ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Today at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:24 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 12:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

Top posting users this week
ayyasamy ram
2013 டாப் 25 பரபரா - Page 2 Poll_c102013 டாப் 25 பரபரா - Page 2 Poll_m102013 டாப் 25 பரபரா - Page 2 Poll_c10 
heezulia
2013 டாப் 25 பரபரா - Page 2 Poll_c102013 டாப் 25 பரபரா - Page 2 Poll_m102013 டாப் 25 பரபரா - Page 2 Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

2013 டாப் 25 பரபரா

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

2013 டாப் 25 பரபரா - Page 2 Empty 2013 டாப் 25 பரபரா

Post by சிவா Tue Dec 31, 2013 6:21 pm

First topic message reminder :

2013 டாப் 25 பரபரா - Page 2 P56
கலக நாயகனே!

வருடத்தின் விஸ்வரூபக் காமெடி! உலக நாயகனை ஊறப் போட்டு ஊறப் போட்டு அடித்தது 'விஸ்வரூபம்’. ஆழ்வார்பேட்டையில் சீரியஸ் திங்கிங்கில் இருந்த கமலுக்கு சடாரென ஒரு சிந்தனை உதிக்க, 'டி.டி.ஹெச்-சில் விஸ்வரூபத்தை ரிலீஸ் பண்ணப்போறேன்...’ என அறிவித்தார். 'இது வேலைக்காகாது...’ என தியேட்டர்காரர்கள் கொதித்தெழ, பத்திக்கிச்சு பரபரப்பு. பிரச்னை பெரிதாக, 'முதல் நாள் தியேட்டர்ல... அடுத்தநாள் டி.டி.ஹெச்-ல’ என்று துவையல் அரைத்தார். 'காரம் பத்தலையே...’ என யோசிக்கும்போதே, 'முஸ்லிம்களை இழிவாகச் சித்திரிக்கிறது படம்’ என்று அடுத்தக் கச்சேரிக்கு மைக் கட்டின முஸ்லிம் அமைப்புகள். 'படம் காமிக்கிறேன்... ஆனா, எந்தப் பிரச்னையும் இல்லைனா பிரியாணி செஞ்சு போடுவீங்களா?’ என்று லந்து கொடுத்தபடியே, 23 அமைப்புகளைக் கூட்டிப் படத்தைப் போட்டுக்காட்டினார் கமல். 'ரைட்டு, நாங்க சந்தேகப்பட்டது கன்ஃபார்ம்தான்’ என்று முஸ்லிம் அமைப்புகள் வெகுண்டெழ, கன்ஃப்யூஸானார் கமல்.

'சட்டம்-ஒழுங்குப் பிரச்னை வரும்’ என்று படத்துக்கு கேட் போட்டது தமிழக அரசு. முன்னர் 'வேட்டி கட்டியவர்தான் பிரதமர் ஆக வேண்டும்’ என்று கமல் வைத்த ஐஸில்தான் அம்மா சூடானார் என செய்திகள் வர, 'படம் ரிலீஸ் ஆகலைனா நான் நாட்டை விட்டு வெளியில போயிடுவேன்’ என்று சென்டிமென்ட் ராக்கெட்டை கமல் ஏவ, ஃபீலிங்கானான் தமிழன்.

அதற்குள் படம் ஆந்திராவில் ரிலீஸாக, வண்டி கட்டிப்போய் கூட்டம் கூட்டமாகப் பார்த்தார்கள் தமிழர்கள். முத்தரப்புப் பேச்சுவார்த்தைகள் முடிவில் சிலபல கட்களுக்குப் பிறகு விஸ்வரூபம் வெளியாக, இந்தப் பஞ்சாயத்துகளாலேயே படம் ஹிட். ஆனா, இதெல்லாம் காமெடி இல்ல பாஸ்!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down


2013 டாப் 25 பரபரா - Page 2 Empty Re: 2013 டாப் 25 பரபரா

Post by சிவா Tue Dec 31, 2013 6:30 pm

அலாப் பலாக் அமைச்சரவை!

2013 டாப் 25 பரபரா - Page 2 P56j


தமிழக அமைச்சரவை மாற்றம்தான் இந்த வருடத்திலும் இடியாப்பக் காமெடி! அமாவாசை வந்தாலே அலற ஆரம்பித்தார்கள் அ.தி.மு.க. அமைச்சர்கள். 'யாரும் தூங்கக் கூடாது... பிரம்ம முகூர்த்தத்துலகூட தூங்கக் கூடாது’ என அத்தனை பேரையும் ரவுண்டு கட்டி அடித்தார் மம்மி. 'இப்போது இங்கு வந்திருக்கும் பால்வளத் துறை அமைச்சர் அவர்கள்...’ என அறிவித்துக் கொண்டிருக்கும்போதே 'டிஸ்மிஸ்’ எனத் துண்டு சீட்டு வந்ததில், கிறுகிறுத்தது அமைச்சர்கள் ஏரியா.

பள்ளிக் கல்வி அமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட வைகைச்செல்வன், ஆசிரியர் தினத்தன்று அப்பீட்டு. 'ஓ.பி.எஸ்-க்குத் தண்ணி தெளிக்கப் போறாங்க...’ என வதந்தி கிளம்ப, அக்குளில் பவுடர் அடிக்காமலே இருந்தார் பணிவுப் பன்னீர். ரைட் சைடில் இன்டிகேட்டர் போட்டு, லெஃப்ட்டில் வண்டியை வளைக்கிற ஜெயலலிதா, ஓ.பி.எஸ்-க்குக் கூடுதல் பொறுப்பு கொடுத்ததுதான் ஜாலி ட்விஸ்ட்!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

2013 டாப் 25 பரபரா - Page 2 Empty Re: 2013 டாப் 25 பரபரா

Post by சிவா Tue Dec 31, 2013 6:30 pm

ஊதுப்பா... ஃபோர்ஸா ஊது!

சென்ற வருடம் வாங்கிய மெடல்களோடு இந்த வருடம் அமெரிக்காவில் ரெஸ்ட் போடப் போனார். இரண்டு மாதங்களுக்குப் பிறகு மதுரை திரும்பியவரை, கோரிப்பாளையம் சிக்னலில் நிறுத்திய ட்ராஃபிக் போலீஸ், 'ஊதுப்பா... ஃபோர்ஸா ஊது...’ என அதட்ட, நிலவரம் புரிந்தது அண்ணனுக்கு. ஊரில் ஒரு ஃப்ளெக்ஸ் இல்லை... பேனர் இல்லை. 'சாம்பவி மகாமுத்ரா க்ளாஸ் போகலாமா..?’ என யோசிக்கும்போதே, 'பொட்டு’ சுரேஷைப் போட்டுத் தள்ளினார்கள். உடனே டிபார்ட்மென்ட் தொப்பி மாட்டிக் கிளம்ப, 'அட்டாக்’ பாண்டி அப்ஸ்கான்ட் ஆனார். 'அடுத்து என்ன நடக்குமோ?’ என்று திகில் திருவிழா கொண்டாடினார்கள்

மிச்சமிருக்கும் அழகிரி ஆதரவாளர்கள். இந்த நிலவரக் கலவரமே புரியாமல் துரை தயாநிதி, உதயநிதி, அருள்நிதி சேர்ந்து கொண்டு 'வலைபாயுதே’விலேயே இருக்க, 'நாங்க காட்டுமிராண்டிகதேன்... இந்தக் காட்டுமிராண்டிக் கூட்டத்துக்கு என்ன பண்ணீக..?’ என கடுப்ஸிலேயே இருந்தார் அழக்ஸ். ஸ்டாலின் ஃபீவரில் தி.மு.க-வில் நடந்த பொதுக்குழு, செயற்குழு எதற்கும் போகாமல் அண்ணன் காட்டியது தனி சர்க்கஸ்!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

2013 டாப் 25 பரபரா - Page 2 Empty Re: 2013 டாப் 25 பரபரா

Post by சிவா Tue Dec 31, 2013 6:31 pm

காமெடி காம்ரேட்!

2013 டாப் 25 பரபரா - Page 2 P56k

''பொருள் முதல் வாதம் தோன்றியதே போயஸ் கார்டனில் இருந்துதான். மூலதனத்தை எழுதியது சசிகலா. ரஷ்யாவின் தலைநகரம் கொடநாடு...'' என்ற அளவுக்குத் தலைவிரித்தாடிய தா.பாண்டியனின் காமெடிகள்தான் இந்த வருடத்தின் கெக்கிளி பிக்கிளி. அ.தி.மு.க. ஆதரவுடன் ராஜ்ய சபா எம்.பி-யைப் பெற்றுவிடலாம் என்ற கனவில் தகர டப்பா அடித்தபடி கயிற்றில் நடந்த தா.பா-வைப் பார்த்து, தோழர்கள் எல்லாம் கோபத்தில் உண்டியல் உடைத்தார்கள். அந்த அளவுக்கு அறிவிக்கப்படாத அ.தி.மு.க-காரராகவே வலம் வந்தார் தா.பா. 'கூடவே சுத்துறாரே செவ்வாழை... அவருக்குத்தான் சீட்டு கிடைக்கும்’ என்று நினைத்துக்கொண்டிருக்க, தோழர்களோ டி.ராஜாவையே மறுபடியும் வேட்பாளர் ஆக்கினார்கள். ''எங்களது கட்சிக்குள் எந்த மோதலும் நடக்கவில்லை'' என திண்ணையில் தன்னிலை விளக்கம் கொடுத்த தா.பா., கொல்லைக்குப் போய் கதறியது... ஃபுல் மீல்ஸ் காமெடி!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

2013 டாப் 25 பரபரா - Page 2 Empty Re: 2013 டாப் 25 பரபரா

Post by சிவா Tue Dec 31, 2013 6:31 pm

பன்ச்சரான பவர்!

போன வருடம் பொலிகாளையாகத் திரிந்த சீனியை, இந்த வருடம் காயடித்தது காவல் துறை. ஒன் ஃபைன் டே தலைவனை போலீஸ் பொடனியில் அடித்து புழலுக்குக் கொண்டுபோக, கொந்தளித்தது தமிழகம். 'நான் தமிழ் சினிமாவின் நம்பர் ஒன் காமெடியன். என்னை வெளியில விட்டா, ஒரே வருஷத்துல எல்லாக் கடன்களையும் வட்டியோட திருப்பித் தந்துடுவேன்!’ என ஜெயில் பேட்டிகள் தட்டி அலுமினியத் தட்டு அடிகள் வாங்கினார் பவர். பவர், பயன்படுத்திய காரின் பதிவு எண்ணில் முறைகேடு என விருதுநகர் ஆர்.டி.ஓ. புகார் கொடுக்க, திடுதிப்பென்று வடநாட்டு போலீஸ் வந்து பிடித்துச் செல்ல... பவரின் புகழ் எல்லை தாண்டியது. திகாரிலும் களி தின்றவர், 'சிம்பு, ஆர்யா, சந்தானம்லாம் என் தம்பிங்க...’ எனக் கோணியில் ஆள் பிடித்தார். எல்லோரும் தெறித்து ஓட, பவருக்கு ஃப்யூஸ் போனது. இவ்வளவுக்குப் பிறகும் விக்கும் கலர் சட்டைகளும் மாட்டிக்கொண்டு வந்து, 'ரஜினி போன் பண்ணார்ல...’ என கார் பேட்டி குடுக்குதே... அதான் பவரு!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

2013 டாப் 25 பரபரா - Page 2 Empty Re: 2013 டாப் 25 பரபரா

Post by சிவா Tue Dec 31, 2013 6:32 pm

சங்கத்து ஆள அடிச்சது எவன்டா?

2013 டாப் 25 பரபரா - Page 2 P56l

2013-ல் சினிமாவில் எல்லா சங்கங்களுமே அபராதத்தில்தான் ஓடின. கேயார் - எஸ்.ஏ.சி-யின் சங்கச் சடுகுடுகள்தான் டாப் கியர். அணிலின் அப்பா மீது கேயார் குரூப் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவந்து வெற்றி பெற்றாலும், 'எந்திரிக்க மாட்டேனே...’ என ஃபெவிகால் போட்டார் எஸ்.ஏ.சி. கமிஷனர் ஆபீஸுக்குக் கூட்டத்தோடு போய் மனு கொடுத்தார் கேயார். கோர்ட் மேற்பார்வையில் சங்கத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட, இங்கிட்டு தாணு, அங்கிட்டு கேயார் என்று கும்கி - கொம்பன் விளையாட்டு ஆரம்பித்தது. 'விஜய்யின் ஆதரவு பெற்ற அணி’ என்று யாரோ கிளப்பிவிட, 'ஐயையோ எனக்கு எல்லாத் தயாரிப்பாளர்களும் வேண்டும்’ என்று பதறிப்போய் அறிக்கை விட்டார் பன்ச் தளபதி. தேர்தல் அன்று பேப்பரில் 'அம்மா ஆதரவு பெற்ற அணி’ என்று கேயார் அணியைக் குறிப்பிட்டு, சரத்குமார் விளம்பரம் செய்ய... 'சங்கத்து ஆள அடிச்சது எவன்டா....’ என ஆளாளுக்கு சூப்படித்தார்கள். கடைசியில் கேயார் வின்னடிக்க, கோர்ட்டுக்குப் போனது எதிர் அணி!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

2013 டாப் 25 பரபரா - Page 2 Empty Re: 2013 டாப் 25 பரபரா

Post by சிவா Tue Dec 31, 2013 6:33 pm

'தாதா’ தாஸ்!

அரசியல் நிலவரம் கிறுகிறுவென சரிய, 'காரெடுங்க சென்ட்ராயன்...’ என கலவரத்துக்கு கால் வெயிட்டிங்கிலேயே இருந்தார் டாக்டர். அரசியலில் கூட்டணிகள் அம்பேல் ஆனதால், மீண்டும் சாதி அரசியலைக் கையில் எடுத்தார் தாஸ். 'வேணாம் மச்சான் வேணாம் இந்த சாதி மறுப்புக் காதலு’ என்று ராமதாஸும் 'காடுவெட்டி’ குருவும் ரணகளப் பாட்டுப் பாடினார்கள். சொந்த சாதியிலேயே செல்வாக்கு இல்லாத லெட்டர்பேடு தலைவர்களைக் கூட்டி, 'அனைத்துச் சமுதாயப் பேரியக்கம்’ ஆரம்பித்தார் அய்யா. 'மதுரைக்கு வராதீங்க...’ என்று சாதிப் பூனைக்கு மணி கட்டினார் மதுரை கலெக்டர் அன்சுல் மிஸ்ரா. அப்படியே மேட்டர் பரவி, 'மருத்துவரை மறிங்கடா... மருத்துவரை மறிங்கடா...’ என ஊருக்கு ஊர் குதூகலமானார்கள். ராமநாதபுரம், கடலூர் என்று 'நோ என்ட்ரி' போர்டுகள்தான் ராமதாஸை வரவேற்றன. மாமல்லபுர சித்திரை முழு நிலவு மாநாட்டில், 'இந்தா டைமைத் தாண்டிப் பேசறோம்ல... போட்டுப் பாரு கேஸை’ என்று சவால்விட, 'அதான் சொல்லிட்டார்ல... தூக்கிர வேண்டியதுதான்...’ என ஆள் அனுப்பினார் அம்மா. திருச்சி ஜெயிலில், ''ஃபேன அஞ்சுல வை... மண் பானைல கூழ வை...'' என அந்து அவலானவர், ஒருவழியாகப் பாடுபட்டு ரிலீஸ் ஆனார்!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

2013 டாப் 25 பரபரா - Page 2 Empty Re: 2013 டாப் 25 பரபரா

Post by சிவா Tue Dec 31, 2013 6:34 pm

எங்கேருக்க அஞ்சலி... எங்கேருக்க அஞ்சலி..?

2013 டாப் 25 பரபரா - Page 2 P56m

'அஞ்சலியைக் காணும்... அஞ்சலியைக் காணும்...’ என ஒருநாள் மீடியா அலற, போட்ட வேலையைப் போட்டபடி ஓடிவந்தான் தமிழன். திடீரென வீட்டைவிட்டு எஸ்கேப்பான அஞ்சலி, தனது சித்தி பார்வதிதேவி, டைரக்டர் களஞ்சியம் மீது சரமாரியாகப் புகார் கொடுத்தார். 'என்னை சித்ரவதை பண்றாங்கோ... சொத்துக்களைப் பறிக்கிறாங்கோ...’ என

அஞ்சலி விசும்ப, ''அவ பல தடவை ஓடிப்போயிருக்கா...'' என சித்தி வெடிக்க, 'ஓ மை காட்...’ சொன்னது தமிழகம். '’இப்ப நான் தெரியுறனா...'' என தலைக்குக் குளித்துவிட்டு போட்டோவுக்கு ஓடிவந்த களஞ்சியம், ''என்னை அந்தப் புள்ள அவமானப்படுத்திருச்சு... ரகசியங்களை வெளியிடுவேன்'' என ஜாலி பிஸியானார். அஞ்சலி மீது களஞ்சியம் அவதூறு வழக்குத் தொடர, நான்கு நாட்கள் அலப்பறைகளுக்குப் பின் அஞ்சலி ஹைதராபாத் கமிஷனர் ஆபீஸில் ஆஜரானார். ''யார் மீதும் குற்றம் சுமத்த விரும்பவில்லை. மன அழுத்தத்தைக் குறைக்கவே வீட்டைவிட்டு வெளியேறினேன். இனி என் வாழ்க்கையை நானே பார்த்துக்கொள்வேன்!'' என்று பிரச்னைகளுக்கு ஃபுல்ஸ்டாப் வைத்தார்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

2013 டாப் 25 பரபரா - Page 2 Empty Re: 2013 டாப் 25 பரபரா

Post by சிவா Tue Dec 31, 2013 6:35 pm

'தூம்... தூம்... டுஃப் டாக் டுஃப் டாக்’!

டி.ஆர்-தான் 2013-ன் காமெடி ஜட்ஜ். டி.வி. நிகழ்ச்சியில் நீதிபதியாக வந்து இவர் பண்ணிய அலப்பறைகள் எல்லாம் மன்னிக்க முடியாத காமெடிகள்.

ஷோவில் வரும் உறுப்பினர்களை ஆடவிடாமல், 'டிப்ஸ் கொடுக்கிறேன்’ என்று இவர் போட்ட ஆட்டங்கள்... மன்மோகன் சிங் வரை மன உளைச்சலை ஏற்படுத்தின.

'தூம் தூம்... டுஃப் டாக் டுஃப் டுஃப் டாக்’ எனப் புத்தம்புது வார்த்தைகளை உருவாக்கி, இவர் பேய்த்தனமாக பேன் பார்க்க, அழிகிற மொழிகள் பட்டியலில் தமிழ் சல்லென்று முன்னேறியது.

மீனா, சங்கீதா என பக்கத்தில் உட்கார்ந்திருந்த ஜட்ஜ்களுக்கு எல்லாம் டெங்கு வருகிற மாதிரி ஆடிப் பாடினார். ல.தி.மு.க. கூட்டங்கள், சிம்பு லவ் மேட்டர், குத்து டான்ஸ், 'ஒருதலைக் காதல்’ ஷூட்டிங்... என எப்போதும் பிஸியாக இருக்கிற டி.ஆர்-க்கு, இந்தப் பட்டியலில் ஆல்டைம் இடம் உண்டு!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

2013 டாப் 25 பரபரா - Page 2 Empty Re: 2013 டாப் 25 பரபரா

Post by சிவா Tue Dec 31, 2013 6:36 pm

ஜிங்குச்சா... ஜிங்குச்சா... பிரதமருக்கு பஹுத் அச்சா!

2013 டாப் 25 பரபரா - Page 2 P56n

சரத்குமார்தான் 2013-ன் காமெடி ஜிங்குச்சா! வருடம் முழுக்க அவர் அடித்த அம்மா டைவ்களைப் பார்த்து, அ.தி.மு.க. அமைச்சர்களே டென்ஷனானார்கள். காலையில் தம்புள்ஸ் போடுகிற கேப்பில், 'அம்மா உணவகத்துல பொங்கல்... சான்ஸே இல்லப்பா’ என அறிக்கை விடுகிற அளவுக்குத் தொகிறியது சரத் டார்ச்சர். 'நான் உங்கள் அட்ட்டிம்ம்ம்மை...’ என சரத் ஓட்டிய காக்காக்களைக் கண்டு ஓ.பன்னீர்செல்வமும்

தா.பாண்டியனும் 'இதுக்கும் வந்துட்டாய்ங்களா...’ என ரூம் போட்டு அழுதார்கள். 'வாட்டர் பாட்டில் சூப்பரு... மினி பஸ் அச்சா....’ என இவர் பாட்டுக்கு தேங்காய் பொறுக்கலிலேயே இருக்க, 'நீங்க ஒரு கட்சிக்குத் தலைவருங்க... அக்கவுன்ட்ல எவ்வளவு இருக்கு..?’ என ராதிகாவும் ரசிகர்களும் கடுப்பிலேயே இருந்தார்கள்.

திடீரென செட்டு சேர்த்துக்கொண்டு வந்த விஷால், 'இந்த வருஷம் திருவுழால திண்டுக்கல் ரீட்டாவோட ஆடலும் பாடலும் வைக்கிறீங்க... சங்கத்துக் கணக்கைச் சொல்லுங்க சிவனாண்டி...’ எனக் கலகத்தில் இறங்க, ராதாரவி, 'வாகை’சந்திரசேகர், கிங்காங் என கான்ஃபரன்ஸிலேயே இருந்தார் தலைவர். 'இந்தியாவுக்குப் பிரதமர் ஆக அம்மாவுக்கு மட்டும்தான் தகுதி இருக்கு’ என சொல்லிவிட்டு, 'அப்ப நீங்க..?’ என்ற கேள்விக்குக் கை பிசைந்தது நான்ஸ்டாப் காமெடி.

திருநெல்வேலியில் நடந்த நிர்வாகிகள் கூட்டத்தில், ''கட்சிக்கு போட்டி போட்டுக்கொண்டு நிதி கொடுக்க வேண்டும். யார் அதிக நிதி கொடுக்கிறார்களோ, அவர்களைக் கட்டிப்பிடித்து முத்தம் கொடுப்பேன்'' என்று அதிரடியாக அறிவிக்க, 'சச்சினுக்கு முன்னாடி இவருக்குத்தான் பாரத் ரத்னா அறிவிச்சிருக்கணும்...’ என ஃபீலானான் தமிழன்!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

2013 டாப் 25 பரபரா - Page 2 Empty Re: 2013 டாப் 25 பரபரா

Post by சிவா Tue Dec 31, 2013 6:36 pm

மாங்குயிலே... பூங்குயிலே... சேதி ஒண்ணு சொல்லு!

கனகா... இந்த வருடத்தின் ரூமர் ஆன்ட்டி! 'கனகாவுக்கு கேன்சர்...’ என எவனோ நாலாவது லார்ஜில் கிளப்பிவிட, 'உருக்கிரணும்யா...’ என ஃபீலிங் ரிப்போர்ட்டர்கள் ரெக்கார்டரோடு கிளம்பினார்கள். ஆன் தி வேயில் எவனோ எட்டாவது லார்ஜில், 'கனகா இறந்துவிட்டார்’ என அடுத்த ஸ்டேட்டஸ் போட, கேமராக்களோடு கனகா வீட்டை ரவுண்ட் பண்ணியது மீடியா.

ரொம்ப நேரத்துக்குப் பிறகு புசுபுசுவென ஃபுல் ஸ்மைலில் வந்த கனகா, ''நான் நல்லாருக்கேன்... கரகம் இருக்கா... ஒரு டான்ஸ் வேண்ணா போடுறேன்...'' என சிரிக்க, 'இதுவும் நியூஸு...’ என ஜாலியானது ஏரியா. ''நான் பூனைங்க நாய்களோட நிம்மதியா இருக்கேன்... எல்லாம் எங்க அப்பா செய்ற சதி...'' என கனகா ஓட்டியது செம சீரியல். கொஞ்ச நேரத்தில் அப்பா கேரக்டரும் என்ட்ரி கொடுத்து, ''இல்லைங்க... இவ லூஸு... நான் ரொம்ப லூஸு... அதுலயும் பாத்தீங்கன்னா...'' என எபிசோடை இழுக்க... எகிறியது டி.ஆர்.பி!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

2013 டாப் 25 பரபரா - Page 2 Empty Re: 2013 டாப் 25 பரபரா

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum