புதிய பதிவுகள்
» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Today at 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Today at 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Yesterday at 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 7:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:56 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:40 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:16 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:17 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Yesterday at 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Yesterday at 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Yesterday at 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Yesterday at 9:22 am

» கருத்துப்படம் 06/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நாயன்மார் வாழ்த்துப்பாடல்! Poll_c10நாயன்மார் வாழ்த்துப்பாடல்! Poll_m10நாயன்மார் வாழ்த்துப்பாடல்! Poll_c10 
64 Posts - 58%
heezulia
நாயன்மார் வாழ்த்துப்பாடல்! Poll_c10நாயன்மார் வாழ்த்துப்பாடல்! Poll_m10நாயன்மார் வாழ்த்துப்பாடல்! Poll_c10 
41 Posts - 37%
mohamed nizamudeen
நாயன்மார் வாழ்த்துப்பாடல்! Poll_c10நாயன்மார் வாழ்த்துப்பாடல்! Poll_m10நாயன்மார் வாழ்த்துப்பாடல்! Poll_c10 
3 Posts - 3%
T.N.Balasubramanian
நாயன்மார் வாழ்த்துப்பாடல்! Poll_c10நாயன்மார் வாழ்த்துப்பாடல்! Poll_m10நாயன்மார் வாழ்த்துப்பாடல்! Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நாயன்மார் வாழ்த்துப்பாடல்! Poll_c10நாயன்மார் வாழ்த்துப்பாடல்! Poll_m10நாயன்மார் வாழ்த்துப்பாடல்! Poll_c10 
106 Posts - 60%
heezulia
நாயன்மார் வாழ்த்துப்பாடல்! Poll_c10நாயன்மார் வாழ்த்துப்பாடல்! Poll_m10நாயன்மார் வாழ்த்துப்பாடல்! Poll_c10 
62 Posts - 35%
mohamed nizamudeen
நாயன்மார் வாழ்த்துப்பாடல்! Poll_c10நாயன்மார் வாழ்த்துப்பாடல்! Poll_m10நாயன்மார் வாழ்த்துப்பாடல்! Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
நாயன்மார் வாழ்த்துப்பாடல்! Poll_c10நாயன்மார் வாழ்த்துப்பாடல்! Poll_m10நாயன்மார் வாழ்த்துப்பாடல்! Poll_c10 
4 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நாயன்மார் வாழ்த்துப்பாடல்!


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Wed Jan 08, 2014 6:50 am

திருமுனைப்பாடி நாட்டில் திருநாவலூர் என்னும் ஊரில் சுந்தரர் பிறந்தார். இவர் தந்தையார் பெயர் சடையனார். தாயார் பெயர் இசை ஞானியார். நம்பியாரூரன் என்பது இவரது பிள்ளைத் திருநாமம்.

நம்பியாரூரருக்குத் திருமண ஏற்பாடுகள் நடந்தன. மிக்க கோலாகலமாக மணமேடையில் நம்பியாரூரரும் மணப்பெண்ணும் வீற்றிருந்தனர். உற்றார். பெற்றோர் உறவினர் யாவரும் மணப்பந்தலில் மகிழ்வோடு இருந்தனர். மணவினைகள் தொடங்கும் நேரம். அப்பொழுது அங்கு ஒரு முதியவர் வந்து, "இதோ! இங்கு மணமகனாக வீற்றிருக்கும் நம்பியாரூரன் என்னுடைய அடிமை, இவனுக்கும் எனக்கும் ஒரு வழக்குண்டு" என்றார். திருமணம் தடைப்பட்டது.

கோபமடைந்தார் நம்பியாரூரர். "நீர் பித்தன்" என்று திட்டினார். "நான் உமக்கு அடிமையா? அதற்கான ஓலையைக் காட்டும்" என்றார். முதியவர் கையிலிருந்த ஓலையைப் பிடுங்கினார். அதைக் கிழித்து எறிந்தார். ஆனால் முதியவர் சிரித்தார். "திருவெண்ணெய் நல்லூருக்கு வாரும். நீர் எனக்கு அடிமை என்பதை அங்குக் காட்டுவேன்" என்றார். வேகமாக முன் சென்றார் முதியவர். பின் தொடர்ந்தார் நம்பியாரூரர். சுற்றத்தார் யாவரும் உடன் சென்றனர். முதியவர் திருவெண்ணெய் நல்லூர் கோயிலுள் புகுந்தார். பின் மாயமாய் மறைந்தார்.

தன்னைத் தடுத்து ஆட்கொள்ள வந்தவர் சிவபெருமான் என்பதை நம்பியாரூரர் கருதினார். ஆனந்தக் கண்ணீர் சொரிந்தார். இறை அன்பில் திளைத்து நின்ற நம்பியாரூரர், இனிய தமிழில் இறைவனைப் போற்றிப் பாடினார்

திருமணக்கோலத்தில் இறைவனால் ஆட்கொள்ளப்பெற்றவர் நம்பியாரூரர். சுந்தரமான அழகுடன் விளங்கியதால் ‘சுந்தரர்’ ஆனார். சுந்தரர் இறைவனிடம் தோழமை உறவு கொண்டார். இறைவனை நட்புரிமையில் புகழ்ந்தும் வலிந்து வேண்டியும் பல தேவாரங்கள் பாடினார். சிவத்தலங்கள் தோறும் சென்று இறைவன் பெருமைகளைப் பாடினார். மக்களுக்குத் தேவாரப் பாடல்களால் நல்வழி காட்டினார்.எப்பொழுதும் கழுத்தில் மாலைகள் அசைய அழகுடன் விளங்கினார் சுந்தரர். இருந்தும் மனத்தால் இறை அடியார்களுக்கெல்லாம் அடியவனாகத் தன்னை எண்ணினார். சிவனடியார்களை வணங்கி மதித்தார். சிவனடியார் பெயர் ஒவ்வொன்றையும் சொல்லி "இவர்க்கு நான் அடியேன்" என்று பாடினார்.


தில்லைவாழ் அந்தணர்தம் அடியார்க்கும் அடியேன்
திருநீல கண்டத்துக் குயவனார்க் கடியேன்
இல்லையே என்னாத இயற்பகைக்கும் அடியேன்
இளையான்றன் குடிமாறன் அடியார்க்கும் அடியேன்
வெல்லுமா மிகவல்ல மெய்ப்பொருளுக் கடியேன்
விரிபொழில்சூழ் குன்றையார் விறன்மிண்டற் கடியேன்
அல்லிமென் முல்லையந்தார் அமர்நீதிக் கடியேன்
ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே.


இலைமலிந்த வேல்நம்பி எறிபத்தற் கடியேன்
ஏனாதி நாதன்றன் அடியார்க்கும் அடியேன்
கலைமலிந்த சீர்நம்பி கண்ணப்பற் கடியேன்
கடவூரிற் கலயன்றன் அடியார்க்கும் அடியேன்
மலைமலிந்த தோள்வள்ளல் மானக்கஞ் சாறன்
எஞ்சாத வாட்டாயன் அடியார்க்கும் அடியேன்
அலைமலிந்த புனல்மங்கை ஆனாயற் கடியேன்
ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே.


மும்மையால் உலகாண்ட மூர்த்திக்கு மடியேன்
முருகனுக்கும் உருத்திர பசுபதிக்கும் அடியேன்
செம்மையே திருநாளைப் போவாற்கும் அடியேன்
திருக்குறிப்புத் தொண்டர்தம் அடியார்க்கும் அடியேன்
மெய்ம்மையே திருமேனி வழிபடா நிற்க
வெகுண்டெழுந்த தாதைதாள் மழுவினால் எறிந்த
அம்மையான் அடிச்சண்டிப் பெருமானுக் கடியேன்
ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே.


திருநின்ற செம்மையே செம்மையாக் கொண்ட
திருநாவுக் கரையன்றன் அடியார்க்கும் அடியேன்
பெருநம்பி குலச்சிறைதன் அடியார்க்கு மடியேன்
பெருமிழலைக் குறும்பற்கும் பேயார்க்கும் அடியேன்
ஒருநம்பி அப்பூதி அடியார்க்கும் அடியேன்
ஒலிபுனல்சூழ் சாத்தமங்கை நீலநக்கற் கடியேன்
அருநம்பி நமிநந்தி யடியார்க்கு மடியேன்
ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே.


வம்பறா வரிவண்டு மணநாற மலரும்
மதுமலர்நற் கொன்றையான் அடியலாற் பேணா
எம்பிரான் சம்பந்தன் அடியார்க்கும் அடியேன்
ஏயர்கோன் கலிக்காமன் அடியார்க்கும் அடியேன்
நம்பிரான் திருமூலன் அடியார்க்கும் அடியேன்
நாட்டமிகு தண்டிக்கும் மூர்க்கற்கும் அடியேன்
அம்பரான் சோமாசி மாறனுக்கும் அடியேன்
ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே.


வார்கொண்ட வனமுலையாள் உமைபங்கன் கழலே
மறவாது கல்லெறிந்த சாக்கியற்கும் அடியேன்
சீர்கொண்ட புகழ்வள்ளல் சிறப்புலிக்கும் அடியேன்
செங்காட்டங் குடிமேய சிறுத்தொண்டற் கடியேன்
கார்கொண்ட கொடைக்கழறிற் றறிவாற்கும் அடியேன்
கடற்காழிக் கணநாதன் அடியார்க்கும் அடியேன்
ஆர்கொண்ட வேற்கூற்றன் களந்தைக்கோன் அடியேன்
ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே.


பொய்யடிமை யில்லாத புலவர்க்கும் அடியேன்
பொழிற்கருவூர்த் துஞ்சிய புகழ்ச்சோழற் கடியேன்
மெய்யடியான் நரசிங்க முனையரையற் கடியேன்
விரிதிரைசூழ் கடல்நாகை அதிபத்தற் கடியேன்
கைதடிந்த வரிசிலையான் கலிக்கம்பன் கலியன்
கழற்சத்தி வரிஞ்சையர்கோன் அடியார்க்கும் அடியேன்
ஐயடிகள் காடவர்கோன் அடியார்க்கும் அடியேன்
ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே.


கறைக்கண்டன் கழலடியே காப்புக்கொண் டிருந்த
கணம்புல்ல நம்பிக்கும் காரிக்கும் அடியேன்
நிறைக்கொண்ட சிந்தையான் நெல்வேலி வென்ற
நின்றசீர் நெடுமாறன் அடியார்க்கும் அடியேன்
துறைக்கொண்ட செம்பவளம் இருளகற்றுஞ் சோதித்
தொன்மயிலை வாயிலான் அடியார்க்கும் அடியேன்
அறைக்கொண்ட வேல்நம்பி முனையடுவாற் கடியேன்
ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே.


கடல்சூழ்ந்த உலகெலாங் காக்கின்ற பெருமான்
காடவர்கோன் கழற்சிங்கன் அடியார்க்கும் அடியேன்
மடல்சூழ்ந்த தார்நம்பி இடங்கழிக்கும் தஞ்சை
மன்னவனாஞ் செருத்துணைதன் அடியார்க்கும் அடியேன்
புடைசூழ்ந்த புலியதள்மேல் அரவாட ஆடி
பொன்னடிக்கே மனம்வைத்த புகழ்த்துணைக்கும் அடியேன்
அடல்சூழ்ந்த வேல்நம்பி கோட்புலிக்கும் அடியேன்
ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே.


பத்தராய்ப் பணிவார்கள் எல்லார்க்கும் அடியேன்
பரமனையே பாடுவார் அடியார்க்கும் அடியேன்
சித்தத்தைச் சிவன்பாலே வைத்தார்க்கும் அடியேன்
திருவாரூர்ப் பிறந்தார்கள் எல்லார்க்கும் அடியேன்
முப்போதுந் திருமேனி தீண்டுவார்க் கடியேன்
முழுநீறு பூசிய முனிவர்க்கும் அடியேன்
அப்பாலும் அடிச்சார்ந்தார் அடியார்க்கும் அடியேன்
ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே.


மன்னியசீர் மறைநாவன் நின்றவூர்ப் பூசல்
வரிவளையாள் மானிக்கும் நேசனுக்கும் அடியேன்
தென்னவனாய் உலகாண்ட செங்கணாற் கடியேன்
திருநீல கண்டத்துப் பாணனார்க் கடியேன்
என்னவனாம் அரனடியே அடைந்திட்ட சடையன்
இசைஞானி காதலன் திருநாவ லூர்க்கோன்
அன்னவனாம் ஆரூரன் அடிமைகேட் டுவப்பார்
ஆரூரில் அம்மானுக் கன்பரா வாரே.


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக