புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by E KUMARAN Today at 1:16 pm

» நாவல்கள் வேண்டும்
by E KUMARAN Today at 12:50 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 12:29 pm

» கருத்துப்படம் 21/11/2024
by mohamed nizamudeen Today at 9:43 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Thu Nov 21, 2024 4:53 pm

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 3:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 2:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Thu Nov 21, 2024 2:28 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 2:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Thu Nov 21, 2024 1:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu Nov 21, 2024 1:21 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 12:54 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 12:38 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Thu Nov 21, 2024 12:02 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Thu Nov 21, 2024 11:49 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Wed Nov 20, 2024 11:35 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 11:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 11:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Wed Nov 20, 2024 10:11 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 9:39 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:17 pm

» மாயை எனும் இரவில்....
by ayyasamy ram Wed Nov 20, 2024 6:32 pm

» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:33 pm

» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 2:23 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 12:45 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Wed Nov 20, 2024 11:55 am

» தீக்ஷிதர் பார்வையில் திவ்ய நாயகி
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:23 am

» களங்கம் போனது, கன்னிகையும் கிடைத்தாள்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:21 am

» துளசி வழிபாடு பரம்பதம் அளிக்கும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:18 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:17 am

» பந்தல் இருந்தால் கொடி படரும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:14 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:45 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:43 am

» நீதிக்கதை - தனித் திறமை
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:35 am

» நவம்பர் 20- திப்பு சுல்தான் அவர்களின் பிறந்த தினம்
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:34 am

» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:59 pm

» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:52 pm

» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:50 pm

» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:48 pm

» நாளைய காவியமே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:43 pm

» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:42 pm

» மெய் உறக்கம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:41 pm

» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:40 pm

» மிருகப் பூச்சி
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:39 pm

» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:39 pm

» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:38 pm

» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:37 pm

» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:36 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நாளும் ஒரு அழகின் அலை - Page 10 Poll_c10நாளும் ஒரு அழகின் அலை - Page 10 Poll_m10நாளும் ஒரு அழகின் அலை - Page 10 Poll_c10 
87 Posts - 65%
heezulia
நாளும் ஒரு அழகின் அலை - Page 10 Poll_c10நாளும் ஒரு அழகின் அலை - Page 10 Poll_m10நாளும் ஒரு அழகின் அலை - Page 10 Poll_c10 
29 Posts - 22%
E KUMARAN
நாளும் ஒரு அழகின் அலை - Page 10 Poll_c10நாளும் ஒரு அழகின் அலை - Page 10 Poll_m10நாளும் ஒரு அழகின் அலை - Page 10 Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
நாளும் ஒரு அழகின் அலை - Page 10 Poll_c10நாளும் ஒரு அழகின் அலை - Page 10 Poll_m10நாளும் ஒரு அழகின் அலை - Page 10 Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
நாளும் ஒரு அழகின் அலை - Page 10 Poll_c10நாளும் ஒரு அழகின் அலை - Page 10 Poll_m10நாளும் ஒரு அழகின் அலை - Page 10 Poll_c10 
3 Posts - 2%
sram_1977
நாளும் ஒரு அழகின் அலை - Page 10 Poll_c10நாளும் ஒரு அழகின் அலை - Page 10 Poll_m10நாளும் ஒரு அழகின் அலை - Page 10 Poll_c10 
2 Posts - 1%
Shivanya
நாளும் ஒரு அழகின் அலை - Page 10 Poll_c10நாளும் ஒரு அழகின் அலை - Page 10 Poll_m10நாளும் ஒரு அழகின் அலை - Page 10 Poll_c10 
1 Post - 1%
Guna.D
நாளும் ஒரு அழகின் அலை - Page 10 Poll_c10நாளும் ஒரு அழகின் அலை - Page 10 Poll_m10நாளும் ஒரு அழகின் அலை - Page 10 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நாளும் ஒரு அழகின் அலை - Page 10 Poll_c10நாளும் ஒரு அழகின் அலை - Page 10 Poll_m10நாளும் ஒரு அழகின் அலை - Page 10 Poll_c10 
423 Posts - 76%
heezulia
நாளும் ஒரு அழகின் அலை - Page 10 Poll_c10நாளும் ஒரு அழகின் அலை - Page 10 Poll_m10நாளும் ஒரு அழகின் அலை - Page 10 Poll_c10 
75 Posts - 13%
mohamed nizamudeen
நாளும் ஒரு அழகின் அலை - Page 10 Poll_c10நாளும் ஒரு அழகின் அலை - Page 10 Poll_m10நாளும் ஒரு அழகின் அலை - Page 10 Poll_c10 
19 Posts - 3%
E KUMARAN
நாளும் ஒரு அழகின் அலை - Page 10 Poll_c10நாளும் ஒரு அழகின் அலை - Page 10 Poll_m10நாளும் ஒரு அழகின் அலை - Page 10 Poll_c10 
11 Posts - 2%
Dr.S.Soundarapandian
நாளும் ஒரு அழகின் அலை - Page 10 Poll_c10நாளும் ஒரு அழகின் அலை - Page 10 Poll_m10நாளும் ஒரு அழகின் அலை - Page 10 Poll_c10 
8 Posts - 1%
ஜாஹீதாபானு
நாளும் ஒரு அழகின் அலை - Page 10 Poll_c10நாளும் ஒரு அழகின் அலை - Page 10 Poll_m10நாளும் ஒரு அழகின் அலை - Page 10 Poll_c10 
6 Posts - 1%
prajai
நாளும் ஒரு அழகின் அலை - Page 10 Poll_c10நாளும் ஒரு அழகின் அலை - Page 10 Poll_m10நாளும் ஒரு அழகின் அலை - Page 10 Poll_c10 
6 Posts - 1%
sram_1977
நாளும் ஒரு அழகின் அலை - Page 10 Poll_c10நாளும் ஒரு அழகின் அலை - Page 10 Poll_m10நாளும் ஒரு அழகின் அலை - Page 10 Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
நாளும் ஒரு அழகின் அலை - Page 10 Poll_c10நாளும் ஒரு அழகின் அலை - Page 10 Poll_m10நாளும் ஒரு அழகின் அலை - Page 10 Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
நாளும் ஒரு அழகின் அலை - Page 10 Poll_c10நாளும் ஒரு அழகின் அலை - Page 10 Poll_m10நாளும் ஒரு அழகின் அலை - Page 10 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நாளும் ஒரு அழகின் அலை


   
   

Page 10 of 14 Previous  1 ... 6 ... 9, 10, 11, 12, 13, 14  Next

சின்னக் கண்ணன்
சின்னக் கண்ணன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 410
இணைந்தது : 19/12/2013

Postசின்னக் கண்ணன் Sun Feb 02, 2014 6:09 pm

First topic message reminder :

ஈகரை நண்பர்களுக்கு,

வணக்கம்.. சென்ற வருடம் முக நூலில் நாளும் ஒரு அழகின் அலை என்ற தலைப்பில் செளந்தர்ய லஹரி - 100 ஸ்லோகங்களுக்கு நான் புரிந்து கொண்டவற்றை எழுதிப் பார்த்தேன்..

கொஞ்சம் விருத்தங்கள்,வெண்பாக்கள் சில பல உதாரணங்கள் என எழுதிப் பார்த்திருக்கிறேன். அதை இங்கு இடுகிறேன்..

நாளும் ஒன்று என்றில்லை.. மூன்று நான்கும் வரும்..புன்னகை

அன்புடன்

சின்னக் கண்ணன்..


சின்னக் கண்ணன்
சின்னக் கண்ணன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 410
இணைந்தது : 19/12/2013

Postசின்னக் கண்ணன் Wed Mar 12, 2014 10:13 am

நாளும் ஒரு அழகின் அலை....

செளந்தர்ய லஹரி

ஸ்லோகம் .75


பாதை தெரியத்தான் பக்குவமாய் ஆகத்தான்
கோதை கழல்பணிந்து கொஞ்சம் இசைபாடி
மேவி எழுதுவதை மேலும் செழிப்பாக்க
தேவிநின் பொற்பாதம் திரும்பவும் பணிகிறேனே..

**
அந்தக் குழந்தைக்கு மூன்று வயது..தவமாய்க் கிடைத்த பிள்ளை.. இருப்பினும் இறைவனை தரிசிக்க நீராடிச் செல்வது நல்லது தானே.. நினைத்தார் அப்பா..

.. “இவனே.. சமர்த்தா இந்தக் குளக்கரையில் உட்கார்ந்துக்குவியாம்.. அப்பா இதோ ஜோ குளிச்சுட்டு வருவேனாம்.. அது வரை இந்தா… இந்தப் புளியங்காய்களை வைத்து விளையாடிக்கொண்டிரு... அழாம இருப்பியோன்னோ…. தோ வந்துடறேன்..”

மூன்று வயதுப் பையனான அவனுக்கு முதலில் சரியெனப் பட்டது..

அப்பா டபக் டபக்கென படிக்கட்டி.ல் இறங்கி குளத்தில் இறங்குவதைப்பார்க்க ப் பரவசமாய் இருந்தது..

அப்பா முழுக்க இறங்கி முழுகுவதைச் சற்று நேரம் பார்த்தவன் சுற்றிலும் கொஞ்சம் வேடிக்கை பார்க்க ஆரம்பித்தான்.. பின் குளத்தைப் பார்த்தால்…ஓ..அப்பா காணோம்..

அப்பா அப்பா..

அவரோ குளத்தில் மூழ்கி கொஞ்சம் ஜபமும் செய்திருக்க வேண்டும் போலும்.. எழவில்லை..

அப்பா அப்பா.. இந்த அப்பாவைக் காணோம்..ஆனா சும்மா இருக்கலாம்னு பார்த்தா எனக்குப் பசிக்குதே..அப்பா அப்பா..அம்மா…

கண்ணோரம் திடுமென வானில் புகும் மேகங்களைப் போல கருமை கொள, மழை ஜோவென கண்களிலிருந்து பெய்ய ஆரம்பிக்க..

மேலே இருந்து பார்த்துக் கொண்டிருந்தார் பரமசிவன்.. பார்வதியிடம் சொன்னார்..என்ன சொன்னார்..

“அன்பே குழந்தை அழுகிறது..வாட்ட்ர்பரீஸ்லாம் வேண்டாம்..கொஞ்சம் பாலமுதம் தருகிறாயா..”

அம்பாள் சிவன் சொல்லியா மறுக்கப் போகிறாள்..என்ன செய்தாள்..
.
வயிற்றின்மிகு பசியால்சிறு குழந்தையது அழவே
உயிரின்மிசை உணவேயென உணர்ந்தேசிவன் உமையை
தயங்காமலே அமுதைநிதம் தருவாயெனப் பணிக்க
ஜெயங்கள்மிக ஜெபமும்சொலி அமுதூட்டினாள் அழகாய்....

(என்னடா..அதிகரீணில ட்ரை பண்ற போலிருக்கு.
அதே தான்.. நீ சொல்ற....ஓகேயா இல்லையா தெரியலை..)

அந்தப் பையன் தான் ஞானசம்பந்தர்..பையனின் தந்தை சிவபாத இருதயர். சென்றிருந்த கோவில் சீர்காழி சட்டை நாதர் ஆலயம்..

உமையிடம் ஞானப்பால் பருகிய சம்பந்தருக்கு என்ன ஆயிற்று..

அவர் உடனேயே சற்றுப் பொழுதில் பாடிய பாடல் இது என்பர்…

தோடுடையசெவி யன்விடையேறியோர் தூவெண்மதிசூடிக்
காடுடையசுட லைப்பொடிபூசியென் னுள்ளங்கவர்கள்வன்
ஏடுடையமல ரான்முனை நாட்பணிந் தேத்தவருள்செய்த
பீடுடையபிர மாபுரமேவிய பெம்மானிவனன்றே.


தோடணிந்த திருச்செவியை உடைய உமையம்மையை இடப்பாகத்தே உடையவன்.

விடை (எருது) மீது ஏறி, ஒப்பற்ற தூய வெண்மையான பிறையை முடிமிசைச்சூடி, சுடுகாட்டில் விளைந்த சாம்பற் பொடியை உடல் முழுதும் பூசி வந்து என் உள்ளத்தைக் கவர்ந்தகள்வன் அவன்.

இதழ்களை உடைய தாமரை மலரில் விளங்கும் நான்முகன், படைத்தல் தொழில் வேண்டி முன்னை நாளில் வழிபட அவனுக்கு அருள்புரிந்த பெருமை மிக்க பிரமபுரத்தில் எழுந்தருளியுள்ள பெருமானானவன்..

வேறு யார் பரமசிவனாகிய இவன் தானே!

எப்படி சாத்தியமாயிற்று இது..

ஜகன்மாதா உலகையெல்லாம் ரட்சிக்கும் உமையானவள் கொடுத்தது என்ன சாதாரண பாலமுதமா..ஞானப் பாலல்லவா..

அது ஏன் ஞானப்பால்..அம்பாளின் மார்பகங்களில் சொல்லின் செல்வியாகிய சரஸ்வதியே பாலாகிப் பெருகுகிறாளாம்..

(ஓகே..அப்புறம்..இந்த ஸ்லோகத்தில கிரிக்கெட் பத்திக் கூட பேசியிருக்கார் போல இருக்கே..

கிரிக்கெட்டா..

ஆமாண்டா..ராகுல் திராவிட்..சம்திங்..வருமோன்னோ..

இவனே.. அது ராகுல் திராவிட் இல்லை..திராவிடம்.. திராவிட நாடுன்னு வருது..

ஏன் இப்படி அரசியல்லாம் திடீர்னு பேசற..

நான் பேசலை..ஸ்லோகத்தில் வருகிறது என்றேன்..வா..ஸ்லோகத்துக்குள்ள போய்ப் பார்க்கலாம்..”)


****

தவ ஸ்தந்யம் மந்யே தரணிதரகந்யே ஹ்ருதயத:
பய: பாராவார: பரிவஹதி ஸாரஸ்வதமிவ
தயாவத்யா தத்தம் த்ரவிடசிசுராஸ்வாத்ய தவ யத்
கவீனாம் ப்ரெளடானாம் அஜநி கமநீய: கவயிதா

Twa stanyam manye dharanidhara kanye hridhayatha
Paya paraabhaara parivahathi saaraswathamiva
Dhayavathya dhattham dravida sisu raaswadhya thava yat
Kaveenam proudana majani kamaniya kavayitha

”தாயே அம்பிகே.. உனது ஸ்தனங்களில் இருந்து பெருகும் பால் உனது இதயத்தில் இருந்து உற்பத்தியாகும் அமுதத்தின் பிரவாகம் போன்று இருக்கிறது….

சொல்லுக்கெல்லாம் செல்வியான சரஸ்வதி தேவியே உனது மார்பகங்களில் இருந்து பெருகும் மதுரமான பாலின் வடிவத்தில் இருக்கிறாள் போலும்

எனில் உனது பாலமுதத்தைப் பருகிய திராவிட நாட்டில் பிறந்த குழந்தையானது பிற்காலத்தில் தலை சிறந்தகவைஞர்களுள் மனம் கவர்ந்த கவிஞராக மாறிவிட்டார் அன்றோ..

***

திராவிடக் குழந்தை என இந்த ஸ்லோகத்தில் பகவத் பாதர் குறிப்பது ஞான சம்பந்தரை என சிலரும் பகவத் பாதரே தான் ஞானரஸம் பருகிய குழந்தை என்று சிலரும் சொல்கிறார்கள்..

எப்படி என்றாலும் இருவருமே சிறந்த எல்லார் மனமும் கவர்ந்த கவிஞர்கள் தானே..

அம்பிகையைத் தியானித்து இந்த ஸ்லோகம் பாராயணம் செய்தால் கவித்திறமை தானாகவே வந்துபடுமாம்
.


சின்னக் கண்ணன்
சின்னக் கண்ணன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 410
இணைந்தது : 19/12/2013

Postசின்னக் கண்ணன் Wed Mar 12, 2014 10:18 am

நாளும் ஒரு அழகின் அலை....

செளந்தர்ய லஹரி

ஸ்லோகம் .76

தொப்புள் கொடி பற்றி நீவிர் அறிந்தவற்றை சுருக்கமாக சில பாராக்களில் விவரிக்கவும்..?:

குழந்தை கர்ப்பத்தில் இருக்கும் போது அதற்குத்தேவையான ஆகாரம் மற்றும் ஆக்சிஜனைப் பிளசண்டா மூலம் தான் பெறுகிறது.

.கர்ப்பத்தின் போது கருப்பையில் இந்த பிளசண்டா உருவாகிறது.. பிளசண்டாவையும் குழந்தையையும் இணைப்பதாக தொப்புள் கொடி இருக்கிறது..,

எளிமையாகச் சொல்லவேண்டுமெனில், குழந்தையானது தாயின் வயிற்றில் வளரும்போது, அதற்கும் தாய்க்கும் இடையே உள்ள ஒரே இணைப்பு தொப்புள்கொடிதான்.

இதனுள் மூன்று ரத்த குழாய்கள் இருக்கும் . இரு தமனி (artery ) மற்றும் ஒரு சிரை(vein ). பிறந்தவுடன் கத்தரிக்கும் போது குறுக்கு வெட்டு தோற்றத்தில் இந்த மூன்று ரத்த குழாய்களும் தெரியும்..
தொப்புள் கொடி குழந்தை பிறந்த 7 - 10 நாட்களில் விழுந்துவிடும் ..

தொப்புளை நாபி என்று கூறுவார்கள்.. நாபிக்கமலம் என்றும் கூறுவதுண்டு..

(பரவால்லடா.. என்னமோ கேள்வி பதில்லாம் சொல்றேன்னு நினச்சேன்.
.அப்புறம் என்ன.. நீ நாதஸ்வரம் போல இருந்தா நாபிக் கமலம் நானா அப்படின்னு சொல்லப் போறியா..

ஷ்ஷ்)

திருப்பாணாழ்வார் தனது பாசுரத்தில் ஸ்ரீரங்கத்தைப் பற்றி என்ன சொல்கிறார்..

மந்தி பாய்வட வேங்கட மாமலை* வானவர்கள்
சந்தி செய்ய நின்றா னரங்கத் தரவி னணையான்
அந்தி போல்நிறத் தாடையு மதன்மேல் அயனைப் படைத்த தோரெழில்*
உந்தி மேலதன் றோ!அடி யேனுள்ளத் தின்னுயிரே !

அதாவது,

ஸ்ரீரங்கத்திற்கு வடக்கு திசையில் உள்ள வேங்கட மலையில் மந்திக்ள் பாய்ந்து விளையாடிக் கொண்டிருக்கும்..

அங்கு நின்று அருள் புரியும் வேங்கடநாதனே அரங்க நகருள் ஆதிசேஷன் என்னும் படுக்கை மீது அரங்கனாக அருள்புரிகிறான்.

இந்த அரங்கன் வானில் வாழ்பவரும் வந்து வணங்கும் பெருமை மிக்கவன்.

இன்று எனக்கு அவன் அற்புத தரிசனம் தருகிறான். அவனது திவ்யமான, மங்களகரமான அழகை அனுபவிக்கும் பேறு பெற்றேன்.

ஆஹா அந்த அழகை என்னவென்று சொல்வேன் !

மாலை நேரத்துச் சித்திரச் செவ்வான நிறத்தை ஒத்த சிவந்த ஆடையின் மேல் அழகான தாமரையில் பிரம்மதேவரைப் படைத்த அந்த திருவயிற்றின் நாபிக் கமலத்தின் அழகில் அடியேனுடைய இனிமையான உயிர் லயித்து விட்டது”


உந்தி என்பதற்குத் திருவயிறு மற்றும் நாபிக்கமலம் என்றும் பொருள்கள் உண்டு.
.
(அப்புறம்)

”தாட்சாயிணி..”

(பெரிய சிவாஜின்னு நினைப்பு.. உன்னால பூனை குரல்ல கூட ஒழுங்கா கர்ஜிக்க முடியலை..)

தாட்சாயிணியாக இருந்த உமையவளை தட்சன் மீது கொண்ட மனக்கோபத்தால் பரமசிவன் தன் யோகாக்கினியால் பஸ்பமாக்குகிறார்.

.பின் தட்சிணாமூர்த்திக் கோலத்தில் கயிலாயத்தில் அமர்ந்து த்வம் செய்கிறார்.. உமாதேவியோ இமவானின் மகளாகப் பிறந்து இறைவனை நோக்கி தவம் இருக்கிறார்.
.
ஆனால் தேவலோகத்தில் தேவேந்திரனுக்கோ பிரச்னை..

(என்னவாம்..இந்த தேவாள்ளாம் பாவம்ல.. ஏதாவது பிரச்னைல்ல அப்பப்ப மாட்டிக்கிறா.. இந்தக் காலத்துல சில தேவாக்களோட குரலால நம்ம காதுக்குத் தான் பிரச்னை வருது!!

ஷ்ஷ்)

என்ன பிரச்னை.. சூரபத்மனின் அட்டகாசங்கள் நாளுக்கு நாள் கூடிக்கொண்டே போகிறது..அவனை அழிக்க சிவனின் அம்சமான ஒரு புத்திரன் வேண்டும்..இங்கே பார்த்தால் மம்மி அண்ட் டாடி ஆர் இன் மெடிட்டேஷன்.. ஸோ என்ன பண்ணலாம்..

தேவலோகத்திலேயே ஒரு அறையில் அமர்ந்து யோசித்து,

(அப்போதே ரூம்போட்டு யோசிப்பது வந்திருக்காக்கும்..
ஷ்ஷ்)

பின் ஏக மனதாக மன்மதனைப் பார்க்க மன்மதனோ தன்னைத் தானே கிராஃபிக்ஸில் ஆடாக மாறிப்பார்த்துக் கதற.. கண்ணோல்லியோ..போடா ராஜா போ உன் திறமை உனக்கே தெரியாது எனச் சொல்லி அவனை பரமசிவனிடம் தேவர்கள் அனுப்பினார்கள்..

மன்மதனோ தன்னால் ஆனவிதமாகப் பாணங்களை எய்ய, பரமனுக்கோ கோபம் வந்தது.. தனது நெற்றிக் கண்ணைத் திறந்து அவனை உற்று நோக்க அதில் பலகோடி மடங்கான உஷ்ணத் தீயில் நடுநடுங்கி தப்பிப்பதற்கு மன்மதன் என்ன செய்தான் தெரியுமா..?

(ஏன் அதையும் சொல்வது தானே..)

மன்மதன் செய்ததைப் பற்றி ஸ்லோகத்துக்குள்ளேயே சென்று பார்ப்போமா..

(மாட்டேன்னா விடவா போற..சரி வா..போலாம்)

**

ஹரக்ரோதஜ்வாலா-வலிபி ரவலீடேன வபுஷா
கபீரே தே நாபீஸரஸி க்ருதஸங்கோ மனஸிஜா
ஸமுத்தஸ்தெள தஸ்மாத் அசலதநயே தூமலதிகா
ஜநஸ்தாம் ஜாநீதே தவ ஜநநி ரோமாவளிரிதி

Hara krodha jwalaavalibhir avaleedena vapusha
Gabhire thee nabhisarasi kruthasangho manasija
Samuthasthou thasmath achalathanaye dhoomalathika
Janastham janithe thava janani romaavalirithi

"மலைமகளே..மன்மதன் பரமசிவனின் கோபாக்னி ஜ்வாலையினால் சூழப்பட்டு நடுநடுங்கி, அதனின்றும் தப்பிப்பதற்காக உன்னுடைய ஆழமான நாபி என்ற மடுவுக்குள் மூழ்கிவிட்டான்..

அதில் குளிர்ந்ததால்அங்கே இருந்து கிளம்பும் மெல்லிய புகையையே உனது நாபியி\ல் இருக்கும் உரோம வரிசை என இந்த உலகம் எண்ணுகின்றது..”

**

இந்த ஸ்லோகத்தின் மூலம் அம்பாளின் நாபி மன்மதனின் இருப்பிடம் என அறியப் படுகிறது..

காமனை எரித்த காமேஸ்வரனும், காமேச்வரியின் காதலுக்கு ஆட்பட்டவர் எனச் சொல்கிறார் பகவத் பாதர்..

இந்த ஸ்லோக பாராயணம் - செய்பவர்களுக்கு பரம வைராக்யத்தையும், வீடு பேறையும் பெற்றுத் தரும்..

**



சின்னக் கண்ணன்
சின்னக் கண்ணன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 410
இணைந்தது : 19/12/2013

Postசின்னக் கண்ணன் Thu Mar 13, 2014 10:18 am

நாளும் ஒரு அழகின் அலை....

செளந்தர்ய லஹரி

ஸ்லோகம் .77

பொதுவாக கங்கை அல்லது கங்கா என்றால் புண்ணிய நதி, ஜெயகாந்தன் நாவலின் கதா நாயகி, கர்ணன் படத்தலைப்பு என நிறைய பேருக்குத் தெரிந்திருக்கும்..

பலருக்கு அவ்வளவாகத் தெரியாதது யமுனா நதி.

(உனக்குத் தெரியாதுன்னு சொல்லு..
ஷ்ஷ்)

உத்ராஞ்சல் மாநிலத்தில் யமுனோத்ரியில் தொடங்கும் யமுனா நதி தில்லி ஹரியானா மாநிலங்களினூடே ஓடி அலகாபாத்தில் கங்கையில் கலக்கிறது..

இந்த யமுனை நதியில் தான் கிருஷ்ணன் பால்யப் பருவத்தில் தனது லீலைகளை செய்து மகிழ்ந்தான்.

கண்ணனின் பாதம் பட்டு புண்ணியம் அடைந்த யமுனை ஆறு அந்த கிருஷ்ணனின் நிறமான சியாமள வண்ணமாகவே இருக்கிறாள்..இவளுக்குக் காளிந்தி என்ற பெயரும் உண்டு.. கடலில் கலக்காத நதி என்ற பெருமையும் உண்டு...

காளியனின் ஆணவத்தை அடக்கி கிருஷ்ணன் காளிய மர்த்தனம் ஆடியதும் இந்த யமுனையில்தான். ஆகவேதான் பா,மாலை தொடுத்த ஆண்டாள் தனது திருப்பாவையில்

மாயனைமன்னு வட மதுரை மைந்தனைத்
தூய பெரு நீர் யமுனைத் துறைவனை என்று பாடுகின்றாள். யமுனை கருமை நிறமானவள் என்றாலும் கண்ணனின் பாதம் பட்டு புனிதம் பெற்றவள் என்பதால் தூயப்பெருநீர் யமுனை என்று கொண்டாடுகின்றாள்

கம்ப ராமாயணத்திலும் யமுனை நதிபற்றி வருகிறது..வனவாசத்திற்காக லஷ்மணன் சீதை பின் தொடரச் சென்ற ஸ்ரீராமன் பாரத் வாஜ மகரிஷியின் ஆசிரமத்தை அடைகிறான். அவர் சித்திர கூடத்திற்கு வழி சொல்ல அங்கிருந்து புறப்பட்டு யமுனைக் கரையை அடைகிறான்..

பரத்வாஜ முனிவர் ராமனிடம் என்ன சொன்னார்..

ஆவது உள்ளதே; ஐய! கேள்; ஐ-இரண்டு அமைந்த
காவதப் பொழிற்கு அப் புறம் கழிந்தபின், காண்டி;
மேவு காதலின் வைகுதிர்-விண்ணினும் இனிதால்;
தேவர் கைதொழும் சித்திர கூடம் என்று உளதே.'

அவரிடம் இருந்து விடைபெற்ற மூவரும் கிளம்பி,

என்று காதலின் ஏயினன்; அடி தொழுது ஏத்தி,
கொன்றை வேய்ங் குழல் கோவலர் முல்லை, அம் குடுமி
சென்று செங் கதிர்ச் செல்வனும் நடு உற, சிறு மான்
கன்று நீர் நுகர் காளிந்தி எனும் நதி கண்டார்.

எனில் காளிந்தி என்ற பெயர் ராமாயண காலத்திலேயே இருந்திருக்கிறது யமுனைக்கு..

யமுனையைப் பற்றி அமைந்த அழகான திரைப்பாடல்

யமுனைஆற்றிலே....ஈரக்காற்றிலே...கண்ணனோடுதான்ஆட..
பார்வை பூத்திட..பாதை பார்த்திட..பாவை ராதையோ வாட...
ஆயர்பாடியில் கண்ணன் இல்லையோ ஆசை வைப்பதே அன்புத் தொல்லையோ பாவம் ராதா..

(அப்புறம்..)

பூஜ்யத்துக்குள்ளே ஒரு ராஜ்யத்தை ஆண்டு கொண்டு
புரியாமலே இருந்தான் ஒருவன்
அவனைப் புரிந்தவன் தான் இறைவன்

(ஏன் திடீர்னு பழைய பாட்டு..)

பூஜ்யம் என்றால் ஜீரோ அல்லது ஸீரோ. சைஸ் ஜீரோ என்பது என்ன..

(ஆரம்பிச்சுட்டான்யா)

முகம் களை இழக்காமல், எக்ஸ்ட்ரா சதை எல்லாம் இல்லாமல் பளபளப்பு குறையாமல் ஸ்ஸ்ஸ்லிம்மாகவும், ஆரோக்யமாக இருப்பது போன்ற தோற்றம் தான் அது..

குறிப்பாக பெண்களுக்குத் தான் இதைச் சொல்வார்கள்..

மார்பு - வயிறு - இடுப்பு இவற்றின் கீழ் மட்ட அளவை நிர்ணயிப்பது தான் சைஸ் ஜீரோ.. 30 - 22 - 32 இஞ்ச்கள் முதல் 33 -25 -35 இஞ்சகள்வரை உள்ள உடலமைப்பு சைஸ் ஜீரோ பிரிவுக்குள் அடங்கும்.

பாடி மாஸ் இண்டெக்ஸ் எனச் சொல்லப் படும் பிஎம் ஐ எடைக்கும் உயரத்திற்கும் சம்பந்தப் பட்டது..இதை வைத்தும் சைஸ் ஜீரோவை நிர்ணயிக்கிறார்கள்..

ஆக சைஸ் ஜீரோ வைத்திருப்பவர்களுக்கு சிற்றிடை கண்டிப்பாக இருக்கும்..!

(விஷயத்துக்கு வந்துட்ட போல இருக்கு
ஷ்ஷ்)

வாருங்கள்.. ஸ்லோகத்துக்குள் செல்லலாம்....

***
யதேதத் காளிந்தீ தநுதர தரங்காக்ருதி சிவே
க்ருசே மத்யே கிஞ்சிஜ் ஜநநி தவ யத்பாதி ஸுதியாம்
விமர்தாத் அந்யோந்யம் குச கலசயோரந்தரகதம்
தநூபூதம் வ்யோம ப்ரவிசதிவ நாபிம் குஹரிணீம்

Yadhethath kalindhi thanu thara ngaa kruthi shive
Krushe mahye kinchid janani thawa yadbhathi sudheeyam
Vimardha -dhanyonyam kuchakalasayo -ranthara gatham
Thanu bhootham vyoma pravishadhiva nabhim kuharinim

”அம்மா..மங்கள வடிவானவளே..

உன்னுடைய மெல்லிய சிற்றிடையானது உன்னை சதாசர்வ காலமும் தியானிப்பவர்களுக்கு மட்டுமே புலப்படும்..

அப்படிப் பட்ட உன் இடையில், கருமை நிறம் கொண்ட யமுனையாற்றிலே மெல்லிய தென்றல் காற்று வீசுகையில் ஏற்படும் சிற்றலைகள் போல, உரோம வரிசைகள் ஒளிர்ந்து உன் தொப்புள் குழியில் முடிவடைகிறது..

அதைப்பார்த்தால் மேலிருக்கும் நீல வானமானது உனது ஸ்தனங்களுக்கிடையில் அகப்பட்டு சற்றே மெலிந்து உனது தொப்புள் குழியில் விழுவது போல உள்ளது..”

இந்த ஸ்லோக பாராயணம் அம்பிகையின் ஸுஷ்ம வடிவிலான தரிசனத்தை அளிக்க வல்லது..


சின்னக் கண்ணன்
சின்னக் கண்ணன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 410
இணைந்தது : 19/12/2013

Postசின்னக் கண்ணன் Thu Mar 13, 2014 10:24 am

நாளும் ஒரு அழகின் அலை....

செளந்தர்ய லஹரி

ஸ்லோகம் .78


ஒரு அழகான திரைப்பாடல் முதலில்..

இது இரவா பகலா நீ நிலவா கதிரா
இது வனமா மாளிகையா
நீ மலரா ஓவியமா

இது குயிலா குழலா உன் குரலின் சுகமே
இது மயிலா மானா அவை உந்தன் இனமே “

இதில் கண் தெரியாத கதா நாயகி கேட்கும் கேள்விகளுக்கு கதா நாயகன் பதில் சொல்வது போல் அமைந்திருக்கிறது.. எழுதியது கவிஞர் கண்ணதாசன்..

இந்த ஸ்லோகத்தில் பகவத் பாதருக்கும் கேள்விகள் எழுகின்றன.. கேள்விகள் போலவா கேட்கிறார்..இல்லை அம்பாளின் அழகையல்லவா உயர்த்தி வர்ணிக்கிறார்..

அதற்கு முன்,

சில திரைப்படங்களில் முன்னால் நடந்தவற்றை கதா நாயகனோ நாயகியோ நினைத்தால், அவர் முகம் திரையில் கலங்கும்.. ஒரு புள்ளி அதைச் சுற்றி வட்டங்களாக சுழலும்..

ஓ..சுழல்.. பொன்னியின் செல்வனில் குந்தவை வந்தியத் தேவனை சந்திக்கையில் வந்தியத் தேவன் சொல்வார்.. நீர்ச்சுழலில் சிக்கிக் கொண்டு தப்பித்துவிடலாம்..ஆனால் சோழ குலப் பெண்களின் விழிச் சுழலில் இருந்து தப்பிக்க முடியாது என்று..

ஆக நீர்ச்சுழல்.. மெலிதான வட்டங்க்ளாய் சிறு சலனங்களைக் காட்டிய படி இருக்கும் அது வெகு அபாயகரமானது..அருகில் தெரியாத்தனமாக சிக்கிக்கொண்டால் உள்ளிழுத்து வெகு ஆழத்தில் மணலில் சிக்க வைத்து விடும்..

ஆனால் இதில் சலனமில்லாத சுழல் என்கிறார் பகவத்பாதர்..எதை..

அதற்கு முன்…

தாமரைக் கொடி தரையில் வந்ததெப்படி என்று ஒரு பாடல் நினைவிருக்கும்.. ஏற்கெனவே அம்பிகையின் முகத்தை முந்தைய ஒரு ஸ்லோகத்தில் தாமரையென சொல்லி விட்டார்..இங்கே தாமரை பூத்த த்டாகம் என்கிறார்.. அது என்னவென்பதற்கு முன்..

மன்மதன் நிதப்படி ஹோமம் செய்து பாணங்களை ஒழுங்காக விடுவானாம்.. அப்படி அவன் ஹோமம் செய்வதற்கான யாக சாலையெனச் சொல்கிறார்..

எதை. என்பதற்கு முன்..

(இப்படியே சொல்லிக்கிட்டிருந்தா எல்லாரும் பின்னால என்ன போஸ்ட் வருதுன்னு பாக்க ஆரம்பிச்சுடுவாங்க.. ஏதோ சொல்ற..போனாப் போவுதுன்னு விட்டா சொல்லிக்கிட்டே போறியே..என்னதாம்பா அது?

ஷ்ஷ்)

ரதிதேவியும் விளையாடும் இடமாம் அது..சரி..இன்னொன்றும் இருக்கிறது..அதுவும் என்னவென்று ஸ்லோகத்துள் சென்று பார்ப்போம்..

**


ஸ்திரோ கங்காவர்த்த: ஸ்தந முகுளரோமாவளி லதா
கலாவாலம் குண்டம் குஸுமசரதோ-ஜோஹுத புஜ:
ரதேர் லீலாகாரம் கிமபி தவ நாபிர் கிரிஸுதே
பிலத்வாரம் ஸித்தே: கிரிசநயனானாம் விஜயதே

Sthiro gangavartha sthana mukula romaa vali latha
Kalaabhalam kundam kusuma sara thejo hutha bhuja
Rathe leelamgaram kimapi thava nabhir giri suthe
Bhila dwaram siddhe rgirisa nayananam vijayathe

“தாயே..இது கங்கை நதி சலனமற்று இருந்தால் அதில் சுழல் ஏற்பட்டால் எப்படி இருக்கும் அது போலவே இருக்கிறது..

இது உனது ஸ்தனங்களாகிய மொட்டுகளுடன் உரோமவளியான கொடியைத் தாங்கி நிற்கும் வேர்களுக்குப் பாத்தி போன்ற இடமோ..

ஒரு வேளை இது மன்மதனுடைய உடலின் வரும் ஒளியான அக்னி இருக்கும் ஹோம குண்டமோ..

அல்லது இது மன்மதனின் மனைவியான ரதிதேவி விளையாடும் வீடோ..

இது பரமசிவனின் கண்கள் செய்யும் தவத்திற்கான குகை போன்ற இருப்பிடமோ..

இவை எல்லாமும் ஆனது தான் தேவி இது, உனது நாபிக் கமலம்..

இல்லை இல்லை.. என்னால் அதன் அழகை வர்ணிக்க இயலாது/….என் செய்வேன்…..”

***

இந்த ஸ்லோக பாராயணம் ஈரேழு உலகையும் வசீகரிக்கச் செய்யும் ஆற்றல் உடையதாம்..


jayaravi
jayaravi
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 267
இணைந்தது : 28/11/2013

Postjayaravi Thu Mar 13, 2014 1:10 pm

கிரேட் CK - உங்கள் பதிவுகளால் இந்த ஈகரை நாளொரு நாளும் , பொழுதொரு வண்ணமுமாக பிரகாசிகின்றது - நன்றி பல 

அன்புடன் ரவி

சின்னக் கண்ணன்
சின்னக் கண்ணன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 410
இணைந்தது : 19/12/2013

Postசின்னக் கண்ணன் Thu Mar 13, 2014 1:18 pm

மிக்க நன்றி ரவி..

சின்னக் கண்ணன்
சின்னக் கண்ணன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 410
இணைந்தது : 19/12/2013

Postசின்னக் கண்ணன் Sun Mar 16, 2014 10:26 am

நாளும் ஒரு அழகின் அலை....

செளந்தர்ய லஹரி

ஸ்லோகம் .79


“ப்ஹா” என கண்களின் முன்னே விரியும் பசுமையான தேயிலைத்தோட்டங்கள்,, தொலைதூரத்தே மஞ்சு முட்டிக் கொண்டிருக்கும் மலைகள், நடுவில் நெற்றிவகிடாய் ஒற்றைப்பாதை,

அதில் ஒய்யாரமாய்ச் சீறி வரும் ஜீப் சட்டென நிற்க, இந்தப் பக்கத்திலிருந்து ஒரு ஆண் இறங்கி மென்மையாய் முறுவலித்தபடி தன் கால்சராயின் பாக்கெட்டிலிருந்து ஒரு பாக்கெட்டைத் திறந்து உதட்டினில் அந்தப் பொருளை வைக்க, ஊக்கமுள்ளோருக்கு பரம திருப்தி என முடியும் அந்த விளம்பரம்
..
அந்தக் காலத்தில் பார்த்தது இது. வெகு அழகாக இருக்கும் அந்த இடம்..

பிற்காலத்திலாவது போய்ப் பார்க்க வேண்டுமென விசாரித்து வைத்திருந்தேன்..அது ஊட்டியிலிருந்து மைசூருக்குக் கீழிறங்குகையில் வருமாம்.. என்னவோ இதுவரை பார்க்கவில்லை..

எதற்காகச் சொல்லவந்தேன்..ஊட்டியிலிருந்து மைசூர் போகும் வழியில் உள்ள இடைப் பட்ட பிரதேசம்.. அதாவது இடைப் பிரதேசம்..

(நெனச்சேன் மனசாட்சி.. ஆனா ஒத்துக்கவே மாட்டேன்..இடைக்கு நிறைய நல்ல பாட்டெல்லாம் இருக்கு
ஷ்ஷ் வருது..கொஞ்சம் பொறுமையா இரு..)

சரி கண்ணதாசன் நிறைய இடைபற்றி எழுதியிருந்தாலும் கொஞ்சம் குற்றாலக் குறவஞ்சியிலிருந்து நிமிண்டியிருப்பார்..

செங்கையில் வண்டு கலிம் கலிம் என்று
ஜெயம் ஜெயம் என்றாட - இடை
சங்கதமென்று சிலம்பு புலம்பொடு
தண்டை கலந்தாட - இரு
கொங்கை கொடும்பகை வென்றனமென்று
குழைந்து குழைந்தாட - மலர்ப்
பங்கயமே உனைப் பாடிய பிள்ளை முன்
நிலவு எழுந்தாட

கடைசி இரண்டு வரி மட்டும் கண்ணதாசனுடையது… மற்றவை குற்றாலக் குறவஞ்சியில் வருகிறது.

இன்னொரு பாடலில் இளையராஜாவின் வருடும் குரல்..
.
ஒரு மான் மருவும் சிறு பூந்திரையும்

சடை வார் குழலும் இடை வாகனமும்

கொண்ட நாயகனின் குளிர் தேகத்திலே

நின்ற நாயகியே இட வாகத்திலே

ஜகன் மோஹினி நீ சிம்ம வாஹினி நீ

இன்னொரு பாடலில் கேள்வி கேட்கிறார் வாலி..(தான் என நினைக்கிறேன்)

முல்லை மலர் செண்டுகள் கொண்டு கொடி ஆடுது
தென்றல் சதிராடினால் அந்த இடை தாங்குமா?

ஆக இந்த இடை என்று ஒன்று இடையில் இருக்கிறதே..ம் அதன் இம்சை தாளாதது தான்..

காதலன் காதலியைப் பார்க்கிறான்..அந்தக் காலமானால் என்ன இந்தக்காலமானால் என்ன ..வழக்கம் போலப் பொய் தான்

“ ஹாய் சின்னூ.. எப்படிம்மா இருக்க…பார்த்து ரொம்ப நேரமாச்சே..ஒரு மணி நேரத்துக்கு முன்னால பார்த்ததுடா..வாவ்..உனக்கு இந்த கரு நீல போலீரோவும் பிங்க் ஸ்பாகெட்டி டாப்ஸீம்.. நீ அப்படியே ஏஞ்சல் கணக்கா இருக்கடி செல்லம்”

காதலி என்னாவாள்..அவளுக்கு என்னவாகும்

கனிமொழி பேசிடும் காதலன் முன்னே
இனிதாய் இசையும் இடை..

அம்புட்டு தான்.. இதையே கொஞ்சம் ஞாயிறு மலர்கள்ல வர்ற புதுக்கவிதையாட்டம்
எழுதிப் பார்த்தோம் என்றால்..


காதலர்கள்
முழுவதும்
காதலில் சாயாமல் இருப்பதற்கான
நிறுத்தம் தான்
காதலியின் இடை.. ”

(நீ என்ன சொல்லு மனசாட்சி..அட்லீஸ்ட் இடை விட்ட பூவினால் கடை வைத்துக் காட்டுவேன்ற பாட்டையாவது சொல்லப்படாதா..
அடிப்பேன் உன்னை..கொஞ்சம் கம்னு இரேன்)

இந்தப் பாடலில் பகவத்பாதர் என்ன சொல்ல வருகிறார் எனக் கொஞ்சம் எழுத முயற்சிக்கலாமா....

ஆற்றங்கரை யருகேவொரு மரமோவது அழகாய்
ஏற்றங்களை இறக்கங்களை  உணர்ந்தேயது இருக்க
தோற்றோடிய படைபோலவே தெளிவாகவே வெள்ளம்
ஊற்றாய்வர அலைகள்பெருக் கெடுக்ககிளை ஒடியும்

அந்த ஒடிந்த கிளையினைப்போல்
… அம்மா உன்னிடை இருக்கிறதே
பந்தம் துறந்த முனிவனம்மா
…பதற்றம் எனக்கே வருகிறதே
தந்தச் சிலையாய்த் தளிர்மேனி
….தங்க வார்ப்பாய் இருக்கும் உன்
சொந்த மான நூலிடையோ
…சோர்வில் ஒடியக் கூடாதே..

(மன்ச்சு..கரெக்டா வந்திருக்குங்கற..?
வா.. ஸ்லோகத்துக்குள்ள போய்ப் பார்ப்போம்)

***
நிஸர்க்க க்ஷீணஸ்ய ஸ்தநதடபரேண க்லமஜுஷோ
நமந் மூர்தேர் நாரீதிலக சநகை: த்ருட்யத இவ
சிரம் தே மத்யஸ்ய த்ருடித தடிநீ தீரதருணா
ஸமாவஸ்த்தா ஸ்த்தேம்னோ பவது குசலம் சைலதநயே

Nisargha ksheenasya sthana thata bharena klamajusho
Namanmurthe narree thilaka sanakaii -sthrutayatha eva
Chiram thee Madhyasya thruthitha thatini theera tharuna
Samavasthaa sthemno bhavathu kusalam sailathanaye

***
”மங்கையர்க்கெல்லாம் உயர்வானவளே..மங்கையர் திலகமே..மலையரசன் மகளே..

இயற்கையிலேயே மிக நுண்ணியதும் மெலிந்ததுமான உன் இடையானது உனது நகில்களின் பாரம் தாங்காமல் வருத்தத்தில் இருக்கிறது..

அதனால் சற்றே வளைந்த வடிவத்துடனும், மெல்ல மெல்ல ஒடிந்து விடுவது போன்றும் தோற்றம் தருகிறது.
.
இது எப்படி என்றால் கரை புரண்டோடும் ஆற்று வெள்ளத்தில், கரையிலிருக்கும் ஒரு மரத்தின் கிளை, அந்த வெள்ளத் தாக்குதலால் முற்றும் ஒடியாமல் கொஞ்சமாக ஒடிந்து அந்த வெள்ள நீரினை வருடிக் கொண்டிருப்பது போலத் தோன்றுகிறது..

தேவி..உனது இடை நீண்ட காலம் நலமுடன் விளங்கட்டும்..”

**
இந்த ஸ்லோக பாராயணம் அனைவரையும் கவர்ந்திழுக்கும் காந்த சக்தியைப் பெற்றுத் தருமாம்





சின்னக் கண்ணன்
சின்னக் கண்ணன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 410
இணைந்தது : 19/12/2013

Postசின்னக் கண்ணன் Sun Mar 16, 2014 10:30 am

நாளும் ஒரு அழகின் அலை....

செளந்தர்ய லஹரி

ஸ்லோகம் .80

“ஹாய்..”

“ஹாய்..”

“என்னடா குரல்ல சுரத்தே காணோம்.. என்ன விஷயம்..”

“ஒண்ணுமில்லை மன்ச்சு”

“எனக்குத் தெரியுமே..சாயந்தரத்திலருந்து நீ பட்ட அவஸ்தையை நானும் பார்த்துக்கிட்டு தானே இருந்தேன்..”

“…”

“என்னால் சிரிப்ப அடக்கவே முடியுலைடா..உன்னோட ஆஃபீஸ் ஓமானி ஸ்டாஃப் தானே காரணம்.. அரை குறை இங்க்லீஷ்ல கொஞ்சம் அரபிக்கும் கலந்து என்னமா பேசினாண்டா.. அதுவும் எதைப் பத்தி..அவனோட ஒன்றரை வயசுக் குழந்தை பேசறதப் பத்தி..”

“ஆமா.. அதுக்கென்ன சிரிப்பு வேண்டியிருக்கு”

“என்னடா..நீ யோசிக்கவே இல்லையா.. ஒருமனுஷனால எப்படி இடைவிடாம கமா, புஃல்ஸ்டாப் வைக்காம பேச முடியும் என்று”

“என்ன சொன்ன..என்னசொன்ன.. ஹா..இதத் தான் யோசிச்சுக்கிட்டிருந்தேன்..இடை விடாம பேசறதா.. தாங்க்ஸ் மன்ச்சு”

“எதுக்கு”

“இடை விடாமல் பேசினது ஓமானின்னயே.. அதே மாதிரி தான் இடை விடாம இந்த ஸ்லோகத்திலயும் இடையைப் பத்திச் சொல்றார் பகவத் பாதர்..”

“சரி.. அப்ப சில பாட்டும் பாடுவியே..”

“ஒடிவது போல் இடை இருக்கும் இருக்கட்டுமே” என்று தேவிகா பாட்டில் வரும்

“அதான் தெரியுமே.. அப்புறம்”

கொஞ்சம் பார்க்க அழகான வாலிபனா ஒரு ஹீரோ, அழகான கொழுக் மொழுக் ஹீரோயினை மலை மேல பார்க்கறார்.. பாடணுமே..பாட்டும் பாடறார்.. பாடிக்கிட்டே இருக்கறச்சே கேமரா கீழே ஹீரோயின் காலைக் காட்டி மேலே இடைப்பக்கம் வர்றது..

ஹீரோ அந்த இடைலருந்து மலைமுகட்டைப் பார்க்கறார்..இடை, வானம், தரை எல்லாம் ஒண்ணா தெரியுது..ஒடனே.
.
தரையோடு வானம் விளையாடும் கோலம்
இடையோடு பார்த்தேன் விளையாடக் கேட்டேன் அப்படின்னுசொல்றார்.

. நல்ல கற்பனைல்ல…நல்லாவும் பிக்சரைஸ் பண்ணியிருப்பாங்க..”

“நீ இன்னும் விஷயத்துக்கே வரலை நீ..

முன்னால ஒரு ஸ்லோகத்துல பகவத் பாதர் தேவியின் கழுத்தில் மூன்று கோடுகள் இருக்குன்னு சொல்லியிருந்தாரில்லயா..இதில் தேவியின் இடுப்பிலும் அந்த பாக்ய ரேகைகள் இருக்குன்னு சொல்றார்..

“அப்படியா..”

“ஆமாம்..பாக்ய ரேகைகள் நெற்றி கழுத்து, இடை ஆகிய இடங்களில் மூன்று கோடுகளாகப் புலப்படுமாம்..

“சரி!. வா ஸ்லோகத்துக்குள்ள போய்ப் பார்க்கலாம்..


***

குசெள ஸத்யஸ் ஸ்வித்யத் தடிகடித கூர்பாஸ பிதுரெள
கஷந்தெள தோர்மூலே கநகலசாபெள கலயதா
தவ த்ராதும் பங்காத் அலமிதி வலக்நம் தநுபுவா
த்ரிதா நத்தம் தேவி த்ரிவளி லவலீவல்லிபிரிவ


Kuchou sadhya swidhya-sthata-ghatitha koorpasabhidurou
Kasnthou dhormule kanaka kalasabhou kalayatha
Thava thrathum bhangadhalamithi valagnam thanubhava
Thridha naddham devi trivali lavalovallibhiriva

***

தேவி.. பரமசிவனை மணந்தபிறகு அவரது அன்பு மழையில் நனைந்து, எப்பேர்ப்பட்ட கணவன் உனக்கு வாய்த்திருக்கிறான்., அவனுக்கு புகழ்மாலைகள் பல இருக்கின்றனவே என எண்ணி பெருமையில் அகமகிழ்ந்து பூரிக்கிறாய்..

அதனால் உனது தங்கக் கலசம் போன்ற நகில்கள் உடையைக் கிழிப்பது போலத் தோற்றம் கொள்கின்றது.. அந்த நகில்களின் பாரம் தாங்கமாட்டாமல் உன் இடையோ ஒடிந்து விடும் போல இருக்கிறது என எண்ணிய மன்மதன் வள்ளிக் கொடியை எடுத்து உன் இடுப்பில் முன்று சுற்றாகச் சுற்றி வைத்தாற்போன்று உன் இடுப்பில் இருக்கும் பாக்ய ரேகைகள் எனக்குத் தெரிகின்றது..”

**

தேவியின் இடைப்பகுதியை தியானிப்பவர் மூவுலகிற்கு இடையே வைத்து வணங்கப் படுவதோடு, அனைவரையும் வசீகரிக்கும் தன்மையும் பெறுவார்களாம்..


Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9826
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun Mar 16, 2014 11:48 am

நாளும் ஒரு அழகின் அலை - Page 10 103459460



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
சின்னக் கண்ணன்
சின்னக் கண்ணன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 410
இணைந்தது : 19/12/2013

Postசின்னக் கண்ணன் Sun Mar 16, 2014 12:37 pm

டாக்டர் செளந்தர பாண்டியன் அவர்களுக்கு மிக்க நன்றி..



Dr.S.Soundarapandian wrote:நாளும் ஒரு அழகின் அலை - Page 10 103459460


Sponsored content

PostSponsored content



Page 10 of 14 Previous  1 ... 6 ... 9, 10, 11, 12, 13, 14  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக