ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

எனதருமைக் கவிதைத் திருடர்களே!

+8
Muthumohamed
N.S.Mani
யினியவன்
T.N.Balasubramanian
விஸ்வாஜீ
krishnaamma
செம்மொழியான் பாண்டியன்
பார்த்திபன்
12 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

எனதருமைக் கவிதைத் திருடர்களே! - Page 2 Empty எனதருமைக் கவிதைத் திருடர்களே!

Post by பார்த்திபன் Thu Jan 02, 2014 1:33 pm

First topic message reminder :

எனதருமைக் கவிதைத் திருடர்களே! - Page 2 EIT3eSrTpOEi6vksh4db+136477

(முகநூலிலும் வேறுசில வலைப்பூக்களிலும் எனது கவிதைகளில் சில களவாடப்பட்டு வேறு சிலர் பெயரில் வெளியிடப்பட்டதைக் கண்டபோது ஏற்பட்ட உணர்வுகளை இப்படித்தான் பிரதிபலிக்க முடிந்தது என் பேனாவால்...)

எனதருமைக் கவிதைத் திருடர்களே!

எப்படிப் போகிறது உங்கள்
எழுத்துத் திருட்டு?

திருடியவரை எல்லாம் திருப்திதானே?
கடைசியாகக் களவாடிய
கவிதைகள் எத்தனை?

எப்படி இசைகிறது
உங்கள் மனம்
இந்த எச்சில் பிழைப்பிற்கு?
எப்போது உணர்வீர்கள் இது
எவ்வகையிலும் ஏற்கத்தகாததென்பதை?

அது எப்படியது?
நகலெடுத்துப் பதிந்த கவிதையை
நான்குபேர் பாராட்டும்போது
நாணமே இல்லாமல்
நன்றி சொல்ல
முடிகிறது உங்களால்?

எண்ணங்களை உருக்கி
எழுதுகோலில் இறக்கி
எதிர்பார்ப்புகளுடன் எழுதிய கவிஞனுக்கு
எப்படி வலிக்கும் என
என்றாவது எண்ணியதுண்டா?

வாசிக்கும் இதயங்களை
வார்த்தைகளால் வருடுபவனே
கவிஞன்!
வாசித்த கையோடு தன்
வலைப்பூவில் சேர்ப்பவன்
கயவன்!

எண்ணத்தில் உதிப்பதை
எழுத்தாக மாற்றும்வரைதான்
அது எழுதுகோல்!
பிறரது படைப்புகளைப்
பிரதியெடுத்து எழுதினால்
அது கன்னக்கோல்!

பிறர் கர்ப்பைத் திருடுவதும்
கற்பனையைத் திருடுவதும்
வேறல்ல ஒன்றுதான்!
கவிதையோடு சேர்த்து எங்கள்
கட்டை விரலையும்
திருடாதவரை நன்றுதான்!

எங்கள் சிந்தனைகளைத்தானே
உங்களால் திருட இயலும்?
எங்கள் சிறகுகளை....?
எங்கள் கற்பனைகளைத்தானே
உங்களால் களவாட இயலும்?
அவற்றின் கருவறையை....?

முகநூலும் முகம் சுளிக்கிறது
முக்காடு போட்டு
நீங்கள் செய்யும்
இந்த முட்டாள்தனத்தால்!
உங்கள் வலைப்பூவும் வருந்துகிறது
வக்கற்று நீங்கள்
புரியும் இவ்வஞ்சகத்தால்!

கவிதைத் திருடர்கள் உங்களுக்கு
நான் கடைசியாகச் சொல்ல
விரும்புவது இதுதான்!...

சொற்ப வரிகளாகினும்
சொந்தமாய் எழுதுங்கள்!
அமுதமேயானாலும்
அடுத்தவர் படைப்பைத்
திருடாதீர்கள்!

    - நிலவை.பார்த்திபன்
பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011

http://nilavaiparthiban.blogspot.in/

Back to top Go down


எனதருமைக் கவிதைத் திருடர்களே! - Page 2 Empty Re: எனதருமைக் கவிதைத் திருடர்களே!

Post by யினியவன் Thu Jan 02, 2014 11:31 pm

இதுக்கெல்லாம் பயந்து கவிதை எழுதுவதை நிறுத்திடாதீங்க பார்த்திபன் புன்னகை

நீங்க எழுத எழுத அவங்க திருடட்டும் - திருந்தாத ஜென்மங்கள் திருடும் ஜென்மம் எடுத்திருக்கிறார்கள் - என்ன செய்வது?



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

எனதருமைக் கவிதைத் திருடர்களே! - Page 2 Empty Re: எனதருமைக் கவிதைத் திருடர்களே!

Post by N.S.Mani Thu Jan 02, 2014 11:58 pm



காண மயில் ஆட கண்டிருந்த வான்கோழி தானும் அதுவாக பாவித்து தானும் தன் பொல்லாச்சிறகை விரித்தாடுவது போன்று ஒரு சிலர் திருடி பிழைக்க விரும்பினாலும்

"உயர உயர பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகமுடியாதது" போன்று ஒருபோதும் கவிஞ்சனாக முடியாது.

நா.செ.மணி
N.S.Mani
N.S.Mani
பண்பாளர்


பதிவுகள் : 154
இணைந்தது : 17/10/2013

Back to top Go down

எனதருமைக் கவிதைத் திருடர்களே! - Page 2 Empty Re: எனதருமைக் கவிதைத் திருடர்களே!

Post by Muthumohamed Fri Jan 03, 2014 12:04 am

கவிதை திருடர்களே இனிமேல் ஜாக்கிரதையாக இருங்கள்



எனதருமைக் கவிதைத் திருடர்களே! - Page 2 Mஎனதருமைக் கவிதைத் திருடர்களே! - Page 2 Uஎனதருமைக் கவிதைத் திருடர்களே! - Page 2 Tஎனதருமைக் கவிதைத் திருடர்களே! - Page 2 Hஎனதருமைக் கவிதைத் திருடர்களே! - Page 2 Uஎனதருமைக் கவிதைத் திருடர்களே! - Page 2 Mஎனதருமைக் கவிதைத் திருடர்களே! - Page 2 Oஎனதருமைக் கவிதைத் திருடர்களே! - Page 2 Hஎனதருமைக் கவிதைத் திருடர்களே! - Page 2 Aஎனதருமைக் கவிதைத் திருடர்களே! - Page 2 Mஎனதருமைக் கவிதைத் திருடர்களே! - Page 2 Eஎனதருமைக் கவிதைத் திருடர்களே! - Page 2 D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

எனதருமைக் கவிதைத் திருடர்களே! - Page 2 Empty Re: எனதருமைக் கவிதைத் திருடர்களே!

Post by சதாசிவம் Fri Jan 03, 2014 11:02 am

வருத்தம் அளிக்கும் செய்தியானாலும்,, இணைய உலகில் இது சர்வ சாதாரணம்....
 
திரைப்படக் பாடல்கள் பலதும் சங்கக் கவிதைகளின் திருட்டே,,,ஆனால் கண்ணதாசன், வைரமுத்து உட்பட ஒருவரும் சங்கக் கவிதைகளை கோடிட்டு காட்டியதில்லை...அனைத்தும் அவர்கள் கவிதையென உலகம் கொண்டாடுகிறது..தமிழ் இலக்கியங்களிலும் பல பாடல்கள் ஒரே சாயலுடன், பொருளுடன் வலம் வந்துள்ளது...
 
நாமும் அனைத்தையும் இணையத்தில் இலவசமாக பெற விரும்புகிறோம், திரைப்பட பாடல்கள்,,படங்கள், புத்தகங்கள் என்று பலதும் இப்பட்டியலில் வருகிறது..தயாரித்தவர் தடுத்தும்...அவருக்கு நஷ்டம் ஏற்பட்டாலும் இதையே செய்ய விரும்புகிறோம்....படைத்தவரின் உழைப்பை நாம் ஒருநாளும் மதிப்பதில்லை.
 
இணைய உலகில் மிகவும் சுலபமானது கட் காபி பேஸ்ட். தான்.சில நேரம் நன்றியுடன் வந்தாலும் வரும் பெருமையை பதிவிட்டவர் தான் வாங்குகிறார்...படைத்தவர் அல்ல என்பது தான் கசப்பான உண்மை. பல புதிர்கள், விடுகதைகள், கட்டுரைகள், கவிதைகள், சிறுகதைகள் மாறி மாறி பதிக்கப்படுகிறது
 
படித்ததில் பிடித்ததென்று ஒரு முறையேனும் பாரதி, பாரதிதாசன், கவிமணி, பட்டுக்கோட்டையார், சங்கக் கவிதைகளை நாம் பரப்ப முயற்சித்ததில்லை....காரணம் நம் கண் முன்னே வரும் கவிதைகள்(பெரும்பாலும் உரைநடைகள்) மட்டுமே நமக்கு கவிதைகளாகத் தெரிகிறது..


சதாசிவம்
எனதருமைக் கவிதைத் திருடர்களே! - Page 2 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Back to top Go down

எனதருமைக் கவிதைத் திருடர்களே! - Page 2 Empty Re: எனதருமைக் கவிதைத் திருடர்களே!

Post by T.N.Balasubramanian Fri Jan 03, 2014 12:43 pm

quote "திரைப்படக் பாடல்கள் பலதும் சங்கக் கவிதைகளின் திருட்டே,,,ஆனால் கண்ணதாசன், வைரமுத்து உட்பட ஒருவரும் சங்கக் கவிதைகளை கோடிட்டு காட்டியதில்லை...அனைத்தும் அவர்கள் கவிதையென உலகம் கொண்டாடுகிறது..தமிழ் இலக்கியங்களிலும் பல பாடல்கள் ஒரே சாயலுடன், பொருளுடன் வலம் வந்துள்ளது..."

முற்றிலும் உண்மை.
ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

எனதருமைக் கவிதைத் திருடர்களே! - Page 2 Empty Re: எனதருமைக் கவிதைத் திருடர்களே!

Post by ஜாஹீதாபானு Fri Jan 03, 2014 12:48 pm


சொற்ப வரிகளாகினும் சொந்தமாய் எழுதுங்கள்! அமுதமேயானாலும் அடுத்தவர் படைப்பைத் திருடாதீர்கள்! wrote:


வரிகள் அனைத்தும் சுடுகிறது. மிக மிக அருமை சூப்பருங்க  சூப்பருங்க  சூப்பருங்க  சூப்பருங்க 
உங்க கவிதைய படிச்சப்புறம் இனிமே ரசித்த கவிதை பதிய பயமாயிருக்கும்.சோகம்

வேறு தளத்தில் ஒரு கவிதை படித்தேன். அவரும் இப்படி கவிதை திருடுபவர்களை பற்றி எழுதி இருந்தார்.
ஆனால் அதைவிட உங்க கவிதை ரொம்ப ரொம்ப அருமை நிஜ்ஜ்ஜ்ஜமா.............


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

எனதருமைக் கவிதைத் திருடர்களே! - Page 2 Empty Re: எனதருமைக் கவிதைத் திருடர்களே!

Post by பார்த்திபன் Tue Jan 07, 2014 10:52 am

T.N.Balasubramanian wrote:திருடுவது மனதிற்கு கஷ்டத்தை கொடுக்கும்--முதல் முறை.
யாரும் கண்டுபிடிக்கவில்லை என்றால்---இன்ப மேலிட்டால் தொடருவார்கள்.
கவிதை மட்டும் இல்லை --பொருளை திருடுபவர்கள் , கதைகளை திருடுபவர்கள் ,பிறர் மனையாளை திருடுபவர்கள், இசை திருடர்கள் -அதிக அளவில் இந்தியாவில் இருக்கிறார்கள்.
நன்றி கூற நாணுபவர்கள்.
ஒப்பனையில், தான் அழகென்று பறை சாட்டுபவர்கள். --- மதியீனர்கள்.
இவற்றை தடுத்து நிறுத்த முடியுமா?
வருந்தத்தான் முடியும் -பார்த்திபன்.
ரமணியன்

உண்மைதான் ஐயா! நன்றி தங்களது மேலான கருத்திற்கு. நன்றி 
பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011

http://nilavaiparthiban.blogspot.in/

Back to top Go down

எனதருமைக் கவிதைத் திருடர்களே! - Page 2 Empty Re: எனதருமைக் கவிதைத் திருடர்களே!

Post by பார்த்திபன் Tue Jan 07, 2014 10:54 am

யினியவன் wrote:இதுக்கெல்லாம் பயந்து கவிதை எழுதுவதை நிறுத்திடாதீங்க பார்த்திபன் புன்னகை

நீங்க எழுத எழுத அவங்க திருடட்டும் - திருந்தாத ஜென்மங்கள் திருடும் ஜென்மம் எடுத்திருக்கிறார்கள் - என்ன செய்வது?

மிக்க நன்றி இனியவன்! நீங்க சொன்னா சரியாத்தான் இருக்கும்!  எனதருமைக் கவிதைத் திருடர்களே! - Page 2 1571444738 
பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011

http://nilavaiparthiban.blogspot.in/

Back to top Go down

எனதருமைக் கவிதைத் திருடர்களே! - Page 2 Empty Re: எனதருமைக் கவிதைத் திருடர்களே!

Post by பார்த்திபன் Tue Jan 07, 2014 11:00 am

N.S.Mani wrote:

காண மயில் ஆட கண்டிருந்த வான்கோழி தானும் அதுவாக பாவித்து தானும் தன் பொல்லாச்சிறகை விரித்தாடுவது போன்று ஒரு சிலர் திருடி பிழைக்க விரும்பினாலும்

"உயர உயர பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகமுடியாதது" போன்று ஒருபோதும் கவிஞ்சனாக முடியாது.

நா.செ.மணி

இன்றைய தேதியில் கவிஞனாவது என்பது அவ்வளவு பெரிய சிரமமான காரியம் என்று நான் எண்ணவில்லை. ஏனெனில் நூற்றுக்கு 20 சதவீதத் தமிழர்கள் கவிதை எழுதுவதாக ஆய்வொன்று குறிப்பிடுகிறது. எனினும் தங்களது மேலான கருத்திற்கு என் மனமார்ந்த நன்றிகள். நன்றி 
பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011

http://nilavaiparthiban.blogspot.in/

Back to top Go down

எனதருமைக் கவிதைத் திருடர்களே! - Page 2 Empty Re: எனதருமைக் கவிதைத் திருடர்களே!

Post by பார்த்திபன் Tue Jan 07, 2014 11:02 am

Muthumohamed wrote:கவிதை திருடர்களே இனிமேல் ஜாக்கிரதையாக இருங்கள்

நாம் தான் ஜாக்கிரதையாக இருக்க வேண்டியிருக்கிறது தம்பி! நன்றி உங்கள் கருத்திற்கு. எனதருமைக் கவிதைத் திருடர்களே! - Page 2 1571444738 
பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011

http://nilavaiparthiban.blogspot.in/

Back to top Go down

எனதருமைக் கவிதைத் திருடர்களே! - Page 2 Empty Re: எனதருமைக் கவிதைத் திருடர்களே!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum