புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:45 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:00 pm

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Today at 11:57 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Today at 11:30 am

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Today at 11:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Today at 10:22 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Today at 10:21 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Today at 10:19 am

» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Today at 9:32 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 2:50 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 2:34 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:21 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 2:04 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:20 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:12 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:59 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:42 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 12:25 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 12:00 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 11:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:23 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:41 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:21 pm

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Yesterday at 6:41 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Yesterday at 3:15 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Yesterday at 3:04 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 1:13 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 12:09 am

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 12:02 am

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:23 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:07 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:06 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:05 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:04 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:03 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:03 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:02 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:01 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:00 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:59 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:56 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:55 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:53 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:43 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Sun Jun 23, 2024 4:03 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 2:44 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
உறக்கம் Poll_c10உறக்கம் Poll_m10உறக்கம் Poll_c10 
20 Posts - 45%
ayyasamy ram
உறக்கம் Poll_c10உறக்கம் Poll_m10உறக்கம் Poll_c10 
17 Posts - 39%
Dr.S.Soundarapandian
உறக்கம் Poll_c10உறக்கம் Poll_m10உறக்கம் Poll_c10 
2 Posts - 5%
T.N.Balasubramanian
உறக்கம் Poll_c10உறக்கம் Poll_m10உறக்கம் Poll_c10 
1 Post - 2%
Balaurushya
உறக்கம் Poll_c10உறக்கம் Poll_m10உறக்கம் Poll_c10 
1 Post - 2%
prajai
உறக்கம் Poll_c10உறக்கம் Poll_m10உறக்கம் Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
உறக்கம் Poll_c10உறக்கம் Poll_m10உறக்கம் Poll_c10 
1 Post - 2%
Ammu Swarnalatha
உறக்கம் Poll_c10உறக்கம் Poll_m10உறக்கம் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உறக்கம் Poll_c10உறக்கம் Poll_m10உறக்கம் Poll_c10 
383 Posts - 49%
heezulia
உறக்கம் Poll_c10உறக்கம் Poll_m10உறக்கம் Poll_c10 
256 Posts - 32%
Dr.S.Soundarapandian
உறக்கம் Poll_c10உறக்கம் Poll_m10உறக்கம் Poll_c10 
72 Posts - 9%
T.N.Balasubramanian
உறக்கம் Poll_c10உறக்கம் Poll_m10உறக்கம் Poll_c10 
30 Posts - 4%
mohamed nizamudeen
உறக்கம் Poll_c10உறக்கம் Poll_m10உறக்கம் Poll_c10 
26 Posts - 3%
prajai
உறக்கம் Poll_c10உறக்கம் Poll_m10உறக்கம் Poll_c10 
7 Posts - 1%
sugumaran
உறக்கம் Poll_c10உறக்கம் Poll_m10உறக்கம் Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
உறக்கம் Poll_c10உறக்கம் Poll_m10உறக்கம் Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel
உறக்கம் Poll_c10உறக்கம் Poll_m10உறக்கம் Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha
உறக்கம் Poll_c10உறக்கம் Poll_m10உறக்கம் Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உறக்கம்


   
   

Page 1 of 2 1, 2  Next

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Tue Feb 04, 2014 7:34 pm

உடல் நலத்தையும்,
உடலையும் இணைக்கும் ஒரு
தங்கச் சங்கிலிதான் உறக்கம்.
-தாமஸ் டெக்கர் (கி.பி. 1577 1632)

உறக்கம் ஒரு சுகமே. இது ஒரு மருந்தும் கூட. பலவித உடல் நோய்கள் மற்றும் மனச்சோர்வுகள் ஒரு நல்ல உறக்கத்தில் மறைந்து விடுகின்றன. எடுத்துக்காட்டாக, ஒரு நல்ல தூக்கத்திற்குப் பிறகு ஒற்றைத் தலைவலி (Migrine Headache) இல்லாமல் போய்விடுகிறது. பலருக்கு மனக்கவலை நிமித்தம் தூக்கம் வருவதில்லை. தூக்கம் இல்லை என்றநிலையை விட பெரிய அவதி ஏதுமில்லை.

மாத்திரை சாப்பிட்டால்தான் தூக்கம் என்றநிலை சிலருக்கு. ஆனால் உடற்பயிற்சி செய்தவர்களுக்குக் கண் மூடியதும் தூக்கம் வருகிறது. உடற்பயிற்சி என்பது ஒர் இயற்கை தூக்க மாத்திரை என்பதில் சந்தேகமில்லை.

வீட்டுக்காரர் நன்றாகத் தூங்கும்போது தான் திருடன் நிதானமாக வீட்டை உடைத்து பொருட்களை திருடிச் செல்கிறான. ஒரு சத்தம் கூட கேட்கவில்லையே, எப்படி பூட்டை உடைத்தான் என்று வீட்டுக்காரர் ஆச்சரியப் படுவார். சத்தம் கேட்டது, ஆனாலும் பொருட் படுத்தாமல் தொடர்ந்து தூங்கினோம் என்கிறார்கள் சிலர். தூக்கத்தின் தேவையை விளக்க இதைவிட நல்ல உதாரணம் சொல்ல முடியாது.




M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Tue Feb 04, 2014 7:35 pm

சென்னையைப் போன்ற மாநகரங்களில் உயர் போலீஸ் அதிகாரிகள் கூட வாரம் ஒரு முறைஇரவு ரோந்து செல்ல வேண்டும். அதிகாலைஒரு மணிக்கு எல்லாம்தூக்கம் சொக்கும். எப்படியும் தூங்கிவிட வேண்டும் என்ற எண்ணம் தோன்றும். ஆனால், கடமை தடுக்கும். மனப் போராட்டம் தொடர்ந்து நீடிக்கும். பணியில் இருக்கும் சில காவலர்கள் கூட ஆங்காங்கே அப்படியே உட்கார்ந்து தூங்குவதையும் பார்த்திருக்கிறேன். வேலை போனாலும் பரவாயில்லை என்று அவர்கள் தூங்குகிறார்கள்! அவர்களைக் கூட கடுமையாக விமர்சிக்க முடியாது. ஏனெனில் காவலர்கள் இரண்டு நாட்களுக்கு ஒருமுறைஇரவு ரோந்து பணி என்று தூங்காமல் இருக்க வேண்டியிருக்கிறது.
இரவில் வாகனம் ஓட்டுபவர்களுக்கும் தூக்கத்தின் அருமை நன்கு தெரியும் அதிகாலை யில் தூக்கம் தானாக வரும். ஒரு சில நேரங்களில் எவ்வளவோ போராடியும் இறுதியில் முடியாமல தூங்கிவிடுவார்கள். விபத்து நேரிட்டு மரணமே ஏற்படும் என்று தெரிந்தும் தூங்கிவிடுவார்கள். அதிகாலையில் தேசிய நெடுஞ்சாலைகளில் பெரும்பாலான விபத்துக்கள் இப்படித்தான் நடக்கின்றன.
தூக்கத்தின் பெருமையை நான் நன்கு தெரிந்து கொண்டுள்ளேன். தமிழ்நாடு, கேரளா, எல்லையில் கொடைக்கானல் மலைத்தொடரில் கேரள இளைஞர்கள் எட்டு மாதங்கள் முகாமிட்டு கஞ்சா பயிரிடுவார்கள். பின்னர் கோடை காலங்களில் அறுவடை செய்து உலர்ந்த கஞ்சாவினை எடுத்துச்செல்வார்கள். கேரளா விற்குத் திரும்பிச் சென்று ‘செட்டில்’ ஆகிவிடு வார்கள். கஞ்சா பயிரிட வரும் இளைஞர்களை நான் பிடிக்கச் சென்றபோது பலமுறை துப்பாக்கிச் சண்டையும் நடந்துள்ளது. ஒரு வேட்டையின் போது முத்தையா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற ஒரு வினோத கஞ்சாத் திருடனும் பிடிபட்டான். அதாவது கஞ்சா பயிரிடும் குற்றவாளிகளிடமிருந்து கஞ்சாவைத் திருடும் ஆபத்தான திருடன் இவன். விளைவித்த கஞ்சாவை உலர்த்தி, பதப்படுத்தும் கேரள கஞ்சா குற்றவாளிகள் துப்பாக்கியுடன் காவல் இருப்பார்கள். அந்தச் சூழ்நிலையில் அங்கு ஒரு மலையில் முகாமிட்டிருக்கும் இந்தத் திருடன் மெதுவாக முன்னேறி அதிகாலை இரண்டு மணிக்கு கஞ்சா வைத்திருக்கும் இடத்திற்கு வருவான். எப்படிப்பட்ட துப்பாக்கி ஏந்திய கில்லாடியாக இருந்தாலும் அதிகாலை 2 மணிக்கும் 4 மணிக்கும் இடையே தூங்கிவிடு வானாம். அதைப் பயன்படுத்தி இந்தத் திருடன் முதலில் துப்பாக்கியை மெதுவாக அகற்றி விடுவான். பின்னர் மீண்டும் பதுங்கிச் சென்று கஞ்சா மூட்டையை எடுத்து வருவானாம்! அதிகாலை 2 மணிக்கு தூங்காத எந்த துப்பாக்கி வைத்த காவலாளியையும் பார்த்ததில்லை என்று என்னிடம் கூறினான், திருடனுக்குத் திருடன் முத்தையா!
வீரப்பன் வேட்டையில் ஈடுபட்டிருக்கும் போது கூட இரவு நேரங்களில் அனைவரும் விழித்திருக்க வேண்டும். தூங்கி விட்டால் வீரப்பன் கும்பல் எங்களை சுட்டுக் கொல்ல நேரிடும். இருப்பினும் அனைவரும் விழித் திருப்பது என்பது முடியாது. பத்து பேர் அடங்கிய குழுவில் மூன்று பேரை மட்டும் காவலுக்கு (Guard) நிறுத்தத் தூங்குவோம். இருந்தாலும் சில காவலர்கள் தூங்கிவிடுவார்கள். உயிரே போனாலும் பரவாயில்லை தூக்கம்தான் வேண்டும் என்று உடல் சொல்லும் போது அதைக் கேட்டுத்தானே ஆக வேண்டும்! உயிரினும் மேலான ஒன்று உண்டு என்றால் அதுதான் தூக்கம்.
உடலின் இயல்பான இயக்கத்தில் ஓய்வு எவ்வளவு இன்றியமையாதது என்பது இதிலிருந்து புரியும். நாளின் மூன்றில் ஒரு பகுதி நேரம் உடலுக்கு ஓய்வு வேண்டும். இவ்வளவு தேவையுள்ள தூக்கம் இல்லையென்றால் விளைவுகள் எப்படி கடுமையாக இருக்கும் என்பது நமக்குச் சொல்லாமல் புரிந்துவிடும்.




M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Tue Feb 04, 2014 7:36 pm

தூக்கம் ஓர் உயிரியல் தேவை
நமது நரம்பு மண்டலம் சரியாக வேலை செய்வதற்கு ஆழ்ந்த உறக்கம் உதவுகிறது என்று வல்லுநர்கள் நம்புகிறார்கள். ஆழ்ந்த உறக்கத்தின் போதுதான் செல் வளர்ச்சிக்குத் தேவைப்படும் புரதத்தை நமது உடல் தயார் செய்கிறது. உணர்ச்சிகளையும் மற்றவர்களோடு உறவாடும் நடவடிக்கைகளையும் மூளையில் கட்டுப் படுத்தும் பகுதிக்கு நல்ல ஓய்வு கிடைப்பதால் விழிக்கும் போது புத்துணர்ச்சி கிடைக்கிறது. மாணவர்களைப் பொறுத்த வரை படித்து முடித்தபின் தூங்கிவிட்டால் அது புதியதாகப் படித்த தகவல்களை நினைவில் வைக்க உதவியாக இருக்கும். படித்தவுடன் தூங்காத மாணவர்கள் தூங்கிய மாணவர்களைவிட 30 சதவிகிதம் குறைவாகவே பாடங்களை நினைவில் வைத்துக் கொள்ள முடிந்திருக்கிறது என்று கனடாவில் நடத்திய ஆய்வில் கண்டறியப்பட்டிருக்கிறது.
சரியான தூக்கம் இல்லாதவர்களுக்கு மிகப் பெரிய உடல் பாதிப்பு ஏற்படுகிறது. நெஞ்சுவலி, கால்மூட்டுவலி, மனச் சோர்வு, தினசரிக் கடமைகளைச் செய்ய இயலாமை போன்ற உடல்நலக் குறைவுகளுக்கு இவர்கள் ஆளாகிறார்கள் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.

தூக்கமின்மையின் காரணங்கள்
தூக்கம் வராமலிருப்பதற்குப் பல மருத்துவக் காரணங்கள் உள்ளன. அவையாவன,
அ) ஆண்களுக்கு பிராஸ்ரேட் சுரப்பி பெரியதாகிப் போனால் அடிக்கடி குளியலறைக்குச் செல்ல வேண்டியிருக்கும்.
ஆ) நெஞ்செரிச்சல் அல்லது நெஞ்சுவலி
இ) மூட்டு வலி.
ஈ) புற்று நோய்
உ) பார்க்கினஸன் நோய்
ஊ) டிமன்சியா என்றமறதி நோய்
எ) மனநிலைப் பாதிப்பு
தொடர்ந்து ஒரு மாதம் உறங்கமுடிய வில்லை என்றால் உடனடியாக ஒரு மருத்துவரை அணுகி சிகிச்சைப் பெறவேண்டும்.
போதுமான தூக்கம் பெற வழிகள்
ஏமாற்றத்திற்கும், நம்பிக்கைக்கும் ஒரு பாலம் உண்டு என்றால் அது ஒரு முழுத் தூக்கமேயன்றி வேறில்லை. ஆனால், சிலருக்குப் படுத்தால் தூக்கம் வராது. எவ்வளவுதான் புரண்டுப் படுத்தாலும், சில மணி நேரங்கள் ஆனாலும் தூக்கம் வராது. எழுந்திருந்து குளியலறைக்குச் சென்று திரும்பினாலும் கூட தூக்கம் வராது. தூக்கம் வராத வேளையில் எரிச்சலும், களைப்பும் ஏமாற்றமும் ஏற்படுகிறது.



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Tue Feb 04, 2014 7:37 pm

நல்ல உறக்கம் கைகூட சில யோசனைகள்
1. இரவில் 10 மணிக்கு மேல் எந்த வேலையாக இருந்தாலும் அதைத் தவிர்த்து விட வேண்டும். இரவுக் காட்சி சினிமாவுக்குப் போவதை முற்றிலும் புறக்கணிக்க வேண்டும்.
2. தூக்கத்தைக் கெடுக்கும் சிகரெட், புகையிலை, மது போன்றபழக்கங்களைக் கைவிட்டு விட வேண்டும்.
3. அலுவல் காரணமாக தூங்க முடியாமல் போனால் பணிமுடிந்து காலையில் வீட்டுக்கு வந்தவுடன் தூங்கிவிடுதல் வேண்டும். பகலில் தூங்க முடியவில்லையெனில் அன்றிரவு 8 மணிக்கெல்லாம் படுத்துவிட வேண்டும்.
4. காலையிலும், மாலையிலும் பஸ்சில் பயணம் செய்பவர்கள் கண்களை மூடிக்கொண்டு தியானம் பண்ணலாம். வசதியிருந்தால் தூங்கிவிடலாம். நீண்ட நெடிய பயணங்களில் நான் கூட கண்களை மூடித் தியானம் செய்வேன், அப்படியே தூங்கியும் விடுவேன்.
5. தூக்கம் வராதபோது முகத்தில் உள்ள தசைகளைத் தளர்த்தும் பயிற்சி எடுங்கள். திடீரென்று உங்களது முகத்தில் உள்ள தசைகளின் இறுக்கத்தைச் சோதித்துப் பாருங்கள். உங்கள் உள் மனது எதையாவது சிந்தித்துக் கொண்டிருந்தால், முகத்தில் உள்ள தசைகள் இறுக்கமாக இருக்கும். அதை உணர்ந்து முக தசைகளைத் தளர்த்திப் பாருங்கள். கண்களைப் பாதி அடைத்து, சில நிமிடங்கள் வைத்துப்பாருங்கள் தூக்கம் தானாக வரும். கீழ் இமைகளின் அடிப் பகுதியை விரல்களால் தொட்டு மென்மை யாக மேல்நோக்கி உயர்த்தி ஒரு சில வினாடிகள் பிடித்தால் கூட தூக்கம் வந்துவிடும்.
6. போதிய உடற்பயிற்சி செய்தால் தூக்கம் தானாக வரும். தூக்கம் வரவில்லை என்றாலும் கூட, ஒரு மணி நேரம் உங்களது வீட்டிலுள்ள ஜிம்மில் உடற்பயிற்சி செய்து பாருங்கள். அதற்குப் பிறகும் தூக்கம் வரவில்லையென்றால் என்னைக் கேளுங்கள்.
ஒரு நாளைக்கு எட்டு மணி நேரம் தூக்கம் என்பது நல்லது.
குறைந்த பட்சம் ஆறு மணிநேரமாவது தூங்கியே ஆகவேண்டும். ஆனால் எட்டு மணி நேரத்திற்கு மேல் தூக்கம் என்பது கூடவே கூடாது.

முனைவர் செ. சைலேந்திர பாபு, ஐ.பி.எஸ்.





M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Feb 04, 2014 7:41 pm

வீட்டுக்காரர் நன்றாகத் தூங்கும்போது தான் திருடன் நிதானமாக வீட்டை உடைத்து பொருட்களை திருடிச் செல்கிறான. ஒரு சத்தம் கூட கேட்கவில்லையே, எப்படி பூட்டை உடைத்தான் என்று வீட்டுக்காரர் ஆச்சரியப் படுவார். சத்தம் கேட்டது, ஆனாலும் பொருட் படுத்தாமல் தொடர்ந்து தூங்கினோம் என்கிறார்கள் சிலர். தூக்கத்தின் தேவையை விளக்க இதைவிட நல்ல உதாரணம் சொல்ல முடியாது.
யாருக்கு திருடனுக்கா அண்ணே



ஈகரை தமிழ் களஞ்சியம் உறக்கம் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Tue Feb 04, 2014 7:45 pm

balakarthik wrote:
வீட்டுக்காரர் நன்றாகத் தூங்கும்போது தான் திருடன் நிதானமாக வீட்டை உடைத்து பொருட்களை திருடிச் செல்கிறான. ஒரு சத்தம் கூட கேட்கவில்லையே, எப்படி பூட்டை உடைத்தான் என்று வீட்டுக்காரர் ஆச்சரியப் படுவார். சத்தம் கேட்டது, ஆனாலும் பொருட் படுத்தாமல் தொடர்ந்து தூங்கினோம் என்கிறார்கள் சிலர். தூக்கத்தின் தேவையை விளக்க இதைவிட நல்ல உதாரணம் சொல்ல முடியாது.


யாருக்கு திருடனுக்கா அண்ணே

திருடனுக்கு தூக்கம் பகலில், ஆனால் காவலரின் நிலைமை பாவம். விடுமுறை இல்லாத துறை அவர்களுடையது.





M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Feb 04, 2014 7:55 pm

ரொம்ப பெருசா இருக்கு நாளைக்கு வந்து படிக்கிறேன்



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Tue Feb 04, 2014 7:56 pm

ஜாஹீதாபானு wrote:ரொம்ப பெருசா இருக்கு நாளைக்கு வந்து படிக்கிறேன்


உங்களுக்கும் உறக்கம் வருகிறதா?.....



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82692
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Feb 05, 2014 1:34 pm

தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே....
-
என்ற திரைப்பட பாடலைப்போல மெலடி பாடல்களை
கேளுங்கள்...தூக்கம் தானாக வரும்...!!

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Feb 05, 2014 4:34 pm

பகிர்வுக்கு நன்றி செந்தில்

படிச்சதும் தூக்கம் வருது தூக்கம் 



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக