ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:28 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Yesterday at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Fri Jul 05, 2024 12:23 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனிதனோடு வாழ்ந்த இன்னொரு மனித இனம்..

+5
நவீன்
ayyasamy ram
krishnaamma
பார்த்திபன்
கவின்
9 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

மனிதனோடு  வாழ்ந்த  இன்னொரு  மனித  இனம்.. Empty மனிதனோடு வாழ்ந்த இன்னொரு மனித இனம்..

Post by கவின் Thu Jan 09, 2014 10:21 am

மனிதர்களின்
உயிரியல் பெயர்
ஹேமோ சேப்பியன்ஸ் (Homo
sapiens).

பரிணாம வளர்ச்சியில்
ஒரு செல் உயிரிகளில்
இருந்து பல வகையான
உயிர்கள் உருவாயின
என்பது டார்வினின்
கொள்கை.

அவ்வாறாக 2 மில்லியன்
ஆண்டுகளுக்கு முன்
இப்போதைய மனித இனமான
ஹேமோ சேப்பியன்ஸ்
உருவானது என்கிறது
பரிணாம விதி எனப்படும் evolution theory.

ஆனால்,
அப்போது ஹேமோ
சேப்பியன்ஸ் மட்டுமல்ல,
மேலும் ஒரு மனித இனமும்
இருந்தது என்பதை
இப்போது கண்டறிந்துள்ளனர்
விஞ்ஞானிகள்.

கென்யா நாட்டின்
துர்கானா ஏரியின்
படுகையில் நடந்த
அகழ்வாராய்ச்சியில் 2
மில்லியன்
ஆண்டுகளுக்கு முந்தைய மனித இனத்தின் எலும்புக்
கூடுகளின் படிமங்கள் (fossil)
கிடைத்துள்ளன.

துர்கானா ஏரிப் பகுதியில்
தான் ஏராளமான மிகப்
பழமையான மனித
உடல்களின் படிமங்கள்
அடுத்தடுத்து கிடைத்து
வருகின்றன. இதனால் இந்தப் பகுதிக்கு 'மனித குலத்தின்
தொட்டில்' (cradle of mankind)
என்ற பெயரே உண்டு.

இங்கு இப்போது
கிடைத்துள்ள மனித உடல்
படிமங்களை ஆராய்ந்ததில்,
அவை ஹேமோ சேப்பியன்ஸ்
இனத்தின் படிமம் அல்ல
என்பது தெரியவந்துள்ளது. மாறாக அவை மனித
இனத்தின்
இன்னொரு வகையான
உயிர்
என்பது தெரியவந்துள்ளது.

ஏற்கனவே 40
ஆண்டுகளுக்கு முன்
இதுபோன்ற ஒரு படிமும்
கிடைத்து. அதற்கு '1470' என
அடையாளப் பெயர்
சூட்டப்பட்டது. இப்போது மீண்டும்
அதே போன்ற ஒரு படிமம்
கிடைத்துள்ளது.

இந்த மனித வகையினரின்
மூளை மிகப் பெரிதாக
இருந்துள்ளதும்,
தலை நீண்டு இருந்ததும்,
அதே நேரத்தில் முகம் வட்ட
வடிவமின்றி ஒடுங்கி இருந்ததும், கீழ் தாடை மிக
மிக பலமானதாகவும்
இருந்ததும்
தெரியவந்துள்ளது.

மனித இனத்துக்கு முந்தைய
இனமாகக்
கருதப்படுபவை ஹோமோ
எரெக்டஸ் (Homo erectus),
ஹேமோ ஹபிலிஸ் (Homo
habilis) ஆகியவை. இதிலிருந்து பரிமாண
வளர்ச்சி அடைந்தே ஹேமோ
சேப்பியன்ஸ் என்ற
இப்போதைய மனித இனம்
உருவானது.


இந் நிலையில்
இப்போது கிடைத்துள்ள
படிமங்களை ஆராய்ந்ததில்
அது இன்னொரு வகையான
மனித இனம் என்பது
உறுதியாகியுள்ளது. இதற்கு Homo rudolfensis என
பெயர் சூட்டப்பட்டுள்ளது.

முன்னணி உயிரியல்
அகழ்வாராய்ச்சி
விஞ்ஞானியான
பேராசிரியர் மீவ்
லீக்கி தலைமையிலான டீம்
தான் இந்த படிமத்தை துர்கானா
ஏரியின் 10 கி.மீ.
தொலைவில்
தோண்டியெடுத்துள்ளது.
இதற்கு Homo rudolfensis என
பெயர் சூட்டியுள்ள இந்தக் குழு, இந்தப் படிமங்கள் 1.78
மில்லியன் முதல் 1.95
மில்லியன் ஆண்டுகள்
வரை பழமையானது என்றும்
கூறியுள்ளது.
கீழ் தாடை மிக பலமானதாகவும், முகம்
ஒடுங்கியும் இருப்பதைப்
பார்த்தால், இந்த இனம்
கடிப்பதில் மிக சிறந்ததாக
இருந்திருக்க வேண்டும்.
இந்த இனமும் ஹோமோ சேப்பியன் மனித
இனமும் ஒரே காலகட்டத்தில்
வசித்துள்ளனர் என்கிறார் மீவ்
லீக்கி.

இந்த ஹோமோ எரெக்டஸ்,
ஹேமோ ஹபிலிஸ்,
ஹோமோ ருடால்பெனிஸ்,
ஹோமோ சேப்பியன்ஸ்
ஆகிய எல்லா இனங்களுமே
சிம்பன்சிக்கள், போனோபோஸ் ஆகிய
குரங்கு இனங்களில்
இருந்து தான் உருவாயின
என்பது தான் பரிணாம
விதி சொல்லும்
கோட்பாடாகும்
கவின்
கவின்
பண்பாளர்


பதிவுகள் : 170
இணைந்தது : 30/09/2013

Back to top Go down

மனிதனோடு  வாழ்ந்த  இன்னொரு  மனித  இனம்.. Empty Re: மனிதனோடு வாழ்ந்த இன்னொரு மனித இனம்..

Post by பார்த்திபன் Thu Jan 09, 2014 11:31 am

மிக அபூர்வமான தகவல். பகிர்விற்கு நன்றி!
பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011

http://nilavaiparthiban.blogspot.in/

Back to top Go down

மனிதனோடு  வாழ்ந்த  இன்னொரு  மனித  இனம்.. Empty Re: மனிதனோடு வாழ்ந்த இன்னொரு மனித இனம்..

Post by krishnaamma Thu Jan 09, 2014 11:46 am

பார்த்திபன் wrote:மிக அபூர்வமான தகவல். பகிர்விற்கு நன்றி!

 ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் 


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

மனிதனோடு  வாழ்ந்த  இன்னொரு  மனித  இனம்.. Empty Re: மனிதனோடு வாழ்ந்த இன்னொரு மனித இனம்..

Post by ayyasamy ram Thu Jan 09, 2014 1:11 pm

மனிதனோடு  வாழ்ந்த  இன்னொரு  மனித  இனம்.. 103459460 
-
மனிதனோடு  வாழ்ந்த  இன்னொரு  மனித  இனம்.. EogKjrkHSKacGwl8H2mP+homo
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82813
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

மனிதனோடு  வாழ்ந்த  இன்னொரு  மனித  இனம்.. Empty Re: மனிதனோடு வாழ்ந்த இன்னொரு மனித இனம்..

Post by நவீன் Thu Apr 16, 2015 9:00 am

மனிதனோடு  வாழ்ந்த  இன்னொரு  மனித  இனம்.. HCpr63wlQlGOdarQaI2W+anu11_01மனிதனோடு  வாழ்ந்த  இன்னொரு  மனித  இனம்.. BOemhGRCSdqv5sB0iNSp+anu11_02மனிதனோடு  வாழ்ந்த  இன்னொரு  மனித  இனம்.. FwCR6iHTuWT2cHwlAGUQ+anu11_03மனிதனோடு  வாழ்ந்த  இன்னொரு  மனித  இனம்.. 9sR18vYITYCRV8u9E1xD+anu11_05


இது என்ன இனம் ... அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Back to top Go down

மனிதனோடு  வாழ்ந்த  இன்னொரு  மனித  இனம்.. Empty Re: மனிதனோடு வாழ்ந்த இன்னொரு மனித இனம்..

Post by ayyasamy ram Thu Apr 16, 2015 12:02 pm

மனிதனோடு  வாழ்ந்த  இன்னொரு  மனித  இனம்.. 103459460
-
ஆகஸ்டு 2012 ல் வந்த செய்தி....
-
இந்த ஆராய்ச்சியின் அடுத்த கட்ட செய்தி என்ன?
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82813
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

மனிதனோடு  வாழ்ந்த  இன்னொரு  மனித  இனம்.. Empty Re: மனிதனோடு வாழ்ந்த இன்னொரு மனித இனம்..

Post by monikaa sri Thu Apr 16, 2015 1:21 pm

நல்ல பதிவு.தகவலுக்கு நன்றி!
monikaa sri
monikaa sri
பண்பாளர்


பதிவுகள் : 235
இணைந்தது : 03/04/2015

Back to top Go down

மனிதனோடு  வாழ்ந்த  இன்னொரு  மனித  இனம்.. Empty Re: மனிதனோடு வாழ்ந்த இன்னொரு மனித இனம்..

Post by M.Saranya Thu Apr 16, 2015 1:49 pm

ஆச்சர்யமாக உள்ளது................



கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

மனிதனோடு  வாழ்ந்த  இன்னொரு  மனித  இனம்.. W5td1pX3QFi1kBRhH0I3+Affection
M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

Back to top Go down

மனிதனோடு  வாழ்ந்த  இன்னொரு  மனித  இனம்.. Empty Re: மனிதனோடு வாழ்ந்த இன்னொரு மனித இனம்..

Post by விமந்தனி Thu Apr 16, 2015 1:58 pm

ஆச்சர்யமான விஷயம் தான்.


மனிதனோடு  வாழ்ந்த  இன்னொரு  மனித  இனம்.. EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonமனிதனோடு  வாழ்ந்த  இன்னொரு  மனித  இனம்.. L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312மனிதனோடு  வாழ்ந்த  இன்னொரு  மனித  இனம்.. EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

மனிதனோடு  வாழ்ந்த  இன்னொரு  மனித  இனம்.. Empty Re: மனிதனோடு வாழ்ந்த இன்னொரு மனித இனம்..

Post by T.N.Balasubramanian Thu Apr 16, 2015 3:03 pm

நல்ல செய்தி தகவல்  கவின் .
இது மறுபதிவு தானே .-அப்பிடி எனில் , எங்கிருந்து இந்த செய்தியை சேகரித்தீரோ , அந்த செய்திக்கு 
ஒரு நன்றி பதிவிடவும் .

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35032
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

மனிதனோடு  வாழ்ந்த  இன்னொரு  மனித  இனம்.. Empty Re: மனிதனோடு வாழ்ந்த இன்னொரு மனித இனம்..

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum