ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Today at 22:39

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 22:05

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 14:18

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:08

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 0:46

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 22:23

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 14:15

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:27

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:18

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:49

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 22:01

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:59

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:57

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:56

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:54

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:52

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:50

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:48

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:46

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:45

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 18:21

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat 28 Sep 2024 - 17:52

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 17:39

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat 28 Sep 2024 - 17:03

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat 28 Sep 2024 - 15:39

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 14:35

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 14:24

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat 28 Sep 2024 - 13:15

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 23:08

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 23:00

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:51

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:46

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:44

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:42

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:30

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:26

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:13

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:08

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:06

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri 27 Sep 2024 - 17:04

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri 27 Sep 2024 - 16:12

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 10:54

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 10:50

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu 26 Sep 2024 - 21:11

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:51

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:48

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:45

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:43

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:42

நிகழ்நிலை நிர்வாகிகள்

யோகம் 12 பக்தி யோகம் !!

Go down

யோகம் 12 பக்தி யோகம் !! Empty யோகம் 12 பக்தி யோகம் !!

Post by கிருபானந்தன் பழனிவேலுச்சா Sun 29 Dec 2013 - 1:56

கீதை 12 : 1 அர்ச்சுணன் கேட்டான் : புலன்களுக்கு அப்பாற்பட்ட கண்ணால் காண இயலாத கடவுளை வழிபடுபவர்கள் ; இதோடு கூட உம்மை சற்குருவாக பின்பற்றி முறையாக கடவுளை வழிபடுபவர்கள் இவர்களில் யார் விரைவில் பக்குவமடைவார்கள் ?

கீதை 12 : 2 அவதூதர் கிரிஸ்ணர் கூறினார் : என் மீது பற்று கொண்டு மனதை எப்போதும் என்னிடம் ஈடுபடுத்தி என் மூலமாக கடவுளை நம்பிக்கையுடன் யார் வழிபடுகிறார்களோ ; அவர்களுக்கு பரலோக வாழ்வுக்கான திவ்யமான விஷயங்கள் என்னால் அளிக்கப்பட்டு பக்குவமடைகிறார்கள்

கீதை 12 : 3 & 4 : ஆனால் தோற்றமில்லாததும் , புலன்களுக்கு அப்பாற்பட்டதும் எங்கும் விரவி நிற்பதும் புரிந்துகொள்வதற்கு அப்பாற்பட்டதும் மேலும் மாற்றமில்லாததும் அசைவுகள் அற்றதும் பூரணமானதும் ஆன கடவுளின் அருவத்தன்மையில் புலன்களை கட்டுப்படுத்தி நிலைப்படுத்துகிற யோகிகள் மன சமநிலை அடைய தனக்குள் போராடி எங்கும் எதிலும் சமநோக்கு உண்டாகவும் சகல உயிர்களுக்கும் நன்மை பயக்கும் கர்மங்களை செய்யவும் பெரும் பிரயத்தனம் செய்தும் இயலாமல் பலகீனத்தை உணர்ந்து தாழ்மையடைந்து இறுதியில் என் குருத்துவத்தை சரணடைவார்கள் !

கீதை 12 : 5 ஏனெனில் உடலை அடக்கும் அப்பியாசத்தால் கடவுளின் அரூபத்தில் மனதை நிலைபடுத்துவது , பக்குவம் எய்துவது – முன்னேற்றம் காண்பது மிகமிக கடினம் ! உடலை உடையோருக்கு அவ்வழி சிரமம் !

கீதை 12 : 6 & 7 ஆனால் எவர் என்னை ஏற்றுக்கொண்டு ( குருபக்தி ) எல்லா செயல்களையும் கடவுளுக்காக அர்ப்பணித்து எனது குருத்துவத்தில் பிறழாது பக்தி தொண்டாற்றுகிறார்களோ ; என்னை பின்பற்றுகிறார்களோ அவர்களை பிறப்பு இறப்பு என்னும் சாகரத்திலும் ஜடஉலகின் பந்தத்தால் நீளும் பிறவிகளிலும் உழலாமல் விரைவில் விடுவிகிறவன் ஆகிறேன் !!

கீதை 12 : 8 என் மீது மனதை பற்றவைத்து என் உபதேசங்களுக்கு உன் புத்தியை கீழ்ப்படுத்துவாயானால் என்னில் நிச்சயமாக நீ வாழ்வாய் என்பதில் சந்தேகமில்லை !!

கீதை 12 : 9 செல்வத்தை சம்பாதிக்கும் ஆற்றலுள்ளோனே ! உன் மனதை என்னிலே சமப்படுத்து ! முடியாவிட்டாலும் பக்தி யோகத்தின் நெறிகளை விடாது பின்பற்றுவாயாக ! அது என்னிலே நீ நிலைபெறுவதற்கான பயிற்சியை உண்டாக்கி என்னைப்போலாகும் ஆசையை பூர்த்தி செய்யும் !!

கீதை 12 : 10 பக்தி யோகத்தின் நெறிகளை பயிற்சி செய்ய இயலாவிடின் எனது குருத்துவத்தின் ஏவுதல்களை செயலாக்க முயல்வாயாக ! அவ்வாறு உனது கர்மங்கள் கடவுளுக்கு அர்ப்பணமாக நீ செய்வதால் விரைவில் பக்குவ நிலையை வந்தடைவாய் !

கீதை 12 : 11 இருப்பினும் இதைக்கூட செய்ய உன்னால் முடியாவிட்டாலும் ; குருவாகிய என்னிடம் அடைக்கலம் பூண்டு பக்தித்தொண்டாக எல்லா செயல்களின் பலன்களையும் தியாகம் செய்து விடுவாயாக ! இருக்கிறோம் என்ற இருப்பைத்தவிர உனது எல்லா செயல்களின் விளைவுகளையும் கடவுளுக்கே அர்ப்பணித்து விடுவதால் ஆத்மாவிலே நிலை பெற முடியும் !

கீதை 12 : 12 நிச்சயமாக ஞானமே சிறந்தது ! ஞானத்துடன் தியானத்தையும் அப்பியாசிப்பாயாக ! முக்கியமாக உனது கர்மங்களின் விளைவுகளை கடவுளுக்கே அர்ப்பணித்து விடுவாயாக ! அர்ப்பணிப்பே மன சாந்தியை அருளும் !

கீதை 12 : 13 எல்லா உயிர்களிடத்தும் அன்புடனும் ; போட்டி பொறாமையற்ற நட்புடனும் ; நான் என்ற அலட்டல் அற்றும் ; முதிர்ந்த மனதால் சகலரின் தீய குணங்களையும் சகித்தும் ; இன்பத்தையும் துன்பத்தையும் சமமாக பாவித்தும் :

கீதை 12 : 14 எப்போதும் திருப்தியுடன் தன்னில் தானே லயித்திருப்பவனே ஆத்மா ஞானியாவான் ! மனதாலும் புத்தியாலும் குருவாகிய என்னையே பற்றியவனாய் கடவுளுக்கு பக்தி தொண்டில் யாரொருவன் உறுதியாய் நிலைத்துள்ளானோ அவனே எனக்கு பிரியமானவன் !!

கீதை 12 : 15 உலக மக்கள் யாருக்கும் நெருக்கடி உண்டாக்காமலும் ; உலக மக்கள் யாராலும் யாரிடமிருந்தும் சஞ்சலம் அடையாமலும் ; இன்பம் துன்பம் பயம் மற்றும் ஏக்கம் கடந்தும் சம நிலையோடு யாரொருவன் உள்ளானோ அவனே எனக்கு பிரியமானவன் !!

கீதை 12 : 16 எல்லா செயல்பாடுகளிலும் கவலையிலிருந்து விடுபட்டும் ; துன்பங்கள் அனைத்தையும் உதாசீனப்படுத்தியும் ; உளத்துய்மையோடும் ; முரண்பாடுகள் அனைத்திலும் நடுநிலைமை – சமரசத்தில் நிபுணத்துவமும் உள்ளவன் எவனோ அத்தகு பக்தனே எனக்கு மிகவும் பிரியமானவன் !!

கீதை 12 : 17 அவன் மகிழ்ச்சியில் துள்ளிக்குதிப்பதில்லை ; துக்கத்தில் ஆழ்ந்து முடங்கிப்போவதில்லை ! கடந்ததை நினைத்து புலம்புவதுமில்லை ; வரவேண்டியதை எதிர்பார்த்து தவிப்பதுமில்லை ! மங்களம் அமங்களம் இரண்டையும் கடந்தவன் எவனோ அத்தகு பக்தனே எனக்கு மிகவும் பிரியமானவன் !!

கீதை 12 : 18 & 19 நண்பர்களையும் எதிரிகளையும் சமமாக பாவிப்பவனும் ; புகழ்ச்சி இகழ்ச்சி ; மான அவமானம் ; இன்பம் துன்பம் ; தீ மற்றும் பணி ஆகிய இருமைகளை கடந்து சமமாக பாவிப்பவனும் ; களங்கங்களை கொண்டுவரும் சகல அசுரமாயைகளிளிருந்தும் விடுபடத்தெரிந்தும் ; இருப்பதில் திருப்தியுற்றும் ; இருப்பிடத்திற்கும் கூட கவலையற்றும் ; மெய்ஞானத்தில் நிலைத்து பக்தி தொண்டில் யாரொருவன் உறுதியாய் நிலைத்துள்ளானோ அவனே எனக்கு பிரியமானவன் !!

கீதை 12 : 20 பக்தி யோகம் என்ற இந்த அமிர்தத்தை நம்பிக்கையோடு ஏற்று உபதேசிக்கப்பட்டபடி பரமாத்மாவான என்னை சற்குருவாக ஏற்று முழுமையாக பின்பற்றுபவர்கள் எவர்களோ அவர்களே எனக்கு மிக மிக பிரியமானவர்கள் !!
கிருபானந்தன் பழனிவேலுச்சா
கிருபானந்தன் பழனிவேலுச்சா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 604
இணைந்தது : 29/12/2011

http://kirubarp.blogspot.com

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum