புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 8:39 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am

» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
'அன்பு' தொடர் 6 ('சிவாஜி என்ற மாநடிகர்') Poll_c10'அன்பு' தொடர் 6 ('சிவாஜி என்ற மாநடிகர்') Poll_m10'அன்பு' தொடர் 6 ('சிவாஜி என்ற மாநடிகர்') Poll_c10 
61 Posts - 74%
heezulia
'அன்பு' தொடர் 6 ('சிவாஜி என்ற மாநடிகர்') Poll_c10'அன்பு' தொடர் 6 ('சிவாஜி என்ற மாநடிகர்') Poll_m10'அன்பு' தொடர் 6 ('சிவாஜி என்ற மாநடிகர்') Poll_c10 
10 Posts - 12%
Dr.S.Soundarapandian
'அன்பு' தொடர் 6 ('சிவாஜி என்ற மாநடிகர்') Poll_c10'அன்பு' தொடர் 6 ('சிவாஜி என்ற மாநடிகர்') Poll_m10'அன்பு' தொடர் 6 ('சிவாஜி என்ற மாநடிகர்') Poll_c10 
8 Posts - 10%
mohamed nizamudeen
'அன்பு' தொடர் 6 ('சிவாஜி என்ற மாநடிகர்') Poll_c10'அன்பு' தொடர் 6 ('சிவாஜி என்ற மாநடிகர்') Poll_m10'அன்பு' தொடர் 6 ('சிவாஜி என்ற மாநடிகர்') Poll_c10 
3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
'அன்பு' தொடர் 6 ('சிவாஜி என்ற மாநடிகர்') Poll_c10'அன்பு' தொடர் 6 ('சிவாஜி என்ற மாநடிகர்') Poll_m10'அன்பு' தொடர் 6 ('சிவாஜி என்ற மாநடிகர்') Poll_c10 
226 Posts - 76%
heezulia
'அன்பு' தொடர் 6 ('சிவாஜி என்ற மாநடிகர்') Poll_c10'அன்பு' தொடர் 6 ('சிவாஜி என்ற மாநடிகர்') Poll_m10'அன்பு' தொடர் 6 ('சிவாஜி என்ற மாநடிகர்') Poll_c10 
37 Posts - 12%
mohamed nizamudeen
'அன்பு' தொடர் 6 ('சிவாஜி என்ற மாநடிகர்') Poll_c10'அன்பு' தொடர் 6 ('சிவாஜி என்ற மாநடிகர்') Poll_m10'அன்பு' தொடர் 6 ('சிவாஜி என்ற மாநடிகர்') Poll_c10 
12 Posts - 4%
Dr.S.Soundarapandian
'அன்பு' தொடர் 6 ('சிவாஜி என்ற மாநடிகர்') Poll_c10'அன்பு' தொடர் 6 ('சிவாஜி என்ற மாநடிகர்') Poll_m10'அன்பு' தொடர் 6 ('சிவாஜி என்ற மாநடிகர்') Poll_c10 
8 Posts - 3%
prajai
'அன்பு' தொடர் 6 ('சிவாஜி என்ற மாநடிகர்') Poll_c10'அன்பு' தொடர் 6 ('சிவாஜி என்ற மாநடிகர்') Poll_m10'அன்பு' தொடர் 6 ('சிவாஜி என்ற மாநடிகர்') Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
'அன்பு' தொடர் 6 ('சிவாஜி என்ற மாநடிகர்') Poll_c10'அன்பு' தொடர் 6 ('சிவாஜி என்ற மாநடிகர்') Poll_m10'அன்பு' தொடர் 6 ('சிவாஜி என்ற மாநடிகர்') Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
'அன்பு' தொடர் 6 ('சிவாஜி என்ற மாநடிகர்') Poll_c10'அன்பு' தொடர் 6 ('சிவாஜி என்ற மாநடிகர்') Poll_m10'அன்பு' தொடர் 6 ('சிவாஜி என்ற மாநடிகர்') Poll_c10 
3 Posts - 1%
Barushree
'அன்பு' தொடர் 6 ('சிவாஜி என்ற மாநடிகர்') Poll_c10'அன்பு' தொடர் 6 ('சிவாஜி என்ற மாநடிகர்') Poll_m10'அன்பு' தொடர் 6 ('சிவாஜி என்ற மாநடிகர்') Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
'அன்பு' தொடர் 6 ('சிவாஜி என்ற மாநடிகர்') Poll_c10'அன்பு' தொடர் 6 ('சிவாஜி என்ற மாநடிகர்') Poll_m10'அன்பு' தொடர் 6 ('சிவாஜி என்ற மாநடிகர்') Poll_c10 
2 Posts - 1%
Guna.D
'அன்பு' தொடர் 6 ('சிவாஜி என்ற மாநடிகர்') Poll_c10'அன்பு' தொடர் 6 ('சிவாஜி என்ற மாநடிகர்') Poll_m10'அன்பு' தொடர் 6 ('சிவாஜி என்ற மாநடிகர்') Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

'அன்பு' தொடர் 6 ('சிவாஜி என்ற மாநடிகர்')


   
   

Page 1 of 2 1, 2  Next

vasudevan31355
vasudevan31355
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 569
இணைந்தது : 11/11/2013

Postvasudevan31355 Thu Dec 12, 2013 1:53 pm

'அன்பு'  தொடர் 6 ('சிவாஜி என்ற மாநடிகர்')

தொடர்-6

வெளிவந்த ஆண்டு- (24.07.1953)

'அன்பு' தொடர் 6 ('சிவாஜி என்ற மாநடிகர்') Folder

கதை - எம். நடேசன்

வசனம் - விந்தன்

சங்கீதம் - டி.ஆர். பாப்பா

படப்பிடிப்பு - ஜி.விட்டல்ராவ்

நடனம் - தண்டாயுதபாணி பிள்ளை, ஹீராலால், கோபால கிருஷ்ணன்

ஸ்டூடியோ - நியூடோன், சிட்டாடல்

தயாரிப்பாளர் இயக்குநர் - எம்.நடேசன்

தயாரிப்பு - நடேஷ் ஆர்ட் பிக்சர்ஸ்


'அன்பு' தொடர் 6 ('சிவாஜி என்ற மாநடிகர்') GEDC4112aa

கதை:

ராஜமாணிக்கம் (கே. துரைசாமி) ஒரு முதியவர். அவர் ஒரு ஆபிசில் பணிபுரிகிறார். அவரின் முதல் தாரத்து பிள்ளைகள் செல்வமும், (நடிகர் திலகம்) லஷ்மியும்.(எஸ். பத்மா) மனைவியை இழந்த ராஜமாணிக்கம் இரண்டாம் தாரமாக தங்கம் (டி.ஆர். ராஜகுமாரி) என்ற இளம் குணவதியை மணந்து கொள்கிறார். தங்கம் குணத்திலும் தங்கம். மற்ற சித்திகள் போலல்லாது செல்வத்தையும், அவன் அக்கா லஷ்மியையும் அன்புடன் வளர்க்கிறாள். மாற்றாந்தாய் என்ற மனப்பான்மை சிறிதும் இன்றி செல்வத்தையும், லஷ்மியையும் பராமரிக்கிறாள் அவள். செல்வமும் தன் சொந்த தாயாகவே அவளை எண்ணி அவளிடம் அன்பு செலுத்துகிறான். ஆனால் லஷ்மியோ தன்னைச் சேர்ந்தவர்கள் போடும் தூபத்தின் காரணமாக லஷ்மியை வெறுக்கிறாள். ஆனாலும் தங்கம் லஷ்மி மேல் உயிரையே வைத்திருக்கிறாள். செல்வம் கல்லூரியில் படிக்கிறான்.

அதே ஊரில் விஜயா (எம்.ருஷ்யேந்திர மணி) என்ற பணக்கார பெண்மணி வசித்து வருகிறாள். அவளுடைய பெண் மாலதி. (பத்மினி) நல்லவள். அவளும் செல்வம் பயிலும் கல்லூரியிலேயே பயிலுகிறாள். செல்வமும், மாலதியும் ஒருவரை ஒருவர் மனதார விரும்புகின்றனர்.

மாலதியின் அம்மா விஜயா கணவனை இழந்தவள். விதவை. ஆனால் வயதானாலும் நாகரீக மோகம் சற்று கொண்டவள். தங்கத்துக்கு நடன ஆசிரியையாக இருக்கும் கலா 'மிஸ்டர்' லை (டி.எஸ்.பாலையா) என்ற மோசக்காரனை விஜயாவிடம் அறிமுகப்படுத்தி வைக்கிறாள். திருமலை என்னும் அந்த லை தன்னை ஒரு மிருகங்களுக்கு வைத்தியம் செய்யும் மருத்துவர் என்று விஜயாவிடம் அறிமுகப்படுத்திக் கொள்கிறான். விஜயா தன் அண்ணன் பர்மாவில் தன் மனைவியுடன் குடியிருந்த போது போரின் காரணமாக ஜப்பான் காரர்களின் குண்டு வீச்சினால் தன் அண்ணனும், அண்ணியும் இறக்க நேரிட்டதாக திருமலையிடம் கூறிக் கண்ணீர் வடிக்கிறாள். அவர்களுக்கு ஒரு மகன் இருந்ததாகவும் அவன் என்ன ஆனான் என்று தெரியவில்லை என்றும் கூறுகிறாள். இந்த அருமையான சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி இறந்து போன விஜயாவின் அண்ணன் மகன் தான்தான் என்று விஜயாவை நம்ப வைத்து ஏமாற்றி விடுகிறான் திருமலை. ஏமாளி விஜயாவும் தன் அண்ணன் மகன்தான் திருமலை என்று நம்பி விடுகிறாள். திருமலை கொஞ்சம் கொஞ்சமாக அந்த வீட்டின் நிர்வாகத்தில் தலையிட ஆரம்பிக்கிறான். தன்னை நேசித்த  கலாவிற்கும் (குமாரி ராஜம்) கடுக்காய் கொடுத்து விடுகிறான். அது மட்டுமல்ல. அத்தை பையன் என்ற போர்வையில் மாலதியை திருமணம் செய்து கொள்ளவும் திட்டம் தீட்டுகிறான். விஜயாவும் அவன் பேச்சுப்படியே நடக்கிறாள்.

ராஜமாணிக்கமும், தங்கமும் லஷ்மிக்கு நல்ல செலவு செய்து திருமணம் செய்து வைக்கிறார்கள். லஷ்மியின் மாமியார் ஒரு பேராசை பிடித்தவள். தன்னிடமிருந்த நகைகளைக் கூட கழற்றி லஷ்மியின் வரதட்சணைக்காக கொடுத்து விடுகிறாள் சித்தி தங்கம். அப்போது கூட தன் சித்தி மேல் லஷ்மிக்கு பாசம் அரும்பவில்லை. குடும்பம் ஏழ்மை நிலையை அடைந்து விடுகிறது. திடீரென்று ராஜமாணிக்கம் உடம்பு சரியில்லாமல் படுத்த படுக்கை ஆகி விடுகிறார். தங்கமும், லஷ்மியும் அவரை உடன் இருந்து கவனிக்கின்றனர். ஆனாலும் லஷ்மி இன்னும் தங்கத்துடன் ஒட்டாமலே இருக்கிறாள். அதில்லாமல் இன்னொரு எதிர்பாராத சம்பவம் வேறு நடக்கிறது. இந்த சமயத்தில் தங்கம் கர்ப்பவதியாக வேறு ஆகி விடுகிறாள்.

படுத்த படுக்கையில் இருக்கும் ராஜ மாணிக்கம் தங்கத்தின் மாறா தூய்மையான அன்பைக் கண்டு நெகிழ்ந்து "உன்னால் மட்டு எப்படி எல்லோரிடமும் அன்பாக இருக்க முடிகிறது?" என்று கேட்கிறார். அதற்கு தங்கம் சிறுவயதில் தான் தாயை இழந்து விட்டதால் தன்னுடைய அப்பா வேறு ஒரு பெண்ணை மணந்து கொள்ள அந்த மாற்றாந்தாய் சித்தி தன்னை அளவுக்கதிமாகக் கொடுமைப் படுத்தியதாக கணவனிடம் கூறுகிறாள். (சித்தி சிறு வயதில் அவள் சித்தியால் கொடுமைப்படுத்தப் படுவது பிளாஷ் பேக் காட்சிகளாகக் காட்டப்படும்) மேலும் தங்கம் அதற்கு அந்த சித்தி மேல் தவறில்லை என்றும் முதுமை கொண்ட ஆண்கள் இளம் மங்கையரை இரண்டாம் தாரமாக ஆக்கி அவர்களுடைய இளமையையும், வாழ்வையும் நாசம் செய்து விடுகிறார்கள் என்றும் அதனால் அந்தப் பெண்கள் யாரிடமும் அன்பு செலுத்த முடியாமல் கொடுமைக்காரிகளாகி விடுகிறார்கள் என்றும் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் கூறி விடுகிறாள். இது ராஜமாணிக்கத்திற்கு மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தி விடுகிறது. 'தானும் முதியவந்தானே....தாரத்தை இழந்தவுடன் இளம் மங்கையான தங்கத்தை மணந்து அவள் இளமை வாழ்வைக் கெடுத்து விட்டேனே... அதைத்தான் தங்கம் இவ்வளவுநாள் மனதில் பூட்டி வைத்திருந்து இன்று கொட்டிவிட்டாளோ' ...என்ற குற்ற உணர்ச்சி மிகுதியாகி உடல்நிலை மிக்க மோசமடைந்து உயிரை விடுகிறார் அவள் தன்னால் கர்ப்பவதி ஆகியிருக்கிறாள் என்பது கூடத் தெரியாமல். தான் உணர்ச்சி வசப்பட்ட நிலையில் சொன்னதை தன் கணவர் தன்னைக் கற்பனை செய்து பார்த்து இப்படி திடுமென உயிரை விட்டு விடுவார் என்பது அவள் எதிர்பார்க்காத ஒன்று. கணவனை இழந்து தங்கமும், தந்தையை இழந்து செல்வமும் பரிதவிக்கின்றனர்.

ஏழ்மை நிலைமையிலும், தன் சித்தி நிலைமையையும் எண்ணிப் பார்க்கும் செல்வம் தன் காதலைத் துறக்க முடிவு செய்கிறான். மாலதியை சந்திப்பதைத் தவிர்க்கிறான். மாலதி அவன் ஏன் தன்னை நிராகரிக்கிறான் என்று குழம்புகிறாள்.

சாப்பாட்டுக்கே வழியில்லாத நிலைக்கு வந்து விட்ட செல்வம் கல்லூரி படிப்பை நிறுத்தி விட்டு வேலை தேடி அலைகிறான். அவனுக்கு எங்கும் வேலை கிடைக்கவில்லை. அப்படியே  ஒரு இடத்தில் வேலை கிடைத்தும் அவனுக்கும் அவன் சித்திக்கும் தொடர்பு இருப்பதாக கருதி  அந்த வேலையும் அவனுக்குக் கிடைக்காமல் போகிறது.

இதற்கிடையில் சித்தி தங்கம் ஒரு பெண் குழந்தையை ஈன்றெடுக்கிறாள். தனக்குத் தங்கை பிறந்ததை எண்ணி பெருமகிழ்வு கொள்கிறான் செல்வம். ஆனால் ஊரார்?! தங்கத்தையும், செல்வத்தையும் இணைத்து தாறுமாறாகப் பேசுகின்றனர். இளம் வயது செல்வத்தை சித்தி தங்கம் வைத்திருக்கிறாள் என்று வாய் கூசாமல் பேசுகின்றனர். கணவன் இறந்த பிறகு குழந்தை பெற்றெடுத்த தங்கத்தின் குழந்தைக்கு தகப்பன் செல்வம் என்று நாக்கில் நரம்பில்லாமல் குற்றம் சுமத்துகின்றனர். குடும்பம் மிக வறுமையில் வாடுகிறது.

செல்வத்தின் நிலைமை புரியாமல் அவனையே எண்ணிக் கொண்டிருக்கும் மாலதியின் மனதில் விஷத்தை விதைக்கிறான் அயோக்கியன் திருமலை. செல்வம் மாலதியை மறந்து அவன் சித்தி தங்கத்துடன் குடித்தனம் நடத்துவதாகவும், அவர்களுக்கு ஒரு பெண் குழந்தை கூட பிறந்திருப்பதாகவும், ஊரார் அதைப் பார்த்து கைகொட்டிச் சிரிப்பதாகவும் திருமலையும், விஜயாவும் மாலதியிடம் கூறுகின்றனர். நம்ப மறுக்கும் மாலதி தானே நேரில் சென்று உண்மையை தெரிந்து வருவதாக செல்வத்தின் வீட்டிற்கு செல்கிறாள். விதி அங்குதான் விளையாடுகிறது. மாலதி செல்வத்தின் வீட்டினுள் நுழைய அப்போது செல்வம் கண்களில் விழுத்த தூசியை தங்கம் வாயால் ஊத, அதைக் கண்ட மாலதி செல்வமும், தங்கமும் காமக் களியாட்டத்தில் ஈடுபட்டிருப்பதாக தவறாக முடிவு செய்து விடுகிறாள். ஊராரும், தன் தாயும், திருமலையும் சொன்னது சரிதான் என்று நம்பியும் விடுகிறாள். செல்வத்தையும், தங்கத்தையும் தாறுமாறாகத் திட்டி விடுகிறாள். தன் சித்தியை தங்கம் திட்டுவதைப் பொறுக்க முடியாத செல்வம் மாலதியை அடித்து விடுகிறான். மாலதி அழுதபடியே சென்று விடுகிறாள். சித்தி தங்கமோ செல்வத்திடம் "மாலதி உன் மேல் உயிரையே வைத்திருக்கிறாள். அந்த அன்பினால்தான் அப்படிப் பேசி விட்டாள். நீ மாலதியிடம் சென்று மன்னிப்பு கேட்டு உண்மை நிலையை அவளுக்கு உணர்த்து. நாம் குற்றமற்றவர்கள் என்று அவளிடம் விவரமாக எடுத்துச் சொல். அவள் உணர்ந்தால் சரி. இல்லையென்றால் நீ, நான், என் குழந்தை மூவரும் இந்த உலகத்தை விட்டே சென்று விடலாம்" என்று உறுதியாகக் கூறி விடுகிறாள்.

தங்கம் குழப்பமாய் இருக்கும் சூழலைப் பயன்படுத்திக் கொண்டு தங்கத்தைத் தனக்குத் திருமணம் செய்துதரும்படி விஜயாவிடம் கேட்கிறான் திருமலை. தன் அண்ணன் பையன்தான் திருமலை என்று நினைத்துக் கொண்டிருக்கும் விஜயா முறைப் பையனான அவனுக்கே மாலதியை மணமுடித்து வைக்க சம்மதம் அளித்து திருமணத்திற்கும் ஏற்பாடு செய்கிறாள். மாலதியிடமும் இது பற்றிக் கூறுகிறாள். மாலதி செய்வதறியாது ஊமையாய் நிற்கிறாள்.

திருமண பொருட்கள் வாங்க திருமலையும், விஜயாவும் வெளியே சென்றிருக்கும் நேரம் செல்வம் மாலதியை அவள் வீட்டில் சந்தித்து அவளிடம் உண்மை நிலைகளை தெரியப்படுத்துகிறான். 'தன் சித்தி அன்பே உருவான தெய்வம்... அவளும், தானும் களங்கமற்றவர்கள்... சித்திக்கு தன் வயதான தகப்பனால்தான் குழந்தை பிறந்தது... ஊர் அதை மாற்றி பேசியது'... என்று கண்ணீருடன் கூறுகிறான். தான் மாலதி மேல் கொண்ட காதலை மறக்கவில்லையென்றும், ஏழ்மை நிலைமையின் காரணமாக தான் காதலை புறக்கணித்ததையும் கூறுகிறான். மாலதி உண்மையை உணர்ந்து கொள்கிறாள். சித்தியின் அன்பையும் புரிந்து கொள்கிறாள்.

மாலதிக்கும், திருமலைக்கும் திருமணம் நடக்க இருக்கும் நேரம் மாலதி அதுவரை பொறுமையாய் இருந்து விட்டு தன் தோழிகள் உதவியுடன் தாலி கட்டும் சமயத்தில் வீட்டை விட்டு வெளியேறி செல்வத்தை சந்தித்து சித்தி முன்னிலையில் கோவிலில் செல்வத்தை திருமணமும் செய்து கொள்கிறாள். அங்கே கல்யாணத்தில் மணப்பெண் மாலதி ஓடிவிட்டதாக செய்தி பரவ, அதிர்ந்து நிற்கும் விஜயா தன் மகள் மாலதியைத் தேடி கோவிலுக்கு ஓடி வருகிறாள். அங்கே செல்வத்தின் மனைவியாக மாலதியைப் பார்த்து அதிர்கிறாள், இனி மாலதி தனக்கு மகள் இல்லை என்று கூறி தன் சொத்தில் ஒரு சிறு பங்கு கூட இனி அவளுக்கில்லை என்று கோபமாகக் கத்தி, அவளை அறைந்துவிட்டு வெளியேறி, மீண்டும் திருமண மண்டபத்திற்கு சென்று தன் குடும்ப நண்பர் ஒருவரின் பெண்ணான ரீட்டாவை அதே முகூர்த்தத்தில் திருமலைக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்து ரீட்டாவின் சம்மதத்தைக் கேட்கிறாள். ரீட்டாவும் தன் சுதந்திரத்திற்கு யாரும் தடை செய்யாத பட்சத்தில் அந்த திருமணத்திற்கு தயார் என்று சம்மதம் தெரிவிக்கிறாள். ரீட்டாவை தன் மகளாக தத்து எடுத்துக் கொள்வதாகவும், இனி சொத்துக்கள் எல்லாம் ரீட்டாவுக்கே சேரும் என்றும், மாலதி இனி தனக்கு மகளே அல்ல... ரீட்டாதான் இனி தன் மகள் என்றும் வாக்களித்து அவசரப்பட்டு அந்தத் திருமணத்தை நடத்தி வைக்கிறாள் விஜயா. கல்யாணம் நின்று போய் தன் மானம் காற்றில் பறந்து விடக்க கூடாது என்று விஜயா கோபத்தில் அந்த முடிவெடுக்கிறாள்.

மாலதி, செல்வம் திருமணம் முடிந்து சித்தி மற்றும் குழந்தையுடன் சந்தோஷமாகவே வாழ்கின்றனர். வேலை கிடைக்காததால் செல்வம் 'நோ வேகன்ஸி' போர்டு எழுதி அதை விற்று காசு சம்பாதிக்கிறான். மாலதி அவனுக்குத் தெரியாமல் போஸ்ட் ஆபிஸ் சென்று அங்கு வரும் படிக்கத் தெரியாத மக்களுக்கு கடிதம் எழுதித் தந்து, மணிஆர்டர் பாரம் நிரப்பித் தந்து அவளும் காசு சம்பாதிக்கிறாள். இதன் இடையில் விஜயாவின் முன்னாள் கணக்கப்பிள்ளை மூலமாக செல்வத்திற்கு ஒரு ஆபிசில் நல்ல வேலை ஒன்று கிடைக்கிறது. ஆபிசில் பொறுப்பாகப் பணியாற்றும் செல்வம் நல்ல நிலையை அடைகிறான். குடும்பம் மகிழ்ச்சியுடன் வாழ்கிறது. ஏழ்மை மறைகிறது. சித்தியும், மாலதியும் ரொம்ப அன்னியோன்யமாக இருக்கின்றனர். செல்வத்திற்கு ஆண் குழந்தையும் பிறக்கிறது.

ரீட்டாவைத் தத்தெடுத்த விஜயா மிகுந்த கஷ்டங்களுக்கு உள்ளாகிறாள். ரீட்டாவும், திருமலையும் நிறைய கடன் வாங்கி மனம் போன போக்கில் செலவு செய்து கூத்தடிக்கின்றனர். திருமலை ரீட்டாவின் தலையாட்டி பொம்மை ஆகிறான். விஜயாவின் சொத்து முழுதும் காலியாகிறது. வீடு கூட ஏலத்திற்கு வந்து விடுகிறது.
விஜயாவை மிகுந்த கொடுமைப் படுத்துகிறாள் ரீட்டா. மிகுந்த மனக் கவலையினால் விஜயா படுத்த படுக்கை ஆகிறாள். ரீட்டாவை ஏன் மகளாகத் தத்தேடுத்தோம் என்று தன்னே நொந்து கொள்கிறாள். அவளுக்குத் தண்ணீர் தரக் கூட யாரும் கிடையாது. விஜயா இப்போது தன் மகள் மாலதியை எண்ணி அழுகிறாள்.  

விஜயாவின் இறந்து போன கணவர் அதாவது மாலதியின் அப்பா விஜயாவிற்குத் தெரியாமலேயே மாலதி பெயரில் அந்த வீட்டை  உயில் எழுதி வைத்து விட்டு இறந்திருப்பார். அந்த உயில் கணக்கப் பிள்ளை மூலமாக செல்வத்திற்கும், மாலதிக்கும் வந்து சேர்கிறது. அந்த உயிலில் உள்ளபடி வீடு மாலதியின் பேரில் இருப்பதால் வீடு ஏலத்தில் போகாமல் இருக்க கோர்ட்டுக்கு போக முடிவு செய்கின்றான் செல்வம். தன் தாய் படுத்த படுக்கையாய் கிடப்பதை, திருமலையும், ரீட்டாவும் அவளைக் கொடுமைப் படுத்துவதைக் கேள்விப்பட்ட மாலதி மிகுந்த துயருறுகிறாள். தாயைப் பார்க்கத் துடிக்கிறாள்.

மாமனார் வீட்டில் சொத்து கரைந்து விட்டதாக் கூறி லஷ்மியும் தன் கணவனுடன் செல்வத்தின் வீட்டிற்கே வந்து சேர்கிறாள். அவளுக்கும் அந்த உயில் விஷயம் தெரிந்து விடுகிறது. தன் குணத்தில் கொஞ்சமும் மாறாத லஷ்மி அந்த உயில் இருந்தால் மாலதி தன்னை மதிக்க மாட்டாள் என்று கேட்பாரின் பேச்சைக் கேட்டு அந்த உயிலைத் தேடிக் கண்டுபிடித்து அழிக்கும் முயற்சிக்குத் தயாராகிறாள்.

இதற்கிடையில் அந்த உயிலை பற்றிக் கேள்விப்பட்ட திருமலையும், ரீட்டாவும் மிகுந்த கோபமடைகின்றனர். வீட்டின் ஏலத்தின் மூலம் ஏலம் விட்டது போக மீதமுள்ள பணம் தங்களுக்கு பணம் கிடைக்கும் என்று நம்பியிருந்த அவர்களின் கனவு வீடு மாலதி பெயரில் உயில் எழுதப் பட்டிருப்பதால் தகர்கிறது. இதனால் பழி வாங்க அந்த உயிலை செல்வம் வீட்டில் இருந்து கடத்தி விட வேண்டும் என்று திருமலையும், ரீட்டாவும் திட்டம் போடுகின்றனர். டூப்ளிகேட் நகலை ரிஜிஸ்தர் ஆபீஸிலிருந்து தான் கடத்தி வருவதாயும், திருமலை நிஜ உயிலை செல்வம் வீட்டிலிருந்து கடத்தி வர வேண்டுமென்றும் முடிவாகிறது. உயிலைத் திருட திருமலை செல்வம் வீட்டிற்கு செல்ல, அங்கே பீரோவில் இருக்கும் உயிலை யாருக்கும் தெரியாமல் லஷ்மி எடுக்க, அதைப் பார்த்த திருமலை லஷ்மியிடமிருந்து அந்த உயிலைப் பறித்து ஓடுகிறான். லஷ்மி பயந்து சப்தம் போட, அங்கு ஓடி வரும் செல்வம் திருமலையுடன் உயிலைக் கைப்பற்ற சண்டையிடுகிறான். சண்டையில் அடிபட்டு கீழே விழும் திருமலை தன் கைத்துப்பாகியை எடுத்து செல்வத்தை சுட, துப்பாகிக் குண்டைத் தன் மேல் வாங்கிக் கொண்டு செல்வத்தைக் காக்கிறாள் சித்தி என்ற அந்த அன்புத்தங்கம்.  

சுட்ட குற்றத்திற்காக கைதாகிறான் திருமலை. ஆபிசில் டூப்ளிகேட் நகலை திருடப் போன ரீட்டாவும் போலீசிடம் மாட்டிக் கொள்கிறாள். இருவரும் கம்பி எண்ணுகின்றனர். குண்டடிபட்டு படுக்கையில் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கிறாள் தங்கம். தன் மகளைக் காண அங்கு வரும் விஜயா தன் தவறுகளை உணர்ந்து சித்தி தங்கத்திடமும், தன் மகள் விஜயாவிடமும் மன்னிப்பு கோருகிறாள். தான் யாரையுமே குற்றவாளியாக நினைக்கவில்லை என்று கூறி தன் உயிரை விடுகிறாள் சித்தி தங்கம். எல்லோரும் அவளை இழந்து கதறுகின்றனர். குறிப்பாக செல்வம். தன் அன்பால் அனைவர் மனதிலும் குடிகொண்ட அந்த நன்மங்கை அனைவர் உள்ளங்களிலும் தெய்வமாக இன்னும் குடி கொண்டு வாழ்கிறாள்.

அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்!

இனி செல்வமாக நடிகர் திலகம் .

'அன்பு' தொடர் 6 ('சிவாஜி என்ற மாநடிகர்') Anbu1

நடிகர் திலகத்தின் ஆறாவது படம். அருமையான பாத்திரம். தன் சித்தியின் அன்பில் கட்டுண்டு, அவள் மேல் தன் உயிரை வைத்திருக்கும் அற்புத பாத்திரம். பத்மினியைக் காதலிக்கவும் நல்ல வாய்ப்பு.  சும்மா நடிகர் திலகத்திடம் இளமை கொப்பளிக்கிறது. முதல் படமான 'பராசக்தி' யில் சற்றே ஒல்லியாகத் தெரிந்தவர் இந்த 'அன்பு' திரைப்படத்தில் நல்ல வாளிப்பாக, மிக்க அழகாக, கல்லூரி மாணவன் போல தோற்றமளிக்கிறார். நெற்றியில் புரண்டு விழும் அழகான முடிக் கற்றைகள் அவரை இன்னும் அழகாகக் காட்டுகின்றன. சித்தி மேல் வைத்துள்ள பாசம், அப்பாவின் மேல் கொண்ட அன்பு, அக்கா லஷ்மி மேல் வேண்டா வெறுப்பாக பாசம் என்று பிய்த்து உதறுகிறார்.

காலேஜுக்கு சைக்கிளில் சுறுசுறுப்பாக செல்லும் வேகம், பத்மினியுடன் செல்லமாக மோதல்கள், கல்லூரி பிக்னிக்கில் நண்பர் குழாமுடன் படகில் கூலிங் கிளாஸ் அணிந்து கொண்டு (அப்பா! என்ன ஒரு அழகு நடிகர் திலகம்!) பத்மினி பட்டாளத்திடம் ஆடவர் பெருமையை பாடலில் உரைத்திடும் அழகு (ஆடவரே நாட்டினிலே - சுரதா), பத்மினி படகில் இருந்து ஆற்றில் விழுந்தவுடன் உடனே குதித்து காப்பாற்றும் அழகு, பத்மினியுடன் மென்மையாக ஆரம்பிக்கும் காதல் படலம், பத்மினி வீட்டில் பின்னிருந்து பியானோ இசைத்தபடி "என்ன என்ன இன்பமே... வாழ்விலே எந்நாளும்'...பாடும் அற்புத ஸ்டைல், கல்லூரி 'ஒதெல்லோ' டிராமாவில் ஒதெல்லோவாக கர்ஜிக்கும் சிங்கமாக பட்டை கிளப்பும் பாங்கு, (மனிதர் ஆறாவது படத்திலேயே என்ன ஒரு கம்பீரம் காட்டுகிறார்! ஒதேல்லோவுக்கு தன் மனைவி டெஸ்டிமோனா மீது எழும் சந்தேகங்களை முகத்தில் அப்படியே பிரதிபலிக்கும் அற்புதம், அவளைக் கொல்வதா வேண்டாமா என்ற குழப்ப சிந்தனை, அவளை முத்தமிட எத்தனிக்கும் அழகு, இறுதியில் அவளை சந்தேகப் பேய் என்னும் நோயால் கைகளால் கழுத்தை நெரித்து கொலை செய்யும் கொடுரம் என்று அசல் ஒத்தேல்லோவைக் கண்முன் கொண்டு வந்து நிறுத்துகிறார்)

தந்தை இறந்தவுடன் கதறல், ஏழ்மை நிலையில் வேலை தேடி அலையும் பரிதாபம், வேலை கிடைக்காமல் 'நோ வேகன்ஸி' போர்ட் எழுதி பாடி ஆடியபடியே விற்றுத் தீர்க்கும் சாமர்த்தியம், பத்மினியை விட்டு ஒதுங்கும் போதெல்லாம் காதலை நினைத்து சோகமுற்று அதை மறைத்து வைக்கும் நயம், சித்தி குழந்தை மேல் அண்ணன் என்ற பாசம் காட்டும் உணர்வு, பத்மினி தன்னை சித்தியுடன் தொடர்பு படுத்தி பேசியவுடன் காட்டும் ஆங்கார ஆத்திர உணர்ச்சிகள், பின் சித்தியின் சொல்லுக்கு அடங்கி மீண்டும் பத்மினி வீடு சென்று தன் நிலையை அழுதபடி விளக்கும் அற்புதம், (இந்த இடத்தில் நடிப்பில் கொடி கட்டி விசேஷமாகப் பறப்பார்) பத்மினியை மணந்து அன்னியோன்யமாக குடும்பம் நடத்தும் அழகு, ஆபிசில் வேலை கிடைத்தவுடன் மறுபடி உடையிலும், நடையிலும் காட்டும் பணக்காரக் களை, தனக்கு மகன் பிறந்தான் என்று கேட்டவுடன் பூரிக்கும் குதூகலம், தங்கை தன் வீட்டிற்கே கணவனுடன் வந்து 'டேரா' போடப் போகிறாள் என்று தெரிந்து செய்யும் இயல்பான நையாண்டி நக்கல், உயிலைக் காப்பற்ற பாலையாவுடன் போடும் உணர்வுபூர்வமான சண்டை, சித்தி இறந்தவுடன் காட்டும் சோகம் என்று படம் முழுக்க தன் தனி முத்திரையை ஆழமாகப் பதித்து விடுகிறார் நடிகர் திலகம். அன்பால் சித்தி இப்படத்தில் எல்லோரையும் கட்டிப் போடுகிறார் என்றால் நடிகர் திலகம் தன் இளமை துள்ளும் நடிப்பால் நம் அனைவரையும் கட்டிப் போடுகிறார்.

மற்ற கலைஞர்கள் .

விஜயாவாக எம்.ருஷ்யேந்திர மணி அருமையாக நடித்துள்ளார். பணக்கார கர்வம், அகந்தை, மகள் மீது பாசம், மகள் தன்னை மீறி வேறு திருமணம் செய்து கொண்டதற்கு கோபம், ரீட்டாவை தத்தெடுத்து அவள் கொடுமைகளைத் தாங்க மாட்டாமல் அவளிடம் கொண்ட ஆவேசம் என்று அமர்க்களமாகச் செய்திருக்கிறார்.

மாலதியாக நாட்டியப் பேரொளி பத்மினி. நடிகர் திலகத்திற்கு ஜோடி. அழகான ஜோடிப் பொருத்தம். காதலனை சித்தியுடன் கண்டு கொதிப்படையும் போது ஆவேசமான நடிப்பு. காதலன் தன் நிலையை எடுத்துச் சொன்னவுடன் அவன் மேல் கனிவு, இரக்கம் என்று தன் பங்கிற்கு குறைவில்லாமல் செய்திருக்கிறார். பாலையாவை அலட்சியப் படுத்தும் போதும் அமர்களப் படுத்துகிறார்.

வில்லனாக பாலையா. ஆர்ப்பாட்டம் பண்ணாமல் ஆ...ஊ.. . என்று கத்தாமல் அமைதியான நரி போன்ற தந்திர வில்லத்தனத்தில் கலக்க இவருக்கு சொல்லித் தர வேண்டுமா என்ன? அருமை.

வில்லியாக பத்மினியின் சொந்த அக்காள் லலிதா (திருவாங்கூர் கேரளா சகோதரி) ஜொலிக்கிறார்.

மற்ற பங்களிப்பாளர்கள் அனைவரும் தங்கள் பாத்திரத்தை அறிந்து நன்றாகச் செய்திருக்கிறார்கள். 'டணால்' தங்கவேலுவும், 'பிரண்ட்' ராமசாமியும் சில காட்சிகளில் தலை நீட்டி விட்டு பின் காணாமல் போய் விடுகிறார்கள்.

நமக்குப் பரிச்சயமான நகைச்சுவை நடிகர் மாலியும் இந்தப் படத்தில் லஷ்மியின் கணவராக வருகிறார். அதே குண்டு. அதே திருட்டு முழி. ஆனால் இளமையாக இருக்கிறார். அடையாளமே தெரியவில்லை.

இசை டி.ஆர். பாப்பா. அற்புதமான மனதை மயக்கும் பாடல்கள். நடிகர் திலகம் வேலை கிடைக்காமல் பாடும் 'ஒண்ணும் புரியவில்லை தம்பி' மற்றும் 'நோ வேகன்ஸி' போர்டு விற்றபடியே பாடும் 'ஐயா முதலாளி வாங்க' (பாடல்: கா.மு.ஷெரீப்) பாடல்கள் மிகப் பிரபலமானவை.            

விந்தனின் வசனங்கள் அருமை. இயக்கமும் அற்புதம்.

இனி 'அன்பு' படத்தின் சில விசேஷ செய்திகள்

'அன்பு' தொடர் 6 ('சிவாஜி என்ற மாநடிகர்') GEDC4115a

1. 'நடேஷ் ஆர்ட் பிக்சர்ஸ்' நடிகர் திலகத்தை வைத்து தயாரித்த முதல் படம். தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் எம்.நடேசன் அவர்கள்.

2. முதன் முதலில் தமிழ்த் திரைப்படத்தில் தனியாக 'ஒதெல்லோ' என்ற ஓரங்க நாடகக் காட்சி இடம் பெற்ற திரைப்படம். ஒதெல்லோவாக நடிகர் திலகமும், டெஸ்டிமோனாவாக பத்மினியும் நடித்திருந்தனர். (பின் வெளிவந்த 'ரத்தத் திலகம்' திரைப்படத்தில் மீண்டும் ஒரு 'ஒதெல்லோ' ஓரங்க நாடகக் காட்சி இடம் பெற்றது ஆனால் ஒரு வித்தியாசம் இக்காட்சி ஆங்கிலத்தில் இடம் பெற்றது. இதில் டெஸ்டிமோனாவாக நடித்தவர் நடிகையர் திலகம் சாவித்திரி அவர்கள்.  ஒதெல்லோ?!  அதே நடிகர் திலகம்தான். ஆனால் ஆங்கிலத்தில் இருவருக்கும் டப்பிங் குரல் கொடுக்கப்பட்டது)

3. நடிகர் திலகத்துடன் பத்மினி இணைந்த இரண்டாவது படம்.

4. அன்றைய ரசிகர்களின் கனவுக்கன்னி டி.ஆர். ராஜகுமாரி, டி.எஸ்.பாலையா ஆகியோர் முதன் முதலாக நடிகர் திலகத்துடன் இணைந்து பணியாற்றிய படம் இது.

5. பின்னாட்களில் எவ்வளவோ இசைக்கருவிகளை கையாண்டு நடித்த நடிகர் திலகம் முதன் முதலாக இசைக் கருவி (பியானோ) வாசித்து நடிப்பது போன்ற காட்சி அமைந்த முதல் படம்.

6. நடிகர் திலகத்தின் இந்தப் படத்திற்கு இசை அமைத்தவர் டி.ஆர்.பாப்பா அவர்கள்.

7. எம்.ருஷ்யேந்திர மணி என்ற அந்தக் கால நடிகையின் அற்புத நடிப்பைக் கொண்ட படம் இது. ('விஜயா' பாத்திரத்தில் வயதான வேடத்தில் நடிப்பவர்). இவர் கிட்டத் தட்ட கண்ணாம்பா போலக் காட்சியளிப்பார்.

8. அன்றைய ரசிகர்களின் கனவுக் கன்னி டி.ஆர். ராஜகுமாரி ('சந்திரலேகா' புகழ் ) இந்தப் படத்தில் சித்தியாக வேடமிட்டது குறிப்பிடத் தக்கது. ராஜகுமாரிக்கு அன்றைக்கிருந்த செல்வாக்கிற்கும், அழகிற்கும் அவர் இப்படம் வந்த தருணத்தில் கதாநாயகியாகக் கூட நடித்திருக்க முடியும். ஆனால் பாத்திரம் மிகப் பொருத்தமாக இருந்ததால் இயக்குனர் இவர் நடித்தால்தான் சரிப்படும் என்று சொல்லி விட்டாராம். ஒரு கதாநாயகிக்கு தரக் கூடிய தொகையை விட கூடுதல் தொகை கொடுத்து ராஜகுமாரியை சித்தி கதாபாத்திரத்திற்கு ஒப்பந்தம் செய்தார்களாம்.

இந்த  டி.ஆர். ராஜகுமாரி பிரபல தமிழ்ப்பட இயக்குனர் டி.ஆர். ராமண்ணாவின் சகோதரி.

9. வேலையில்லாத் திண்டாட்டம் அந்தக் காலத்திலேயே இருந்தது என்பதை இந்தப் படம் ஆணித்தரமாகப் பறைசாற்றுகிறது. அதுவும்  'நோ வேகன்ஸி' போர்ட் விற்றே வேலயில்லாத் திண்டாட்டத்தைக் காண்பித்த இயக்குனருக்கு ஒரு சபாஷ்.



10. நடிகர் திலகமும், பத்மினியும் பாடுவதாக வரும் 'என்ன என்ன இன்பமே' எவராலும் மறக்க முடியாத இனிய பாடல். இலங்கை வானொலியில் சாதனை படைத்த பாடல்.

11.1953 ஜுலை 24 வெள்ளியன்று சென்னை தவிர தென்னகமெங்கும் வெளியான இக்காவியம் சென்னையில் மட்டும் ஆகஸ்ட் 7 வெள்ளியன்று வெளியானது] (நன்றி பம்மல் சுவாமிநாதன் அவர்களே)

12. அன்பு ஒன்றே பிரதானமானது என்பதை ஆணித்தரமாக வலியுறுத்தும் அற்புதமான கதைப் போக்கு, அதற்கேற்ற வசனங்கள், நடிக நடிகையரின் நடிப்பு.

மொத்தத்தில் அன்பு மனம் கொண்டவர்கள் அதிகம் விரும்பக் கூடிய வகையில் ரசிக்கத் தக்க ஒரு நல்ல படம்.

இக்கட்டுரைத் தொடர் முழுதும் என் சொந்தப் படைப்பே .

வழக்கம் போல் தங்கள் கருத்துக்களை ஆவலுடன் எதிர்நோக்குகிறேன்.

(இங்கு பதிவிடப் பட்டிருக்கும் விளம்பர நிழற்படங்களை தந்து உதவிய அருமை நண்பர் திரு.பம்மல் சுவாமிநாதன் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி)

அன்புடன்

வாசுதேவன்


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Thu Dec 12, 2013 3:57 pm

படம் பார்த்தது போன்ற உணர்வு உங்கள் தொடர்களில் ....  'அன்பு' தொடர் 6 ('சிவாஜி என்ற மாநடிகர்') 3838410834  'அன்பு' தொடர் 6 ('சிவாஜி என்ற மாநடிகர்') 103459460  சூப்பருங்க 

நிறைய மற்றும் ஆச்சரியமான தகவல் படிக்க பெற்றேன் ..மிக்க நன்றி .... நன்றி  நன்றி  நன்றி  நன்றி 

மாயவரம் சுந்தரம் தியேட்டர் இப்போ இயங்க வில்லை என்று நினைக்கின்றேன் . மிக பழமையான தியேட்டர் என்று இதன் மூலம் தெரிந்து கொண்டேன் .


சிறப்பான தொடர் தரும் உங்களுக்கும் விளம்பர நிழற்படங்களை தந்து உதவிய அருமை நண்பர் திரு.பம்மல் சுவாமிநாதன் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி ! நன்றி !! நன்றி !!!  நன்றி  நன்றி  நன்றி  நன்றி  நன்றி 

பாடல் மட்டும்தான் பார்க்க வேண்டும் ....



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


jayaravi
jayaravi
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 267
இணைந்தது : 28/11/2013

Postjayaravi Thu Dec 12, 2013 8:03 pm

Dear Vasu - மிகவும் ரசித்தேன் - அன்பைவிட உங்கள் நடையின் எளிமையை , அதற்குள் அடங்கி இருக்கும் பக்தியை , அயராத உழைப்பை . உங்கள் ஓவ்வரு பதிவும் உங்கள் முந்தய பதிவுடன் போட்டி போடுகின்றன - உங்கள் உழைப்பின் மூலம் எல்லோருடைய 'அன்பையும்" பெறுகிறீர்கள் என்றால் அது மிகை ஆகாது - அன்புடன் ரவி
 'அன்பு' தொடர் 6 ('சிவாஜி என்ற மாநடிகர்') 3838410834 'அன்பு' தொடர் 6 ('சிவாஜி என்ற மாநடிகர்') 103459460 'அன்பு' தொடர் 6 ('சிவாஜி என்ற மாநடிகர்') 1571444738 'அன்பு' தொடர் 6 ('சிவாஜி என்ற மாநடிகர்') 1571444738 'அன்பு' தொடர் 6 ('சிவாஜி என்ற மாநடிகர்') 1571444738 

veeyaar
veeyaar
பண்பாளர்

பதிவுகள் : 213
இணைந்தது : 14/11/2013

Postveeyaar Thu Dec 12, 2013 10:04 pm

அன்பின் சிறப்பை அன்பால் உணர்த்திய அன்பு நண்பருக்கு என் அன்பான நன்றிகள், பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்.
ராகவேந்திரன்

vasudevan31355
vasudevan31355
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 569
இணைந்தது : 11/11/2013

Postvasudevan31355 Fri Dec 13, 2013 8:59 pm

டியர் பாலாஜி சார், வீயார் சார், ரவி சார்,

'அன்பை'ப் பாராட்டிய தங்கள் மூவருக்கும் என் அன்பான நன்றிகள்.

avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Sat Dec 14, 2013 6:48 am

எண்ண எண்ண இன்பமே, இப்படாலை எண்ணாமலேயே இன்பம் தரும், அப்படி ஒரு அற்புதத்தை தனக்கே உரிமையாக்கிக் கொண்ட உன்னத கீதம். பல முறை கேட்டாலும் பரவசத்தில் பறக்க விடும் பண்பான பாடல்.
எனது சிறு வயதில் 78RPM வேக இசைத்தட்டில் சாவியை சுற்றி சுற்றி (கை வலிக்க) இப்படாலை ரசித்து ருசித்திருக்கிறேன்.
நடிப்பும் நளினமும் இணைந்தே கலந்த இப்படி ஒரு இனிய பாடலை மீண்டும் கேட்க வாய்ப்பளித்த வாசு தேவன் ஐயா உங்களுக்கு ஆயிரம் நன்றி ஐயா.


vasudevan31355
vasudevan31355
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 569
இணைந்தது : 11/11/2013

Postvasudevan31355 Sat Dec 14, 2013 2:27 pm

என்ன என்ன இன்பமே!

மாணிக்கம் நடேசன் அவர்களின்
ரசனையை எண்ண எண்ண இன்பமே!

நன்றிக்கு என் நன்றிகள் அய்யா.

vasudevan31355
vasudevan31355
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 569
இணைந்தது : 11/11/2013

Postvasudevan31355 Sun Dec 15, 2013 7:31 pm

'அன்பு' படத்தில் வேலையில்லாமல் திண்டாடும் நடிகர் திலகம் வறுமையின் கொடுமையை நினைத்து பாடும் பாடல்

'ஒண்ணும் புரியவில்லை தம்பி'



vasudevan31355
vasudevan31355
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 569
இணைந்தது : 11/11/2013

Postvasudevan31355 Tue Dec 17, 2013 11:22 am

'அன்பு' படத்திலிருந்து சில நிழற்படங்கள்

'அன்பு' தொடர் 6 ('சிவாஜி என்ற மாநடிகர்') 1-45

'அன்பு' தொடர் 6 ('சிவாஜி என்ற மாநடிகர்') 16-3

'அன்பு' தொடர் 6 ('சிவாஜி என்ற மாநடிகர்') 15-4

'அன்பு' தொடர் 6 ('சிவாஜி என்ற மாநடிகர்') 12-5

'அன்பு' தொடர் 6 ('சிவாஜி என்ற மாநடிகர்') 14-5

vasudevan31355
vasudevan31355
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 569
இணைந்தது : 11/11/2013

Postvasudevan31355 Thu Dec 19, 2013 9:43 am

(இங்கு பதிவிடப் பட்டிருக்கும் விளம்பர நிழற்படங்களை தந்து உதவிய அருமை நண்பர் திரு.பம்மல் சுவாமிநாதன் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி)

'அன்பு' தொடர் 6 ('சிவாஜி என்ற மாநடிகர்') GEDC4118a

'அன்பு' தொடர் 6 ('சிவாஜி என்ற மாநடிகர்') GEDC4114a

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக