொள்ள கற்றுக்கொடுப்போம் " ! 3838410834 "ஏமாற்றத்தை சகித்துக்கொள்ள கற்றுக்கொடுப்போம் " ! 3838410834 



Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக