ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அனுமன் போட்ட பிள்ளையார் சுழி!

+3
ந.கார்த்தி
ராஜா
krishnaamma
7 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

அனுமன் போட்ட பிள்ளையார் சுழி! - Page 2 Empty அனுமன் போட்ட பிள்ளையார் சுழி!

Post by krishnaamma Mon Dec 30, 2013 8:34 pm

First topic message reminder :

அனுமன் போட்ட பிள்ளையார் சுழி! - Page 2 TLkVnMXRwa4NC8vihzay+images

"அம்மா... வடை பண்றியா? வாசனை கமகமன்னு வருது...!'"ஸ்கூல்ல இருந்து வர்றப்பவே மூக்கு நமநமன்னுடுமே உனக்கு! கொஞ்சம் பொறு ஆஞ்சநேயருக்கு நைவேத்தியம் செய்துட்டு தரேன்...'"அனுமான்னு சொன்னதும் எனக்கு ஒரு விஷயம் ஞாபகம் வருதும்மா. இன்னிக்கு எங்க ஸ்கூல்ல டீச்சர் ராமாயண சம்பவம் ஒன்னை சொன்னாங்க.. அதை சொல்றதுக்கு முன்னால உங்கிட்டே ஒரு கேள்வி! ராமர் வனவாசம் செய்தப்ப தன்னோட மனைவி சீதையைப் பறிகொடுத்துட்டு ரொம்ப வருத்தப்பட்டார் இல்லையா?'

"ஏய்... ராமாயணம் எல்லாம் எனக்குத் தெரியும்.. நீ சீக்கிரம் கேள்வியைச் சொல்லு!'"ராமரோட துன்பம் தீர்ந்து போகறதுக்காக பிள்ளையார் சுழி எப்ப, யாரால் போடப்பட்டது?'"என்னடீ கேள்வி இது? ராமாயணத்துல பிள்ளையார் சுழியா?'"ஆமாம். தெரிஞ்சா சொல்லு. இல்லைனா நான் சொல்றேன்.'"நீயே சொல்லு. நான் கேட்டுக்கிட்டே வடையைத் திருப்பி விடறேன். இந்த யோசனையோட வடை செஞ்சா, ஒண்ணு அது வேகாது, இல்லைன்னா தீய்ஞ்சுடும்!'

"ராமபிரானோட வருத்தங்கள் எல்லாம் மறையறதுக்காக பிள்ளையார் சுழி போட்டவர், அனுமார்.'"புரியுது. வனவாசம் வந்த ராமரை, ஆஞ்சநேயர் சந்திச்சதை சொல்றே, கரெக்டா?' "ஊஹூம்.. அப்போல்லாம் ராமரோட கஷ்டம் தீர்றதுக்கான முயற்சி எதுவுமே தொடங்கப்படலை. வாலி வதத்துக்கு அப்புறம் சீதையைத் தேடிக்கிட்டு வானரங்கள் புறப்பட்டப்ப, அனுமன் தெற்குப் பக்கமா போய் தேடறேன்னு புறப்பட்டார் இல்லையா? அப்பதான் ஆஞ்சநேயர் பிள்ளையார் சுழி போட்டார்.'
"இது என்ன புதுக்கதை?'
"புதுக்கதை இல்லைம்மா.. பழைய கதைதான். இலங்கை நோக்கி தாவறதுக்காக அனுமன் மகேந்திரமலைமேல் ஏறி, வாலைத் தலைக்கு மேலே உயர்த்தி இடதுகாலை தென்திசை நோக்கி நகர்த்தி கம்பீரமாக நின்னார் இல்லையா?
தென்னிலங்கை புறப்படத் தயாரா இருந்த மாருதியோட உயர்த்திய வாலையும், நகர்த்திய திருவடியையும் ஒரு கோட்டுல வைச்சுப் பார்த்தா, பிள்ளையார் சுழி போட்டது மாதிரி இருக்கும்!'

"ஒரு நிமிஷம் இரு... மனசுல அந்த வடிவத்தை நினைச்சுப் பார்க்கறேன். அட ஆமாம். இதை உங்க டீச்சர் சொன்னாங்களா?'
"ம்.. அவங்க ஒரு ஆஞ்சநேயர் கோயிலுக்கு போயிட்டு வந்தாங்களாம். அங்கே மூலவரைப் பார்த்தப்பதான் இந்த எண்ணம் அவங்களுக்கு வந்துச்சாம்.'"அப்பன்னா, கோயிலைப் பத்தியும் சொல்லியிருப்பாங்களே?'

"ம்... சொன்னாங்க. சொல்றேன். சுமார் முன்னூறு வருஷத்துக்கு முன்னால, சென்னை, சென்னப்பட்டணமா இருந்த காலத்துல அமைஞ்ச ஆஞ்சநேயர் கோயிலாம் அது. மைசூர்ல வாழ்ந்த சாலிவாகன மரபுக்காரங்க சிலர், இங்கே குடிபெயர்ந்து வந்தப்ப தங்களோட குல தெய்வமான அனுமந்தராயரை இங்கே எடுத்துகிட்டு வந்து பிரதிஷ்டை செய்திருக்காங்க.

தெலுங்கு பேசும் அந்த மக்கள் எடுத்துக்கிட்டு வந்து ராமநாமம் சொல்லிக் கும்பட்டதால மகிழ்ந்த அனுமன், பக்கத்துல அமைஞ்சிருக்கற சமஸ்கிருதக் கல்லூரியில இருந்து தினமும் வேதமந்திரங்கள் கேட்டதால மேலும் சந்தோஷம் அடைஞ்சு நற்பலன்களை வாரிவழங்கத் தொடங்கினாராம். அன்றைய வரம் தர ஆரம்பிச்ச வாயுமகன் இன்றும் அதை நிறுத்தாம தொடர்றதால அவரோட பக்தர்கள் எண்ணிக்கை பலமடங்கு அதிகரிச்சு, கோயிலும் கோபுரம், மண்டபம்னு வளர்ந்து கம்பீரமா காட்சி தருது.
மேற்கு பார்த்து இருக்கற கோயிலோட கோபுரத்துக்கு தலைவணங்கி உள்ளே நுழைஞ்சா, நேர் எதிர் சன்னதியில இருக்கார் வீர ஆஞ்சநேயர். மூர்த்தி சிறிதானாலும் இவரோட கீர்த்தி ரொம்ப அபாரமானதாம்.
தெற்கு நோக்கி அடியெடுத்துவைக்கிற பாவனையில இருக்கற அனுமன், ஒரு கையால அபயம் காட்டறார். இன்னொரு கையில கதாயுதம் இருக்கு. ரொம்ப அபூர்வமான அர்த்த சிலா ரூபத்துல அமைஞ்சிருக்கற மாருதியோட திருமேனியில ஒர கண் மட்டும்தான் நமக்குத் தெரியும்.

கங்கணம், கேயூரம், தண்டை எல்லாம் அணிஞ்சு தாமரை மலர்மேல திருவி பதிச்சு காட்சிதர்ற இவரோட தோற்றத்துக்கு ஏற்ற மாதிரி, வீர ஆஞ்சநேயர்னு திருநாமம். அதேசமயம், எந்தப் பிரார்த்தனையையும் உடனே நிறைவேற்றி வைக்கிறவர் இவர்ங்கறதால, வாஞ்சிதார்த்த பிரதாயனன் அப்படின்னும் சொல்றாங்க. இந்தப் பேருக்கு, உடனுக்குடன் அருள்பவர்னு அர்த்தமாம்.
தலைதொட்டு வால் நுனிவளைந்து உயர்ந்து இருக்க, இடக்காலை முன்வைத்து தென் திசை நோக்கி இருக்கற அனுமனை தரிசிக்கறப்ப, ராமபிரானுடைய கஷ்டங்கள் நீங்க இலங்கை நோக்கி அடியெடுத்து வைச்சு பிள்ளையார் சுழி போட்ட சம்பவம் மனசுல காட்சியா வருது. அதோட, அவதார புருஷனின் துயரம் தீர உதவிய இவர், நம்முடைய சங்கடங்கள் நீங்கவும் அருள்புரிவார் என்ற நம்பிக்கை எழுது.

மூலவருக்கு முன்னாலேயே உற்சவரும் இருக்கார். பக்கத்துலயே ராமருக்கு தனிச் சன்னதி இருக்கு. ராமர்கூட அவரோட தாரமும் தம்பியும் இருக்காங்க. தாசபாவத்துல அனுமனும் கூட இருக்கார்.

ஸ்ரீதேவி, பூதேவி சமேதரா, ருக்மணி தாயார், ஆண்டாள் உடன் இருக்க வேணுகோபாலரும் இந்தக் கோயில்ல இருக்கார்.
கோயிலை வலம் வந்தா சொர்க்க லோகத்தையே சுற்றிவந்த மாதிரி மனசுபூரா நிம்மதி நிறையுது..'

"இப்படியெல்லாம் எங்க டீச்சர் சொன்னதைக் கேட்டதும், எனக்கும் அந்தக் கோயிலுக்குப் போகணும்னு ஆசை வந்திடுச்சும்மா?'
"கண்டிப்பா போகலாம். இதோ வடை ரெடியாயிடுச்சு.. முதல்ல அனுமனுக்கு வடைமாலை சாத்தறதுதான் ரொம்ப பிரசித்தமாம். தினம் தினம் யாராவது பக்தர்கள் வடமாலை சாத்திக்கிட்டே இருப்பாங்களாம். வியாழன், சனிக்கிழமைகள்ல இந்த வேண்டுதல் அதிகமாகவே இருக்குமாம்.

ஆரம்ப காலத்துல இருந்து எத்தனையோ பிரபலங்கள் இந்த அனுமனை தரிசிக்கறதை வழக்கமா கொண்டிருக்காங்களாம். கம்பர், தான் எழுதின ராமாயணத்தை ஸ்ரீரங்கம் கோயில்ல அரங்கேற்ற செய்த மாதிரி, மூதறிஞர் ராஜாஜி, சக்ரவர்த்தித் திருமகன்கற பேர்ல ராமாயணத்தை எழுதினதும் இந்தக் கோயில்ல வைச்சுதான் அரங்கேற்றம் செய்தாராம்.

அனுமத் ஜெயந்தி, ஸ்ரீராம நவமி தினங்கள், புரட்டாசி, மார்கழி மாதங்கள், வைகுண்ட ஏகாதசி இப்படி வருஷத்துல பல முறை திருவிழா நடக்குது இந்தக் கோயில்ல. இந்த வருஷம், புத்தாண்டு தினத்தன்னிக்கே அனுமத் ஜெயந்தி வர்றதால, அன்னிக்கு கூட்டம் அதிகமா இருக்கும், அர்ச்சனை ஆராதனை பண்றது சிரமம் என்பதால முன்கூட்டியே 28.12.2013ம் தேதியில் இருந்து 31.12.2013 வரைக்கும் லட்சார்ச்சனை பண்றாங்களாம்! அவசியம் நாமளும் போயிட்டு வரணும்மா!'

"நீ சொன்னதை எல்லாம் கேட்டதும், வாழ்க்கைல பிரச்சனை உள்ள ஒவ்வொருத்தரும் அவசியம் போயிட்டு வர வேண்டிய கோயில் இதுன்னு புரியுது. கண்டிப்பா நாமளும் போயிட்டு வருவோம்.'

எங்கே இருக்கு: சென்னை மயிலாப்பூரில் லஸ் பேருந்து நிறுத்தத்தில் இருந்து சுமார் அரை கி.மீ. தொலைவில் தண்ணீர்துரை மார்க்கெட் அருகே உள்ளது ஸ்ரீவீர ஆஞ்சநேயர் கோயில்.

தரிசன நேரம்: காலை 7 மணி முதல் 11 மணி, மாலை 5 மணி முதல் 8.30 மணி வரை.


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down


அனுமன் போட்ட பிள்ளையார் சுழி! - Page 2 Empty Re: அனுமன் போட்ட பிள்ளையார் சுழி!

Post by krishnaamma Thu Jan 02, 2014 9:22 pm

jayaravi wrote:இந்த ஸ்லோகத்தின் கடைசி இரண்டு வரிகள் தெரியவில்லை - யாராவது உதவி செய்ய முடியுமா ? - இந்த சுலோகம் கணபதியை பற்றியது

" திருவும் கல்வியும் சீரும் சிறப்பும்
உன் திருவடி  புகழ் பாடும் திறமும்
நல் உருவமும் , ஊக்கமும்  தந்து
என் உள்ளத்தில் அமர்ந்தவா
குருவும் தெய்வமும்மாகி
அன்பாளர்கள் தம் குறை தவிர்க்கும்
குணம் பெரும் குன்றமே -----------
---------------------------------------------??

அன்புடன் ரவி
 சிரி 
மேற்கோள் செய்த பதிவு: 1042359

திருவும் கல்வியும் சீரும் சிறப்பும்

உன்திருவடி புகழ்பாடும் திறமும்

நல் உருவும் சீலமும் ஊக்கமும்

தாழ்வுறா மனமும் தந்தெனதுள்ளத்தமர்ந்தவா

குருவும் தெய்வமுமாகி அன்பாளர்தம்

குறை தவிர்க்கும் குணப்பெரும் குன்றமே

வெருவும் சிந்தை விலக கஜானனம்

ஓகே வா ரவி புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

அனுமன் போட்ட பிள்ளையார் சுழி! - Page 2 Empty Re: அனுமன் போட்ட பிள்ளையார் சுழி!

Post by jayaravi Thu Jan 02, 2014 9:45 pm

ரொம்ப நன்றி - கடைசி இரண்டு வரிகள் வேறு மாதிரியாக இருக்கும் - சரியான வரிகள் கிடைக்குமா ?
jayaravi
jayaravi
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 267
இணைந்தது : 28/11/2013

Back to top Go down

அனுமன் போட்ட பிள்ளையார் சுழி! - Page 2 Empty Re: அனுமன் போட்ட பிள்ளையார் சுழி!

Post by krishnaamma Thu Jan 02, 2014 9:53 pm

jayaravi wrote:ரொம்ப நன்றி - கடைசி இரண்டு வரிகள் வேறு மாதிரியாக இருக்கும் - சரியான வரிகள் கிடைக்குமா ?
மேற்கோள் செய்த பதிவு: 1042409

இன்னும் 2 வரி வேண்டுமா? தெரியலையே சோகம் இது கூட நெட் இல் பார்த்தது புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

அனுமன் போட்ட பிள்ளையார் சுழி! - Page 2 Empty Re: அனுமன் போட்ட பிள்ளையார் சுழி!

Post by Aathira Thu Jan 02, 2014 10:20 pm

ம்ம்ம் ஜெய் ஹனுமான்


அனுமன் போட்ட பிள்ளையார் சுழி! - Page 2 Aஅனுமன் போட்ட பிள்ளையார் சுழி! - Page 2 Aஅனுமன் போட்ட பிள்ளையார் சுழி! - Page 2 Tஅனுமன் போட்ட பிள்ளையார் சுழி! - Page 2 Hஅனுமன் போட்ட பிள்ளையார் சுழி! - Page 2 Iஅனுமன் போட்ட பிள்ளையார் சுழி! - Page 2 Rஅனுமன் போட்ட பிள்ளையார் சுழி! - Page 2 Aஅனுமன் போட்ட பிள்ளையார் சுழி! - Page 2 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

அனுமன் போட்ட பிள்ளையார் சுழி! - Page 2 Empty Re: அனுமன் போட்ட பிள்ளையார் சுழி!

Post by T.N.Balasubramanian Fri Jan 03, 2014 3:15 pm

jayaravi wrote:ரொம்ப நன்றி - கடைசி இரண்டு வரிகள் வேறு மாதிரியாக இருக்கும் - சரியான வரிகள் கிடைக்குமா ?
மேற்கோள் செய்த பதிவு: 1042409

திருவும் கல்வியும் சீரும்சி றப்பும்உன்
திருவ டிப்புகழ் பாடுந்தி றமும்நல்
உருவும் சீலமும் ஊக்கமும் தழ்வுறா
உணர்வும் தந்தென துள்ளத்த மர்ந்தவா
குருவும் தெய்வமும் ஆகிஅன் பாளர்தம்
குறைத விர்க்கும்கு ணப்பெருங் குன்றமே
வெருவும் சிந்தைவி லகக்க ஜானனம்
விளங்கும் சித்தி விநாயக வள்ளலே.

இது சரியா Jayaravi ?
ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

அனுமன் போட்ட பிள்ளையார் சுழி! - Page 2 Empty Re: அனுமன் போட்ட பிள்ளையார் சுழி!

Post by jayaravi Fri Jan 03, 2014 3:41 pm

இல்லை சார் , கடைசி இரண்டு வரிகள் இப்படி இருக்காது - இந்த சுலோகம் வடபழனி ( கோடம்பாக்கம்) முருகன் கோவிலில் இருக்கும் பிள்ளையாரின் பிரகார சுவரில் எழுதிருக்கும் - யாராவது வடபழனி கோவில் அருகில் வசிப்பவர்கள் உதவி பண்ணினால் நன்றாக இருக்கும்

அன்புடன் ரவி
jayaravi
jayaravi
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 267
இணைந்தது : 28/11/2013

Back to top Go down

அனுமன் போட்ட பிள்ளையார் சுழி! - Page 2 Empty Re: அனுமன் போட்ட பிள்ளையார் சுழி!

Post by T.N.Balasubramanian Fri Jan 03, 2014 3:57 pm

24. சித்தி விநாயகர் திருவருள் மாலை

     அஃதாவது சித்தி விநாயகப் பெருமான் திருவருளை வேண்டுகின்ற பாமாலையென்பது. கருங்குழியில் கோயில் கொண்டிருக்கும் விநாயகப் பெருமானுக்குச் சித்தி விநாயகர் என்பது பெயர். இதனை, “கருங்குழியென்னும்மூர் மேவியன்பர்க்கருள் கணநாதனே விளங்கும் சித்தி விநாயக வள்ளலே” இச் சொன்மாலையின் இறுதித் திருப்பாட்டில் குறிப்பதனால் அறிகின்றோம். சித்தி விநாயகர் என்ற திருப்பெயரை ஓதும் ஆசைப் பெருக்கால் பாட்டுத்தோறும் “சித்தி விநாயக வள்ளலே” என்பதை மகுடமாக வைத்து வள்ளற் பெருமான் பாடியிருக்கின்றார். இத் திருப்பதிகத்தைக் கணேசர் திருவருள் மாலை எனவும் கூறுகின்றார். இதன்கண் அச்சம் நீங்குதல், அன்பர் பணி செய்தல், அடியனாதல், திருவருள் வேண்டல் முதலிய அரும்பண்புகளை, நல்குக எனக் கணேசப் பெருமானை வேண்டுகின்றார்.

எண்சீர்க் கழிநெடிலடி யாசிரிய விருத்தம்
2541.

    திருவும் கல்வியும் சீரும்சி றப்பும்உன்
         திருவ டிப்புகழ் பாடுந்தி றமும்நல்
    உருவும் சீலமும் ஊக்கமும் தழ்வுறா
         உணர்வும் தந்தென துள்ளத்த மர்ந்தவா
    குருவும் தெய்வமும் ஆகிஅன் பாளர்தம்
         குறைத விர்க்கும்கு ணப்பெருங் குன்றமே
    வெருவும் சிந்தைவி லகக்க ஜானனம்
         விளங்கும் சித்தி விநாயக வள்ளலே.

உரை:
     சிந்தையின்கண் அஞ்சம் இயல்பு நீங்குமாறு யானை முகத்தோடு விளங்கும் சித்தி விநாயகனென்றும் வள்ளற் பெருமானே, செல்வமும் கல்வியும் சீரும் சிறப்பும் நின்னுடைய திருவடியே புகழ்ந்து பாடும் திறமையும், நல்ல உடம்பும் ஒழுக்கமும் உள்ளத்தில் ஊக்கமும் குற்றப்படாத உணர்வும் தந்து எளிய என் மனத்தின்கண் எழுந்தருளியவனே, நின்பால் அன்புடையார்க்கு உண்டாகும் குறைகளைப் போக்கியருளும் பெரிய குணக் குன்றமாகியவனே, எனக்கு அருள் புரிக. எ.று.

    திரு - யாவரும் விரும்பும் செல்வம். சீர் - செல்வத்தால் உண்டாகும் நன் மதிப்பு. திருவடிப் புகழை உரைப்பதினும் பாட்டாற் பாடுவது அருமையென்பது பற்றி, “திருவடிப் புகழ் பாடும் திறம்” எனத் தெரித்துரைக்கின்றார். உருவமைந்த உடம்பு பெறுதலும் சிறப்பாதலின், “நல்லுரு” என நவில்கின்றார். “உருவின் மிக்கதோர் உடம்பது பெறுதலும் அரிதே” (சீவக) என்பர் திருத்தக்க தேவர். சீலம்-ஒழுக்கம். குற்றம். புரியும் உணர்வு தாழ்வு உண்டாக்குதலால், “தாழ்வு உணர்வு” என்று சிறப்பிக்கின்றார். “உள்ளம் பெருங் கோயில் ஊனுடம்பு ஆலயம்” (திருமந்தி) என்று பெரியோர் கூறுதலால், “உள்ளத் தமர்ந்தவா” என வுரைக்கின்றார். குரு - அறியும் அறிவு தருபவன். தெய்வம் -வேண்டும் துணையாகி வரம் தருவது. இரு வகையாய் நின்று அன்பாளர்க்கு எய்தும் குறைகளைப் போக்கி யருளுவதால், “குருவும் தெய்வமுமாகி அன்பாளர்தம் குறை தவிர்க்கும் குணப் பெருங் குன்றமே” எனப் புகழ்கின்றார். நெஞ்சில் உண்டாகும் அச்சம் கீழ்மை யுறுவித்தலால், “வெருவும் சிந்தை விலக” என விளம்புகின்றார். கசானனம் - யானை முகம். வள்ளலார் மாணவரான தொழுவூர் வேலாயுத முதலியார் காலத்தில் வட வெழுத்துப் புதிது புகுத்தப்பட்டமையால் கசானனம் கஜானனம் என எழுதப் பட்டதென அறிக.

    இதனால், விநாயகப் பெருமான் அன்பர் சிந்தைக்கண் அமர்ந்து அச்ச வுணர்வு தோன்றாது கெடுமாறு அருளும் திறம் தெரிவித்தவாறாம்.

எண்சீர்க் கழிநெடிலடி யாசிரிய விருத்தத்தில் வருகின்ற பாமாலை. இதுதான் மூலமாக இருக்கவேண்டும்.
வடபழனி கோவிலில்,  பிரகார சுவரில் எழுதியதை,பற்றி ஏதும்  கூற இயலேன்.

ரமணியன்


Last edited by T.N.Balasubramanian on Fri Jan 03, 2014 4:02 pm; edited 1 time in total (Reason for editing : coloring)


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

அனுமன் போட்ட பிள்ளையார் சுழி! - Page 2 Empty Re: அனுமன் போட்ட பிள்ளையார் சுழி!

Post by jayaravi Fri Jan 03, 2014 9:29 pm

அன்பார்ந்த ரமணியன் சார் , மிகவும் சிரமம் எடுத்துக்கொண்டு எனக்கு விளக்கம் தந்தற்கு மிகவும் நன்றி - உங்கள் விளக்கத்தை படித்து முடித்தபின் , வடபழனிக்கு சென்று சரி பார்க்கும் எண்ணத்தை விட்டு விட்டேன் - மீண்டும் ஒரு முறை என் மனமார்ந்த நன்றி

அன்புடன் ரவி
 :வணக்கம்: 
jayaravi
jayaravi
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 267
இணைந்தது : 28/11/2013

Back to top Go down

அனுமன் போட்ட பிள்ளையார் சுழி! - Page 2 Empty Re: அனுமன் போட்ட பிள்ளையார் சுழி!

Post by krishnaamma Sat Jan 04, 2014 10:17 am

jayaravi wrote:கண்டிப்பாக செய்கிறேன்
- நேரம் இன்மையால் , ஆங்கிலத்தில் பதிவிடும்படி ஆகி விட்டது

அன்புடன் ரவி
 அனுமன் போட்ட பிள்ளையார் சுழி! - Page 2 1571444738

நல்லது ரவி புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

அனுமன் போட்ட பிள்ளையார் சுழி! - Page 2 Empty Re: அனுமன் போட்ட பிள்ளையார் சுழி!

Post by krishnaamma Sat Jan 04, 2014 10:18 am

நன்றி ரமணின் ஐயா புன்னகை  அன்பு மலர் 


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

அனுமன் போட்ட பிள்ளையார் சுழி! - Page 2 Empty Re: அனுமன் போட்ட பிள்ளையார் சுழி!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum