ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

'மனிதனும் மிருகமும்' தொடர் 9 ('சிவாஜி என்ற மாநடிகர்')

4 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

'மனிதனும் மிருகமும்' தொடர் 9 ('சிவாஜி என்ற மாநடிகர்') Empty 'மனிதனும் மிருகமும்' தொடர் 9 ('சிவாஜி என்ற மாநடிகர்')

Post by vasudevan31355 Tue Dec 31, 2013 10:43 am

'மனிதனும் மிருகமும்' தொடர் 9 ('சிவாஜி என்ற மாநடிகர்')

தொடர்-9

'மனிதனும் மிருகமும்'

அனைவருக்கும் நடிகர் திலகத்தின் இனிய நினைவுகளோடு கூடிய என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

'மனிதனும் மிருகமும்' தொடர் 9 ('சிவாஜி என்ற மாநடிகர்') C618215c-8697-4543-be25-612de99bb1c0_zpsd0a5fc47

'வெளி வந்த நாள்: 04-12-1953

கதை வசனம் பாடல்கள் – எஸ்.டி.சுந்தரம்

இசை – எம். கோவிந்தராஜுலு நாயுடு.

ஸ்டூடியோ – ரேவதி

தயாரிப்பு – ரேவதி புரடக்ஷன்ஸ்    

இயக்கம் – கே.வேம்பு,  எஸ்.டி.சுந்தரம்

நடிக நடிகையர்:

'நடிகர் திலகம்'சிவாஜி கணேசன்
மாதுரி தேவி
எம்.என்.ராஜம்
கே. சாரங்க பாணி
டி.ஆர். ராமச்சந்திரன்
எம்.என்.கண்ணப்பா
நந்தாராம்
டி.கே. சம்பங்கி
டி.என்.சிவதாணு
ஈ.ஆர். சகாதேவன்
கே.எஸ்.சந்திரா
கல்யாணி அம்மாள்


கதை:

'மனிதனும் மிருகமும்' தொடர் 9 ('சிவாஜி என்ற மாநடிகர்') 15c9c634-dc76-4d4c-aa5f-6fb1008e642a_zpsc605802b

மாதவன் (நடிகர் திலகம்) ஒரு மனித தெய்வம். அவன் இருக்கும் ஊர் சுகபுரி. அதே ஊரில் தேவேந்திர பூபதி (நந்தாராம்) என்ற மனித மிருகம் ஒன்றும் வாழ்கிறது. மனிதன் என்று நல்லவன் ஒருவன் இருந்தால் மிருக குணம் படைத்த ஒருவன் இருப்பது இயற்கைதானே! இந்த உலகமே தனக்காகத்தான் என்று எண்ணி சுயநலத்திற்காக உயிர்களை பலி வாங்கும் உன்மத்த குணம் கொண்டவன் தேவேந்திர பூபதி. அவனுக்கு பேபி (டி.ஆர். ராமச்சந்திரன்) என்ற அரைக்கிறுக்கு மகன். பி.ஏ.மாணவன். தனது கல்லூரியில் படிக்கும் ராணியைக் (எம்.என்.ராஜம்) காதலிக்கிறான் அவன். இந்த இன்ப காதல் நாடகம் தொடர வேண்டும் என்பதற்காகவே வேண்டுமென்றே தேர்வுகளில் தோல்வியடைகிறான் அவன்.

அதே சுகபுரியில் மகேஸ்வர பூபதி என்ற லட்சாதிபதியும் இருக்கிறார். மிக நல்லவர். இவர் தேவேந்திர பூபதிக்கு சொந்தக்காரார். பெரியமனிதர். வியாபாரக் கூட்டாளியும் கூட. இவருக்கு வாணி (மாதுரி தேவி) என்றொரு பேத்தி. அழகும், குணமும் ஒருங்கே அமைந்த நல்நங்கை அவள். கல்லூரி முதல்வர் புரபொசர் சேகர் (கே. சாரங்க பாணி) என்பவரின் மகன் சுந்தரம் (எம்.என்.கண்ணப்பா) வாணி வீட்டில் மேலாளராக வேலை பார்க்கிறான். அவன் மேல் காதல் வாணிக்கு.

நம் கதை நாயகன் மாதவன் புரபொசர் சேகரின் பழைய மாணவன். தேவந்திர பூபதியின் சட்ட ஆலோசகர் ராமானுஜத்திடம் (டி.கே. சம்பங்கி) ஜூனியராக பணிபுரிகிறான் மாதவன். முதலில் மாதவன் வாணியைக் காதலிக்கிறான். ஆனால் தனது நண்பனும், கல்லூரி முதல்வர் சேகரின் மகனுமான சுந்தரத்தை வாணி காதலிக்கிறாள் என்பதை தெரிந்து கொண்ட மாதவன் தன் காதலை மறக்கிறான். அதுமாத்திரமில்லாமல் வாணியை தன் சகோதரியாகவே நினைக்கவும் ஆரம்பிக்கிறான்.

வாணியின் பெருஞ்செல்வத்தை அடைய வேண்டி கெட்டவன் தேவேந்திர பூபதி ஒரு திட்டம் போடுகிறான். வாணிக்கு தன் அரைக்கிறுக்கு மகனை திருமணம் செய்து வைத்து விட்டால் மகேஸ்வரபூபதியின் சொத்துக்கள் முழுக்க தனக்கு வந்து விடும் என்ற பேராசை அவனுக்கு. பெண் கேட்டு வாணியின் வீட்டிற்கு மகனுடன் செல்கிறான் பூபதி. அதற்கு பெண் வீட்டார் பேபி பி.ஏ பரிட்சையில் தேர்ச்சி பெற்றதும் பார்க்கலாம் என்று சொல்லி விடுகிறார்கள். தன் மகன் பேபி பரிட்சையில் எப்படியும் தேறப் போவதில்லை என்று தெரிந்த தேவேந்திர பூபதி கல்லூரி முதல்வர் சேகரை அழைத்து தன் மகன் பேபியை எப்படியாவது பி.ஏ பரிட்சையில் தேர்ச்சியடைய வைக்க வேண்டும் அதற்காக தான் லஞ்சம் கூடத் தருவதாகக் கூறுகிறான். இதற்கு சேகர் மறுக்கிறார். இதனால் கோபமுற்ற பூபதி தன் அதிகாரத்தைப் பயன்படுத்தி சேகரை கல்லூரி முதல்வர் பதவியில் இருந்து நீக்கி விடுகிறான்.

மேலும் சேகரின் மகன் சுந்தரத்தைத்தான் வாணி விரும்புகிறாள் என்பதைத் தெரிந்து கொண்ட பூபதியின் உள்ளம் பொறாமைத் தீயால் பற்றி எரிகிறது. அதனால் சேகரின் மீதும், சுந்தரத்தின் மீதும் ஆத்திரப்பட்டு அவர்களை பழி வாங்கத் திட்டமிடுகிறான்.

வாணியின் தாத்தா மகேஸ்வரபூபதி ரயிலில் பிரயாணம் செய்கையில் கொலை செய்யப் படுகிறார். உடன் பிரயாணம் செய்த சுந்தரத்தின் மீது கொலைப் பழி விழுகிறது. சுந்தரம் கைது செய்யப் பட்டு நீதி விசாரணை நடைபெறுகிறது. சுந்தரத்திற்கு ஆயுள் தண்டனை விதிக்கப் படுகிறது. இதைக் கேட்ட சுந்தரத்தின் தாய் அதிர்ச்சி தாங்க மாட்டாமல் நீதி மன்றத்திலேயே பிணமாகிறாள். மனைவி  தன் கண் முன்னமே இறந்ததைக் கண்டு அதிர்ச்சியுற்ற சுந்தரம் பைத்தியமாகிறார். சேகரின் நண்பன் டாக்டர் கண்ணன் அவரை குணமாக்கும் பொறுப்பை ஏற்றுக் கொள்கிறான். இவற்றையெல்லாம் பார்த்துக் கொண்டிருக்கும் மாதவன் மனம் கலங்குகிறான். சுந்தரத்தின் வழக்கை மறு விசாரணை செய்ய முயல்கிறான்.

இதனால் மாதவன் மேலும் ஆத்திரமடைகிறான் பூபதி. மாதவனைக் கொன்று வாணியையும் கடத்தி வர சாமி (ஈ.ஆர். சகாதேவன்) என்ற அடியாளை தடியர்கள் சிலருடன் அனுப்பி வைக்கிறான் பூபதி. சாமியும் வாணியைக் கடத்தி விடுகிறான். காப்பாற்ற வந்த மாதவனின் கால்களை ஒடித்து விடுகிறான் சாமி.

பூபதியின் கொடுமைகளுக்கு ஆளாகி சிறை வாசம் அனுபவிக்கும் சிற்பி கந்தசாமி என்பவன் நாடு விடுதலை அடைந்ததை ஒட்டி சிறையில் இருந்து விடுதளையாகிறான். பூபதியைப் பழிவாங்கத் துடிக்கிறான். பூபதியோ தேசவிரோதமான அறிவுக் கட்சியில் சேர்ந்து பிரபலமாக இருக்கிறான். பூபதி மாளிகையில் உறங்கிக் கொண்டிருக்கும் போது சிற்பி கந்தசாமி அவனைக் கத்தியால் குத்திவிட்டு ஓடி விடுகிறான். காவலர்கள் அவனைத் துரத்தும்போது வழியில் மருத்துவர் கண்ணனால் காப்பாற்றப் படுகிறான்.

பூபதி கத்தியால் குத்தப்பட்டு பைத்தியம் பிடித்தவன் போலக் குரைக்கிறான். பூபதியை குணப்படுத்த மருத்துவர் கண்ணன் அழைக்கப்படுகிறார். பூபதியை எப்பாடு பட்டேனும் பிழைக்க வைக்கும்படி கண்ணனை மாதவன் கேட்டுக் கொள்கிறான். கண்ணன் மிகவும் சிரமப்பட்டு பூபதிக்கு சிகிச்சை அளிக்கிறார். அப்போது பூபதி சுயநினைவற்று தன் ரகசியங்களை எல்லாம் உளறிக் கொட்டி விடுகிறான். பல பேரை சிறைக்கு அனுப்பிய பூபதியின் ரகசியங்கள் அவனை அறியாமல் அவன் வாயிலிருந்து வருகையில் மருத்துவர் கண்ணன் ஜாக்கிரதையாக அதை டேப் ரெகார்டரில் பதிவு செய்து விடுகிறார். அதை மாதவனிடமும் தெரியப்படுத்தி விடுகிறார்.

மாதவனின் சீரிய முயற்சியால் சுந்தரத்தின் கேஸ் மறு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப் படுகிறது. கொலைகாரன் சாமி அப்ரூவராக மாறி எல்லா உண்மைகளையும் கூறுகிறான். பூபதியின் வாக்குமூலம் பதிந்த டேப் ரெகார்டர் மூலமும் அனைத்து குற்றங்களுக்கும் பூபதிதான் காரணம் என்று தெளிவாகிறது. சுந்தரம் நிரபராதி என்று விடுவிக்கப் படுகிறான். மாதவனின் முயற்சி வெற்றியடைகிறது.

'மனிதனும் மிருகமும்' தொடர் 9 ('சிவாஜி என்ற மாநடிகர்') Ima4_0001_zps668c92fe

மிக மிக அபூர்வமான படம் இது. சிவாஜி அவர்களுடன் மாதுரிதேவி இணைந்த படம் இது. 10 வாரங்களுக்கும் மேலாக ஓடிய படம் இது. பலரும் பார்த்திருக்க வாய்ப்பு கிட்டாத படம். நானும் இப்படத்தைப் பார்த்ததில்லை. என்னிடம் இருந்த ஒரு புத்தகத்தில் இருந்து இப்படத்தின் அபூர்வமான கதையை மட்டுமே இங்கு அளித்திருக்கிறேன்.

பாடல்களின் பட்டியல்

1. ஜெகம் யாவும் சுக வாழ்வின்
2. தனி ஒருவனுக்கு உணவில்லையெனில்
3. மோட்டாருக்கு பேட்டரி போல்
4. இன்பக் குயில் குரலினிமை
5. இமய மலைச் சாரலிலே – எம்.எல்.வசந்த குமாரி
6. காலமென்னும் சிற்பி செய்யும் - எம்.எல். வசந்த குமாரி
7. உன்னை நினைக்க நினைக்க

இப்படத்தின் மேலதிக விவரங்களுக்கு உதவியாய் இருந்த திரு.ராகவேந்திரன் அவர்களுக்கு என் ஆத்மார்த்தமான நன்றி!

அன்புடன்
வாசுதேவன்
vasudevan31355
vasudevan31355
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 569
இணைந்தது : 11/11/2013

Back to top Go down

'மனிதனும் மிருகமும்' தொடர் 9 ('சிவாஜி என்ற மாநடிகர்') Empty Re: 'மனிதனும் மிருகமும்' தொடர் 9 ('சிவாஜி என்ற மாநடிகர்')

Post by vasudevan31355 Wed Jan 01, 2014 3:25 pm

'மனிதனும் மிருகமும்' தொடர் 9 ('சிவாஜி என்ற மாநடிகர்') Folder

'மனிதனும் மிருகமும்' படத்தில் எம்.எல்.வசந்த குமாரி அவர்களின் அற்புத குரல் வளத்தில் ஒலிக்கும் 'இமயமலைச் சாரலிலே' என்ற பாடல் உங்களுக்காக.

vasudevan31355
vasudevan31355
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 569
இணைந்தது : 11/11/2013

Back to top Go down

'மனிதனும் மிருகமும்' தொடர் 9 ('சிவாஜி என்ற மாநடிகர்') Empty Re: 'மனிதனும் மிருகமும்' தொடர் 9 ('சிவாஜி என்ற மாநடிகர்')

Post by jayaravi Wed Jan 01, 2014 11:28 pm

வாசு - ஒரு பார்க்காத படத்தை நன்றாக பார்த்தவர்கள் கூட விமர்சிக்க முடியாத போது , உங்களால் மட்டும்தான் இப்படி அருமையாக எழுத முடியும் - எழுத்துக்களில் இருப்பது வெறும் வார்த்தைகள் அல்ல - உங்கள் உழைப்பு - வார்த்தைகளில்  மிதப்பது வெறும் தமிழ் அல்ல - அத்தனையும் தேனில் உரிய பலா சுளைகள் - உங்கள் பதிவுகளை படிக்கத்தான் நாங்கள் எவ்வளவு கொடுத்து வைத்திருக்க வேண்டும் - நினைக்கவே மலைப்பாக இருக்கிறது !!!

அன்புடன் ரவி
 சூப்பருங்க சியர்ஸ்
jayaravi
jayaravi
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 267
இணைந்தது : 28/11/2013

Back to top Go down

'மனிதனும் மிருகமும்' தொடர் 9 ('சிவாஜி என்ற மாநடிகர்') Empty Re: 'மனிதனும் மிருகமும்' தொடர் 9 ('சிவாஜி என்ற மாநடிகர்')

Post by veeyaar Thu Jan 02, 2014 6:53 am

jayaravi wrote:வாசு - ஒரு பார்க்காத படத்தை நன்றாக பார்த்தவர்கள் கூட விமர்சிக்க முடியாத போது , உங்களால் மட்டும்தான் இப்படி அருமையாக எழுத முடியும் - எழுத்துக்களில் இருப்பது வெறும் வார்த்தைகள் அல்ல - உங்கள் உழைப்பு - வார்த்தைகளில்  மிதப்பது வெறும் தமிழ் அல்ல - அத்தனையும் தேனில் உரிய பலா சுளைகள் - உங்கள் பதிவுகளை படிக்கத்தான் நாங்கள் எவ்வளவு கொடுத்து வைத்திருக்க வேண்டும் - நினைக்கவே மலைப்பாக இருக்கிறது !!!

அன்புடன் ரவி
 சூப்பருங்க சியர்ஸ்
மேற்கோள் செய்த பதிவு: 1042306

ரவி சார்
என் மனதை அப்படியே கண்ணாடி போல் பிரதிபலித்துள்ளீர்கள்.
மிக்க நன்றி.
அன்புடன்
ராகவேந்திரன்
veeyaar
veeyaar
பண்பாளர்


பதிவுகள் : 213
இணைந்தது : 14/11/2013

Back to top Go down

'மனிதனும் மிருகமும்' தொடர் 9 ('சிவாஜி என்ற மாநடிகர்') Empty Re: 'மனிதனும் மிருகமும்' தொடர் 9 ('சிவாஜி என்ற மாநடிகர்')

Post by jayaravi Thu Jan 02, 2014 3:21 pm

வாசு - மாணிக்கவாசகருக்கு என் மனமார்ந்த   நன்றி - அவர் எழுதின திருவாசகத்தில் இருந்து ஒரு வாசகத்தை திருடி விட்டேன் , சாரி திருத்தி எழுதிவிட்டேன் - அந்த மாறுபட்ட வாசகம் உங்களுக்குதான் எவள்ளவு அழகாக பொருந்துகிறது  - என்னுடைய   சொந்த கற்பனைகள் அனைத்தும் உங்கள் பதிவுகளை படித்தபின் தீர்ந்து விட்டதால் , இப்படி திருட  வேண்டி உள்ளது , சாரி மற்ற கவிதைகளை திருத்த வேண்டி உள்ளது .  உங்கள் அடுத்த பதிவிற்கு திருநாவுக்கரசரை தொந்தரவு செய்யலாம் என்று உள்ளேன்.

அன்புடன் ரவி
 அருமையிருக்கு 


கூறும்  வாசுவே முதலாக கூறும்
காரணம் எல்லாம் நீ ,
தேறும் வகை நீ , திகைப்பும் நீ ,
நன்மை முழுதும் நீ
வேறோர் பரிசு இங்கு ஒன்றில்லை ;
மெய்ம்மை உன்னை விரிந்துரைக்கில்
தேறும் வகைஎன் ? வாசுதேவரே
திகைத்தால்   தேற்ற வேண்டாவோ ?
வேண்டத்தக்கது அறிவோய் நீ
வேண்ட முழுதுந் தருவோய் நீ
வேண்டும் கயவர்களுக்கு அரியோய்  நீ
வேண்டி எங்களை  பணி கொண்டாய்
வேண்டி நீ யாது அருள் செய்தாய்
யானும் அதுவே வேண்டின் அல்லால்
வேண்டும் பரிசு ஒன்று உண்டென்னில்
அதுவும் உன்  தன் விருப்பன்றே
jayaravi
jayaravi
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 267
இணைந்தது : 28/11/2013

Back to top Go down

'மனிதனும் மிருகமும்' தொடர் 9 ('சிவாஜி என்ற மாநடிகர்') Empty Re: 'மனிதனும் மிருகமும்' தொடர் 9 ('சிவாஜி என்ற மாநடிகர்')

Post by vasudevan31355 Sun Jan 05, 2014 3:33 pm

jayaravi wrote:வாசு - மாணிக்கவாசகருக்கு என் மனமார்ந்த   நன்றி - அவர் எழுதின திருவாசகத்தில் இருந்து ஒரு வாசகத்தை திருடி விட்டேன் , சாரி திருத்தி எழுதிவிட்டேன் - அந்த மாறுபட்ட வாசகம் உங்களுக்குதான் எவள்ளவு அழகாக பொருந்துகிறது  - என்னுடைய   சொந்த கற்பனைகள் அனைத்தும் உங்கள் பதிவுகளை படித்தபின் தீர்ந்து விட்டதால் , இப்படி திருட  வேண்டி உள்ளது , சாரி மற்ற கவிதைகளை திருத்த வேண்டி உள்ளது .  உங்கள் அடுத்த பதிவிற்கு திருநாவுக்கரசரை தொந்தரவு செய்யலாம் என்று உள்ளேன்.

அன்புடன் ரவி
 அருமையிருக்கு 


கூறும்  வாசுவே முதலாக கூறும்
காரணம் எல்லாம் நீ ,
தேறும் வகை நீ , திகைப்பும் நீ ,
நன்மை முழுதும் நீ
வேறோர் பரிசு இங்கு ஒன்றில்லை ;
மெய்ம்மை உன்னை விரிந்துரைக்கில்
தேறும் வகைஎன் ? வாசுதேவரே
திகைத்தால்   தேற்ற வேண்டாவோ ?
வேண்டத்தக்கது அறிவோய் நீ
வேண்ட முழுதுந் தருவோய் நீ
வேண்டும் கயவர்களுக்கு அரியோய்  நீ
வேண்டி எங்களை  பணி கொண்டாய்
வேண்டி நீ யாது அருள் செய்தாய்
யானும் அதுவே வேண்டின் அல்லால்
வேண்டும் பரிசு ஒன்று உண்டென்னில்
அதுவும் உன்  தன் விருப்பன்றே

ஐயோ என்ன சார் அநியாயம் இது! திருவாசகம் எங்கே! நான் எங்கே! எங்கேயோ போய் விட்டீர்களே! தங்கள் அன்பிற்கு எல்லையே இல்லையா?

ஆனால் தங்கள் அதீதப் புலமைக்கு என் வந்தனங்கள். திருவாசகத்திற்கு உருகாதார் ஒரு வாசகத்திற்கும் உருகார். தங்களுக்குத் தெரியாத விஷயமே இல்லை போல் இருக்கிறது.
vasudevan31355
vasudevan31355
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 569
இணைந்தது : 11/11/2013

Back to top Go down

'மனிதனும் மிருகமும்' தொடர் 9 ('சிவாஜி என்ற மாநடிகர்') Empty Re: 'மனிதனும் மிருகமும்' தொடர் 9 ('சிவாஜி என்ற மாநடிகர்')

Post by veeyaar Sun Jan 05, 2014 3:59 pm

வாசு சார்
மனிதனும் மிருகமும் மிகவும் அருமையான திரைப்படம். நான் பல ஆண்டுகளுக்கு முன் ஒரு முறை பார்த்தேன் என்றாலும் அதிகம் நினைவில்லை. எஸ்.டி.சுந்தரம் அவர்களின் வசனங்கள் உயிரோட்டமாக இருக்கும்.
வாழ்நாளில் அதை மீண்டும் பார்த்தே ஆக வேண்டும் என்று துடிக்கிறேன்.
நடிகர் திலகம் தான் அருள் பொழிய வேண்டும்.
veeyaar
veeyaar
பண்பாளர்


பதிவுகள் : 213
இணைந்தது : 14/11/2013

Back to top Go down

'மனிதனும் மிருகமும்' தொடர் 9 ('சிவாஜி என்ற மாநடிகர்') Empty Re: 'மனிதனும் மிருகமும்' தொடர் 9 ('சிவாஜி என்ற மாநடிகர்')

Post by veeyaar Sun Jan 05, 2014 4:00 pm

ரவி சார்
தங்களுடைய உன்னதமான மொழியாற்றலில் நாங்கள் திக்குமுக்காடுகிறோம்.
பாராட்ட வார்த்தையில்லாமல் தவிக்கிறோம்.
veeyaar
veeyaar
பண்பாளர்


பதிவுகள் : 213
இணைந்தது : 14/11/2013

Back to top Go down

'மனிதனும் மிருகமும்' தொடர் 9 ('சிவாஜி என்ற மாநடிகர்') Empty Re: 'மனிதனும் மிருகமும்' தொடர் 9 ('சிவாஜி என்ற மாநடிகர்')

Post by vasudevan31355 Sun Jan 05, 2014 4:08 pm

veeyaar wrote:வாசு சார்
மனிதனும் மிருகமும் மிகவும் அருமையான திரைப்படம். நான் பல ஆண்டுகளுக்கு முன் ஒரு முறை பார்த்தேன் என்றாலும் அதிகம் நினைவில்லை. எஸ்.டி.சுந்தரம் அவர்களின் வசனங்கள் உயிரோட்டமாக இருக்கும்.
வாழ்நாளில் அதை மீண்டும் பார்த்தே ஆக வேண்டும் என்று துடிக்கிறேன்.
நடிகர் திலகம் தான் அருள் பொழிய வேண்டும்.

நிச்சயம் தங்கள் எண்ணம் நடிகர் திலகத்தின் ஆசிகளினால் நிறைவேறும் சார். நாம் நிச்சயம் நமக்கு இதுவரை கிடைக்காத திலகத்தின் படங்களை ஒன்று சேர்ந்து பார்க்கத்தான் போகிறோம். இது உறுதி.
vasudevan31355
vasudevan31355
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 569
இணைந்தது : 11/11/2013

Back to top Go down

'மனிதனும் மிருகமும்' தொடர் 9 ('சிவாஜி என்ற மாநடிகர்') Empty Re: 'மனிதனும் மிருகமும்' தொடர் 9 ('சிவாஜி என்ற மாநடிகர்')

Post by vasudevan31355 Mon Jan 13, 2014 10:09 am

தொடரின் அடுத்த நடிகர் திலகத்தின் ஆய்வுப்படம்

'மனிதனும் மிருகமும்' தொடர் 9 ('சிவாஜி என்ற மாநடிகர்') Large_974e1db9c8_manohara
vasudevan31355
vasudevan31355
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 569
இணைந்தது : 11/11/2013

Back to top Go down

'மனிதனும் மிருகமும்' தொடர் 9 ('சிவாஜி என்ற மாநடிகர்') Empty Re: 'மனிதனும் மிருகமும்' தொடர் 9 ('சிவாஜி என்ற மாநடிகர்')

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum