ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:28 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Yesterday at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Fri Jul 05, 2024 12:23 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நாளும் ஒரு அழகின் அலை

+5
ராஜா
vasudevan31355
ayyasamy ram
myimamdeen
சின்னக் கண்ணன்
9 posters

Page 11 of 14 Previous  1 ... 7 ... 10, 11, 12, 13, 14  Next

Go down

நாளும் ஒரு அழகின் அலை - Page 11 Empty நாளும் ஒரு அழகின் அலை

Post by சின்னக் கண்ணன் Sun Feb 02, 2014 6:09 pm

First topic message reminder :

ஈகரை நண்பர்களுக்கு,

வணக்கம்.. சென்ற வருடம் முக நூலில் நாளும் ஒரு அழகின் அலை என்ற தலைப்பில் செளந்தர்ய லஹரி - 100 ஸ்லோகங்களுக்கு நான் புரிந்து கொண்டவற்றை எழுதிப் பார்த்தேன்..

கொஞ்சம் விருத்தங்கள்,வெண்பாக்கள் சில பல உதாரணங்கள் என எழுதிப் பார்த்திருக்கிறேன். அதை இங்கு இடுகிறேன்..

நாளும் ஒன்று என்றில்லை.. மூன்று நான்கும் வரும்..புன்னகை

அன்புடன்

சின்னக் கண்ணன்..
சின்னக் கண்ணன்
சின்னக் கண்ணன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 410
இணைந்தது : 19/12/2013

Back to top Go down


நாளும் ஒரு அழகின் அலை - Page 11 Empty Re: நாளும் ஒரு அழகின் அலை

Post by T.N.Balasubramanian Sun Mar 16, 2014 1:02 pm

இடைவிடாது எழுதவும் சின்னக் கண்ணன் அவர்களே.

அருமையாக உள்ளது.
ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35032
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

நாளும் ஒரு அழகின் அலை - Page 11 Empty Re: நாளும் ஒரு அழகின் அலை

Post by சின்னக் கண்ணன் Sun Mar 16, 2014 1:58 pm


 புன்னகை கண்டிப்பாக எழுதுகிறேன் ரமணீயன் ஐயா..வெள்ளி சனி இங்கு விடுமுறை..எனில் இடை வெளி..!
நாளைய இடுகையில் ஒரு விஷயம் முயற்சித்திருக்கிறேன்.படித்துவிட்டுச் சொல்லவும்..

T.N.Balasubramanian wrote:இடைவிடாது எழுதவும் சின்னக் கண்ணன் அவர்களே.

அருமையாக உள்ளது.
ரமணியன்
சின்னக் கண்ணன்
சின்னக் கண்ணன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 410
இணைந்தது : 19/12/2013

Back to top Go down

நாளும் ஒரு அழகின் அலை - Page 11 Empty Re: நாளும் ஒரு அழகின் அலை

Post by சின்னக் கண்ணன் Mon Mar 17, 2014 10:15 am

நாளும் ஒரு அழகின் அலை....

செளந்தர்ய லஹரி

ஸ்லோகம் .81


புகையெனவே மனதினிலே உதித்துவிட்ட எண்ணம்
….பூமொட்டாய் மாறியபின் மலர்ந்ததுவே திண்ணம்
பகையெனவே வருகின்ற நினைப்புகளைச் சற்றே
…பக்குவமாய் விலக்கிவைத்து பகிர்கிறேனே இங்கே
வகைதொகையாய் வஞ்சியவள் அம்பிகையின் அழகை
…வார்த்தைகளில் சிக்காத வர்ணணைகள் கொண்டே
சிகைமுதலாய் பாதம்வரை பகர்ந்திட்ட பாங்கை
…சிறுவன்நான் சிச்சிறிதாய்ச் சொல்கிறேனே இங்கு…
**
புரியாத பாஷையென புவனமுழு துடையாளின்
பாடல்கள் நாடி வந்தேன்
பூவிதழ் விரித்துத்தான் பூந்தேனில் குளித்துத்தான்
புவியினையும் மறந்து போனேன்

வரிகளுக்குள் சிக்காமல் வண்ணமகள் அழகுகளும்
வார்த்தையாய் ஆடி வந்தே
வஞ்சியவள் அருள்வடிவம் கண்முன்னர் கருணைமழை
வள்ளலெனப் பொழியக் கண்டேன்

தறியினிலே சிக்கிவிட்ட தங்கதங்க நூலிழையைத்
தரமாகப் பின்னித் தானே
தத்துவத்தின் சாரமென தக்கபடி தானுரைத்த
தன்மையைத்தான் என்ன சொல்வேன்..

அரியெனவே உரைத்திருக்கும் அபிராமி உன்கழலை
அயராமல் பற்று வேனே..
அடியேனின் இவ்வுரையில் சிறுபிழைகள் வாராமல்
அருள்புரிவாய் அன்னை நீயே



**
அஞ்சுகத்தாள் அவளழகை வார்த்தையிலே கொஞ்சம்
..அள்ளிவர முடியாமல் பதறுதேயென் நெஞ்சம்
கொஞ்சுவிழி கருணைமொழிக் கோல மயில் பாவை
…கோர்த்திருப்பாள் முத்துநகைப் புன்னகையை வாயில்
அஞ்சிவரும் இடையதுவும் ஒடியாமல் அங்கே
…அழகுமலர்க் கொடிபோல வளைந்திருக்கும் தன்மை....
பிஞ்சுநடை பின்னிவரு பின்னழகும் என்ன
…பேதலிக்க வைத்திடுமே பரமனைத்தான் மெல்ல..
**
(“ம்க்கும்ம்”

“என்ன ஆச்சு மன்ன்சு..”

“நான் உன்னைக் கேக்கணும்.. ஏண்டா ஏற்கெனவே எண்சீர் கொஞ்சம் ததிங்கணத்தோம் உனக்கு..இதுல இரண்டாவது பாட்டில பதினாலு சீர் வேறயா.. ஒடம்புக்கு ஒத்துக்குமா..”

“ஹிஹி..ச்சும்மா ட்ரை பண்ணேன்..”

“அப்புறம் என்ன சொல்லப் போற?’

“வெய்ட் ப்ளீஸ்..”)

***
இமய மலை பற்றித் தெரியும் தானே.. இந்நில உலகிலேயே ஒப்பற்ற மிகப்பெரிய, மிகவுயர்ந்த, மாபெரும் மலைத்தொடர் இந்த இமயமலைத் தொடர்தான்.

இமயமலை மேற்கு-வடமேற்கு பகுதியிலிருந்து கிழக்கு-வடகிழக்கு பகுதிவரை 2400 கிலோமீட்டர் வட்டவில்லாக அமைந்துள்ளது.

இதன் மேற்கில் உயர்ந்த சிகரம் நங்கா பர்பத் - சிந்து நதியின் வடக்கு வளைவில் அமைந்துள்ளது, இதன் கிழக்கில் உயர்ந்த சிகரம் நம்சா பர்வா பரம்ஹபுத்ராவின் பெரிய வளைவில் மேற்கே அமைந்துள்ளது.,

மலைத்தொடரின் அகலம் மேற்கில் 400 கிலோமீட்டரும் கிழக்கில் 150 கிலோமீட்டரும் ஆகும்.

(”ஏண்டாப்பா.. இதையெல்லாம் மக்கள் அவங்களாகவே பாத்துக்க மாட்டாங்களா..ஏண்டா படுத்தற..”

“நீ தான் பாட்டி மாதிரிப் பேசி படுத்தற..மன்ச்சு.. இமயமலையோட ஓனர் யாரு..

இந்தபார்..திடீர்னு அரசியல்லாம் பேசாதே..எனக்கு ஆகாது..

மன்ச்சு.. புராண காலத்தில கேட்டேன்.. புராண காலத்தில் இமயமலையின் அதிபதி இமவான்..அவர் யார்.. நம்ம பார்வதியோட டாட்.. பார்வதி யார்.. அம்பாள்..அம்பிகை.. சாதாரணப் பெண்ணா என்ன.. வெகு உயர்வானவள்..அவளுக்கு எப்படிப்பட்ட சீதனம் கொடுத்திருக்கார் தெரியுமா..அதை இந்த ஸ்லோகத்தில யோசிச்சுருக்கார் பகவத்பாதர்..”

“சொல்லேன்..

:சொல்றேன்.. அதுக்கு முன்னாடி..”

“போச்சுடா..மறுபடி ஆரம்பிச்சுட்டான்)

***


நகைச்சுவை நடிகர் தான் கதையின் மெயின் கேரக்டர்.. ஹீரோவும் உண்டு..ஹீரோயினும் ஓகே.. விடாமல் படப்பிடிப்பும் முடித்தாயிற்று..

சின்ன திரையரங்கில் போட்டுப்பார்த்தார் தயாரிப்பாளர்.... படம் முடிந்ததும் அவருக்கு சின்ன உறுத்தல்.. டைரக்டர் கேட்க அவர் “என்னன்னு தெரியலை..படம் ஓகே தான் இன்னும் ஒண்ணு சேர்க்கலாமான்னு யோசிக்கிறேன்..”

“சொல்லுங்க.. சில சீன்ஸ் கூட எடுக்கணுமா..”

“இல்லைப்பா.. இன்னும் ஒரு பாட்டு வெச்சுக்கலாமா..”

“அண்ணா.. நீங்க சொன்னா அப்பீலேது.. கூப்பிடு பாடலாசிரியரை..”

அந்தக் காலத்தில் வாலிபமாக இருந்த இந்தக்காலத்திலும் வாலிபக்கவிஞர் எனப்படும் கவிஞர் வந்தார்.. சொல்ழ்ழுங்கோ என்றார் வெற்றிலை நிறைந்த வாயுடன்..

”பாட்டா பேஷா எழுதலாமே”..

இசையமைப்பாளர் வர கண்மூடி ட்யூன் போட்டு படக்கென பாடல் எழுதப்பட அதை குறுகிய காலத்தில் –ஓரிரு நாட்களில் எடுத்து= முழுப்படத்தில் சேர்த்துக் காண்பித்தால் தயாரிப்பாளர் முகத்தில் புன்னகை..இப்ப ஓகே..

படம் வெளியிடப் பட, மற்றப் பாடல்களை சற்றே புறந்தள்ளி அந்தப் பாடல் ஹிட்..

அந்தப் பாடலில் வரும் சில வரிகள்..

வா வா என்பதை விழியில் சொன்னாள்
மௌனம் என்றொரு மொழியில் சொன்னாள்

சிற்றிடை என்பது – முன்னழகு
சிறு நடை என்பது – பின்னழகு
பூவில் பிறந்தது – கண்ணழகு
பொன்னில் விளைந்தது – பெண்ணழகு

(ம்ம் ஏதோ சொல்ற.. சரி வா இப்பவாவது ஸ்லோகத்துக்குள்ள போகலாமா..

வா போய்ப் பார்க்கலாம்)

**
குருத்வம் விஸ்தாரம் க்ஷிதிதரபதி: பார்வதி நிஜாத்
நிதம்பாத் ஆச்சித்ய த்வயி ஹரண்ரூபேண நிததே
அதஸ்தே விஸ்தீர்ணோ குருயம் அசேஷாம் வஸுமதீம்
நிதம்ப ப்ராக் பார ஸ்த்தகயதி லகுத்வம் நயதி ச

Guruthvam vistharam ksithidharapathi paravathy nijaath
Nithambha Dhhachhidhya twayi harana roopena nidhadhe
Athasthe vistheerno guruyamasesham vasumathim
Nithambha-praabhara sthagayathi lagutwam nayathi cha

“பார்வதி தேவியே.. அம்மா.. உனது தந்தை இமவான் உன் மேல் மிகுந்த பாசம் மிக்கவன்..

எனில் அவன் தனக்குச் சொந்தமான இமயமலையின் கடினத் தனமையையும் விரிந்து பரந்த தன்மையையும் அதன் அடிவாரத்திலிருந்து எடுத்து திருமணப் பரிசாக உன்னுடலில் சீதனமாகக் கொடுத்துவிட்டான் போலும்...அதனால் உன் இடைக்குக் கீழே உள்ள பின்னழகானது (நிதம்பம் என்றும் சொல்வர்) இந்த பூமி முழுவதும் மறைத்து லேசானதாகவும் ஆக்குகிறது..

**

அம்பிகையை இவ்வண்ணம் தியானிப்பவர் எதிலும் வெல்லும் தனமையைப் பெறுவார்களாம்..
சின்னக் கண்ணன்
சின்னக் கண்ணன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 410
இணைந்தது : 19/12/2013

Back to top Go down

நாளும் ஒரு அழகின் அலை - Page 11 Empty Re: நாளும் ஒரு அழகின் அலை

Post by சின்னக் கண்ணன் Mon Mar 17, 2014 10:19 am

நாளும் ஒரு அழகின் அலை....

செளந்தர்ய லஹரி

ஸ்லோகம் .82


பல திரைப்படங்களில் பார்த்திருக்கலாம்..

பிள்ளை வீட்டார் வந்திருப்பார்கள்.. ஹீரோயின வந்ததும், நமஸ்காரம் பண்ணுமமா.. என்பார் குடும்பப் பெரியவர். பெண்ணும் செய்வாள்..

இந்தக் காலத்தில் ஹலோ ஹவ் ஆர்யு என்று சொல்லி நேருக்கு நேர் அமர்ந்து கொள்வதும் சில இடங்களில் நடக்கும்..

அது என்ன நமஸ்காரம்..

நமஸ்காரம் என்னும் சொல்லுக்கு வணக்கம் செலுத்துகிறேன் என்று பொருள்..

எவரை எப்படி வணங்க வேண்டும்..
அன்னை, தந்தை – பாதங்களைத் தொட்டு வணங்க வேண்டும்..தினமும் வணங்கினால் முன் ஜென்மப்பாவங்கள் எல்லாம் விலகும் என் சாஸ்திரங்கள் சொல்கின்றன.. இந்தக் காலத்தில் எத்தனை குழந்தைகள் செய்கின்றன..?

கல்வியை வழங்கும் குருவுக்கு இருகைகளையும் கூப்பிய வண்ணம் நெற்றிக்கு நேராக வணங்க வேண்டும்.

தெய்வங்களை இரு கரங்களையும் மேலே தூக்கி கை கூப்பி வணங்கவேண்டும்..இது சரணாகதி தத்துவம்

சக மனிதர்களுக்கும், இதயத்துக்கு இதமான நண்பர்களுக்கும் வணக்கம் செலுத்துவது - இரு கைகளையும் இருதயத்துக்கு நேராக கூப்ப வேண்டும்..

மரியாதைக்கு உரியவர்களை, நம் முகத்துக்கு நேராக இரு கைகளையும் கூப்பிச் செய்வது நல் அபிப்ராயத்தைப் பெற உதவும்.

தெய்வங்களை வணங்கும் வகைகள் பற்றி சாஸ்திரங்கள் என்ன கூறுகின்றன.

தெய்வ ஸன்னிதானத்திலுள்ள தெய்வங்கள் அனைத்தையும் வணங்கிவிட்டு, ஆலயத்தில் கொடிமரம் இருந்தால் - தெய்வத்திற்கும் கொடிமரத்தைக்கும் இடைப்பட்ட இடத்தில் இல்லாமல், கொடிமரத்திற்குப் பின்னே நமஸ்கரிக்க வேண்டும்.

ஸாஷ்டாங்க நமஸ்காரம் ஆண்கள் செய்யக் கூடியதாக சாஸ்திரங்கள் கூறுகின்றன.

உடல் முழுவதும் முதலில் பூமியில் படும்படி பொருத்தி,
வலது கையை முதலில் தலைக்கு நேரே தூக்கி பிறகு
இடது கையை தலைக்கு நேரே தூக்கி கூப்பிய கரத்துடன் செய்யவேண்டும்.
முகத்தை நேராக தரையில் கொண்டு வந்து நெற்றியைத் தரையில் படச் செய்து, முன்னர் செய்தது போல வலக்கையை இடுப்புக்கு நேரே கொண்டுவந்து,வலது புஜம் எனும் வலது தோள் தரையில் படச்செய்து,பிறகு இடது கையை இடுப்புக்குக் கொண்டு வந்து,இடது தோளைத் தரையில் படச்செய்ய வேண்டும்.

பின்னர், முதலில் வலது காதையும் பிறகு இடது காதையும் தரையில் படச்செய்ய வேண்டும்.

பின்னர் மோவாய் தரையில் பட வேண்டும்.
இதுவே ஸாஷ்டாங்க நமஸ்காரம் எனப்படும்

. இறைவன் படைத்த உடல் இறைவனுக்கே அர்ப்பணம் எனும் செயலைக் காட்டுவதே அஷ்டாங்க நமஸ்காரம். இந்த நமஸ்காரம் தெய்வீகப் பலனை வாரி வழங்கக் கூடியது.

பெண்கள் செய்யக் கூடியது பஞ்சாங்க நமஸ்காரம் ஆகும்.

பெண்கள் முதலில் இரண்டு முழங்கால்களைத் தரையில் பொருந்தச் செய்து, முதுகை வளைத்து, பின் இரண்டு கைகளையும் கூப்பியவாறு தரையில் படச் செய்து, பின் நெற்றியினை தரையில் படச் செய்ய வேண்டும்.

இதுவே ஐந்து உடல் உறுப்புகள் தரையில் படச்செய்யும் பஞ்சாங்க நமஸ்காரம் ஆகும். பெண்களுக்கு நல்வாழ்க்கையும், சுமங்கலிகளுக்கு நீடித்த மணவாழ்க்கையையும் அருளுவது பஞ்சாங்க நமஸ்காரம். . பெண்களின் திருமாங்கல்யம் எந்நிலையிலும் தரையில் படக்கூடாது.

ஐயங்கார் திருமணங்களில் வடகலை என்றால் பெண்ணும் மாப்பிள்ளையும் நான்கு முறை சேவிக்க வேண்டும்.. தென்கலையில் ஒரு முறை சேவித்தால் போதும்.. ஐயர்களிலும் கூட ஒரு முறை தான் சேவிக்க வேண்டும் என நினைக்கிறேன்..

பதின்மூன்று அத்தியாயங்கள் கொண்ட துர்கா ஸப்தசதீயின் ஐந்தாவது அத்தியாயம் மிக முக்கியம் வாய்ந்தது. அருட்செயல்கள் புரிந்த தேவியை நமஸ்கரிக்கும் விதமாக அமைந்தது ஐந்தாவது அத்தியாயம் .

"யா தேவி ஸர்வபூதேஷ மாத்ரு ரூபேண ஸம்ஸ்திதா
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம:

அனைத்துலகையும் ஈன்று எடுத்த அன்னை வடிவாகிய அம்பிகைக்கு வணக்கம். மீண்டும் வணக்கம். என்றென்றும் வணக்கம்

(ஆமா உனக்கு நமஸ்காரம்னு சொன்னா என்ன தோணுது..?

மன்ச்சு,. நான் வணங்குகிறேன் சபையிலே தமிழிலேன்னு அந்தக் கால ஸ்ரீதேவி அடிபம்ப் குழாயை அடிக்கிற மாதிரி ஏதோ செய்வாங்க ஒரு பாட்டுல.. அது தான் நினைவுக்கு வருது..

உன்கிட்ட கேட்டேன் பாரு.. இது ஓவராத் தெரியலை உனக்கு.. அவ்ளோ மோசமா இருக்காது..)

அடுத்து, வாழைத் தண்டு பற்றிசிறிது பார்க்கலாம்…

வெள்ளை முள்ளங்கி, வாழைத் தண்டு இவைகளை பொடி பொடியாக நறுக்கி,எலுமிச்சை சாறு, உப்பு இவைகளை சேர்த்து, பச்சையாக வெறும்வயிற்றில் தொடர்ந்து சாப்பிட்டு வர, அங்கங்கே விழும் சதைமடிப்புகள் மறையும். வாழைத் தண்டை வாரத்திற்கு இரண்டு முறையாவது உணவுடன் சேர்த்துக்கொள்ள உடல் பருமன் குறையும்.

( ஏன் மன்ச்சு நீ வாழைத்தோப்பு எனக்குத் தெரியாம காண்ட்ராக்ட் எடுத்திருக்கியா..
ஷ்ஷ்)

முந்தைய ஒரு ஸ்லோகத்தில் அம்பாளின் நகில்களை யானையின் மத்தகத்திற்கு ஒப்பிட்ட பகவத்பாதர், இன்றைய ஸ்லோகத்தில் அம்பாளின் முழங்கால்களின் மூட்டினை தேவலோகத்து ஐராவதமான வெள்ளையானையின் மத்தகத்திற்கு ஒப்பிடுகின்றார்..அது என்னவென்று பார்க்கும் முன்..

(ஏன் மன்ச்சு..ஏற்கெனவே நிறைய இருக்கறாமாதிரி படுது..இதுல பன்னிரு சீர் அவசியமா..
நீ எழுதினா நான் ஏதாவது சொன்னேனா.. கொஞ்சம் இரேன்)

***

அம்பிகையே உன்னெழிலை
அழகாகக் தொகுத்திடவே
ஆசையாய் ஓடிவந்தேன்
அதற்காக பலமுறைதான்
அயராமல் பலவாறாய்
அனுதினம் வேண்டிநின்றேன்..

நம்பிக்கை கொள்வைக்கும்
பொன்வாழைத் தண்டெனவே
நங்கைநின் கால்களன்றோ
நல்லகரு யானையதன்
தும்பிக்கை போலவே
நலிந்துமேல் பருத்ததன்றோ..

அம்புவிழி அமுதமொழி
அழகுமிகும் பாதமலர்
அனைத்திலுமே ஊறுமெழிலே
ஆசையது மிகும்வண்ணம்
அகிலத்தின் பரமனையும்
ஆட்டுவிக்கும அதுவுமன்றோ

அம்பிகையே உன்பெயரை
அனுதினமும் உச்சரிக்க
அடியேனும் வேண்டுகின்றேன்
அழகான மனங்கொண்டு
அருஞ்சுவையாம் தமிழ்கொண்டு
அர்ச்சிக்க அருள்க தாயே..

**

(ஓ.. ஸ்லோகத்தில் உள்ளதை கொஞ்சமா எழுதிப் பார்த்திருக்கியா.. ஓகே வா..ஸ்லோகத்துக்குள் போய்ப்பார்க்கலாம்..)


**

கரீந்த்ராணாம் சுண்டாந் கநககதளீ காண்ட படலீம்
உபாப்யாம் ஊருப்யாம் உபயமபி நிர்ஜித்ய பவதி
ஸுவ்ருத்தாப்யாம் பத்யு: ப்ரணதி கடிநப்யாம் கிரிஸுதே
விதிஜ்ஞே ஜாநுப்யாம் விபுதகரிகும்பத்வயம் அஸி

Karrendranam sundan kanaka kadhali kaadapatali
Umabhamurubhyam - mubhayamapi nirjithya bhavathi
Savrithabhyam pathyu pranathikatinabham giri suthe
Vidhigne janubhysm vibhudha karikumbha dwayamasi

” அம்பிகையே.. உன் தொடைகளிரண்டையும் பொன்னால் செய்யப்பட்ட வாழைத்தண்டுகளுக்கோ, யானையின் தும்பிக்கைக்கோ ஒப்பிட இயலாது.. ஏனெனில் அவற்றை உன்னுடைய அழகு ஜெயித்துவிட்டது.

. உன் அழகான உருண்டு திரண்ட கால்களில் மையப் பகுதியானது, நீ அடிக்கடி பரமசிவனை நமஸ்கரித்து எழுவதால் கடினப் பட்டு,, அந்த முழங்கால்கள் (மூட்டுச்சில்லுகள்) இந்திரனின் ஐராவதத்தின் மத்தகங்களை வெற்றி கொண்டாற்போல் காணப்படுகிறன..”

**

இந்த ஸ்லோக பாராயணம் இந்திரனுடைய பதவிக்கும் மேற்பட்ட் பதவியைப்பெற்றுத் தருமாம்..

**
சின்னக் கண்ணன்
சின்னக் கண்ணன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 410
இணைந்தது : 19/12/2013

Back to top Go down

நாளும் ஒரு அழகின் அலை - Page 11 Empty Re: நாளும் ஒரு அழகின் அலை

Post by T.N.Balasubramanian Mon Mar 17, 2014 4:22 pm

Quote
"பெண்கள் முதலில் இரண்டு முழங்கால்களைத் தரையில் பொருந்தச் செய்து, முதுகை வளைத்து, பின் இரண்டு கைகளையும் கூப்பியவாறு தரையில் படச் செய்து, பின் நெற்றியினை தரையில் படச் செய்ய வேண்டும்.
இதுவே ஐந்து உடல் உறுப்புகள் தரையில் படச்செய்யும் பஞ்சாங்க நமஸ்காரம் ஆகும். பெண்களுக்கு நல்வாழ்க்கையும், சுமங்கலிகளுக்கு நீடித்த மணவாழ்க்கையையும் அருளுவது பஞ்சாங்க நமஸ்காரம். . பெண்களின் திருமாங்கல்யம் எந்நிலையிலும் தரையில் படக்கூடாது."


பெண்களின் திருமாங்கல்யம் மாத்திரம் அல்ல ,  கல்யாணமாகாத பெண்களும், சாஷ்டாங்க நமஸ்காரம் பண்ணுவது கூடாது.  பெண்களின் ஸ்தனபாகம் பூமியில் படக்கூடாது.
தற்கால சினிமா கவிகளின் வரிகள்
அக்கால சுலோகங்களின் அடிகளே.
சுலோகங்களின் மூலமே
சினி உலகில் கவிகளின் கற்பனையாம்.

வர்ணனைகள் பிரமாதம்  அன்பு மலர்  அன்பு மலர் 

ரமணியன்


Last edited by T.N.Balasubramanian on Mon Mar 17, 2014 4:25 pm; edited 1 time in total (Reason for editing : puncuation)


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35032
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

நாளும் ஒரு அழகின் அலை - Page 11 Empty Re: நாளும் ஒரு அழகின் அலை

Post by சின்னக் கண்ணன் Mon Mar 17, 2014 5:23 pm

நன்றி ரமணி ஐயா..
“வானில் நிலா ஏழைக்கெல்லாம் வெளிச்சம் தர மறுத்திடுமா” வாலி ஒரு சுலோகத்திலிருந்து எடுத்திருப்பார்..!

T.N.Balasubramanian wrote:Quote
"பெண்கள் முதலில் இரண்டு முழங்கால்களைத் தரையில் பொருந்தச் செய்து, முதுகை வளைத்து, பின் இரண்டு கைகளையும் கூப்பியவாறு தரையில் படச் செய்து, பின் நெற்றியினை தரையில் படச் செய்ய வேண்டும்.
இதுவே ஐந்து உடல் உறுப்புகள் தரையில் படச்செய்யும் பஞ்சாங்க நமஸ்காரம் ஆகும். பெண்களுக்கு நல்வாழ்க்கையும், சுமங்கலிகளுக்கு நீடித்த மணவாழ்க்கையையும் அருளுவது பஞ்சாங்க நமஸ்காரம். . பெண்களின் திருமாங்கல்யம் எந்நிலையிலும் தரையில் படக்கூடாது."


பெண்களின் திருமாங்கல்யம் மாத்திரம் அல்ல ,  கல்யாணமாகாத பெண்களும், சாஷ்டாங்க நமஸ்காரம் பண்ணுவது கூடாது.  பெண்களின் ஸ்தனபாகம் பூமியில் படக்கூடாது.
தற்கால சினிமா கவிகளின் வரிகள்
அக்கால சுலோகங்களின் அடிகளே.
சுலோகங்களின் மூலமே
சினி உலகில் கவிகளின் கற்பனையாம்.

வர்ணனைகள் பிரமாதம்  அன்பு மலர்  அன்பு மலர் 

ரமணியன்
சின்னக் கண்ணன்
சின்னக் கண்ணன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 410
இணைந்தது : 19/12/2013

Back to top Go down

நாளும் ஒரு அழகின் அலை - Page 11 Empty Re: நாளும் ஒரு அழகின் அலை

Post by சின்னக் கண்ணன் Mon Mar 17, 2014 5:26 pm

நாளும் ஒரு அழகின் அலை....

செளந்தர்ய லஹரி

ஸ்லோகம் .83

தலைவன் ம்ம் உண்டு.. தலைவி ஓஹோ பேஷா உண்டு.. காதல்.. அவங்களுக்குள்ள தானே உண்டு.. பிரிவு ம்ம் ஆம் உண்டு.

அந்தக்காலம்.. தலைவனுக்கு அரண்மனை உத்யோகம்..கவர்ன்மெண்ட் ஜாப்.. போருக்குப் போக வேண்டும்..தலைவியுடன் டூயட் பாடிக்கொண்டிருக்கலாமென்றால் அங்குதான் சிக்கல்.. போருக்குச் செல்லவேண்டும்..

(என்ன தான் சொல்ல வர்றே)

கீழோர் மறப்பர் மேலோர் நினைப்பர்..

(ஏதோ திரைப்பட டயலாக்காட்டாமா இருக்கு
அஃதே)

தலைவியைப் பிரிகிறானாம் தலைவன்..தலைவி சொல்கிறாள்: இந்தக் கால்களுக்கு எவ்வளவு பணிவிடை செய்திருப்பேன்.. என்னைப் பிரிந்து செல்கிறதே. இந்தக் கண்கள்..நான் அதைப் பார்த்ததே இல்லை.- நேருக்கு நேர் நோக்க வெட்கம் என்னை ஆட்கொள்ளும்...அவை என்னைப் பார்த்துப்பார்த்துச் செல்கின்றன..

(அப்புறமாவது ஒழுங்கா டா டா பை பை சொன்னாளா தலைவி..
இதுக்கு நீ கண்கள் எங்கே நெஞ்சமும் எங்கே..
கால்கள் இங்கே நெளியும் இங்கேன்னு பாட்டையாவது பாடி இருக்கலாமே..

ம்ம்)

இதில் கால்கள் சரி..அது என்ன கணுக்கால்.

.(அப்பா எவ்ளோ பெரிய விஷயம் கேக்கற)..

பாதமும் கெண்டைக்காலின் கீழ்ப்பகுதியும் இணையும் இடம் என்பது தெரிந்ததே..ஆனால் தேவியின் கணுக்கால் எப்படித்தெரிகிறது..

அம்பறாத் தூணி போல..அம்புகள் வைக்கும் பை முதுகில் கட்டிக் கொள்வது..

சரி அம்புகள்..அவை என்ன.. ஸ்லோகத்துக்குள் சென்று பார்க்கலாமா.
.
(ஏன்..இன்னிக்கு எதுவும் பாட்டு எழுதலையா..ஏன்

கொஞ்சம் மனசு சோர்வா இருக்கு மன்ச்சு..

அதெப்படி.. தேவியோட கால் பற்றறச்சே சோர்வா இருக்கமுடியும்..சியர் அப் மேன்.. கம் லெட்ஸ் கோ டு ஸ்லோகம்....)

**
பராஜேதும் ருத்ரம் த்விகுண சரகர்பெள கிரிஸுதே
நிஷங்கெள ஜங்கே தே விஷமவிசிகோ பாடம் அக்ருத
யதக்ரே த்ருச்யந்தே தச சர பலா: பாதயுகளீ
நகாக்ரச்சத்மாந: ஸுரமகுட சணைக நிசிதா:

Paraa jenu rudhram dwigunasara garbhoy girisuthe
Nishanghou Unghe thee vishamavishikho bhada -maakrutha
Yadagre drishyanthe dasa satra phalaa paadayugali
Nakhagrachadhyan sura makuta sanayika nishitha



“ மலை மன்னன் மகளே.. மன்மதனாகப் பட்டவன் உன் கணுக்கால்களை தன்னுடைய ஐந்து மலர்க்கணைகள் போல் இருமடங்கு வைக்கக் கூடிய இரண்டு அம்பறாத்தூணிகளாகப் படைத்து விட்டான் போலும்.

. அப்படி அம்பறாத் தூணிகளிலிடமிருந்து எட்டிப் பார்க்கும் கூர்மையான அம்புகள் போல உன் திருவடியின் பத்து விரல் நகங்கள் மின்னுகின்றன..

அவை கூராகவும் இருக்கின்றன. எதனால்.. தேவாதி தேவர்கள் தங்கள் மணிமுடியுடன் கூடிய சிரத்தினை உன் பாதங்கள் பட பணிந்து வணங்கும் போது அவற்றால் கூர் தீட்டப் பட்டது போல் அவ்வண்ணம் இருக்கின்றன..”

இவ்விதம் தேவியை தியானிப்பவர்கள் இந்திராதி தேவர்களைப் போன்ற புகழும், அதிகாரமும் பெற்று சிறந்து விளங்குவார்களாம்..
சின்னக் கண்ணன்
சின்னக் கண்ணன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 410
இணைந்தது : 19/12/2013

Back to top Go down

நாளும் ஒரு அழகின் அலை - Page 11 Empty Re: நாளும் ஒரு அழகின் அலை

Post by சின்னக் கண்ணன் Mon Mar 17, 2014 5:28 pm


நாளும் ஒரு அழகின் அலை....

செளந்தர்ய லஹரி

ஸ்லோகம் .84


மருதாணி, செம்பஞ்சுக் குழம்பு இரண்டும் ஒன்றா வேறு வேறா.?

இரண்டும் வேறு வேறு தான்..

மருதாணி எல்லாவகை நிலங்களிலும் வளரக்கூடியது..மருத்துவ குண்ங்கள் கொண்டது.. தலையில் வைத்துக் கொண்டு குளித்தால் உடல் குளிர்ச்சி அடையும்.. கைகளில் பெண்கள் அழகுக்கு வைத்துக் கொள்வர்.. பிற்காலத்தில் அழகாய் இலைகளை மசித்து மெஹந்தி எனச் சொல்லப் படும் ஓவியங்களியும் கைகளில் வரைந்து கொண்டனர்..

அந்த மெஹந்திக் கோலம் இருக்கிறதே.. ஒரு ஓமானியப் பெண் வரைந்ததைப் பார்த்திருக்கிறேன்..கிடுகிடுகென ஒற்றைக் கோடுகள் படாலென பூக்களாகப் பிறப்பெடுக்க, பச்சை வண்ணத்தில் இருந்தது தண்ணீர்விட்டபின்பார்த்தால், செவேல் என்ற கைகளில் கொத்துக்கொத்தாய்ப் பூக்கள் பூத்து உள்ளங்கை வரை முடியும் அழகு அடடா..


செம்பஞ்சுக் குழம்பு –அது தான் பெயரிலேயே வந்து விட்டதே..செம்பருத்தியின் சாற்றால் செய்யப்படும் ஒரு வகைச் சாயம்..இதைப் பெண்கள் கால்களுக்கு சின்ன பார்டராகப் போடுவதற்கு உபயோகப் படுத்தி வந்தார்கள்..ஆனால் இது சங்க காலத்தில் மட்டுமே உபயோகப் பட்டதாகத் தெரிகிறது

( யோசிச்சு யோசிச்சுப்பார்க்கறேன் நீ என்ன பிஸினஸ் பண்ணப் போறேன்னு கேக்கவே முடியலை
ஷ்ஷ்)

இந்து மதத்திலே இரண்டு வகையான நூல்கள உள்ளன. ஸ்ருதி , ஸ்ம்ருதி இதிலே ஸ்ருதி என்பது உண்மைகளை விளக்கும் , ஆராயும் தத்துவ ஆராய்ச்சிப் பகுதி ஆகும். வேதங்களின் தத்துவ விளக்கப் பகுதிகளான உப நிடதங்கள், பகவத் கீதை ஆகியவை ஸ்ருதி எனப்படுகிறது. ரிக், யஜூர், சாம ,அதர்வண, வேதங்கள் நான்கும், கீதையும் ஸ்ருதி எனப் படுகிறது.

ஸ்மிருதி எனப் படுவது மேகதூதம், குமார சம்பவம் மற்றும் சில.

(என்னாச்சு மனசாட்சி..திடீர்னு எங்கேயோ போற.. எனக்குல்லாம் ஏழாம் அறிவு ஸ்ருதி தான் தெரியும்..
ஷ்ஷ்)

இன்றைய ஸ்லோகத்தில் அன்னையின் திருவடிகளைப் பற்றிக் கூறுகிறார் பகவத்பாதர்.. அந்த பாத சரணத்தை தன் சிரசில் வைக்க வேண்டுகிறார்.

(என்னடா எதுவும் சொல்ல மாட்டேங்கற..

நான் ஏதாவது சொல்வேன் மன்ச்சு..உனக்குப் பிடிக்காதே..

சரி சொல்லாதே..

இல்லை..ஏதோ இவ்வளவு கேக்கற அதான்..எனக்கு அம்மம்மா சரணம் சரணம் உன் பாதங்கள் பாட்டு தான் நினைவுக்கு வருது..

நீ எப்படாப்பா திருந்தப் போற

நீ எப்ப பாட்டி மாதிரி பேசற்த
நிறுத்தறியோ அப்ப.)

வை.மு.கோ ஸ்டைலில்: வாருங்கள் ஸ்லோகத்துக்குள் சென்று பார்க்கலாம் எனச் சொல்லவும் வேண்டுமோ..!

**

ச்ருதீனாம் மூர்தானோ தததி தவ யெள சேகரதயா
மமாப்யேதெள மாத: சிரஸி தயயா தேஹி சரணெள
யயோ: பாத்யம் பாத: பசுபதி ஜடாஜுட தடிநீ
யயோர் லாக்ஷாலக்ஷ்மி: அருணஹரி சுடாமணிருசி:

Sruthinam murdhano dadhati thava yau sekharathaya
Mama'py etau Matah sirasi dayaya dhehi charanau;
Yayoh paadhyam paathah Pasupathi-jata-juta-thatini
Yayor larksha-lakshmir aruna-Hari-chudamani-ruchih

**
தாயே.. உனது திருவடிகளை மறைமுடிகளான உப நிஷத்துக்கள் தங்கள் தலையின் ஆபரணமாக அணிகின்றன..

பரம சிவனுடைய ஜடாமுடியிலிருக்கும் புனித கங்கையின் நீரினால் தான் உனது பாத சர்ணங்களுக்கு பாதப் ப்ரஷாலணம் – பாத பூஜை நடைபெறுகின்றது..

உன் பாத சரணங்களுக்கு திருமாலின் மகுடத்திலுள்ள கெளஸ்துப மணியின் ஒளியானது பட்டு பாதத்தை செம்பஞ்சுக் குழம்பு இட்டாற்போல் செவ்வண்ணமாகப் பிரகாசிக்கச் செய்கின்றது..

அப்பேர்ப் பட்ட பெருமையுடைய உனது பாத சரணங்கள, அம்மா, கருணை கூர்ந்து என் சிரஸிலும் வைத்தருள்வாய்”

**
இந்த ஸ்லோக பாராயணம் முக்தியைப் பெற்றுத்தருமாம்..
சின்னக் கண்ணன்
சின்னக் கண்ணன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 410
இணைந்தது : 19/12/2013

Back to top Go down

நாளும் ஒரு அழகின் அலை - Page 11 Empty Re: நாளும் ஒரு அழகின் அலை

Post by T.N.Balasubramanian Mon Mar 17, 2014 8:48 pm

வை.மு.கோ வை தற்காலத்தில் யார் அறிவார்கள்?
வை.கோ வை தான் அறிவார்கள்.
ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35032
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

நாளும் ஒரு அழகின் அலை - Page 11 Empty Re: நாளும் ஒரு அழகின் அலை

Post by சின்னக் கண்ணன் Tue Mar 18, 2014 12:56 pm

புன்னகை வை.மு.கோதை நாயகி - அறிந்திருப்பது கொஞ்சம் கஷ்டம் தான்..
T.N.Balasubramanian wrote:வை.மு.கோ வை தற்காலத்தில் யார் அறிவார்கள்?
வை.கோ வை தான் அறிவார்கள்.
ரமணியன்
சின்னக் கண்ணன்
சின்னக் கண்ணன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 410
இணைந்தது : 19/12/2013

Back to top Go down

நாளும் ஒரு அழகின் அலை - Page 11 Empty Re: நாளும் ஒரு அழகின் அலை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 11 of 14 Previous  1 ... 7 ... 10, 11, 12, 13, 14  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum