Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்by heezulia Today at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
Balaurushya | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வருமான வரி நோட்டீஸ்... தவிர்க்கும் வழிகள்!
2 posters
Page 1 of 1
வருமான வரி நோட்டீஸ்... தவிர்க்கும் வழிகள்!
வருமான வரி கணக்கு தாக்கல் செய்யாத 23 லட்சம் பேருக்கு நோட்டீஸ் அனுப்ப முடிவு செய்திருப்பதாக அண்மையில் வருமான வரித்துறை அறிவிக்க, தங்களுக்கும் நோட்டீஸ் வந்துவிடுமோ எனப் பலரும் குழம்பிப்போய்க் கிடக்கிறார்கள். இந்தக் குழப்பங்களுக்குத் தெளிவான பதில் பெற சென்னை வருமான வரி முதன்மை ஆணையர் எஸ்.ரவியைச் சந்தித்தோம். நம்முடைய கேள்விகளுக்கு விரிவான விளக்கம் தந்தார் அவர்.
''வருமான வரி கணக்கு தாக்கல் செய்யாத பலருக்கும் நோட்டீஸ் அனுப்பப்படுவதாகச் சொல்லப்படுகிறதே... எவ்வாறு இது செயல்படுத்தப்படுகிறது?'
''வருமான வரித்துறையில் அத்தனை பிரிவுகளுமே கணினி மயமாக்கப்பட்டுள்ளது. வரி செலுத்து வோரின் படிவங்கள் அதாவது, ரிட்டர்ன்ஸ் முதலான அத்தனை பரிவர்த்தனைகளுமே கணினியில் பதிவு செய்யப்படுகின்றன. ஆகவே, இந்தத் துறையில், ஏறக்குறைய அத்தனைபேரின் தகவல்களையும் உள்ளடக்கிய டேட்டாபேஸ் எங்களிடம் தயாராக இருக்கிறது. இதை வைத்து கடந்த ஆண்டுகளில் வரி செலுத்துவோரின் வருமான அளவு எப்படி இருந்தது, தற்போது எப்படி தாக்கல் செய்யப்பட்டு இருக்கிறது அல்லது தாக்கல் செய்யாமல் விடப்பட்டிருக்கிறதா என்பதையெல்லாம் ஆராய்ந்து, வரிச் செலுத்தியதில் தவறு செய்தவர் களையும் வரி தாக்கல் செய்யத் தவறி யவர்களையும் எங்களால் கண்டுபிடித்து நோட்டீஸ் அனுப்ப முடிகிறது.
தவிர, புது டெல்லியில் இருந்து செயல்படும் வருமான வரி இயக்குநர் (சிஸ்டம்ஸ்) அலுவலகம் மூலமாகவும், வரி கணக்கு தாக்கல் செய்யாதவர்கள் மற்றும் வரி கணக்கு தாக்கலை நிறுத்தியவர்கள் அடங்கிய பட்டியல் எங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதன் அடிப்படையிலும் நோட்டீஸ் அனுப்புகிறோம். சார் பதிவாளர் அலுவலகம், பெரிய ஒப்பந்ததார நிறுவனங்கள் ஆகியவற்றிடம் இருந்தும் வரிச் செலுத்துவோரின் தகவல்கள் கிடைக்கப் பெற்று அதன் அடிப்படை யிலும் நோட்டீஸ் அனுப்புகிறோம்''.
ஒருவருக்கு எந்தமாதிரி சூழ்நிலையில் வருமான வரித்துறையில் இருந்து நோட்டீஸ் வரும்?
''ஆண்டுதோறும் வரி கட்டப்பட வேண்டாத வருமானத் துக்கான வரம்பு எவ்வளவு என்று மத்திய அரசு நிர்ணயம் செய்கிறது. அந்த வரம்புக்குமேல் வருமானம், அதாவது, வரி கட்டவேண்டிய அளவுக்கு வருமானம் இருந்து, அது வருமான வரித்துறைக்குத் தாக்கல் செய்யப்படாமல் இருக்கும்பட்சத்தில், முதலில் மென்மையாக ஒரு கடிதம் அனுப்பி, வரிச் செலுத்துவோரிடம் இருந்து உண்மையான தகவல் கேட்டுப் பெறப்படுகிறது.
ரிட்டர்ன் மற்றும் கணக்கு தாக்கல் செய்த பின்னரும்கூட, வருமான வரித் துறை அதிகாரிகளுக்கு வெளியில் இருந்துவரும் தகவல்களின்படி கணக்கு சரியாகத் தாக்கல் செய்யாமல் இருப்பதாக வலுவான சந்தேகம் இருப்பின், நோட்டீஸ் அனுப்பப்படும். இதுவும் அல்லாமல், விவரங்கள் சரிபார்ப்பு உள்ளிட்ட வேறு சில காரணங்களுக்காகவும் நோட்டீஸ் அனுப்பப்படலாம்.''
வருமான வரித்துறையில் இருந்து நோட்டீஸ் வருவதைத் தவிர்க்க என்ன செய்ய வேண்டும்?
''உங்கள் வருமானம், அதற்கான வரியை சரியாகக் கணக்கிட்டு, உரிய முறையில் அதை அரசுக்கு செலுத்தி, குறிப்பிட்ட கெடுவுக்குள் 'ரிட்டர்ன்’ தாக்கல் செய்துவிட்டால், வருமான வரித்துறையில் இருந்து நோட்டீஸ் என்கிற பேச்சுக்கே இடமில்லை.''
வருமான வரியைப் பொறுத்தவரையில் மாதச் சம்பளதாரர்கள் எந்த விஷயத்தில் அதிகம் தவறு செய்கிறார்கள்?
''பொதுவாக, சம்பளதாரர்கள் தங்களது வருமான நிர்ணயம் மற்றும் வரிக் கணக்கிடுவதில் பெரிதாகத் தவறு இழைப்பதில்லை. நடைமுறை சார்ந்த சிறு பிழைகள்தாம் அதிகம் காண முடிகிறது. சரியான பான் எண் எழுதாமல் இருத்தல், வங்கிக் கணக்கு விவரங்கள் குறிப்பாக, எம்.ஐ.சி.ஆர் எண் போன்றவை விடுபட்டுப்போதல், கையெழுத்துப் போடாமல் ரிட்டர்ன் சமர்ப்பித்தல்; தொடர்புக்கான தொலைபேசி எண் மற்றும் வீட்டு முகவரி கொடுக்காமல் இருத்தல் போன்ற தவறுகளையே திரும்பத் திரும்பச் செய்கின்றனர்.''
வரி கணக்கு தாக்கல் செய்யவில்லை என்றால் என்ன தண்டனை?
''வரி கணக்கு குறித்த நேரத்தில் தாக்கல் செய்யாதவர்களுக்கு வருமான வரி அதிகாரியினால் நோட்டீஸ் அனுப்பப்படும். அதன்பிறகும் வரி கணக்கு தாக்கல் செய்யவில்லை எனில், வருமான வரிச் சட்டம் 1961 பிரிவு 271-ன் கீழ் ரூ.10,000 அபராதம் விதிக்கப்படும். மேலும், வருமான வரித்துறைக்குக் கனக்குகளைக் குறைத்து மதிப்பிட்டு, வரி கணக்கு சமர்ப்பித்தால் கூடுதல் வருமான வரி செலுத்துவதோடு நில்லாமல், ஏய்க்கப்பட்ட வரிக்கு மூன்று மடங்கு அளவுக்கு மிகாமல் அபராதம் செலுத்த வேண்டிவரும்.''
விகடன்
Re: வருமான வரி நோட்டீஸ்... தவிர்க்கும் வழிகள்!
நல்ல பகிர்வு சிவா அண்ணே.
இது எல்லாம் சாமானியர்களுக்கு மட்டும் தானே!
கோடிகளில் ஏய்க்கும் கேடிகளுக்கு ?
இது எல்லாம் சாமானியர்களுக்கு மட்டும் தானே!
கோடிகளில் ஏய்க்கும் கேடிகளுக்கு ?
ஈகரையன்- இளையநிலா
- பதிவுகள் : 376
இணைந்தது : 07/08/2013
Re: வருமான வரி நோட்டீஸ்... தவிர்க்கும் வழிகள்!
ஈகரையன் wrote:நல்ல பகிர்வு சிவா அண்ணே.
இது எல்லாம் சாமானியர்களுக்கு மட்டும் தானே!
கோடிகளில் ஏய்க்கும் கேடிகளுக்கு ?
கோடிகளில் புரளும் மனிதர்களுக்குத்தானே அரசாங்கமே செயல்படுகிறது! அவர்களுக்கு சட்ட விதிமுறைகள் என்று எதுவும் இல்லை!
Similar topics
» உடல் பருமனைத் தவிர்க்கும் வழிகள்
» நடைப்பயிற்சி - தவறுகளை தவிர்க்கும் வழிகள்!
» பத்திரப் பதிவு: மோசடியைத் தவிர்க்கும் வழிகள்!
» கோடை வெயில்: தாக்கும் நோய்கள் தவிர்க்கும் வழிகள்
» வன்முறை தவிர்க்கும் வழிமுறைகள்
» நடைப்பயிற்சி - தவறுகளை தவிர்க்கும் வழிகள்!
» பத்திரப் பதிவு: மோசடியைத் தவிர்க்கும் வழிகள்!
» கோடை வெயில்: தாக்கும் நோய்கள் தவிர்க்கும் வழிகள்
» வன்முறை தவிர்க்கும் வழிமுறைகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|