புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
kavithasankar | ||||
heezulia | ||||
Balaurushya | ||||
prajai | ||||
Shivanya | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
‘காமராஜர் சென்ட்!’ காங்கிரஸின் சர்வரோக நிவாரணி
Page 1 of 1 •
- nandagopal.dபண்பாளர்
- பதிவுகள் : 182
இணைந்தது : 15/11/2012
நாற்பது ஆண்டுகால வரலாற்றில், முதன்முதலாக தமிழக காங்கிரஸ் தலைவர்களுக்கு இப்போது நடுக்கம் வந்துவிட்டது. காங்கிரஸ் கட்சி இருக்கும் திசையின் பக்கமே திரும்பவில்லை அ.தி.மு.க.. ஏதோ, அவர்களைப் பார்ப்பதே பாவம் என்பதைப்போல கழுத்தைத் திருப்ப ஆரம்பித்திருக்கிறது தி.மு.க.. இனி எந்த இறைத்தூதன் வந்து காங்கிரஸ் தலைவர்களை இந்தத் தேர்தலில் காப்பாற்றுவானோ தெரியவில்லை!
ஆனால், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் ஞானதேசிகனும், முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனும் பேசும் பேச்சைப் பார்த்தால், அத்தனை தொகுதிகளிலும் வெற்றி தோல்வியைத் தீர்மானிக்கும் சக்தி படைத்ததாக தங்கள் கட்சி இருக்கிறது என்ற கர்வம் தெறிக்கிறது. இந்தக் கர்வம் பாராட்டப்பட வேண்டியதே!
எந்தப் பெரியக் கட்சியும் வேண்டாம் என்று தங்கள் சொந்த பலத்தை நம்பி ஜெயலலிதாவும் கருணாநிதியும் போட்டியிடத் தயாராகிவிட்டதைப் போல, இந்தத் தேர்தலில் காங்கிரஸும் அப்படியரு முடிவை தமிழகத்தில் எடுக்க வேண்டும். முதன்முதலாகக் காலம் அப்படி ஒரு வாய்ப்பை தமிழ்நாடு காங்கிரஸுக்குக் காட்டுகிறது. தி.மு.க-வுடனோ, அ.தி.மு.க-வுடனோ கூட்டணி அமைத்து பத்துக்கும் பன்னிரண்டுக்கும் டெல்லித் தலைமையில் இருந்து 130 முறை பேச்சுவார்த்தை நடத்துவதைவிட, 40 தொகுதிகளிலும் காங்கிரஸ் வேட்பாளர்களே நிற்க ஒரு வாய்ப்பு இது.
40 தொகுதிகளுக்கான காங்கிரஸ் வேட்பாளர்களைப் படக்குறிப்பில் குறிப்பிட்டிருக்கிறோம். இதனால் முட்டி மோதி, அடித்துப் பிடித்து வேட்பாளர் பட்டியல் தயாரிக்க வேண்டிய சிரமம்கூட காங்கிரஸ் தலைவர்களுக்கு இல்லை.
இதுவரை கருணாநிதிக்கு வாக்கு கேட்டீர்கள், ஜெயலலிதாவுக்கு வாக்கு கேட்டீர்கள். இப்போது முதன்முதலாக காங்கிரஸுக்கு வாக்கு கேட்கப்போகிறீர்கள். இதுவே கம்பீரமானது. யாருக்கு இது மகிழ்ச்சி தருமோ இல்லையோ... நிச்சயம் பெருந்தலைவர் காமராஜருக்கு மகிழ்ச்சி தரும்!
'தி.மு.க-வும் அ.தி.மு.க-வும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்’ என்று காமராஜர் சொன்னதுதான் அனைவருக்கும் தெரியும். ஆனால், தமிழ்நாடு ஸ்தாபன காங்கிரஸ் கமிட்டியின் நிர்வாகக் கூட்டத்தில் (2.7.1975) காமராஜர் பேசிய பேச்சை யாரும் சொல்ல மாட்டார்கள்.
'தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய கட்சிகளோடு ஒட்டோ உறவோ இல்லை. இந்த இரு கட்சிகளோடு உறவு வைத்துள்ள கட்சிகளோடும் உறவு இல்லை’ என்று காமராஜர் பேசிய பேச்சுதான் அவரது 'மரண சாசனம்’ என்று அழைக்கப்படும். ஆனால், காமராஜர் உடல் தாங்கிய பேழையை சமாதியில் இறக்கியபோது, அந்த சாசனத்தையும் வைத்துப் புதைத்துவிட்டார்கள்.
1952, 57, 62, 67 ஆகிய நான்கு தேர்தல்களிலும் யார் தயவும் இல்லாமல் தனித்து நிற்கும் தைரியம் காங்கிரஸ் கட்சிக்கு மட்டும்தான் இருந்தது. 1967-ம் ஆண்டு தேர்தலில் வாங்கிய மரண அடி, கட்சியை நிலைகுலைய வைத்தது. 1971-ம் ஆண்டு தேர்தலில் கருணாநிதியுடன் கைகோத்தார் இந்திரா. அடுத்த தேர்தலில் (1977) அரவணைக்க எம்.ஜி.ஆர். வந்தார். 1980-ம் ஆண்டு தேர்தலில் கருணாநிதியுடன் சேர்ந்து நின்றார்கள். அடுத்து நடந்த நான்கு தேர்தல்களிலும் (1984, 89, 91, 96) அ.தி.மு.க-வுடன் கூட்டணி. 1998-ல் தனித்துப் போட்டியிட்டு, 1999-ம் ஆண்டு தேர்தலில் மீண்டும் அ.தி.மு.க-வுடன் ஐக்கியமானார்கள். 2004-ல் கருணாநிதியுடன் இணைந்தவர்கள், கடந்த தேர்தலிலும் (2009) அவரோடு இருந்தார்கள். இப்போதைய நிலை, ப.சிதம்பரம் வார்த்தைகளில் சொல்வதென்றால், 'காங்கிரஸ் கட்சி தனித்துவிடப்பட்டுள்ளது’!
காமராஜர் மறைவுக்குப் பிறகு எதிர்கொண்ட தேர்தல்களில் எல்லாம் (ஒரே ஒருமுறை தவிர) தி.மு.க. அல்லது அ.தி.மு.க. தோளில் ஏறிப் பயணம் செய்துவிட்டு, 'காமராஜர் ஆட்சியை அமைப்போம்’ என்றால், நம்புவதற்கு காமராஜர் என்ன ஏமாளியா?
'காமராஜர் ஆட்சியே லட்சியம்’ என்பதெல்லாம் சும்மா ஒப்புக்கு முழங்கப்படும் கோஷம். சிவகங்கையை ப.சிதம்பரத்துக்குத் தரவேண்டும், ஊட்டியை பிரபுவுக்கு ஒதுக்க வேண்டும், மயிலாடுதுறையை மணிசங்கர் அய்யருக்கு அளிக்க வேண்டும், சேலம் தங்கபாலுவுக்கு என்பதுதான் அவர்களின் லட்சியமாக இருக்கிறது. இந்தக் குறுகிய குணாம்சம்தான் 45 ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சியை கடும் இருட்டில் வைத்துள்ளது.
மாநிலம் முழுக்கச் சிந்திக்காமல் தொகுதி எம்.பி-க்களாக இருக்கும் தலைவர்களைத்தான் டெல்லித் தலைமைக்கும் பிடிக்கிறது. 1980-ம் ஆண்டு தேர்தலில், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக இருந்த ப.நெடுமாறனுக்குச் சொல்லாமல் தி.மு.க-வுடன் கூட்டணிப் பேச்சுவார்த்தையை இந்திரா முடித்தார். 'இது எனக்கு ஏற்பட்ட அவமானம்’ என்று தலைவர் பதவியையே ராஜினாமா செய்தார் நெடுமாறன். இப்படிப்பட்டவர்களை டெல்லி விரும்புவது இல்லை. 1996-ல் தமிழ்நாடே ஜெயலலிதாவுக்கு எதிராக இருந்தபோது, காங்கிரஸின் 90 சதவிகிதத் தொண்டர்கள் 'அ.தி.மு.க. கூட்டணி வேண்டாம்’ என்றபோது, 'வேண்டும்’ என்று முடிவெடுத்தார் நரசிம்மராவ். அவருக்குத் தலையாட்டினார் குமரி அனந்தன். டெல்லிக்கு இப்படியானவர்கள்தான் தேவை!
எல்லாக் கட்சிகளிலும், செல்வாக்கானவர் யார் என்று பார்த்து தலைவராக நியமிப்பார்கள். காங்கிரஸில் மட்டும்தான் செல்வாக்கு அடைந்துவிடாதவர்களாகத் தேடிப் பிடிப்பார்கள். ஒரு மனிதன் கோவையிலோ, கோவில்பட்டியிலோ, மதுரையிலோ, மன்னார்குடியிலோ தெரிந்தவராக இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. டெல்லி சோனியா வீட்டில், காங்கிரஸ் கமிட்டித் தலைமை அலுவலகத்தில், ராகுல் அலுவலகத்தில் யாரையாவது தெரிந்திருந்தால் போதும். அகமது படேல் தெரியுமா, ஜார்ஜுக்கு உங்கள் முகம் அறிமுகமா, குலாம் நபி ஆசாத் உங்களைப் பார்த்துச் சிரிப்பாரா... இந்த மூன்று தகுதிகள் இருந்தால் போதும். தமிழக காங்கிரஸின் மாநிலத் தலைவர் ஆகலாம்; மாநிலங்களவைக்கும் போகலாம்; மக்களவைக்கும் போகலாம்.
யாருக்காவது சந்தேகம் இருக்குமானால் தங்கபாலு, சுதர்சன நாச்சியப்பன், மாணிக் தாகூரைக் கேட்கலாம். இவர் பெயர் மாணிக்கம் தாகூரா, மாணிக் தாகூரா என்று காங்கிரஸ்காரர்களுக்கே தெரியாத நிலையில்தான் விருதுநகர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். சிவகங்கையில் பிறந்து, டெல்லியில் செட்டில் ஆனவருக்கு விருதுநகரில் சீட் கொடுக்கலாம் என்று காங்கிரஸ் மேலிடம் முடிவெடுத்த புத்திசாலி, வரும் தேர்தலில் விருதுநகரில் போட்டியிட்டால்... தைரியசாலி! வென்றால், அவரையே தமிழ்நாட்டின் முதல்வர் வேட்பாளராக காங்கிரஸ் அறிவிக்கலாம். தமிழ்நாட்டில் கட்சியை வளர்க்காமல், டெல்லிக்கு ஓப்பன் டிக்கெட் வாங்கிக் குறுக்கு வழியில் போனவர்களால் கருணாநிதி, ஜெயலலிதா தயவால் ஒரு முறை எம்.பி., ஆக முடியுமே தவிர, காங்கிரஸை வளர்க்க முடியாது.
அதேபோல் காங்கிரஸைத் தரைமட்டம் ஆக்கியவர்கள், டெல்லியில் இருந்து வரும் மேலிடப் பார்வையாளர்கள். சல்மான் குர்ஷித், கமல்நாத், ரமேஷ் சென்னிதாலா, அம்பிகா சோனி, குலாம் நபி ஆசாத்... இப்போது முகுல் வாஸ்னிக் என்று டிசைன் டிசைனான குர்தாக்களை அணிந்தவர்களை அனுப்பினால் போதும்... காங்கிரஸ் வளர்ந்துவிடும் என்று சோனியாவும் ராகுலும் நினைக்கிறார்கள்.
ஆறு மாதங்களுக்கு ஒரு முறை மீனம்பாக்கம் விமான நிலையம் முதல் சத்தியமூர்த்தி பவன் வரை இவர்கள் வந்து போவார்களே தவிர, தமிழ்நாட்டில் காங்கிரஸுக்கு செல்வாக்கான இடம் எது, காங்கிரஸ் செல்வாக்கை அதிகரிக்க வேண்டிய இடம் எது என்று எதுவும் தெரியாது. ஆனால், இவர்களிடம்தான் தமிழ்நாட்டு நிலைமையை டெல்லித் தலைமை கேட்கிறது என்றால், உருப்படுமா?
கிரீஷ், கிருஷ்ணா என்ற இரண்டு பேரை, தமிழ்நாடு காங்கிரஸில் உள்ள இரண்டு சதவிகிதம் பேருக்குக்கூடத் தெரியாது. தமிழ்நாடு மாணவர் காங்கிரஸின் செயல்பாடு பற்றி கிரீஷிடமும், இளைஞர் காங்கிரஸ் பற்றி கிருஷ்ணாவிடமும்தான் ராகுல் கேட்டுத் தெரிந்துகொள்கிறார். கிரீஷ், ஒரு பேராசிரியர். கிருஷ்ணா, ஐ.டி. பொறியாளர். இருவரும் ஏதோ ஒரு மாநிலத்தில் நல்ல வேலையில் இருக்கிறார்கள். ராகுல் ஏதாவது கேட்டால், லேப்டாப் பார்த்துச் சொல்வார்கள். 2009-ம் ஆண்டு தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் உறுப்பினர்கள் 14 லட்சம் பேர். 2012-ல் மீண்டும் அதனைப் புதுப்பித்தவர்கள் 5 லட்சம் பேர் என்றால், மீதம் உள்ள 9 லட்சம் பேர் எங்கே போனார்கள்? காங்கிரஸை விட்டு ஏன் விலகினார்கள்? இதில் 22 ஆயிரம் பேர் நிர்வாகிகள். ஆனால், திருச்சியில் நடந்த இளைஞர் காங்கிரஸ் எழுச்சி மாநாடு 600 பேர் அமர வசதியுள்ள மண்டபத்தில் நடந்தபோது, அதில் 300 பேர்தான் கலந்துகொண்டார்கள். மாணவர் காங்கிரஸுக்கு, தமிழ்நாடு முழுக்க சேர்ந்தது மொத்தமே ஒரு லட்சத்து 16 ஆயிரம் பேர். இதன் தலைவராகத் தேர்வானவரே, கல்லூரியில் படிக்கவில்லை என்று புகார் கிளம்பி டிஸ்மிஸ் செய்யப்பட்டார் என்றால், உறுப்பினர்களில் எவ்வளவு பேர் உண்மையானவர்கள்? உறுப்பினர்களாகச் சேர்ந்த இளைஞர்கள் கழன்றுகொண்டதற்கும், உறுப்பினர்களாக மாணவர்கள் சேராமல் போவதற்கும் என்ன காரணம்?
தமிழ்நாட்டின் தலையாயப் பிரச்னைகள் எதற்கும் காங்கிரஸ் தலைவர்கள் கருத்துச் சொல்வது இல்லை. கருத்துச் சொன்னாலும், வெகுஜன மக்களின் சிந்தனைக்கு எதிராகப் பேசுவர். ஈழத்தமிழர் பிரச்னை, தமிழக மீனவர் தாக்கப்படுவது, மாணவர்கள் போராட்டம், கூடங்குளம், காவிரி, முல்லைப் பெரியாறு என எதற்கும் தமிழக நலன் சார்ந்து கருத்து அறிவிப்பது இல்லை. ப.சிதம்பரம் என்ன பேசினார் என்பது இருக்கட்டும். ஆனால், அவர் இலங்கைப் பிரச்னை பற்றி ஒரு கருத்தரங்கம் பேசலாம் என்று முடிவெடுப்பதற்கே ஐந்து ஆண்டுகள் ஆகின.
தமிழர்கள் நியாயம் பேசுவதைவிட ராஜபக்ஷேவுக்கு நோகாமல் பேசுவது சுதர்சன நாச்சியப்பன் போன்றவர்களுக்கு சுகமாக இருக்கிறது. விமர்சனத்துக்கும் விதண்டாவாதத்துக்கும் வித்தியாசம் தெரியாதவர் இளங்கோவன். ஞானதேசிகனுக்கு எல்லாமே கருணாநிதி எதிர்ப்புக் கண்ணாடிதான். 2009 தேர்தலில் தமிழ்நாடு காங்கிரஸின் முக்கியத் தலைவர்களான தங்கபாலு, இளங்கோவன், மணிசங்கர் அய்யர், பிரபு... போன்றவர்கள் தோல்விக்குக் காரணமான ஈழத் தமிழர் பிரச்னையில்கூட டெல்லியின் மனமாற்றத்துக்குமான முயற்சிகளை இவர்கள் எடுக்கத் தயங்கினார்கள் என்றால், வேறு எதற்காகக் குரல் கொடுப்பார்கள்? ஓர் இனமே அழிந்தபோது கருத்துச் சொல்லாத ராகுல், ஓரினச்சேர்க்கைக்கு ஆதரவாக ஆர்வத்தோடு கருத்துச் சொல்வதன் பின்னணியும் அலட்சியமும்தான் கட்சியை அதலபாதாளத்துக்குக் கொண்டுபோய் விட்டுள்ளது.
ஆனால், 'தி.மு.க-வை அழுக்கு மூட்டை’ என்கிறார் இளங்கோவன். அழுக்கு மூட்டை என்பது ஊர் அறிந்ததுதான். எவ்வளவு அழுக்கானாலும் துவைத்து புதுத்துணியாக உடுத்தும் சாமர்த்தியம் கருணாநிதிக்கு இருக்கிறது. ஆனால், கந்தல் ஆடையாகிவிட்டதே காங்கிரஸ். கதர் துணி அணியும் பழைய காங்கிரஸ்காரர்களுக்குத் தெரியும்... கதர் துணி கிழிந்து தைத்தால், தைத்த இடத்தில் மறுபடி கிழியும். புதுச்சட்டை போடுவதைத் தவிர வேறு வழி இல்லை.
தமிழ்நாடு காங்கிரஸும் புதுப் பாதையில் பயணிக்க வேண்டும். உண்மையில் காங்கிரஸ் கட்சிக்கு ஒவ்வொரு தொகுதியிலும் எவ்வளவு வாக்கு இருக்கிறது என்பதை அறிய 40 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட வேண்டும்.
'தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்படுபவர்கள், ஏன் டெல்லி சென்று வருகிறார்கள்?’ என்று காங்கிரஸ் பிரமுகர் ஒருவர், பெரியவர் தி.சு.கிள்ளிவளவனிடம் கேட்டாராம்.
'டெல்லி ஆபீஸில் இரண்டு விதமான சென்ட் பாட்டில்கள் இருக்கும். கருணாநிதியுடன் கூட்டணி என்றால், அவருக்குப் பிடித்த சென்ட் எடுத்துக் கொடுப்பார்கள். ஜெயலலிதாவுடன் கூட்டணி என்றால், அவருக்குப் பிடித்த சென்ட் பாட்டிலை எடுத்துக் கொடுப்பார்கள். காங்கிரஸ் தலைவர் டெல்லி போவது சென்ட் பாட்டில் வாங்கத்தான்’ என்றாராம் அவர்.
காமராஜருக்குப் பிடித்த சென்ட் (அதாவது மரண சாசனமாகச் சொன்னது!) பாட்டிலை இந்த முறையாவது பயன்படுத்திப் பாருங்கள். இது இறுதிக் கட்டம். இல்லாவிட்டால், உயிர் காக்கும் ஆக்சிஜனுக்கு அலைய வேண்டி வரும்!
thanks to anantha vikadan

- veeyaarபண்பாளர்
- பதிவுகள் : 213
இணைந்தது : 14/11/2013
விகடன் கட்டுரையின் மீள்பதிவு சிந்திக்க வைக்கும் கட்டுரை.
காங்கிரஸைப் பொறுத்தவரையில் அதுவும் குறிப்பாகத் தமிழகத்தில் சொல்ல வேண்டுமென்றால், இதுவும் வேண்டும் இன்னும் வேண்டும். சும்மாவா சொன்னார் காந்தி, கலைத்து விடவேண்டுமென்று.
தமிழகத்தில் காங்கிரஸின் நிலைக்கு முழுக்க முழுக்க காங்கிரஸ் தான் பொறுப்பு. வெகு ஜனங்களுக்கும் தங்களுக்கும் கொஞ்சும் கூட தொடர்பில்லை என்று கட்டியம் கூறுவது போல் தான் அவர்களின் அரசியலும் நடவடிக்கைகளும் இருக்கும்.
முதன் முதலில் கலைஞர்கள் அரசியலில் நுழைந்தது காங்கிரஸ் காலத்தில் தான். காங்கிரஸுக்காக கே.பி.சுந்தராம்பாள் உள்பட கலைஞர்கள் உழைத்து விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டார்கள். அப்போது மக்களிடம் இருந்த தேச பக்தியும் தன்னலம் கருதாத உழைப்பும் இந்நாட்டைக் காப்பாற்றின.
ஆனால் விடுதலைக்குப் பிறகு எல்லாமே மாறி விட்டது. கலைஞர்களை உதாசீனப் படுத்தியதன் உச்சக்கட்ட பிரதிபலிப்பை தமிழகம் உணரத் தொடங்கியது. ஒரு பக்கம் திராவிட இயக்கங்கள் பொது மக்களின் அன்றாட வாழ்வில் உள்ள சிறு சிறு பிரச்சினைகளை பூதாகாரமாக்கின. அரிசி பற்றாக்குறை என்பது நிர்வாக ரீதியிலேயே செய்ய வேண்டிய விஷயம். அதனை அலட்சியப் படுத்தியது காங்கிரஸ், அது மட்டுமில்லாமல் வாரம் ஒரு நாள் கோதுமை உண்ணச் சொன்னது. நான் என்ன உண்ண வேண்டும் என்பதை நீ என்ன தீர்மானம் செய்வது என்று மக்கள் கொதித்தெழுந்தனர். உண்மையில் அரிசி பற்றாக்குறை செயற்கையாக உருவாக்கப் பட்டதாக கேள்விப் பட்டிருக்கிறோம். பதுக்கல் காரணமாக அரிசி விலை உயர்வு ஏற்பட்டது. இதுவும் இல்லாமல் தாய் மொழியான தமிழ் இரண்டாம் பட்சமாக நடத்தப் பட்ட போது திராவிட இயக்கங்கள் கொதித்தெழுந்தன. அப்போது காங்கிரஸ் அதனைப் புரிந்து கொள்ளவில்லை. இந்தக் கால கட்டத்திலெல்லாம் இந்திரா பிரதமர் இல்லை. நேரு தான் இருந்தார். காமராஜரும் இருந்தார். இந்த மொழிப் பிரச்சினையைப் பற்றிப் பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை. மக்களின் மனோநிலையை காமராஜர் புரிந்து கொண்டிருந்தால் இதனை அப்போதே நேருவிடம் சொல்லி தணித்திருக்கலாம். பிரச்சினை பெரிதாகி துப்பாக்கி சூடு கலவரம் என்று ஆன பின் தான் அவர்களுக்கு உணரத் தொடங்கியது.
இவையெல்லாமே காமராஜர் தமிழ் நாட்டிலும் அகில இந்தியாவிலும் செல்வாக்குடன் இருந்த கால கட்டத்தில் தான்.
இன்றைக்கு காங்கிரஸ் தமிழ் நாட்டில் என்ன நிலையில் இருக்கிறதோ இதே நிலை தான் 1967லும் நிலவியது. இது தான் உண்மை.
ஆனால் இந்த நிலையை காங்கிரஸ் எப்படி சமாளித்தது. இவ்வளவு பலத்த எதிர்ப்பையும் மீறி கணிசமான அளவில் 1967 தேர்தலில் காங்கிரஸ் வாக்குகள் பெறக் காரணம் என்ன.
யாரைக் கூத்தாடிகள் என்று காமராஜர் ஏளனப் படுத்தினாரோ, எந்த கலைஞர் சமுதாயத்தைக் கறிவேப்பிலையாக காமராஜர் பயன் படுத்தி உதாசீனப் படுத்தினாரோ, அந்தக் கலைஞர் சமுதாயத்தின் சிறந்த பிரதிநிதியான நடிகர் திலகம் சிவாஜி கணேசன் என்கிற ஒரு சக்தி தான் 1967ல் காங்கிரஸின் மானம் காத்த ஆடையாகத் திகழ்ந்தது. இது தான் உண்மை.
2014ல் காங்கிரஸ் என்ன நிலைமையில் உள்ளதோ அதே நிலையில் தான் 1967லும் காங்கிரஸ் இருந்தது. அதுவும் பெருந்தலைவர் காமராஜர் இருக்கும் போதே. ஆனால் இரண்டிற்கும் மிகப் பெரிய வித்தியாசம் நடிகர் திலகம் சிவாஜி கணேசன்.
1967ல் மொழியுணர்வும் இறை எதிர்ப்புப் பிரச்சாரமும் திராவிட இயக்கங்களின் பிரம்மாண்ட வளர்ச்சிக்கு காரணமாகின. அதை காங்கிரஸ் தைரியமாக எதிர்கொண்டு நின்றதற்குக் காரணம் நடிகர் திலகம் சிவாஜி கணேசன். அவருடைய திருவிளையாடல் திரைப்படம் தமிழக அரசியல் வரலாற்றிலும் குறிப்பிடத் தக்கதாகும். இந்தப் படத்தின் தமிழ் மொழி பயன் பாடும் இறை பக்தியும் திராவிட இயக்கங்களுக்கு மிகப் பெரிய சவாலாக அமைந்தது.
இன்னும் சொல்லப் போனால் இந்தி எதிர்ப்புப் போராட்டம், அரிசப் பஞ்சம் போன்றவை அரசுக்கு எதிரான வாக்குகளை அதிகப் படுத்தியது ஒரு புறம் இருக்கு எம்.ஜி.ஆர். சுடப்ப்ட்ட காரணத்தினால் அவர் பிரச்சாரத்திற்கு வர முடியாமல் போக அதனையே பயன் படுத்தி அவருடைய நிழற்படத்தை வைத்தே ஓட்டுக் கேட்டார்கள் திராவிட இயக்கத்தினர்.
இத்தனை பெரிய காங்கிரஸ் எதிர்ப்பு அலையிலும் தமிழ்நாட்டில் காங்கிரஸ் டெபாசிட் பெற்று மானத்துடன் வெளிவந்தது என்றால் அதற்குக் காரணம் முழுக்க முழுக்க நடிகர் திலகம் சிவாஜி கணேசன் தான்.
இது தான் என்னுடைய கருத்து.

- டார்வின்மூத்த உறுப்பினர்
- பதிவுகள் : 862
இணைந்தது : 03/02/2009
1967 தேர்தலின்போது அண்ணா மிகச் சாமர்த்தியமாக நவக்கிரகங்களாக இருந்த கட்சிகளையெல்லாம் அவரவர் செல்வாக்கிற்கு ஏற்பக் குறிப்பிட்ட சில தொகுதிகளில் சிரமப்படாமலேயே வெற்றி பெறலாம் என ஆசை காட்டி, தொகுதி உடன்பாடு என்ற பெயரில் எல்லாக் கட்சிகளையும் காங்கிரசுக்கு எதிராக ஒன்று திரட்டியபொழுது காமராஜர் எவ்வித மாற்று வியூகமும் வகுக்காமல் போனதற்குக் காரணம் மிதமிஞ்சிய நம்பிக்கை மட்டுமல்ல; மாறுபட்ட கொள்கைகள் உள்ள கட்சிகளுடன் வெறும் தொகுதி உடன்பாடு செய்துகொள்வது ஒரு தவறான முன்மாதிரி என்றே அவர் கருதினார் (தேர்தல் சமயத்தில், “படுத்துக் கொண்டே ஜயிப்போம்” என்று காமராஜர் சொன்னது என்னவோ நிஜமே. அதற்கு அண்ணா, “படுக்கலாம் ஆனால் ஜெயிப்பது சந்தேகம்” என்று சொன்னதும் அதற்கு இணங்க காமராஜர் விபத்துக்குள்ளாகி கால் முறிவு ஏற்பட்டுப் படுக்கையிலேயே இருக்க நேரிட்டதுங்கூட நிஜமே. ஆனால் காமராஜர் ஒரு வழக்கமான தேர்தல் பிரசாரப் பேச்சாகத்தான் அவ்வாறு கூறினாரேயன்றி மிதமிஞ்சிய நம்பிக்கையினால் அல்ல. தேர்தலின்போது மக்களிடையே ஓர் அபிப்ராயத்தைத் தோற்றுவிக்க வேண்டும் என்பதற்காகவே எல்லா அரசியல் கட்சித் தலைவர்களும் நாங்கள்தான் ஜயிப்போம் என்று சொல்வதுண்டு அல்லவா?)ayyasamy ram wrote:அரசியலில் எல்லாம் சகஜமானதுதான்...
-
காமராஜரும் படுத்துக்கொண்டே ஜெயிப்பேன் என்று
சொல்லி தோற்றவர்தான்...
-
tamilhindu
- டார்வின்மூத்த உறுப்பினர்
- பதிவுகள் : 862
இணைந்தது : 03/02/2009
யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல்veeyaar wrote:
இதுவும் இல்லாமல் தாய் மொழியான தமிழ் இரண்டாம் பட்சமாக நடத்தப் பட்ட போது திராவிட இயக்கங்கள் கொதித்தெழுந்தன.
இது தான் என்னுடைய கருத்து.
இனிதாவது எங்கும் காணோம்'' - இந்த வரிகள் பாரதியின் வரிகள். மற்ற மொழிகளை காட்டிலும் இனிதானது தமிழ் மொழி என்று பாரதி தமிழ் மொழியின் இனிமை குறித்து செய்த பிரகடனம். அவரது தாய் மொழியாம் தமிழ மொழி மீதான பற்றுதல் அல்லது ஈடுபாடு காரணமாகவோ அல்லது இன்றைய திராவிட கட்சிகளைப் போல் பகட்டுகாகவோ ஓட்டு அரசியல்களுக்காகவோ பாரதியால் எழுதப்பட்ட வார்த்தைகள் அல்ல இது.
பாரதி தமிழ் மட்டும் கற்றவனல்ல. ஆங்கிலம், இந்தி, சமஸ்கிருதம், தெலுங்கு, பிரஞ்சு போன்ற மொழிகளை கற்றிருந்ததாலும் அறிந்திருந்ததாலும் தான் அவரால் இவ்வாறு எழுதமுடிந்தது.
அதனால் மொழிகள் எதுவும் நமக்கு எதிரிகளல்ல. எல்லா மொழிகளையும் நாம் கற்றுக்கொள்ள வேண்டும். ஆனால் மற்ற மொழிகளின் மீதுள்ள ஈர்ப்பில் நமது தாய்மொழியை தூக்கி எரிந்துவிடக்கூடாது.
- vasudevan31355இளையநிலா
- பதிவுகள் : 569
இணைந்தது : 11/11/2013
வீயார் சார்
தங்கள் கருத்துடன் ஒத்துப் போகிறேன். தமிழ் நாட்டில் காங்கிரஸ் ஒரு காலத்தில் கொடி கட்டிப் பறந்தது உண்மை. திராவிட இயக்கங்களின் அபரிமிதமான வளர்ச்சி அசுரனாய் காங்கிரசை மிதிக்கத் துவங்கிய வேலையில் ஆபத்பாந்தவனாய் அந்த காங்கிரசைக் காப்பாற்றினார் நடிகர் திலகம் என்பது யாவரும் அறிந்த உண்மை. இந்த லட்சணத்தில் காங்கிரசால் ஒரு சிறு பலனைக் கூட அவர் பெற்றதில்லை. பிறப்பின் தேசிய உணர்வினாலும், காமராஜர் மேல் கொண்ட பக்தியினாலும் தமிழக மக்களிடம் தனக்கிருந்த அபரிமிதமான செல்வாக்கை அப்படியே காங்கிரசுக்கு தாரை வார்த்துக் கொடுத்தவர் நடிகர் திலகம். பின்னாளில் காங்கிரசில் பெரிய தலை என்று பேசப்பட்ட மூப்பனாரும் சரி! குமரி ஆனந்தன், ஈவிகே.எஸ்.இளங்கோவன் போன்றவர்களாய் இருந்தாலும் சரி அனைவரும் சிவாஜியால் அடையாளம் காட்டப் பட்டவர்களே! இதில் பல பெரிய தலைகள் சிவாஜி மன்றத்தில் பொறுப்பில் இருந்தவர்களும் கூட.
சிவாஜியை முழுமையாக நம்பி காங்கிரஸ் வாழ்ந்து அனுபவித்த காலங்களை அவ்வளவு எளிதாக யாரும் மறந்து விட முடியாது. அண்ணா எம்ஜியார் அவர்களை அரசியலில் எப்படியெலாம் வளர்த்தார்... எப்படியெல்லாம் தூக்கி விட்டார். ஆனால் காமராஜர்?... ஒரு ஓட்டு வாங்கிக் கொடுக்கும் எந்திரமாகத்தான் சிவாஜியைப் பயன்படுத்திக் கொண்டார். சிவாஜியை வைத்து தன்னை காப்பாற்றிக் கொண்டது காங்கிரஸ். அது மட்டுமல்ல. லட்சக்கணக்கான சிவாஜி ரசிகர்கள் தனது அபிமான நடிகரின் மேல் கொண்ட அன்பின் காரணமாக அவர் காட்டிய வழியில் காங்கிரசில் உறுப்பினராகி அக்கட்சிக்கு இரவும், பகலும் மாடு மாதிரி உழைத்தார்கள். கட்சி போஸ்டர்கள் ஓட்டுவது, சுவர் விளம்பரம் செய்வது, சிவாஜி படங்களுக்கு ரசிகர் மன்றக் காட்சிகள் நடத்தி அதைக் கட்சிக்கு நிதியாக அளிப்பது, ரசிகர் மன்ற மாநாடுகள் நடத்தி கட்சியை தூக்கி நிறுத்தியது என்று சிவாஜி ரசிகர்கள் தன் உழைப்பையும் வியர்வையையும் கொட்டித் தந்தார்கள். அத்தகைய உழைப்பைக் கொட்டிய ரசிகர்களில் நானும் ஒருவன். காங்கிரஸ் சிவாஜி அவர்கள் உழைப்பையும், அவரது பணத்தையும், அவரது ரசிகர்களின் தன்னலம் கருதாத சேவையையும் பயன்படுத்திக் கொண்டு கறிவேப்பிலையாய் அவர்களைத் தூக்கி எறிந்தது. இரவும் பகலும் பலமுறை தன் ஷூட்டிங்கை கேன்சல் செய்துவிட்டு காங்கிரசுக்காக பிரசாரம் செய்தார் சிவாஜி. ஆனால் பலவகையில் சிவாஜியையும், அவர் ரசிகர்களையும் அவமானப்படுத்தி செஞ்சோற்றுக் கடன் தீர்த்து மகிழ்ந்தது காங்கிரஸ்.
அதன் பலனாக...
இப்போது அனுபவிக்கிறது காங்கிரஸ். பாவங்கள் சும்மா விடுமா? எங்கள் சாபங்கள்தான் சும்மா விடுமா? இன்னும் அனுபவிக்கத்தான் போகிறது அது. நாங்களும் பார்க்கத்தான் போகிறோம்.
எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்ந்நன்றி கொன்ற மகற்கு.
(குறள் 110: செய்நன்றியறிதல் அதிகாரம்)

- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|