புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அச்சில் ஏறாத இன்றைய செய்தி? Poll_c10அச்சில் ஏறாத இன்றைய செய்தி? Poll_m10அச்சில் ஏறாத இன்றைய செய்தி? Poll_c10 
25 Posts - 38%
heezulia
அச்சில் ஏறாத இன்றைய செய்தி? Poll_c10அச்சில் ஏறாத இன்றைய செய்தி? Poll_m10அச்சில் ஏறாத இன்றைய செய்தி? Poll_c10 
19 Posts - 29%
mohamed nizamudeen
அச்சில் ஏறாத இன்றைய செய்தி? Poll_c10அச்சில் ஏறாத இன்றைய செய்தி? Poll_m10அச்சில் ஏறாத இன்றைய செய்தி? Poll_c10 
6 Posts - 9%
வேல்முருகன் காசி
அச்சில் ஏறாத இன்றைய செய்தி? Poll_c10அச்சில் ஏறாத இன்றைய செய்தி? Poll_m10அச்சில் ஏறாத இன்றைய செய்தி? Poll_c10 
4 Posts - 6%
T.N.Balasubramanian
அச்சில் ஏறாத இன்றைய செய்தி? Poll_c10அச்சில் ஏறாத இன்றைய செய்தி? Poll_m10அச்சில் ஏறாத இன்றைய செய்தி? Poll_c10 
4 Posts - 6%
Raji@123
அச்சில் ஏறாத இன்றைய செய்தி? Poll_c10அச்சில் ஏறாத இன்றைய செய்தி? Poll_m10அச்சில் ஏறாத இன்றைய செய்தி? Poll_c10 
2 Posts - 3%
prajai
அச்சில் ஏறாத இன்றைய செய்தி? Poll_c10அச்சில் ஏறாத இன்றைய செய்தி? Poll_m10அச்சில் ஏறாத இன்றைய செய்தி? Poll_c10 
2 Posts - 3%
M. Priya
அச்சில் ஏறாத இன்றைய செய்தி? Poll_c10அச்சில் ஏறாத இன்றைய செய்தி? Poll_m10அச்சில் ஏறாத இன்றைய செய்தி? Poll_c10 
1 Post - 2%
Srinivasan23
அச்சில் ஏறாத இன்றைய செய்தி? Poll_c10அச்சில் ஏறாத இன்றைய செய்தி? Poll_m10அச்சில் ஏறாத இன்றைய செய்தி? Poll_c10 
1 Post - 2%
kavithasankar
அச்சில் ஏறாத இன்றைய செய்தி? Poll_c10அச்சில் ஏறாத இன்றைய செய்தி? Poll_m10அச்சில் ஏறாத இன்றைய செய்தி? Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அச்சில் ஏறாத இன்றைய செய்தி? Poll_c10அச்சில் ஏறாத இன்றைய செய்தி? Poll_m10அச்சில் ஏறாத இன்றைய செய்தி? Poll_c10 
155 Posts - 42%
ayyasamy ram
அச்சில் ஏறாத இன்றைய செய்தி? Poll_c10அச்சில் ஏறாத இன்றைய செய்தி? Poll_m10அச்சில் ஏறாத இன்றைய செய்தி? Poll_c10 
140 Posts - 38%
mohamed nizamudeen
அச்சில் ஏறாத இன்றைய செய்தி? Poll_c10அச்சில் ஏறாத இன்றைய செய்தி? Poll_m10அச்சில் ஏறாத இன்றைய செய்தி? Poll_c10 
21 Posts - 6%
Dr.S.Soundarapandian
அச்சில் ஏறாத இன்றைய செய்தி? Poll_c10அச்சில் ஏறாத இன்றைய செய்தி? Poll_m10அச்சில் ஏறாத இன்றைய செய்தி? Poll_c10 
21 Posts - 6%
prajai
அச்சில் ஏறாத இன்றைய செய்தி? Poll_c10அச்சில் ஏறாத இன்றைய செய்தி? Poll_m10அச்சில் ஏறாத இன்றைய செய்தி? Poll_c10 
8 Posts - 2%
Rathinavelu
அச்சில் ஏறாத இன்றைய செய்தி? Poll_c10அச்சில் ஏறாத இன்றைய செய்தி? Poll_m10அச்சில் ஏறாத இன்றைய செய்தி? Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
அச்சில் ஏறாத இன்றைய செய்தி? Poll_c10அச்சில் ஏறாத இன்றைய செய்தி? Poll_m10அச்சில் ஏறாத இன்றைய செய்தி? Poll_c10 
7 Posts - 2%
T.N.Balasubramanian
அச்சில் ஏறாத இன்றைய செய்தி? Poll_c10அச்சில் ஏறாத இன்றைய செய்தி? Poll_m10அச்சில் ஏறாத இன்றைய செய்தி? Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
அச்சில் ஏறாத இன்றைய செய்தி? Poll_c10அச்சில் ஏறாத இன்றைய செய்தி? Poll_m10அச்சில் ஏறாத இன்றைய செய்தி? Poll_c10 
4 Posts - 1%
Guna.D
அச்சில் ஏறாத இன்றைய செய்தி? Poll_c10அச்சில் ஏறாத இன்றைய செய்தி? Poll_m10அச்சில் ஏறாத இன்றைய செய்தி? Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அச்சில் ஏறாத இன்றைய செய்தி?


   
   
avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Sat Oct 31, 2009 10:45 am







ஓடும் நதி.....!

http://odumnathi.blogspot.com/2009/10/blog-post_30.html#links





அச்சில் ஏறாத இன்றைய செய்தி?




அச்சில் ஏறாத இன்றைய செய்தி? Sun_tv



மாம் இந்த செய்தியை இன்று நீங்கள் எங்குமே படித்திருக்க முடியாது.

தென்னிந்தியாவில்
கொடி கட்டிப் பறக்கும் டிவி சேனல் சன் டிவிக்கு டெல்லி உயர்நீதி மன்றம்
இடைக்காலத் தடை விதித்துள்ளது.இதற்கு காரணம் பிரபல இசை வெளியீட்டு
நிறுவனமான டி-சீரிஸ் நிறுவனம் தான்.

டி- சீரிஸ்(t-series) நிறுவனம்
ஒரு புகழ் பெற்ற பொழுது போக்கு இசை நிறுவனமாகும். திரை ப்பாடல்கள்,
காட்சிகள்,ஆல்பங்கள் போன்றவை மட்டுமல்லாமல் டிவி,கேசட்,சிடிபிளேயர்
போன்றவைகளையும் தயாரித்து வருகின்றன.
அச்சில் ஏறாத இன்றைய செய்தி? Tseries-logo



இதன்
படைப்புகளை பல முன்னணி சேனல்களில் நாம் காணலாம்.அதை ஒளிபரப்ப அனுமதி
மற்றும் ஒளிபரப்ப உரிமை ஒப்பந்தம் ஆகிய நடைமுறைகளுக்குப் பின்தான்
ஒளிபரப்ப வேண்டும்.ஆனால் ஏராளமான சேனல்களில் இவை ஒளிபரப்பாகி வந்தன.

எவை
உரிமை பெற்று செய்கின்றன,எவை அனுமதிக் காலம் கடந்தும் ஒப்பந்தக் காலம்
கடந்தும் ஒளிபரப்புகின்றன என்று ஆய்வு செய்த போது விதிமுறைகளை மீறி சன்
நெட் ஒர்க் ஒளிபரப்பி வருவது கண்டுபிடிக்கப்பட்டது.

டி-சீரிஸின்
தயாரிப்புகள்,பாடல்கள்,காட்சிகள் ரசிகர்களிடையே மிகவும் பிரசித்தி
பெற்றவை,இவற்றை விநியோகம் செய்து பல நிறுவனங்கள் இயங்கி
வருகின்றன.இந்நிலையில் விதிமுறைகளை மீறி டிவி சேனல்கள் ஒளிபரப்புவது சட்ட
விரோதம் என்று சென்னையை தலைமை இடமாகக் கொண்ட சன் நெட் வொர்க் தலைமைக்கும்
ஹைதராபாத்தை தலைமை இடமாகக் கொண்டு இயங்கும் 'என்டிவி' சேனலுக்கும்
டி-சீரிஸ் நிறுவனம் பலமுறை நினைவூட்டுக் கடிதம் சட்டப்பூர்வ எச்சரிக்கை
அறிவிப்பு போன்றவை அனுப்பியும் அவை தங்களது இந்த உரிமை மீறலை தொடர்ந்து
கொண்டிருந்தன.

இதனால் வேறு வழியில்லாமல் நீதிமன்றத்தில் டி-சீரிஸ்
நிறுவனம் வழக்கு தொடர்ந்ததுடன் இந்த வழக்கு தொடர்பான ஆடுக்கடுக்கான
ஆதாரங்களையும் எடுத்து வைத்தது.

வழக்கை விசாரித்த டெல்லி
உயர்நீதிமன்றம் உரிமை மீறி ஒளிபரப்பு செய்ய சன் நெட் வொர்க் மற்றும் என்
டிவி 24 தெலுங்கு நியூஸ் சேனலுக்கும் இடைக்காலத்தடை ஆணை எண்கள் CS(OS)1742/2009.CS(OS)1459/2009 1A 10152/2009) மூலம் தடை விதித்துள்ளது.

இதனால்
இனி மேற்கண்ட இரண்டு சேனல்களிலும் முறையான அனுமதி பெரும் வரை இனி
டி-சீரிஸ் தயாரிப்புகளின் பாடல்கள்,காட்சிகள் என்பனவற்றை நாம் காண
முடியாது.

இது குறித்து டி சீரிஸ் நிறுவனத்தின் டைரக்டர் திவ்யா கோஸ்லாகுமார் கூறும்போது...

எங்கள்
நிறுவனம் இசையுலகில் நல்ல பெயர் பெற்றுள்ள ஒன்றாக
விளங்குகிறது.'டி-சீரிஸ்' நிறுவனத்தின் காப்புரிமை பெற்ற படைப்புகளை
பயன்படுத்தும் போது, உரிய கட்டணம் செலுத்தி உரிமம் பெற்றுத்தான் ஒளிபரப்ப
வேண்டும்.அப்படி செய்யாமல் ஒலி,ஒளிபரப்புவது காப்புரிமை சட்ட
மீறலாகும்.எங்கள் பாடல்கள் மற்றும் காட்சிகளை நம்பி பல நிறுவனங்கள்
மூதலீடு செய்துள்ளன இந்நிலையில் எங்கள் படைப்புகளை விதி மீறி
ஒளிபரப்புவது,காப்பி எடுத்து பயன்படுத்துவது போன்றவைகளை எங்களால்
அனுமதிக்க முடியாது என்றார்.

டெல்லி உயர்நீதி மன்றத்தின் இந்த
இடைக்காலத்தடை காப்பியடிப்பதையே காப்பிரைட்ஸாக எண்ணிச் செயல்படுவோர்க்கு
நல்ல பாடமாக இருக்கும் என்று
அச்சில் ஏறாத இன்றைய செய்தி? Karunanidhi-sonia1-300x293




கோணல் கலைஞர், நேர்மையான நேரு...!


"சுவிட்சர்லாந்தில்
சிகிச்சை பெற்று இறந்துபோன மனைவி கமலாவின் உடலைப் பார்க்க ஜவஹர்லால் நேரு
சென்றார். அதற்குப் பக்கத்து நாடுதான் இத்தாலி. அந்த நாட்டின் கொடுங்கோலன்
முசோலினி, இரங்கல் செய்தி கொடுத்தார். தன்னுடைய நாட்டுக்கு நேரு வர
வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

அதற்குச் சில நாட்களுக்கு
முன்னர்தான் அபிசீனியா மீது போர் தொடுத்து, அந்த மக்கள் மீது நச்சுக்
குண்டுகளை முசோலினி வீசியிருந்தார். 'ரத்தக் கறை படிந்த பாசிஸ்ட்
முசோலினியின் அழைப்பை ஏற்று அவர் கரங்களைக் குலுக்க மாட்டேன்' என்று
கம்பீரமாக மறுத்து சந்திப்பைத் தவிர்த்தார் நேரு. அந்த மனிதநேயத்தை
கருணாநிதியிடம் எதிர்பார்க்கவில்லை. ஆனால், அந்த முன்மாதிரியைப்
பின்பற்றும் பக்குவம் கருணாநிதிக்கு இருந்திருக்க வேண்டும்! அபிசீனிய
மக்களுடன் நேருவுக்கு எந்த ரத்தச் சம்பந்தமும் இல்லை. ஆனால், ஈழத்
தமிழர்களுடன் கருணாநிதிக்குத் தொப்புள்கொடி உறவு உண்டு. ரத்தக் கறை படிந்த
ராஜபக்ஷேவின் அழைப்பை ஏற்க கருணாநிதிக்கு எப்படி மனம் வந்தது?..."

_பழ.நெடுமாறன்


அச்சில் ஏறாத இன்றைய செய்தி? Nedumaran






அச்சில் ஏறாத இன்றைய செய்தி? Feminism04அச்சில் ஏறாத இன்றைய செய்தி? Woman-in-action




உயிரோசையில் பெண்களை பற்றிய ஒரு கட்டுரை

சரித்திரம் ஆண்களின் விந்தணுக்களால் எழுதப்பட்டது...




சில
நாட்களுக்கு முன் நூலகம் சென்றிருந்தேன்.`சரித்திரத்தில் பெண்கள்` எனும்
மலாய் நூல் ஒன்று தட்டுபட்டது. 320பக்கங்களை கொண்ட இப்புத்த்கத்தில்
சரித்திரத்தில் பெண்களுக்கு இழைக்கப்பட்ட பாலியல் கொடுமைகள் விரிவாக
அளிக்கப்பட்டுள்ளன. 'சரித்திரம் ஆண்களின் விந்தணுக்களால் எழுதப்பட்டது.
பெண்களின் உணர்ச்சிக்கு அங்கே இடமளிக்கப்படவில்லை. என்று கூறும்
நூலாசிரியர் அதற்கான காரணங்களை இந்நூலில் விவாதிக்கிறார்

4000
அண்டுகளுக்கு முன் எகிப்திய நாகரீகத்தில் ஒரு சம்பவம் நடந்தது.எகிப்து
நாட்டை ஆட்சி செய்யும் மன்னனை 'பாரோ' என நாம் அழைப்போம். 'பாரோ' என்றால்
ஆண்டவன் எனப் பொருள்படும். மன்னனை கடவுள் என ஏற்க மறுத்த பெண்ணை, பேழையில்
வைத்துக் கொதிக்கும் நீரில் விட்டு, வேகவைத்துக் கொலை செய்தார்கள்.
தன்னைக் கடவுள் எனக் கருதும் ஒரு ஆணால் தண்டனைக் கொடுக்கப்பட்டு, மற்றொரு
ஆணின் கையில் கொலையுண்டு போகிறாள் கொடூர முறையில்.

எகிப்திய
சரித்திரத்தில் மீண்டும் இக்கொடுரம் ஏற்பட்டது. இம்முறை இரண்டாம் ராம்சேஸ்
எகிப்திய 'பாரோ'வாக இருக்கிறான். அவன் ஒரு கொடுங்கோலன். ராம்சேஸின்
மனைவியான 'ஆசியா' அவனை எதிர்க்கும் பொருட்டு அவளுக்கு பல கொடுமைகளை
விளைவிக்கிறான். ஆசியாவை சிறையெடுத்துக் கொடுமைச் செய்கிறான். கடைசியாக
குத்துயிரும் கொலை உயிருமாய் இருந்த அவள் மார்பில் ஈட்டியை எய்தி
கொல்கிறார்கள்.

மனிதனுக்கு சிந்தனைத் திறன் இருந்தும் அவன்
உணர்ச்சிக்கே அதிகமாக இடம் கொடுக்கிறான். நாம் நாகரீகத்தில் எவ்வளவோ
வளர்ச்சியடைந்து இருப்பினும் பெண்களுக்கெதிரான கொடுமைகள் நடந்த வண்ணமே
உள்ளன. மனிதர்களிடையே பாசம், நேசம், அன்பு என அனைத்தும் குருட்டு
நம்பிக்கைகளாகவே இருக்கின்றன.

நம் மூதாதைகளின் அணுக்களின் தாக்கம்
இருப்பதாலோ என்னவோ நம்மில் இன்னமும் பழமையின் எண்ணக் கோடுகள்
உள்ளன.ஆண்களிடையே இவள் பெண்தானே என நினைக்க வைக்கும் செற்ப எண்ணமும்,
பெண்களிடையே நாம் பெண்தானே என்ன செய்துவிட முடியும் எனும் தாழ்வு
மனப்பான்மையும் காணப்படுகிறது.

கிரேக்க நாகரீகத்தில் ஏறக் குறைய
கி.மு 850 முதல் 480க்குள் பரவலாக நடந்த சம்பவம் உள்ளது. அக்காலகட்டத்தில்
பெண் குழந்தைகளை கொலை செய்வது சாதாரண ஒன்றாக இருந்தது. 'எதென்ஸ்' மக்கள்
பெண் என்பவளை ஒரு மதிப்பற்ற பொருளாகவே கருதினார்கள். பெண்களை பாலியல்
அடிமைகளாகவும், குழந்தைகளை பெற்றுப் போடவும் மட்டுமே பயன்படுத்திக்
கொண்டார்கள்.

கிரேக்கர்களின் பார்வையில், பெண்ணானவள் வீட்டு வேலை
செய்பவளாகவும், திருமணம் செய்து பிள்ளை பெற்றுக்கொள்பவளாகவும் மட்டுமே
தெரிந்தாள். கிரேக்க அரசாங்கமும் பெண்களை நாட்டின் சுமை எனக் கருதியது.
இதற்கு காரணம் பெண்களால் போரிட முடியாமல் இருந்தது, அரசாங்கத்தை தேர்வு
செய்ய ஓட்டு போடும் உரிமையும் பெண்களுக்கு இல்லை. இது போக சொத்துகளை
வாரிசு வகிக்கும் தகுதியும் பெண்களுக்கு இல்லை. 'டெல்பி'யில் இருந்த 6000
குடும்பங்களில்1 சதவீகிதத்திற்கு குறைவான பெண்களே இருந்தார்கள்.

நபிகள்
நாயகத்தின் தோன்றலுக்கு முன் அரேபிய மக்கள் பண்பினால் மிகவும் பின்தங்கி
இருந்தார்கள். அவர்களை ஜாஹிலியா காலத்து மக்கள் எனக் கூறுவார்கள்.
ஜாஹிலியா காலத்து ஆண்கள் மிகக் கொடுரமானவர்களாகவும், ஒழுக்கங்
கெட்டவர்களாகவுமே இருந்திருக்கிறார்கள். பெண்களை தங்களது காம இச்சையை
தீர்க்கும் போக பொருளாக பயன்படுத்தினார்கள்.

அவர்களின் உடல் பசியை
தீர்த்துக் கொண்ட பின் அப்பெண்ணை அடித்துத் துன்புறுத்துவார்கள். பல
இன்னல்களுக்குப் பிறகு அப்பெண்ணிற்கு மிக மலிவான பணத்தைக்
கொடுப்பார்கள்.அப்பணம் அவளது ஒருவேளை உணவை வாங்குவதற்கே போதுமானதாக
இருக்கும். அடுத்த வேளை உணவுக்காக அவள் மீண்டும் ஆணை நோக்கி போவாள்.உடலை
விற்பனை செய்து,கூடவே வேதனைகளையும் வாங்கிக் கொண்டு பணம் புரட்டுவாள்.

தனது
சந்ததியினர் இப்படிபட்ட இழி நிலையினால் பாதிப்படையாமல் இருக்க வேண்டும்
என்பதையே பெற்றோர்களும் நினைப்பார்கள். அதனால் தங்களுக்கு பிறக்கும் பெண்
குழந்தைகளை உயிருடன் புதைத்துவிடுவார்கள்.

கி.மு 580களில் சீன
தேசம் 'கம்பூசியஸ்' மதத்தின் ஆதிக்கத்தில் இருந்தது.அக்காலகட்டத்தில்
பெண்களை உயிருடன் புதைக்கும் வழக்கத்தைக் கொண்டிருந்தார்கள். நாட்டின்
முக்கிய தலைவர்கள் இறந்து போவாராயின் அவர் மனைவியை புதைக்க மாட்டார்கள்
மாறாக அப்பெண்ணின் தொப்புள் முதல் தொடை வரை இரும்பு கலசங்களைக் கொண்டு
பூட்டிவிடுவார்கள்.தனது வாழ்நாள் முடியும் வரை அப்பெண் மற்ற ஆடவரோடு
எந்தத் தொடர்பும் ஏற்படுத்திக் கொள்ளாமல் இருக்க வேண்டும் என்பதை பொருட்டு
இப்படி செய்வார்கள்.

'ஜேக் தீ ரீப்பர்' பல மர்மக் கொலைகளை செய்த
ஆசாமி. 19ஆம் நூற்றாண்டில் பிரிடானிய அரசாங்கத்திற்குத் தலைவலி
கொடுத்ததில்லாமல் மக்களையும் பீதியில் ஆழ்த்தியவன். யார் இவன்? 'ஜேக்'
விலைமாது பித்தன் என அறியப்பட்டான். இவனே நவீன சரித்திரத்தில் முதன்
முதலாக பல மர்மக் கொலைகளை செய்தவனாகவும் கருதப்படுகிறான். பெண்களை
அனுபவித்த பின் அவர்களின் உடல் உறுப்புகளை துண்டு துண்டாக நறுக்கி
போட்டுவிடுவான்.

இதனை அடுத்தாற் போல் 'எட்வட் கெய்ன்' என்பவனும்
பெண்களுக்கெதிராக பல கொடூர கொலைகளை செய்திருக்கிறான். அவற்றுள் இரண்டு
மட்டுமே நிரூபிக்கப்பட்டிருக்கிறது. இவனது மர்மமான வாழ்வை அடிப்படையாகக்
கொண்டு 'தீ சைக்கோ' மற்றும் 'சைலன்ஸ் ஆப் தீ லேம்ப்' எனும் இரு ஆங்கில
படங்கள் எடுக்கப்பட்டிருக்கிறது.

'கேய்ன்' இறந்த பெண்களைத் தோண்டி
எடுத்து அவர்களின் உறுப்புகளை வெட்டி தனது அழகு சாதனமாக வைத்துக்
கொள்வானாம். அவன் பிடிபட்ட சமயம் பெண்களின் மர்ம உறுப்புகளைக் கொண்டு அவன்
உருவாக்கிய பல அழகு சாதனப் பொருட்களையும் காவல் துறையினர்
கைப்பற்றியுள்ளார்கள். ஜேக் மற்றும் கேய்ன் இருவரும் பைத்தியக்காரர்களாக
இருந்தாலும் அவர்களின் செயல்கள் பெண் வர்கத்தினருக்கு பெரும் கேடாகவே
கருதப்படுகிறது.

முதல் மற்றும் இரண்டாம் உலக போர் காலகட்டத்தில்
பெண்களின் நிலையை சற்று அலசி பார்த்தோமேயானால் சோகத்தின் சாயல் அங்கும்
ஒட்டி இருப்பதைக் காணலாம். பெண்களின் நிலை கேவலப்படுத்தப்பட்டிருப்பது
மிகவும் வேதனைப்படச் செய்கிறது. பல நூறு சீன, கொரிய மற்றும் பிலிபீன்ஸ்
தேச பெண்கள் ஜப்பானிய இராணுவத்தின் காம பசிக்கு ஆளாகி இருக்கிறார்கள்.
கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள்.இதில் அதிகம் பாதிகப்பட்டது சீனர்களே.
இதற்குக் காரணம் சீனர்கள் மீது ஜப்பானியர்களுக்கு இருந்த தனிபட்ட
வீரோதமேயாகும்.

போரில் ஈடுபடுவது இராணுவமாக(ஆண்கள்) இருந்தாலும்
அதில் பெரும் பாதிப்பு பெண்களுக்கே உரித்ததாய் அமைந்தது. பிள்ளைகளுடன்
கைவிடபட்ட தாய் வறுமையில் வாடினாள். அப்படிபட்ட தாய்மார்கள் கொலையுண்டபோது
அவர்களின் பிள்ளைகளும் தவிப்புக்குள்ளாகினர்.

1993ஆம் ஆண்டு
போஸ்னியாவில் நிகழ்ந்த இன ஒழிப்புப் போர், 'சேச்னீயயாவில் 1994ஆம் ஆண்டும்
மற்றும் 1996ஆம் ஆண்டு'கோசோவோ'வில் நடந்த போர்களிலும் பெண்களே மிகவும்
பாதிக்கப்பட்டனர். இதற்கு காரணம்தான் என்ன? பெண்கள் அழிக்கப்பட்டால்
சந்ததியனர் உருவாவதை தடுக்க முடியும் என்ற எண்ணமே முக்கிய காரணமாகும்.

இப்போர்களின்
சமயம் பெண்கள் மீது வெடி குண்டெறிந்தார்கள், மாதமாய் இருந்தவர்களை
உதைத்தார்கள், அவர்கள் வயிற்றைச் சுட்டும் வெட்டியும் கொன்று போட்டார்கள்.
உதாரணமாக போஸ்னிய போரின் போது பல போஸ்னிய பெண்களை சைபீரியர்கள்
கற்பழித்தார்கள். பிறக்கும் குழந்தையின் உடலில் சைபீரியர்களின் இரத்தமும்
கலந்திருக்க வேண்டும் என்ற இன வெறியே இதற்குக் காரணம்.

தமிழ்
நாட்டில் சில கிராமப் பகுதிகளில் வரதட்சணை பிரச்சனை அதிகமாக இருந்தது.
ஏழ்மை நிலையில் இருப்பவர்கள் தங்களுக்கு பிறக்கும் பெண் குழந்தைகளை
கொலைசெய்துவிடுவார்கள். பிறக்கும் குழந்தைகளுக்கு விவசாய உரமோ அல்லது நெல்
மணிகளோ கொடுப்பார்கள், முகத்தை ஈர துணியால் மூடிவிடுவார்கள், கழுத்தை
நெறித்தும் அல்லது பசியால் வாட வைத்தும் சாக விட்டுவிடுவார்கள்.

சீன
தேசத்தில் குடும்பத்திற்கு ஒரு குழந்தை எனும் சட்டம் அமல்படுத்தப்பட்ட
போது பெண் சிசு கரு கலைப்பு அதிகம் நடந்தது.கருவிலேயே சாகடிக்கப்பட்ட
சிசுவை சீன உணவகங்களுக்கு மருத்துவ உணவு செய்யும் பொருட்டு விற்பனை
செய்துவிடுவது கொடுமையினும் கொடுமை.

2002ஆம் ஆண்டு ஜூன் மாதம்
பாக்கிஸ்தானில் பஞ்சாப் மாநிலத்தில் தனது சகோதரன் ஒரு உயர் ஜாதி பெண்ணுடன்
ஓடி விட்டான் என்ற குற்றத்திற்காக முக்தார் எனப்படும் தாழ்த்தப்பட்ட ஜாதி
பெண்ணை உயர் ஜாதி ஆண்கள் பலர் ஒன்று கூடி கற்பழித்திருக்கிறார்கள்.

இப்படியாக
சரித்திரம் தொட்டே பெண்களுக்கெதிரான கொடுமைச் செயல்கள் நடந்து
வந்திருக்கிறது. இப்போது நவநாகரிக உலகில் நாம் வாழ்ந்து வந்தாலும் பாலியல்
கொடுமைகள் ஆங்காங்கெ நடந்த வண்ணமே உள்ளன. மனதின் ஏதோ ஒரு மூலையில் லேசாக
ஒட்டிய பயத்துடனே பெண்கள் வாழ்க்கையை மேற்கொள்கிறார்கள் எனக் கூறினால்
மிகையாகாது.

பெண்களை பொம்மை எனக் கருதுவதை தவிர்க்க வேண்டும்.
அவர்களும் உலக வாழ்க்கையின் முக்கிய அங்கமென கருதப்பட வேண்டும். நம்
குடும்ப உறுப்பினராகவும், உறவினராகவும் பார்க்கப்பட வேண்டும்.மதிக்கப்பட
வேண்டும்.



--
களத்துக்கு வந்தபின் காயம்படுமென கலங்குவது வீரத்துக்கு அழகில்லை...

நான் மறத்தமிழச்சி...

யவனராணி
yavanarani1989@gmail.com



அச்சில் ஏறாத இன்றைய செய்தி? Women-strugle அச்சில் ஏறாத இன்றைய செய்தி? Feminism




நீங்க இன்னும் எத்தனை வருஷம் உயிரோட இருப்பீங்க...?


1991 ஆம் ஆண்டில் இந்தியரின் சராசரி ஆயுட்காலம் 57.9 ஆண்டுகள்.

1996 ஆம் ஆண்டில் 60 ஆண்டுகள்.



2001 ஆம் ஆண்டு 63 ஆண்டுகள்.

தற்போது ...?
65 ஆண்டுகள்!

அச்சில் ஏறாத இன்றைய செய்தி? Orchestra-of-the-Age-of-Enlightenment






"வீல்சேரும்" வெற்றிச் சிகரமாகும்...!


அச்சில் ஏறாத இன்றைய செய்தி? 11


உண்மைச் சம்பவங்கள்

சம்பவம் 1 :

எனது
நண்பர் ஒருவர் திருப்பூரில் Textile Industry நடத்தி வருகிறார். நல்ல
வருமானம், கார், பங்களா, வாழ்க்கை இப்படி இருந்தபொழுது சோதனை, தோல்வி,
தோல்வி, தோல்வி.

கடைசியில் வெறும் ஆளாக நின்றார். பங்களா பறிபோனது,
கார்கள் போய்விட்டன. கடைசியில் தன்னுடைய குடும்பத்தைக் காப்பாற்றுவதற்காக
ஒரு கம்பெனியில் வேலைக்குச் சேர வேண்டிய நிலைமையாகிவிட்டது. உலகமே
சிரித்தது. உலகம் மதிக்கவில்லை. ஆனால் இவர் கலங்கவில்லை. ‘இப்பொழுது
என்னிடம் ஒன்றும் இல்லை. ஆனால், எதிர்காலத்திலும் ஒன்றுமில்லை என்று
பொருளில்லை. நான் இப்போதைக்கு இந்த வேலையைச் சரியாகச் செய்வேன்” என்று
தீவிரமாக அந்தக் கம்பெனியில் வேலை செய்துகொண்டிருந்தார்.

இருந்தாலும்
“வாழ்க்கை முழுவதும் இப்படியே இருக்கமாட்டேன். மீண்டும் வாழ்க்கையில்
ஜெயிப்பேன்” என்றதீவிர எண்ணங்களை மனதில் வளர்த்துக் கொண்டிருந்தார்.

இப்படியிருந்த
போது Purchase Department-ல் பொருட்களை வாங்கும் பகுதியில் இவருடைய
பொறுப்பு. இதில் பல இடங்களுக்குச் சென்று பல பொருட்களை ர்ழ்க்ங்ழ் செய்ய
வேண்டும். வாங்க வேண்டும்.

இப்படி செய்து வந்த பொழுது ஒரு
முக்கியமான அம்சத்தை இவர் கவனித்தார். ஒரு குறிப்பிட்ட பொருள் மிக அதிக
விலைக்கு விற்பதை கண்டுள்ளார். அதற்கு அதிக போட்டியும் இல்லை. ஆனால்
உண்மையில் அதன் உற்பத்திச் செலவு மிக மிகக் குறைவு. ஆனால் விற்பனை விலையோ
மிக அதிகமாக இருந்தது. இவருடைய எண்ணத்தில் “ஏன் இந்தப் பொருளை நாம்
தயாரிக்கக் கூடாது” இந்த எண்ணம் மனதிற்கு வர வர அதைப் பற்றிய விபரங்களை
எல்லாம் சேகரித்து வைத்தார்.

கொஞ்சம் கொஞ்சமாக பணம் சேகரித்து ஒரு
வாடகைக் கட்டிடத்தில் தனது தொழிலை ஆரம்பித்தார். ஏற்கனவே வேலையில் இருந்த
போது நிறையத் தொடர்புகள் இருந்தது. நிறைய order இவருக்குக் கிடைத்தது.
படிப்படியாக வளர்ந்து மீண்டும் ஒரு பெரிய தொழிலதிபர் ஆனார்.

அவர்
என்னுடைய பயிற்சியில் ஈரோட்டில் கலந்து கொண்டபோது சொன்னார். “என்னுடைய
முதலாளியுடன் விலை உயர்ந்த காரில் கம்பெனி கூட்டத்திற்காக சென்று
கொண்டிருந்தேன். இதேபோல் விலையுயர்ந்த காரை மீண்டும் வாங்குவேன் என்று
முடிவெடுத்தேன். இன்று உங்கள் பயிற்சிக்கு அந்தப் புதிய காரில் தான்
வந்திருக்கிறேன்” என்று சொன்னார். இது உண்மைச் சம்பவம்.

மீண்டும்
உலகம் பாராட்டியது. நண்பர்களே! இவர் அடைந்தது தோல்வி; அடைந்தது வீழ்ச்சி.
ஆனால், மனத்தை அத்துடன் நிறுத்திவிடவில்லை. மீண்டும் ஜெயிப்பேன்
என்றஉணர்வு அவரை மீண்டும் ஜெயிக்க வைத்தது.

தொழிலில் எத்தகைய
தடங்கல் வந்தாலும், சோதனை வந்தாலும் அதையும் வாய்ப்புகளாகப் பயன்படுத்தும்
எண்ணம் இருந்தால் வெற்றி நிச்சயம். இதன் பெயர் Positive Thinking அதாவது
உடன்பாட்டு எண்ணம் வேண்டும். அதேபோல என்ன சிக்கல், தடங்கல் வந்தாலும்
அதிலும் ஏதேனும் செய்ய முடியும் என்றநேர்மறையான எண்ணம் வேண்டும். இந்த
மனநிலை இருந்தால் எந்தச் சூழ்நிலையிலும் அவர்கள் வெல்வார்கள்.

சம்பவம் 2 :

ஒரு
அமெரிக்க ஆசிரியப் பெண்மணி வாழ்க்கையில் நிகழ்ந்தது. தன்னுடைய வாழ்வின்
நோக்கத்தை பெரிய கோடீஸ்வரர் ஆக வேண்டும் என்று வைத்திருந்தார். பலர் அவரை
கேலி செய்து கொண்டு இருந்தார்கள். ‘நீயோ ஆசிரியர், நீ எப்படி அவ்வளவுப்
பணத்தை சம்பாதிக்க முடியும்’ என்று.

ஆனால், அவர்களைப் பொறுத்த அளவில் தன்னுடைய இலட்சியத்தில் தெளிவாக இருந்தார்.

இப்படி
வாழ்ந்து கொண்டிருந்தபோது, ஒருமுறை ஒரு விபத்து ஏற்பட்டு ‘வீல்சேரி’ல் அமர
வேண்டிய நிலைமையாகி விட்டது. அதாவது வீல்சேரில்தான் போகமுடியும்,
வரமுடியும். முழுமையாக பாதிப்பு. எல்லோரும் சொன்னார்கள் ‘இனி வாழ்க்கை
முடிந்து விட்டது’ என்று. ஆனால், அந்தப் பெண்மணி ‘என் உடல்தான்
முடங்கிவிட்டது. உள்ளம் முடங்கவில்லை. நிச்சயம் இந்த வாழ்க்கையில்
என்னுடைய இலட்சியத்தை அடைந்தே தீருவேன்’ என்று தீர்க்கமாக இருந்தார்கள்.

இப்படி
இருந்து கொண்டிருந்தபோது, இவர்களுக்குள் ஒரு சிந்தனை இந்த ‘வீல்சேர்’
வசதியாக இல்லை. நல்ல வசதியான ஒரு வீல்சேரை நாம் ஏன் தயாரிக்கக் கூடாது
என்றஎண்ணம் ஓடியது. இதையே ஒவ்வொரு நாளும் சிந்தனை செய்து அந்தச் சேரில்
என்னென்ன மாற்றங்கள் செய்ய முடியுமோ செய்து கடைசியில் ஒரு அற்புதமான
வீல்சேரை உருவாக்கினார். அந்த ‘வீல் சேரை’ இரண்டு மூன்று வகைகளில்
தயாரித்து மக்களிடம் சோதனைக்கு அனுப்பும்போது, இது மிக அற்புதமாக
இருக்கிறது என்று படிப்படியாக ஆர்டர் வந்தது. இதை அவர்கள் ஒரு
ஒர்க்ஷாப்பில் தயாரிக்க கொடுக்க ஆரம்பித்து, படிப்படியாக வளர்ந்து அந்த
‘வீல்சேர்’ மூலமே ஒரு பெரிய கோடீஸ்வரர் ஆகிவிட்டார்.

இதுவரை
வீல்சேர் தயாரித்தவர்கள் நல்ல நிலைமையில் இருந்தவர்கள். அவர்கள் தயாரித்த
‘வீல்சேர்’ அவ்வளவு வசதியாக இல்லை. ஆனால், அந்த வலியும், வேதனையும் உடைய
இந்தப் பெண் தயாரித்ததால் அது மிகச் சிறந்ததாக – பொருத்தமானதாக இருந்தது.

சாதாரண
மனிதர்கள் விபத்தானவுடன் முடங்கியிருப்பார்கள். ஆனால் விபத்தையே
-பிரச்சனையையே ஓர் வாய்ப்பாகச் சாதனை யாளர்கள் பயன்படுத்துகின்றனர்.

“பாதைகளை
வழிமுறைகளை மாற்றுவேன். ஆனால், இலட்சியத்தை மாற்றமாட்டேன். அடைந்தே
தீருவேன்” என்றதீவிர எண்ணம், அசைக்க முடியாத ஸ்திரமான எண்ணம் கொண்டு
விடாமுயற்சியுடன் தொடர்ந்து செயலாற்றினால் வெற்றி நிச்சயம்!

http://www.thannambikkai.net/2009/10/01/3034/


அச்சில் ஏறாத இன்றைய செய்தி? Thannambikai



அச்சில் ஏறாத இன்றைய செய்தி? Self01a



உயிர் தப்பினான், ராஜபக்சே...!

மகிந்த
இராஜபக்சேவை கொலை செய்ய எத்தனித்ததாக ஒருவரையும் மற்றும் ஒருவரையும்
யாழ்ப்பாணத்தில் வைத்து கைது செய்துள்ளதாக சிறீலங்கா குற்றப்புலனாய்வு
துறையினர், கல்கிஸ்ஸை நீதிமன்றத்தில், தெரிவித்துள்ளனர்.

இவர்
அச்சுவேலியை சேர்ந்தவர் என்றும் தமிழீழ விடுதலைப்புலிகளின் உறுப்பினர்
என்றும் சிறீலங்கா புலனாய்வுத் துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

மகிந்த
இராஜபக்சேவை கொலை செய்ய முயற்சித்ததாக கூறி ஏற்கனவே, இராணுவ கேணல் ரஞ்சித்
பெரேரா, அவரது மனைவி கரீமா ஹமீட், ராமசாமி பிரபாகரன் மற்றும் சானுக்க
கலுதேரா ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறீலங்கா இரகசிய பொலிஸாரிடம்
ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களின் தகவல்களின்படியே யாழ்ப்பாணத்தில் வைத்து ஒருவர் கைது செய்யப்பட்டதாக சிறீலங்கா புலனாய்வுத் துறையினர் தெரிவித்துள்ளனர்.

http://www.meenagam.org/?p=14702




உடன் பிறப்பே!

அச்சில் ஏறாத இன்றைய செய்தி? Karu2




போகும்பொதும் நான் பதவியோடு போக வேண்டும்.

பெரியாறு போனால் என்ன?

காவேரி காய்ந்தால் என்ன?

கச்சத் தீவு தேய்ந்தால் என்ன?

மீனவன் மடிந்தால் என்ன?

இலங்கை தமிழன் இறந்தால் எனக்கென்ன?



கடிதமும் தந்தியும் காலம் கடத்த எனக்குக் கிடைத்த ஆயுதங்கள்.

தம்பி! தேர்தல் வந்துவிட்டால்
பம்பரமாய் பாடுபட்டு,

அடித்த பணத்தை அள்ளிக் கொடுத்து,
இலவசங்களை எடுத்து வீசி,
வெற்றிக் கனியை வீடு தேடி கொண்டுவா!



என் கொள்கை என்னவென்று கோபப்பட்டும் கேட்டிடாதே!

போகும்பொதும் நான் பதவியோடு போக வேண்டும்.


நன்றி
கழக காளை


தட்ஸ்தமிழ்

அச்சில் ஏறாத இன்றைய செய்தி? Vavuniya




அச்சில் ஏறாத இன்றைய செய்தி? 1f1f30b2-e26d-4783-98d6-6b4363bdd3dc_300_225secvpf

அச்சில் ஏறாத இன்றைய செய்தி? P9





அதிர்வு இணையதளத்தில் தற்போதைய தலைவர் பிரபாகரன் போட்டோ



இந்த
படம் சொல்லும் செய்தி என்ன என்று குறிப்பிட்டுள்ளார்கள். கண்டிப்பாக
தற்போதைய பிரபாகரன் என்பது தெளிவாக தெரிகிறது. தலைவரை வெகு நாட்களுக்கு
பின் காண்பது போன்ற ஒரு சந்தோசம் ஒரு நிம்மதி பெருமூச்சு விட்ட மாதிரி
உள்ளது.

அச்சில் ஏறாத இன்றைய செய்தி? Pot



http://athirvu.com/potbig.jpg


அதிர்வு இணையதளத்தித்கு செல்ல மேலே உள்ள இணைப்பினை அழுத்தவும், தலைவரை நீங்கள் அங்கு காணலாம்.





பதிவுகளை மின்னஞ்சலில் பெற விருப்பமா ? கீழே உள்ள படத்தின் மேல் அழுத்துங்கள்...!...


அச்சில் ஏறாத இன்றைய செய்தி? Email_marketing_software_advertising_make_money








ஓடும் நதி.....!


http://odumnathi.blogspot.com/2009/10/blog-post_30.html#links




--~--~---------~--~----~------------~-------~--~----~
எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்,

இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டு .....

_பாரதிதாசன்

இந்த இமெயில் குழுவின் முகவரி...

http://groups.google.co.in/group/beyouths

tamilparks
tamilparks
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 444
இணைந்தது : 21/02/2009
http://tamilparks.50webs.com

Posttamilparks Sat Oct 31, 2009 10:48 am

ஓ இதை நான் இபோதான் கேட்கிறேன்.., தகவலுக்கு நன்றி

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Sat Oct 31, 2009 10:59 am

ஆச்சரியம்,துக்கம்,மனவேதனை,தன்னம்பிகை என கலந்த உங்கள் பதிவு மிக சிறப்பாக உள்ளது.

சதீஷ்குமார்
சதீஷ்குமார்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1242
இணைந்தது : 24/05/2009

Postசதீஷ்குமார் Sat Oct 31, 2009 12:24 pm

வை.பாலாஜி சொல்வது மிகவும் எனக்கும் அதே உணர்வு

மிகவும் அருமையான பதிவுகள்

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Sat Oct 31, 2009 12:32 pm

எனக்கு இதனை எப்படி விவரிப்பது என்று தெரிய வில்லை... அச்சில் ஏறாத இன்றைய செய்தி? 838572

பல உணர்ச்சுகள் இதனை படிக்கும் போது ஏற்படுகிரது...

நன்றி நந்திதா அக்கா... அச்சில் ஏறாத இன்றைய செய்தி? 678642 அச்சில் ஏறாத இன்றைய செய்தி? 678642 அச்சில் ஏறாத இன்றைய செய்தி? 678642

கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009
http://www.kovaiwap.com

Postகோவைசிவா Sat Oct 31, 2009 1:56 pm

தாமு wrote:எனக்கு இதனை எப்படி விவரிப்பது என்று தெரிய வில்லை... அச்சில் ஏறாத இன்றைய செய்தி? 838572

பல உணர்ச்சுகள் இதனை படிக்கும் போது ஏற்படுகிரது...

நன்றி நந்திதா அக்கா... அச்சில் ஏறாத இன்றைய செய்தி? 678642 அச்சில் ஏறாத இன்றைய செய்தி? 678642 அச்சில் ஏறாத இன்றைய செய்தி? 678642




<a href=www.singtamil.com" hight="150" width="500" border="0"/>
avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Sat Oct 31, 2009 4:48 pm

அருமையான தலைபுடன், ஆச்சரியமான செய்திகள் அக்கா, ஆனால் எம்மக்களுக்கு தான் சோதனை மேல் சோதனை.



அச்சில் ஏறாத இன்றைய செய்தி? Skirupairajahblackjh18
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக