ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நாளும் ஒரு அழகின் அலை

+5
ராஜா
vasudevan31355
ayyasamy ram
myimamdeen
சின்னக் கண்ணன்
9 posters

Page 13 of 14 Previous  1 ... 8 ... 12, 13, 14  Next

Go down

நாளும் ஒரு அழகின் அலை - Page 13 Empty நாளும் ஒரு அழகின் அலை

Post by சின்னக் கண்ணன் Sun Feb 02, 2014 6:09 pm

First topic message reminder :

ஈகரை நண்பர்களுக்கு,

வணக்கம்.. சென்ற வருடம் முக நூலில் நாளும் ஒரு அழகின் அலை என்ற தலைப்பில் செளந்தர்ய லஹரி - 100 ஸ்லோகங்களுக்கு நான் புரிந்து கொண்டவற்றை எழுதிப் பார்த்தேன்..

கொஞ்சம் விருத்தங்கள்,வெண்பாக்கள் சில பல உதாரணங்கள் என எழுதிப் பார்த்திருக்கிறேன். அதை இங்கு இடுகிறேன்..

நாளும் ஒன்று என்றில்லை.. மூன்று நான்கும் வரும்..புன்னகை

அன்புடன்

சின்னக் கண்ணன்..
சின்னக் கண்ணன்
சின்னக் கண்ணன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 410
இணைந்தது : 19/12/2013

Back to top Go down


நாளும் ஒரு அழகின் அலை - Page 13 Empty Re: நாளும் ஒரு அழகின் அலை

Post by சின்னக் கண்ணன் Sun Mar 30, 2014 11:00 am

நாளும் ஒரு அழகின் அலை....

செளந்தர்ய லஹரி

ஸ்லோகம் 93


கண்ணன் என்றாலே குஷி தான்…உற்சாகம் தான் பிறக்கும்.. அதுவும் சின்னக் கண்ணன் என்றால் கேட்கவா வேண்டும்..அவன் செய்யும் குறும்புத் தனங்கள் வரிசைகட்டி தானே வரும்.. ஒரு அழகிய பாடலின் சில வரிகள்..


விஷமக்கார கண்ணன் பொல்லாத விஷமக்கார கண்ணன்
பொல்லாத விஷமக்கார கண்ணன்

வேடிக்கையாய் பாட்டுப்பாடி விதவிதமாய் ஆட்டமாடி
நாழிக்கொரு லீலை செய்யும் நந்தகோபல க்ருஷ்ணன்

வெண்ணை பானை மூடக்கூடாது
இவன் வந்து விழுங்கினாலும் கேட்கக்கூடாது
இவன் அம்மா கிட்ட சொல்லக்கூடாது
சொல்லிவிட்டால் அட்டகாசம் தாங்க ஒண்ணாது
இவனை சும்மா ஒரு பேச்சுக்காணும் திருடனென்று சொல்லிவிட்டால்
அம்மா பாட்டி அத்தை தாத்தா அத்தனையும் திருடன் என்பான்

நீலமேகம் போலே இருப்பன்
பாடினாலும் நெஞ்சில் வந்து குடி இருப்பன்
கோலப்புல்லாங்குழல் ஊதி கோபிகளை கள்ளம்மாடி
கொஞ்சம்போல வெண்ணை தாடி என்றுகேட்டு ஆட்டம்மாடும்
விஷமக்கார கண்ணன்

ஊத்துக் காடு வேங்கட கவியின் துள்ளல் வரிகளை படிக்கும் போதே துள்ளும் இதயம் பாட்டில் கேட்டால்..ஆஹா..அதுவும் அருணா சாய்ராமின் குரலில் கேட்ட்டால் இன்னும் மகிழ்ச்சி பொங்கும்

என்ன சொல்ல வந்தேன்.. அருணா சாய்ராம் நல்ல பாடகி.. ஆனால் சொல்லவந்தது அவரைப் பற்றி அல்ல.. அருணா என்றால் சிவந்த வண்ணம் என்று அர்த்தம்.!.

இந்த ஸ்லோகத்திலும் அம்பிகையின் சிவந்த வண்ணத்தைப் பற்றிச் சொல்கிறார் பகவத் பாதர்..அத்துடன் ஒரு விந்தையையும் சொல்கிறார்..
என்னவென்பதை ஸ்லோகத்திலுள் சென்று பார்க்கலாம் வாருங்கள்..
**

அராளா கேசேஷு ப்ரக்ருதி ஸரளா மந்த ஹஸிதே
சிரீஷாபா சித்தே த்ருஷதுபலசோபா குசதடே
ப்ருசம் தந்வீ மத்யே ப்ருதுருரஸிஜாரோஹவிஷயே
ஜகத் த்ராதும் சம்போர் ஜயதி கருணா காசிதருணா

Araala kesheshu prakruthi-saralaa manda-hasithe
Sireeshabha chite drushad upala-sobha kucha-thate;
Bhrusam thanvi madhye pruthur urasijh'aroha-vishaye
Jagat trathum sambhor jayahti karuna kaachid aruna.

”அம்பிகையே.. பரமசிவனின் மனதிற்கும் வாக்கிற்கும் எட்டாத சிவந்த வண்ணத்துடன் அவருடைய கருணை பொங்கும் அருணா சக்தியாகத் தோற்றமளிக்கிறாய்..

உனது குழல்கற்றைகள் நேராக இல்லாமல் சுருண்டு இருக்கின்றன..உனது புன்சிரிப்பிலோ நேர்மையும் இயல்பான இனிமையும் காணப் படுகிறது..உனது மனமானது வனத்திலிருக்கும் வாகை மலர் போல மென்மையானதாகவும், அதைத் தாங்கியிருக்கும்ம் நகில்களோ கடினமாகவும் ரத்தினங்களின் ஒளியோடும் விளங்குகின்றது.. உனது இடையானது மிக மெலிந்தும் அதற்கு எதிராக உனது பின்னழகும் அமைந்திருக்கிறது..

ஆக ஈசனின் கருணை வடிவே உன்னைப் போல தோற்றம் இந்த உலகத்தைக் காப்பதற்குக் கொண்டிருக்கிறது..”


**
அம்பிகையை இவ்வாறாக தியானிப்பவர் ஒப்பற்ற மேன்மையுடன் வாழ்வார்களாம்.

**


சின்னக் கண்ணன்
சின்னக் கண்ணன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 410
இணைந்தது : 19/12/2013

Back to top Go down

நாளும் ஒரு அழகின் அலை - Page 13 Empty Re: நாளும் ஒரு அழகின் அலை

Post by சின்னக் கண்ணன் Sun Mar 30, 2014 11:02 am

ர மணி ஐயாவிற்கு நன்றி.. இதோ வந்துட்டேன்.. புன்னகை
சின்னக் கண்ணன்
சின்னக் கண்ணன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 410
இணைந்தது : 19/12/2013

Back to top Go down

நாளும் ஒரு அழகின் அலை - Page 13 Empty Re: நாளும் ஒரு அழகின் அலை

Post by சின்னக் கண்ணன் Mon Mar 31, 2014 10:39 am

நாளும் ஒரு அழகின் அலை....

செளந்தர்ய லஹரி

ஸ்லோகம் 94

பக்கத்து வீட்டுக் குட்டிச் சுட்டித் தெலுங்குப் பெண் அழகாய் சிகப்பு கவுனில் ஓடி வந்தது..பெயர் ஜூவிதா. கையில் ஒரு பச்சை நிற வட்டவடிவிலான சாக்லேட் பெட்டி. வழக்கம் போலான எங்களது ஆங்கில உரையாடல் – தமிழில்..

”ஹாய் ஜூவி.. உன்னோட டிரஸ் நல்லாயிருக்கே..”

”தாங்க்யூ அங்க்கிள்..”

”கையில என்ன.. ரொம்ப அழகா இருக்கே.”

ஒரு கணப்பொழுது தலை குனிந்து கொஞ்சம் மெளனம். பின் தலை நிமிரிந்து என்னைப் பார்த்த விழிகளில் சந்தேகம்.. (இந்தப் பெண்கள் எந்த வயதிலும் இப்படித்தானோ)

“நான் எடுத்துக்க மாட்டேன்.. காமி”

தானாகவே குட்டிக்கரங்களினால் திறந்தாள்.. உள்ளே வட்ட டப்பா நான்காகப் பிரிக்கப் பட்டிருக்க ஒரு பக்கம் பச்சை,, ஒரு பக்கம் நீலம், ஒரு பக்கம் மஞ்சள், ஒரு பக்கம் சிவப்பு என சாக்லேட்கள்..

வாவ்.. நல்லா இருக்குமா..

ம்ம். ஆனா தரமாட்டேன் அங்கிள்..

பரவால்ல..இத எப்போ எப்போ சாப்பிடுவ..

அம்மா சொல்லியிருக்கா. ரொம்ப சாக்லேட் சாப்பிடக் கூடாதுன்னு.. அதனால காலையில ஸ்கூல் போறச்சே பச்சை. மத்யானம் வந்த உடன் நீலம்.. ராத்திரி சாப்பிட்டுட்டு மஞ்சள், சிகப்பு..

ஓ.. ஏன் ராத்திரி ரெண்டு..

நைட் தான் தூங்கறேன்ல.. தூங்கினா டைஜஸ்ட் ஆகிடும்.!.(அப்ப்பா.. கண்டிப்பா பிற்காலத்தில டாக்டரா வருவா)

சரி ..சாக்லேட் தீர்ந்து போய்டுச்சுன்னா..

அப்பா கிட்ட சொல்வேன்..அவர் வாங்கிக் கொடுப்பார் லூலூ சூப்பர்மார்கெட் போறச்ச..

வாங்கித் தரலைன்னா..

மறுபடியும் ஒரு நொடி மெளனம்..

“வாங்கித் தருவார்..”

“வாங்கித் தரலைன்னு வச்சுக்கோயேன்..என்ன பண்ணுவே..”

யோசிக்காமல் சொன்னாள்..”யேன்னு அழுதுக்கிட்டே இந்த பக்கத்து வீட்டு குண்டு அங்கிள் நிறையச் சாக்லேட் சாப்பிட்டார்ப்பான்ன்னு சொல்வேன்..அவர் சிரிச்சுட்டு வாங்கிக் கொடுத்துடுவார்”.. (அடிப்பாவி..)

***
இந்த ஸ்லோகத்தில் அம்பிகையும் வட்ட வடிவ பச்சை நிறப் பொருள் ஒன்றை வைத்திருக்கிறாளாம்..

அதை வைத்து என்ன செய்கிறாள் என்பதையும் அதில் உள்ளது் தீரத் தீர யார் நிரப்புகிறார் என்பது பற்றியும் ஸ்லோகத்தில் பகவத்பாதர் என்னவாகச் சொல்கிறார் என்பதைப் பார்ப்போம்(ரொம்பக் குழப்பமா வாக்கியம் அமைஞ்சுடுச்சோ)


**

களங்க: கஸ்தூரி ரஜநிகரபிம்பம் ஜலமயம்
களாபி: கர்பூரைர் மரகத கரண்டம் நிபிடிதம்
அதஸ்த்வத் போகேந ப்ரதிதிநமிதம் ரிக்த குஹரம்
விதிர் பூயோபூயோ நிபிடயதி நூநம் தவ க்ருதே

Kalankah kasthuri rajani-kara-bimbham jalamayam
Kalabhih karpurair marakatha-karandam nibiditam;
Athas thvad-bhogena prahti-dinam idam riktha-kuharam
Vidhir bhuyo bhuyo nibidayathi nunam thava krithe.
**



”லோக நாயகியான அம்பிகை தான் நீராடுவதற்காக ஒரு பச்சை நிறத்திலான வட்ட வடிவிலான மரகத பாண்டம்- பாத்திரம் வைத்திருக்கிறாள்..அது என்ன பாத்திரம்.

வேறென்ன வான் நிலவு தான்..அந்த நிலவில் என்னவெல்லாம் இருக்கிறது..

அம்பிகையின் நீராட்டத்துக்கு வேண்டி கருப்பு நிற கஸ்தூரி என்னும் வாசனைத் திரவியம் இருக்கிறது..இதைத் தான் சந்திரனில் களங்கம் என்கிறோம்..

பின் என்ன..

பனி நிலவு தான் தூய்மையான பன்னீராகும்..

பின்..

நிலவின் கிரணங்களே பச்சைக் கற்பூரத் துகள்களாகும்..

எனில் அம்பாளாகப் பட்டவள் முழு நிலவுக்குப் பின் வரும் தேய்பிறை நாட்களில் தினமும் சந்திரமண்டலத்திலிருந்து இவைகளை எடுத்து சிறிது சிறிதாக நீராடுகிறாளாம்..

நீராடி முடித்த பின் மறுபடி முழு நிலவு நாள் வரை அடியவருக்கு அருள தனது தர்பாரில் அமர்ந்து விடுகிறாளாம்..

தினமும் அம்பாள் இப்படி நிலவிலிருந்து எடுத்து நீராடுவதை அறியும் பிரம்மர் அது முழுக்கக் குறைந்ததும் கொஞ்சம்கொஞ்சமாய் அமுதக் கடலின் நீரை சந்திரமண்டலம் என்னும் மரகதப் பாண்டத்தில் மீண்டும் மீண்டும் நிரப்பி விடுகிறாராம்..!

**

தேய்பிறையும் வளர்பிறையும் வெகு அழகாகச் சொல்லப் பட்டிருக்கிறது இந்த ஸ்லோகத்தில்..

அருணா மோதினி உரையில் தேவியின் இல்லமாக பிரம்மாண்டம், மேல்கூரையாக ஆகாயம், விளையாடும் இடமாக மேரு முதலான சிகரங்கள், மாலையாக நட்சத்திரங்கள்,இந்திராதித்யர்கள் பேரன்மார்களாக, ப்ரஹ்மாதியர் புத்திரர்களாக, சூரியன் இல்லத்தின் விளக்காகக் குறிப்பிடுகையில், சந்திரன் தேவியின் வாசனைப் பொருட்கள் வைக்கும் சிமிழாக வர்ணனை செய்யப் படுகின்றது..

இந்த ஸ்லோக பாராயணம் நல்லன எல்லாம் தருமாம்..

****
சின்னக் கண்ணன்
சின்னக் கண்ணன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 410
இணைந்தது : 19/12/2013

Back to top Go down

நாளும் ஒரு அழகின் அலை - Page 13 Empty Re: நாளும் ஒரு அழகின் அலை

Post by சின்னக் கண்ணன் Tue Apr 01, 2014 10:13 am

நாளும் ஒரு அழகின் அலை....

செளந்தர்ய லஹரி

ஸ்லோகம் 95


நிறைய இரட்டை வேஷத்தில் வெளிவந்த திரைப்படங்களைப் பார்த்திருப்போம்.. இரட்டையாகப் பிறந்த குழ்ந்தைகள், பெரியவர்களையும் பார்த்திருப்போம்.. நமது தினசரி வாழ்க்கையில். ஆனால் ஒரு மிகப்பெரிய இரட்டை வேஷதாரியை அப்படியே விட்டு விடுகிறோம்..அது என்ன..

வாழ்க்கை தான்.. வாழ்க்கை, நிறைய இரட்டைத் தன்மைகளைக் கொண்டதாய் இருக்கிறது. நன்மை – தீமை, லாபம், நட்டம், வெளிச்சம் – இருட்டு, மேடு – பள்ளம், வெப்பம், குளிர், உயரம், தாழ்வு, பணக்காரன் – ஏழை, இன்பம் – துன்பம், வெற்றி – தோல்வி, சிரிப்பு – அழுகை என வாழ்க்கை மாறிக்கொண்டே இருக்கிறது.

இந்த மாற்றம் ஒன்றே நிரந்தரம் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். துக்கத்தை துக்கமென்று கொள்ளாமலும், இன்பத்தை இன்பமென்று கொள்ளாமலும், இன்பத்தை இருக்கின்ற மனநிலை உள்ளவனை “ஸ்திதப் பிரக்ஞன்” என்கிறது பகவத் கீதை.

அப்படி மனதில் வேறு எண்ணங்கள் இல்லாமல் புலனடக்கத்துடன் இருந்தால் மட்டுமே அம்பாளை அணுகிப்பாதபூஜை செய்ய முடியுமாம்.
.
இல்லை என்றால் அம்பிகையின் இல்லமான சிந்தாமணிகிருஹத்தில் ஒன்பதாவது வாயிலிலேயே அணிமா முதலிய எண்சித்திஅருளும் தேவதைகளால் நிறுத்தி வைக்கப் படுவார்களாம்..இதற்கு தேவேந்திரன் கூட விதிவிலக்கல்லவாம்..இருப்பினும் அம்பாளின் கருணை மனம் என்ன செய்கிறதாம்..

கொஞ்சம் கூட வாருங்கள்.. ஸ்லோகத்திற்குள் சென்று பார்க்கலாம்
.

**
புராராதே ரந்த்த:புரமஸி ததஸ் த்வச்சரண்யோ:
ஸபர்யா மர்யாதா தரளக்ரணாநாம் அஸுலபா
ததா ஹ்யேதே நீதா: சத மக முகாஸ் ஸித்திம் அதுலாம்
தவ த்வாரோபாந்தஸ்திதி-பிரணிமாத்யாபிரமா

Pur'arather antah-puram asi thathas thvach-charanayoh
Saparya-maryadha tharala-karananam asulabha;
Thatha hy'ethe neetah sathamukha-mukhah siddhim athulam
Thava dvar'opantha-sthithibhir anim'adyabhir amarah.


**
அம்பிகையே.. நீ திரிபுரம் எரித்த பரமசிவனின் அந்தப்புரத்தில் ராணி.

உன்னை தரிசித்து பாத பூஜை செய்ய விரும்புபவர்கள் மனத் தூய்மை உள்ளவர்களாக புலனடக்கம் கொண்டவர்களாக இருக்கவேண்டும்..

அப்படி இல்லாமல் மன அடக்கம் இல்லாமல் உன் பாத மலர்களைத் தொழுவதற்கு வருபவர்கள் உனது அரண்மனை வாசலிலேயே அணிமா சித்திகளால் நிறுத்தி வைக்கப்படுவார்கள்..

இருப்பினும் நீ என்ன செய்கிறாய்.. அவர்கள் உன் அருகில் வந்து பாத பூஜை செய்வதற்கு முடியாமல் போனாலும் கூட,,, அவ்வண்ணம் பாத பூஜை செய்ய ஆசைப்பட்டதற்காகவே அவர்களுக்கு அணிமா சித்தி தேவதைகள் மூலம் சித்தி கொடுத்து அருள் புரிகிறாய்..

**
மனம் மற்றும் புலனடக்கத்துடன் மட்டுமே அம்பாளைப் பூஜை செய்ய வேண்டுமாம்

இந்த ஸ்லோக பாராயணம் நினைத்ததைப் பெறவல்ல பாக்கியம் தருமாம்

**
சின்னக் கண்ணன்
சின்னக் கண்ணன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 410
இணைந்தது : 19/12/2013

Back to top Go down

நாளும் ஒரு அழகின் அலை - Page 13 Empty Re: நாளும் ஒரு அழகின் அலை

Post by சின்னக் கண்ணன் Tue Apr 01, 2014 10:18 am

நாளும் ஒரு அழகின் அலை....

செளந்தர்ய லஹரி

ஸ்லோகம் 96


கலைமகளின் கடைக்கண்ணால் பார்வை பட்டால்
….கல்லுக்குள் கவியூறித் தேனாய் ஓடும்
நிலைத்திருப்பார் எந்நாளும் கவிஞ ரெல்லாம்
….நயமான பலகவிதை கொடுத்த பின்பு
மலையைப்போல் பெரிதான புகழும் பெற்றே
…மகிழ்ந்திருக்கும் அவரைத்தான் மற்றோர் எல்லாம்
விலைமதிக்க இயலாத கவிதா ஞானம்
…வித்யாவும் தந்துவிட்டாள் என்றே சொல்வர்..

உருவத்தில் ஒளிமயமாய்த் தோற்றம் கொண்டு
…உற்சாகம் கொளவைக்கும் செல்வம் தந்து
துறுதுறுப்பாய் நெஞ்சத்தில் துள்ள வைத்து
…துன்பமெல்லாம் போக்கிவிடும் தன்மை தந்த
திருமகளின் பார்வைதனை பெற்ற வரைத் தான்
…திக்கெட்டும் சொல்லிடுவர் தனமாம் லஷ்மி
முறுவலித்த விளைவில்தான் இந்த மாற்றம்
…முக்கியமாய் தந்ததவர் வாழ்வில் ஏற்றம்

அவன் சரஸ்வதி கடாட்சம் பெற்றவன்.. அவன் நாவில் சரஸ்வதி துள்ளி விளையாடுகிறாள், இவன் பெரிய லஷ்மி பதி.. பெரிய சொத்துக்காரன்..கிட்டத்தட்ட் ஆயிரம் கோடிக்கும் மேலாக எந்த வித தவறனான வழியிலும் செல்லாமல் சம்பாதித்திருக்கிறான் என்றெல்லாம் சொல்லக் கேள்விப் பட்டிருக்கிறோம்.. ஆனால் அம்பாள் எப்படிப் பட்டவள்..

அவளைப் பொறுத்தவரை மகாதேவரைத் தவிர, வேறு யாராலும் அந்த இடத்தை அடைய முடியாது என்கிறார் பகவத் பாதர் இந்தஸ்லோகத்தில்

இச்சுலோகத்தின் வாயிலாக கலைமகளையும் திருமகளையும் குறைத்து மதிப்பிடவில்லை பகவத் பாதர்..

ராமருக்கும் பரசுராமருக்கும் சண்டை ஏற்பட்டாலும் இருவரும் வெவ்வேறு அல்ல என்பதை மனதில் கொள்ள வேண்டும்..

பகவத்பாதர் சொல்லுவதை ஸ்லோகத்துள் சென்று பார்ப்போம் வாருங்கள்..


**

களத்ரம் வைதாத்ரம் கதிகதி பஜந்தே ந கவய:
ச்ரியோ தேவ்யா: கோ வா ந பவதி பதி: கைரபி தநை:
மஹாதேவம் ஹித்வா தவ ஸதி ஸ்தீநாம் அசரமே
குசாப்யாம் ஆஸங்க: குரகதரோரப்யஸுலப:

Kalathram vaidhathram kathi kathi bhajante na kavayah
Sriyo devyah ko va na bhavati pathih kairapi dhanaih;
Mahadevam hithva thava sathi sathinam acharame
Kuchabhyam aasangah kuravaka-tharor apyasulabhah.


அம்பிகையே..பதிவிரதைகளின் தலைவியே..

பிரம்மனின் பத்தினி சரஸ்வதி.. எத்தனையோ கவிஞர்கள் சரஸ்வதி கடாட்ச்ம் பெற்றிருக்கிறார்க்ள்

திருமாலின் பத்தினி திருமகள்..அவளது கடாட்சம்பெற்றவரை லஷ்மிபதி என்றும் அழைப்பர்..

உலக ஞானத்தை அடைவது எளிது.. ஆனால் உனது ப்ரம்ம ஸ்வரூபத்தை உணர்ந்து கொள்வது கொஞ்சம் கடினமான விஷயம்..

மகாதேவனைத் தவிர நீ மருதோன்றி மரத்தைக் கூட தழுவியதில்லை..”

**

இந்த ஸ்லோக பாராயணம் சரஸ்வதி லஷ்மி கடாட்சத்தைப் பெற்றுத் தருமாம்

**



சின்னக் கண்ணன்
சின்னக் கண்ணன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 410
இணைந்தது : 19/12/2013

Back to top Go down

நாளும் ஒரு அழகின் அலை - Page 13 Empty Re: நாளும் ஒரு அழகின் அலை

Post by சின்னக் கண்ணன் Tue Apr 01, 2014 10:28 am

நாளும் ஒரு அழகின் அலை....

செளந்தர்ய லஹரி

ஸ்லோகம் 97


அலைமகளும் நீதானே சொல்வாய் – என்
அறியாமை போக்கியே இங்குநீ செல்வாய்
அலைபாயும் மனம்நிறுத்தி
அறிவுக்கண் திறந்துவிட்டு
நிலையாக வைத்துவிட்ட
நான்முகியே அம்பிகையே
கலையாத ஆர்வத்தில் வந்தேன் – உன்னால்
கவிதைகள் பலவாறாய் வடித்துப்பார்க் கின்றேன்..

மலைமகளும் நீயோடி தங்கம் – என்
மனதுள்ள சந்தேகம் போக்குவாய் இங்கும்
விளையாட்டுப் பிள்ளையென
வினவத்தான் செய்கின்றேன்
சலசலக்கும் ஆறாக
பதிலைநான் கேட்கின்றேன்
வலைவீசி மீன்பிடித்த சிவனார் – உனை
பார்வதியாய் கைபிடித்த துண்மைதான் அன்றோ..

கலகலப்பாய்க் கல்விதனை தருவாள் – அந்தக்
கலைமகளும் நீதானே சொல்லுவாய் அம்மா
மளமளவெனப் பேசாமல்
மயக்கமெதும் கொள்ளாமல்
வளைக்காமல் கேட்கின்றேன்
வயணமாகச் சொல்லிடுவாய்
நலமெல்லாம் தந்திடும் கல்வி – அதை
நவில்வதும் நீதானே நீதானே செல்வி

எல்லாரைக் கொண்டவளும் நீதான – எனக்
கெல்லாமும் தந்தவளும் நீதான்
நில்லாத உலகினிலே
நிலைத்தேதான் இருப்பவளே
மல்லிகையின் மணமாக
மனதுள்ளே நிலைப்பவளே
வல்லோர்கள் சொல்வார்கள் உன்னை – வாழ
வைக்கின்ற மஹாமாயை நீதானே என்று.


சாயங்கள் சிச்சிறிதாய் வெளுக்கும் – பின்பு
சத்திரமாய் நினைத்து உயிர் வானிலே பறக்கும்
மாயமாய்ப் போகுமிக் காயம் – பின்பு
மறைந்திட்ட பின்னாலே உன்னிடம் பாயும்
தாயங்கள் போட்டு எனை ஆட்டி
தவிக்கவே வைக்காதே சொல்லுவாய் பதிலை
மாயாதான் நீதானே ஷக்தி..- இந்த
மாநில மெல்லாமே உன்னடி பற்றி

**

சில சமயங்களில் திரைப் படங்களில் சில நல்ல பாடல்கள் வரும்.. அதன் சிச்சுவேஷன் பற்றி மட்டும் சிந்தித்திருப்போம்..பாடலின் உள்ளர்த்தம் நினைக்கத்தோன்றாது.. பலமுறை கேட்ட போதிலும்.. அப்படி ஒரு பாடல் நான் பல முறை கேட்டது.. இன்றைய ஸ்லோகம் படித்த பின்பு தான் புரிந்தது..

அதிலிருந்து சில வரிகள்.

உலகமெல்லாம் படைச்சவளே ஓங்காரி எங்க ரீங்காரி
இங்கே உன்னை நம்பி வந்தோம் அம்மா வா நீவா

சிவனும் திருமாலும் நீயோ அருள் செய்யும் மாகாளி நீயோ]
தவம் செய்யும் கன்னியா குமரியும் நீயோ தாயான விந்தையைச் சொல்வாயோ..

சூரிய சந்திர ஜோதியும் நான்
சுந்த்ர தாண்டவ மூர்த்தியும் நான்
நாரணன் நான்முக பிரம்மமும் நான்
நாரணி பார்வதி உமை நானே

நல்ல இனிய பாடல்..அம்பாள் சொல்வது போல் நம்ம வீட்டு தெய்வம் எனும்படத்தில் வந்தது.

**
இன்றைய ஸ்லோகத்தில் பகவத் பாதர் என்ன சொல்லப் போகிறார் எனத் தெரிந்திருக்கும்.. வாருங்கள்… லெட்ஸ் கோ அண்ட் ஸீ


**

கிராமாஹுர் தேவீம் த்ருஹிண க்ருஹிணீம் ஆகமவிதோ
ஹரே: பத்நீம் பத்மாம் ஹர ஸஹசரீம் அத்ரிநயாம்
துரீயா காபி த்வம் துரதிகமநிஸ்ஸீம மஹிமா
மஹாமாயா விச்வம் ப்ரமயஸி பரப்ரஹ்ம மஹிஷீ

Giram aahur devim Druhina-gruhinim agaamavidho
Hareh pathnim padhmam Hara-sahacharim adhri-thanayam;
Thuriya kapi thvam dhuradhigama-niseema-mahima
Maha-maya visvam bhramayasi parabhrahma mahishi.

**


**
“பரப்ப்ரம்ம ஸ்வரூபியான பரமேஸ்வரனின் பட்ட மகிஷியே. அம்பிகையே..

மறையின் பொருள் அறிந்தவர் உன்னையே பிரம்மாவின் பத்தினியான கலைமகள் என்றும், விஷ்ணுவின் பத்தினியான திருமகள் என்றும் கூறுகின்றனர்..அவர்களே உன்னை ஈசனை மணம் புரிந்த பார்வதிஎன்றும் சொல்கின்றனர்.

நீயோ வாக்கிற்கும் மனதிற்கும் எட்டாத, நான்காவதாக அடைவதற்கு அரிதான எல்லையில்லாத பெருமை கொண்டவளான மகாமாயை என்னும் சக்தியாக உலகினை ஆட்டுவிக்கின்றாய்..

**

இவ்வாறாய் தேவியை தியானிப்பவர்கள் ஜீவன் முக்தி பெறுவார்களாம்.
சின்னக் கண்ணன்
சின்னக் கண்ணன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 410
இணைந்தது : 19/12/2013

Back to top Go down

நாளும் ஒரு அழகின் அலை - Page 13 Empty Re: நாளும் ஒரு அழகின் அலை

Post by சின்னக் கண்ணன் Wed Apr 02, 2014 10:56 am

நாளும் ஒரு அழகின் அலை....

செளந்தர்ய லஹரி

ஸ்லோகம் 98


காலம் பலவாகக் கால்கள் நடைதளரும்
ஞாலத்தில் நாட்டம் நலிந்துவரும் போதினில்
தேவியின் பொற்பாதம் தேடிச் சரணடைய
மேவும் மகிழ்ச்சியு மே

செவ்வண்ணக் குழம்பதனால் சிவந்திருக்கும்  காலை
…சிறுவன்நான் பற்றித்தான் வார்த்திடுவேன் நீரை
எவ்வண்ணம் எத்திக்கு என்றெல்லாம் கூட
..இருந்தேதான் கடந்துவிட்ட காலங்களும் போக
இவ்வண்ணம் இங்கெழுத இன்னருளும் தந்தாய்
….இனிதான உன்னழகை இயம்பவைக்கச் செய்தாய்..
அவ்வண்ணம் அம்பிகையுன் அழகுவண்ணம் நெஞ்சில்
…ஆழமாகப் பதிந்திடத்தான் ஆட்கொள்வாய் நீயே..

***

இன்றைய ஸ்லோகத்தில் பகவத்பாதர் கொஞ்சூண்டு கவலை கொள்கிறார்.. யாரைப்போல கம்பனைப் போல..

ஓசை பெற்றுயர் பாற்கடலுற்றொரு
பூசை முற்றவு நக்குபு புக்கென
ஆசை பற்றி அறையனுற்றேன்..

வால்மீகியின் ராமாயணத்தைக் கம்பன் பெரும் பாற்கடலுக்கு ஒப்பிடுகிறார்.. ஓசை பொருந்திய பாற்கடலை அடைந்த பூனையானது அதை முற்றிலும் நக்கிக்குடித்துவிடலாம் என எண்ணுவது போல ராம காதையைப் பாட முற்படுகிறேன், உலகம் எள்ளி நகையாடினாலும் கவலை இல்லை என்கிறார் கம்பர்.. பின்னர் எழுதிய கம்ப ராமாயணப் புகழ் சொல்லி மாளாது...

பகவத் பாதர் எப்படிப் பட்டவர்.. அம்பிகையின் அருள் பெற்றவர்.. அவருக்கும் சந்தேகம் வருகிறது..
என்னவாம்.

சரி. வாருங்கள்.ஸ்லோகத்தினுள் சென்று பார்ப்போம்..

**

கதா காலே மாத: கதய கலிதாலக்தக ரஸம்
பிபேயம் வித்யார்த்தீ தவ சரண நிர்ணேஜநஜலம்
ப்ரக்ருத்யா மூகானாமபி ச கவிதாகாரணதயாகதா
தத்தே வாணீ முக-கமல-தாம்பூல ரஸதாம்

Kadha kaale mathah kathaya kalith'alakthaka-rasam
Pibheyam vidyarthi thava charana-nirnejana-jalam;
Prakrithya mukhanam api cha kavitha-karanathaya
Kadha dhathe vani-mukha-kamala-thambula-rasatham.


**


“”அம்மையே.. உனதுபாதங்கள் செம்பஞ்சுக் குழம்பினால் அலங்கரிக்கப் பட்டதால் மேலும் சிவந்திருக்கின்றன..அப்படிப் பட்ட உனது பாத மலர்களைக் கழுவியதால் சிவந்த தீர்த்தத்தை பிரஹ்ம வித்யை என்னும் கல்வியை நாடும் நான் எப்போது பருகுவேன்..

வெண் தாமரையில் வீற்றிருக்கும் கலைமகள் தான் தரித்த தாம்பூலச் சாற்றைப் பிரசாதமாக மற்ற்வர்களுக்கு வழங்கிட அவர்கள் கல்வி அறிவு பெற்றார்கள்.. அந்த தாம்பூலச் சாறினைப் பருகியவர்கள் ஊமையாக இருந்தாலும் பேச்சறிவும் கவி எழுதும் தன்மையும் பெற்றார்கள்.

அதற்குச் சமமான சக்தியுடைய தங்களதுபாத ப்ரஷாளன நீரை நான் எப்போது பருகுவேன்..”

**
இவ்வாறு தேவியை தியானிப்பவர் வாக்கினில் எப்பொழுதும் கலைமகள் குடியிருப்பாள்..

**
சின்னக் கண்ணன்
சின்னக் கண்ணன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 410
இணைந்தது : 19/12/2013

Back to top Go down

நாளும் ஒரு அழகின் அலை - Page 13 Empty Re: நாளும் ஒரு அழகின் அலை

Post by சின்னக் கண்ணன் Wed Apr 02, 2014 2:14 pm

நாளும் ஒரு அழகின் அலை....

செளந்தர்ய லஹரி

ஸ்லோகம் 99

சுகம் என்பது என்ன..

சுருக்கமாய்ச் சிந்தித்தால் மண், பெண், பொன் இவையெல்லாம் யாருக்கு அருமையாக அமைகிறதோ அது தானா.. கூட பிணியில்லாத வாழ்வு.. சரி..

இவை எல்லாம் நிரந்தரமா..

இல்லை இவை எல்லாம் அழியக் கூடிய சுகங்கள்.

உதாரணத்திற்கு மகாகவி காளிதாஸ் என்ற திரைப்படத்தில் கு.மா. பாலசுப்பிரமணியன்(என நினைக்கிறேன்) எழுதிய கட்டளைக்கலித்துறைப் பாடல்..

தங்கமே தாமரை மொட்டுக ளாகித் தலையெடுக்க
குங்குமம் தோய்ந்த முகப்பினில் வண்டு கொலுவிருக்க
பங்கயன் விந்தைப் படைப்பாகி நிற்கும் பசுங்கொடிமேல்
பொங்கியே பூத்த முழுநிலா வண்ணம் புறப்பட்டதே!

வாலி என்ன சொல்கிறார் ஒரு திரைப்பாடலில்…

தொட்ட சுகம் ஒன்றா என்ன
துள்ளும் உள்ளம் பந்தா என்ன
செவ்விதழை கண்ணால் என்ன
தேனெடுத்து உண்டால் என்ன
கொத்து மலர் செண்டா என்ன
கொஞ்சும் மன்னன் வண்டா என்ன

(கொஞ்ச நாளா சமர்த்தா இருந்தியேடா

சும்மா இரு மனசாட்சி.. 99வது ஸ்லோகம் வந்துட்டேன்.. முடியப்போகுதேன்னு ஒரு வித சோகத்தில இருக்கேன்..

அதுக்காக இந்தப் பாட்டுக்களா அதுசரி.. நன்னா இருக்குடாப்பா நீ பேச்றது.. நீ தான் எங்க போகப்போற.அம்பாள் தான் உன் மனதை விட்டு எங்க போகப் போறா..

அப்படிங்கற..

ஆமா..மேல சொல்லு)


அழியாத சுகம் என்பது என்ன.

புலமைப் பித்தன் எழுதிய திரைப்பாடலில் என்ன கூறுகிறார்.

கருணை மேவும் பூவிழிப் பார்வையில்
கவிதை இன்பம் காட்டுகிறாய்
இளைய தென்றல் காற்றினிலே...
இனிய சந்தப் பாட்டினிலே
எதிலும் உந்தன் நாதங்களே
நினைத்த பொருள் தரும் நிரந்தர சுகம் தரும்
வேதம் நீ இனிய நாதம் நீ

திரையில் இந்தப் பாடலின் சூழல் என்னவென்று தெரியாது.ஆனால் அழியாத சுகம் தருபவள் அம்பிகை – அதென்ன அழியாத சுகம் – மோட்சம் எனச் சொல்ல முடிகிறது.

ஆக இன்றைய ஸ்லோகத்தில் அம்பிகையைத் துதிப்பவருக்கு இன்னும் என்னவெல்லாம் கிடைக்கும் என பகவத் பாதர் சொல்வதை..

வாருங்கள் உள்ளே சென்று பார்க்கலாம்

**

ஸரஸ்வத்யா லக்ஷ்ம்யா விதிஹரி ஸபத்னோ விஹரதே
ரதே: பாதிவ்ரத்யம் சிதிலயதி ரம்யேண வபுஷா
சிரம் ஜீவந்நேவ க்ஷபித பசுபாசவ்யதிகர:
பராநந்தாபிக்யம் ரஸயதி ரஸம் த்வத் பஜநவாந்

Saraswathya lakshmya vidhi hari sapathno viharathe
Rathe pathivrithyam sidhilayathi ramyena vapusha
Chiram jivannehva kshapathi pasu pasa vyathikara
Paranandabhikhyam rasayathi rasam twadjanavaan.

**

”தேவி உன்னைத் தொழுபவர்களுக்கு கல்வியோடு செல்வமும் கலைமகளும் திருமகளும் அருளுகின்றனர். அதுவும் எவ்வளவு..எண்ணற்ற அளவு..

அதைப் பார்க்கும் பிரம்மா விஷ்ணுவுக்கும் கூட பொறாமை+பொறாமை ஏற்படுகிறது.

உனது அடியாரின் அழகிய வடிவம் கண்ட ரதியோ இவர் யார், என் கணவருக்கு உறவா, சொல்லவேயில்லை- என்பது போல கொஞ்சம்  பெருமூச்சு விடுகிறாள்..எனில் ரதியையும் கலங்கவைக்கும் அழகு அடியவர் பெற்று விடுகிறார்..

உன்னை பூஜிக்கும் அடியவர்கள் நீண்ட ஆயுளுடன் இருப்பதுடன் பரம ஞானிகளைப் போல லோக மாயை நீங்கி பேரானந்தம் எனப்படும் மோட்சத்தையும் பூமியிலேயே அனுபவிக்கிறார்கள்..”

**
இந்த ஸ்லோக பாராயணம் கல்வி, செல்வம், அழகு, ஆயுள், மோட்சம் என அனைத்தையும் அளிக்குமாம்..

**
சின்னக் கண்ணன்
சின்னக் கண்ணன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 410
இணைந்தது : 19/12/2013

Back to top Go down

நாளும் ஒரு அழகின் அலை - Page 13 Empty Re: நாளும் ஒரு அழகின் அலை

Post by சின்னக் கண்ணன் Wed Apr 02, 2014 2:18 pm

நாளும் ஒரு அழகின் அலை....

செளந்தர்ய லஹரி

ஸ்லோகம் 100


அம்பிகை என்நாவில் வந்தாள் – தினம்
ஒருவிதம் அவள் அழகைப் பருகவும் வைத்தாள்
விம்மியே நிற்குமே நெஞ்சம் – அந்த
வித்தகச் செல்வியின் பாதங்கள் தஞ்சம்

சொல்லத்தான் ஆவலாய் வந்தேன் - பல
சிறப்பான செய்திகளைக் கற்றே உவந்தேன்
அள்ளவா மொள்ளவா முடியும் – அவள்
அருளான விழிப்பார்வை அமுதூறி வடியும்

சற்றேதான் நெஞ்சத்தில் துன்பம்- அவள்
பற்றியே பாடல்கள் முடித்திடும் நேரம்
பற்றுக்கள் எல்லாமே விட்டு – தேவி
பாதம் பணிகின்றேன் நல்வழி சுட்டு

சின்னவன் நெஞ்சிலே ஆசை – உன்
செயலாலே தானிங்கு விளைந்திட்ட ஓசை
வண்ணமாய் வாழ்த்துக்கள் சொல்லி – உன்
விழிப்பார்வை அமுதத்தைத் தெளிப்பாயே அள்ளி..

*********

இன்னும் பலவாய் இங்கே நானும்
எழுதிட வைத்திடு வீர்
இனிதாய் நலமும் இளைமைக் குணமும்
என்றும் கொடுத்திடு வீர்

சின்னத் தனமாய் நானும் இருந்தேன்
அதுவோ பழங்கா லம்
சேற்றில் இருந்து மீண்டே வந்தேன்
இதுவே இந்நே ரம்

அன்னை பற்றி அருள்வடி வான
ஆதி சங்கரர் தான்
அழகாய்ச் சொன்ன பாடல் களிலே
அமுதம் சிறிதெடுத்தே

எண்ணம் போலே எழுதிப்பார்த்தேன்
எளியவன் நானும்தான்
என்னைச் செய்வித் தவரும் அவர்கள்
என்பிழை எதுவு மிலலை!!

***
என்னுடைய பிழை எதுவுமில்லை என்று மேலே சொன்னது சும்மா தான்..தமிழில் ஜஸ்ட் லைக் தட் என்பார்க்ள்.. இந்தப் பாடல்கள் உரையில் சொற்குற்றம் பொருட்குற்றம் எதுவும் இருந்தால் அது என்னையே சாரும்..

அம்பிகையின் அருட்துதிகளான இந்த நூறு பாடல்களும் புரிவதற்கு அடியேனுக்குச் சிரமமாகத் தான் இருந்தது..கொஞ்சம் அங்குமிங்கும் படித்து, கேட்டு எனக்குப் புரிந்த வரையில் இங்கு எழுதிப் பார்த்திருக்கிறேன்

ஒவ்வொரு பாடலுக்கும் ஒரு சின்னப் பாடல் தமிழில் எழுதிப் பார்க்க ஆசை.. இந்த நினைப்பைத் தூண்டியவளே அவள் தான்..அம்பாள் தான்..எழுத வைப்பாள்.. எழிதிய பின் மீண்டும் வருகிறேன்..

இன்றைய பாடலில் அம்பிகையானவளைப் பற்றி தான் செய்த துதிகள் எல்லாம் அவள் செயலே என்கிறார் பகவத் பாதர்.. இந்தப் பாடல்க்ள் எப்படி இருக்கின்றன.. என்பது பற்றி இந்த ஸ்லோகத்தில் என்ன சொல்கிறார்..

வாருங்கள் உள்ளே சென்று பார்ப்போம்..

**



**
ப்ரதீப ஜ்வாலாபி: திவஸகர நீராஜந விதி:
ஸுதாஸூதே: சந்த்ரோபலஜல லவைராக்யரசனா
ஸ்வகீயை ரம்போபி: ஸலில நிதி ஸெள்ஹித்யகரணம்
த்வதீயாபிர் வாக்பிஸ்தவ ஜநநி வாசாம் ஸ்துதிரியம்

Pradhipa-jvalabhir dhivasa-kara-neerajana-vidhih
Sudha-suthes chandropala-jala-lavair arghya-rachana;
Svakiyair ambhobhih salila-nidhi-sauhitya karanam
Tvadiyabhir vagbhis thava janani vacham stutir iyam.



அம்பிகையே.. உன்னைத் துதிக்கும் இந்தத் துதிகள் எப்படி இருக்கிற்து..

மஹா பிரகாசமான ஒளி பொருந்திய சூரியனுக்குச் சின்னக் கற்பூர ஒளியினால் தீபாராதனை செய்வது போல இருக்கிறது..

குளிர்ந்த கிரகணங்களுடைய சந்திரனுக்கு, அவனது கிரணங்களால் சந்திர காந்தக் கல்லில் துளிர்த்த நீரெடுத்து சமர்ப்பணம் செய்வது போலிருக்கிறது..

அலைகளால் ஆர்ப்பரிக்கும் சமுத்திரத்திற்கு அதனுடைய நீரினையே எடுத்து தர்ப்பணம் செய்வது போல இருக்கிறது..

ஏன் தெரியுமா

எழுத்துக்களின் வர்ணம் எனப்படும் வடிவம் நீ.. அந்த எழுத்துக்களால் வடிவமைக்கப் படும் சொற்களின் செல்வியும்  நீயே..

எனில் உன்னுடைய சொற்காளை வைத்து உனக்காக இயற்றப் பட்டதே இந்தத் துதிகள்.. இதை நீ ஏற்று அருள் புரிய வேண்டும்..

**

எவ்வளவோ பயமாய்த் தான் இருந்தது இந்த உரைகளை எளிமையாக எழுதிப் பார்ப்பதற்கு..எழுத வைத்தவர்கள் அம்பாளும் ஆதி சங்கரரும் தான்..அவரகளது பாதங்களை நான் பணிகிறேன்..

பொறுமையாய் இந்த உரைகளைப் படித்த அனைவருக்கும் எனது நன்றிகள்.. அம்பாள் உங்களுக்கு எல்லா நலங்களும் அருளுவாள்

இவ்வாறு ஸ்ரீமத் பகவத் பாதர்  எழுதிய ஸ்ரீ செளந்தர்ய லஹரி முற்றிற்று..

****

( கட்டிச் சமத்துடா நீ.. முடிச்சுட்டியே.. உனக்கு திருஷ்டி சுத்தி உன்னையே தூக்கிப் போடணும்..

மன்ச்சு..ஒண்ணு மறந்துட்ட.. நான் விழுந்தா நீயும் தான் விழுவ..

ஆமாம்.. அப்ப்ப வேண்டாம்.. என்றாலும் நீ குட்பாய் தான் போ..

தாங்க்ஸ் மன்ச்சு.. மனசாட்சி....!)
சின்னக் கண்ணன்
சின்னக் கண்ணன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 410
இணைந்தது : 19/12/2013

Back to top Go down

நாளும் ஒரு அழகின் அலை - Page 13 Empty Re: நாளும் ஒரு அழகின் அலை

Post by சின்னக் கண்ணன் Wed Apr 02, 2014 2:26 pm

அன்புள்ள ஈகரை நண்பர்களுக்கு..

ஒரு வழியாய் பதிவிட்டு முடித்துவிட்டேன் அம்பாளின் அழகின் அலைகளைப் பற்றி..

சிறு பொறியாய் போன வருடம் ஜனவரி மாதம் தோன்றிய எண்ணம், பின் தொடர்ந்த நூறு நாட்கள் அலுவலகம் முடித்து வீட்டிற்கு வந்து சில பல புத்தகங்கள், வலை என ரெஃபரன்ஸ் செய்து எழுதிப் பார்த்தேன்.. சில நாட்களில் முதல் வார்த்தையோ..தகவல்களோ கிடைப்பதற்கோ, விருத்தத்திற்கான கற்பனையோ- எழுதிப்பார்த்தால் சரியாக வராமல் அடித்துத் திருத்தி எழுதி இடுவதற்கு நடு இரவும் ஆகியிருந்தது..முக நூலில் ஒரு சின்ன நட்பு வட்டம், உறவு வட்டம் தான் இருந்தது..

இங்கு இடுகையில் எனக்கு மிக மகிழ்வாக இருந்தது/இருக்கிறது.. முழுக்கப் படித்துக் கொஞ்சம் சரியாக வந்திருக்கிறதா என்று சொன்னால் மகிழ்வேன்..

இதைத் தொடர்ந்து நான்கு அத்தியாயங்கள் நாலாயிர திவ்யப் ப்ரபந்தத்தைப் பற்றி எழுதப்பார்த்து நிறுத்தியிருந்தேன் - நாளும் ஒரு எண்ண அலை என்ற தலைப்பில்..அதை மறுபடியும் ஆரம்பிக்கப் பார்க்கிறேன்..

அனுமதி அளித்து ஊக்குவித்த மாடரேட்டர்கள், படித்து ஊக்குவித்த நண்பர்களுக்கும் என் நன்றி..
சின்னக் கண்ணன்
சின்னக் கண்ணன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 410
இணைந்தது : 19/12/2013

Back to top Go down

நாளும் ஒரு அழகின் அலை - Page 13 Empty Re: நாளும் ஒரு அழகின் அலை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 13 of 14 Previous  1 ... 8 ... 12, 13, 14  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum