ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கோலி சோடா - விமர்சனம்

2 posters

Go down

 கோலி சோடா - விமர்சனம் Empty கோலி சோடா - விமர்சனம்

Post by சிவா Sat Feb 22, 2014 4:53 am

 கோலி சோடா - விமர்சனம் 27-goli-soda-1600

‘பசங்க’ படத்தில் நடித்த நான்கு சிறுவர்களை வைத்து, அதிரடியான ஒரு ‘ஆக்ஷன்’ படத்தை கொடுத்து இருக்கிறார், டைரக்டர் விஜய் மில்ட்டன்.

கோயம்பேடு மார்க்கெட்டில் வட்டிக்கு பணம் கொடுத்து தொழில் செய்பவர், நாயுடு. இவருடைய வலது கை மற்றும் அடியாள், மயில். மார்க்கெட்டில், காய்கறி மொத்த வியாபாரம் செய்பவர், ஆச்சி. இவரிடம், புள்ளி, சேட், சித்தப்பா, குட்டிமணி ஆகிய நான்கு அனாதை சிறுவர்களும் மூட்டை தூக்கி பிழைக்கிறார்கள். இவர்களிடம் நட்பாக வந்து சேருகிறாள், ஏ.டி.எம். என்கிற சுமார் மூஞ்சி குமாரி.

அந்த நான்கு அனாதை சிறுவர்கள் மீது அனுதாபம் கொண்ட ஆச்சி, அவர்களின் எதிர்காலத்துக்கு ஒரு வழி காட்டுவதற்காக, நாயுடுவிடம் போய் உதவி கேட்கிறார். நாயுடு தனது குடோனை அவர்களுக்கு இலவசமாக விட்டுக் கொடுக்கிறார். அந்த குடோனை நான்கு சிறுவர்களும் சேர்ந்து ஓட்டலாக மாற்றுகிறார்கள். வியாபாரம் சூடு பிடிக்கிறது.

ஓட்டல் லாபகரமாக நடந்து கொண்டிருக்கும் வேளையில், நாயுடுவின் வலது கை மயில் மூலம் சோதனை வருகிறது. சிறுவர்கள் கோவிலாக கருதும் ஓட்டலை மயில், தினமும் இரவில் ‘பார்’ ஆக மாற்றுவதுடன், ஒரு பெண்ணையும் உள்ளே கொண்டு வந்து கெடுத்து விடுகிறான்.

மயிலுக்கும், சிறுவர்களுக்கும் கைகலப்பு ஏற்படுகிறது. தனது அடியாள் மீது கை வைத்த சிறுவர்களை நாயுடு தீர்த்துக்கட்ட முயற்சிக்கிறார். அவரிடம் இருந்து அந்த சிறுவர்கள் தப்பினார்களா, இல்லையா? என்பது மீதி கதை.

சிறுவர்களுக்கும், இளைஞர்களுக்கும் இடைப்பட்ட விடலை பருவத்தில் புள்ளியாக கிஷோர், சேட்டாக ஸ்ரீராம், சித்தப்பாவாக பாண்டி, குட்டிமணியாக முருகேஷ் ஆகிய மூன்று பேரும் கதாபாத்திரங்களாகவே வாழ்ந்து இருக்கிறார்கள்.

யாமினியாக வரும் சாந்தினிக்கு, வசீகர முகம். நடிப்பிலும், முகத்திலும் முன்னணி கதாநாயகியாக வருவதற்கான தகுதிகள் உள்ளன.

எடுப்பான பல் வரிசை, சோடா பாட்டில் கண்ணாடி சகிதம் ‘ஏ.டி.எம்.’மாக வரும் புதுமுகம் சீதா, இன்னொரு கோவை சரளா. நகைச்சுவை வேடத்துக்கு சரியான தேர்வு.

‘ஆச்சி’ சுஜாதா, ‘மந்திரவாதி’ இமான் அண்ணாச்சி, ‘மயில்’ விஜயமுருகன், ‘நாயுடு’ மதுசூதன் ஆகியோரும் அந்தந்த கதாபாத்திரங்களாக மனதில் பதிகிறார்கள்.

நிமிர்ந்து உட்கார வைக்கும் விறுவிறுப்பான திரைக்கதைக்கு மேலும் வேகம் சேர்க்கிறது, அருணகிரியின் பின்னணி இசை.

ஊர்–பெயர் தெரியாத–எந்த அடையாளமும் இல்லாத நான்கு விடலை சிறுவர்களை நாயகர்களாக்கி, அவர்களின் வாழ்வியல் போராட்டங்களை மிக யதார்த்தமாகவும், அழுத்தமாகவும் சொல்லியிருக்கிறார், டைரக்டர் விஜய் மில்ட்டன். படத்தின் முன்பகுதி, சூப்பர் வேகம். நான்கு சிறுவர்களும் சேர்ந்து மறுபடியும் ஆச்சி மெஸ்சை தொடங்க முயற்சிக்கும் காட்சிகளில், வேக குறைவு.

கிஷோருக்கும், சாந்தினிக்கும் இடையேயான காதலும், அதை சொல்லியிருக்கும் விதமும், கவிதை. மயிலுடன் சிறுவர்கள் மோதுகிற முதல் சண்டை காட்சி, பதற்றத்தை ஏற்படுத்துகிறது. ‘‘நஷ்டத்தில் ஓடுகிற ஆவின் பாலை டோர் டெலிவரி செய்யும்போது, லாபத்தில் ஓடுகிற ‘சரக்கை’ ஏன் டோர் டெலிவரி செய்யக் கூடாது?’’ என்று இமான் அண்ணாச்சி போதையில் பேசுகிற (பாண்டிராஜ்) வசன காட்சிக்கு, தியேட்டரில் ஆரவாரம்.

படத்தின் முடிவு, கச்சிதம்

தினத்தந்தி
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

 கோலி சோடா - விமர்சனம் Empty Re: கோலி சோடா - விமர்சனம்

Post by சிவா Sat Feb 22, 2014 4:55 am

பெரிய நடிகர்கள், பிரமாண்ட பட்ஜெட் எதுவும் இல்லாமல் ஒரு கச்சிதமான படம் தந்திருக்கிறார்கள். கதையின் அடிப்படை சற்று பலவீனமாக இருந்தாலும், படத்தை உருவாக்கிய விதம், சீட்டோடு இறுக கட்டிப் போடுகிறது. கோயம்பேடு மார்க்கெட்டில் மூட்டை தூக்கி பிழைப்பு நடத்துபவர்கள் புள்ளி (கிஷோர்) சித்தப்பா (பாண்டி), குட்டிமணி (முருகேஷ் ), சேட்டு (ஸ்ரீராம்) ஆகிய நான்கு பெரிய சிறுவர்கள். கூடுதலாக சுஜாதாவின் உதவியுடன் ஆச்சி மெஸ் என்ற சிறு உணவகத்தை நடத்துகிறார்கள்.

கடைக்கு சொந்தக்காரரான நாயுடு மார்க்கெட்டிலேயே பெரிய தாதா. ஆறு மாதங்களுக்குப் பிறகு வாடகைப் பற்றி பேசிக் கொள்ளலாம் என்று சொல்லிவிடுகிறார். கோலி சோடா பட - விமர்சனம் தங்களுக்கான அடையாளமாக இந்த உணவகத்தை நினைக்கும் நால்வரும், அதை மிகவும் ஈடுபாட்டுடன் நடத்தி வருகிறார்கள். ஒரு நாள் இரவு நாயுடுவின் மச்சான் மயிலு உணவகத்துக்கு வந்து, இரவு முழுக்க குடித்து, நண்பர்களுடன் கூத்தடித்து, பஸ்ஸுக்கு காத்திருந்த ஒரு பெண்ணை ஏமாற்றி கூட்டி வந்து கற்பழித்து அராஜகத்தின் உச்சத்துக்கே போகிறான். இதையெல்லாம் பார்த்து கொந்தளிக்கும் நான்கு பையன்களும் மயிலுவை போட்டுத் தாக்கிவிடுகிறார்கள். நாயுடுவுக்கு இது கவுரவப் பிரச்சினையாகிவிட, நான்கு பையன்களையும் மீண்டும் மெஸ் எதிரில் வைத்து தாக்கினால்தான் தன் மரியாதை காப்பாற்றப்பட்டதாக அர்த்தம் என்று கூறி, தாக்க ஆளனுப்புகிறார்.

இந்த சண்டையில் மயிலு மற்றும் அவன் கூட்டாளிகளை கடுமையாகத் தாக்கிவிடுகிறார்கள் சிறுவர்கள். ஆத்திரமடைந்த நாயுடு, பையன்களை கடுமையாகத் தாக்கி, நால்வரையும் பிரித்து நான்கு வெவ்வேறு மாநிலங்களுக்கு அனுப்பிவிடுகிறார். இந்தப் பையன்கள் மீண்டும் ஒன்று சேர்ந்தார்களா.. தங்கள் அடையாளத்தை மீட்டார்களா என்பது சுவாரஸ்யமான க்ளைமாக்ஸ். படம் பார்க்க சுவாரஸ்யமாக இருந்தாலும் இரண்டு பெரிய மைனஸ்களைச் சொல்லித்தான் ஆக வேண்டும். ஒன்று என்னதான் இந்தப் பையன்கள் தங்களுக்கு அடையாளம் வேண்டும் என்று போராடினாலும், கடைக்கு உரிமையாளர் நாயுடுதானே. அவருக்கு சொந்தமான கடையில் போய் தங்கள் உரிமையை, அடையாளத்தைக் கேட்பது நியாயமில்லையே.

இரண்டாவது, பள்ளிக்கூடம் போகும் சிறுமிகளை கரெக்ட் பண்ணுவது, காதலிப்பது என வரும் காட்சிகள். இந்த இரண்டையும் தவிர்த்துப் பார்த்தால், கோலி சோடா நன்றாகத்தான் வந்திருக்கிறது. கிஷோர், பாண்டி, முருகேஷ், ஸ்ரீராம் ஆகிய நான்கு சிறுவர்களும் கோயம்பேட்டிலேயே புரண்டு எழுந்திருக்கிறார்கள். சண்டைக் காட்சிகளில் அத்தனை நிஜம் தெரிகிறது. சுஜாதாவின் மகளாக வரும் சாந்தினி, ஏடிஎம் பாத்திரத்தில் வரும் சீதா, ஆச்சியாக வரும் சுஜாதா ஆகியோர் கொஞ்சமும் மிகையில்லாத நடிப்பைத் தந்துள்ளனர். படத்தில் நகைச்சுவை இல்லாத குறையைப் போக்குபவர் இமான் அண்ணாச்சி. குறிப்பாக அந்த காவல் நிலைய காட்சி.

படத்தில் இரு பாத்திரங்கள் மிரள வைக்கின்றன. அத்தனை இயல்பான நடிப்பு. ஒருவர் நாயுடுவாக வரும் மதுசூதன். இன்னொருவர் மயிலாக வரும் ஆர்கே விஜய் முருகன். இருவருக்குமே இந்தப் படம் பெரிய திருப்பு முனையாக அமையும். அருண கிரியின் இசையில் பாடல்கள் பெரிதாக எடுபடவில்லை. ஆனால் சீலினின் பின்னணி இசை படத்தின் வேகத்தை காப்பாற்ற உதவுகிறது. பாண்டிராஜின் வசனத்துக்கு படத்தின் வெற்றியில் முக்கியப் பங்குண்டு!

கோயம்பேட்டை தத்ரூபமாகக் காட்டியிருக்கிறது விஜய் மில்டனின் கேமரா. அவரது திரைக்கதையும் காட்சிகளை சமரசமில்லாமல் எடுத்த விதமும் படத்தை வெற்றிக் கோட்டைத் தொட வைத்துள்ளன.

தட்ஸ்தமிழ்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

 கோலி சோடா - விமர்சனம் Empty Re: கோலி சோடா - விமர்சனம்

Post by சிவா Sat Feb 22, 2014 4:55 am

தினமலர் விமர்சனம்

தங்களுக்கென தனியாக அடையாளம் வேண்டுமென போராடும், வாலிபத்தை எட்டிப் பிடிக்கத் துடிக்கும் நான்கு சிறுவர்களுக்கும், அவர்களுக்கான அடையாளத்தையும் சிதைத்து அவர்களை அடக்கி ஆளவும் நினைக்கும் பணபலமும், படை பலமும் நிரம்பிய ஒரு பெரிய மனிதரது ஆட்களுக்குமிடையே நடக்கும் மோதலும், கிடைக்கும் நல்ல தீர்வும் தான் கோலி சோடா படத்தின் மொத்த கதையும்!

அதாகப்பட்டது ஆசியாவிலேயே பெரிய காய்கறி மார்க்கெட்டான கோயம்பேடு வணிகவளாகத்தில் மூட்டை தூக்கி பிழைப்பு நடத்துகின்றனர் புள்ளி - கிஷோர், சித்தப்பா - பாண்டி, குட்டிமணி - முருகேஷ், சேட்டு - ஸ்ரீராம் ஆகிய நான்கு அநாதை சிறுவர்கள். காலம் முழுவதும் இப்படியே மூட்டை தூக்கி அடுத்த வேளை சோற்றுக்கு பிறர் கையை எதிர்பார்த்தே வாழப் போகிறீர்களா? அல்லது உங்களுக்கென ஒரு அடையாளத்தை ஏற்படுத்திக் கொள்ளும் வகையில் ஏதாவது தொழில் செய்து பெரிய மனுஷர்களாக மாறப்போகிறீர்களா? என அவர்களை உசுப்பேற்றி விடுகின்றது சுற்றமும், சூழ்நிலையும். குறிப்பாக இந்த 4 சிறுவர்களின் முதலாளியம்மாவும், காய்கறி மொத்த விற்பனையாளருமான ஆச்சி - சுஜாதா. இவர்களை உசுப்பேற்றுவதோடு நிறுத்திக் கொள்ளாமல் 4 பேரையும் கோயம்பேடு மார்க்கெட்டின் பெரிய மனிதர் நாயுடு அண்ணாச்சி முன் கொண்டு நிறுத்தி, அவர்களுக்கென ஒரு கடையையும் பிடித்து, அதில் ஒரு உணவு விடுதியையும் ஆரம்பித்து கொடுக்கிறார். ஆரம்பத்தில் பிஸினஸூம் ஆஹா, ஓஹோ என அமர்க்களப்படுகிறது.

ஆச்சிமெஸ் பசங்க எனும் அடையாளத்தோடு வளைய வர ஆரம்பிக்கும் நால்வரும் மகிழ்வு நிலையில் இருக்கும்போது, அவர்களது கடையை நாயுடுவின் ஆட்கள் தங்களது செகண்ட் பிஸினஸூக்கும், குடி, குட்டி உள்ளிட்ட சின்ன புத்தி செயல்களுக்கும் யூஸ் பண்ணுவது கண்டு வெகுண்டெழும் நால்வரும், நாயுடுவின் ஆட்களுடன் மோதலில் இறங்குகின்றனர். இதனால் அவர்கள் படும்பாடும், கொடுக்கும் பதிலடியும்தான் கோலி சோடா. இந்த கதையினூடே புள்ளி-கிஷோர், யாமெனி-சாந்தினி மற்றும் சித்தப்பா-பாண்டி, ஏடிஎம்-ஸ்ரீநிதியின் இன்பாட்சுவேஷன் காதலையும் கலந்துகட்டி கலர்புலாக கதை சொல்லி இருக்கிறார் இப்பட இயக்குநரும், ஒளிப்பதிவாளருமான எஸ்.டி.விஜய் மில்டன்.

கிஷோர், பாண்டி, முருகேஷ், ஸ்ரீராம் உள்ளிட்ட நான்கு சிறுவர்களும் நச் என்று நடித்திருக்கின்றனர். மீசை முளைக்க ஆரம்பிக்காத வயதில் அவர்களுக்கு கிளம்பும் அடையாள ஆசையையும், ஆண்-பெண் ஆசையையும் அழகாக வெளிப்படுத்தியிருக்கின்றனர் நால்வரும் பேஷ், பேஷ்!

சாந்தினி - யாமெனி, ஏடிஎம் - ஸ்ரீநிதி, ஆச்சி - சுஜாதா, நாயுடுவின் மனைவிகள் மீனாள் சகோதரிகள் உள்ளிட்ட அனைவரும் பாத்திரத்திற்கேற்ற பளிச் தேர்வு!

சிறுவர்களுக்கு உதவும் மந்திராவாதி(சும்மா பெயரில் மட்டும் தான்...) - இமான் அண்ணாச்சி, கோயம்போடு மார்க்கெட்டையே தன் கட்டுக்குள் வைத்திருக்கும் நாயுடு - மது, அவரது மைத்துனர் மயிலாக வரும் ஆர்.கே., விஜய் முருகன் (இவர் இப்படத்தின் கலை இயக்குநராகவும் பட்டையை கிளப்பி இருப்பது குறிப்பிடத்தக்கது...) உள்ளிட்ட ஒவ்வொரு பாத்திரமும் கோயம்பேடு வாசிகளாகவே கோலோச்சி இருப்பது கோலி சோடாவின் பெரும் பலம்!

அதிலும் ரவுண்டு ரவுண்டாக புகைவிட்டு போதையில் போலீஸ் ஸ்டேஷனில் ஆவின்பால் நஷ்டத்தில் ஓடுது, அதை வீடு வீடாக சப்ளை பண்றீங்க, டாஸ்மாக் லாபத்துல ஓடுது, அங்க குடிச்சுட்டு டூ-வீலர்ல வந்தா அவனை அரெஸ்ட் பண்றீங்க... என சகட்டு மேனிக்கு தத்துவமாக பொரிந்து தள்ளும் மந்திரவாதி - இமான் அண்ணாச்சி, தான் வரும் காட்சிகளில் தியேட்டரை அதிர வைக்கிறார். இமான் அண்ணாச்சி பேசும் இந்த வசனங்களில் தொடங்கி, திருப்பி அடிக்க நாங்க பெரிய பசங்களும் இல்லை... பயந்து ஓடுவதற்கு நாங்க சின்ன பசங்களும் இல்லை... என அந்த சிறுவர்கள் பேசும் ஒவ்வொரு டயலாக்கும் தியேட்டரில் கைதட்டலையும், விசில் சப்தங்களையும் அள்ளுகிறது. காரணம் வசனகர்த்தா இயக்குநர் பாண்டிராஜ்! வாவ்!!

4 சிறுவர்களும் பசங்க படத்தை ஞாபகப்படுத்துவது மாதிரி நடித்திருப்பது, யதார்த்தமான கதையை யதார்த்தமாக முடிக்காமல், டிராமாவாக, சினிமாவாக... முடித்திருப்பது உள்ளிட்ட ஒருசில குறைகள் இருந்தாலும் எஸ்.என்.அருணகிரியின் இசைபலம், பாண்டிராஜின் வசனபலம், ஆண்டனியின் படத்தொகுப்பு பலம் உள்ளிட்ட சிறப்புகளோடு விஜய் மில்டனின் சிறந்த ஒளிப்பதிவு மற்றும் இயக்கத்தில், கோலி சோடா - பன்னீர் சோடாவாக இனிக்கிறது!!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

 கோலி சோடா - விமர்சனம் Empty Re: கோலி சோடா - விமர்சனம்

Post by சிவா Sat Feb 22, 2014 4:56 am

கல்கி திரை விமர்சனம்

ஒளிப்பதிவாளரும், இயக்குனருமான விஜய் மில்டனுக்கு அடையாளம் சொல்லும் படமாக வந்திருக்கிறது "கோலி சோடா. கோயம்பேடு மார்க்கெட்டில் துள்ளி திரியும் இளங்கன்றுகளாக புள்ளி (கிஷோர்), சேட்டு (ஸ்ரீராம்), சித்தப்பா (பாண்டி), குட்டிமணி (முருகேஷ்) ஆகிய நால்வரும் யாரும் இல்லாத அனாதைகள். அவர்களின் ஒரே ஆதரவு ஆச்சியாக வரும் சுஜாதான். அவர்களின் அன்றாடப் பிழைப்பு மூட்டைத் தூக்கி, அதில் வரும் வருமானத்தில் வாழ்வது. ஆச்சியின் வழிகாட்டுதல் பேரில் நான்கு பேரும் மார்க்கெட்டில் நியாயமான தொழில் செய்யும் நல்ல மனம் கொண்ட அண்ணாச்சியிடம் ஓட்டல் நடத்த இடம் கேட்க, அண்ணாச்சி பெருந்தன்மையோடு வாடகையே வேண்டாம் என இடம் தருகிறார். இவர்களுக்கிடையில் வில்லனாக ஆர்ட் இயக்குநர் விஜய் முருகன் (மயிலு) வர, கதை ஜிவ் என சூடு கிளம்புகிறது.

ஓட்டல் நடத்தும் இடத்தில் மயிலுவின் மது, விபச்சாரம் விஷயங்களைத் தட்டிக் கேட்க நால்வரும் மயிலு ஆட்களால் துவம்சம் செய்ய, மயிலுவை நால்வரும் தாக்க, நல்லவரான அண்ணாச்சி தன் மச்சினன் மயிலு அடி வாங்கினால் மார்க்கெட்டில் தமது கௌரவம் பாதிக்கப்படும் என களத்தில் இறங்குகிறார். முடிவில் ஜெயித்தது 4 சிறுவர்களா? அண்ணாச்சியா என்பதே கதை.

"பசங்க படத்தில் நடித்த நான்கு பேரும் என்னமா நடிப்பில் கலக்கியுள்ளனர்? பாண்டியராஜின் வசனம் படத்துக்குப்
பலம், வித்தியாசமான கதை களம் ஒளிப்பதிவு, இயக்கம் என விஜய்மில்டன் அற்புதமாக ஸ்கோர் பண்ணியுள்ளார்.

கோலி சோடா தமிழ் சினிமாவின் நம்பிக்கை அடையாளம்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

 கோலி சோடா - விமர்சனம் Empty Re: கோலி சோடா - விமர்சனம்

Post by ayyasamy ram Sat Feb 22, 2014 6:41 am

விமரிசனங்கள்....  கோலி சோடா - விமர்சனம் 3838410834 
-
கோலி சோடா' படத்தில் நடனமாடியதற்கு,
மீதிப்பணத்தினை தரவில்லை என்று
பவர் ஸ்டார் சீனிவாசன் தெரிவித்துள்ளார்...!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84138
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

 கோலி சோடா - விமர்சனம் Empty Re: கோலி சோடா - விமர்சனம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum