புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
'சிவாஜி என்ற மாநடிகர்' 'மனோகரா' தொடர்-10 பாகம் 1 Poll_c10'சிவாஜி என்ற மாநடிகர்' 'மனோகரா' தொடர்-10 பாகம் 1 Poll_m10'சிவாஜி என்ற மாநடிகர்' 'மனோகரா' தொடர்-10 பாகம் 1 Poll_c10 
60 Posts - 48%
heezulia
'சிவாஜி என்ற மாநடிகர்' 'மனோகரா' தொடர்-10 பாகம் 1 Poll_c10'சிவாஜி என்ற மாநடிகர்' 'மனோகரா' தொடர்-10 பாகம் 1 Poll_m10'சிவாஜி என்ற மாநடிகர்' 'மனோகரா' தொடர்-10 பாகம் 1 Poll_c10 
55 Posts - 44%
mohamed nizamudeen
'சிவாஜி என்ற மாநடிகர்' 'மனோகரா' தொடர்-10 பாகம் 1 Poll_c10'சிவாஜி என்ற மாநடிகர்' 'மனோகரா' தொடர்-10 பாகம் 1 Poll_m10'சிவாஜி என்ற மாநடிகர்' 'மனோகரா' தொடர்-10 பாகம் 1 Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
'சிவாஜி என்ற மாநடிகர்' 'மனோகரா' தொடர்-10 பாகம் 1 Poll_c10'சிவாஜி என்ற மாநடிகர்' 'மனோகரா' தொடர்-10 பாகம் 1 Poll_m10'சிவாஜி என்ற மாநடிகர்' 'மனோகரா' தொடர்-10 பாகம் 1 Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
'சிவாஜி என்ற மாநடிகர்' 'மனோகரா' தொடர்-10 பாகம் 1 Poll_c10'சிவாஜி என்ற மாநடிகர்' 'மனோகரா' தொடர்-10 பாகம் 1 Poll_m10'சிவாஜி என்ற மாநடிகர்' 'மனோகரா' தொடர்-10 பாகம் 1 Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
'சிவாஜி என்ற மாநடிகர்' 'மனோகரா' தொடர்-10 பாகம் 1 Poll_c10'சிவாஜி என்ற மாநடிகர்' 'மனோகரா' தொடர்-10 பாகம் 1 Poll_m10'சிவாஜி என்ற மாநடிகர்' 'மனோகரா' தொடர்-10 பாகம் 1 Poll_c10 
1 Post - 1%
rajuselvam
'சிவாஜி என்ற மாநடிகர்' 'மனோகரா' தொடர்-10 பாகம் 1 Poll_c10'சிவாஜி என்ற மாநடிகர்' 'மனோகரா' தொடர்-10 பாகம் 1 Poll_m10'சிவாஜி என்ற மாநடிகர்' 'மனோகரா' தொடர்-10 பாகம் 1 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

'சிவாஜி என்ற மாநடிகர்' 'மனோகரா' தொடர்-10 பாகம் 1


   
   

Page 1 of 2 1, 2  Next

vasudevan31355
vasudevan31355
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 569
இணைந்தது : 11/11/2013

Postvasudevan31355 Tue Jan 21, 2014 2:22 pm

'சிவாஜி என்ற மாநடிகர்'

தொடர்-10

பாகம் 1

'மனோகரா'

'சிவாஜி என்ற மாநடிகர்' 'மனோகரா' தொடர்-10 பாகம் 1 I38518_vlcsnap207565

'வெளி வந்த நாள்: 03.03.1954

கதை - ராவ் பஹதூர் பம்மல் சம்பந்த முதலியார்

வசனம் - மு.கருணாநிதி

ஒளிப்பதிவு - பி.ராமசாமி, ஜி.கே.ராமு

படத் தொகுப்பு - எம்.ஏ. திருமுகம்

நடன அமைப்பு - ஏ.கே. சோப்ரா, ஹீராலால்

இசை - எஸ்.வி.வெங்கட்ராமன் மற்றும் டி.ஆர்.ராமநாதன்

தயாரிப்பு - மனோகர் பிக்சர்ஸ்

இயக்கம் - எல்.வி.பிரசாத்

நடிக நடிகையர் -'நடிகர் திலகம்'சிவாஜி கணேசன்  பசுபலேட்டி கண்ணாம்பா, கிரிஜா, எஸ்.ஏ. நடராஜன், டி.ஆர்.ராஜகுமாரி, எஸ்.எஸ்.ராஜேந்திரன், காகா ராதாகிருஷ்ணன் மற்றும் பலர் .


கதை:

'சிவாஜி என்ற மாநடிகர்' 'மனோகரா' தொடர்-10 பாகம் 1 I33163_vlcsnap-2012-10-19-08h20m18s188

சோழ பரம்பரையின் வீர மன்னன் புருஷோத்தமன். அவன் தர்மபத்தினி பட்டத்தரசி மகாராணி பத்மாவதி. குணவதி. இவர்களுக்கு மனோகரன் என்ற அழகான இளவரசன். குழந்தைப் பருவத்தினன். பத்மாவதியின் தந்தை அதிவீரசேனரை பாண்டிய மன்னன் முத்து விசயன் போரில் கொன்று விடுகிறான். சோழ குலத்தாரின் இரத்தின சிம்மாசனத்தையும் கைப்பற்றி எடுத்துச் செல்கிறான். இறப்பதற்கு முன் பத்மாவதியின் தந்தை தன்னிடமிருந்த போர் வாளை தன் சேவகன் ஷைத்ரிகன் கேசரிவர்மனிடம் கொடுத்து அதைத் தன் மகள் பத்மாவதியிடம் பத்திரமாக சேர்க்கச் சொல்கிறான். தன்னைக் கொன்ற பாண்டியன் முத்து விசயனை தன் பேரன் அதாவது பத்மாவதியின் மகன் மனோகரன்தான் கொன்று பழிதீர்த்து அவனே இழந்த இரத்தின சிம்மாசனத்தையும் மீட்டு வரவேண்டும் என்பது அவன் மரணமெய்துமுன் மனதில் கொண்ட ஆசை. கேசரிவர்மன் தன் மனைவி வசந்தசேனையுடன் பத்மாவதியிடம் சென்று நடந்ததை இயம்புகிறான். மன்னன் புருஷோத்தமன் கேசரிவர்மனை தலைமை ஷைத்திரியனாக தன்னுடனேயே வைத்துக் கொள்கிறான். வசந்த சேனையை பத்மாவதி தேவியார் தன்னுடைய பணிப்பெண்ணாக நியமித்துக் கொள்கிறாள்.

வசந்தசேனை பெண்குலத்தின் இழிபிறவி. காமபோதை  கண்ணில் புரள காண்போரை கள் குடித்தவர் போல மதிமயங்கச் செய்யும் ஜாலக்காரி. பேராசையின் சொரூபி. நல்லது இன்னதென்றே அறியாதவள். தன் நாட்டியத்தாலும், ஒய்யார நடையினாலும், வேல்வீச்சு விழி வெட்டினாலும், மயக்கும் மோகனப் பேச்சினாலும் மன்னன் புருஷோத்தமனை மயக்குகிறாள். மன்னன் அவளுக்கு அடிமையாகிறான். பட்டத்து மகிஷியை பரிதவிக்க விட்டு பகட்டு மேனியாளின் மேனியழகில் கிறங்கிக் கிடக்கிறான். அவள் மடியிலேயே உறங்கிக் கிடக்கிறான்.

பத்மாவதி தன் வாழ்க்கை பட்டுப் போனதை எண்ணி மன்னனிடம் வாதிடுகிறாள். மன்னன் அவள் பேச்சைக் கேட்டானில்லை. மனமுடைந்த மகாராணி இனி மன்னனை சந்திப்பதில்லை என்று அவனிடமே சூளுரைக்கிறாள். மன்னனே மதி தெளிந்து வந்தாலொழிய இனி அவனுடன் சகவாசமில்லை என்று சத்தியம் செய்கிறாள். குழந்தை மனோகரனுடன் வனவாசம் போல அரண்மனையின் ஒரு பகுதியில் அழுகின்ற கண்ணீருடனே வாழ்கிறாள்.

'சிவாஜி என்ற மாநடிகர்' 'மனோகரா' தொடர்-10 பாகம் 1 I38516_vlcsnap229924

வசந்தசேனைக்கு இப்போது இடையூறு அவள் கணவன் கேசரிவர்மன். கொலையும் செய்வாள் பத்தினி என்பது தூக்குத் தூக்கியில் வரும் முதுமொழி அல்லவா! உண்மையாக்கினாள் அவளும். மன்னனின்  அருகில் பட்டத்து ராணியாய் அமர முடிவெடுத்த நயவஞ்சகி தன் கணவனை விஷம் வைத்துக் கொல்லத் துணிந்தாள். ஆனால் நடந்தது வேறு. கணவன் கேசரிவர்மன் உயிர்பிழைத்தான் வசந்த சேனை அறியாமலேயே. ஒரு துறவி அவனைக் காப்பாற்றி அவனுடனேயே வைத்துக் காத்தார். அவன் கதையைக் கேட்டு பரிதாபமடைந்தார். கேசரிவர்மன் தன் தர்மபத்தினியே தன்னைக் கொலை செய்ய   முயன்றாளே என்று ஆற்றொணாத் துயருற்று வெறிகொண்ட வேங்கை ஆனான்.

ஒண்ட வந்த பிடாரி வசந்தசேனை இப்போது பட்டத்து மகிஷியாகவே தன்னை நினைத்துக் கொண்டாள். மன்னனுக்கு அவள் சொல்லே வேதம். சொர்க்கமே அவள் பாதம். வசந்த சேனைக்கு ஒரு புத்தி சுவாதீனமில்லாத மகன். அவன் பெயர் வசந்தன். ஆனால் நல்லவன். தன் அண்ணன் மனோகரன் மீது அவனுக்கு கொள்ளைப் பிரியம். தன்னை பட்ட மகிஷியாகவும், தன் மகன் வசந்தனை இளவரசனாகவும் ஆக்கவே கனவு காணுகிறாள் சேனா. ஆதற்கு இடையூறாக இருக்கும் மகாராணி பத்மாவதியையும், இளவரசன் மனோகரனையும் ஒழித்துக் கட்ட சமயம் பார்த்துக் காத்திருக்கிறாள் அவள்.

பதிமூன்று வருடங்கள்  துறவியின் குகைக்குள்ளேயே பரிதவித்துக் கிடந்தான் கேசரிவர்மன். அவனுக்கு ஆதரவு தந்த துறவி ஓர் அரிய ஆராய்ச்சியை பல வருடங்கள் செய்து முடித்தார். மூலிகைகளைக் கொண்டு கேசரிவர்மனை அரூபமாக்கினார். ஆம்... கேசரிவர்மன் துறவியின் மாய பாதரட்சைகளை அணிந்தவுடன்  சில நிமிடங்கள் மற்றவர் கண்களுக்கு தெரிய மாட்டான். இது போதாதா அந்த மாயக்காரியைப் பழி வாங்க?... துறவியின் ஆசியுடன் வசந்தசேனையைப் பழிதீர்க்க சூளுரைத்துக் கிளம்பினான் கேசரிவர்மன்.

'சிவாஜி என்ற மாநடிகர்' 'மனோகரா' தொடர்-10 பாகம் 1 I38517_vlcsnap231310

புருஷோத்தமன் பெற்ற புண்ணிய புதல்வன், பத்மாவதி ஈன்றெடுத்த பச்சிளம் பாலகன் மனோகரன் இப்போது மனோகரமாய், சுந்தர வாலிபனாய், வீர புருஷனாய் வளர்ந்து நிற்கிறான். புருஷோத்தமன் வசந்தசேனையுடன் தன் வசமிழந்து வாழ்ந்து வருகிறான்.

எண்ணிலடங்கா துயரங்களுடன் தன் கண்மணி மனோகரனுடன் தனியே வாழ்ந்து வருகிறாள் பத்மாவதி. மந்திரி சத்யசீலரும், மனோகரனின் உயிர் நண்பன் ராஜப் பிரியனுமே மனோகரனுக்கும், பத்மாவதிக்கும் துணை. தன் தாயின் வாழ்வை சீர்குலைத்த குடிகேடி வசந்தசேனையின் பெயர் கேட்டாலே பொங்கும் எரிமலையாகி வெடிப்பான் மனோகரன். அப்போதெல்லாம் தன் கனிவான அன்பான பொறுமையான பேச்சால் அவனை சாந்தப்ப்படுத்துவாள் பத்மாவதி. அம்மாவின் பேச்சுக்குக் கட்டுப்பட வேண்டிய சூழ்நிலைக்கு ஆளாகி விடுவான் ஆணழகன் மனோகரன்.  அவன் நெருப்பாய்ப் பொங்கும் போதெல்லாம் நீராய் அவனைக் குளிர்விக்க முயற்சி செய்வாள் பத்மாவதி. அது மட்டுமல்ல. தன் பேச்சை மீறி கோபத்தில் மனோகரன் வசந்தசேனையை ஒன்றும் செய்து விடக் கூடாது, மகாராஜாவின் பங்கத்திற்கும் கேடு செய்து விடக் கூடாது என்று அவனிடம்  கட்டளையும் பிறப்பித்திருந்தாள் மகாராணி.

பழிதீர்க்க வரும் கேசரிவர்மன் ஒரு நாடகத்தை ஏற்பாடு செய்கிறான். போர்வாள் என்ற நாடகத்தை அரண்மனையில் உள்ள அனைவரையும் காண வைக்கிறான். அது நாடகமல்ல. உண்மை சம்பவம்தான். வசந்த சேனையின் சுயரூபங்களை அந்த நாடகத்தின் மூலம் அம்பலப்படுத்துகிறான் கேசரிவர்மன். நாடகத்தில் புருஷோத்தமன், பத்மாவதி, கேசரிவர்மன், வசந்தசேனை அனைத்துப் பாத்திரங்களும் உண்டு. ஆனால் கதாபாத்திரங்களின் பெயர் மாற்றத்தோடு. வசந்த சேனை தன் கணவனுக்கு விஷம் வைத்துக் கொள்ள முயல்வதையும் நாடகக் காட்சி விட்டு வைக்கவில்லை. நாடகத்தைக் காணும் வசந்தசேனை பதறுகிறாள். தன்னுடைய நடத்தையை அம்பலமாக்கும் நாடகத்தை பாதியிலேயே நிறுத்தச் சொல்லி ஆணையிடுகிறாள். தன் வாழ்க்கையை அப்படியே நாடகம் பிரதிபலிப்பதை கண்டு மகாராணி பத்மாவதி கண்ணீர் வடிக்கிறாள். மன்னன் புருஷோத்தமனும் சில கணம் குற்ற உணர்வுக்கு ஆளாகிறான்.

நாடகக்கார்களை பிடிக்கச் சொல்லி உத்தரவிடுகிறாள் வசந்த சேனை. ஆனால் கேசரிவர்மன் நாடகக் குழுவினரோடு தப்பித்து விடுகிறான். சத்யசீலரும், ராஜப்பிரியனும் கூட நாடகத்தைக் கண்டு திகைக்கின்றனர். கோபமுற்றுக் கொந்தளிக்கும் மனோகரனிடம் அவன் கோபத்தை திசை திருப்ப அவன் பாட்டனார் செய்த சபதத்தைக் கூறி பாண்டியன் முத்து விசயன் மீது போர் தொடுத்து இரத்தின சிம்மாசனத்தைக் கைப்பற்றி வரும்படி பத்மாவதி பணிக்கிறாள். தாயின் ஆணையை சந்தோஷத்துடன் ஏற்று போருக்கு புறப்பட சித்தமாகிறான் மனோகரன். தாயின் ஆணைப்படி தந்தையிடம் சென்று  ஆசி வாங்குகிறான். ஆசி கொடுப்பது போல நடிக்கும் வசந்தசேனை நயவஞ்சகியை அலட்சியப்படுத்தி திரும்புகிறான் மனோகரன்.போருக்கு செல்லும் மனோகரனை கொல்ல பௌதாயணன் ஒரு கயவனை எற்பாடு செய்து அனுப்புகிறாள் வசந்தசேனை. மனோகரனைக் கொன்று அவனிடமிருக்கும் போர்வாளை தன்னிடம் கொண்டு வந்து காட்டும்படியும் ஆணையிடுகிறாள்.  

போருக்கு சென்று முத்து விசயனைக் கொன்று இரத்தின சிம்மாசனத்தையும் கைப்பற்றுகிறான் மனோகரன். முத்து விசயனின் முத்தான மகள் விஜயாள். இள நங்கை. மலர் மங்கை. தந்தையைக் கொன்ற மனோகரனைப் பழி வாங்க ஆண்வேடம் தரித்து மனோகரனின் கூடாரம் செல்கிறாள். கத்தியை எடுத்து உறங்கிக் கொண்டிருக்கும் மனோகரனை கொல்ல முயலும்போது மனோகரனின் தேஜஸில், அவன் சுந்தர வதனம் கண்டு அவன் பேரழகில் ஒரு கணம் சொக்கி நிற்கிறாள். அப்போது வசந்தசேனையால் மனோகரனை கொல்ல அனுப்பி வைக்கப்பட்ட ஆள் அங்கு மனோகரனை கொல்ல எத்தனிக்க அதைக் கண்டு பதறி ஓலமிடுகிறாள் விஜயாள். வந்த ஆள் தப்பி ஓட கொலை செய்ய வந்தவளாக மனோகரனிடம் பிடிபடுகிறாள் விஜயாள். பெண் என்று தெரிந்து கொண்ட மனோகரன் அவள் அழகில் மயங்குகிறான். குற்றவாளி என்று நீதி மன்றத்தில் நிறுத்தப்படும் விஜயாளுக்கு இன்ப தண்டனை. அது?.... மனோகரனின் மனைவி என்ற சுக தண்டனை.

தம்பதியர் இன்பமாக  படகு சவாரி செய்யும் வேளையில் மனோகரனை கட்டாரி வீசிக் கொலை செய்ய துணிகிறான் பௌதாயணன். ஆனால் சமயத்தில் விஜயாள் அதனைக் கவனித்து மனோகரனைக் காப்பாற்றி விடுகிறாள்.   மனோகரன் இறந்து விட்டதாக நினைத்துவிடும் பௌதாயணன் மனோகரனின் வாளைத் திருடிக் கொண்டு வந்து அதை வசந்த சேனையுடன் காட்டுகிறான். அதுவல்லாமல் மனோகரனைத் தான் கொன்று விட்டதாகவும் அவளிடம் கூறுகிறான். அதை நம்பிய வசந்தசேனை இந்த விஷயத்தை பத்மாவதியிடம் சொன்னால் மகன் இறந்த சோகத்தில் நெஞ்சு வெடித்து இறந்து விடுவாள் என்று ஒரு திட்டம் தீட்டி பௌதாயணனை ஒரு துறவி வேடத்தில் பத்மாவதியிடம் அனுப்புகிறாள். ஆனால் பௌதாயணன் தன் கையாலாகாத்தனத்தால் அங்கு மனோகரனிடம் பிடிபடுகிறான். அனைத்துக்கும் காரணம் வசந்தசேனை என்றும் கூறிவிடுகிறான். மனோகரன் அவனை அடுத்தநாள் நீதி விசாரணை நடைபெறும் என்று சிறையில் அடைக்கிறான். ஆனால் வசந்தசேனை அதற்குள் முந்திக் கொள்(ல்)கிறாள். தான் எங்கே பௌதாயணனால் காட்டிக் கொடுக்கப்பட்டு விடுவோமோ என்று பயந்து முன்தினம் இரவே சிறையில் அவனை பாம்பை விட்டு கொன்று விடுகிறாள்.

போரில் ரத்தின சிம்மாசனத்தை வென்று வரும் மனோகருக்கு அவையில் பாராட்டு விழா நடைபெறுகிறது. ஆனால் மன்னனை மயக்கி அந்த இரத்தின சிம்மாசனத்தில் மண்ணுக்கு சரியாசனமிட்டு அமர்ந்து அவையோர் அனைவரையும் திகைக்க வைக்கிறாள் வசந்த் சேனை. அது மாத்திரமல்லாமல் மனோகரனுக்கு வெற்றி மாலை சூட்டவும் துணிகிறாள். அதைக் கண்ட மனோகரன் துடிதுடித்துப் போகிறான். தன் பாட்டானாரின் சிம்மாசனத்தில் அதுவும் தன் தாய் அமர வேண்டிய சிம்மாசனத்தில் வேசி ஒருத்தி அமர்ந்திருப்பத்தைக் கண்டு கடும் கோபம் கொள்கிறான். தன்  தாயின் கட்டளையால் கோபத்தை அடக்கி தாயிடம் திரும்பி கொந்தளிக்கிறான். ஒரு வேசி அமர்வதற்கா இவ்வளவு தூரம் படையெடுத்து சிம்மாசனத்தைக் கைப்பற்றி வந்தேன் என்று ஆத்திரமுறுகிறான். படையெடுப்பால்தானே பைங்கிளி விஜயாள் கிடைத்தால் என்று அவனை சாந்தப்படுத்துகிறாள் அன்னை.

'மனோகரா' படத்தின் கதை நீளமாக இருப்பதாலும், இப்படத்தைப் பற்றிய நிறைய தகவல்கள், நிழற்படங்கள் அதிகம் இருப்பதாலும் இந்த 'சிவாஜி என்ற மாநடிகர்' தொடர் எண் 10-ஐ மூன்று பாகங்களாகப் பிரித்து எழுத உத்தேசித்து உள்ளேன்.

முதல் இரண்டு பாகங்கள் 'மனோகரா' படத்தின் கதையையும், மூன்றாவது பாகத்தில் நடிகர் திலகம், மற்றும் இதர பங்களிப்பாளர் பங்களிப்பையும், நிழற்படங்கள், மற்றும் மனோகரா படம் செய்த சாதனைகளைப் பற்றியும் பதியலாம் என்று எண்ணியுள்ளேன்.

இப்போது நீங்கள் காண்பது 'மனோகரா' படத்தின் கதை பாகம் ஒன்று.

('மனோகரா' தொடருவான்)

வாசுதேவன்.

தங்கள் மேலான ஆதரவை எதிர் நோக்குகிறேன்.

இக்கட்டுரை முழுதும் என் சொந்தப் பதிப்பே.


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Tue Jan 21, 2014 4:40 pm

ஆவலோடு எதிர்பார்த்த தொடர் ... கட்டுரை நடை மிக சிறப்பு ..

[mention]'மனோகரா' படத்தின் கதை நீளமாக இருப்பதாலும், இப்படத்தைப் பற்றிய நிறைய தகவல்கள், நிழற்படங்கள் அதிகம் இருப்பதாலும் இந்த 'சிவாஜி என்ற மாநடிகர்' தொடர் எண் 10-ஐ மூன்று பாகங்களாகப் பிரித்து எழுத உத்தேசித்து உள்ளேன்.

முதல் இரண்டு பாகங்கள் 'மனோகரா' படத்தின் கதையையும், மூன்றாவது பாகத்தில் நடிகர் திலகம், மற்றும் இதர பங்களிப்பாளர் பங்களிப்பையும், நிழற்படங்கள், மற்றும் மனோகரா படம் செய்த சாதனைகளைப் பற்றியும் பதியலாம் என்று எண்ணியுள்ளேன்.[/mention] wrote:

தாருங்கள் படிக்க மிக்க ஆவலாக உள்ளோம் . மனோகரா நடிகர் திலகம் நடித்த படங்களில் மறக்க முடியாத படம் .

மனோகரா பற்றிய தகவல்கள் , சாதனைகள் பற்றி தெரிந்துகொள்ள மிக்க ஆவலாக உள்ளோம்.




http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


veeyaar
veeyaar
பண்பாளர்

பதிவுகள் : 213
இணைந்தது : 14/11/2013

Postveeyaar Wed Jan 22, 2014 7:14 am

வாசு சார்
மனோகரா என்றால் பொறுத்தது போதும் பொங்கி எழு வசனத்தை மட்டுமே நினைவு கூர்ந்து பேசுவதே மக்களின் வழக்கம் என்றிருந்த இருக்கிற மனப்பான்மையை மாற்றி அப்படத்தின் மற்ற சிறப்புகளையும் கொண்டு வருவதில் உங்கள் பதிவு சிறப்புறும் என்பதில் ஐயமில்லை. முதல் படத்திலேயே முத்திரை பதித்த முத்தமிழ் நாயகனின் பத்தாவது படத்தில் கேட்கவும் வேண்டுமோ. அதுவும் இயக்கம் பிரசாத் ஆயிற்றே. பல காட்சிகளில் பல நுட்பமான விஷயங்களைத் தன் பார்வையிலேயே சொல்லியிருப்பார் நடிகர் திலகம். நிற்பது, நடப்பது, பார்ப்பது எனத் தன் ஒவ்வொரு அசைவிலும் மிகச் சிறந்த நடிப்பை பாணியை வெளிப்படுத்தியிருப்பார்.

இது பற்றியும் தங்கள் பதிவில் படிக்க ஆவலாயுள்ளேன்.

போகிற போக்கில் ஈகரையில் வாசு ரசிகர் மன்றம் துவங்கினாலும் வியப்பில்லை. தொடரட்டும் தங்கள் பங்களிப்பு.

veeyaar
veeyaar
பண்பாளர்

பதிவுகள் : 213
இணைந்தது : 14/11/2013

Postveeyaar Wed Jan 22, 2014 7:17 am

ராஜ் வீடியோ விஷன் வெளியிட்டுள்ள மனோகரா திரைப்படத்தின் நெடுந்தகட்டின் முகப்பு

'சிவாஜி என்ற மாநடிகர்' 'மனோகரா' தொடர்-10 பாகம் 1 Manogaradvdcover_zpsd517f08e

சின்னக் கண்ணன்
சின்னக் கண்ணன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 410
இணைந்தது : 19/12/2013

Postசின்னக் கண்ணன் Wed Jan 22, 2014 2:40 pm

அந்த ஆரம்பக் காட்சி..அரூபமாக திரைச்சீலை, மற்றபொருட்கள் எல்லாம் பறப்பது எல்லாம் நினைவுக்கு வருகின்றன.. ந.தியும் இளமை கொப்புளிக்க நன்றாக இருப்பார்.. ம்ம் தொடர்க வாசு சார் உம் தொண்டினை.. நன்றி

விஸ்வாஜீ
விஸ்வாஜீ
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1334
இணைந்தது : 25/09/2011

Postவிஸ்வாஜீ Wed Jan 22, 2014 4:21 pm

நண்பரே ஒரு வேண்டுகோள்
பதிவிடும்போது அலைன்மென்ட் பாருங்கள் நண்பரே, நிறைய எழுத்துக்கள்
காணவில்லை படிப்பதற்கு சிரமமாக இருக்கிறது, இந்த பதிவையே கூட அது மாதிரி
செய்யலாம்.
நன்றி நண்பரே

vasudevan31355
vasudevan31355
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 569
இணைந்தது : 11/11/2013

Postvasudevan31355 Thu Jan 23, 2014 9:46 am

vishwajee wrote:நண்பரே ஒரு வேண்டுகோள்
பதிவிடும்போது அலைன்மென்ட் பாருங்கள் நண்பரே, நிறைய எழுத்துக்கள்
காணவில்லை படிப்பதற்கு சிரமமாக இருக்கிறது, இந்த பதிவையே கூட அது மாதிரி
செய்யலாம்.
நன்றி நண்பரே

நண்பரே! நீங்கள் சொல்வதுதான் எனக்குப் புரியவில்லை. ஒரு சில எழுத்துப் பிழைகள் உள்ளன. ஆனால் நீங்கள் நிறைய எழுத்துக்களைக் காணவில்லை என்பது ஆச்சர்யமாக இருக்கிறது. படிப்பதற்கு சிரமமாக உள்ளது என்பதை நீங்கள் குறிப்பிட்டுள்ளது இன்னும் ஆச்சரியமாக உள்ளது. ஒருவேளை தூய தமிழில் இருப்பதால் தங்களுக்குப் புரியவில்லையா? அல்லது தங்கள் சிஸ்டத்தில் ஏதேனும் குறைபாடா.? குழந்தைக்கும் புரிவது போலத்தான் பத்திகளாகப் பிரித்து நான் பதிவிட்டுள்ளேன். சில எழுத்துப் பிழைகளைத் திருத்துவதற்குள் 'திருத்து'  ஆப்ஷன் காணாமல் போய்விட்டது. அதை ஒத்துக் கொள்கிறேன். அதைத் திருத்த நீங்கள் எனக்குக் கற்றுக் கொடுத்தால் எழுத்துப் பிழைகளை சரி செய்து விடுவேன். நன்றி நண்பரே!

SENTHIL_BLORE
SENTHIL_BLORE
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 9
இணைந்தது : 12/12/2013

PostSENTHIL_BLORE Thu Jan 23, 2014 1:27 pm

திரு வாசு சார்,
நான் ஆவலோடு எதிர்பார்த்த மனோகரா தொடர் ஆரம்பித்ததில் மிகவும் மகிழ்ச்சி .தூள் கிளப்புங்கள் .
திரு வீயார் சார்,
வாசு ரசிகர் மன்றத்திற்கு முதல் உறுப்பினராக என்னைத்தான் பதிவு செய்யவேண்டும் என்று கேட்டுகொள்கிறேன்

விஸ்வாஜீ
விஸ்வாஜீ
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1334
இணைந்தது : 25/09/2011

Postவிஸ்வாஜீ Thu Jan 23, 2014 6:56 pm

vasudevan31355 wrote:
vishwajee wrote:நண்பரே ஒரு வேண்டுகோள்
பதிவிடும்போது அலைன்மென்ட் பாருங்கள் நண்பரே, நிறைய எழுத்துக்கள்
காணவில்லை படிப்பதற்கு சிரமமாக இருக்கிறது, இந்த பதிவையே கூட அது மாதிரி
செய்யலாம்.
நன்றி நண்பரே

நண்பரே! நீங்கள் சொல்வதுதான் எனக்குப் புரியவில்லை. ஒரு சில எழுத்துப் பிழைகள் உள்ளன. ஆனால் நீங்கள் நிறைய எழுத்துக்களைக் காணவில்லை என்பது ஆச்சர்யமாக இருக்கிறது. படிப்பதற்கு சிரமமாக உள்ளது என்பதை நீங்கள் குறிப்பிட்டுள்ளது இன்னும் ஆச்சரியமாக உள்ளது. ஒருவேளை தூய தமிழில் இருப்பதால் தங்களுக்குப் புரியவில்லையா? அல்லது தங்கள் சிஸ்டத்தில் ஏதேனும் குறைபாடா.? குழந்தைக்கும் புரிவது போலத்தான் பத்திகளாகப் பிரித்து நான் பதிவிட்டுள்ளேன். சில எழுத்துப் பிழைகளைத் திருத்துவதற்குள் 'திருத்து'  ஆப்ஷன் காணாமல் போய்விட்டது. அதை ஒத்துக் கொள்கிறேன். அதைத் திருத்த நீங்கள் எனக்குக் கற்றுக் கொடுத்தால் எழுத்துப் பிழைகளை சரி செய்து விடுவேன். நன்றி நண்பரே!

மன்னிக்கவும் நண்பரே உங்கள் எழுத்து பிழைகளை குறை சொல்லவில்லை நண்பரே.
சில வரிகளில் கடைசி எழுத்துக்கள் காணாமல் போய்விட்டன அதுவும் இப்போது குறைந்து
ஒரு சில வரிகளில் மட்டுமே அப்படி இருக்கிறது, அதையே கூறினேன்.நான் விரும்பி படிக்கும்
பதிவுகளில் உங்கள் பதிவும் ஒன்று.
நன்றி நண்பரே


vasudevan31355
vasudevan31355
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 569
இணைந்தது : 11/11/2013

Postvasudevan31355 Thu Jan 23, 2014 9:28 pm

நண்பர் விஸ்வாஜி அவர்களே!

மிக்க நன்றி! தவறுகள் இருந்தால் தாரளமாக சுட்டிக் காட்டுங்கள். நிச்சயம் திருத்திக் கொள்கிறேன். பதிவை தாங்கள் விரும்பிப் படிப்பதாகக் கூறியதில் மிக்க மகிழ்ச்சி. நானும் தங்கள் பதிவுகளுக்கு ரசிகன். நன்றி!

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக