ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

'சிவாஜி என்ற மாநடிகர்' 'மனோகரா' தொடர்-10 பாகம் 1

+3
veeyaar
பாலாஜி
vasudevan31355
7 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

'சிவாஜி என்ற மாநடிகர்' 'மனோகரா' தொடர்-10 பாகம் 1 - Page 2 Empty 'சிவாஜி என்ற மாநடிகர்' 'மனோகரா' தொடர்-10 பாகம் 1

Post by vasudevan31355 Tue Jan 21, 2014 2:22 pm

First topic message reminder :

'சிவாஜி என்ற மாநடிகர்'

தொடர்-10

பாகம் 1

'மனோகரா'

'சிவாஜி என்ற மாநடிகர்' 'மனோகரா' தொடர்-10 பாகம் 1 - Page 2 I38518_vlcsnap207565

'வெளி வந்த நாள்: 03.03.1954

கதை - ராவ் பஹதூர் பம்மல் சம்பந்த முதலியார்

வசனம் - மு.கருணாநிதி

ஒளிப்பதிவு - பி.ராமசாமி, ஜி.கே.ராமு

படத் தொகுப்பு - எம்.ஏ. திருமுகம்

நடன அமைப்பு - ஏ.கே. சோப்ரா, ஹீராலால்

இசை - எஸ்.வி.வெங்கட்ராமன் மற்றும் டி.ஆர்.ராமநாதன்

தயாரிப்பு - மனோகர் பிக்சர்ஸ்

இயக்கம் - எல்.வி.பிரசாத்

நடிக நடிகையர் -'நடிகர் திலகம்'சிவாஜி கணேசன்  பசுபலேட்டி கண்ணாம்பா, கிரிஜா, எஸ்.ஏ. நடராஜன், டி.ஆர்.ராஜகுமாரி, எஸ்.எஸ்.ராஜேந்திரன், காகா ராதாகிருஷ்ணன் மற்றும் பலர் .


கதை:

'சிவாஜி என்ற மாநடிகர்' 'மனோகரா' தொடர்-10 பாகம் 1 - Page 2 I33163_vlcsnap-2012-10-19-08h20m18s188

சோழ பரம்பரையின் வீர மன்னன் புருஷோத்தமன். அவன் தர்மபத்தினி பட்டத்தரசி மகாராணி பத்மாவதி. குணவதி. இவர்களுக்கு மனோகரன் என்ற அழகான இளவரசன். குழந்தைப் பருவத்தினன். பத்மாவதியின் தந்தை அதிவீரசேனரை பாண்டிய மன்னன் முத்து விசயன் போரில் கொன்று விடுகிறான். சோழ குலத்தாரின் இரத்தின சிம்மாசனத்தையும் கைப்பற்றி எடுத்துச் செல்கிறான். இறப்பதற்கு முன் பத்மாவதியின் தந்தை தன்னிடமிருந்த போர் வாளை தன் சேவகன் ஷைத்ரிகன் கேசரிவர்மனிடம் கொடுத்து அதைத் தன் மகள் பத்மாவதியிடம் பத்திரமாக சேர்க்கச் சொல்கிறான். தன்னைக் கொன்ற பாண்டியன் முத்து விசயனை தன் பேரன் அதாவது பத்மாவதியின் மகன் மனோகரன்தான் கொன்று பழிதீர்த்து அவனே இழந்த இரத்தின சிம்மாசனத்தையும் மீட்டு வரவேண்டும் என்பது அவன் மரணமெய்துமுன் மனதில் கொண்ட ஆசை. கேசரிவர்மன் தன் மனைவி வசந்தசேனையுடன் பத்மாவதியிடம் சென்று நடந்ததை இயம்புகிறான். மன்னன் புருஷோத்தமன் கேசரிவர்மனை தலைமை ஷைத்திரியனாக தன்னுடனேயே வைத்துக் கொள்கிறான். வசந்த சேனையை பத்மாவதி தேவியார் தன்னுடைய பணிப்பெண்ணாக நியமித்துக் கொள்கிறாள்.

வசந்தசேனை பெண்குலத்தின் இழிபிறவி. காமபோதை  கண்ணில் புரள காண்போரை கள் குடித்தவர் போல மதிமயங்கச் செய்யும் ஜாலக்காரி. பேராசையின் சொரூபி. நல்லது இன்னதென்றே அறியாதவள். தன் நாட்டியத்தாலும், ஒய்யார நடையினாலும், வேல்வீச்சு விழி வெட்டினாலும், மயக்கும் மோகனப் பேச்சினாலும் மன்னன் புருஷோத்தமனை மயக்குகிறாள். மன்னன் அவளுக்கு அடிமையாகிறான். பட்டத்து மகிஷியை பரிதவிக்க விட்டு பகட்டு மேனியாளின் மேனியழகில் கிறங்கிக் கிடக்கிறான். அவள் மடியிலேயே உறங்கிக் கிடக்கிறான்.

பத்மாவதி தன் வாழ்க்கை பட்டுப் போனதை எண்ணி மன்னனிடம் வாதிடுகிறாள். மன்னன் அவள் பேச்சைக் கேட்டானில்லை. மனமுடைந்த மகாராணி இனி மன்னனை சந்திப்பதில்லை என்று அவனிடமே சூளுரைக்கிறாள். மன்னனே மதி தெளிந்து வந்தாலொழிய இனி அவனுடன் சகவாசமில்லை என்று சத்தியம் செய்கிறாள். குழந்தை மனோகரனுடன் வனவாசம் போல அரண்மனையின் ஒரு பகுதியில் அழுகின்ற கண்ணீருடனே வாழ்கிறாள்.

'சிவாஜி என்ற மாநடிகர்' 'மனோகரா' தொடர்-10 பாகம் 1 - Page 2 I38516_vlcsnap229924

வசந்தசேனைக்கு இப்போது இடையூறு அவள் கணவன் கேசரிவர்மன். கொலையும் செய்வாள் பத்தினி என்பது தூக்குத் தூக்கியில் வரும் முதுமொழி அல்லவா! உண்மையாக்கினாள் அவளும். மன்னனின்  அருகில் பட்டத்து ராணியாய் அமர முடிவெடுத்த நயவஞ்சகி தன் கணவனை விஷம் வைத்துக் கொல்லத் துணிந்தாள். ஆனால் நடந்தது வேறு. கணவன் கேசரிவர்மன் உயிர்பிழைத்தான் வசந்த சேனை அறியாமலேயே. ஒரு துறவி அவனைக் காப்பாற்றி அவனுடனேயே வைத்துக் காத்தார். அவன் கதையைக் கேட்டு பரிதாபமடைந்தார். கேசரிவர்மன் தன் தர்மபத்தினியே தன்னைக் கொலை செய்ய   முயன்றாளே என்று ஆற்றொணாத் துயருற்று வெறிகொண்ட வேங்கை ஆனான்.

ஒண்ட வந்த பிடாரி வசந்தசேனை இப்போது பட்டத்து மகிஷியாகவே தன்னை நினைத்துக் கொண்டாள். மன்னனுக்கு அவள் சொல்லே வேதம். சொர்க்கமே அவள் பாதம். வசந்த சேனைக்கு ஒரு புத்தி சுவாதீனமில்லாத மகன். அவன் பெயர் வசந்தன். ஆனால் நல்லவன். தன் அண்ணன் மனோகரன் மீது அவனுக்கு கொள்ளைப் பிரியம். தன்னை பட்ட மகிஷியாகவும், தன் மகன் வசந்தனை இளவரசனாகவும் ஆக்கவே கனவு காணுகிறாள் சேனா. ஆதற்கு இடையூறாக இருக்கும் மகாராணி பத்மாவதியையும், இளவரசன் மனோகரனையும் ஒழித்துக் கட்ட சமயம் பார்த்துக் காத்திருக்கிறாள் அவள்.

பதிமூன்று வருடங்கள்  துறவியின் குகைக்குள்ளேயே பரிதவித்துக் கிடந்தான் கேசரிவர்மன். அவனுக்கு ஆதரவு தந்த துறவி ஓர் அரிய ஆராய்ச்சியை பல வருடங்கள் செய்து முடித்தார். மூலிகைகளைக் கொண்டு கேசரிவர்மனை அரூபமாக்கினார். ஆம்... கேசரிவர்மன் துறவியின் மாய பாதரட்சைகளை அணிந்தவுடன்  சில நிமிடங்கள் மற்றவர் கண்களுக்கு தெரிய மாட்டான். இது போதாதா அந்த மாயக்காரியைப் பழி வாங்க?... துறவியின் ஆசியுடன் வசந்தசேனையைப் பழிதீர்க்க சூளுரைத்துக் கிளம்பினான் கேசரிவர்மன்.

'சிவாஜி என்ற மாநடிகர்' 'மனோகரா' தொடர்-10 பாகம் 1 - Page 2 I38517_vlcsnap231310

புருஷோத்தமன் பெற்ற புண்ணிய புதல்வன், பத்மாவதி ஈன்றெடுத்த பச்சிளம் பாலகன் மனோகரன் இப்போது மனோகரமாய், சுந்தர வாலிபனாய், வீர புருஷனாய் வளர்ந்து நிற்கிறான். புருஷோத்தமன் வசந்தசேனையுடன் தன் வசமிழந்து வாழ்ந்து வருகிறான்.

எண்ணிலடங்கா துயரங்களுடன் தன் கண்மணி மனோகரனுடன் தனியே வாழ்ந்து வருகிறாள் பத்மாவதி. மந்திரி சத்யசீலரும், மனோகரனின் உயிர் நண்பன் ராஜப் பிரியனுமே மனோகரனுக்கும், பத்மாவதிக்கும் துணை. தன் தாயின் வாழ்வை சீர்குலைத்த குடிகேடி வசந்தசேனையின் பெயர் கேட்டாலே பொங்கும் எரிமலையாகி வெடிப்பான் மனோகரன். அப்போதெல்லாம் தன் கனிவான அன்பான பொறுமையான பேச்சால் அவனை சாந்தப்ப்படுத்துவாள் பத்மாவதி. அம்மாவின் பேச்சுக்குக் கட்டுப்பட வேண்டிய சூழ்நிலைக்கு ஆளாகி விடுவான் ஆணழகன் மனோகரன்.  அவன் நெருப்பாய்ப் பொங்கும் போதெல்லாம் நீராய் அவனைக் குளிர்விக்க முயற்சி செய்வாள் பத்மாவதி. அது மட்டுமல்ல. தன் பேச்சை மீறி கோபத்தில் மனோகரன் வசந்தசேனையை ஒன்றும் செய்து விடக் கூடாது, மகாராஜாவின் பங்கத்திற்கும் கேடு செய்து விடக் கூடாது என்று அவனிடம்  கட்டளையும் பிறப்பித்திருந்தாள் மகாராணி.

பழிதீர்க்க வரும் கேசரிவர்மன் ஒரு நாடகத்தை ஏற்பாடு செய்கிறான். போர்வாள் என்ற நாடகத்தை அரண்மனையில் உள்ள அனைவரையும் காண வைக்கிறான். அது நாடகமல்ல. உண்மை சம்பவம்தான். வசந்த சேனையின் சுயரூபங்களை அந்த நாடகத்தின் மூலம் அம்பலப்படுத்துகிறான் கேசரிவர்மன். நாடகத்தில் புருஷோத்தமன், பத்மாவதி, கேசரிவர்மன், வசந்தசேனை அனைத்துப் பாத்திரங்களும் உண்டு. ஆனால் கதாபாத்திரங்களின் பெயர் மாற்றத்தோடு. வசந்த சேனை தன் கணவனுக்கு விஷம் வைத்துக் கொள்ள முயல்வதையும் நாடகக் காட்சி விட்டு வைக்கவில்லை. நாடகத்தைக் காணும் வசந்தசேனை பதறுகிறாள். தன்னுடைய நடத்தையை அம்பலமாக்கும் நாடகத்தை பாதியிலேயே நிறுத்தச் சொல்லி ஆணையிடுகிறாள். தன் வாழ்க்கையை அப்படியே நாடகம் பிரதிபலிப்பதை கண்டு மகாராணி பத்மாவதி கண்ணீர் வடிக்கிறாள். மன்னன் புருஷோத்தமனும் சில கணம் குற்ற உணர்வுக்கு ஆளாகிறான்.

நாடகக்கார்களை பிடிக்கச் சொல்லி உத்தரவிடுகிறாள் வசந்த சேனை. ஆனால் கேசரிவர்மன் நாடகக் குழுவினரோடு தப்பித்து விடுகிறான். சத்யசீலரும், ராஜப்பிரியனும் கூட நாடகத்தைக் கண்டு திகைக்கின்றனர். கோபமுற்றுக் கொந்தளிக்கும் மனோகரனிடம் அவன் கோபத்தை திசை திருப்ப அவன் பாட்டனார் செய்த சபதத்தைக் கூறி பாண்டியன் முத்து விசயன் மீது போர் தொடுத்து இரத்தின சிம்மாசனத்தைக் கைப்பற்றி வரும்படி பத்மாவதி பணிக்கிறாள். தாயின் ஆணையை சந்தோஷத்துடன் ஏற்று போருக்கு புறப்பட சித்தமாகிறான் மனோகரன். தாயின் ஆணைப்படி தந்தையிடம் சென்று  ஆசி வாங்குகிறான். ஆசி கொடுப்பது போல நடிக்கும் வசந்தசேனை நயவஞ்சகியை அலட்சியப்படுத்தி திரும்புகிறான் மனோகரன்.போருக்கு செல்லும் மனோகரனை கொல்ல பௌதாயணன் ஒரு கயவனை எற்பாடு செய்து அனுப்புகிறாள் வசந்தசேனை. மனோகரனைக் கொன்று அவனிடமிருக்கும் போர்வாளை தன்னிடம் கொண்டு வந்து காட்டும்படியும் ஆணையிடுகிறாள்.  

போருக்கு சென்று முத்து விசயனைக் கொன்று இரத்தின சிம்மாசனத்தையும் கைப்பற்றுகிறான் மனோகரன். முத்து விசயனின் முத்தான மகள் விஜயாள். இள நங்கை. மலர் மங்கை. தந்தையைக் கொன்ற மனோகரனைப் பழி வாங்க ஆண்வேடம் தரித்து மனோகரனின் கூடாரம் செல்கிறாள். கத்தியை எடுத்து உறங்கிக் கொண்டிருக்கும் மனோகரனை கொல்ல முயலும்போது மனோகரனின் தேஜஸில், அவன் சுந்தர வதனம் கண்டு அவன் பேரழகில் ஒரு கணம் சொக்கி நிற்கிறாள். அப்போது வசந்தசேனையால் மனோகரனை கொல்ல அனுப்பி வைக்கப்பட்ட ஆள் அங்கு மனோகரனை கொல்ல எத்தனிக்க அதைக் கண்டு பதறி ஓலமிடுகிறாள் விஜயாள். வந்த ஆள் தப்பி ஓட கொலை செய்ய வந்தவளாக மனோகரனிடம் பிடிபடுகிறாள் விஜயாள். பெண் என்று தெரிந்து கொண்ட மனோகரன் அவள் அழகில் மயங்குகிறான். குற்றவாளி என்று நீதி மன்றத்தில் நிறுத்தப்படும் விஜயாளுக்கு இன்ப தண்டனை. அது?.... மனோகரனின் மனைவி என்ற சுக தண்டனை.

தம்பதியர் இன்பமாக  படகு சவாரி செய்யும் வேளையில் மனோகரனை கட்டாரி வீசிக் கொலை செய்ய துணிகிறான் பௌதாயணன். ஆனால் சமயத்தில் விஜயாள் அதனைக் கவனித்து மனோகரனைக் காப்பாற்றி விடுகிறாள்.   மனோகரன் இறந்து விட்டதாக நினைத்துவிடும் பௌதாயணன் மனோகரனின் வாளைத் திருடிக் கொண்டு வந்து அதை வசந்த சேனையுடன் காட்டுகிறான். அதுவல்லாமல் மனோகரனைத் தான் கொன்று விட்டதாகவும் அவளிடம் கூறுகிறான். அதை நம்பிய வசந்தசேனை இந்த விஷயத்தை பத்மாவதியிடம் சொன்னால் மகன் இறந்த சோகத்தில் நெஞ்சு வெடித்து இறந்து விடுவாள் என்று ஒரு திட்டம் தீட்டி பௌதாயணனை ஒரு துறவி வேடத்தில் பத்மாவதியிடம் அனுப்புகிறாள். ஆனால் பௌதாயணன் தன் கையாலாகாத்தனத்தால் அங்கு மனோகரனிடம் பிடிபடுகிறான். அனைத்துக்கும் காரணம் வசந்தசேனை என்றும் கூறிவிடுகிறான். மனோகரன் அவனை அடுத்தநாள் நீதி விசாரணை நடைபெறும் என்று சிறையில் அடைக்கிறான். ஆனால் வசந்தசேனை அதற்குள் முந்திக் கொள்(ல்)கிறாள். தான் எங்கே பௌதாயணனால் காட்டிக் கொடுக்கப்பட்டு விடுவோமோ என்று பயந்து முன்தினம் இரவே சிறையில் அவனை பாம்பை விட்டு கொன்று விடுகிறாள்.

போரில் ரத்தின சிம்மாசனத்தை வென்று வரும் மனோகருக்கு அவையில் பாராட்டு விழா நடைபெறுகிறது. ஆனால் மன்னனை மயக்கி அந்த இரத்தின சிம்மாசனத்தில் மண்ணுக்கு சரியாசனமிட்டு அமர்ந்து அவையோர் அனைவரையும் திகைக்க வைக்கிறாள் வசந்த் சேனை. அது மாத்திரமல்லாமல் மனோகரனுக்கு வெற்றி மாலை சூட்டவும் துணிகிறாள். அதைக் கண்ட மனோகரன் துடிதுடித்துப் போகிறான். தன் பாட்டானாரின் சிம்மாசனத்தில் அதுவும் தன் தாய் அமர வேண்டிய சிம்மாசனத்தில் வேசி ஒருத்தி அமர்ந்திருப்பத்தைக் கண்டு கடும் கோபம் கொள்கிறான். தன்  தாயின் கட்டளையால் கோபத்தை அடக்கி தாயிடம் திரும்பி கொந்தளிக்கிறான். ஒரு வேசி அமர்வதற்கா இவ்வளவு தூரம் படையெடுத்து சிம்மாசனத்தைக் கைப்பற்றி வந்தேன் என்று ஆத்திரமுறுகிறான். படையெடுப்பால்தானே பைங்கிளி விஜயாள் கிடைத்தால் என்று அவனை சாந்தப்படுத்துகிறாள் அன்னை.

'மனோகரா' படத்தின் கதை நீளமாக இருப்பதாலும், இப்படத்தைப் பற்றிய நிறைய தகவல்கள், நிழற்படங்கள் அதிகம் இருப்பதாலும் இந்த 'சிவாஜி என்ற மாநடிகர்' தொடர் எண் 10-ஐ மூன்று பாகங்களாகப் பிரித்து எழுத உத்தேசித்து உள்ளேன்.

முதல் இரண்டு பாகங்கள் 'மனோகரா' படத்தின் கதையையும், மூன்றாவது பாகத்தில் நடிகர் திலகம், மற்றும் இதர பங்களிப்பாளர் பங்களிப்பையும், நிழற்படங்கள், மற்றும் மனோகரா படம் செய்த சாதனைகளைப் பற்றியும் பதியலாம் என்று எண்ணியுள்ளேன்.

இப்போது நீங்கள் காண்பது 'மனோகரா' படத்தின் கதை பாகம் ஒன்று.

('மனோகரா' தொடருவான்)

வாசுதேவன்.

தங்கள் மேலான ஆதரவை எதிர் நோக்குகிறேன்.

இக்கட்டுரை முழுதும் என் சொந்தப் பதிப்பே.
vasudevan31355
vasudevan31355
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 569
இணைந்தது : 11/11/2013

Back to top Go down


'சிவாஜி என்ற மாநடிகர்' 'மனோகரா' தொடர்-10 பாகம் 1 - Page 2 Empty Re: 'சிவாஜி என்ற மாநடிகர்' 'மனோகரா' தொடர்-10 பாகம் 1

Post by jayaravi Thu Jan 23, 2014 10:29 pm

அன்புள்ள வாசு - மனோகரமான பதிவு - கையில் தின்பதற்காக  இருந்த மனோகரத்தை தின்ன முடியாமல் செய்துவிட்டது உங்கள் பதிவு - அவள்ளவு அருமை - என் சக்கரை அளவு எகரிவிட்டது - மருந்துகளால் கட்டுபடுத்த முடியவில்லை - இவள்ளவு தித்திப்பு திக்கு முக்காட வைத்துவிடுகிறது - ஒரு சின்ன அட்வைஸ் - ஒரு பதிவாவது நாங்கள் திட்டும்படி இருக்க கூடாதா ?  ஒரு  முறையாவது அந்த எங்களக்கு வாய்ப்பு கிடைக்காதா என்று ஏங்கும்
அன்புடன்
ரவி
jayaravi
jayaravi
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 267
இணைந்தது : 28/11/2013

Back to top Go down

'சிவாஜி என்ற மாநடிகர்' 'மனோகரா' தொடர்-10 பாகம் 1 - Page 2 Empty Re: 'சிவாஜி என்ற மாநடிகர்' 'மனோகரா' தொடர்-10 பாகம் 1

Post by vasudevan31355 Sat Jan 25, 2014 9:32 pm

ரவி சார்

அளவுக்கு அதிகமாக பாராட்டுகிறீர்கள். எல்லாப் புகழும் நம் இதய தெய்வத்திற்கே சேரும். உங்களுக்கு என்னைத் திட்ட வேண்டுமா?! விரைவில் கட்டாயம் வாய்ப்பளிக்கிறேன். சரிதானே! ஹைய்யா....ஜாலி...
vasudevan31355
vasudevan31355
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 569
இணைந்தது : 11/11/2013

Back to top Go down

'சிவாஜி என்ற மாநடிகர்' 'மனோகரா' தொடர்-10 பாகம் 1 - Page 2 Empty புருஷோத்தமரே! பொருத்தது போதும் - தொடருங்கள் உங்கள் மனோகரமான பதிவுகளை

Post by jayaravi Wed Feb 05, 2014 10:23 pm

வாசு   - இன்னும் எவ்வளவு  நாட்கள் பொறுப்பது உங்கள் மனோகரமான பதிவுகளை காண ? - காக்க வைத்ததற்காக பிடியுங்கள்  என் வசவுகளை : 
 
வாசு வேந்தரே  !  புரட்டுக்காரியின் உருட்டு விழியில் NT யை காணும் கூட்டத்தை ஓட விரட்டும்
 சேனை தளபதியே ! மானமொன்றே நல்வாழ்வெனக் கொண்டு வாழ்ந்த மறவேந்தர் பரம்பரையில்
 மாணிக்கமாக  வந்தவரே! மயிலுக்கும் மந்திக்கும் வித்தியாசம் தெரியாத கூட்டத்தினரை 
ஆவணங்களால் புரிய வைக்கும் மதிவாணரே! குளிர் நிலவைக் கொள்ளிக்கட்டையெனக் கூறும்  
குருடர்களை கூன வைக்கும் அன்பு உள்ளம் கொண்ட நெய்வேலி தேவரே  ! 

NT அன்பின் பிறப்பிடம், அற நெறியின் இருப்பிடம், கருணை வடிவம், கொடையின் திருவுருவம், 
மாசற்ற மாணிக்கம், மாற்றுக் குறையாத தங்கம். அவர்களை அவதூறு கூறிய அங்கங்களை 
பிளந்தெரியும் வீர மகேந்தரே !.  துரோகப் பேசினால்  உம்மைத் தண்டித்த  துரோகிகளின்  உடல்களை துண்டாடுவேன் -

இது உறுதி  - பதிவுகளை போடுங்கள் தயக்கம் இல்லாமல் ! 

அன்புடன் ரவி 

jayaravi
jayaravi
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 267
இணைந்தது : 28/11/2013

Back to top Go down

'சிவாஜி என்ற மாநடிகர்' 'மனோகரா' தொடர்-10 பாகம் 1 - Page 2 Empty Re: 'சிவாஜி என்ற மாநடிகர்' 'மனோகரா' தொடர்-10 பாகம் 1

Post by vasudevan31355 Wed Feb 05, 2014 11:26 pm

ரவி சார்,

அடேயப்பா! மனோகராவைப் பற்றி மாய்ந்து மாய்ந்து நான் எழுதுவதை நான்கே வரிகளில் எழுதி தூக்கி சாப்பிட்டு விட்டீரே அய்யா! சிவாஜி ரசிகரா கொக்கான்னானாம். என்ன வேகம்! என்ன கோபம்! இதோ! நாளை மனோகரன் கதை பாகம் இரண்டை நீங்கள், ஈகரை அன்பர்கள் படிக்கத் தயாராகலாம். பொறுமைக்கு நன்றி!
vasudevan31355
vasudevan31355
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 569
இணைந்தது : 11/11/2013

Back to top Go down

'சிவாஜி என்ற மாநடிகர்' 'மனோகரா' தொடர்-10 பாகம் 1 - Page 2 Empty Re: 'சிவாஜி என்ற மாநடிகர்' 'மனோகரா' தொடர்-10 பாகம் 1

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum