ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனித நேயத்தை ஈழ அகதிகளிடமும் காட்டுங்கள்: ஜெயலலிதாவுக்கு அனந்தி சசிதரன் கடிதம்

3 posters

Go down

மனித நேயத்தை ஈழ அகதிகளிடமும் காட்டுங்கள்: ஜெயலலிதாவுக்கு அனந்தி சசிதரன் கடிதம் Empty மனித நேயத்தை ஈழ அகதிகளிடமும் காட்டுங்கள்: ஜெயலலிதாவுக்கு அனந்தி சசிதரன் கடிதம்

Post by சிவா Wed Feb 26, 2014 5:19 pm


மனித நேயத்தை ஈழ அகதிகளிடமும் காட்டுங்கள்: ஜெயலலிதாவுக்கு அனந்தி சசிதரன் கடிதம் 1972368_632362086836892_762517704_n

யாழ்ப்பாணம்: மரணதண்டனைக் கைதிகளிடம் காட்டிய மனிதநேயத்தையும், நியாய உணர்வையும் ஈழத்தமிழ் அகதிகள் விஷயத்திலும் அக்கறையுடன் காட்டுங்கள் என தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு இலங்கை வடமாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரன் கடிதம் எழுதியுள்ளார்.

இது தொடர்பாக முதல்வர் ஜெயலலிதாவுக்கு, அனந்தி எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

அன்பிற்கும் மதிப்பிற்குமுரிய அம்மா அவர்களுக்கு வணக்கங்கள் பல,

நான் ஈழத்தின் வடமாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரன் (திருமதி. எழிலன்), அண்மையில் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் மரணதண்டனை விதிக்கப்பட்டபின் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட மூன்று தமிழ் இளைஞர்களது முழுமையான விடுதலை தொடர்பாக, தாங்களும் தங்கள் அரசும் மனோதர்மத்தின்படி மனிதநேயத்தின் அடிப்படையிலும் எடுத்த முடிவு உலக வாழ் தமிழர்கள் அனைவருக்கும் பெருமகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது.

இது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தமிழக அரசின் நடவடிக்கைகளை சரித்திரத்தில் பதியப்படும் என்பது உண்மையே. இந்தவகையில் தாங்கள் தமிழ் பேசும் நல்லுலகத்தினரால் என்றென்றும் நன்றியுடன் நினைக்கப்பட வேண்டியவரே.

இதேசமயம் தமிழகத்தில் சில பத்தாண்டு காலமாக அகதி முகாம்களில் வாழ்ந்து வரும் ஈழத்தமிழர்கள் பற்றி தங்கள் மேலான கவனத்திற்கு கொண்டு வருவதன் மூலம் அவர்கள் வாழ்விலும் இயல்பு நிலைமையினை தோற்றுவிக்க வேண்டும் என விரும்புகிறோம்.

உண்மையில் அவர்கள் அகதிகளும் அல்ல. அநாதைகளும் அல்ல. சிங்கள அரசின் அளப்பரிய கொடுமைகளுக்கு முகம் கொடுக்க முடியாது உயிர் பாதுகாப்பிற்கென மட்டுமே புலம்பெயர்ந்து வந்தவர்கள். அவர்கள் வசதிகளற்ற அகதி முகாம்களிலும் சிறப்பு முகாம் என அழைக்கப்படும் தடுப்பு முகாம்களிலும் படும் இன்னல்கள் ஒன்றும் ரகசியமானதல்ல.

அவர்களும் அவர்களது உறவுகளும் சொந்த மண்ணிற்கு திரும்பி இயல்பு வாழ்க்கை வாழும் எதிர்காலம் குறித்த நம்பிக்கையற்ற நம்பிக்கைகளுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அங்குள்ளவர்களின் துன்ப துயரங்களை நேரில் சென்று பார்த்தாலே புரிந்து கொள்ள முடியும்.

இந்தநிலையில் தங்களால் சொந்த மண்ணிற்கு திரும்பும் வரையிலான காலம் கனியும் வரை அவர்கள் குறைந்தபட்சம் தத்தம் மனித உணர்வுகளை இழக்காமல் வாழ்வதற்கான அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டியது முதல்வராகிய உங்களது மனிதநேய கடமையாகும் என எண்ணுகிறோம்.

மரண தண்டனைக் கைதிகளில் காட்டிய மனிதநேயமும் நியாய உணர்வும் ஈழத்தமிழ் அகதிகள் விடயத்திலும் அக்கறையுடன் காட்டுவீர்கள் என்ற நம்பிக்கை எம் மக்களுக்கு ஏற்பட்டுள்ளது.

இவ்வாறு கடிதத்தில் கூறியுள்ளார்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மனித நேயத்தை ஈழ அகதிகளிடமும் காட்டுங்கள்: ஜெயலலிதாவுக்கு அனந்தி சசிதரன் கடிதம் Empty Re: மனித நேயத்தை ஈழ அகதிகளிடமும் காட்டுங்கள்: ஜெயலலிதாவுக்கு அனந்தி சசிதரன் கடிதம்

Post by mbalasaravanan Wed Feb 26, 2014 7:09 pm

உண்மை தான் சற்று அவர்களிடம் கருணை காட்டுங்கள்
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Back to top Go down

மனித நேயத்தை ஈழ அகதிகளிடமும் காட்டுங்கள்: ஜெயலலிதாவுக்கு அனந்தி சசிதரன் கடிதம் Empty Re: மனித நேயத்தை ஈழ அகதிகளிடமும் காட்டுங்கள்: ஜெயலலிதாவுக்கு அனந்தி சசிதரன் கடிதம்

Post by M.M.SENTHIL Wed Feb 26, 2014 10:24 pm

சிவா wrote:

இந்தநிலையில் தங்களால் சொந்த மண்ணிற்கு திரும்பும் வரையிலான காலம் கனியும் வரை அவர்கள் குறைந்தபட்சம் தத்தம் மனித உணர்வுகளை இழக்காமல் வாழ்வதற்கான அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டியது முதல்வராகிய உங்களது மனிதநேய கடமையாகும் என எண்ணுகிறோம்.


வருத்தம் மேலிடுகிறது இந்த அம்மையாரின் வரிகளைக் கண்டு.


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

மனித நேயத்தை ஈழ அகதிகளிடமும் காட்டுங்கள்: ஜெயலலிதாவுக்கு அனந்தி சசிதரன் கடிதம் Empty Re: மனித நேயத்தை ஈழ அகதிகளிடமும் காட்டுங்கள்: ஜெயலலிதாவுக்கு அனந்தி சசிதரன் கடிதம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum