ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:28 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Yesterday at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Fri Jul 05, 2024 12:23 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நாளும் ஒரு அழகின் அலை

+5
ராஜா
vasudevan31355
ayyasamy ram
myimamdeen
சின்னக் கண்ணன்
9 posters

Page 9 of 14 Previous  1 ... 6 ... 8, 9, 10 ... 14  Next

Go down

நாளும் ஒரு அழகின் அலை - Page 9 Empty நாளும் ஒரு அழகின் அலை

Post by சின்னக் கண்ணன் Sun Feb 02, 2014 6:09 pm

First topic message reminder :

ஈகரை நண்பர்களுக்கு,

வணக்கம்.. சென்ற வருடம் முக நூலில் நாளும் ஒரு அழகின் அலை என்ற தலைப்பில் செளந்தர்ய லஹரி - 100 ஸ்லோகங்களுக்கு நான் புரிந்து கொண்டவற்றை எழுதிப் பார்த்தேன்..

கொஞ்சம் விருத்தங்கள்,வெண்பாக்கள் சில பல உதாரணங்கள் என எழுதிப் பார்த்திருக்கிறேன். அதை இங்கு இடுகிறேன்..

நாளும் ஒன்று என்றில்லை.. மூன்று நான்கும் வரும்..புன்னகை

அன்புடன்

சின்னக் கண்ணன்..
சின்னக் கண்ணன்
சின்னக் கண்ணன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 410
இணைந்தது : 19/12/2013

Back to top Go down


நாளும் ஒரு அழகின் அலை - Page 9 Empty Re: நாளும் ஒரு அழகின் அலை

Post by சின்னக் கண்ணன் Sun Mar 09, 2014 10:23 am

நாளும் ஒரு அழகின் அலை....

செளந்தர்ய லஹரி

ஸ்லோகம் .69


“மாங்கல்யம் தந்துனானேன மம ஜீவன ஹேதுனா
கண்டே பத்நாமி ஸுபகே த்வம் ஜீவ சரதஸ்சதம்..”

திருமணத்தில் தாலி கட்டும் பொழுது சொல்லப் படும் இந்த ஸ்லோகத்தின் அர்த்தம் என்ன..

மங்களவடிவாகத் திகழும் அழகிய பெண்ணே..உன்னுடன் துவங்கும் இல்லற வாழ்வு எனக்கு இனிதாக அமைய வேண்டும், என்னுடைய ஜீவனுக்கு இதமானதே தரவேண்டும் என்று உறுதி கூறி இந்தத் திருமாங்கல்யக் கயிறை உன் கழுத்தில் அணிவிக்கிறேன். என் இல்லறத் துணையாக அனைத்து சுக துக்கங்களிலும் பங்கேற்று நீ நூறாண்டு காலம் வாழ்வாயாக..

(என்னடா மஸ்கட்ல கல்யாணம் ஏதாவது பண்ணி வைக்கப் போறியா..

இதானே வேணாங்கறது..அதுக்கெல்லாம் நிறையப் படிச்சுருக்கணும்.. நல்லவேளை.. ஏன் சினிமாப் பாட்டைப் பாடறேன்னு கேக்காம போனியே..

ஆமாம்ல.. மனோரமா பாடுவாங்க தானே)

மாங்கல்யச் சரடு, தாலி, என்றும் சொல்லப் படும் மஞ்சள் கயிறானது ஒன்பது இழைகளைக் கொண்டதாகும் அவற்றை மூன்றாகச் செய்து பின் அந்த மூன்றையும் ஒன்றிணைத்து ஒரே கயிறாக ஆக்குவர்..பின் அவற்றில் விரலி மஞ்சளை வைத்து மஞ்சள் வண்ணம் ஏற்றுவார்களாம்..

ஏன் ஒன்பது இழை..

இல்லற வாழ்க்கை தொடங்கப் போகும் பெண் ஒன்பது குணங்களைக் கொண்டவளாக இருக்க வேண்டுமாம்..

தெய்வீகத் தன்மை தூய்மையான சிந்தனை , மேன்மை தொண்டுள்ளம்,தன்னடக்கம்,ஆற்றல்,விவேகம்,உண்மை,உள்ளதை உள்ளபடி புரிந்துகொள்ளுதல் எனப் பெரியவர்கள் சொல்வார்கள்..

( ஏன் ஆணிடம் விட்டார்கள் எனத் தெரியவில்லை..)

அம்பிகையின் கழுத்தில் சாமுத்திரிகா லக்ஷணப் படி மூன்று ரேகைகள் உள்ளனவாம்..அவை பாக்ய ரேகைகள்..

(அடுத்து என்ன சங்கீதமா..
ஷ்ஷ்.. )

சங்கீதஸ்வரங்கள் ஏழே கணக்கா இன்னும் இருக்கா என்று ஒரு பாடல் வரும்..
சங்கீத ஸ்வரங்கள் என்று பார்த்தால் ஸரிகமபதநி- ஷட்ஜம், ரிஷபம்,காந்தாரம்,மத்திமம்,பஞ்சமம்,தைவதம், நிஷாதம்..

(ஏண்டா ஏதாவது பாட்டு டியூஷன் போறியா..
ஷ்ஷ்)

இதில் ஷட்ஜமம் மயில் த்வனி, மத்திமம் க்ரெளஞ்சம் த்வனி, காந்தாரம் ஆடு த்வனி கொண்டது..இவை முக்கியமான க்ராமங்களாம்.
.
(சரி விஷயத்துக்கு வாயேன்)

இந்த மாங்கல்யச் சரட்டிற்கும், இந்த க்ராமங்களுக்கும் உள்ள லிங்க் என்ன என்பதை ஸ்லோகத்தில் பார்க்கலாம்..

**
கலே ரேகாஸ்திஸ்ரோ கதி-கமக-கீதைக நிபுணே
விவாஹ-வ்யாநத்த-ப்ரகுணகுண ஸங்க்யா ப்ரதிபுவ:
விராஜந்தே நானாவித-மதுர-ராகாகர-புவாம்
த்ரயாணாம் க்ரமாணாம் ஸ்திதி-நியம ஸீமான இவதே


Gale rekhas thisro gathi-gamaka-gith'aika nipune
Vivaha-vyanaddha-praguna-guna-samkhya-prahibhuvah;
Virajanthe nana-vidha-madhura-ragakara-bhuvam
Thrayanam gramanam sthithi-niyama-seemana iva the.

“அம்பிகையே, சங்கீதத்தில் மார்கம் தேசி என்னும் கதிகளுடன் பதினைந்து வகை ஸ்வர கமகங்களுட்ன் கீதம் பாடுவதில் ஒப்பற்ற திறமை உடையவளே..

சாமுத்ரிக லக்ஷணப் பிரகாரம் உன் பின் கழுத்தில் மூன்று பாக்ய ரேகைகள் ஏற்கெனவே இருக்கின்றன.

.உனக்கு பரமசிவன் மாங்கல்ய தாரணம் அணிவித்த போது அந்தக் கயிற்றால் விளைந்த மூன்றுகோடுகளாய் அவை தோற்றமளிக்கின்றன..

அதுமட்டுமல்ல..பலவிதமான இனிமையான மாளவி, மத்யமாவதி போன்ற ராகங்களுக்கு இருப்பிடமாயுள்ள ஷட்ஜம்,மத்திமம்,காந்தாரம் என்னும் மூன்று தொகுதிகளுக்கு இடத்தையும் எல்லையையும் பிரித்துக் காட்டுவன போல அவை விளங்குகின்றன..”
**

சங்கீதத்தின் பிறப்பிடமாகவும், தீர்க்க ஸெளமாங்கல்யத்தின் குறியீடாகவும் வர்ணிக்கப் படும் தேவியின் கழுத்துப்பகுதியை தியானிப்பவருக்கு சங்கீதத்தில் மேன்மை கிட்டுமாம்..
சின்னக் கண்ணன்
சின்னக் கண்ணன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 410
இணைந்தது : 19/12/2013

Back to top Go down

நாளும் ஒரு அழகின் அலை - Page 9 Empty Re: நாளும் ஒரு அழகின் அலை

Post by சின்னக் கண்ணன் Sun Mar 09, 2014 10:26 am


நாளும் ஒரு அழகின் அலை....

செளந்தர்ய லஹரி

ஸ்லோகம் .70

“அச்சச்சோ கை கை மலர்க்கை அம்மம்மோ கை மேல் கை வை”

“வாய்யா சிக்கலாரே, வந்தவுடனே பாட்டா”

“போப்பா..ஒண்ணும் சொல்றதுக்கில்லை”

“ஏன்”

“திரைப்பாடல்கள்ல பெண்களோடகையை அவ்வளவா வர்ணிக்கவே இல்லை..”

“இல்லையே பூவை கையிது தாழம்பூங்கற மாதிரில்லாம் இருக்கே”

“சரி..அதுக்கு அப்புறம் வருவோம்..பரமசிவனோட திருவடியையும் முடியையும் தேடிப்புறப்பட்ட கதை தெரியுமோ”

“தெரியாம எனன.. விஷ்ணு ஈசனோட பாதத்தைத் தேடிப் போனார்.வராஹ வடிவெடுத்து.. அவராலக் .காண முடியலை..திரும்ப வந்து பரமசிவன் கிட்ட ஸாரி கேட்டுக்கிட்டார்..ஆனா இந்தப்ரம்மா ஈசனோட முடி காணப் போனாரா..”

“என்ன ஆச்சாம்”

“ம்ஹீம்.. அவராலயும் பார்க்க முடியலை..பட் அவரால தோல்வியை ஒத்துக்க முடியலை.. ஸோ திரும்பறச்சே ஒரு தாழம்பூ கிட்ட போய் ஓ லிட்டில் ஃப்ளவர், எனக்கு ஹெல்ப் பண்ணினா நான் உனக்கு வரம் தருவேன்னு சொல்லியிருக்கார்.. தாழம்பூவும் சிவன் கிட்ட போய் ப்ரம்மா ஒங்க திருமுடியைத் தரிசித்ததை நான் பார்த்தேன்னு சொல்லிடுத்து”

“அப்புறம்..”

சிவனுக்குக் கோபம் வந்து தாழம்பூ கிட்ட உனக்கு வாசமில்லாமல் போகக் கடவதுன்னு சாபம்கொடுத்துட்டு மெய்னா பொய் சொல்ல வச்ச ப்ர்ம்மாவோட ஐந்தாவது தலையைத் திருகி எடுத்துட்டாராம்..”

“ப்ரம்மா என்ன பண்ணார்..”

“வா.. அதைப் பத்தியும், அம்பாளோட கைகள் பற்றியும் பகவத்பாதர் என்ன சொல்கிறார்னு பார்க்கலாம்..

**
ம்ருணாலீ-ம்ருத்வீனாம் தவ புஜலதானாம் சதஸ்ருணாம்
சதுர்ப்பி: ஸெள்ந்தர்யம் ஸரஸிஜபவ: ஸ்தெளதி வதனை:
நகேப்ய: ஸந்த்ரஸ்யன் ப்ரதம-மதனா தந்தகரிபோ:
சதுர்ணாம் சீர்ஷாணாம் ஸம-மபய-ஹஸ்தார்ப்பண-தியா

Mrinali-mridhvinam thava bhuja-lathanam chatasrinam
Chaturbhih saundaryam Sarasija-bhavah stauthi vadanaih;
Nakhebhyah samtrasyan prathama-madhanadandhaka-ripo
Chaturnam sirshanam samam abhaya-hasth'arapana-dhiya.

””அம்மா, பரமசிவன் தனது ஐந்தாவது தலையை நகத்தால் கொய்து விட்டதால் பயந்த பிரம்மாவானவர் என்ன செய்கிறார்.

. உனது நான்கு மிருதுவான தாமரைத் தண்டினைப் போன்ற கைகளை வணங்கிய படியே இருக்கிறார்..எதற்காக.

. மீதமுள்ள தனது நான்கு தலைகளையும் காத்துக்கொள்வதற்காகத் தான்..”


தேவி கருணை மிகக் கொண்டவள்..அவள் சிவனுக்கு அபராதம் செய்தவரையும் மன்னிப்பாள்.. இந்த சுலோகத்தின் பாராயணமானது எல்லா பாபங்களையும் போக்கும் தன்மை கொண்டதாகும்..
சின்னக் கண்ணன்
சின்னக் கண்ணன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 410
இணைந்தது : 19/12/2013

Back to top Go down

நாளும் ஒரு அழகின் அலை - Page 9 Empty Re: நாளும் ஒரு அழகின் அலை

Post by T.N.Balasubramanian Sun Mar 09, 2014 11:01 am

நன்று நன்று

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35032
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

நாளும் ஒரு அழகின் அலை - Page 9 Empty Re: நாளும் ஒரு அழகின் அலை

Post by சின்னக் கண்ணன் Sun Mar 09, 2014 12:58 pm

நன்றி ரமணீயன் ஐயா..
சின்னக் கண்ணன்
சின்னக் கண்ணன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 410
இணைந்தது : 19/12/2013

Back to top Go down

நாளும் ஒரு அழகின் அலை - Page 9 Empty Re: நாளும் ஒரு அழகின் அலை

Post by சின்னக் கண்ணன் Mon Mar 10, 2014 10:11 am

நாளும் ஒரு அழகின் அலை....

செளந்தர்ய லஹரி

ஸ்லோகம் .71

“நகம்னவொடனே உனக்கு என்ன தோணுது மனசாட்சி

“’ நகத்தை வெட்டியெறி அழுக்குச் சேரும்னு சுந்தர ராமசாமியோட கவிதைதான் நினைவுக்கு வருது.. நல்லா இருக்கும்..அப்புறம் அதே தொகுப்புல உபயம்னு ஒரு கவிதை வரும்.. அதுவும் குட். ரொம்ப வருஷத்துக்கு முன்னால படிச்சது..இன்னும் நினைவில் இருக்கு”

”உன் கிட்ட போய்க் கேட்டேனே.. சமயத்தில நீ என்னோட மனசாட்சியான்னு சந்தேகமா இருக்கு..

”பவழமென விரல் நகமும் பசுந்தளிர் போல் வளை கரமும்”

“வேணாம்…மேல பாடாதே..அழுதுடுவேன்..”

“சரி இதுஓகேயா விரல்களிலே பெளர்ணமி வெளிச்சம்”

“ஏண்டா படுத்தற..அது இதழ்களிலே பெளர்ணமி வெளிச்சம்..ஓ பூர்ணிமா ஜெயராமாக்கும்.அதான்...”

“சரி.. நகத்தைப் பற்றியுள்ள பாடல்கள்னு பார்த்தா..

”ஓ விண்மீன் விண்மீன் கொண்டு விரலின் நகம் சமைத்து மின்னலின் கீற்றுகள் கொண்டு கைரேகை செய்தானோ”

நங்கை கொண்ட விரல்கள் அதிசயமே
நகம் என்ற க்ரீடம் அதிசயமே

எடுத்துக்கொடுக்கையிலே இருவிரல் மோதும்
நகங்கள் உரசிக் கொண்டால் அனல் உருவாகும்.

இதெல்லாம் வைரமுத்துவோடது..

அஞ்சுவிரல் பட்டாலென்ன அஞ்சுகத்தைத்தொட்டாலென்னன்னும் ஒரு பாட்டு வரும்..”

“சரி..போதும்..அடுத்தது..”

செந்தாமரைப்பூவில் அமர்ந்தவளே..செந்தூரத்திலகம் அணிந்தவளே..

“அப்படியே மார்கழி மாசக் காலை நேரத்துக்குக் கொண்டுபோய்ட்டப்பா.. ஏன் திடீர்னு பக்திப் பாடல்..”

“வா.. அம்பாளோட விரல் நகத்துக்கும் லஷ்மியோட செந்தாமரைப் பூவிற்கும் என்ன சொல்லியிருக்கார் பகவத் பாதர்னு பார்க்கலாம்..”

**
நகாநாம் உத்யோதை: நவநளிந ராகம் விஹஸதாம்
கராணாம் தே காந்திம் கதய கதயாம: கதம் உமே
கயாசித் வா ஸாம்யம் பஜது கலயா ஹந்த கமலம்
யதி க்ரீடல்லக்ஷ்மீ சரணதல லாக்ஷராஸ சணம்

Nakhanam uddyotai nava-nalina-ragam vihasatham
Karanam te kantim kathaya kathayamah katham Ume;
Kayachid va samyam bhajatu kalaya hanta kamalam
Yadi kridal-lakshmi-charana-tala-laksha-rasa-chanam.

உமையே.. உன் விரல் நகங்களில் இயற்கையாகவே சிவந்த ஒளி இருக்கின்றது அது உன் கை ரேகைகளுள் சென்று உன் கைகளையே பிரகாசிக்க வைக்கிறது..

அந்த கரங்களின் நிறத்தை நான் எப்படி ஒப்பிடுவேன்.. அழகாக அதிகாலையில் சமர்த்தாய் சூரியனைப்பார்த்து மலரும் தாமரை மலரின் நிறத்தைக் கொண்டிருக்கிறது என்றா.. இல்லையே சரியில்லையே..

தாமரைமலரின் மேல் அமர்ந்திருப்பவள் மஹா லஷ்மி.. அவள் தனது திருவடிகளிலில் செம்பஞ்சுக் குழம்பினால் போடப்பட்ட நலங்குடன் இருக்கிறாள்..அப்படியே தாமரை மலரில் அமர்ந்ததால் தாமரையும் சற்று பொலிவு பெற்று மேலும் சிவந்து காணப் படுகிறது..

.இருந்தாலும் கூட அந்த சிவந்த நிறமும் உன் கரங்களின் நிறத்துக்கும் அழகுக்கும் ஈடாகுமா என்ன..ஒரு சிறியபங்கை வேண்டுமானால் அந்த நிறம் கொண்டிருக்கலாம்..”

அம்பிகையின் கைகள் உவமைகளுக்கு அப்பாற்பட்டவை..இந்த சுலோக பாராயணம் திருமகளின் பூரண அருளையும் மாசு மறுஅற்ற மனத்தையும் கொடுக்குமாம்..
சின்னக் கண்ணன்
சின்னக் கண்ணன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 410
இணைந்தது : 19/12/2013

Back to top Go down

நாளும் ஒரு அழகின் அலை - Page 9 Empty Re: நாளும் ஒரு அழகின் அலை

Post by சின்னக் கண்ணன் Mon Mar 10, 2014 10:13 am

நாளும் ஒரு அழகின் அலை....

செளந்தர்ய லஹரி

ஸ்லோகம் .72


டபக் என்று மன அம்பாஸடர் காரை ரிவர்ஸ் எடுத்து பலவருடங்கள் பின்னோக்கிச் சென்றால்…

(வெய்ட் வெய்ட்..ஏண்டா உவமை சொல்றது தான் சொல்றே..ஒரு மன ஆடி, மன பிஎம்டபிள்யூன்னு சொல்லப் படாதா..
ஷ்ஷ்)

கல்லூரியில் சேர்ந்த முதல் வருடம்.. முதல் நாள்..உள்ளே வந்தார் அந்தப் பேராசிரியர்..

சற்றே உயரம் மட்டு.. மா நிறம்.. உள்ளே நுழைந்து “குட்மார்னிங்..”

பின் எதுவும் பேசாமல் குதித்து ஏறி கரும்பலகையில் வரைய ஆரம்பித்தார்.. முடித்ததும் சற்றே சுமாரான யானை வெள்ளை பார்டருடன் காட்சியளிக்க..இது என்ன?

நாங்கள் எல்லாம் சினிமா மாணவர்கள் இல்லையே.. ரியல் மாணவர்கள்..யானை..எனக் குரல் கொடுக்க, யெஸ்.. எப்படி உங்களுக்கு..யானைன்னவுடனே இது நினைவு வருதோ..அது போல இந்தப் பாடத்துல எல்லாம் நினைவுக்கு வரவேண்டும்..” எனச் சொல்லித் தொடர்ந்தது இன்னும் நினைவிருக்கிறது..

தொடர்ந்த வருடங்களில் குறைந்தது பத்து தடவையாவது யானை படம் வரைந்திருப்பார் அந்த புரொபசர்..

(யானையைப் பத்திச் சொல்லப் போறியா..
ம்ம் ஆமாம்..ஆனா இல்லை)

கருமை நிறம் கொண்டு கனத்த உடல் கொண்டு, குட்டிக் கண் கொண்ட அந்த மிருகம் எப்போதுமே அழகு தான். அதன் நடையும் தான்.

இரா.முருகன் எழுதிய கவிதை தான் எனக்கு யானையைப் பார்க்கும் போதெல்லாம் நினைவுக்கு வரும்.. நெற்றிக்கோடுகள் வெளுத்துத் துலங்க என ஆரம்பிக்கும்..

யானைக்கு மத்தகம் என்று இருக்கிறது..என்னது அது..?

மத்தகம் என்பது யானையின் முன் நெற்றிப்பகுதி..இதுபற்றிக் கம்பராமாயணத்தில் என்ன சொல்லியிருக்கிறதென்றால்..

(என்ன ஆச்சுடா உனக்கு..கிட்ட வா ஜூரமா..
ஷ்ஷ்)

பாங்கின் உத்தரியம் எனப் படர் திரை தவழ பாரின்
வீங்கு நீர் அழுவம் தன்னுள் விழுமதக் கலுழி வெள்ளத்து
ஓங்கல்கள் தலைகள் தோன்ற ஒளித்து அவண் உயர்ந்த கும்பம்
பூங்குழற் கங்கை நங்கை முலை எனப் பொலிந்த மாதோ.

கங்கைக் கரை வெள்ளத்தில் யானைகள் செல்வது பற்றி வருகிறது இப்பாடலில்..

கங்கையாற்றின் வெள்ளத்தினுள்ளே யானைகளின் மலைபோன்ற உடல்கள் முழுக்க மறைந்திருக்கிறதாம்..

அவற்றின் உயர்த்திய மத நீர் பொழியும் தலைகளில் மத்தகங்கள் மட்டுமே வெளியே தெரிகிறதாம்.. அவை எப்படி இருக்கிறதாம்..

அழகிய அலைகளாகிய உத்தரீயம் தவழுகின்ற பூங்குழல் கொண்ட கங்கையாகிய பெண்ணின் மார்பகங்களைப் போலத் திகழ்ந்தன என்கிறார் கம்பர்..

யானை நெற்றியில் இருபக்கமும் இரண்டு திரட்சிகளாக மத்தகம் தோன்றும். அவை மார்பகம்போல இருந்தனவாம்.

அது என்ன மத நீர்.. மத நீர் என்பது யானையின் முன் நெற்றிப் பகுதியினுள் உள்ள வெற்று அறை போன்ற பகுதியில் ஊறும் நீர்.. அது ஊறினால் யானைகள் மதம் பிடித்து அலையும் என்பார்கள்..

(நீ ஒண்ணும் ஏன் ஊறுதுன்னுல்லாம் சொல்ல ஆரம்பிக்க வேண்டாம்..என்னாச்சு உனக்கு..ரொம்பப்பேசற.. பனடால் போட்டுக்கறியா..பாட்டெல்லாம் இன்னும் பாடலை..

ஷ்ஷ்)

"தாய்ப்பால் கொடுத்தாள் பராசக்தி-தனிக்கருணை
தமிழ்ப்பால் கொடுத்தான் தமிழ்முருகன்
வாய்ப்பாலால் பாடும் பழந்தமிழில் பாடத்தொடங்குகிறேன்
ஆடும் மயில் வேலன் அருள்"

(அப்பாடா.. ஒருவழியா ஸ்ரீதேவி இருக்கற பாட்டாப் பாடியிருக்க.. நீ நார்மல் தான்..

இது கொஞ்சம் ஓவராத் தெரியலை உனக்கு மனசாட்சி.. அப்ப ஸ்ரீ தேவி இத்த்னூண்டு பொண்ணா இருப்பாங்க..)

ராதா ஜெயலஷ்மி பாடிய இந்தப்பாடல் ஆதி பராசக்தி படத்தில் திருமலை நாயக்கர் சபையில் குமர குருபரர் பாட தி. நா. மடியில் மீனாட்சியாகிய ஸ்ரீதேவி கேள்வி கேட்பது போல் வரும்.. எழுதியது கண்ணதாசன்..

யானையின் மத்தகம், தாய்ப்பால் வழங்கும் அன்னை இரண்டையும் பற்றி இந்த ஸ்லோகத்தில் என்ன கூறியிருக்கிறார் என்று பார்ப்பதற்கு முன் ஒரு விஷயம்.

.இந்த ஸ்லோகத்தில் பகவத் பாதர் ஜோக்கும் அடித்திருக்கிறார்..அதாவது ஹாஸ்யமும் பண்ணியிருக்கிறார்..

(வாருங்கள் ஸ்லோகத்துக்குள் சென்று பார்ப்போம்னு சொல்ல விட்டுட்டியே.. )

அஃதே.

**
ஸமம் தேவி ஸ்கந்த த்விபவதந பீதம் ஸ்தநயுகம்
தவேதம் ந: கேதம் ஹரது ஸததம் ப்ரஸ்நுதமுகம்
யதாலோக்யாசங்காகுலித ஹ்ருதயோ ஹாஸ ஜநக:
ஸ்வகும்பெள ஹேரம்ப: பரிம்ருசதி ஹஸ்தேந ஜடிதி

Samam devi skanda dwipa vadana peetham sthanayugam
Thavedham na khedham harathu sathatham prasnutha mukham
Yada loakakhya sankha kulitha hridayo hasa janaka
Swa kumbhou herambha parisrusathi hasthena jhhaddithi

”தாயே..உன்னிரு மகன்களான குமரனும் வினாயகனும் ஒரே சமயத்தில் உன்னிடம் பாலமுதம் பருகுகின்ற உன்னுடைய இரு ஸ்தனங்க்ளும் எங்களுக்கு எப்போதும் துன்பத்தைப் போக்கட்டும்..

அது சரி..இப்படி உன் குழந்தைகளுக்கு நீ அமுது வழங்கும் போது ஒன்று நிகழ்ந்ததே..அதைப் பார்த்து நீயும் பரமனும் சிரித்தீர்களே நினைவில்லையா உனக்கு. சொல்கிறேன்.
.
உன்னிடம் பால் பருகிய பால வினாயகன் கொஞ்சம் சந்தேகப்பட்டு.”அச்சச்சோ..அம்மா கிட்டக்க என்னோட மத்தகங்கள் போயிடுத்தா” என நினைத்துத் தன் தலையைத் தடவி, அங்கு மத்தகங்கள் இருக்கக் கண்டு வெட்கப் பட்டாரில்லையா.. அதைப் பார்த்து நீங்க்ள் இருவரும் சீரித்துக் கேலி செய்தீர்கள் தானே..”

**“

இந்த ஸ்லோக பாராயணம் தேவியின் அருள் சுரக்கச் செய்யுமாம்..”
சின்னக் கண்ணன்
சின்னக் கண்ணன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 410
இணைந்தது : 19/12/2013

Back to top Go down

நாளும் ஒரு அழகின் அலை - Page 9 Empty Re: நாளும் ஒரு அழகின் அலை

Post by சின்னக் கண்ணன் Tue Mar 11, 2014 10:17 am

நாளும் ஒரு அழகின் அலை....

செளந்தர்ய லஹரி

ஸ்லோகம் .73

“தத்தித் தத்தி நடந்து வரும் தங்கப் பாப்பா
இத்தனை நாள் எங்கிருந்தாய் சொல்லு பாப்பா
தங்கக் கைக்கு முத்தம் தர்றேன் காட்டு பாப்பா”

என்றெல்லாம் கொஞ்சி விளையாடப்படும் பாப்பா பின் என்ன ஆகும்..?

23 ஊட்டச் சத்துகள் உள்ள காம்ப்ளான் குடித்து நான் வளர்கிறேனே மம்மி என்று படக்கென்று பீர்க்கங்காய் வளர்ந்தாற்போல, வளர்ந்து கல்லூரி செல்லும்..

சும்மா இருக்காது.. டாட் புதுசா செல்ஃபோன் வந்துருக்கு ஜஸ்ட் 35 கே தான்.. டாட் என்னோட ஐபாட் பழசாய்டுத்து..புதுசா வேணும் என்று சொல்லிச் செலவு வைக்கும்..

பின் சமர்த்தாய் வேலைக்குப்போக ஆரம்பித்ததும் இப்போ எதுக்குப்பா அவசரம் கல்யாணத்துக்கு, லெட் மி ஸேவ் ஸம் மணி என்கும்..

பின் பிடிகொடுக்காமல் ஓகே சொல்லி வரும் வரன்களை ரிஜக்ட் செய்யும்.”ஸீ டாட்.. ஐ திங்க் ஹி இஸ் நாட் சூட்டபிள் ஃபார் மி.. என்னமோ டாடி மனசுக்குள்ள மத்தாப்பு எதுவும் பூக்கவே இல்லை…யூ நோ டாட் அவன் வர்றச்சயே நடை ஒழுங்கா இல்லை கால்ல அடிபட்ட வாத்தாட்டம் நடக்கறான்.. எக்ஸடீரா...அப்படிச் செய்தால் அந்தத் தந்தை என்ன நினைப்பார்.. இவள் பாப்பாவாகவே இருந்திருக்கக் கூடாதா என்று தானே....

இது பற்றி பக்கத்து வீட்டுச் சுட்டிப் பெண்ணிடம் (தெலுங்கு,5 வயசு) ஆங்கிலத்தில் கேட்டேன்.. நீ வளராமயே இப்ப்டியே இருக்கேன்னு வை.. ஓகேயா உனக்கு..

”நோ அங்க்கிள் போர்.. ஸ்கூலுக்குப் போய்க் கிட்டே இருக்கணும். அதுக்கு நான் வளர்ந்து பெரியவளாகி உன்னை மாதிரி வேலைக்குப் போய் தூங்கறேன்” (அடிப் பாவி) என்றாள்…

(பாரு பச்சக் குழந்தைக்குக் கூட உன்னைப் பத்தித் தெரிஞ்சுருக்கு..!
ஷ்ஷ்)


சிவந்த ஒளி சிந்தும் மாணிக்கக் கற்கள் பதித்த கலசத்தில் அமிர்தம் வைத்தாற்போன்று அன்னையின் நகில்கள் இருக்கின்றன என்கிறார் பகவத் பாதர்..

அப்புறம் என்னவென்றால் வழக்கமாய் மானுடத் தாய் தன் மகவிற்குப் பாலமுதம் படைப்பாள்..

ஆனால் இந்த ஜகன்மாதாவோ என்ன செய்கிறாளாம்.. அன்னப் பறவை பாலை தண்ணீரிலிருந்துபிரிப்ப்தைப் போல அமுதத்தை மட்டும் தனது குழந்தைகளான பாலமுருகனுக்கும் பால வினாயகனுக்கும் கொடுக்கிறாளாம்.

(ஓ அப்படியா....)

ஆமாம்.. பின் என்ன..உள்ள வா போய்ப் பார்ப்போம்..

**
அமூ தே வக்ஷோஜெள் அம்ருதரஸ மாணிக்ய குதுபெள
ந ஸந்தேஹ ஸ்பந்தெள நகபதிபதாகே மநஸி ந:
பிபந்தெள தெள யஸ்மத் அவிதித வதூஸங்க ரஸிகெள
குமாரெள அத்யாபி த்விரதவதந க்ரெளஞ்சதலநெள

Amuu theey vakshoja vamrutharasa manikhya kuthupou
Na sadhehaspatho nagapathi pathake manasi na
Pibhanthou thow yasma dhavadhitha bhadusangha rasikou
Kumara vadhyapi dwiradhavadhana krouncha dhalanou

மலையரசனின் வெற்றிக் கொடி போன்ற அம்பிகையே..

உன்னுடைய ஸ்தனங்களிரண்டும் சிவந்தமாணிக்கக் கற்களைப் பதிக்கப் பட்ட கலசங்களில் அமுதம் நிரப்பப் பட்டால் எப்படி இருக்குமோ அவ்வண்ணம் தோன்றுகின்றன..

அதிலிருந்து நீ அமுதத்தை பால முருகனுக்கும், பால வினாயகனுக்கும் கொடுக்கிறாய்..அதனால் என்ன ஆகிறது..

யானை முகனான வினாயகனும், க்ரெளஞ்சம் என்ற அரக்கனை மாய்த்த குமரக் கடவுளும் குழந்தைகளாகவே இருக்கிறார்கள்..அவர்கள் இளமை அடையாமல், மங்கையர் பற்றித்தெரியாமல் அவ்வண்ணமாகவே இருக்கிறார்கள்..”

**

தென்னிந்தியாவில் வினாயகரை பிரம்மச் சாரியாகத் தான் நாம் வணங்குகிறோம்.. கார்த்திகேயரை வட இந்தியாவில் பிரம்மச் சாரியாக வணங்குகிறார்கள்..

பகவத் பாதர் இந்த ஸ்லோகத்தில் இருவரையுமே குழந்தைகளாக பாவிக்கிறார்.. அதாவது வினாயகருக்கும் குமரனுக்கும் வெள்ளை மனது என்றும் பொருள் கொள்ளலாம்..

இந்த ஸ்லோக பாராயணம் ஜீவனை முக்திக்கு இட்டுச் செல்லுமாம்..
சின்னக் கண்ணன்
சின்னக் கண்ணன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 410
இணைந்தது : 19/12/2013

Back to top Go down

நாளும் ஒரு அழகின் அலை - Page 9 Empty Re: நாளும் ஒரு அழகின் அலை

Post by சின்னக் கண்ணன் Tue Mar 11, 2014 10:22 am

நாளும் ஒரு அழகின் அலை....

செளந்தர்ய லஹரி

ஸ்லோகம் .74


“கவிஞரே.. அது ஒரு அழகான சின்னஞ்சிறுமி..அதுக்கு பர்த்டே.. அந்தச் சிறுமியைப் பார்த்துக் கதா நாயகி பாட்டுப் பாடணும்..இதான் சிச்சுவேஷன்..”

“அந்தக் குழந்தை?”

“இதோ கவிஞரே புகைப்படம்..”

புகைப்படத்தைப் பார்த்தார் கவிஞர்..மிக அழகான குண்டுப் பெண்குழந்தை.. முழியும் முழியுமாக இருந்தது..பார்த்த அடுத்த வினாடிகளில்  கவிஞரிடமிருந்து வார்த்தை முத்துக்கள் உருண்டோடின
..
“முத்தான முத்தல்லவோ
முதிர்ந்து வந்த முத்தல்லவோ..
கட்டான மலரல்லவோ கடவுள் தந்த பொருளல்லவோ..”

அழகிய பாடல் இல்லையா..  முத்து தெரிகிறது அது என்ன முதிர்ந்த முத்து..

முத்துச் சிப்பிகள் தெரியும்..கடல்வாழ் பிராணி.. சிப்பிகள் கூட்டம் கூட்டமாக வாழும் தன்மையுடையன…ஒவ்வொரு சிப்பிக்கூட்டத்துக்கும் ஒரு தலைவி உண்டாம்..

சிப்பி சாப்பிடும்போது அதன் வயிற்றினுள் செல்லும்மணல் துகள்கள் உடலில் சுரக்கும் ஒரு திரவத்தால் லேயர்  ஆக மாறி பின் உருவாவது தான் முத்து.

.எல்லா சிப்பிகளுள்ளும் முத்து இருப்பதில்லை.. சிலசமயம் ஒரு சிப்பியின் வயிற்றில் பல முத்துக்கள் இருக்கும்.. ஒரெ ஒரு முத்து மட்டும் ஒரு சிப்பியில் இருந்தால் அது எடை கூடுதலாக இருக்கும்.....

பாண்டிய நாடு முத்து வளம்மிக்கது.. மார்க்கோபோலோ தனது புத்தகத்தில் சுமார் நூறு படகுகள் ஏககாலத்தில் சென்று முத்துக் குளிக்கும் , வலைகளை வீசியும் சிப்பிகளைப் பிடிப்பார்கள் என எழுதியிருக்கிறார்.

பிற்காலத்தில் தான் செயற்கை முத்துக்கள் மிகிமாட்டோ என்பவரால் கண்டுபிடிக்கப் பட்டன...

(ஓகே..அப்புறம்)

நமக்குத் தெரிந்ததெல்லாம் சிப்பியில் விளையும் முத்து மட்டுமே.. முத்து விளையும் இன்னும் சில இடங்கள்..மூங்கில், பாம்புப் படம்,,மத்தகம், மேகம், கரும்பு..

(பாம்புப்படத்துல இருக்கறது மாணிக்கமோன்னோ..நிறைய ஆன்மீக மர்ம நாவல்கள்ல வருமே!!
ஷ்ஷ்)

யானையின் மத்தகத்திலிருந்து விளையும் முத்துக்கள் வெண்மையும், சிவப்புமான நிறம்,பாம்பின்படத்தில் கறுப்பு முத்து, மேக்த்தில்  மின்னுகின்ற முத்து, கரும்பின் நடுவில் மஞ்சளான முத்தும் விளையும் என்று பெரியவர்கள் சொல்லியிருக்கிறார்கள்..

(சரி..முத்துக் கட்டுரை முடிச்சுட்டியா..ஏன் இவ்ளோ சீரியஸா இருக்கே..மெய்னா முத்துக்குளிக்க வாரீகளா பாட்டை விட்டுட்டியே..

அதான் நீ இப்போ சொல்லிட்டியே!)

மத்தியப் பிரதேசம் இந்தியாவின் மிகப் பெரிய மாநிலமாக விளங்கி வந்தது. தெரியுமோ..போபால் இதோட தலை நகரம்..

சட்டீஸ்கர் பிரிஞ்சதுனால அது கொஞ்சம் அளவில் குறைந்து விட்டதாம்... விந்திய மலைத்தொடர் மத்தியப் பிரதேசத்தின் நிலப்பரப்பை ஆக்கிரமிக்கிறது.

அப்புறம் மத்தியப் பிரதேசத்தின் வழியாகப் பாய்கிற நதி எது தெரியுமோ..

நர்மதை…..

(ஏஏஏன்..

ஷ்ஷ்

இப்பச் சொல்லப் போறியா இல்லையா..

சரி வா.. ஸ்லோகத்துக்குள்ள போலாம்.).

***
வயத்யம்ப ஸ்தம்பேரம தநுஜ கும்ப ப்ரக்ருதிபி:
ஸமாரப்தாம் முக்தா மாணிபிரமலாம் ஹாரலதிகாம்
குசாபோகோ பிம்பாதர ருசிபிரந்த: சபளிதாம்
ப்ரதாப வ்யாமிச்ராம் புரதம்யிது: கீர்த்திமிவ தே

Bahathyambha sthamberam dhanuja kumbha prakrithibhi
Samaarabhdham muktha mamibhi ramalam haara lathikam
Kuchabhogo bhimbhadara ruchibhi rathna saabhalitham
Prathapa vyamishram puradamayithu keerthimiva thee

தாயே..! கஜாசுரனை வதம் செய்த பிறகு அவனது  மத்தகத்தில் இருந்து எடுக்கப் பட்ட கற்பூர வெண்மையைப் போன்ற நிறம் பெற்ற முத்து மாலையை நீ உன் கழுத்தில் அணிந்து கொண்டிருக்கிறாய்.

. அவை உன் நகில்களுக்கு இடையே பெருமையுடன் வீற்றிருக்கின்றன..

அது மட்டுமல்ல..உன் இதழ்களின் அழகிய சிவப்பு வண்ணமானது உன் நகில்களின் மத்தியப் பிரதேசத்தில் வீற்றிருக்கும் முத்து மாலையின் மீது பட்டு சிவந்த முத்துக்களாகவும்.., அந்த முத்துக்களின் பின்புறமும் பிரதிபலிப்பதால் வேறு பல வண்ணங்களாகவும் காட்சி தருகிறது.
.
அது மட்டுமல்ல..அது உன் கணவன் பரமசிவனின் வீரத்தையும் புகழையும் காட்டும் வண்ணம் விளங்குகின்றது..”

**

இந்த ஸ்லோக பாராயணம் பெரும் புகழை அடைய வைக்குமாம்.

சின்னக் கண்ணன்
சின்னக் கண்ணன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 410
இணைந்தது : 19/12/2013

Back to top Go down

நாளும் ஒரு அழகின் அலை - Page 9 Empty Re: நாளும் ஒரு அழகின் அலை

Post by T.N.Balasubramanian Tue Mar 11, 2014 4:37 pm

முத்தான முத்துக்கள்
ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35032
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

நாளும் ஒரு அழகின் அலை - Page 9 Empty Re: நாளும் ஒரு அழகின் அலை

Post by சின்னக் கண்ணன் Wed Mar 12, 2014 10:09 am

நன்றி ரமணி ஐயா..

T.N.Balasubramanian wrote:முத்தான முத்துக்கள்
ரமணியன்
சின்னக் கண்ணன்
சின்னக் கண்ணன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 410
இணைந்தது : 19/12/2013

Back to top Go down

நாளும் ஒரு அழகின் அலை - Page 9 Empty Re: நாளும் ஒரு அழகின் அலை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 9 of 14 Previous  1 ... 6 ... 8, 9, 10 ... 14  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum