ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

Top posting users this month
No user

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஹரியும் ஹரனும் ஒன்றே - இது ஒரு நல்ல உதாரணம்

4 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

ஹரியும் ஹரனும் ஒன்றே - இது ஒரு நல்ல உதாரணம் - Page 2 Empty ஹரியும் ஹரனும் ஒன்றே - இது ஒரு நல்ல உதாரணம்

Post by jayaravi Tue Feb 25, 2014 8:46 pm

First topic message reminder :

1.        கண்ணை திறந்தால் பாண்டுரங்கன்; மூடினால் சிவபெருமான்!

நண்பர் ஒருவர் சமீபத்தில் ஒரு நாள் என்னிடம் கேட்டார்…. “நீங்கள் சிவ பக்தரா அல்லது விஷ்ணு பக்தரா? புரிந்துகொள்ள முடியவில்லையேஇருவரை பற்றியும் எழுதுகிறீர்களே…” என்று.

நான் சொன்னேன்… “எனக்கு  ஹரியும் ஒன்று தான். ஹரனும் ஒன்று தான். இருவரையும் வேறுபடுத்தி பார்க்க தெரியாது. பரமேஸ்வரன் மீது எந்தளவு பக்தி வைத்திருக்கிறேனோ அதே அளவு பரந்தாமன் மீதும் பக்தி உண்டு. ஹரியும் ஹரனும் வேறு வேறு என்ற எண்ணம் எனக்கு என்றுமே ஏற்பட்டதில்லை. சிறு வயதில் இருந்தே அந்த எண்ணம் என் மனதில் ஊறிவிட்டது ஒரு வகையில் எனக்கு கிடைத்த வரம்!” என்றேன்.

ஹரியும் ஹரனும் ஒன்றே என்பதற்கு நம் புராணங்களில், இதிகாசங்களில், சரித்திரங்களில் பல சம்பவங்கள் இருக்கின்றன. பல ஆழ்வார்கள் கோவிந்தனை பாடும்போது, “உன் உருவில் சிவனைக் காண்கிறோம்என்று பாடியிருக்கிறார்கள்.

ஆதி சங்கரர் உள்ளிட்ட பல சைவ மதத்தை சார்ந்த அவதார புருஷர்கள் விஷ்ணு மீது ஆறாத பக்தி கொண்டு ஒழுகியிருக்கிறார்கள். சொல்லப்போனால் ஆதி சங்கரர் மனமுருகி அழைத்த போதும் ஆபத்தில் சிக்கித் தவித்த போதும் சிவனை விட விஷ்ணு பல முறை உடனே ஓடிவந்திருக்கிறார்.

அவ்வளவு ஏன் ? கலியுகத்தில் கண்கண்ட தெய்வமாய் இருந்து இன்றும் நம்மை வழி நடத்திக்கொண்டிருக்கும் மஹா பெரியவா அவர்கள் சந்திரமௌலீஸ்வரர் மீது எந்தளவு பக்தி கொண்டு ஒழுகினாரோ அதே அளவு வரதராஜ பெருமாள் மீதும் பக்தி கொண்டிருந்தார்.

ஆகையால் சைவர்கள் மகாவிஷ்ணுவை புறக்கணித்தாலோ அல்லது வைணவர்கள் சிவபெருமானை புறக்கணித்தாலோ தங்கள் தெய்வத்தை புறக்கணிப்பதாகத் தான் அர்த்தம்.

ஆத்மார்த்தமான பற்று என்பது அனைத்து தெய்வங்களிடமும் ஒருவருக்கு ஏற்பட்டுவிடாது என்பது புரிந்துகொள்ளக்கூடியதே. அதே சமயம், திருத்தல யாத்திரை உள்ளிட்டவைகளுக்கு செல்லும்போதோ அல்லது வேறு சூழ்நிலைகளிலோ தரிசிக்க வாய்ப்பிருக்கும்போது கூட மற்ற தெய்வத்தை புறக்கணிப்பது தான் தவறு என்று கூறுகிறேன்.

சிவனும் விஷ்ணுவும் ஒன்றே. ஒருவர் மீது பக்தி கொண்டிருப்பதால் மற்றவரை புறக்கணிக்கவேண்டியதில்லை என்பதை வலியுறுத்தும் வகையில் திருமால் அடியவர்களின் திவ்ய சரித்திரங்களை கூறும்ஸ்ரீ மஹா பக்த விஜயம்நூலிருந்து ஸ்ரீ நரஹரி பக்தர் என்னும் அடியவர் ஒருவரின் உன்னத அனுபவத்தை தருகிறேன்.

ஸ்ரீ பக்த விஜயத்தில் ஸ்ரீ நரஹரி பக்தரின் சரித்திரம்

கண்ணை திறந்து பார்த்தால் பாண்டுரங்கன்; மூடினால் சிவபெருமான்!

ஏகோ தேவ : கேசவோ வா சிவோ வாஎன்று பெரியோர்கள் சொல்வதுண்டு. அதாவது ஒரே கடவுளிடத்து உன் மனத்தை ஆற்றுப்படுத்து, அது கேசவனாக இருந்தாலும் சரி; சிவனாக இருந்தாலும் சரி என்பதே. இதை இப்பொழுதும் மனதில் இருத்தி ஹரி ஹரன் இருவர் பாலும் பக்தி செலுத்துபவர்கள் அநேகம் உண்டு.

ஆனால், நாட்டிலே வீர் சைவர்கள் என்றும் வீர வைஷ்ணவர்கள் என்றும் சிலரைக் கூறலாம். வீர சைவர்கள் வீர வைஷ்ணவர்கள் தொட்ட சொம்பைக் கூட தொடமாட்டார்கள். இறைவனது திருநாமம் என்று யாராவது பெயரிட்டாலும் கோபிப்பர். பொதுவாக, மதச் சம்பிரதாயமான சடங்குகள் அனைத்தும் விஷ்ணுவையே முன்னிலைப்படுத்தியே நடைபெறும். ஆனால், வீர சைவர்களோ அச்சடங்குகளை சிவபெருமானை முன்னிலைப்படுத்தியே செய்வர்.

இதே போன்று வீர வைஷ்ணவர்களும் சாலேசுவரம் போன்ற சொற்களை கையாளாமலும், தில்லைநகர் திருச்சித்திரக்கூடத்திலே (சிதம்பரம்) எழுந்தருளியுள்ள கோவிந்தராஜ பெருமாளை சேவிக்க செல்லும்போது எதிரே ஆனந்த தாண்டவமாடும் நடராஜப் பெருமானது திருவுருவம் கண்களில் பட்டுவிடக்கூடாதென்று விசிறியினால் வலப்புறத்தை மறைத்துக் கொண்டு செல்வதும் உண்டு. ‘ஆனை துரத்தினாலும் ஆலயத்தில் நுழையக்கூடாதுஎன்ற பழமொழியும் உண்டு.

இத்தகைய வீர வைஷ்ணவர்களும் வீர சைவர்களும் முன்பு இருந்திருக்கிறார்கள் என்பதற்கு நரஹரி பக்தர் சிறந்த உதாரணம்.

1. பொன்னரைஞானில் புலப்பட்ட ஞானம்

பாண்டுரங்கன் குடிகொண்டிருக்கும் பண்டரீபுரத்திலே நரஹரி என்னும் பக்தர் வாழ்ந்து வந்தார். நரஹரி பொற்கொல்லர் வகுப்பை சேர்ந்தவர். இவர் சிறந்த சிவா பக்தர். உடல் பொருள் ஆவி எல்லாம் சிவபெருமானின் திருப்பணிக்கே என்று அர்ப்பணம் செய்தவர். ஆனால் பாண்டுரங்கன் எழுந்தருளியிருக்கும் பண்டரீபுரத்திலே சிவனடியார்களை காண்பதும் அளவளாவுவதும் ஏது? ஊர் முழுவதும் பாண்டுரங்கனது நாமாவளிகளின் கோஷம். இது அவரது செவிகளுக்கு நாராசம் போல இருந்தது. எப்பொழுதேனும் பாண்டுரங்கனது சன்னதி வழியே செல்ல நேரிட்டால், நேர்வழியே சென்றால் பாண்டுரங்கனது விக்ரகம் கண்ணில் படும் என்று சுற்ற வளைத்து செல்வார். கோவிலில் பிரம்மோற்சவம் என்னும் கொடியேற்றும் முன்னே எங்காவது வெளியூர் சென்றுவிடுவார். இப்படியே நெடு நாட்கள் நடந்து வந்தது.

பண்டரீபுரத்திலே ஒரு வணிகன். பண்டரிநாதனிடத்திலே எல்லையற்ற அன்பு பூண்டவன். நெடுநாள் புத்திரப் பேறு இல்லாமல் பண்டரிநாதன் சன்னதியிலே தவமிருந்தான். தவத்தின் பயனாக அருள் கிடைத்தது. ஒரு அழகிய மகன் பிறந்தான். மகன் பிறந்தால் பண்டரிநாதனுக்கு அவ்விக்ரகத்தின் எடை அளவாக பொன்னில் நவரத்தினங்கள் இழைத்த பொன் அரைஞாண் செய்து சமர்ப்பிப்பதாய் வேண்டியிருந்தான். அந்த அழகிய பொருளை சிறந்த முறையில் செய்து தரக்கூடிய பொற்கொல்லனை தேடிக்கொண்டிருந்தான். பலரையும் விசாரித்தபோது எல்லோரும் ஒரே வாக்காக நரஹரியை போல அற்புதமாக பொன் வேலையும் குந்தன வேலையும் செய்யக்கூடியவர் அந்த வட்டாரம் முழுவதிலும் இல்லை என்றனர்.

வணிகனும் தேவையான பொன்னையும் நவரத்தினங்களையும் சேமித்து வைத்துக்கொண்டு நரஹரியின் வீட்டை அடைந்தான். நரஹரி வேலை செய்ய ஒப்புக்கொண்டார். ஆனால், “உங்கள் கோவிலுக்கு இதுவரை சென்றதில்லை. விக்ரகத்தின் எடையின் அளவை அளந்துகொண்டு வந்தால் செய்து தருகிறேன்என்று சொன்னான்.

வணிகனும் சரி என்று ஒப்புக்கொண்டு சென்றான். அவன் மனம் நரஹரியின் குணத்தை எண்ணி வியந்தது. “தேசாந்திரங்களிலிருந்தெல்லாம் மெய்யடியார் கூட்டம் மலரை நாடி வரும் வண்டுகள் போல பண்டரிநாதனது திருவடியை நாடி ஓடி வருகின்றது. இந்த பேதை மனிதன், தாமரை குளத்து தவளை போல இங்கே அவர் காலடியில் வாழ்ந்தும் அவரை சேவிக்கும் பாக்கியமற்றவனாக வாழ்கிறானே. ஐயோ பாவம்!” என்று அங்கலாய்த்தான்.

வணிகனது விருப்பம் போல நரஹரி மிகவும் அழகிய நுட்பமான வேலைப்பாடுகள் கொண்டதும் காண்போர் ஆச்சரியப்படக் கூடியதுமான நவரத்னங்கள் இழைத்த ஒரு அரைஞாண் செய்து முடித்தார். அதன் அமைப்பை கண்டு அவருக்கே வியப்பு உண்டாயிற்று. அதை வணிகனிடம் கொடுக்க, அவர் அதை கோவிலுக்கு கொண்டு சென்று இறைவனது இடையிலே அணிவித்தான். அது ஆறு விரற்கடை அளவு குறைவாக இருந்தது. ஆகவே மீண்டும் கொண்டு வந்து கொடுத்து ஆறு விரற்கடை இசைத்து தரும்படி கேட்டான்.

நரஹரி மீண்டும் ஒரு நாள் வேலை செய்து அதை நீட்டித் தந்தார். மறுபடியும் அதை கொண்டு சென்று பண்டரிநாதனது இடையிலே அதை பூட்டிப் பார்த்தான் வணிகன். இம்முறையும் சில விரற்கடை அதிகம். மீண்டும் வந்து இழைத்துக்கொண்டு போனான். அப்போதும் அளவு குறையவில்லை.

வணிகனது மனம் துயரத்தில் வாடியது. “அடியேன் எவ்வளவோ பிரயாசைப்பட்டு மிகுந்த சிரத்தையுடன் செய்த இந்த ஆபரணம் இப்படி அமைவானேன் ? இது சோதனையா? என் முன்வினையா?” என்று அழுது அரற்றினான்.

பிறகு நரஹரியிடம் சென்று, “ஐயா நான் அளவெடுத்ததிலே தான் தவறு நேர்ந்திருக்கவேண்டும். நீங்களே சென்று ஒரு முறை அளவெடுத்து வந்தால் நல்ல முறையில் அமையலாம்என்று கெஞ்சினான்.

நரஹரிக்கு அசாத்திய கோபம். “நீர் இந்த பேச்சை மட்டும் என்னிடம் பேசவேண்டாம். நான் உங்கள் வேலையை ஒப்புக்கொண்டதே பெரிய விஷயம். எழுந்து போம்என்று சீறினார்.

வணிகனோ விடுவதாயில்லை. நெடுநேர வாதங்களுக்கு பின் கண்களை கட்டிக்கொண்டு வந்து பாண்டுரங்கனது விக்ரகத்தை கையினால் தடவிப் பார்த்து அளவெடுக்க இசைந்தார் நரஹரி.

கோவில் வாசல் வரை இருவரும் சென்றனர். கோயிலை அடைந்ததும் ஹரியின் கண்கள் கட்டப்பட்டன. அங்கே கூடியிருந்த அர்ச்சகர்களும் பக்தர்களும் நகைத்துஎது என்ன மதியீனம் ? எல்லோரும் இந்த இறைவனை காண கண்கோடி வேண்டும் என்று வேண்டுவார்கள். இவனோ இரு கண்களும் நல்ல பார்வையில் இருந்தும் கண்ணிழந்த கபோதிபோல தடவிப் பார்க்க போகிறானே?” என்றனர்.

வணிகன் வழிகாட்டி போல செல்ல, இருவரும் கர்ப்பகிரஹத்தை அடைந்தனர். நரஹரி இரு கைகளாலும் விக்ரகத்தை தடவ ஆரம்பித்தார். அவர் இறைவனை கைகளால் தடவிப் பார்க்க பகவானது இடையிலே புலித்தோல் அவர்கள் கைகளுக்கு தட்டுபட்டது. மேலும் சந்தேகத்துடன் மற்ற அங்கங்களை எல்லாம் தடவிப் பார்க்க, மான், மழு, சூலம், அக்னி, உடுக்கை, யானைத் தோல் போர்வை, சடாமகுடம், அதன் மீது இளம்பிறை, கங்கை, குண்டலங்கள், நெற்றிக்கண் எல்லாம் இருப்பது புலப்பட்டது.

நரஹரி மயக்கத்தில் ஆழ்ந்தார். “அடாடாபாண்டுரங்கனை காணக்கூடாதென்று அல்லவா கண்களை கட்டிக்கொண்டு வந்தேன். இங்கேயே திருமாலுக்கு பதிலாக சிவபெருமானல்லவோ என் கைகளுக்கு அகப்பட்டிருக்கிறார்என்று நினைத்து கண்களை கட்டியிருந்த துணியை அவிழ்த்தார்.

அங்கே அவர் கண்டதென்ன ? நீல மேக சியாமளனாய் இடையிலே கையை வைத்துக்கொண்டு எதிரே நின்று புன்னகை பூத்தான் பாண்டுரங்கன். சங்கும் சக்கரமும் பீதாம்பரமும் மணிமுடியுமாய் நிற்கும் பண்டரிநாதனின் விக்ரகத்தை கண்டதும் மறுபடியும் கண்களை கட்டிக்கொண்டு தடவிப் பார்த்தார்.

முன்பு போலவே சிவபெருமானுடைய சின்னங்கள் கைகளுக்கு புலனாயின. மறுபடி கண்களை திறந்தார். எதிரே பண்டரிநாதன். ஆகவே மனம் வாடி… “அந்தோ! கண் மூடினால் கங்காதரனும், திறந்தால் திருமாலுமாகவல்லவா காண்கின்றேன். இது என்ன அதிசயம் ? ஒன்றும் புலப்படவில்லையே!” என்று ஏங்கி பன்முறை இவ்விதம் செய்து பார்த்தார்.

கடைசியில் நரஹரி பக்தர், இருவரும் ஒருவரே என்று உணர்ந்து அகண்ட ஞானம் பெற்றவராய் இறைவனுடைய திருவடிகளிலே வீழ்ந்துதிருநாபிக்கமலத்திலே பிரம்மனை தோற்றுவித்து அகில உலகங்களையும் சிருஷ்டித்த பிரானே ! அடியேன் பேத புத்தியால் நான் வணங்கும் சிவனே பரதெய்வம்; தேவரீர் தாழ்ந்தவர் என்றும் நினைத்திருந்தேன். ஆனால், இன்று தேவரீரில் சிவபெருமானையே காண்கின்றேன். அரியும் சிவனும் ஒன்று என்று இன்று தான் உணர்ந்தேன். இப்படி எனக்கு உபதேசித்ததன் பொருட்டு தமக்கு என் நன்றியை எவ்வவாறு காண்பிப்பேன் ? அடியேன் பேத புத்தியினால் செய்த அபராதத்தை மன்னிக்கவும்என்று கண்ணீர் பெருக அகங்குழைந்து வேண்டினார்.

2. இறைவன் அருளிய இன்னுபதேசம்

வத்ஸ! உன் மீது எனக்கு எல்லையற்ற வாத்சல்யம் உண்டு. அது காரணமாகவே உன்னை இவ்வாறு சோதனை செய்தேன். உனக்கு பொது நோக்கு, சமரசம், வெறுப்பின்மை இவை செறிந்த அகண்ட ஞானம் கிடைக்கவேண்டுமென்றே வணிகனை ஏவினேன். உலகில் புத்தியில்லாதவர் தாம் இது போன்ற பேத புத்தி கொண்டு உழல்கின்றனர். இங்கே திருமாலாக வைஷ்ணவர்கள் கண்டால் அங்கே சைவர்கள்; எம்மை சிவபெருமானாக தரிசிக்கின்றனர். [b]



Last edited by krishnaamma on Thu Feb 27, 2014 9:52 am; edited 3 times in total
jayaravi
jayaravi
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 267
இணைந்தது : 28/11/2013

Back to top Go down


ஹரியும் ஹரனும் ஒன்றே - இது ஒரு நல்ல உதாரணம் - Page 2 Empty Re: ஹரியும் ஹரனும் ஒன்றே - இது ஒரு நல்ல உதாரணம்

Post by ayyasamy ram Thu Feb 27, 2014 10:26 am

ஹரியும் ஹரனும் ஒன்றே - இது ஒரு நல்ல உதாரணம் - Page 2 6lcog3KZSi6rq3cZJt18+ma_shan_p
--

"மண்ணினை உண்ட மாயன் தன்னைப் பாகங்கொண்டார்
பண்ணினைப் பாடி ஆடும்பத்தர்கள் சித்தம் கொண்டார்
கண்ணினை மூன்றுங்கொண்டார் காஞ்சிமாநகர் தன்னுள்ளால்
எண்ணினை எண்ண வைத்தாரிலங்கு மேற்றளியனாரே!

---
(இது அப்பர் தேவாரம்,
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84143
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ஹரியும் ஹரனும் ஒன்றே - இது ஒரு நல்ல உதாரணம் - Page 2 Empty Re: ஹரியும் ஹரனும் ஒன்றே - இது ஒரு நல்ல உதாரணம்

Post by ayyasamy ram Thu Feb 27, 2014 10:42 am

மேலும் சில கண்ணுக்கும் கருத்துக்கும் இனிய
புகைப்படங்கள்
-
ஹரியும் ஹரனும் ஒன்றே - இது ஒரு நல்ல உதாரணம் - Page 2 Wmmy0oURCaOhhpfF6CoA+harihara
--
ஹரியும் ஹரனும் ஒன்றே - இது ஒரு நல்ல உதாரணம் - Page 2 809Xk2ZGRqK2UQGtRo1J+Siva
-
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84143
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ஹரியும் ஹரனும் ஒன்றே - இது ஒரு நல்ல உதாரணம் - Page 2 Empty Re: ஹரியும் ஹரனும் ஒன்றே - இது ஒரு நல்ல உதாரணம்

Post by jayaravi Thu Feb 27, 2014 1:09 pm

தலைப்பை மாற்றினதர்க்கும் , சில பிழைகளை எடுத்து சொன்னதற்கும் மிகவும் நன்றி - எவ்வளவோ சிரமம் எடுத்து , கவனத்துடன் பதிவுகளை இட்டாலும் , அறியாமலே சில எழுத்து பிழைகள் வந்து விடுகின்றன - மன்னிக்கவும் 

அன்புடன் ரவி
jayaravi
jayaravi
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 267
இணைந்தது : 28/11/2013

Back to top Go down

ஹரியும் ஹரனும் ஒன்றே - இது ஒரு நல்ல உதாரணம் - Page 2 Empty Re: ஹரியும் ஹரனும் ஒன்றே - இது ஒரு நல்ல உதாரணம்

Post by krishnaamma Thu Feb 27, 2014 1:24 pm

jayaravi wrote:தலைப்பை மாற்றினதர்க்கும் , சில பிழைகளை எடுத்து சொன்னதற்கும் மிகவும் நன்றி - எவ்வளவோ சிரமம் எடுத்து , கவனத்துடன் பதிவுகளை இட்டாலும் , அறியாமலே சில எழுத்து பிழைகள் வந்து விடுகின்றன - மன்னிக்கவும் 

அன்புடன் ரவி

அடடா............மன்னிப்பெல்லாம் எதற்கு? நீங்க என்னை தப்பாக நினைக்காததற்கு ரொம்ப நன்றி புன்னகை நீங்கள் சொல்வது போல சில சமயத்தில் இப்படி நிகழ்வது சகஜம் தான் புன்னகை இங்கு நாம் ஒருவருக்கு ஒருவர் உதவுவதற்குத்தானே இருக்கோம் புன்னகை இல்லையா?  அன்பு மலர் 


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஹரியும் ஹரனும் ஒன்றே - இது ஒரு நல்ல உதாரணம் - Page 2 Empty Re: ஹரியும் ஹரனும் ஒன்றே - இது ஒரு நல்ல உதாரணம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum