புதிய பதிவுகள்
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 11:33

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:25

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 11:22

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 9:41

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 9:39

» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 23:39

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 21:01

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 20:57

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 20:55

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 20:54

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 20:49

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 20:46

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 18:53

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 12:29

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 12:25

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 8:14

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 8:12

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 8:11

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 8:08

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 8:06

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 8:04

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:57

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 18:24

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue 12 Nov 2024 - 17:54

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 17:33

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 16:50

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 16:05

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:54

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:53

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:10

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:01

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:00

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:57

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:52

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue 12 Nov 2024 - 14:48

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 14:09

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 13:40

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 12:59

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 12:15

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 10:01

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:40

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:38

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:37

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:36

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:35

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:32

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:31

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:29

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சென்னை புக் ஃபேர்... Poll_c10சென்னை புக் ஃபேர்... Poll_m10சென்னை புக் ஃபேர்... Poll_c10 
68 Posts - 76%
heezulia
சென்னை புக் ஃபேர்... Poll_c10சென்னை புக் ஃபேர்... Poll_m10சென்னை புக் ஃபேர்... Poll_c10 
10 Posts - 11%
Dr.S.Soundarapandian
சென்னை புக் ஃபேர்... Poll_c10சென்னை புக் ஃபேர்... Poll_m10சென்னை புக் ஃபேர்... Poll_c10 
8 Posts - 9%
mohamed nizamudeen
சென்னை புக் ஃபேர்... Poll_c10சென்னை புக் ஃபேர்... Poll_m10சென்னை புக் ஃபேர்... Poll_c10 
3 Posts - 3%
Guna.D
சென்னை புக் ஃபேர்... Poll_c10சென்னை புக் ஃபேர்... Poll_m10சென்னை புக் ஃபேர்... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சென்னை புக் ஃபேர்... Poll_c10சென்னை புக் ஃபேர்... Poll_m10சென்னை புக் ஃபேர்... Poll_c10 
234 Posts - 76%
heezulia
சென்னை புக் ஃபேர்... Poll_c10சென்னை புக் ஃபேர்... Poll_m10சென்னை புக் ஃபேர்... Poll_c10 
37 Posts - 12%
mohamed nizamudeen
சென்னை புக் ஃபேர்... Poll_c10சென்னை புக் ஃபேர்... Poll_m10சென்னை புக் ஃபேர்... Poll_c10 
12 Posts - 4%
Dr.S.Soundarapandian
சென்னை புக் ஃபேர்... Poll_c10சென்னை புக் ஃபேர்... Poll_m10சென்னை புக் ஃபேர்... Poll_c10 
8 Posts - 3%
prajai
சென்னை புக் ஃபேர்... Poll_c10சென்னை புக் ஃபேர்... Poll_m10சென்னை புக் ஃபேர்... Poll_c10 
5 Posts - 2%
Balaurushya
சென்னை புக் ஃபேர்... Poll_c10சென்னை புக் ஃபேர்... Poll_m10சென்னை புக் ஃபேர்... Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
சென்னை புக் ஃபேர்... Poll_c10சென்னை புக் ஃபேர்... Poll_m10சென்னை புக் ஃபேர்... Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
சென்னை புக் ஃபேர்... Poll_c10சென்னை புக் ஃபேர்... Poll_m10சென்னை புக் ஃபேர்... Poll_c10 
2 Posts - 1%
Barushree
சென்னை புக் ஃபேர்... Poll_c10சென்னை புக் ஃபேர்... Poll_m10சென்னை புக் ஃபேர்... Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
சென்னை புக் ஃபேர்... Poll_c10சென்னை புக் ஃபேர்... Poll_m10சென்னை புக் ஃபேர்... Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சென்னை புக் ஃபேர்...


   
   
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Sat 19 Jan 2013 - 11:08

மனுஷ்யபுத்திரன் தனது முகநூலில் பகிர்ந்த தகவல்: 'சென்ற ஆண்டு நடந்த புத்தக விற்பனையில் பாதி கூட இவ்வாண்டு இல்லை '. புத்தக விற்பனையாளர்கள் இப்படி புலம்பியுள்ளனராம். அதற்குமுக்கியமாக சொல்லப்படும் காரணங்கள்: 150 ரூபாய்க்குஅதிகமாக விற்கப்படும் புத்தகங்கள் , கணினியில் மின்னூல் படிப்போரின் எண்ணிக்கை அதிகரித்து வருவது மற்றும் விண்ணை முட்டும் விலைவாசியால் முன்பு போல புத்தகப்பிரியர்கள் செலவழிக்க அஞ்சுவது. அதிலும் குறிப்பாக 'வருஷா வருஷம் தம்பட்டம் அடிக்க வாங்குன புக்குங்களை படிக்கவே உங்களுக்கு வக்கு இல்ல. இதுல புதுசா வேற வாங்கப்போனீங்க கணுக்காலை வெட்டிப்புடுவேன்' என்று மனைவியிடம் விழுப்புண் வாங்கி இருப்போரின் எண்ணிக்கை கணிசமாக இருக்கும்.
:-
இவ்வாண்டு கண்காட்சி நடக்குமிடம் நான் படித்த எனதருமை ஒய்.எம்.சி.ஏ. பள்ளிஎன்பதால் ஆரம்பம் முதலே மனது படபடத்துக்கொண்டு இருந்தது. இயற்கை அன்னையே ஓய்வெடுக்கும் எழில் கொண்ட எனது அந்நாள் தாய்வீடு என்ன கதிக்கு ஆளாகி இருக்குமோ என்று மனது புலம்பிக்கொண்டு இருந்ததற்கு காரணம் இல்லாமல் இல்லை. 1950-கள் முதல் 2000 ஆம் வருட ஆரம்பம் வரை அங்கு நடக்காதஷூட்டிங்கே இல்லை என்று சொல்லலாம். 'பொன் ஒன்று கண்டேன்'(படித்தால் மட்டும் போதுமா), 'காற்றில்எந்தன் கீதம்' (ஜானி) பாடல்கள் முதல் பார்த்திபனின் கில்லி-தாண்டு ஆட்டம்(உள்ளே வெளியே), அப்பாஸ் - வினித் கால்பந்து போட்டி(காதல் தேசம்) வரை ஏகப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்ட லொக்கேஷன் அது. இடையே சில வருடங்கள் சினிமாவிற்கு தடை போடப்பட்டது.
:-
நீண்ட நாட்கள் கழித்து சென்ற ஆண்டு ஒய்.எம்.சி.ஏ.விற்கு விசிட் அடித்தபோது அங்கிருந்த வாசு அண்ணனிடம்(பள்ளிக்காலம் முதல் இன்று வரை ப்யூனாக நீடிக்கிறார்) விசாரிக்கையில் 'ஷூட்டிங் ஆட்கள் சுற்றுப்புறத்தை மாசுபடுத்திவிட்டு செல்வதாலும், பள்ளி நடக்குமிடத்தில் ஷூட்டிங்நடப்பது சரிப்படவில்லை என்பதாலும் தடை போட்டுவிட்டார் புதிய நிர்வாகி' என்றார். ஆனால் அந்த நிம்மதிக்காற்றை இயற்கைத்தாய் நெடுகாலம் சுவாசிக்க முடியவில்லை. கடந்த சில மாதங்களாக ஐ.பி.எல் துவக்க விழா,யுவன்ஷங்கர், ரஹ்மான் இசை நிகழ்ச்சிகள் போன்றவற்றை நடத்தும் வியாபார தளமாகிப்போனது 'எனது' ஒய்.எம்.சி.ஏ. அந்த நிகழ்வுகள் எதற்கும் செல்லவில்லை நான். இம்முறைபுத்தக கண்காட்சிக்காக உள்ளே காலடி எடுத்து வைத்தேன்.
:-
வெளியே வெகுதூரம் நீண்டிருந்த பள்ளிச்சுவர்முழுக்க சினிமா, பத்திரிக்கை, அரசியல் என சகலவித போஸ்டர்கள். தி.மு.க.ஆட்சியில் மேயர் சுப்பிரமணியன் அவர்களின் முயற்சியால் தமிழ்ப்பண்பாடு மற்றும் கலாச்சாரங்களை சித்தரிக்கும் அழகிய ஓவியங்கள் அனைத்தும் இந்த சமூக போராளிகளின் போஸ்டர்களால் நாறடிக்கப்பட்டு இருந்ததுமனதை வருத்தியது. 'ஒட்டட்டும். நமக்கென்ன?' என மேடம் ஆட்சி கண்டுகொள்ளாமல் இருப்பது அதிசயமா என்ன? இதில் முக்கிய கொடுமை என்னவெனில் தி.மு.க.கட்சி மற்றும் உதயநிதியின் 'இது கதிர்வேலன் காதல்' போஸ்டர்களும் அதில் அடக்கம்.
:-
'கண்காட்சி வளாகம் ஒருவேளைபுற்கள் நிறைந்த கால்பந்து மைதானத்தில் இருக்குமோ' எனும் பயத்துடன் நுழைந்த எனக்கு பெரிய ஆறுதல். நல்லவேளை 'மிடில் கிரவுன்ட்' என்று மாணவர்களால் அழைக்கப்படும் அந்த பசுமையான ஆடுகளத்தை தாரைவார்க்கவில்லை நிர்வாகம். அருகே இருந்த இரண்டு பெரிய கால்பந்து மைதானங்கள் ஆக்ரமிக்கப்பட்டு இருந்தன.அந்த இடத்தை சுற்றிலும் அடிக்கொரு இடம் பள்ளம் நோண்டப்பட்டு இருந்தது. ஸ்டால்கள் இருக்கும் இடத்தினுள் நடந்து சென்றால் மேடும், பள்ளமும்பஞ்சமின்றி. பெரியவர்கள் பொறுமையாக நடந்து செல்லவும். மடங்கி இருக்கும் தரைவிரிப்புகள்மற்றும் சமமற்ற நிலப்பகுதிகள் உங்கள் காலை வாரி விட வாய்ப்புகள்அதிகம்.
:-
இதுபோக சிறுநீர், காகித மற்றும் தின்பண்ட கழிவுகள் என இன்னும் பல மாசுகளை தாங்கிக்கொண்டு நாட்களை நகர்த்த உள்ளது எனது பள்ளி. அண்ணாசாலையில்கிண்டி, சைதை, தேனாம்பேட்டை முதல் சென்ட்ரல் வரை சுரங்கப்பாதை அமைத்துள்ள கழக அரசுகள் இன்றுவரை நந்தனத்தில் ஒரு சுரங்கப்பாதை அல்லது மேம்பாலம் அமைக்காததற்கானகாரணம் பிடிபடவே இல்லை. சென்னையின் மிக முக்கிய சிக்னல் அமைந்து இருக்கும் நந்தனம் தேவர் சிலை அருகே இன்னும் பிதுங்கிக்கொண்டு இருக்கிறது வாகன நெருக்கடி. இந்த அழகில் புத்தக கண்காட்சி வேறு.
:-
நந்தனம் ஒய்.எம்.சி.ஏ.வளாகத்தில் இன்னொரு 'அங்கமாக' இருப்பதுபார்வையற்றோர் பள்ளியும்தான். குறைந்தபட்சம் அங்கிருப்போரை மனதில் கொண்டாவது அரசு ஆவன செய்தால் புண்ணியம். சுரங்கம் அல்லது மேம்பாலம் இல்லாவிடினும் பெரியார் மாளிகை மற்றும் பள்ளி எதிரில் ஹ்யூமா உள்ள மருத்துவமனை அருகில் பாதசாரிகள் க்ராஸ் செய்யும் இடத்தில் போக்குவரத்து காவலர் ஒருவரை நியமிக்க வேண்டும்.சில ஆண்டுகளுக்கு முன்பு வரை கண்ணில் பட்ட போக்குவரத்து காவலர்கள் தற்போது நீண்டகால விடுப்பில்/கடுப்பில் போய் விட்டனர் போல! அக்குறையால் சாதாரண மக்களே க்ராஸ் செய்ய சிரமத்திற்கு ஆளாகும்போதுகண்பார்வையற்றவர்களின் நிலைமை என்னவென்று சொல்லியா 'தெரிய' வேண்டும் அரசுக்கு???
:-
ஏற்கனவே சைதை ஆசிரியர் கல்லூரியில் இருந்த பிரம்மாண்ட மைதானத்தை மெட்ரோ ரெயில் பணிகளுக்கு தானம் தந்துவிட்டனர். தி.நகர் வெங்கட்நாராயணா ரோட்டில் இருக்கும் மாநகராட்சி மைதானத்தை ரங்கநாதன் தெரு மற்றும் பாண்டி பஜாருக்கு ஷாப்பிங் செய்ய வரும் சீமான், சீமாட்டிகளின் கார்களை நிறுத்தும் இடமாக மாற்ற அரசியல்வாதிகள் முயன்று பின்பு பொதுமக்கள் முயற்சியால் சட்டபூர்வமாக தடுக்கப்பட்டது. தற்போது மிச்சம் இருக்கும் ஒய்.எம்.சி.ஏ.வும் வணிக காரணங்களுக்காக 'சமரசம்' செய்ய துவங்கிவிட்டது. இதுபோன்ற பல்வேறு மனவருத்தங்களால் எப்போது புத்தக கண்காட்சி வேறு இடத்திற்கு மாற்றப்படும் என்று காத்திருக்கும் ஒய்.எம்.சி.ஏ. தாசனாகிய என் போன்றோர் நொந்துகொண்டு இருக்கிறோம்.

Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Sat 19 Jan 2013 - 11:13

இருக்கிற மைதானங்களை ஒழித்துவிட்டு குழந்தைகள்வீட்டுக்குள் முடங்கி ஆடிப்பாடி மகிழ கண்காட்சியில் சிறப்பு சி.டி.ஸ்டால்கள் விற்கும் பேரன்புடையீரே உமது புகழ் ஓங்குக. மைதானங்களில் தடம்பதிப்பதற்கான காரணம் சிறார் மற்றும் இளையோரின் விளையாட்டு ஆர்வத்திற்கு உரம் போட வேண்டுமே அன்றி பொதுமக்கள் 'சொய்' என்று உச்சா அடித்து விட்டு 'ரஹ்மான் ராக்ஸ்', 'சுஜாதா புக்ஸ் ரெண்டு பண்டல் வாங்கிட்டேன்' என்று மயிர் சிலிர்க்கும் கூடாரம் ஆகிப்போதல் எவ்வகையில் நியாயம்?
:-
இதே நிலை தேசமெங்கும் தொடர்ந்தால் அடுத்த ஒலிம்பிக்கில் லட்டு என்ன..தூள்பூந்தி கூட கிடைக்காது.
:-
மெட்ராஸ்பவன்

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun 19 Jan 2014 - 21:32

அவரது பதிப்பகத்தில்தான் கூட்டம் அலைமோதியது நான் சென்று வந்த நான்கு நாட்களிலும். எப்போதும் பதிப்பாளர்கள் புலம்புவதையே குறிக்கோளாக வைத்திருப்பார்கள். இவர் எல்லோருக்கும் முன்னோடி.

கடை முன்னாடி சேர் போட்டு அமர்ந்து கல்லா கட்டியதையெல்லாம் சொல்லி மகிழ மாட்டார் இவர். எப்போதும் புலம்பல்.



சென்னை புக் ஃபேர்... Aசென்னை புக் ஃபேர்... Aசென்னை புக் ஃபேர்... Tசென்னை புக் ஃபேர்... Hசென்னை புக் ஃபேர்... Iசென்னை புக் ஃபேர்... Rசென்னை புக் ஃபேர்... Aசென்னை புக் ஃபேர்... Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun 19 Jan 2014 - 21:35

நண்பரே தலைப்பைத் தமிழில் எழுதுங்கள். சென்னைப் புத்தகக் கண்காட்சி என்று போட்டு தேடினேன் கிடைக்கவில்லை.



சென்னை புக் ஃபேர்... Aசென்னை புக் ஃபேர்... Aசென்னை புக் ஃபேர்... Tசென்னை புக் ஃபேர்... Hசென்னை புக் ஃபேர்... Iசென்னை புக் ஃபேர்... Rசென்னை புக் ஃபேர்... Aசென்னை புக் ஃபேர்... Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun 19 Jan 2014 - 21:37

ஈகரை உறவுகள் ஒருவரையும் சந்திக்கும் வாய்ப்பு அங்கு கிடைக்கவில்லை என்பது வருத்தம். சோகம் 



சென்னை புக் ஃபேர்... Aசென்னை புக் ஃபேர்... Aசென்னை புக் ஃபேர்... Tசென்னை புக் ஃபேர்... Hசென்னை புக் ஃபேர்... Iசென்னை புக் ஃபேர்... Rசென்னை புக் ஃபேர்... Aசென்னை புக் ஃபேர்... Empty
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக