Latest topics
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...by ayyasamy ram Today at 12:54
» கருத்துப்படம் 05/11/2024
by mohamed nizamudeen Today at 12:12
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 11:02
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 7:07
» செவ்வாழைப் பணியாரம்:
by ayyasamy ram Today at 6:56
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Today at 6:54
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:09
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 0:56
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 0:43
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 23:42
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:14
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 22:45
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Yesterday at 22:29
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 22:22
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 21:30
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Yesterday at 21:24
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Yesterday at 21:21
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Yesterday at 21:20
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Yesterday at 21:19
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Yesterday at 21:19
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Yesterday at 21:18
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Yesterday at 21:18
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Yesterday at 21:16
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 21:09
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:54
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:33
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 18:31
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:08
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 16:23
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Yesterday at 13:02
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 12:57
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Yesterday at 11:16
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Yesterday at 11:16
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Yesterday at 11:15
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Yesterday at 11:14
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon 4 Nov 2024 - 13:37
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon 4 Nov 2024 - 11:31
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon 4 Nov 2024 - 11:25
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon 4 Nov 2024 - 11:23
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon 4 Nov 2024 - 11:21
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:30
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:28
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:26
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:24
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:22
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:21
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:20
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:19
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:17
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:14
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
mohamed nizamudeen | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
nahoor | ||||
kavithasankar | ||||
prajai |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Shivanya | ||||
nahoor | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சந்தைக்கடையாக மாறிவிட்ட சட்டசபைகள்; ஜனநாயகத்திற்கு பெரும் சவால்
Page 1 of 1
சந்தைக்கடையாக மாறிவிட்ட சட்டசபைகள்; ஜனநாயகத்திற்கு பெரும் சவால்
புதுடில்லி : உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் இன்று ராஜ்யசபா, உ.பி., மற்றும் காஷ்மீர் சட்டசபைகளில் மக்கள் பிரதிநிதிகள் நடந்து கொண்ட விதம், இந்தியாவிற்கு பெரும் தலைகுனிவை ஏற்படுத்தும் விதமாக உள்ளது. தெலுங்கானா விவகாரம் தொடர்பாக ராஜ்யசபாவில், ராஜ்யசபா பொது செயலாளர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதே போன்று உ.பி., சட்டசபையில் எம்.எல்.ஏ.,க்கள் 2 பேர் சட்டை அணியாமல் சட்டசபைக்குள் வந்து போராட்டம் நடத்தினர். காஷ்மீர் சட்டசபையில் ஆளும் கட்சி உறுப்பினர்களுக்கும், எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கும் இடையே நடைபெற்ற மோதலில் ஒருவரை ஒருவர் மாறி மாறி அடித்துக் கொண்டனர். சட்டசபையின் மார்ஷலை தாக்கிய எம்.எல்.ஏ., மன்னிப்பு கேட்க மறுத்துவிட்டார். ஒரே நாளில் நடைபெற்றுள்ள இந்த 3 சம்பவங்களால் மக்கள் பிரதிநிதிகளின் செயல்பாடுகள், இந்திய பார்லிமென்ட் ஜனநாயகத்திற்கு பெரும் சவாலை ஏற்படுத்தி உள்ளது.
ராஜ்யசபாவில் கடும் வாக்குவாதம் :
லோக்சபாவில் தெலுங்கானா மசோதா நிறைவேறியதை அடுத்து இன்று ராஜ்யசபாவில் அது தாக்கலானது. முன்னதாக தெலுங்கானா மசோதா தாக்கலானதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திர முதல்வர் கிரண்குமார் ரெட்டி உள்ளிட்ட 50 காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் பதவியை ராஜினாமா செய்ததுடன் கட்சியில் இருந்தும் விலகினர். இந்நிலையில் இன்று ராஜ்யசபா கூடியதும், நேற்று லோக்சபா டிவி ஒளிபரப்பு நிறுத்தப்பட்டது தொடர்பாக அரசு விளக்கம் தெரிவிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டனர். அப்போது தெலுங்கானா மசோதாவை ராஜ்யசபா பொதுச் செயலாளர் வாசித்தார். அவர் மசோதாவை படிக்க விடாமல், தெலுங்கு தேச கட்சி எம்.பி., ஒருவர் மசோதா பேப்பரை பறிக்க முயன்றார். இதில் ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் பொதுசெயலாளரின் முகத்தில், எம்.பி., குத்தினார். இதனால், அவை ஒத்திவைக்கப்பட்டது. பகல் 2 மணிக்கு மீண்டும் அவை துவங்கிய போதும் மோதல் தொடர்ந்தது. மத்திய அமைச்சர்கள் சிலரே துணை தலைவர் முன் நின்று கூச்சலிட்டனர்.
இதையடுத்து, சபையை அமைதிப்படுத்திவிட்டு, அதன் பின்னர் கூட்டத்தை நடத்துங்கள் என, துணை தலைவரை பா.ஜ.,வைச் சேர்ந்த வெங்கயநாயுடு கேட்டுக் கொண்டார். இதையடுத்து, வெங்கையநாயுடுவுடன் ரகளை எம்.பி.,க்கள் வாக்குவாதம் செய்தனர். இந்நிலையில், துணைத் தலைவரால், தன் முன் கோஷமிட்டுக் கொண்டிருந்தவர்களை அமைதிப்படுத்த முடியவில்லை. இதனால் ஆவேசம் அடைந்த அவை துணை தலைவர் குரியன், மக்களவை அமைச்சர்கள் இங்கு இருக்க கூடாது. உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால், பதவியை ராஜினாமா செய்துவிட்டு, வெளியேறுங்கள் என்றார். அப்போது, துணைத் தலைவரை ராஜினாமா செய்யும்படி கூறி, சில அமைச்சர்கள் கோஷமிட்டனர். இதனால், நேற்று பலமுறை ராஜ்யசபா ஒத்திவைக்கப்பட்டது. கடந்த வாரம் லோக்சபாவில், எம்.பி., ஒருவர் மிளகுபொடி தூவி ரகளையில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.
சட்டையின்றி வந்த எம்.எல்.ஏ.,க்கள் :
உ.பி.,யில் ராஷ்டிரிய லோக் தள் கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏ.,க்களான சுரேஷ் சர்மாவும், வீர் பால் ரதியும் இன்று சட்டசபைக்கு சட்டடையின்றி வந்தனர். சட்டசபை கூட்டத்தில் கவர்னர் உரையாற்றிக் கொண்டிருந்த போது எம்.எல்.ஏ.,க்கள் இரண்டு பேரும் மேஜை மீது ஏறி நின்று முதல்வர் அகிலேஷ் அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். கரும்பு விவசாயிகள் கோரிக்கையை வலியுறுத்தி இவர்கள் போராட்டம் நடத்தினர். இதே கோரிக்கையை வலியுறுத்தி பகுஜன் சமாஜ் கட்சியை சேர்ந்த உறுப்பினர்ளும் முழக்கமிட்டதால் சட்டசபையில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. இதனால் வெறுத்துப் போன கவர்னர், தனது உரையை பாதியிலேயே நிறுத்தி விட்டு, அவையில் இருந்து வெளியேறினார்.
உறுப்பினர்களுக்கு அடி உதை :
பெண் டாக்டரை பாலியல் பலாத்காரம் செய்த விவாகாரம் தொடர்பாக பதவியிழந்த காஷ்மீர் முன்னாள் அமைச்சர் சபீர்கான் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஜனநாயக மக்கள் கட்சி உறுப்பினர் சையது பசீர் அகமது, முதல்வர் உமர் அப்துல்லாவிடம் சட்டசபையில் கேள்வி எழுப்பினார். மேலும் சில விவகாரங்கள் தொடர்பாகவும், சபீர் கானுக்கு காஷ்மீர் ஐகோர்ட் ஜாமின் வழங்கியது தொடர்பாகவும் சட்டசபையில் சலசலப்பு ஏற்பட்டது. அவைக்கு இடையூறு செய்யும் உறுப்பினர்களை வெளியேற்ற சபாநாயகர் உத்தரவிட்டதை அடுத்து காவலர்கள் அவர்களை வெளியேற்ற முயற்சித்தனர். இதில் ஜனநாயக மக்கள் கட்சி உறுப்பினர் சையது பசீர் அகமது, பாதுகாப்பு அதிகாரி ஒருவரை 3 முறை அறைந்தார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. தன் செயலுக்கு பாதுகாப்பு அதிகாரியிடம் மன்னிப்பு கேட்கவும் சையது பசீர் மறுத்துள்ளார். தொடர்ந்து நடக்கும் இதுபோன்ற சம்பவங்கள், பார்லிமென்ட் ஜனநாயகம் மீது மக்களுக்கு நம்பிக்கை குறைவை ஏற்படுத்தி உள்ளது.
மாநகராட்சி கூட்டத்தில் செருப்பு வீச்சு :
சென்னை மாநகராட்சி கூட்டத்தில் இன்று பட்ஜெட் உரை வசிக்கப்பட்டது. இதில் அம்மா உணவகம் போன்று அம்மா தியேட்டர், அம்மா சந்தை உள்ளிட்டவைகள் அமைக்க நிதி ஒதுக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த திமுக உறுப்பினர்கள் பட்ஜெட் உரையை கிழித்து எறிந்தனர். இதனால் ஆத்திரமடைந்த அதிமுக உறுப்பினர் ஒருவர், திமுக உறுப்பினர்கள் மீது செருப்பை எடுத்து எறிந்தார். இது தொடர்பாக இருதரப்பினருக்குமிடையே மோதல் முற்றியது. இதனால் மாநகராட்சி கூட்டம் அரங்கே போர்க்களம் போல் காட்சி அளித்தது.
பார்லி., அவை துவங்கி, மாநில சட்டசபை, மாநகராட்சி கூட்டம் வரை மக்கள் பிரதிநிதிகள் அனைவரும் அராஜக போக்கில் ஈடுபட்டு வருவது வழக்கமாகி வருகிறது. ஜனநாயகம் காக்கப்பட வேண்டிய இடங்களில், அது நசுக்கப்பட்டு வருகிறது. இது ஜனநாயக முறையையே கேள்விக் குறியாக்கி உள்ளது.
தினமலர்

Similar topics
» கொள்ளை கும்பலாக மாறிவிட்ட கருணாநிதி
» 'கூட்டுறவு வங்கி அவசர சட்டம் ஜனநாயகத்திற்கு விரோதமானது'
» ஜனநாயகத்திற்கு வெற்றி, விடுவிக்கப்பட்ட அம்பிகாவும் ஹாடியும் கூறினர்
» ஒபாமாவுக்கு சவால்
» சொன்னவர் யார் என்று கண்டுபிடியுங்கள் - சவால் -66

Permissions in this forum:
You cannot reply to topics in this forum