ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 13:23

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 13:16

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 10:26

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 3:12

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Today at 0:58

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Today at 0:18

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Today at 0:16

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Today at 0:14

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Today at 0:12

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Today at 0:10

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Today at 0:09

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Today at 0:08

» புன்னகை என்பது…
by ayyasamy ram Today at 0:07

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Today at 0:07

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Today at 0:04

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Today at 0:03

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 23:59

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 23:57

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 23:56

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 23:55

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 23:54

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 23:53

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 23:52

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 19:54

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:44

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 1:05

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 0:51

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon 30 Sep 2024 - 22:39

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon 30 Sep 2024 - 22:05

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 30 Sep 2024 - 12:08

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Mon 30 Sep 2024 - 0:46

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun 29 Sep 2024 - 22:23

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:27

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:18

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:49

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 22:01

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:59

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:57

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:56

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:54

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:52

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:50

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:48

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:46

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:45

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 18:21

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat 28 Sep 2024 - 17:52

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 17:39

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat 28 Sep 2024 - 17:03

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜி.எஸ்.எல்.வி ராக்கெட் வெற்றி மூலம் புதிய வாய்ப்புகள்

Go down

ஜி.எஸ்.எல்.வி ராக்கெட் வெற்றி மூலம் புதிய வாய்ப்புகள் Empty ஜி.எஸ்.எல்.வி ராக்கெட் வெற்றி மூலம் புதிய வாய்ப்புகள்

Post by கவின் Mon 6 Jan 2014 - 10:14


இந்தியாவின்
ஜி.எஸ்.எல்.வி ராக்கெட் ஜனவரி 5 ஆம் தேதி மாலை சுமார் 2 டன் எடை கொண்ட ஜிசாட்-14 எனப்படும்
செயற்கைக்கோளை வானில் வெற்றிகரமாகச்
செலுத்தியது. இது இந்தியர்
அனைவருக்கும்
மகிழ்ச்சியை அளிக்கக்கூடிய மகத்தான சாதனை.

இஸ்ரோவின் நிபுணர்கள் பல ஆண்டுக் காலம் பாடுபட்டு உருவாக்கிய கிரையோஜெனிக்
வெற்றிகரமாகச்
செயல்பட்டது என்பது தான் இதில் குறிப்பிடத்தக்க விஷயமாகும்.

இந்த வெற்றியானது விண்வெளித் துறையில் இந்தியாவுக்குப்
பிரகாசமான வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவின் எடைமிக்க செயற்கைக்கோள்களை
ஐரோப்பிய ஏரியான் ராக்கெட் மூலம் செலுத்த அவற்றை தென் அமெரிக்காவுக்கு
எடுத்துச்
செல்வது விரைவிலேயே நின்று விடலாம்.

ஏரியான் மூலம் செலுத்துவதற்காக
ஒவ்வொரு தடவையும் ரூ 500 கோடி கட்டணம் செலுத்துகின்ற
நிலைமை அகலக்கூடும். வீண் செலவும் சிரமமும் மிச்சமாகும்.

ஜி.எஸ்.எல்.வி ராக்கெட்டின் வெற்றியில் இவற்றை விட முக்கியமான அம்சம் ஒன்று உள்ளது. அதாவது இனி நாம் இந்திய விண்வெளி வீரர் ஒருவர் அல்லது இருவரை பூமியைச்
சுற்றி வருவதற்கான வகையில் உயரே அனுப்ப வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

இவ்விதம் இந்திய விண்வெளி வீரரை அனுப்புவதற்கு
இப்போதைய ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட்டே போதும் என்பது குறிப்பிடத்தக்கது. இப்போதைய ராக்கெட்டில் பொருத்தப்பட்ட
கிரையோஜெனிக் எஞ்சின் வெற்றிகரமாகச்
செயல்பட்டதன் பலனாக நாம் இனி இந்த வகையில் சிந்திக்க முடியும்.

எந்த ஒரு ராக்கெட்டாக இருந்தாலும்
அதற்கு இரண்டு வகைத் திறன் உண்டு. ஒரு ராக்கெட் சுமார் 300 அல்லது 400 கிலோ மீட்டர் உயரத்துக்கு ஒரு செயற்கைக்கோளை சுமந்து செல்வதானால்
அதற்கு ஒரு திறன் உண்டு. மாறாக. சுமார் 36 ஆயிரம் கிலோ மீட்டர் உயரத்துக்கு ஒரு செயற்கைக்கோளை
கொண்டு செல்வதானால் வேறு திறன் என்று அளவு கணக்கு உண்டு.

இதுவரை தொடர்ந்து 24 தடவை வெற்றி கண்டுள்ள பி.எஸ்.எல்.வி.
ராக்கெட்டுக்கும்
இது மாதிரியில் இரண்டு விதத் திறன் உண்டு. அந்த ராக்கெட் மூலம் சுமார் 300 கிலோ மீட்டர் உயரத்துக்கு இரண்டு டன் சுமையை — ஒரு செயறகைக்கோளை – சுமந்து செல்ல முடியும். ஆனால் அந்த ராக்கெட்டினால் 36 ஆயிரம் கிலோ மீட்டர் உயரத்துக்கு அவ்வளவு எடையைச் சுமந்து செல்ல முடியாது. குறைந்த எடையைத் தான் அவ்வளவு உயரத்துக்குத் தூக்கிச் செல்ல முடியும்.

இத்த்டன் ஒப்பிட்டால் இப்போது வெற்றிகண்டுள்ள ஜி.எஸ்.எ;ல்.வி
ராக்கெட்டினால்
இரண்டு டன் எடையை 36 ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்துக்கு தூக்கிச் செல்ல முடியும். அந்த ராக்கெட்டை 300 கிலோ மீட்டர் உயரத்துக்குச் செலுத்தினால் போதும் என்றால் இந்த ராக்கெட்டினால் 5 டன் எடையை சுமந்து செல்ல முடியும். அதாவது இந்த ராக்கெட்டும் சரி,, இரண்டு வகைத் திறன் கொண்டது

ரஷியா, அமெரிக்கா, சீனா ஆகிய நாடுகளே இதுவரை விண்வெளி வீரர்களை உயரே அனுப்பியுள்ளன. இப்படிச் சென்றவர்கள் ஏறிச் சென்ற விண்கலங்கள் அனைத்தும் பூமியிலிருந்து சுமார் 300 கிலோ மீட்டர் உயரத்தில் தான் பறந்துள்ளன. இந்தியா ஒரு விண்கலத்தை அனுப்புவதானால் அந்த விண்கலமும் இந்த உயரத்தில் தான் பூமியைச் சுற்றுவதாக இருக்கும்.

இந்திய வீரர் ஒருவர் அல்லது இருவர் உயரே செல்வதற்கான விண்கலத்தைத்
தயாரிப்பதானால்
அது குறைந்தது 3 டன் எடை கொண்டதாக இருக்கும். ஜி.எஸ்.எல்.வி ராக்கெட்டினால்
இப்படியான
ஒரு விண்கலத்தை ( செல்ல வேண்டிய உயரம் 300 கிலோ மீட்டர் தான் என்பதால்) எளிதில் சுமந்து செல்ல இயலும்.

இந்திய
விண்வெளி அமைப்பான இஸ்ரோவிடம்
ஏற்கெனவே இந்த வகையிலான ஒரு திட்டம் உண்டு.
விண்வெளி வீரரகளை உயரே அனுப்ப
ஜி.எஸ்.எல்.வி ராக்கெட்டைப் பயன்படுத்துவது என்பது அந்தத் திட்டத்தில் அடங்கும்.

விண்வெளி வீரர்கள் ஒருவர் அல்லது இருவரை உயரே அனுப்புவதற்கான
விண்கலம் இனிமேல் தான் உருவாக்கப்பட வேண்டும். இதற்கென ஒரு விண்கலத்தை வடிவமைப்பதற்கு
ஏற்கெனவே திட்டம் உள்ளது.

மனிதன் ஏறிச் செல்வதற்கான விண்கலத்தைத்
தயாரிப்பதென்பது
அவ்வளவு எளிதல்ல. ஆனால் அது சொந்தமாக கிரையோஜெனிக்
எஞ்சினை
உருவாக்குவதைப் போல அவ்வளவு கடினமானதல்ல

இதில்
வேடிக்கை என்னவென்றால் விண்வெளி வீரர் ஒருவரை உயரே அனுப்பினால் அவர் பத்திரமாகப் பூமிக்குத் திரும்புவதில் அடங்கிய அடிப்படைப்
பிரச்சினைகளை இந்தியா ஏற்கெனவே சமாளித்து அதில் வெற்றி கண்டுள்ளது. அதாவது ஒருவரை விண்வெளிக்கு
அனுப்புவதற்கு முன்னரே அவர் பத்திரமாகப் பூமிக்குத் திரும்பச் செய்வது எப்படி என்பதை நாம் கற்றுக் கொண்டு விட்டோம்.

இந்தியா 2007 ஆம் ஆண்டில் SRE (Space Capsule Recovery Experiment) என்னும் திட்டம் ஒன்றை மேற்கொண்டது. இதன்படி பி.எஸ்.எல்.வி ராக்கெட் மூலம் 550 கிலோ எடை கொண்ட ஒரு செயற்கைக்கோள் உயரே செலுத்தப்பட்டது. பூமியைச் சுற்றி வந்த அந்த செயற்கைக்கோள் 12 நாட்களுக்குப்
பிறகு வெற்றிகரமாக கீழே இறக்கப்பட்டது. 635 கிலோ மீட்டர் உயரத்தில் பறந்து கொண்டிருந்த அந்த செயற்கைக்கோள்
சென்னைக்கு வடகிழக்கே140 கிலோ மீட்டர் தொலைவில் கடலில் மெல்ல இறங்கியது.

பின்னர் கடலோரக் காவல் படையினர் அதைக் கடலிலிருந்து மீட்டனர். நிபுணர்கள் பின்னர் அதை ஆராய்ந்த போது அது எவ்விதப் பாதிப்பும் இல்லாமல் இருந்தது.

ஒரு விண்கலம் மூலம் விண்வெளி வீரர் ஒருவரை உயரே அனுப்புவதை விட அவர் பத்திரமாக பூமிக்குத் திரும்பச் செய்வதில் தான் பிரச்சினைகள் அதிகம்.

உதாரணமாக SRE செயற்கைக்கோள்
உயரே இருந்து பூமிக்கு இ றங்குகையில் ஒரு கட்டத்தில் அதன் வேகம் மணிக்கு 29,000 கிலோ மீட்டராக இருந்தது. காற்று மண்டலம் வழியே அது இறங்க ஆரம்பித்த போது அதன் முகப்பு 2000 டிகிரி செல்சியஸ் அளவுக்கு பயங்கரமாகச் சூடேறியது. அதன் பின்பகுதியில் வெப்பம் 1400 டிகிரி செல்சியஸ் அளவுக்கு இருந்தது. இந்த வெப்பம் உள்ளே இருக்கின்ற பகுதிகளைத் தாக்காமல் தடுக்க வெளிப்புறத்தில் தகுந்த பூச்சு இருந்தது. வெப்பத்தடுப்பு ஓடுகள் பதிக்கப்பட்டிருந்தன.

சுமார் 100 கிலோ மீட்டர் உயரத்தில் முதல் பாராசூட் விரிந்தது. இதன் மூலம் அது கீழே இறங்கும் வேகம் மணிக்கு 363 கிலோ மீட்டராகக் குறைந்தது. அடுத்த பாராசூட் விரிந்த பின்னர் வேகம் மேலும் குறைந்தது. இறுதியில் அது மெல்லக் கடலில் வந்து இறங்கி மிதக்க ஆரம்பித்தது.
இந்திய விண்வெளி வீரர் இருவர்
உயரே அனுப்பப்பட்டால் அவர்கள் இவ்விதமாகத் தான் கடலில் வந்து இறங்குவர்.

SRE
செயற்கைக்கோளை வங்கக் கடலில் மெல்ல இறங்கச் செய்வதில்
வெற்றி கண்டுள்ளதன் மூலம் நாம் இந்திய விண்வெளி வீரர்கள் ஏறிச் செல்லும்
விண்கலத்தை பத்திரமாக பூமிக்குத் திரும்பச் செய்வதில் உள்ள அடிப்படைப் பிரச்சினைகளுக்கு விடை கண்டு விட்டதாகக் கூறலாம்.

இங்கு ஒன்றைக் கூறியாக வேண்டும்.
ஜி எஸ்.எல்.வி ராக்கெட் அடுத்தடுத்து இன்னும் சில தடவை வெற்றி கண்டாக வேண்டும்.
அப்போது தான் அது நம்பகமான ராக்கெட் என்பது நிரூபணமாகும்.

அது அவ்விதமே செயல்படும் என்று வைத்துக் கொண்டு இப்போது பணிக ளைத
தொடங்கினாலும் தகுந்த விண்கலத்தை உருவாக்குவத ு, அதை ஆளில்லாமல் செலுத்தி சோதிப்பது, விண்வெளி வீரர்களைத் தேர்ந்தெடுப்பது,,
பயிற்சி அளிப்பது, விண்வெளி வீரர்களை அனுப்
புதற்கான புதிய ராக்கெட் தளத்தை நிறுவுவது போன் ற
வேலைகளை செய்து முடிக் க குறைந்தது இன்னும் ஐந்து ஆண்டுகள் ஆகிவிடலாம்


-அறிவியல்புரம்
கவின்
கவின்
பண்பாளர்


பதிவுகள் : 170
இணைந்தது : 30/09/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» ஒரே ராக்கெட் மூலம் மூன்று புவி நுண்ணுணர்வு செயற்கை கோள்களை விண்ணில் செலுத்தி சீனா சாதனை !
» ஜி.எஸ்.எல்.வி., டி 3 ராக்கெட் வெற்றி பெறாதது ஏன்?
»  ஏரியன்-5 ராக்கெட் மூலம் ஜிசாட்-10 செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது
» ஒரே ராக்கெட் மூலம் 22 செயற்கைக்கோள் ஏவ திட்டம்: இஸ்ரோ தலைவர் கிரண் குமார் தகவல்
» தமிழில் எதிர்பார்த்தபடி வாய்ப்புகள் இல்லை: ஸ்ரீதிவ்யாவின் புதிய திட்டம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum