ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜில்லா, வீரம்... இரண்டும் தேவை இல்லாத ஆணிகளே!

+4
பார்த்திபன்
ராஜா
ayyasamy ram
சாமி
8 posters

Go down

ஜில்லா, வீரம்... இரண்டும் தேவை இல்லாத ஆணிகளே! Empty ஜில்லா, வீரம்... இரண்டும் தேவை இல்லாத ஆணிகளே!

Post by சாமி Wed Jan 29, 2014 7:41 am

ஜில்லா, வீரம் ஆகிய படங்களின் 'மாபெரும்' வெற்றிக்கு முக்கியமாக உழைத்தவர்கள் தல - தளபதியின் ரசிகர்கள்.

U - அனைவரும் பார்க்கலாம்

U/A - பெரியவர்களுடன் பார்க்க வேண்டிய படம்

A - கண்டிப்பாக பெரியவர்கள் மட்டும்...

இதில் புதிதாக ஒரு சென்சார் சான்றிதழை, T - தல, தளபதி ரசிகர்களுக்கு மட்டும் என்று கொண்டு வரவேண்டும்.

ஜில்லா, வீரம் இரண்டுமே ஒன்றுக்கு ஒன்று சளைத்த படம் கிடையாது. என்ன... ஒன்று சுமார் மொக்கை, இன்னொன்று சூர மொக்கை.

இரண்டு படங்களிலும் ஹை-லைட் காட்சி என்று கூற, ஒன்றுகூட இல்லை. வெறும் சண்டை, பன்ச் டயலாக்.

மசாலா படங்களுக்கு தேவையான இன்சைட்டிங் பாயின்ட் என்ற ஒரு விஷயம் சுத்தமாக தென்படவில்லை.

இந்த இரண்டு படங்களில் 'நம்பர் ஒன்' ஆகச் சிறந்து விளங்குவது ஜில்லா. கடுப்பேற்றிய முதல் விஷயம் எடிட்டிங். அப்படியே எடிட்டங் இல்லாமலே படத்தை தூக்கிக் கொட்டிவிட்டார் இயக்குனர். 'இந்தாங்க... நீங்க விஜய் ரசிகர்கள். நாங்க எதை வேணுன்னாலும் கொட்டுவோம்; அதுல உங்களுக்கு வேண்டியதை எடுத்துக்கோங்க' என்று சொல்லும் அளவுக்கு மோசமான எடிட்டிங்.

வில்லனுக்கு ஒரு ஃப்ளாஷ் பேக், மோகன்லால் - சிறு வயது விஜய்க்கு ஒரு ஃப்ளாஷ் பேக், விஜய்க்கு ஒரு இன்ட்ரோ, மோகன்லாலுக்கு ஒரு இன்ட்ரோ, காஜலுக்கு ஒரு இன்ட்ரோ, இதுக்கு நடுவுல ஒரு தங்கச்சி சென்டிமென்ட், ஒரு தம்பி சென்டிமென்ட், சூரிய வம்சம் அப்பா சென்டிமென்ட், அம்மா சென்டிமென்ட். இது எல்லாத்துக்கும் நடுவுல, விஜய் போலீசா வேற திடீர்னு அவதாரம் எடுத்து 'சாரே ஜஹான் சே அச்சா' இப்படி ஏதேதோ ஹிந்தி வசனம் பேசி சிரிப்பை மூட்டுகிறார்.

படத்தில் வரும் ஒரு காட்சிக்கும், அதற்கு அடுத்து வரும் காட்சிக்கும் பெரிய லிங்கே கிடையாது.

'சிவன் இல்லாம சக்தி கிடையாது; சக்தி இல்லாம எவனும் கிடையாது'

வேட்டைக்காரன் படத்தில் மேஜர் சுந்தர்ராஜன் பாணியில் பேசுவாரே தளபதி, அதே பாணியில்தான் இந்தப் படத்திலும் பேசியிருக்கிறார். மாடுலேஷன் முடியல்ல்ல்ல.

'அவன் உன் பொண்ணு வண்டி சத்தத்தையே இப்படி நோட் பண்றானே அப்போ உன் பொண்ணு! உங்கப் பொண்ணுக்கு இருக்கே ரெண்டு (சிறிய இடைவெளி) கண்ணு அதுதான் ரொம்ப புடிச்சிருக்கு!'

இந்த வசனங்கள் தான் காமெடியாம்.

காஜல் அகர்வாலை போலீசாக பார்ப்பதைவிட ஒரு மிகக் கொடுமையான அனுபவம் ரசிகருக்கு கிடைத்திருக்காது.

கமிஷனரின் கையை நட்டநடு ரோட்டில் வெட்டும் விஜய், அடுத்தக் காட்சியில் ஒரு எக்ஸாம் எழுதிவிட்டு அசிஸ்டென்ட் கமிஷனராக மாறுவது, அடுத்த சில காட்சிகளில் டெபுடி கமிஷனராக மாறுவது... இதெல்லாம் விஜய்க்கு மட்டுமே சாத்தியப்படும்.

முரட்டுக் காளை படத்தில் அமைந்த சுருளி ராஜன் கதாப்பாத்திரம் போல் சம்பத்தின் கதாப்பாத்திரம் அமைந்துள்ளது. அய்யய்யோ ட்விஸ்ட் வெளியே வந்துடுச்சோ... முரட்டுக் காளை பார்க்காதவர்களுக்கு, ஜில்லா ட்விஸ்ட் புதுமையாக தோன்றலாம்.

முதற் காட்சியில் அறுக்கப்படுவது ஜெயபாலனின் கழுத்து மட்டுமல்ல; ரசிகர்களின் கழுத்தும் தான். காட்சிக்கு காட்சி மோகன்லால் 'இந்த சிவன்னுக்கு, இந்த சிவனுக்கு' என்று ஒரே மாதிரி வசனத்தை பேசி கழுத்தருக்கிறார். மோகன்லாலை போன்ற ஒரு நடிகரை இப்படி வெறும் பன்ச் வசனத்திற்காக விரயம் செய்திருக்க வேண்டாம்.

இமானின் இசை ஆறுதல், அதுவும் தேவையற்ற இடங்களில் வருவது சலிப்பைக் கூட்டுகிறது.

இதற்கு மேலும் விவரித்தால் ஒரு நெடுந்தொடர் போல் நீண்டு கொண்டே செல்லும். அதனால் இத்துடன் ஜில்லா பற்றி பேசுவதற்கு முற்று புள்ளி வைக்கிறேன்.

ஆனந்தம் படத்தின் கதைக்களத்திற்கு சரவணாவின் திரைக்கதை கோட்டிங்காக கொடுக்கப்பட்டால் அது வீரமாக தோன்றும்.

படம் முழுக்க இருக்கின்ற ஒரே விஷயம் தல புராணம். நல்ல விஷயம் டைட் - எடிட்டிங், கரெக்ட்டான பன்ச் வசனங்கள்.

ஒட்டு மொத்த படத்தையும் புரட்டிப் போட்டுப் பார்த்தாலும் புதுசா பார்ப்பதற்கு ஒன்றுமே கிடையாது. அஜித்திற்கும் தமன்னாவிற்கும் வருகின்ற காதல் கொஞ்சம்கூட கன்வின்சிங்காக இல்லை. 'ஒரு குருவிக் கூட்ட பிரிக்காதவ குடும்பத்த பிரிக்க மாட்டா மாமா'. இந்த மாதிரி ஹீரோயின் செய்யற செயலை பார்த்து வியந்து காதலில் விழும் நாயகனை நாம சமுத்திரம் காலத்திலிருந்து பார்த்திருக்கோம். வீரம்ல தல காதலில் விழப் பார்ப்பதற்கு புதுசாக இருக்கோ? சந்தானம் காமெடி ரசிக்கற மாதிரி அமைந்திருந்தது.

டெண்டர் காட்சி மரண மாஸ். அய்யய்யோ சான்ஸ் இல்லை என்று விவரித்தார்கள். அப்படி என்னங்க இருக்கு இதுல. மிஸ்டர் பாரத், அண்ணாமலை படத்துலலாம் இந்த மாதிரி காட்சியை எத்தனை வாட்டி பார்த்திருப்போம்.

வீரம் டார்கெட் செய்திருப்பது பன்ச் பேச ஒரு இடம், சண்டை போட ஒரு களம் இவ்வளவு தான். லவ், சண்டை, பஞ்ச். சென்டிமென்ட், பஞ்ச், லவ்.

தம்பிங்கடா, அண்ணணன்டா, தலடா, ரசிகன்டா. இவ்வளவு தான் வீரம் கொடுக்கிற விஷயம்.

எஸ்.பி.முத்துராமன் படங்கள் பார்த்து வளரவில்லை என்றால் வீரம், ஜில்லாவை மசாலா படம் என்று கூறியிருப்பேன்.

ஷங்கர் தந்த க்ளாஸ் மசாலா படங்களை பார்க்காமல் போயிருந்தால் வீரம், ஜில்லாவை மசாலா என்று கூறியிருக்கலாம்.

இன்னும் பத்து வயதை தாண்டாமல் குழந்தையாகவே இருந்திருந்தால் இவ்விரு படங்களும் மாஸ் என்று தோன்றியிருக்கும்.

இவ்விரண்டு படங்களை காட்டிலும் சுசீந்திரன் இயக்கிய 'பாண்டிய நாடு' எவ்வளவோ நல்ல மசாலா.

படம் பார்க்கும்போது கதாநாயகனின் மாஸ்'ஸினை கூட்ட சம்மந்தம் இல்லாமல் அடி வாங்கும் ஜிம்பாடி பாய்ஸ், முறுக்கு மீசை வில்லன்களை பார்க்கையில் பாவமாகத்தான் தோன்றுகிறது.

இந்த இரண்டு படமும் ஹிட் ஆகும்போது இது மாதிரி தரக் குறைவான படங்கள் நிறைய வரக் கூடுமோ என்ற அச்சம்தான் கூடுகிறது.

ரஜினி என்ற நடிகரை சூப்பர் ஸ்டார் எனும் பட்டத்தினால் மாஸ் படத்திற்கென்று ரசிகர்கள் முடக்கினார்கள். இப்போது அதைப்போல் தல - தளபதி என்ற பட்டத்தினால் விஜய், அஜித் என்ற நடிகர்கள் தொலைந்துவிடுவார்களோ என்ற அச்சம் கூடுகிறது.

சாதாரண சினிமா ரசிகனாக பார்க்கும்போது ஜில்லா, வீரம் இரண்டுமே கேலிச் சித்திரங்களாகத்தான் தோன்றுகிறது. - சினிமா பித்தனின் ஃபேஸ்புக் பக்கம்
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011

http://arundhtamil.blogspot.in

Back to top Go down

ஜில்லா, வீரம்... இரண்டும் தேவை இல்லாத ஆணிகளே! Empty Re: ஜில்லா, வீரம்... இரண்டும் தேவை இல்லாத ஆணிகளே!

Post by ayyasamy ram Wed Jan 29, 2014 8:48 am

ஜில்லாவும் வீரமும் 70 கோடி, 80 கோடி
வசூலித்துவிட்டதாக படத் தயாரிப்பாளர்கள்
விளம்பரப்படுத்தி வருகின்றனர்.

இந்த வசூல் கணக்கை உண்மையாகவே
அரசுக்கு இவர்கள் சமர்ப்பித்தால்..
மக்களுக்குத்தானே லாபம்? செய்வார்களா?
--
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ஜில்லா, வீரம்... இரண்டும் தேவை இல்லாத ஆணிகளே! Empty Re: ஜில்லா, வீரம்... இரண்டும் தேவை இல்லாத ஆணிகளே!

Post by ராஜா Wed Jan 29, 2014 10:36 am

முதற் காட்சியில் அறுக்கப்படுவது ஜெயபாலனின் கழுத்து மட்டுமல்ல; ரசிகர்களின் கழுத்தும் தான்.

ரஜினி என்ற நடிகரை சூப்பர் ஸ்டார் எனும் பட்டத்தினால் மாஸ் படத்திற்கென்று ரசிகர்கள் முடக்கினார்கள். இப்போது அதைப்போல் தல - தளபதி என்ற பட்டத்தினால் விஜய், அஜித் என்ற நடிகர்கள் தொலைந்துவிடுவார்களோ என்ற அச்சம் கூடுகிறது.
உண்மையான வரிகள்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஜில்லா, வீரம்... இரண்டும் தேவை இல்லாத ஆணிகளே! Empty Re: ஜில்லா, வீரம்... இரண்டும் தேவை இல்லாத ஆணிகளே!

Post by பார்த்திபன் Wed Jan 29, 2014 10:58 am

வீரம் படத்தை பார்க்க நினைப்பவர்கள் படம் ஆரம்பித்து ஒரு மணி நேரம் தாமதமாகச் செல்லவும். ஆரம்பக் காட்ச்சிகள் மிகவும் அறுவை.
பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011

http://nilavaiparthiban.blogspot.in/

Back to top Go down

ஜில்லா, வீரம்... இரண்டும் தேவை இல்லாத ஆணிகளே! Empty Re: ஜில்லா, வீரம்... இரண்டும் தேவை இல்லாத ஆணிகளே!

Post by M.M.SENTHIL Wed Jan 29, 2014 12:54 pm

இதனால்தான் நான் தியேட்டர் போய் படம் பாக்கறதையே விட்டுட்டேன்.


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

ஜில்லா, வீரம்... இரண்டும் தேவை இல்லாத ஆணிகளே! Empty Re: ஜில்லா, வீரம்... இரண்டும் தேவை இல்லாத ஆணிகளே!

Post by SenthilMookan Wed Jan 29, 2014 8:45 pm

ayyasamy ram wrote:ஜில்லாவும் வீரமும் 70 கோடி, 80 கோடி
வசூலித்துவிட்டதாக படத் தயாரிப்பாளர்கள்
விளம்பரப்படுத்தி வருகின்றனர்.
--

இப்படியே உசுப்பேத்தி உசுப்பேத்தி படத்தைப் பார்க்க வைத்து விடுகிறார்கள்! சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ!


எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது
எது நடக்கிறதோ, அது நன்றாகவே நடக்கிறது
எது நடக்க இருக்கிறதோ,அதுவும் நன்றாகவே நடக்கும்.

செந்தில் மூக்கன்.
களக்காடு புலியார் !
SenthilMookan
SenthilMookan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 258
இணைந்தது : 17/01/2014

Back to top Go down

ஜில்லா, வீரம்... இரண்டும் தேவை இல்லாத ஆணிகளே! Empty Re: ஜில்லா, வீரம்... இரண்டும் தேவை இல்லாத ஆணிகளே!

Post by vasudevan31355 Thu Jan 30, 2014 1:16 pm

அருமையான பதிவு. உண்மைகளை அப்படியே பிரதிபலிக்கிறது. இந்த காலத்திலும் இளைஞர்களை சீரழிக்கும் நடிகர்கள் தொடர்வது வருத்தத்திற்குரிய விஷயம். நானும் இரண்டு படங்களையும் பார்த்தேம். படு குப்பைகள். கொஞ்சம் கூட நம்ப முடியாத காட்சிகள். ஹீரோக்களின் அலட்டல்கள். ஒருத்தரே ஐம்பது பேரை அடித்து நொறுக்கும் கேவலமான சண்டைக் காட்சிகள், ஹீரோக்களின்  புகழ் பாடும் படம் நெடுகிலான வசனங்கள், (அவனைப் போட்டுடு... இவனை வெட்டிடு என்பதைத் தவிர வேறு வசனங்கள் உண்டா?)  கொஞ்சம் கூட பகுத்தறிவே இல்லாமல் உருவாக்கப் படும் கதாநாயகிகளின் பாத்திரங்கள், முகச் சவரம் செய்து கொள்ளாமல்  கதாநாயகன் வந்தால் கூட அதையும்  ஸ்டைல் என்று  நம்பி ஏமாறும் பத்தாம் பசலி இளைஞர்கள், ஹீரோக்களின் புகழ் பாடும் துணை கதா பாத்திரங்கள் என்று தமிழ் சினிமா சறுக்கிக் கொண்டே போகிறது. அழகி, தலைமுறை, என்று எப்போதோ ஒருமுறை குறிஞ்சி பூக்கிறது. எல்லாம் காசு பார்க்கும் காலமாகி விட்டது, பொய், போலி விளம்பரங்கள் தலை விரித்தாடுகிறது. இத்தனை கோடி அத்தனை கோடி என்று அள்ளி விடுகிறார்கள். தியேட்டர்களில் பார்த்தால் ஒரு பயலைக் காணோம். எங்கள் ஊரில் இரு படமும் பதினைந்தே நாட்களில் தூக்கப்பட்டு விட்டது. அதற்கே சுத்தமாகக் கூட்டம் இல்லை. ஏன் இந்தக் கப்ஸா? இவ்வளவு கோடி வசூல் என்றால் ஒவ்வொரு தியேட்டரிலும் நூறு நாள் ஓட வேண்டியதுதானே? இந்த ஏமாற்றிப் பிழைக்கும் பிழைப்பு இன்னும் எத்தனை நாளைக்கு?

ஹீரோக்கள் பிடியிலிருந்து எப்போது தமிழ் சினிமா விடுபடுகிறதோ அப்போதுதான் அதற்கு நல்ல காலம்.
vasudevan31355
vasudevan31355
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 569
இணைந்தது : 11/11/2013

Back to top Go down

ஜில்லா, வீரம்... இரண்டும் தேவை இல்லாத ஆணிகளே! Empty Re: ஜில்லா, வீரம்... இரண்டும் தேவை இல்லாத ஆணிகளே!

Post by SENTHIL_BLORE Thu Jan 30, 2014 2:07 pm

வாசு சார்,
மிகவும் அருமையாக சொன்னீர்கள் .என்ன செய்வது?இதையெல்லாம்தான் படங்கள் என்று மக்கள் பார்த்துகொண்டிருக்கிறார்கள் பாவம்.
SENTHIL_BLORE
SENTHIL_BLORE
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 9
இணைந்தது : 12/12/2013

Back to top Go down

ஜில்லா, வீரம்... இரண்டும் தேவை இல்லாத ஆணிகளே! Empty Re: ஜில்லா, வீரம்... இரண்டும் தேவை இல்லாத ஆணிகளே!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum