ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 12:45 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:03 am

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by ayyasamy ram Today at 8:40 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

தை மாத ராசி பலன்கள் !

Page 2 of 2 Previous  1, 2

Go down

தை மாத ராசி பலன்கள் ! - Page 2 Empty தை மாத ராசி பலன்கள் !

Post by krishnaamma Thu Jan 09, 2014 9:03 pm

First topic message reminder :

மேஷம்: வளைந்து கொடுக்கத் தெரியாததால் சில வாய்ப்புகளை நழுவவிட்ட வர்களே! தன்மானம், சுயமரியாதைக்கு அதிக முக்கியத்துவம் தருப வர்களே! நெற்றி யடியாகப் பேசும் நீங்கள், அன்பு காட்டினால் அடிப்பணிந்து வருவீர்கள். உங்களின் பூர்வ புண்யாதிபதியான சூரியன் கடந்த ஒருமாத காலமாக 9ம் வீட்டில் அமர்ந்து கொண்டு உங்களுக்கும் தந்தையாருக்கும் கருத்து மோதல்களை கொடுத்து வந்தார். செலவினங்களையும், அலைச்சல்களையும் தந்தார். அப்படிப்பட்ட சூரியன் இப்போது 10வது வீட்டில் பலமாக அமர்வதால் தடைபட்ட காரியங்கள் நல்ல விதத்தில் முடியும்.

10ம் வீட்டில் அமர்ந்து கணவன்-மனைவிக்குள் கருத்து வேறுபாடுகளை கொடுத்து வந்த சுக்கிரன் இந்த மாதம் முழுக்க வக்ரமாகி 9ல் நிற்பதால் கணவன்-மனைவிக்குள் இருந்த மோதல்கள் குறையும். அடிக்கடி பழுதான வாகனம் சீராகும். வீடு பாராமரிப்புச் செலவும் குறையும். மின்னணு, மின்சார சாதனங்களை புதிதாக வாங்குவீர்கள். ஆனால், ராசிக்கு 7ம் வீட்டில் சனி அமர்ந்து கண்டகச் சனி நடைபெறுவதாலும், ராகு 7ல் நிற்பதாலும் மனைவிக்கு அறுவை சிகிச்சை வந்துபோகும்.

சிறுசிறு விபத்துகள் ஏற்படும். மனைவிவழி உறவினர்களுடன் மனத்தாங்கல் வரும். அரசியல்வாதிகளே! புதிய பொறுப்புகளை தலைமை உங்களை அழைத்துத் தரும். கோஷ்டிப் பூசலை தவிர்க்கப் பாருங்கள். தொகுதி மக்களிடையே நெருக்கமாவீர்கள். மாணவர்களே! விடைகளை எழுதிப் பாருங்கள். அவ்வப்போது வகு ப்பறையில் அரட்டைப் பேச்சை தவிர்க்கப் பாருங்கள். கன்னிப் பெண்களே! முக்கிய முடிவுகள் எடுத்து செயல்படுவீர்கள். கூடாப்பழக்க வழக்கமுள்ள நண்பர்களை தவிர்ப்பீர்கள். நல்லவர்கள் அறிமுகமாவார்கள். உயர்கல்வியில் நாட்டம் அதிகரிக்கும்.

புதன் 10ல் தொடர்வதால் வியாபாரத்தில் புதுத் தொடர்புகள் கிடைக்கும். புதிய நண்பர்களால் வியாபாரத்தை விரிவுபடுத்தும் வாய்ப்புகள் வரும். அயல்நாட்டில் இருப்பவர்கள் மூலமாக ஆதாயம் உண்டு. புது பங்குதாரரை சேர்ப்பீர்கள். பழைய பங்குதாரருடன் இருந்து வந்த கசப்புணர்வுகள் நீங்கும். வேலையாட்கள் முரண்டு பிடிப்பார்கள். அவர்களிடம் தொழில் ரகசியங்களையெல்லாம் சொல்லிக் கொண்டிருக்க வேண்டாம். கமிஷன், புரோக்கரேஜ், ரியல் எஸ்டேட் வகைகளால் ஆதாயம் உண்டாகும்.

உத்யோகத்தில் உங்களுடைய தனித்திறமையை வெளிப்படுத்த நல்ல வாய்ப்பு கிட்டும். தொல்லை கொடுத்து வந்த அதிகாரி வேறு இடத்திற்கு மாற்றப்படுவார். புது அதிகாரியால் உற்சாகமடைவீர்கள். சிலருக்கு வேறு நல்ல வாய்ப்புகளும் வரும். கலைத்துறையினரே! பெரிய வாய்ப்புகள் கூடி வரும். படைப்புகள் வெளியாவதில் இருந்த தடைகள் நீங்கும். விவசாயிகளே! வாய்க்கால், வரப்புச் சண்டை தீரும். ஆழ்குழாய் கிணறு மூலமாக தண்ணீர் வசதி பெருகும்.

ராசியான தேதிகள்: ஜனவரி 15, 16, 21, 22, 23, 24, 30, 31 பிப்ரவரி 1, 2, 10, 12

சந்திராஷ்டம தினங்கள்: ஜனவரி 25ந் தேதி மாலை 5 மணி முதல் 26 மற்றும் 27 ஆகிய தேதிகளில் எதிலும் பொறுமையுடன் செயல்படப் பாருங்கள்.

பரிகாரம்: தஞ்சாவூருக்கு அருகேயுள்ள திருக்காட்டுப்பள்ளியில் அருள்பாலிக்கும் அக்னீஸ்வரரை தரிசியுங்கள். பசுவிற்கு அகத்திக்கீரை கொடுங்கள்.


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down


தை மாத ராசி பலன்கள் ! - Page 2 Empty Re: தை மாத ராசி பலன்கள் !

Post by krishnaamma Thu Jan 09, 2014 9:43 pm

கும்பம்: கடமை உணர்வு கொண்ட நீங்கள் காதல் வசப்படுபவர்கள். பிறர் தன்னை குற்றம் குறை கூறிக் குதர்க்கமாகப் பேசினாலும் மனம் தளரமாட்டீர்கள். கடந்தகால அனுபவங்களை மறக்காமல் வருங்காலத்தை வளமாக்கிக் கொள்வதில் வல்லவர்கள் நீங்கள்தான். உங்களின் பிரபல யோகாதிபதி வக்ரமானாலும் லாப வீட்டில் நிற்பதால் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டு. சுக்கிரன் வக்ரமாகி நிற்பதால் தங்க நகைகளை கவனமாகக் கையாளுங்கள். மறதியால் நகைகள் மற்றும் வீட்டுப் பத்திரங்களை இழந்து விடாதீர்கள்.

சூரியனும், புதனும் 12ம் வீட்டில் அமர்ந் திருப்பதால் நட்பு வட்டம் விரியும். புகழ்பெற்ற புண்ணிய தலங்களுக்குச் சென்று வருவீர்கள். தந்தைவழி சொத்துக்களிலிருந்து வந்த பிரச்னைகள் முடிவுக்கு வரும். பூர்வீகச் சொத்துப் பங்கை கேட்டு வாங்குவீர்கள். வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். 8ம் வீட்டில் செவ்வாய் மறைந்திருப்பதால் இரவுப் பயணங்களை தவிர்ப்பது நல்லது. அரசியல்வாதிகளே! தகுந்த ஆதாரமின்றி எதிர்க்கட்சியினரை தாக்கிப் பேச வேண்டாம். தொகுதி மக்கள் நலனில் அதிக கவனம் செலுத்தப் பாருங்கள். மாணவர்களே! தேர்வு நேரம் நெருங்கிவிட்டது.

படிப்பில் கவனம் செலுத்துங்கள். டி.வி. முன்னால் அதிக நேரம் உட்காராதீர்கள். சின்னச் சின்ன உடற்பயிற்சி மேற்கொள்வது நல்லது. அரட்டைப் பேச்சை கு றைக்கப் பாருங்கள். கன்னிப் பெண்களே! வீட்டில் உள்ளவர்கள் சின்னச் சின்ன அறிவுரை கூறினால் ஏற்றுக் கொள்ளுங்கள். எல்லாம் எனக்குத் தெரியும். நான் என்ன சின்னப் பெண்ணா என்றெல்லாம் மறுத்துப் பேசிக் கொண்டிருக்காதீர்கள். புது நண்பர்களால் உற்சாகமடைவீர்கள். திருமணத் தடைகள் நீங்கும்.
மூன்றாம் வீட்டிலேயே கேது நிற்பதால் வியாபாரத்தில் தைரியமாக புது முயற்சிகள் மேற்கொள்வீர்கள்.

புது முதலீடுகளும் வரும். உதவிகளும் கிடைக்கும். தானியம், புரோக்கரேஜ், கெமிக்கல், மார்க்கெட்டிங் வகைகளால் லாபமடைவீர்கள். பங்குதாரர்களால் பிரச்னைகள் வரும். வேலையாட்கள் உங்களின் புதிய திட்டங்களுக்கு ஒத்துழைப்பு தருவார்கள். உத்யோகத்தில் அலைச்சல்களும், வேலைச் சுமையும் அதிகமாகிக் கொண்டே போகும். வேலையில் நீடிப்போமோ, நீடிக்க மாட்டோமோ என்ற ஒரு அச்சமும் இருக்கும். குரு சாதகமாக இருப்பதால் உத்யோகத்தில் ஏற்படக்கூடிய பிரச்னைகள், அவமானங்களையெல்லாம் கடந்து வெற்றி பெறுவீர்கள்.

மாதத்தின் பிற்பகுதியில் தலைமைக்கு நெ ருக்கமாவீர்கள். கலைத்துறையினரே! பெரிய வாய்ப்புகள் வரும். அரைகுறையாக நின்ற வேலைகள் முடிவடையும். விவசாயிகளே! மகசூல் பெருகும். வங்கிக் கடன் உதவியும் கிடைக்கும். அரசு நலத் திட்டங்களையும் சரியாகப் பயன்படுத்தி கூடுதல் வருமானம் பெறுவீர்கள். கஷ்டப்ப ட்டாலும் காரியத்தை கச்சிதமாக முடிக்கும் மாதமிது.

ராசியான தேதிகள்: ஜனவரி 16, 17, 18, 19, 20, 26, 27, 28, 29 பிப்ரவரி 5, 6, 7, 9.

சந்திராஷ்டம தினங்கள்: ஜனவரி 21, 22 மற்றும் 23ந் தேதி நண்பகல் 12 மணி வரை புதியவர்களை நம்பி ஏமாற வேண்டாம்.

பரிகாரம்: சென்னை - மயிலாப்பூரில் அருள்பாலிக்கும் முண்டகக்கண்ணி அம்மனை தரிசித்து வாருங்கள். மாற்றுத் திறனாளிகளுக்கு உதவுங்கள்.


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

தை மாத ராசி பலன்கள் ! - Page 2 Empty Re: தை மாத ராசி பலன்கள் !

Post by krishnaamma Thu Jan 09, 2014 9:44 pm

மீனம்: மற்றவர்களின் வளர்ச் சியைக் கண்டு மகிழ்பவர்களே! பாகுபாடு பார்க்காமல் பலரிடமும் பாசமழை பொழிபவர்களே! தனக்கென எதையும் எடுத்து வைத்துக் கொள்ளா தவர்களே! மூடநம்பிக் கைகளில் மூழ்காமல் அறிவுப் பூர்வமாக சிந்திப்பவர்களே! உங்களுடைய ராசிநாதன் குரு 4ம் வீட்டிலேயே தொடர்வதால் ஓயாமல் உழைக்க வேண்டியிருக்கும். குடும்பத்தினருடன் செலவிடக்கூடிய நேரம் குறையும். திடீர் திடீரென்று கோபப்படுவீர்கள். சூரியனும், புதனும் லாப வீட்டில் அமர்ந்திருப்பதால் அரசாங்கத்தால் ஆதாயம் உண்டு. வீடு கட்டுவதற்கு சி.எம்.டி.ஏ., எம்.எம்.டி.ஏ அப்ரூவல் கிடைக்கும்.

சுக்கிரன் வக்ரமாகி 10ம் வீட்டில் நிற்பதாலும், அஷ்டமத்துச் சனி நடைபெறுவதாலும் உங்களைப் பற்றிய அவதூறுச் செய்திகள் அதிகமாகும். கூடாப்பழக்க வழக்கமுள்ளவர்களின் நட்பை தவிர்ப்பது நல்லது. சட்டத்திற்கு புறம்பான வகையில் எந்த காரியங்களிலும் ஈடுபட வேண்டாம். நெருங்கிய உறவினர்களை தவிர மற்றவர்களை வீட்டிற்குள் அழைத்து வர வேண்டாம். பணம் வாங்கித் தருவதில் குறுக்கே நிற்காதீர்கள். செவ்வாய் 7ம் வீட்டில் நிற்பதால் உங்கள் ரசனைக்கேற்ப வீடு, மனை அமையும்.
வங்கிக் கடன் உதவியும் கிடைக்கும். சொத்து வாங்க முன் பணம் தருவீர்கள். அஷ்டமத்துச் சனி நடப்பதுடன், அஷ்டமத்திலே ராகுவும் நிற்பதால் மனைவிக்கு உடல்நிலை பாதிக்கும். நேரம் கிடைக்கும்போது வீட்டு வேலைகளை மனைவியுடன் பகிர்ந்து கொள்வது நல்லது. அரசியல்வாதிகளே! எதிர்ப்புகளையும் தாண்டி முன்னேறுவீர்கள். தலைமைக்கு நெருக்கமாவீர்கள். எதிர்க்கட்சியினர் வியக்கும்படி புதிய திட்டங்கள், புது வியூகங்கள் அமைத்து கட்சியை பலப்படுத்துவீர்கள். மாணவர்களே! அலட்சியமாக இருக்காதீர்கள். நல்லவர்களுடன் பழகுங்கள். கணிதப் பாடத்தில் கூடுதல் கவனம் செலுத்தப் பாருங்கள்.

கன்னிப் பெண்களே! புது வேலை கிடைக்கும். எதிர்ப்புகளும் நீங்கும். கல்யாணப் பேச்சுவார்த்தை நல்ல விதத்தில் முடியும். வியாபாரத்தில் மாறுபட்ட அணுகுமுறையால் லாபம் ஈட்டுவீர்கள். புது வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். ஏற்றுமதி-இறக்குமதி, பெட்ரோ கெமிக்கல், ரியல் எஸ்டேட் வகைகளால் லாபம் அதிகரிக்கும். பங்குதாரர்களை மாற்றுவீர்கள். அனுபவமிக்க வேலையாட்களை பணியில் அமர்த்துவீர்கள். 10ல் சுக்கிரன் நிற்பதால் உத்யோகத்தில் கூடுதலாக வேலைபார்க்க வேண்டி வரும்.

அதிக நேரம் ஒதுக்கி உழைத்தும் மேலதிகாரிகளிடமிருந்து எந்தவித ஆதரவான வார்த்தையும் இல்லையே என்று ஆதங்கப் படுவீர்கள். முக்கிய ஆவணங்களை கவனமாகக் கையாளுங்கள். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு சுமாராக இருக்கும். அவர்களின் விடுப்பால் வேலைச்சுமை அதிகமாகும். கலைத்துறையினரே! உங்களின் கலைத்திறன் வளரும். பரிசு, பாராட்டுகள் கிடைக்கும். விவசாயிகளே! விளைச்சல் அதிகரிப்பால் மகிழ்ச்சியடைவீர்கள். பக்கத்து நிலக்காரருடன் இருந்த மனத்தாங்கல் நீங்கும். விடாப் பிடியாக முயற்சித்து விட்டதைப் பிடிக்கும் மாதமிது.

ராசியான தேதிகள்: ஜனவரி 15, 19, 20, 21, 22, 28, 29, 30, 31 பிப்ரவரி 5, 6, 9, 12.

சந்திராஷ்டம தினங்கள்: ஜனவரி 23-ந் தேதி நண்பகல் 12 மணி முதல் 24 மற்றும் 25-ந் தேதி மாலை 5 மணி வரை வேலைச்சுமை அதிகரிக்கும்.

பரிகாரம்: வேலூர் மாவட்டம் ஆரணிக்கு அருகேயுள்ள படவேடு ரேணுகாம்பாளை தரிசித்து வாருங்கள். சாலையோரம் வாழும் சிறார்களுக்கு உதவுங்கள்.


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

தை மாத ராசி பலன்கள் ! - Page 2 Empty Re: தை மாத ராசி பலன்கள் !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum