புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Today at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Today at 1:40 pm
» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Today at 1:38 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Today at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Today at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Today at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:45 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:07 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Today at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm
by heezulia Today at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Today at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Today at 1:40 pm
» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Today at 1:38 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Today at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Today at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Today at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:45 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:07 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Today at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சுந்தர காண்டம்
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
| |||||||
| |||||||
இந்நிலையில், புஞ்ஜிகஸ்தலை என்ற தேவலோக அப்சரஸ் பூலோகம் வந்தாள். ஒரு காட்டில் தவம் செய்து கொண்டிருந்த ரிஷியின் உருவத்தைப் பார்த்து கேலி செய்தாள். இந்த பூமியில் பிறக்கும் எல்லோரும் அழகாக இருப்பதில்லை. குறிப்பாக கருத்த பெண்களை மாப்பிள்ளைகள் ஒதுக்குவதும், கருத்த ஆண்களை பெண்கள் ஒதுக்குவதுமான சூழ்நிலையால் பலரது வாழ்க்கை பாதிக்கப் பட்டிருக்கிறது. ஒருவேளை நிர்ப்பந்தம் காரணமாக இவர்கள் வாழ்வில் இணைந்திருந்தாலும் கூட, எதையோ இழந்தது போல துக்கத்துடன் வாழ்கிறார்கள். இப்படி ஒரு பழக்கம் கூடவே கூடாது. அழகு, நிறம் ஆகியவற்றை விட மனதை உற்றுப் பார்க்க வேண்டும். மகரிஷியின் தோற்றத்தைப் பார்த்து சிரித்து கேலி செய்த புஞ்ஜிகஸ்தலைக்கு அவருக்குள் உறைந்து கிடந்த தவவலிமை புரியாமல் போய்விட்டது. ""ஏ பெண்ணே! உருவத்தைப் பார்த்து எள்ளி நகையாடிய நீ, குரங்காய் போ,'' என சாபமிட்டு விட்டார். புஞ்ஜிகஸ்தலையின் முகம் வானர முகமாகி விட்டது. அவள் அழுது புலம்பினாள். ரிஷியின் சாபம் எப்படி மாறும்? மேலும், எல்லாமே காரண காரியத்துடனேயே அல்லவா நடக்கிறது. அவள் சாப விமோசனம் கேட்டாள். அவளது கண்ணீரைக் கண்டு கலங்கிய ரிஷி, கோபம் காரணமாக அவள் முகத்தை மாற்றி விட்டோமே என வருந்தி, ""பெண்ணே! நீ நினைத்த நேரத்தில் நினைத்த உருவம் எடுக்கும் சக்தியைத் தருகிறேன்,'' என்ற விதிவிலக்கையும் அளித்தார். அந்தப்பெண் ஒரு பிறவியில், கேஸரி என்ற வானரனுக்கு வாழ்க்கைப்பட்டாள். அந்தப் பிறவியில் அவளுக்கு "அஞ்ஜனை' என்ற பெயர் அமைந்தது. "கேஸரி' என்றால் "சிங்கம்'. "அஞ்ஜனை' என்றால் "பேரழகு'. ஒருநாள், தன் வடிவை மறைத்து, அப்சரஸாக உருமாறி ஒரு மலைச்சிகரத்தில் உலவிக் கொண்டிருந்தாள். அப்போது தான் வாயு பகவான் அவளைப் பார்த்தான். ""இப்படி ஒரு சுந்தரியா?'' அவன் அவளை நெருங்கி ஆலிங்கனம் செய்தான். யாரோ தன்னை அணைப்பதை உணர்ந்த அந்தப்பெண், எந்த ஒரு உருவத்தையும் காண முடியாமல், ""ஒரு ஸ்திரீயிடம் இப்படி முரட்டுத்தனமாக நடந்து கொள்வது யார்?'' எனக் கதறினாள். அப்போது வாயு பகவான் அவளுக்கு தரிசனம் தந்தார்.""பெண்ணே! தவறான நோக்கத்துடன் உன்னை நான் ஆலிங்கனம் செய்யவில்லை. உன் அழகில் மெய்மறந்து மனதால் மட்டுமே உன்னை ஸ்பரிசித்தேன். ஒரு பெண்ணுக்கு திருமணம் நடக்கும் முன் அவர்கள் தேவர்களுக்கு சொந்தமாகிறார்கள் என்பதை நீ அறிந்திருக்கத்தானே செய்கிறாய். நானும் ஒரு தேவன் என்பதால், உன் கற்புக்கேதும் களங்கம் ஏற்படவில்லை. அன்பு ததும்பும் முகம் கொண்டவளே! நீ உலகம் புகழும் ஒரு புத்திரனைப் பெறுவாய்,'' என சொல்லி மறைந்தார். அஞ்ஜனை கர்ப்பமானாள். மார்கழி மூல நட்சத்திரத்தில் அழகான ஒரு புத்திரனைப் பெற்றெடுத்தாள். வாயுபுத்திரன் பூமிக்கு வந்தவுடனேயே வானில் பறக்கத் துவங்கி விட்டான். அழகில் சிறந்த அவனுக்கு "மாருதி' என்று பெயர் சூட்டினாள் அஞ்ஜனை. அவன் வேகமாக வான மண்டலத்தை சுற்றி வந்தான். அப்போது சூரியன் வெளிப்பட்டான். சிவந்த பழம் போல் அது காட்சியளித்தது. வானரமாயிற்றே! பழமென்றால் விட்டு வைக்குமா? அதிலும், சாதாரண வானரமே எண்பதடி பாயும். இவன் வாயு செல்வன்! கேட்கவா வேண்டும். சூரியனை நோக்கிப் பறந்தான். அன்று கிரகணம். ராகு என்னும் நாகம் சூரியனைக் கவ்விப்பிடிக்க எத்தனித்து அவனை விரட்டிக் கொண்டிருந்தது. ஒரு கட்டத்தில், சூரியனைக் கவ்விப்பிடிக்கவும், மாருதி அங்கே வரவும் சரியாக இருந்தது. ராகுவை ஓட ஓட விரட்டி யடித்தான். குரங்குகளுக்கு பிறர் கையிலுள்ளதை பிடுங்குவது ஜென்ம சுபாவம். விடுவானா நம் சின்ன மாருதி? ராகுவை விரட்டிக்கொண்டே இருந்தான்.""இந்திரா! தேவேந்திரா! என்னைக் காப்பாற்று, இந்தக் குரங்கு என்னை விரட்டுகிறது,'' எனக் கதறிக் கொண்டே இந்திரலோகத் திற்குள் புகுந்தான் ராகு. அங்கே இந்திராணியுடன் ஜெகஜோதியாக வீற்றிருந்த தேவேந்திரன், தன் வஜ்ராயுதத்தை எடுத்து மாருதியின் மீது வீசினான். அது சக்தி வாய்ந்த ஆயுதம். மாருதி பச்சைப் பிள்ளையல்லவா! தாங்குவானா? அந்த ஆயுதம் அவன் மேல் பட்டு, கதறியபடியே கீழே விழுந்தான். ஒரு மலை முகட்டில் அவன் விழுந்த போது, தோள்பட்டை எலும்பு முறிந்து விட்டது. குழந்தை கதறுகின்ற சப்தம் கேட்டு அஞ்ஜனை ஓடோடி வந்தாள். ""ஏ தேவேந்திரா! இது உனக்கே அடுக்குமா? உன் துன்புறுத்தலுக்கு என் பச்சைக்குழந்தை தானா கிடைத்தான்? பார்...பார்...ஒரு வழி செய்கிறேன்,'' என்றவள் வாயு பகவானைப் பிரார்த்தித்தாள். ""நடந்ததைப் பார்த்தீர்கள் அல்லவா? உங்கள் பிள்ளை அடிபட்டுக் கிடக்கிறான். நீங்கள் அமைதியாக நிற்கிறீர்களே!'' என்றாள். வாயுவுக்கும் கடும் கோபம். மகனை அன்போடு அணைத்தான். அந்த மலையில் இருந்த குகைக்குள் சென்று ஒளிந்து கொண்டான். வாயு உடலுக்குள் நின்றாலும் கஷ்டம்... வெளியில் நின்றாலும் கஷ்டம்...உலக ஜீவன்களெல்லாம் திணறின. தேவர்கள் மூச்சுவிட முடியாமல் திணறினர். தேவேந்திரன் உட்பட...!
|
| |||
அந்த சம்பவம் என்ன? கருணையில் ராமன் உயர்ந்தவனா? சீதா சிறந்தவளா? என்று ஒரு போட்டி வைத்தால், நம் பிராட்டியே வெற்றி பெறுவாள். ராமனையும் விட கருணையா? அவனே கருணாமூர்த்தியாயிற்றே! உலகிலுள்ள ரிஷிகளெல்லாம் தன்னைத் தரிசிக்க வேண்டுமென்பதற்காக, காட்டிற்கு போகக்கூடிய சூழ்நிலையை உருவாக்கிக் கொண்டவன் ஆயிற்றே! அவனது கண்களில் கருணை சிந்துமாமே! ராமபிரான் குழந்தையாக இருந்த போது, அவரை அடிக்கடி அழைத்துப் பார்ப்பாராம் தசரத மகாராஜா. ஏன் தெரியுமா? கருணை பொங்கும் அவரது கண்ணழகை ரசிக்க...சிறிது நேரம் பார்த்து விட்டு, "திரும்பிப்போ' என்பாராம். ராமனும் செல்வாராம். அப்போது பின்னழகை ரசிப்பாராம். இப்படி முன்னால் கண்ணழகு, பின்னால் நடையழகு என மாறி மாறி பகவானை அனுபவித்த பாக்கியசாலி அவர். அப்படிப்பட்ட கருணைக் கண்களுக்கு சொந்தக்காரரான ராமனை விட சீதா எந்த விதத்தில் உசத்தி? ஒருமுறை, ராமபிரான் சீதாவுடன் ஏகாந்தமாக (தனிமை) இருந்தார். மனைவியின் மடி மீது தலை வைத்து அஞ்சனவண்ணன் கண் மூடியிருக்கிறான். கணவரின் தூக்கம் கலைந்து விடக்கூடாதே என்று சீதா அசையவில்லை. இன்னொரு காரணம், அவன் தூங்கும் அழகை ரசித்துக் கொண்டே இருக்கலாம். தூக்கத்தில் கூட இரண்டு வகையை சுந்தரகாண்டம் காட்டுகிறது. அனுமான் இலங்கை சென்ற பிறகு, ராவணனின் மாளிகையை நோட்டமிட்டார். அங்கே ராவணனால் கடத்தி வரப்பட்ட பெண்களும், இன்னும் ஆசைநாயகியரும் அவனது விருப்பத்தை நிறைவேற்றி விட்டு, படுத்திருந்த காட்சியைப் பார்த்து ஆஞ்சநேயன் தலை குனிந்து, ""இதையெல்லாம் பார்க்க என்ன பாவம் செய்தோமே!'' என்று கலங்கினான். அதே நேரம் ராவணின் தர்மபத்தினியான மண்டோதரி துயில்வதைப் பார்த்து, "இவள் சீதையோ' என்று சந்தேகமும் கொண்டானாம். அப்படி ஒரு அடக்கமான பெண்மணி மண்டோதரி. ராவணனுக்கு வாழ்க்கைப்பட்டதைத் தவிர வேறெந்த பாவமும் செய்யாத பெண்மணி அவள். அதுபோல், இங்கே ராமன் அமைதியாக உறங்கிக் கொண்டிருக்கிறான். சீதா அவனது அழகைப் பருகிக் கொண்டிருக்கிறாள். அப்போது இந்திரனின் மகனான ஜெயந்தன் காக வடிவெடுத்து, அங்கே வந்தான். அவன் சீதையின் அழகை ஒரு மரத்தில் இருந்தபடி பருகிக் கொண்டிருந்தான். பிறன் மனை காண்பது கொடிய பாவமல்லவா? அவர்களுக்கு சொர்க்கமும் கிடைக்காது, நரகமும் கிடைக்காது. நரகம் போனால் கூட ஏதாவது ஒரு காலத்தில் விடிவு கிடைத்து விடும். அங்கும் போகாதவன் அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருப்பான். இங்கே இறந்த பிறகு, அங்கும் தினம் தினம் மரண பயத்தில் அலறியபடியே தொங்குவான். அப்படி ஒரு கொடிய பாவத்தை செய்து கொண்டிருந்தான் ஜெயந்தன். காக வடிவெடுத்ததால் அவனை "காகாசுரன்' என்றும் சொல்வார்கள். அந்தப் படுபாவி, நம் அன்புத்தாய் சீதாவின் மார்பைக் கொத்தினான். அன்னைக்கோ தர்ம சங்கடம். ரத்தம் வழிந்தது. ராமன் விழித்து விடக்கூடாது என்பதில் அந்நிலையிலும் அக்கறையாக இருந்தாள். ஆனால், ராமனின் கைகளால் தற்செயலாக வழிந்த ரத்தம் விழ, பிசுபிசுவென ஏதோ ஒட்டியதால் விழித்தெழுந்தார் ராமன். நிலைமையைப் புரிந்து கொண்டார். தான் படுத்திருந்த தர்ப்பை படுக்கையில் இருந்து ஒரு புல்லை எடுத்து வீசினார். அது பாணமாய் மாறி அவனை விரட்டியது. கர்வம் கொண்டவன் அல்லவா ஜெயந்தன். அந்த பாணத்தில் இருந்து தப்பி விடலாமென பல இடங்களுக்கும் பறந்தான். பாணம் விரட்டியது. தான் விபரீதத்தில் சிக்கிக் கொண்டோம் என்பது புரிந்து விட்டது. நம் வீட்டுக்குள் போய் ஒளிந்து கொண்டால் என்ன என்று தோன்றியது. ஒரு மானிடன் வீசிய அம்பு தேவலோகத்துக்கு எப்படி வரும்? எனவே, தேவலோகம் நோக்கிப் பறந்தான். பாணம் அங்கும் வந்து விரட்டியது. அவனுக்கு மரண பயம் வந்து விட்டது. அம்மா இந்திராணியிடம் ஓடினான்.""என்னடா தப்பு செய்தாய்?'' என அவள் அவனை அதட்டினாள். அவளிடம் நடந்ததைச் சொன்னான்.""அடப்பாவி! லோகத்திற்கே படியளக்கும் லட்சுமி பிராட்டி சீதாவாக பூமியில் அவதரித்துள்ளதை நீ அறிவாய். அறிந்தும் தவறு செய்தாய். உனக்கு மன்னிப்பே இல்லை. உனக்கு அடைக்கலம் அளித்தால், தேவலோகமே அழிந்து போகும். என் பிள்ளைப்பாசத்தின் பொருட்டு, ஆயிரக்கணக்கான தேவர்களை நான் இழக்கமாட்டேன். நீ சாக வேண்டியவன் தான்! பிறர் மனைவியைத் தொட்ட கயவனே! நீ என் பிள்ளையே அல்ல, ஒழிந்து போ,'' என சொல்லிவிட்டாள். காகாசுரன் பறந்தான்...பறந்தான்...பறந்தான்... எங்கும் அவனுக்கு அடைக்கலம் தர நாதியில்லை. கடைசியில், ராமபிரானையே சரணடைவது என முடிவெடுத்தான். அவரது பாதங்களில் வந்து விழுந்தான். ""ஸ்ரீராமா சரணம் சரணம்! நான் உம்மை அடைக்கலமடைந்தேன், நான் செய்த தவறுக்கு மன்னிப்பில்லை தான்! இருப்பினும், கருணைக்கடலான நீர் உயிர்பிச்சை இடுவீர் என நம்பி, உம்மை சரணடைந்தேன். என்னைக் காப்பாற்றுங்கள்,'' என்று கதறினான். அப்போது காகமாக இருந்த அவனது தலை, ராமனின் பாதம் இருந்த திசைக்கு எதிர்திசையில் இருந்தது. கருணைக்கடலான சீதாபிராட்டி, அந்த காகத்தின் தலையை ராமனின் பாதம் பக்கமாக திருப்பி வைத்தாள். அவள் நினைத்தால் தலையைத் திருகியிருக்கலாம். ஆனால், லோகமாதாவான அந்த திருமகள், தனக்கு துன்பமிழைத்தவனுக்கும் இப்படி ஒரு கருணையைச் செய்தாள். "எப்பேர்ப்பட்ட உத்தமி இந்த சீதா? அவளைக் காப்பாற்ற வேண்டாமா?' என்று அவளின் கல்யாண குணங்களைச் சிந்தித்தபடியே பறந்தார் ஆஞ்சநேயர்
|
| ||||
போகிறார் என்பதை ஆனந்தமாக அனுபவிப்போமோ! சுரஸை ஆஞ்சநேயரை வழிமறித்தாள். கோரைப்பற்களும், கொடிய உருவமும் கொண்ட பூதகி வடிவில் அவர் முன் நின்றாள்.""ஏ மாருதி! என் பெயர் சுரஸை. நீ எனக்கு இரையாக வேண்டும் என்பது தேவர்களின் கட்டளை. நீயாக என் வாய்க்குள் போய் விடுகிறாயா? இல்லை, நானே உன்னைக் கசக்கிப் பிழிந்து விழுங்கி விடட்டுமா?'' ஆஞ்சநேயர் அவளுக்கு மரியாதை கொடுத்தார். யாராவது நம்மிடம் வம்புக்கு வருகிறார்கள் என வைத்துக் கொள்வோம். நாமும் வரிந்து கட்டிக் கொண்டு போனால், சண்டை தீவிரமாகி விடும். அடிதடியில் போய் முடியும். வம்புக்காரர்களிடம் பொறுமை காட்ட வேண்டும். இன்முகம் காட்ட வேண்டும். அதே நேரம் அவர்களிடம் இருந்து புத்திசாலித்தனமாக நம்மைப் பாதுகாத்துக் கொள்ளவும் வேண்டும். ஆஞ்சநேயர் நினைத்தால் சுரஸையை ஒரே அடியில் சாய்த்து விடுவார். ஆனால், அவள் பெண். பெண்களுக்கு அருள்பாலிப்பதில் ஆஞ்சநேயனுக்கு மிஞ்சிய தெய்வமில்லை. அந்த மகாலட்சுமியின் அம்சமான சீதாவையே அவன் காப்பாற்றியிருக்கிறான் என்றால், சாதாரண மானிடப்பிறவிகளான நாம் அவனைச் சரணடைந்தால் கேட்கவும் வேண்டுமோ! பூதகியாயினும், தன்னையே கொல்ல வந்தவளாயினும் ஆஞ்சநேயர் அவளைக் கையெடுத்து வணங்கினார்.""தாயே! தசரத புத்திரரான ராமபிரான், தன் சகோதரன் லட்சுமணனோடும், மனைவி ஜானகியோடும் தண்டகாரண்யத்தில் இருந்தபோது, ராவணன் என்ற அசுரன் அவளை எடுத்துச் சென்று விட்டான். அவள் இருக்குமிடத்தைக் கண்டுபிடிக்கும் பொறுப்பை ஸ்ரீராமன் என்னிடம் ஒப்படைத்துள்ளார். அவருடைய ராஜ்யமே உலகெங்கும் நடக்கிறது. அவ்வகையில், அவருக்கு உதவ வேண்டியது உன் கடமை. அது மட்டுமல்ல! ஒருவர் ஒரு பணியை நம்மை நம்பி ஒப்படைக்கும் போது, அதை முழுமையாக முடித்துத் தர வேண்டியதும் கடமை தானே! நம்பியவர்களை நட்டாற்றில் விட்டால், அது பெரிய பாவமல்லவா? அத்தகைய பாவத்துக்கு என்னை ஆளாக்கி விடாதே! உனக்கு இரையாவதில் எனக்கு பெரும் மகிழ்ச்சி. ஏனெனில், ஒருவரின் பசியைத் தீர்த்து வைக்க வேண்டியது இன்னொருவரின் கடமை. ஆனால், சீதையைப் பற்றி கணநேரத்தில் அறிந்து, ராமபிரானிடம் தகவல் சொல்லிவிட்டு, உன்னிடம் வந்து இரையாகிறேன்,'' என்றார் மிகுந்த பணிவுடன். சுரஸை மறுத்தாள். ""ஆஞ்சநேயா! எனக்கு பிரம்மா ஒரு வரம் தந்திருக்கிறார். என்னைத் தாண்டிச் செல்பவர்கள் யாராயினும் என் வாயில் புகுந்து வெளியேறிச் செல்ல வேண்டும். அதன்படி நீ நடந்து கொள்,'' என்றாள். ஆஞ்சநேயர் சம்மதித்தார். தன் குறுகிய உருவத்தை பெரிதாக்கினார். அவள் அதையும் விட அதிகமாக வாயை அகலப்படுத்தினாள். ஆஞ்சநேயர் உள்ளே நுழையும் போதே தன் உருவத்தை மேலும் நீட்டித்தார். இப்படியாக இருவரும் மாறி மாறி அளவைக் கூட்ட ஆஞ்சநேயர் திடீரென தன் அளவை மிகமிகச் சுருக்கி கட்டை விரல் அளவுக்கு மாறி, அவள் காது வழியே வெளிப்பட்டார்.""தட்சப்பிரஜாபதியின் புத்திரியான சுரஸையே! உன்னை மீண்டும் வணங்குகிறேன். பிரம்மாவிடம் நீ பெற்ற வரத்துக்கு பாதகமின்றி நடந்து உன்னிடமிருந்து வெளிப்பட்டேன். நீ என்னை வாழ்த்தி வழியனுப்பு,'' என்றார். சுரஸை தன் சுயரூபமான தேவமங்கை வடிவம் காட்டி, ""ஆஞ்சநேயனே! நீ மாபெரும் வீரன். நீ செல்லும் காரியம் வெற்றி பெற வாழ்த்துகிறேன்,' ' என ஆசிர்வதித்து வழியனுப்பி வைத்தாள். வீட்டில் குழந்தைகளிடம் பூதம் வருகிறது, பேய் வருகிறது, பிசாசு வருகிறது என்றெல்லாம் நாம் பயமுறுத்தக் கூடாது. அவை வந்தாலும், நாம் எதிர்த்து நிற்க வேண்டுமெனக் கற்றுத்தர வேண்டும். ஆஞ்சநேயர் சுரஸையிடம் தப்பித்துச் சென்ற இந்த வரலாறைக் குழந்தைகளுக்கு எளிய முறையில் கற்றுக் கொடுத்தால் அவர்களின் ஆற்றல் மட்டுமின்றி, கல்வியறிவும் விருத்தியடையும். சுந்தரகாண்டம் எந்த நோயையும் தீர்க்கும் மாமருந்து. எந்த கிரக தோஷத்தையும் அது நீக்கி விடும். குழந்தைகளுக்கு தைரியத்தையும், கல்வி நலனையும் தரும். திருமணமாகாத கன்னிகள் இந்த அத்தியாயங்களைச் சேர்த்து வைத்து நாளுக்கு ஒன்று வீதம் படித்தால், ஸ்ரீராமன் போல் நல்ல மணவாளன் அமைவார். இந்த பகுதியில், ஆஞ்சநேயர் சுரஸையிடம், "தசரத புத்திரன் ராமனின் மனைவியை ராவணன் கடத்திச் சென்றதாகச் சொல்கிறார். "ராமன்' என்றாலே பிரபலம் என்றாலும், தசரதர் பெயரையும் ஏன் சொன்னார் தெரியுமா? தசரதர் ராமனையும் விஞ்சிய வீரர். தன் நாட்டில் சனி பார்வையால் பஞ்சம் வர இருந்த நேரத்தில் அவர் விண்ணுலகுக்கே தேரில் சென்று சனீஸ்வரனை எதிர்க்கச் சென்ற கடமை வீரர். கடமையின் காவலர்களாக அரசுப்பொறுப்பில் உள்ளவர்கள் இருக்க வேண்டும் என்பதை சுந்தரகாண்டம் காட்டுகிறது. தசரதர் என்பதே காரணப்பெயர் தான். அவரது நிஜப்பெயர் தர்மராஜா. விண்ணுலகம், பாதாளம் உள்ளிட்ட பத்து திசைகளில் ரதம் செலுத்தும் வல்லமை பெற்ற மாவீரர் தசரதர். அதனால் தான் அவருக்கு அந்தப்பெயர் ஏற்பட்டது. அதுவே நிலைத்தும் விட்டது. அப்படிப்பட்ட மாவீரரின் மருமகளைத் தேடி தொடர்ந்து பறந்தார் ஆஞ்சநேயர்.
|
| ||
அதுவும் எப்படி அடித்தார் தெரியுமா? அவள் பெண் என்பதால், வலது கையால் அடித்தால் தாங்கமாட்டாள் என்று, இடது கையால் அடித்தாராம். இடது கைக்கு சக்தி குறைவு தானே! அதனால் வலியோடு போயிற்று. அவளது உயிருக்கு ஆபத்து வரவில்லை. மேலும், அவளுக்கு ஏற்பட்ட சாபத்தை நீக்கவே அவ்வாறு செய்ய வேண்டிய கட்டாயத்திற்கும் தள்ளப்பட்டார். சுரஸையையும் அவர் கொல்லவில்லை. அவள் சொன்ன நிபந்தனையை நிறைவேற்றி, அவளது ஆசியையும் பெற்றார். பெண்களிடம் ஆண்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதையும் அவர் சுந்தரகாண்டம் மூலம் நமக்குச் சொல்லித்தருகிறார். லங்காதேவி ஆஞ்சநேயரிடம் அடிபட்டாள். உடனே, தன் ராட்சஷ ரூபம் மறந்து, ரூப லாவண்யம் மிக்க பேரழகியாக அவர் முன் நின்றாள்.""வானர வீரரே! பிரம்மா எனக்கிட்ட சாபத்தால் இங்கு நான் தங்கியிருந்தேன். என்று ஒரு வானரன் உன்னை வெல்கிறானோ, அப்போது நீ விமோசனம் பெறுவாய். அப்போது, இலங்கையில் ஆளும் ராட்சஷர்கள் அழிக்கப்படுவார்கள் என்று சொல்லியிருக்கிறார். அதன்படியே இன்று நடந்தது. பிரம்மாவின் வாக்குப்படி, நீ ராட்சஷர்களை அழிப்பாய்,'' என்று சொல்லி இலங்கையை விட்டுப் புறப்பட்டு சென்று விட்டாள். இதன்பிறகும், ஆஞ்சநேயருக்கு பெண்களைக் குறித்த அனுபவம் ஏற்படப்போகிறது.காவல் தெய்வமே அனுமதி தந்து விட்டதால், இலங்கைக்குள் புகுந்த அவர் சீதாதேவியை தேடி வீடு வீடாக அலைகிறார். எங்கும் அவள் இல்லாமல் போனதால், ராவணனின் அரண்மனைக்கே வந்து விடுகிறார். அப்போது, அங்கே அவனது ஆசைநாயகியர் அலங்கோலமாக கிடக்கிறார்கள். அதைப் பார்த்து அவர் கண்களை மூட வேண்டிய நிலைமை வந்துவிட்டது. பெண்கள் தூங்கும் போது அடக்க ஒடுக்கமாக இருக்க வேண்டும். வீட்டிற்குள் அடக்க ஒடுக்கமாக தூங்கிப் பழகினால் தான், வெளியிடங்களில் தங்கும் போதும் அதே பழக்கம் வரும். நாம் ரயில்வே ஸ்டேஷன்களிலும், பஸ் ஸ்டாண்ட்களிலும் இரவு நேரத்தில் சென்றால், பல பெண்கள் தாறுமாறாக படுத்திருப்பதைப் பார்க்கலாம். இதற்கு காரணம் பெரியவர்கள் சிறியவர்களுக்கு கற்றுக் கொடுக்காமையே ஆகும். ராவணனின் அரண்மனையில் படுத்திருந்த பெண்களின் நிலையைக் கண்ட ஆஞ்சநேயர், கண்களை மூடிக் கொண்டு, ""ராமா! நான் என்ன பாவம் செய்தேனோ! உன் திருஉருவத்தை மட்டுமே எந்நேரமும் தரிசித்துக் கொண்டிருந்த என் கண்கள், இந்த அலங்கோலக் காட்சிகளையெல்லாம் பார்க்க வேண்டிய துர்பாக்கிய நிலைக்கு தள்ளப்பட்டு விட்டதே!'' என்று சொன்னாராம். இது மட்டுமா! சீதாதேவியை ஒரு வழியாக அவர் அசோகவனத்திலே பார்த்த போது, அவளை ராட்சஷிகள் ராவணனோடு இணையும்படி துன்பப்படுத்திக் கொண்டிருந்தனர். மிரட்டினர். அதை யெல்லாம் மரத்தில் இருந்து பார்த்துக் கொண்டிருந்தார் ஆஞ்சநேயர். அவர்கள் தூங்கிய பிறகு, சீதையை சந்தித்த அவர், ""அம்மா! இந்த ராட்சஷிகளை நான் அடிக்கட்டுமா?'' என்றார். அப்போது கருணைக்கடலான சீதா சொன்னாள்.""அடேய் ஆஞ்சநேயா! உனக்கு பெண்களை அடிக்க வேண்டுமென்ற எண்ணம் எப்படி தோன்றியது? அவர்கள் என்ன பாவம் செய்தார்கள்? தங்கள் தலைவன் இட்ட கட்டளையைச் சரிவர செய்கிறார்கள். அவ்வளவுதானே! பாவம் செய்தாலும் சரி..நன்மையே செய்தாலும் சரி..ஒருவரை தயையுடன் ஆட்கொள்வது தான் சிறந்த தர்மம். இதைப் புரிந்து கொள். மேலும், உலகத்தில் தப்பே செய்யாதவர்கள் கிடையாது,'' என்றாள். ஆஞ்சநேயருக்கு இன்னும் வருத்தம் வந்து விட்டது. "இவ்வளவு கஷ்டப்பட்டு கடலைத் தாண்டி குதித்து வந்திருக்கிறேன். இந்த அம்மா தப்பு செய்யாதவனே கிடையாது என்கிறார்களே. நான் என்ன தப்பு செய்தேன்?' என்று அவளிடமே கேட்டுவிட்டார். ""இவர்களை அடிக்க நினைத்தது நீ செய்த தப்பு,'' என்றாள் பிராட்டி.""சரி...என்னை என்ன வேண்டுமானாலும் சொல்லிவிட்டு போங்கள். என் தலைவன் ராமன் என்ன தப்பு பண்ணினான்?'' என்று அடுத்த கேள்வியை கேட்டார்..""மனைவியை ஒருவன் கடத்திப் போய்விட்டானே! அவளை மீட்க அவரே நேரில் வராமல், உன்னை அனுப்பி வைத்தாரே! அது அவர் செய்த தப்பு,'' என்கிறாள். ஏன்... அவளே கூட தவறு செய்திருக்கிறாளே! பொன்மானைக் கேட்டது பெரிய தப்பு. கொழுந்தனை சந்தேகப்பட்டது மன்னிக்க முடியாத தப்பு. அதனால் தான் இப்படி சொல்கிறாள். ஆக, தவறு செய்தவர்களாகவே இருந்தாலும் கூட பெண்களை கைநீட்டக்கூடாது என்று சுந்தரகாண்டம் நமக்கு உணர்த்துகிறது. இதனால் தான் கணவனும், மனைவியும் பிரிந்திருந்தால், சுந்தரகாண்டத்தில் தினமும் ஒரு ஸர்க்கம் படி என்று பெரியவர்கள் சொல்கிறார்கள். மனைவியோ, கணவனோ...யார் தப்பு செய்திருந்தாலும் சரி...தப்பு செய்யாதவர் யாருமில்லை என்ற உண்மையை உணரவும், பிற பெண்களை ஏறெடுத்தும் பார்க்கக்கூடாது என்பதை உணர்ந்து கொள்ளவும் சுந்தரகாண்டம் நமக்கு வழிகாட்டுகிறது. |
| |
வலதுபாகத்தை ஊன்றி நடக்கும்போது, நரம்புகளின் உணர்வுகள் தூண்டப்பட்டு மனவலிமை அதிகரிக்கும் என்பதும், பூமி வலமாகச் சுற்றுவதால் இயற்கையை மதித்து வலது பாதத்தை முதலில் தரையில் ஊன்ற வேண்டும் என்ற அறிவியல் காரணங்களே, ஆன்மிகத்திலும் ஏற்றுக் ொள்ளப்பட்டிருக்க வேண்டும். ஆனால், ஆஞ்சநேயர் இடது பாதத்தை தூக்கி வைத்து இலங்கைக்குள் நுழைந்தார். வலது என்பது நமக்கு நன்மை கிடைக்க... இடது என்பது எதிரிக்கு தோல்வியை உண்டாக்க. நீதி சாஸ்திரத்தில் சொல்லியுள்ளபடி, எதிரி ஒருவனை ஜெயிக்க வேண்டுமானால், அவனது ஊர் அல்லது நாட்டுக்குள் நேரடி வழியில் செல்லாமல், ஏதோ ஒரு குறுக்கு வழியில் நுழைய வேண்டுமாம். அவனது எல்லைக்குள் கால் வைக்கும்போது, இடதுகாலை ஊன்றிசெல்ல வேண்டுமாம்! இதன்படி, லங்காதேவதையை வெற்றி கொண்ட ஆஞ்சநேயர், கோட்டை வாசல் வழியே நுழையாமல், மதில் சுவர் ஏறிக்குதித்து, இடது பாதத்தை தரையில் ஊன்றிச் சென்றார். அந்த நகரை முழுமையாகச் சுற்றி வந்தார். எங்கும் வாத்திய இசை, மக்கள் மகிழ்ச்சியுடன் சிரித்து மகிழ்ந்திருந்தனர். காரணம் ராவண ராஜ்ஜியத்தில் பஞ்சத்திற்கு இடமேது எல்லா தேவர்களுமே ராவணன் கைக்குள்... பிறகென்ன செழிப்புக்குப் பஞ்சம்... இதில் இன்னொரு சூட்சுமம் வேறு..லட்சுமியின் அவதாரமான சீதாவும் அங்கேயே இருக்கிறாளே! விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் அவள் அங்கேயே இருப்பதால் வந்த களை வேறு அந்த நாட்டைப் பிரகாசிக்கச் செய்தது. பூக்களின் நறுமணம் எங்கும் கமழ்ந்தது. பெண்கள் பாடும் அற்புதமான பாடல்கள், விண்ணுலகில் அப்சரஸ்கள் பாடுவது போல் தேனாய் இனித்தது. ராட்சஷர்களாக இருந்தாலும் பல வீடுகளில் வேத அத்யயனம் நடந்து கொண்டிருந்தது விசேஷத்திலும் விசேஷம். சிலர் தங்கள் மன்னன் ராவணனின் கீர்த்தியைப் புகழ்ந்து பேசிக் கொண்டிருந்தனர். ஒரு சில இடங்களில் அல்ப ஆசைகளை நிறைவேற்றிக் கொள்ளும் பொருட்டு பசுத்தோலை உடுத்திக் கொண்டு சிலர் யாகம் செய்து கொண்டிருந்தனர். சில வீரர்கள், ஆயுதமில்லாமல் தங்கள் பலத்தை நம்பி சக வீரர்களுடன் போரிட்டுக் கொண்டிருந்தனர். இப்படியே பல்வேறு தரப்பு மக்களையும், இடங்களையும் பார்த்த ஆஞ்சநேயரின் கண்களில் ராவணனின் பொன்கூரை வேயப்பட்ட அரண்மனை தெரிந்தது. தாமரை மலர் நிறைந்த அகழிகளால் அது சூழப்பட்டிருந்தது. அரண்மனை மதில் சுவர்கள் விண்ணை முட்டுமளவு எழுந்திருந்தது. அழகிய குதிரைகள், நான்கு தந்தங்களைக் கொண்ட அதிசய யானைகள்... இப்படி செல்வக் களஞ்சியமாகத் திகழ்ந்த ராவணனின் அரண்மனைக்குள் ஆஞ்சநேயர் நுழைந்தார். அவர் வந்த வேலை சீதையைத் தேட மட்டும் தான்! அவள் எங்கிருக்கிறாள் என கண்களில் விளக்கெண்ணையை விட்டுக் கொண்டு, இவர் தேட வேண்டியது தானே! இவர் என்னவோ இலங்கைக்கு சுற்றுலா வந்தது போல, வீடு வீடாக, தெருத்தெருவாக நோட்டம் விடுவானேன்! இவர் தூதர் பணியை மட்டும் செய்யவில்லை. இந்த இடங்களை நோட்டம் விட்டு வைத்துக் கொண்டால், ராமன் போருக்கு வரும் சமயத்தில் அவரை அழைத்துக் கொண்டு வருவதற்கு சவுகரியமாக இருக்கும் என்பதால், இவ்வாறு செய்தார். ஒரு ஊருக்குப் போனால், அந்த ஊரைத் தெளிவாக முழுமையாகத் தெரிந்து கொள்ள வேண்டும். ஏதோ மதுரைக்குப் போனோம், மீனாட்சியம்மன் கோயிலைப் பார்த்தோம், சென்னைக்குப் போனோம், கடற்கரையோடு விட்டோம்... என்று இருக்கக் கூடாது. அவ்வூர் சரித்திரம் முழுவதையும் தெரிந்து வர வேண்டும். அப்படியானால் தான் பயணம் போன திருப்தியும் கிடைக்கும், எதிர்காலத்தில் நாம் யாரையேனும் அங்கே அழைத்துப் போகும் போது அவர்களுக்கும் சொல்ல வசதியாக இருக்கும். சிறு விஷயமாகப் படுவதில் கூட, எவ்வளவு பெரிய நன்மை அடங்கியுள்ளது என்பதை சுந்தர காண்டம் சுட்டிக் காட்டுவதைக் கவனியுங்கள். ஆஞ்சநேயர் ராவணனின் இல்லத்தை அடையும் போது, மாலைநேரம் வந்து விட்டது. வானத்தில் சந்திரன் உலா வரத் தொடங்கி விட்டான். இந்த மாலை நேரம் இருக்கிறதே இது தான் மக்களின் மனதை மயக்கும் நேரம். நமது வீடுகளில் குத்துவிளக்கேற்றி, இறை சிந்தனையுடன் பூஜை செய்கிறோமே. ... ஏன் தெரியுமா? மாலை நேரத்தின் தகாத சிந்தனைகளை மறக்கத்தான்! ராட்சஷர்கள் தங்கள் அன்றாடத் தொழிலை நிறுத்தி விட்டார்கள். எல்லோரும் மதுபானங்களை குடம் குடமாய் குடித்தார்கள். தங்கள் ஆசை நாயகியருடன் கூடிக் களித்தார்கள். சில வீடுகளில் உத்தம ஸ்திரீகளும் இருந்தார்கள். அவர்கள் தங்கள் நாயகர்களுக்குரிய பணிவிடையை இனிதே செய்தார்கள். பலரகப் பெண்களை ஆஞ்சநேயர் பார்த்தார். ஆனால் தர்மத்தை விட்டுச் சற்றும் வழுவாத ராஜரிஷி ஜனகரின் புத்திரியான சீதாதேவியை மட்டும் அவரால் எங்கும் காண முடியவில்லை. அவளை அவர் பார்த்ததில்லை. எனினும், அங்க அடையாளத்தைக் கொண்டே அவள் இன்னாரென கணித்து விடும் நிபுணரல்லவா அந்த மகாபுத்திமான்! அவர் சற்றே சோர்வடைந்தார். |
| ||
இதெல்லாம் நியாயம் தானா?'' என்று அவர் கேட்கவில்லை. கேட்கவும் முடியாது. அதனால் தான் தந்தையை விட மாமனார் உயர்ந்தவர் ஆகிறார். தெய்வம் என்ன செய்தாலும் அதை மறுக்கக்கூடாது. பொறுமையுடன் ஏற்றுக் கொள்ள வேண்டும். அதை மாமனார் ஜனகர் செய்தார். பொறுமைக்கு என்றும் பெருமை உண்டு. அதற்காக, அவளை "ஜனக புத்திரி' என்று வால்மீகி கொண்டாடுகிறார். அது மட்டுமா! மகரிஷிகள் கூட பல விஷயங்களில் அவரைக் கலந்தாலோசிக்க வருவார்கள். அரசாங்கம் கையில் இருந்தாலும் ராஜரிஷியாகவே அவர் விளங்கினார். அப்படிப்பட்ட மகாஉத்தமியைக் காணாமல், ஆஞ்சநேயர் மனம் தளர்ந்த நிலையில், மதில் சுவர் ஒன்றைத் தாவினார். அவர் குதித்த இடம் ஒரு நந்தவனமாக இருந்தது. அங்கே அசோகம், ஆச்சா, செண்பகம், மாமரங்கள் ஏராளமாக இருந்தன. பட்சிகள் சந்தோஷமாக கீச்சிட்டுக் கொண்டிருந்தன. இருட்டு நேரம்...ஆஞ்சநேயர் அந்தப் பறவைகளை எழுப்பி விட்டார். அவை பறந்து போயின. அப்போது, மரங்களில் இருந்து உதிர்ந்த மலர் அவரை முழுமையாக நிரப்பியது. மரங்களை அவர் அசைத்த அசைப்பில் அவை இலைகளை முழுமையாக உதிர்த்து விட்டன. அந்த நந்தவனத்தில் இருந்த பல வகை கொடிகளையும் அவர் அறுத்தெறிந்தார். சற்றுநேரத்தில் அந்த நந்தவனத்தின் பெரும்பகுதி அழிந்து போயிற்று. தன் வாலால் பல மரங்களை அவர் இழுத்து சாய்த்தார். வால் என்று சொல்லும் போது பலருக்கும் ஒரு வழிபாடு நினைவுக்கு வரும். ஆஞ்சநேயர் கோயிலுக்குப் போகிறவர்கள் அனுமானின் வாலில் பொட்டு வைத்து, வெண்ணெய் தடவி வழிபடுகிறார்கள். "ஒரு குரங்கின் வாலை யாராவது வணங்குவார்களா? இதெல்லாம் மூடத்தனமாக தெரியவில்லையா?' என்று விமர்சிப்பவர்களும் உண்டு. பிறகேன் வாலை வழிபடுகிறோம்?"ரோம ரோமமு ராம நாமமே'...ஆஞ்சநேயரின் உடலிலுள்ள ஒவ்வொரு தனி முடியும் கூட, ராம நாமத்தை உச்சரித்துக் கொண்டிருந்தது. அவரது வாலை யாராலும் வெல்ல முடியாத "சிலம்பக்கம்பு' என்று கூறுவர். ஆம்...அது சுழன்றடித்தால் அதன் அருகே நிற்கும் சக்தி யாருக்கும் கிடையாது. அதில் இருக்கும் ஒவ்வொரு ரோமமும் ராமநாமம் சொல்வதால், அதற்குள் மந்திர சக்தி வெகுவாக பரவியிருக்கிறது. அவரது வாலுக்கு பூஜை செய்தால், ஸ்ரீராமஜெயத்தை நோட்டுப் போட்டு எழுதவே வேண்டாம். ஏனெனில், அவரது வாலிலுள்ள ரோமங்கள் சொல்லும் ராமநாமமே ண்ணிக்கையற்றதாகும். நந்தவனத்தின் தரையில் நவரத்தினங்களைப் பதித்திருந்தார்கள். பல இடங்களில் குளங்கள் வெட்டப்பட்டிருந்தன. தவம் செய்வோர்க்கு ஏற்ற இடமாக அது தெரிந்தது. நிச்சயமாக, சீதாதேவி இங்கே நீராட வருவாள் என்று ஆஞ்சநேயர் நம்பினார். எல்லாத்திசைகளிலும் அவர் பார்வை சென்றது. அவர் நினைத்தது வீண்போகவில்லை.அந்த நந்தவனத்தில் யாகசாலை போல் கட்டப்பட்ட ஒரு மாளிகை இருந்தது. ஆயிரம் வெண்ணிற தூண்கள் அதில் காணப்பட்டன. தங்கத்தால் ஒரு மேடை அமைக்கப்பட்டிருந்தது. அந்த மாளிகை அருகில் ஒரு பெண் தலை கவிழ்ந்து அமர்ந்திருந்தாள். அவள் நீண்ட நாட்களாக சாப்பிடாமல் இருந்திருக்க வேண்டும். மிகவும் களைத்தும் இளைத்தும் போயிருந்தாள். உடலில் ஒரே அழுக்கு. குளித்து பல நாள் ஆகியிருக்க வேண்டும். ஒரு புடவை மட்டும் உடுத்தியிருந்தாள். அதுவும் கிழிந்து போயிருந்தது. ஆபரணங்கள் ஒன்றுமே கண்ணில் படவில்லை. கண்களில் நீர் வழிந்து கொண்டிருந்தது.சுந்தரகாண்டம் படித்தால் மனதில் நம்பிக்கை வளரும் என்று சொன்னதே இந்தக் கட்டத்தைக் கருத்தில் கொண்டு தான்! சாட்சாத் மகாலட்சுமி பூமிக்கு வந்திருக்கிறாள். ராஜா வீட்டில் பிறந்திருக்கிறாள். ராஜா வீட்டில் வாழ்க்கைப்பட்டிருக்கிறாள். கணவனோ லோக நாயகனான ஸ்ரீமன் நாராயணனின் அவதாரமான ராமபிரான். இந்த உலக செல்வத்துக்கெல்லாம் அவளே அதிபதி. அப்படிப்பட்ட உத்தமிக்கு நேர்ந்த கதியைப் பார்த்தீர்களா! கிழிந்த புடவை கட்டியிருக்கிறாளாம்! நம்மிடம் செல்வம் நிறைய இருந்து, பங்கு மார்க்கெட்டில் கோட்டை விட்டுவிட்டால் மனசொடிந்து போகிறோம்! உயிரை விட எத்தனிக்கிறோம்! சோதனைகள் என்பது நமக்கு மட்டுமே என்று எண்ணுகிறோம். தெய்வமே பூமிக்கு வந்தாலும் கூட சோதனைகளை அனுபவித்தே தீர வேண்டும். இது இயற்கையின் நியதி! இறைவனின் நியதி! இதற்காக இறைவனைக் கடிந்து கொள்ளக்கூடாது. நம் முன்வினைப் பாவங்களே இந்த துன்பங்களுக்கெல்லாம் காரணமாகின்றன. சீதாதேவி, இப்பிறவியில் செய்த பாவத்தை இப்போதே அனுபவிக்கிறாள். என்னென்ன பாவம்... திரும்பவும் பார்ப்போமே! பொன் மான் மீது ஆசை...கொழுந்தன் மீது சந்தேகம்..அதன் விளைவாக கடிய சொற்களை உதிர்த்தது...போதாதா...இன்று அவள் இலங்கையிலே ராவணனின் பிடியில் வாடுகிறாள். அவளே சீதாப்பிராட்டி என ஆஞ்சநேயர் நிச்சயித்தார். |
| ||
""என் சீதையைப் பிரிந்த பிறகும் இந்த பாழும் உயிர் என் உடலில் ஒட்டிக் கொண்டிருக்கிறதே,'' என்று அவர் ஆதங்கப்பட்டுக் கொண்டிருந்தார். இந்த இரண்டையும் ஆஞ்சநேயர் ஒப்பிட்டுப் பார்த்தார். சுந்தரகாண்டம் படிப்பதன் நோக்கமே பிரிந்திருக்கும் தம்பதியர் ஒன்று சேர்வதற்குத்தான். பிரிந்தாலும், சேர்ந்திருந்தாலும் அவர்கள் உடலாலும் உள்ளத்தாலும் ஒன்றுபட்டு இருக்க வேண்டும் என்பதையே இந்தக்காட்சி நமக்கு வலியுறுத்துகிறது. ராமனும், சீதையும் பிரிந்திருந்த நிலையிலும் கூட மனதாலும், நினைவாலும் ஒருவருக்கொருவர் அனுசரணையாக, மிகவும் பிரியமாக இருப்பது கண்டு ஆஞ்சநேயர் மகிழ்ச்சியும் நெகிழ்ச்சியும் அடைந்தார். ""உம்மையே மனதில் நினைத்து உம்மை விரைவில் திரும்பி அடையவேண்டும் என்ற நோக்கத்துடன் பதிவிரதா தர்மத்தை காப்பாற்றிக் கொண்டிருக்கும் இந்த உத்தமி மனைவியை அடைந்த நீர்தான் இந்த உலகிலேயே பாக்கியசாலி,'' என்று ராமனை நினைத்து பிரார்த்தனை செய்தார். இந்த சமயத்தில் எங்கோ ஒரு இடத்தில் வேத கோஷம் கேட்டது. ராட்சஷர்கள் சிலர் வேதம் ஓதியபடியே மங்கள வாத்தியம் இசைக்க, ராவணனை எழுப்பினர். எந்த நேரமும் அவன் சீதையின் நினைவுடனேயே இருந்ததால் விழித்த உடனேயே அசோகவனத்தை நோக்கி கிளம்பினான். அவனுடைய மனைவியர் அவன் பின்னால் வந்தனர். ஒரு பெண்ணின் கையில் இருந்த தங்க பாத்திரத்தில் சுவைமிக்க பானம் இருந்தது. மற்றொரு பெண் மதுபானம் ஏந்தியிருந்தாள். ஆயுதங்கள் புடைசூழ வீரர்கள் சிலர் வந்தனர். ராவணன் தனது கால்களில் சலங்கை அணிந்திருந்தான். அந்த சலங்கைகள் ஒலிக்க அவன் அசோகவனத்தில் மிகுந்த தோரணையுடன் நுழைந்தான். ஆஞ்சநேயர் அவனை கவனித்தார். அவனது நடையை வைத்தே அவன் மாபெரும் வீரன் என்பதை கணித்தார். சீதையின் அருகில் ராவணன் வந்ததும் அவளது உடல் காற்றில் மாட்டிக்கொண்ட வாழையைப் போல நடுங்கியது. கைகளை உடலின் குறுக்காக கட்டிக்கொண்டு என்ன நடக்குமோ என பயந்த கண்களுடன் தலைகுனிந்து அமர்ந்திருந்தாள். அவளது மனம் ராமபிரானை தியானித்துக் கொண்டிருந்தது. இந்நேரத்தில் தன்னைக் காப்பாற்ற ராமனைத்தவிர வேறு யாரும் இல்லை என்ற நம்பிக்கையைத்தவிர வேறு எதுவுமே அவள் மனதில் இல்லை. வற்றிய நதியைப் போல அவளது முகம் காணப்பட்டது. அவளை கேச பாரம் மிக்கவள் என்பார்கள். அடர்த்தியான கூந்தலை உடைய அவளது பேரழகை ராவணன் ரசித்தான். ஆசையுடன் அவளுடன் பேச ஆரம்பித்தான்.""அகலமான கண்களை உடையவளே! எல்லாரது உள்ளங்களையும் அபகரிப்பவளே! உன்மீது நான் கொண்டுள்ள ஆசையை இன்னும் ஏன் புரிந்து கொள்ளாமல் இருக்கிறாய்? என்னைக் கண்டு நீ நடுங்க வேண்டாம். இங்கேஎந்த ராட்சஷனும் அல்லது எந்த ஒரு மனிதனும் உனக்கு பயத்தை உருவாக்க முடியாது. நீயே மகாராணி! பிற பெண்களை பலாத்காரமாக கொண்டுவந்து மணமுடிக்க துடிப்பது நியாயம்தானா என்று நீ நினைக்கலாம். ராட்சஷர் இனத்தைப் பொறுத்தவரை எங்களுக்கு இது தர்மமே. இதில் சந்தேகமே கிடையாது. உன் மீது எனக்கு அளவற்ற ஆசை இருந்தாலும் உனக்கு என்மீது பிரியம் ஏற்படும் வரையில் உன்னைத் தொடமாட்டேன். அழகுசுந்தரியே! என்னை நீ நம்பலாம். உனக்கு இருக்கும் பேரழகிற்கு வெறும் தரையில் படுப்பதும், அழுக்கடைந்த ஆடையை அணிந்திருப்பதும் எந்தவித காரணமுமே இல்லாமல் உபவாசம் இருப்பதும் தகாத செயல்களாகும். உனது கூந்தலைக்கூட பின்னிக் கொள்ள மறுக்கிறாய். நீ என்னோடு அரண்மனைக்கு வந்துவிட்டால் அங்கே விதவிதமான ஆசனங்கள் இருக்கின்றன. ஆட்டம், பாட்டம், இசை என எந்நேரமும் மகிழ்ச்சியாக இருக்கலாம். என் தேசத்தில் இருப்பது போல் உயர்ந்த உணவு வகைகளும் பான வகைகளும் பிற இடங்களில் இல்லை,'' என்று ஆசை வார்த்தைகளைக் கொட்டினான்.தொடர்ந்து அவன் சீதையிடம் கெஞ்சாக் குறையாக பேசினான்.""அழகு மிக்கவளே! உன்னைப் படைத்தபிறகு பிரம்மா இப்படிப்பட்ட உத்தமமான ரூபத்தை இனி என்னால் படைக்க முடியாது என்று நினைத்து படைக்கும் தொழிலையே விட்டுவிட்டான் என நினைக்கிறேன். உனக்கு முன்போ அல்லது உனக்குப் பிறகோ இந்த பூமியில் அழகியர் யாருமே பிறக்கவில்லை. பூர்ண சந்திரனைப் போன்ற முகத்தை உடையவளே! உன் தேகத்தில் என் கண்கள் எந்த இடத்தில் படுகிறதோ அங்கிருந்து என் பார்வையை திருப்ப முடியவில்லை. என்னைக் கணவனாக அடைந்தால் நீ பல நலன்களையும் அடையலாம். ஆனால் நீ அறிவின்மை காரணமாக அந்த ராமனையே நினைத்துக் கொண்டிருக்கிறாய். என்னை மணந்துகொண்டு நீ பட்டத்தரசியாக இரு. இந்த உலகத்தில் உள்ள அற்புதமான பல பொருட்களை எனது அரண்மனையில் வைத்திருக்கிறேன். இந்த லங்காபுரியையே உன்னிடம் ஒப்படைத்துவிடுகிறேன். வேண்டு மானால் இந்த பூமி முழுவதையும் ஜெயித்து உனது தந்தையான ஜனக மகாராஜாவிற்கும் கொடுக்க தயாராக இருக்கிறேன்,'' என்று சொல்லத்தகாத பல வார்த்தைகளை பேசினான். இதைக் கேட்டுக்கேட்டு சீதையின் மனம் துடித்தது. |
| ||
"விதேகராஜர்களின் வம்சத்தை பற்றி நீ அறிவாயா? புகுந்த இடமோ சூரிய வம்சத்தைச் சார்ந்தவர்களின் இல்லம். என் கணவர் சர்வலோகநாதனான ராமமூர்த்தி. அடேய்! என் பிற ஆண்களை கனவில் கூட நினையாதவள்,'' என்று சொல்லித் தொடர்ந்தாள்.இந்த இடத்தில் ஸ்ரீராமனும், சீதையும் எந்தளவுக்கு மனமொத்திருந்தனர் என்பதற்கு ஒரு சம்பவத்தை உதாரணமாக காட்டலாம். கோதாவரி நதிக்கரையில் ராமனும், சீதையும் உலவிக் கொண்டிருந்தனர். அப்போது ராமன் திடீரென சிரித்தாராம். சீதைக்கு அவரது சிரிப்பின் காரணம் புரியவில்லை. இக்காலப் பெண்கள் என்றால், ""ஏன் சிரித்தீர்! யாரை நினைத்து சிரித்தீர்! பைத்தியமா?'' என்று தங்கள் சந்தேகங்களை வாரி இறைத்து வதைத்து எடுத்து விடுவார்கள். சீதாதேவி அப்படியில்லையே! கணவர் என்ன செய்தாலும் அவள் எதிர்த்துப் பேசமாட்டாள். அக்காலத்து பெற்றோர் பெண்களை அந்தளவுக்கு அடக்கத்துடன் வளர்த்திருந்தனர். அதே நேரம் அவரது சிரிப்புக்கான காரணம் எப்படியும் தெரிந்தாக வேண்டும் என்ற ஆவலும் உந்தித் தள்ளியது. சற்றுதூரம் சென்றாயிற்று. இப்போது, சீதாதேவி சிரித்தாள். ராமபிரான் அவளிடம், ""ஏன் சீதா சிரித்தாய்?'' என்றார்.""அதோ! அந்த யானைக்கூட்டங்கள் செல்கிறதே! அவை உங்கள் நடையழகைக் கண்டு வெட்கப்பட்டு தலை குனிந்து செல்கின்றன. அதைப் பார்த்து சிரித்தேன்,'' என்றாள். இப்போது தைரியம் வந்து விட்டது. கேள்வி கேட்டாலும் தப்பில்லை என்ற உணர்வுடன், ""ஆமாம்...சற்று முன் தாங்களும் சிரித்தீர்களே! என்ன காரணம்?'' என்றாள். ""வேறொன்றுமில்லை! உன் முன்னால் சென்றதே அன்னப்பறவை கூட்டம். அவை, உன் நடையழகைக் கண்டு வெட்கத்துடன் தலை குனிந்தன. அதனால் சிரித்தேன்,'' என்றார். ஆக, இருவருமே நடையழகைக் கண்டு தான் சிரித்திருக்கிறார்கள். இதைத்தான் கருத்தொற்றுமை என்பது. தம்பதிகளின் மன ஓட்டம் ஒன்றாக இருக்கும்போது, அங்கே இன்பத்திற்கு குறைவே கிடையாது. சீதாதேவி தொடர்ந்தாள்.""ராவணா! ஒருவன் தன் மனைவியிடம் திருப்தியடையாமல், பிற பெண்கள் மீது இச்சை கொள்வான் என்றால், அது தற்காலிக சுகத்தைத் தரலாமே தவிர, அவனது ஆயுளையும், செல்வத்தையும், உடலழகையும், மனைவி, மக்களையும், நீ மன்னன் என்ற முறையில் உன்னையே நம்பி வாழும் சக ராட்சஷர்களையும் அழித்து விடுமே! இதை உணரும் புத்தி உனக்கு இல்லையா? அல்லது உன் நாட்டிலுள்ள சாதுக்கள் உனக்கு புத்தி சொல்ல முன்வரவில்லையா? இங்கே விபீஷணன் போன்ற உயர்ந்தவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் சொல்லியும் நீ கேட்கவில்லையா?'' என்றவள் இன்னும் தொடர்ந்தாள். ""ராவணா! உன்னிடமிருக்கும் செல்வத்தைக் கொண்டு என்னை மயக்கப் பார்க்கிறாயே! நான் அந்த மகாவிஷ்ணுவின் பத்தினியல்லவா? அவர் எங்கே பிறக்கிறாரோ அங்கே மகாலட்சுமியான நானும் பிறக்கிறேன். சூரியனை விட்டு எப்படி பிரகாசத்தை பிரிக்க முடியாதோ, அதுபோல், என்னை விட்டு ஸ்ரீராமனைப் பிரிக்க இயலாது. ஆண்யானையை விட்டு பிரிந்து தவிக்கும் பெண் யானையை அதனுடன் சேர்த்து வைப்பது போல், நீயும் ராமனிடம் சென்று அவரை வணங்கி, என்னை அவரிடத்தில் சேர்த்து விடு. நானும், உன் உயிரைப் பறிக்காமல் இருக்க அவரிடத்தில் சிபாரிசு செய்கிறேன். அவர் மகாபுருஷர். தன்னைச் சரணடைந்தவர்களை மன்னிக்கும் சுபாவம் அவரிடம் இருக்கிறது. அதனால், உன் உயிராவது பிழைக்கும்,'' என்றாள். இப்படி ஒரு பெண் ஏளனமாகப் பேசினால், சாதாரண மனிதனுக்கே கோபம் வரும். ராவணன் அசுரன், சர்வ அதிகாரமும் படைத்தவன். மனிதர்களை தவிர வேறு யாராலும் அழிவு வரக்கூடாது என்ற வரம் பெற்றவன்...அவனுக்கு கோபம் பொத்துக் கொண்டு வராதா என்ன?""ஏ சீதா! இதோ பார்! நான் உன் மீது ஆசை வைத்திருக்கிறேன் என்ற ஒரே காரணத்துக்காகத் தான், நீ இவ்வளவு பேசியும் உன்னை உயிரோடு விட்டு வைத்திருக்கிறேன். உலகத்தில் எந்தப் பொருள் மீது ஒருவனுக்கு பிரியம் ஏற்படுகிறதோ, அந்தப் பொருளால் அவனுக்கு கெடுதியே நேர்ந்தாலும் கூட அதன் மீதான ஆசை அதிகரிக்கத்தான் செய்கிறது. நீ பேசிய ஒவ்வொரு வார்த்தைக்காகவும் உன்னை சித்ரவதை செய்ய என் கைகள் துடிக்கின்றன. உன் புருஷன் ஒரு கபட வேடதாரி. அவனிடம் பிரியம் வைத்திருப்பதாக சொல்கிறாயே! இதற்காக உன்னைக் கொன்றிருக்க வேண்டும். இதோ பார்! எனக்கு இசைய உனக்கு பன்னிரெண்டு மாதம் கெடு வைத்தேன். அதில் பத்து மாதங்கள் ஓடிவிட்டன. இதோ பார்! இன்னும் இரண்டே மாதம், அதற்குள் சம்மதிக்காவிட்டால், உன்னை என் சமையல்காரர்கள் காலை உணவுக்கு கறியாக்கி விடுவார்கள், ஜாக்கிரதை,'' என மிரட்டினான். அப்போது தேவ கன்னியரும், கந்தர்வக்கன்னிகளும் சீதையின் முன்பு ரகசியமாகத் தோன்றினர். | ||
| ||
அத்தகைய சக்தி எனக்கு இருக்கிறது. ஆனால், உன்னைக் கொல்ல வேண்டும் என்ற ஆணை இதுவரை என் கணவரால் எனக்கு பிறப்பிக்கப்படவில்லை. நான் கணவனுக்கு கட்டுப்பட்டவள். பதியையே தெய்வமெனக் கருதுபவள். அவரது உத்தரவை என்றும் மீறாதவள். பாவம்! நீ என்ன செய்வாய்! உன் விதி என்னால் தான் முடிய வேண்டுமென்று எழுதப்பட்டிருக்கும் போது, அதை மாற்ற யாரால் இயலும்? நீயெல்லாம் ஒரு வீரனா? கேவலமானவனே! நீ குபேரனுக்கு சகோதரன், அளவற்ற படைபலம் உடையவன். பல யுத்தங்கள் புரிந்து தேவலோகத்தையே கைப்பற்றியவன். அப்படிப்பட்ட சூராதி சூரனான நீ, என் கணவருக்கும், என் மைத்துனன் லட்சுமணனுக்கும் பயந்து தானே என்னை அவர்கள் அறியாமல் தூக்கி வந்தாய்? இப்போது சொல்...நீ சுத்தமான வீரனா?'' என்றாள். பார்த்தீர்களா! ஒரு பெண்மணிக்கு இருக்கும் தைரியத்தை! உயிருக்கு பாதுகாப்பில்லை என்ற நிலையிலும், தன் கற்பைப் பாதுகாக்கவும், கணவன் மீது கொண்ட பக்தியின் மீது கொண்ட நம்பிக்கையும் நம்மை மெய் சிலிர்க்க வைக்கிறது. "தன்னை ஆண்மகனா என்று கேட்டுவிட்டாளே இந்தப் பெண்' என்று வெட்கிப் போன ராவணன் அதிபயங்கர கோபத்துடன் பாம்பைப் போல் சீறினான்.""ராமனாம் ராமன்...நீதிநெறி என்பது அவனிடம் உண்டா? எல்லாவற்றையும் இழந்து திரியும் அவன் எனக்கு ஈடா? அவன் மீது உனக்கு இன்னுமா பிரியம்? அவனைக் கொன்று விட்டு தான் எனக்கு மறுவேலை,'' என்று கர்ஜித்தான்.பின்னர் சீதையைச் சுற்றியிருந்த காதில்லாத, மூக்கில்லாத, ஒற்றைக் கண்ணுடைய குரூர ரூபம் கொண்ட அரக்கிகளிடம், ""இவள் மனதை மாற்றப் பாருங்கள். அப்படியும் மாறாவிட்டால் சித்ரவதை செய்யுங்கள்,'" என்று ஆணையிட்டான். அப்போது, ராவணனின் இஷ்ட நாயகியான தான்யமாலினி என்பவள், ""பேரரசரே! இந்த மானிட ஜென்மத்திடம் தங்களுடைய தாபத்தை தீர்த்துக் கொள்ள இயலுமோ? மேலும், இவளுக்கு உங்களது செல்வத்தை அனுபவிக்க வேண்டும் என்று பிரம்மா எழுதி வைக்கவில்லை. வாருங்கள்! தங்களை நான் மகிழ்விக்கிறேன்,'' என்று சொல்லி, அவனது கரம் பற்றி இழுத்தாள். ராவணனும் அங்கிருந்து சென்று விட்டான். பின்னர் ராட்சஷிகள் சீதையிடம் பலவாறாக ராவணனின் பெருமையை உரைத்தனர். ஒரு அரக்கி சீதையிடம், "" ஏ சீதா! எங்கள் ராவணன் சாமான்யமானவனா? புலஸ்திய முனிவரின் பேரனல்லவா அவன், அவருக்கு மனைவியாவது உனக்கு கிடைக்கும் பெரும் பேறல்லவா?'' என்றாள். ஏகஜடை என்ற அரக்கி கோபத்துடன், ""மரீசி, அத்திரி, ஆங்கிரசர், புலஸ்தியர், புலஹர், கிரது ஆகிய ஆறு பிரஜாபதிகளை நீ அறிவாய். அவர்களில் நான்காவதான புலஸ்தியர் பிரம்மாவின் புத்திரர். அவரது புத்திரர் விச்வரஸ். அந்த விச்வரஸ் ரிஷியின் மகனே எங்கள் ராவணேஸ்வரன். இப்படிப்பட்ட புகழுடையவனுக்கு வாழ்க்கைப்பட என்ன தயக்கம்?'' என்றாள். பிரகஸை என்ற அரக்கி, ""உன் மீது கொண்ட காதலால், எங்கள் குல திலகம் மண்டோதரியை விட்டே விலகிவிட்டான் ராவணன். பிற பெண்களாலும் அவன் மனதைக் கவர முடியவில்லை. எனவே, நீ அவனுக்கு மனைவியாகி விட்டால், உனக்கு சக்களத்திகளே இருக்கமாட்டார்கள். சகல போகத்துடனும் நீ வாழலாம்,'' என ஆசை காட்டினாள். இப்படியாக ஹரிஜடை, விகடை போன்ற அரக்கிகளெல்லாம் அவளுக்கு பல வழிகளிலும் ராவணனின் பெருமையைச் சொன்னார்கள். "" உன் புருஷன் ராஜ்யத்தை இழந்து பஞ்சப்பராரியாய் காட்டில் திரிந்து கொண்டிருக்கிறான். மனைவியைக் காப்பாற்ற தெரியாத அவனுடன் வாழ்ந்து என்ன செய்யப் போகிறாய்?'' என்றார்கள். எதற்கும் மசியாத சீதையைத் தின்று விடுவோம் என பயமுறுத்தவும் செய்தார்கள்.இல்லானை இல்லாளும் வேண்டாள் என்று பெரியவர்கள் சொல்லி வைத்திருக்கிறார்கள். கணவனிடம் செல்வம் இல்லாத பட்சத்தில், அவனுக்கு கிடைக்கும் மரியாதையை இந்த கலியுகத்தில் காணத்தான் செய்கிறோம்! ஏன் பெற்றவள் கூட வேலை இல்லாத பிள்ளையை வெறுக்கத்தான் செய்கிறாள். சீதையும் இவ்வாறே நினைத்திருந்தால், அவளும் ராவணனின் அரண்மனையில் சுகவாழ்வை அனுபவித்திருக்கலாம். ஆனால், அவள் என்ன சொன்னாள் தெரியுமா?""என் கணவர் தரித்திரராக இருக்கலாம்; ராஜ்யம் இல்லாதவராக இருக்கலாம். ஆனால், அவர் எனக்கு மாங்கல்யம் தந்தவர். அவரே எனக்கு தலைவர். கஷ்டப்படும் அவர் பின்னாலேயே நான் செல்வேன். அதிலேயே ஆனந்தத்தைக் காண்கிறேன். சூரியனை சுவர்ச்சலாதேவியும், இந்திரனை இந்திராணியும், வசிஷ்டரை அருந்ததியும், சந்திரனை ரோகிணியும், அகத்தியரை லோபாமுத்திரையும், ச்யவனரை சுகன்யாவும், சத்யவானை சாவித்திரியும், சவுதாசனை மதயந்தியும், கபிலரை ஸ்ரீமதியும், சகரனை கேசினியும், நளனை தமயந்தியும், அஜனை இந்துமதியும் பின்தொடர்வது போலவும், மனமொத்த தம்பதிகளுக்கு உதாரணமாக வாழ்ந்து காட்டுவது போலவும், நானும் என் கணவனுடன் வாழ்ந்து காட்டுவேன்,'' என்றாள். எவ்வளவு பெரிய உத்தம ஆத்மாக்களின் பெயர்களையெல்லாம் படிக்கும் வாய்ப்பு நமக்கு கிடைத்திருக்கிறது பாருங்கள்! இவர்களது பெயரைச் சொன்னாலே மகா புண்ணியம்! குடும்ப ஒற்றுமைக்கு சுந்தரகாண்டத்தை தவிர மாமருந்து வேறு ஏதுமில்லை. ஆஞ்சநேயர் இதையெல்லாம் மரத்தில் ஒளிந்து கொண்டு பார்த்துக் கொண்டிருந்தார். |
| ||||
பதியையே தெய்வமெனக் கருதுபவள். அவரது உத்தரவை என்றும் மீறாதவள். பாவம்! நீ என்ன செய்வாய்! உன் விதி என்னால் தான் முடிய வேண்டுமென்று எழுதப்பட்டிருக்கும் போது, அதை மாற்ற யாரால் இயலும்? நீயெல்லாம் ஒரு வீரனா? கேவலமானவனே! நீ குபேரனுக்கு சகோதரன், அளவற்ற படைபலம் உடையவன். பல யுத்தங்கள் புரிந்து தேவலோகத்தையே கைப்பற்றியவன். அப்படிப்பட்ட சூராதி சூரனான நீ, என் கணவருக்கும், என் மைத்துனன் லட்சுமணனுக்கும் பயந்து தானே என்னை அவர்கள் அறியாமல் தூக்கி வந்தாய்? இப்போது சொல்...நீ சுத்தமான வீரனா?'' என்றாள். பார்த்தீர்களா! ஒரு பெண்மணிக்கு இருக்கும் தைரியத்தை! உயிருக்கு பாதுகாப்பில்லை என்ற நிலையிலும், தன் கற்பைப் பாதுகாக்கவும், கணவன் மீது கொண்ட பக்தியின் மீது கொண்ட நம்பிக்கையும் நம்மை மெய் சிலிர்க்க வைக்கிறது. "தன்னை ஆண்மகனா என்று கேட்டுவிட்டாளே இந்தப் பெண்' என்று வெட்கிப் போன ராவணன் அதிபயங்கர கோபத்துடன் பாம்பைப் போல் சீறினான்.""ராமனாம் ராமன்...நீதிநெறி என்பது அவனிடம் உண்டா? எல்லாவற்றையும் இழந்து திரியும் அவன் எனக்கு ஈடா? அவன் மீது உனக்கு இன்னுமா பிரியம்? அவனைக் கொன்று விட்டு தான் எனக்கு மறுவேலை,'' என்று கர்ஜித்தான்.பின்னர் சீதையைச் சுற்றியிருந்த காதில்லாத, மூக்கில்லாத, ஒற்றைக் கண்ணுடைய குரூர ரூபம் கொண்ட அரக்கிகளிடம், ""இவள் மனதை மாற்றப் பாருங்கள். அப்படியும் மாறாவிட்டால் சித்ரவதை செய்யுங்கள்,'" என்று ஆணையிட்டான். அப்போது, ராவணனின் இஷ்ட நாயகியான தான்யமாலினி என்பவள், ""பேரரசரே! இந்த மானிட ஜென்மத்திடம் தங்களுடைய தாபத்தை தீர்த்துக் கொள்ள இயலுமோ? மேலும், இவளுக்கு உங்களது செல்வத்தை அனுபவிக்க வேண்டும் என்று பிரம்மா எழுதி வைக்கவில்லை. வாருங்கள்! தங்களை நான் மகிழ்விக்கிறேன்,'' என்று சொல்லி, அவனது கரம் பற்றி இழுத்தாள். ராவணனும் அங்கிருந்து சென்று விட்டான். பின்னர் ராட்சஷிகள் சீதையிடம் பலவாறாக ராவணனின் பெருமையை உரைத்தனர். ஒரு அரக்கி சீதையிடம், "" ஏ சீதா! எங்கள் ராவணன் சாமான்யமானவனா? புலஸ்திய முனிவரின் பேரனல்லவா அவன், அவருக்கு மனைவியாவது உனக்கு கிடைக்கும் பெரும் பேறல்லவா?'' என்றாள். ஏகஜடை என்ற அரக்கி கோபத்துடன், ""மரீசி, அத்திரி, ஆங்கிரசர், புலஸ்தியர், புலஹர், கிரது ஆகிய ஆறு பிரஜாபதிகளை நீ அறிவாய். அவர்களில் நான்காவதான புலஸ்தியர் பிரம்மாவின் புத்திரர். அவரது புத்திரர் விச்வரஸ். அந்த விச்வரஸ் ரிஷியின் மகனே எங்கள் ராவணேஸ்வரன். இப்படிப்பட்ட புகழுடையவனுக்கு வாழ்க்கைப்பட என்ன தயக்கம்?'' என்றாள். பிரகஸை என்ற அரக்கி, ""உன் மீது கொண்ட காதலால், எங்கள் குல திலகம் மண்டோதரியை விட்டே விலகிவிட்டான் ராவணன். பிற பெண்களாலும் அவன் மனதைக் கவர முடியவில்லை. எனவே, நீ அவனுக்கு மனைவியாகி விட்டால், உனக்கு சக்களத்திகளே இருக்கமாட்டார்கள். சகல போகத்துடனும் நீ வாழலாம்,'' என ஆசை காட்டினாள். இப்படியாக ஹரிஜடை, விகடை போன்ற அரக்கிகளெல்லாம் அவளுக்கு பல வழிகளிலும் ராவணனின் பெருமையைச் சொன்னார்கள். "" உன் புருஷன் ராஜ்யத்தை இழந்து பஞ்சப்பராரியாய் காட்டில் திரிந்து கொண்டிருக்கிறான். மனைவியைக் காப்பாற்ற தெரியாத அவனுடன் வாழ்ந்து என்ன செய்யப் போகிறாய்?'' என்றார்கள். எதற்கும் மசியாத சீதையைத் தின்று விடுவோம் என பயமுறுத்தவும் செய்தார்கள்.இல்லானை இல்லாளும் வேண்டாள் என்று பெரியவர்கள் சொல்லி வைத்திருக்கிறார்கள். கணவனிடம் செல்வம் இல்லாத பட்சத்தில், அவனுக்கு கிடைக்கும் மரியாதையை இந்த கலியுகத்தில் காணத்தான் செய்கிறோம்! ஏன் பெற்றவள் கூட வேலை இல்லாத பிள்ளையை வெறுக்கத்தான் செய்கிறாள். சீதையும் இவ்வாறே நினைத்திருந்தால், அவளும் ராவணனின் அரண்மனையில் சுகவாழ்வை அனுபவித்திருக்கலாம். ஆனால், அவள் என்ன சொன்னாள் தெரியுமா?""என் கணவர் தரித்திரராக இருக்கலாம்; ராஜ்யம் இல்லாதவராக இருக்கலாம். ஆனால், அவர் எனக்கு மாங்கல்யம் தந்தவர். அவரே எனக்கு தலைவர். கஷ்டப்படும் அவர் பின்னாலேயே நான் செல்வேன். அதிலேயே ஆனந்தத்தைக் காண்கிறேன். சூரியனை சுவர்ச்சலாதேவியும், இந்திரனை இந்திராணியும், வசிஷ்டரை அருந்ததியும், சந்திரனை ரோகிணியும், அகத்தியரை லோபாமுத்திரையும், ச்யவனரை சுகன்யாவும், சத்யவானை சாவித்திரியும், சவுதாசனை மதயந்தியும், கபிலரை ஸ்ரீமதியும், சகரனை கேசினியும், நளனை தமயந்தியும், அஜனை இந்துமதியும் பின்தொடர்வது போலவும், மனமொத்த தம்பதிகளுக்கு உதாரணமாக வாழ்ந்து காட்டுவது போலவும், நானும் என் கணவனுடன் வாழ்ந்து காட்டுவேன்,'' என்றாள். எவ்வளவு பெரிய உத்தம ஆத்மாக்களின் பெயர்களையெல்லாம் படிக்கும் வாய்ப்பு நமக்கு கிடைத்திருக்கிறது பாருங்கள்! இவர்களது பெயரைச் சொன்னாலே மகா புண்ணியம்! குடும்ப ஒற்றுமைக்கு சுந்தரகாண்டத்தை தவிர மாமருந்து வேறு ஏதுமில்லை. ஆஞ்சநேயர் இதையெல்லாம் மரத்தில் ஒளிந்து கொண்டு பார்த்துக் கொண்டிருந்தார். | ||||
|
| ||
தன்னைப் பற்றியும், தன் பர்த்தா பற்றியும் யாரோ ஒருவர் மங்களகரமான வார்த்தைகளால் பேசுகிறாரே என்று சீதாதேவிக்கு ஆச்சரியம். அவள் அப்போது என்ன செய்து கொண்டிருந்தாள் தெரியுமா? திரிஜடையின் கனவு பயமுறுத்தலால் பயந்து போன அரக்கிகள் உறங்கிக் கொண்டிருந்ததைப் பயன்படுத்தி தற்கொலைக்கு முயன்று கொண்டிருந்தாள். தற்கொலை செய்ய அவள் எடுத்துக் கொண்ட ஆயுதம் என்ன தெரியுமா? தன்னுடைய நீண்ட ஜடையை! ஜானகிதேவியான சீதைக்கு கருத்து சுருண்ட நீண்ட கூந்தல் இருந்தது. நீண்டநாளாக எண்ணெய் கூட தேய்க்காவிட்டாலும் கூட அதன் தேஜஸ் மட்டும் குறையவில்லை. அந்தக் கூந்தலை கழுத்தைச் சுற்றி இறுக்கி, தன்னை பலி கொடுக்க முடிவு செய்திருந்த நேரத்தில் இப்படி மதுரமான வார்த்தைகள் கேட்டு, "யார் பேசுவது? எங்கிருந்து சத்தம் வருகிறது?' என சுற்றுமுற்றும் பார்த்தாள். ஒன்றும் தெரியவில்லை. மீண்டும் குரல் வந்த திசை நோக்கி பார்த்தபோது, ஏதோ ஒரு உருவம் தெரிந்தது. அது மிகுந்த பிரகாசமுடையதாகக் காணப்பட்டது. "இப்போது பேசியவர் என் நாதனின் பெயரை உச்சரித்ததால், என் பிராணன் தப்பியது. தற்கொலை செய்யும் எண்ணத்தில் இருந்து அவரது குரலே என்னை மீட்டது' என்று எண்ணிக்கொண்டாள் சீதா. ஆஞ்சநேயர், வாயுவின் மைந்தனாக ஏன் பிறந்தார் தெரியுமா?காற்றிலுள்ள ஒரு வாயு தான் உலக உயிர்கள் பிராணனுடன் திகழ காரணமாக இருக்கிறது. அதனால் தான் அதை "பிராணவாயு' என்கிறார்கள். சீதாதேவி பிராணனை விட இருந்தாள். அந்த சமயத்தில் வாயுமைந்தன் அருகில் வந்தார். பிராணவாயு கிடைத்தால் எப்படி உயிர்கள் வாழுமோ, அதுபோல் வாயுவின் மைந்தன் மரணத்துக்கு தயாரான அவளை வாழ வைத்தான். சீதாவை வாழ வைத்ததால் ராமனை அவர் வாழ வைத்திருக்கிறார். ராமன் இல்லாவிட்டால் இந்த உலகமே இல்லை. ஆக, சகல ஜீவராசிகளையும் அவர் பாதுகாத்திருக்கிறார். தெய்வம் உலக உயிர்களை வாழ வைக்கும். அந்த தெய்வத்தையே வாழ வைத்தவர் ஆஞ்சநேயர். அதனால் தான் அவர் வாயுமைந்தனாகப் பிறந்தார். உயிரே போகுமளவுக்கு இடைஞ்சல் வந்தாலும், அதைப்போக்கி நம்மை வாழ வைப்பார் அந்த சிரஞ்சீவி! "என் பர்த்தா இங்கே வரப்போகிறார் என நினைக்கிறேன். அதற்கு முன்னதாக நானிருக்கும் இடத்தை அறிய இவர் தூதுவனாக வந்திருக்கிறார்' என மகிழ்ச்சி பொங்கப் பார்த்தாள். அதே நேரம் சந்தேகமும் அவளைப் பிடித்துக் கொண்டது. "நிஜத்திலேயே இவன் ராமதூதன் தானா? ஒருவேளை மாயக்காரனோ? ஒருவேளை நான் கனவு காண்கிறேனோ? கனவில் குரங்கைக் கண்டால் நம் சொந்தங்களுக்கு தீங்கு வருமென்று சாஸ்திரம் சொல்கிறதே! என் தந்தைக்கோ, ராமலட்சுமணர்களுக்கோ கேடு வந்துவிடக் கூடாதே! ஆனால், நிச்சயமாக இது கனவல்ல. நிம்மதியில்லாதவர்களுக்கு எப்படி உறக்கம் வரும்? நான் தூங்கி தான் பலநாளாகிறதே. எனவே, நிச்சயம் இது கனவல்ல. ஒருவேளை நாமாகவே கற்பனை செய்து கொள்கிறோமோ! கற்பனைக்கு உருவம் கிடையாது. ஆனால், இங்கே குரங்கு முகத்துடன் ஒருவன் அமர்ந்திருக்கிறானே! இவனது உருவஅமைப்பு, பேச்சு இவற்றையெல்லாம் வைத்துப் பார்த்தால், நிச்சயமாக இவன் நமக்கு சகாயம் செய்யவே வந்திருக்கிறான். பிரகஸ்பதி, இந்திரன், பிரம்மா, அக்னி ஆகிய தெய்வங்கள் நான் நினைப்பதை உறுதியாக்கட்டும்' என்று அவர்களைப் பிரார்த்தனை செய்தாள். ஆனானப்பட்ட சீதாதேவியே, பிரகஸ்பதியான குருவிடம் தனது கஷ்டங்கள் நீங்க பிரார்த்தனை செய்திருக்கிறாள். சாதாரண ஜென்மங்களான நாம் எம்மாத்திரம்? இந்த இனியநாளில், இந்த அத்தியா யத்தைப் படிக்கும் பாக்கியம் நமக்கு கிடைத்தது பெரும் பாக்கியம். நாம் ராசிபலன்களைப் படித்து மனம் குழம்பிப் போயிருப்போம். சீதாதேவி குருவிடம் வேண்டிக்கொண்டது போல, நாமும் நம் கஷ்டம் நீங்க அவரிடம் மனதார வேண்டிக்கொண்டால், கெடுபலன்களெல்லாம் தீர்ந்து போகும். ஆஞ்சநேயர் இப்போது மரத்தில் இருந்து கீழே இறங்கினார். சீதாவின் முன்னால் வந்து நின்றார். தலைமேல் கை கூப்பி, சாஷ்டாங்கமாய் விழுந்து வணங்கினார். ""தாயே! தாமரைக் கண்களும் பிரகாசமான முகமும் கொண்ட தாங்கள் யார்? தாங்கள் சோகமே உருவாக கண்ணீர் வடிக்க காரணம் என்ன? நீங்கள் கிழிந்த ஆடையுடன் இருப்பது சற்றும் பொருத்தமாக இல்லையே! வசிஷ்டரைப் பிரிந்து சென்ற அருந்ததி போலவும், கணவரையோ, குழந்தைகளையோ, உடன்பிறந்தவர்களையோ இழந்து வருந்துபவர்களைப் போலவும் தெரிகிறதே! தங்கள் கதையை நான் தெரிந்து கொள்ளலாமா?'' என்றார். அவரது பணிவான வார்த்தைகள் கேட்டு மகிழ்ந்த சீதா, ராமருக்கு வாழ்க்கைப்பட்டது முதல் அன்று வரை நடந்த சகலத்தையும் அவரிடம் விளக்கமாக எடுத்துரைத்தாள். பொதுவாக பெண்கள் தங்கள் கணவரின் பெருமை பற்றி தம் பட்டம் அடிக்க வேண்டுமென்றால், சாப்பாடு, தூக்கம், துக்கம் எல்லாவற்றையும் மறந்து விடுவார்கள். தன் பர்த்தாவைப் பற்றி பேசுவார்கள்... பேசுவார்கள்..... பேசிக் கொண்டே இருப்பார்கள். இப்போது, நம் சீதாவுக்கு ஒரு ஆஞ்சநேயர் கிடைத்துவிட்டார். விடுவாளா அவள்...தன் நாயகனின் பெருமையை ஒரு இடத்தில் மிகமிக உச்சமாக வர்ணித்தாள். அது என்ன? |
| ||
தந்தையின் கஷ்டத்தைப் போக்க தன் சுகவாழ்வையே இழந்தவர் அவர். இந்த நிகழ்ச்சியை ஆஞ்சநேயரிடம் வெளிப்படுத்தி தன் கணவரைப் பற்றி உயர்த்திச் சொன்னாள் அன்னை சீதா. பெண்கள் எக்காரணம் கொண்டும் தன் கணவரை உதாசீனப்படுத்தக் கூடாது. அது பெரிய பாவம். ராமன் சீதாவுக்கு சுகமான வாழ்வைத் தந்தார். ஒரு கட்டத்தில் அது பறிபோனது. ஆனால், சீதா தன் கணவனே பெரிதெனக் கருதி அவருடன் வீட்டை விட்டு வெளியேறி விட்டாள். ராமன் இருக்கும் இடமே சீதைக்கு அயோத்தி என்று காட்டையே தன் வீடாகக் கொண்டாள் அந்த மகாதேவி. கணவனும், மனைவியும் ஒற்றுமை பேண வேண்டும். இருவரும் ஈருடல் ஓருயிர் என வாழ வேண்டும். சுந்தரகாண்டம் உணர்த்தும் மிகப்பெரிய தத்துவம் இது. பிரிந்திருக்கும் தம்பதியர் இதைப்படித்த பிறகாவது தங்கள் பிணக்குகளை கைவிட வேண்டும். இருதரப்புக்கும் விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை நிறையவே வேண்டும். சீதாதேவி தங்கள் வரலாற்றைச் சொல்லச் சொல்ல ஆஞ்சநேயரும் அவள் அருகில் நெருங்கி வந்து கொண்டே இருந்தார். சீதாவுக்கு இப்போது சந்தேகம். "இவன் அருகில் நெருங்கி வருவதைப் பார்த்தால் ஒருவேளை ராவணன் அனுப்பிய ஆளாக இருப்பானோ' என்று. சற்று விலகி நின்று, இவனிடம் போய் நம்முடைய கதையைச் சொல்லிவிட்டோமே! முன்பின் தெரியாதவர்களிடம் வீட்டுப்பிரச்னையை சொல்லியிருக்கக் கூடாதே என்ற மனோபாவம் வேறு அவளை வருத்தியது. அவளது முகக்குறிப்பை உணர்ந்து கொண்ட ஆஞ்சநேயர், ""அன்னையே! கலக்கம் வேண்டாம்,'' என்றவர் ஸ்ரீராமனின் நற்குணங்களையெல்லாம் பட்டியலிட்டார். அதைக் கேட்டு உருகிப்போனாள் சீதா. பின்னர் தான் யார் என்பதை அறிமுகப்படுத்திக் கொண்டார். ""தாயே! என் பெயர் அனுமான். நீங்கள் சந்தேகப்படுவது போல் ராவணன் அல்ல. நான் ராமதூதன் என்பதை நம்புங்கள்,'' என்று பணிவாகவும், கனிவாகவும் சொன்னார். பின்னர் சீதா அனுமானிடம், ""அனுமானே! உனக்கும் என் கணவருக்கும் தொடர்பு ஏற்பட்டது எப்படி?'' என்று கேட்க அவர் அந்த வரலாற்றைச் சொன்னார். பின்னர் சீதையைப் பிரிந்த ராமனின் நிலை பற்றி உருக்கமாக எடுத்துச் சொன்னார். ""அம்மா! ராவணன் தங்களை அபகரித்த பிறகு, ஸ்ரீராமன் துக்கத்தால் வாடுகிறார். தாங்கள் ராவணனால் கடத்தப்பட்ட போது கழற்றி எறிந்த ஆபரணங்களைக் கண்டெடுத்து சுக்ரீவனிடம் ஒப்படைத்தேன். அவர் அவற்றை ராமனிடம் கொடுத்தார். அதைப் பார்த்து அவர் புலம்பியதை நினைத்தால் சோகம் நெஞ்சை அடைக்கிறது. தங்களை பார்க்காமல் வேதனை யால் தவிக்கிறார். நித்திரையின்றி புலம்புகிறார். மரங்களையும், செடிகளையும் பார்த்து "நீங்கள் அவளைக் கண்டீர்களா' என்று கேட்கும்போது ஏற்படும் துக்கத்தை என்ன வார்த்தைகளால் வடிப்பேன்! ஆயினும், இனி உங்களுக்கு கவலை வேண்டாம். இந்த ராவணனை அழித்து உங்களை அவர் மீட்டுச்செல்வார்,'' என்றார். இத்தனையும் கேட்டபிறகு அனுமான் ராமனின் தூதர் என்பதை உறுதியாக நம்பினாள் சீதா. இந்த நம்பிக்கையை அதிகப்படுத்தும் வகையில், ""தாயே! ஸ்ரீராமபிரான் தங்களுக்கு அடையாளம் காட்டும் வகையில் ஒரு மோதிரத்தை என்னிடம் தந்தார். இதோ! அந்தக் கணையாழி,'' என்று அவளிடம் நீட்டினார். அதைப் பார்த்ததும் கிரகணத்தில் இருந்து விடுபட்ட சந்திரன் போல் அவளது முகம் பிரகாசித்தது. இவன் உயிர்களை வாழ வைப்பவன் என்று முன்னர் கருதினோமோ அது நூற்றுக்கு நூறு உண்மை என்று வாய்விட்டுச் சொன்னாள். அந்த சந்தோஷத்துடன், ""வானரனே! இந்த இலங்கைக்குள் நுழைவது என்பது நடக்காத காரியம். ஆனால், மகாபுத்திமானான நீ இங்கே நுழைந்ததில் இருந்தே உன் புத்தியும், சக்தியும், பலமும் அளவிடற்கரியது என்று சொல்வேன். அது மட்டுமா? நூறு யோஜனை தூரமுள்ள கடலை பசுவின் குளம்படியைப் போல மிகச்சாதாரணமாக தாண்டி வந்தாயே! அந்த பராக்கிரமத்தை என்ன சொல்வது?'' என்று ஆஞ்சநேயரைப் புகழ்ந்தவள், ராம லட்சுமணர் நலம் பற்றி விசாரித்தாள்.""என் ராமன் எப்படியிருக்கிறார்? என் கொழுந்தன் லட்சுமணன் எப்படியிருக்கிறான்? ராகவன் நலமாயிருந்தால் என்னைக் கடத்திய குற்றத்திற்காக இதற்குள் இந்த பூமியை எரித்திருப்பாரே? அவருக்கு ஒருவேளை ஏதாவது ஆகி விட்டதா? என்னைப் பிரிந்த வருத்தத்தில் இளைத்து விட்டாரா? சக்தியிழந்து போனாரா? இப்போதும் நல்ல நண்பர் களைத் தான் தேர்ந்தெடுக்கிறாரா?'' என்று நிறுத்தினாள். ""மனைவி போய்விட்டாள். அதிலும் இன்னொருவன் தூக்கிக்கொண்டு போய்விட்டான். அவள் சுத்தமாக இருப்பாள் என்பதற்கு என்ன உத்தரவாதம்? நீ இன்னொரு கல்யாணம் செய்து கொள்ளப்பா'' என்று தானே சாதாரண உலகம் தன் நண்பர்களுக்கு கற்றுத்தரும்! அப்படிப்பட்ட கெட்ட போதனை தரும் நண்பர்களாக இல்லாமல், ராமனுக்கு உத்தம நண்பர்கள் கிடைத்துள்ளார்களா என்பதே சீதாவின் கவலை. |
| ||
ஐக்கியமாகி தங்களை குடும்பத்தை விட்டு விரட்டி விடுவாளோ என பயந்தே பல மாமியார்கள் கொடுமைகளை அரங்கேற்றி விடுகிறார்கள். சீதாதேவியே தன் மாமியார், மாமனார், புகுந்த வீட்டு உறவை விட தன் மீது தன் கணவன் பாசம் வைக்க வேண்டும் என்று தானே எதிர்பார்க்கிறாள்! சுந்தரகாண்டத்தை மேலோட்டமாக படிக்காமல் ஆழ்ந்த உள்ளர்த்தத்தோடு படிக்க வேண்டும். அதிலுள்ள கருத்துக்களை சிந்திக்க வேண்டும். அவ்வாறு செய்தால் குடும்ப ஒற்றுமை பலப்படும். என்றும் சிரிப்பும் கும்மாளமுமாக வாழ்க்கை கழியும். ஆஞ்சநேயர், இப்போது சீதாதேவியின் கேள்விகளுக்கு பதிலளித்தார். ""அம்மா! தங்கள் கணவர் தாங்கள் இருக்குமிடத்தை அறியவில்லை. இனி, நான் போய் சொன்னதும், அவர் வானரப் படைகளுடன் வந்து தங்களை மீட்டுச் செல்வார். அவரால் இந்தக் கடலைத் தாண்டி வர முடியுமா என்ற சந்தேகமே தங்களுக்கு வேண்டாம். அவர் பராக்கிரமசாலி. அவர் நல்ல உணவு வகைகளை சாப்பிடுவதில்லை. பழம், கிழங்கு முதலானவையே அவரது உணவு. காட்டிலே வசிக்கும் பூச்சிகள் அவரைக் கடிக்கும் உணர்வு கூட இல்லாமல் சோகமே வடிவாக இருக்கிறார். தூக்கம் மிகவும் குறைந்து விட்டது. தூங்கினாலும் வாய் "சீதா' என்றே கூறுகிறது. இதுகேட்ட சீதா மிகவும் வருத்தப்பட்டாள். ""ஆஞ்சநேயா! விதி மிகவும் சக்தி வாய்ந்தது. அயோத்திக்கு மன்னனாக வேண்டிய சகல ஐஸ்வர்யங்களும் பொருந்திய ராமனாக இருந்தால் என்ன! அவரது மனைவியான நானாக இருந்தால் என்ன! சாதாரண பிரஜையாக இருந்தால் என்ன! விதிக்கு தப்புபவர் யாரும் கிடையாது. அதையே நாங்கள் இப்போது அனுபவிக்கிறோம்,'' என்றாள். பாருங்களேன்! ராமனாக பூமிக்கு வந்தவர் சாட்சாத் மகாவிஷ்ணு. அவரைச் சுமந்த ஆதிசேஷன் லட்சுமணன். லட்சுமி தாயாரே சீதா. தெய்வங்களாக இருந்தாலும் கூட, மானிடப் பிறப்பெடுத்து அவஸ்தைப்பட வேண்டும் என்ற விதியிருந்தால் அதை மாற்ற யாராலும் முடியாது என்பது இதன் உட்பொருள். அதனால், நமக்கு கஷ்டம் வரும்போது கலங்கக்கூடாது. அது என்ன செய்து விடும் என்று மோதிப்பார்க்க வேண்டும். கலியுகம் என்றாலும் கூட, இங்கும் கூட ஒரு சில நல்லவர்கள் உண்டு. அவர்கள் ஆஞ்சநேயரைப் போல் நமக்கு துணை வருவார்கள். என்ன நடந்தால் என்ன! ஆண்டவனிடம் பாரத்தைப் போட்டு விட்டு நம் வழியில் போய்க்கொண்டிருக்க வேண்டும். சீதா தொடர்ந்தாள். ""ஆஞ்சநேயா! நீ ராமனிடம் செல். ராவணன் என்னை அவனது மனைவியாக்கிக் கொள்ள ஒரு வருடம் அவகாசம் தந்திருக்கிறான். பத்து மாதங்கள் முடிந்து விட்டன. இன்னும் இரண்டு மாதத்திற்குள் என் கணவர் இங்கு வந்து என்னை அழைத்துச் செல்லாவிட்டால், நான் உயிரை விடுவேன் என அவரிடம் சொல்லிவிடு. ராவணனின் சகோதரன் விபீஷணன், என்னை விடுவிக்கும்படி அண்ணனுக்கு புத்திமதி சொல்லியிருக்கிறான். அதையும் அவன் லட்சியம் செய்யவில்லை. விபீஷணனின் மனைவி சுரஸை, இந்தத் தகவலை தன் மூத்தமகள் அனலை மூலமாக எனக்கு சொல்லியனுப்பினாள். எனவே, நான் ராவணனால் சிரமப்படப் போவது நிச்சயம். அதற்குள் அவர் வந்து என்னை மீட்டுவிடுவார் என்றே கருதுகிறேன்,'' எனச்சொல்லி கண்ணீர் வடித்தாள். ஆஞ்சநேயரும் மனம் கலங்கி, ""தாயே! கவலையை விடுங்கள். தங்களை மீட்டுச் செல்ல ஸ்ரீராமச்சந்திர மூர்த்தி தான் வரவேண்டும் என்று ஏன் நினைக்கிறீர்கள்? என் முதுகில் அமர்ந்து கொண்டால் கணநேரத்தில், நான் தங்களை அவரிடம் கொண்டு சேர்த்து விடமாட்டேனா?'' என்றார். இதைக் கேட்டு சீதைக்கு கோபம் வந்துவிட்டது. ""நீ குரங்கு என்பதையும், உன் குரங்கு புத்தியையும் காட்டிவிட்டாய் அல்லவா? என்னை நீ கிஷ்கிந்தைக்கு அழைத்துச் செல்வதாகக் கூறுவது நகைப்பையே வரவழைக்கிறது. மிகச்சிறியவனான நீ என்னை எப்படி அங்கே கொண்டு சேர்க்க முடியும்,'' என்று கேட்டாள். ஆஞ்சநேயருக்கு அவமானமாகப் போய்விட்டது.""என்னை ஒருவர் கூட இப்படி அவமானமாகப் பேசியதும் இல்லை, என் சக்தியை சந்தேகப்பட்டவரும் இல்லை'' என்று மனதில் நினைத்தபடியே, பொறுமையுடன், ""தாயே! என்னை நீங்கள் சாதாரண குள்ளக்குரங்கு என்று நினைக்கிறீர்கள். இதோ பாருங்கள்!'' என்றார். அப்போது அவரது உருவம் வானத்தையும், பூமியையும் அடைத்த வகையில் மிக உயரமானது. ஆஞ்சநேயரின் அந்த விஸ்வரூபம் கண்டு சீதா ஆச்சரியப்பட்ட போது, ""அன்னையே! உங்களை இந்த இலங்கை மண்ணோடு பெயர்த்துக் கொண்டு செல்லும் ஆற்றல் கூட என்னிடம் உண்டு. என்னை சந்தேகிக்காதீர்கள்,'' என்றார். சீதா உண்மையிலேயே ஆச்சரியப்பட்டு போனாள். "அவசரப்பட்டு ஆஞ்சநேயனை திட்டிவிட்டோமே' என்று மனதுக்குள் சலித்தாள். |
| ||
என்னையும் காப்பாற்றி விடலாம். ஆனால், ராவணனை எதிர்க்க தைரியமில்லாத ராமன், ஒரு குரங்கை அனுப்பி அவளை மீட்டு வரச் செய்தார் என்ற பழிச்சொல் என் பர்த்தாவுக்கு ஏற்படுமே! அது மட்டுமல்ல! என் கணவரைத் தவிர பிற யாரையும் தொடுவது சரியல்ல. ராவணன் உன்னைத் தொட்டு தூக்கி வரவில்லையா என நீ கேட்கலாம். பலமற்ற பெண்களை பலமுள்ள ஆண்கள் தூக்கிச் செல்லும், பெண்கள் தங்கள் பலம் கொண்ட மட்டும் தடுத்துப் பார்க்கலாம். முடியாத பட்சத்தில் என்ன செய்வது? அவர்களின் பிடிக்குள் மாட்டத்தான் வேண்டியிருக்கிறது. எனவே, அவனால் கடத்தப்பட்ட என்னை என் கணவர் வந்து மீட்டுச்செல்வதே சிறந்தது. அதற்கு ஏற்பாடு செய். அவர் லட்சுமணனுடன் இங்கு வந்துவிட்டால் அரக்க குலத்தை நிச்சயம் வேரறுத்து விடுவார். ராவணன் மாள்வான். இதில் சந்தேகமென்ன!'' என்று பெருமிதம் பொங்கச் சொன்னாள். ஆனாலும், அவளது கண்களில் கண்ணீர் வழிந்தது. தொடர்ந்து,""மாருதி! இந்த உலகத்தில் தாய்மார்கள் தங்களைக் காப்பதற்காக ஆண் மக்களைப் பெறுகிறார்கள். ஆனால், என் மாமியார் அப்படிப்பட்டவள் அல்ல. அவள் ஸ்ரீராமனை உலக ÷க்ஷமம் கருதி பெற்றாள். அதனால் தான் அவர் ராஜ்யம் கிடைத்தும் ஆள மறுத்து வெளியேறினார். அவரை நான் எப்போதும் நினைத்துக் கொண்டுள்ளதாகவும், அவரை சாஷ்டாங்கமாக வணங்கியதாகவும் சொல். உலகத்தில் சிரமங்களை அனுபவிப்போர் அவரை சாஷ்டாங்கமாக பணிந்து சரணடைந்து விட்டால், அவர்களை அவர் காப்பாற்றியே தீருவார்,'' என்றாள். அடுத்து தன் கொழுந்தன் லட்சுமணன் பற்றி பேச ஆரம்பித்தாள். ""அவன் வல்லவன், நல்லவன். என் கணவர் இட்ட கட்டளையை சற்றும் மறுக்காமல் செய்யக்கூடியவன். என் ஆசிர்வாதம் அவனுக்கு என்றும் உண்டு. ஆஞ்சநேயா! நான் குறிப்பிட்ட காலத்துக்குள் ராம லட்சுமணர் இங்கு வராவிட்டால், நான் பிழைத்திருக்க மாட்டேன் என்பதை உறுதியாகச் சொல்லி விடு,'' என்று சொல்லி, தனது புடவையில் முடிந்து வைத்திருந்த சூடாமணியை எடுத்துக் கொடுத்தாள். அதைப் பெற்றுக் கொண்ட ஆஞ்சநேயர் அவளுக்கு மேலும் ஆறுதல் வார்த்தைகள் கூறி, ரகுநாதன் ராமனுடன் விரைவில் வருவேன் என்று உறுதியளித்தார். கிஷ்கிந்தைக்கு திரும்பிச் செல்ல அனுமதி கேட்டார். அவளுக்கோ அவருக்கு அனுமதியளிக்க மனம் வரவில்லை. ""ஆஞ்சநேயா! உனக்கு களைப்பாக இருந்தால் ஒன்றிரண்டு நாள் இங்கேயே தங்கிப் போயேன். நீ இங்கிருந்தால் எனக்கும் ஆறுதலாக இருக்கும். நீ வரும் முன்பு மிகுந்த சோகத்தில் இருந்தேன். உன்னைப் பார்த்ததும் என் துக்கத்தை மறந்து விட்டேன். நீ போய்விட்டால், முன்பை விட என்னைத் துக்கம் வாட்டுமே! சரி போகட்டும்! ஒரு சந்தேகம்! இந்தக் கடலைத் தாண்ட வாயுவும், நீயும், கருடனும் மட்டுமே தகுதியுள்ளவர்கள். என் நாதனும், லட்சுமணனும் எப்படி இங்கு வருவார்கள்? ஆனால், உன் திறமை மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது. உன்னால் எதையும் சாதிக்க முடியும். அவர்களை இங்கே கூட்டி வர வேண்டியது உன் பொறுப்பு,'' என்றாள். உடனே தன்னடக்கத்துடன் ஆஞ்சநேயர் என்ன சொன்னார் தெரியுமா? அதைப் படிப்பதற்கு முன் உங்களுடைய அலுவலகம், வீடு ஆகியவற்றை மனக்கண் முன் கொண்டு வாருங்கள்.சிலர் அலுவலகங்களில், தங்களால் மட்டுமே எல்லாம் நடக்கிறது என பெருமையடித்துக் கொள்வார்கள். அனைத்தும் அறிந்த மேதாவி களாகக் காட்டிக் கொள்வார்கள். மற்றவர்களை மட்டம் தட்டுவதில் சிலருக்கு அலாதி இன்பம். வீட்டை எடுத்துக் கொண்டால் ஒரு குடும்பத்தலைவர், தன் சம்பாத்தியம் இல்லாவிட்டால் குடும்பமே நடுத்தெருவுக்கு வந்துவிடும் என பெருமையடித்துக் கொள்வார். ஆனால், எந்த சாதனையையும் படைக்கத் தகுதியுள்ள ஆஞ்சநேயர் என்ன சொன்னார் தெரியுமா? ""அம்மா! எங்கள் தலைவர் சுக்ரீவன் அளவற்ற பராக்கிரமம் கொண்டவர். அவரைச் சார்ந்துள்ள வீரர்கள் எல்லோருமே என்னை மிஞ்சிய பலசாலிகள். எனக்கு குறைந்தவர்கள் அங்கு யாருமில்லை. அதனால், அங்கிருந்து இங்கே வந்து சேர்வதில் எந்த தடையும் இராது. இதில் சந்தேகமே தங்களுக்கு வேண்டாம். நிச்சயம் ராமன் எங்களுடன் வருவார். ராவணனைக் கொல்வார். நாங்கள் இலங்கை சமுத்திரத்தை தாண்டுவோம். நீங்கள் துக்க சமுத்திரத்தை தாண்டுவீர்கள்,'' என்றார். சீதா மிகவும் சந்தோஷப்பட்டாள். ""ஆஞ்சநேயனே! பயிர் பாதி விளைந்து பலனைக் கொடுக்கும் சமயத்தில், மழையில்லாமல் போனால் பயிர் வாடும். அப்போது தெய்வ அனுக்கிரஹத்தால் மழை பெய்தால் பயிர் எப்படி தழைக்குமோ அந்த நிலைமையில் நான் இருக்கிறேன். நான் ராமபிரானுடன் சுகவாழ்வு நடத்தினேன். பின்னர் அவரைப் பிரிந்து உயிரை விட இருந்த சமயத்தில் நீ வந்து காப்பாற்றினாய். இப்போது என்னிடம் இருப்பது என் நாதன் எனக்களித்த சூடாமணி மட்டும் தான். அதைப் பார்க்கும் போதெல்லாம் அவர் முகம் அதில் தெரியும். இப்போது, அதையும், என்னை நீ பார்த்த அடையாளத்திற்காக கொடுத்து விட்டேன். இப்போது என்னிடம் எதுவுமே இல்லை. என் ராமன் இங்கு வரும் நாள் மட்டுமே எனக்கு நம்பிக்கையூட்டும் நாள்,'' என்று சொல்லி அழுதாள். மாருதி அவளை மீண்டும் தேற்றி புறப்படத் தயாரானார். அவரது முகத்தில் வெற்றியைக் குறிக்கும் விதத்தில் ஜெயலட்சுமி குடி கொண்டாள். |
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2