ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நம் வாழ்வை நாம் காப்போம்
by ayyasamy ram Today at 7:40 pm

» அவளது கண்கள்…
by ayyasamy ram Today at 7:38 pm

» சிலையைக் கண்டேன்
by ayyasamy ram Today at 7:37 pm

» விசும்பின் துளி- மழைத்துளி
by ayyasamy ram Today at 7:36 pm

» உங்களால் முடியும்
by ayyasamy ram Today at 7:35 pm

» சாமி குத்தம்
by ayyasamy ram Today at 7:34 pm

» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by கண்ணன் Today at 4:31 pm

» ஸ்பீடாமீட்டரை மாற்றி காரை நல்ல விலைக்கு விற்கலாம்!
by ayyasamy ram Today at 3:21 pm

» ஓடிடியில் படம் பார்த்தாலும் பாப்கார்ன் வேணும்!
by ayyasamy ram Today at 3:20 pm

» காலை ஆட்டிக்கிட்டே சூப் குடிக்கிறாரே….
by ayyasamy ram Today at 3:18 pm

» ஆரோக்கியம் நிறைந்த அவல் லட்டு
by ayyasamy ram Today at 3:17 pm

» காமெடி டைம்
by ayyasamy ram Today at 3:14 pm

» அறிவுத்தரம் உயர வைத்த எழுத்தாளர்…
by ayyasamy ram Today at 3:13 pm

» கொத்தமங்கலம் சுப்புவின் தேச பக்தி
by ayyasamy ram Today at 3:12 pm

» மாணவராகவே வியக்க வைத்த விவேகானந்தர்
by ayyasamy ram Today at 3:10 pm

» பெண்கள் அவல் குத்துவது …
by ayyasamy ram Today at 3:09 pm

» எப்போதும் புசித்திருக்கும் கண்ணன்
by ayyasamy ram Today at 3:07 pm

» சுப மூகூர்த்தம் -ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 3:05 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Today at 3:04 pm

» தமிழகத்தில் இருமொழிக் கொள்கை: த.வெ.க
by ayyasamy ram Today at 3:03 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Today at 3:01 pm

» பிரஜை தோழருக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்
by கண்ணன் Today at 12:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:06 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:24 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:49 pm

» இதுதாங்க இடியாப்பம்!
by ayyasamy ram Yesterday at 7:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 7:38 pm

» நல்ல குடிமகனுக்கு எது தேவை?
by ayyasamy ram Yesterday at 7:37 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:31 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 1:10 pm

» நாவல்கள் வேண்டும்
by nahoor Yesterday at 10:42 am

» உலகில் ஒரு முறையஅவது பார்க்க வேண்டிய இடங்கள் பட்டியலில் தமிழ்நாடு...
by ayyasamy ram Yesterday at 8:40 am

» கருத்துப்படம் 26/10/2024
by mohamed nizamudeen Sat Oct 26, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Sat Oct 26, 2024 8:46 pm

» அருளைப் பொழியும் ஸ்ரீ அன்னை
by ayyasamy ram Sat Oct 26, 2024 11:06 am

» எது விலை உயர்ந்தது?
by ayyasamy ram Sat Oct 26, 2024 11:01 am

» மருந்துகள் சாப்பிடுவதால் வாய்ப்புண் ஏற்படுமா?
by ayyasamy ram Sat Oct 26, 2024 11:00 am

» அனுமதி கொடுத்த நீதிமன்றம்; மீண்டும் துவங்கியது வள்ளலார் சர்வதேச மையம் கட்டுமானப் பணி
by ayyasamy ram Sat Oct 26, 2024 10:59 am

» தல தீபாவளி நினைவுகள்
by ayyasamy ram Sat Oct 26, 2024 10:56 am

» சப்பாத்தி சுடும் பொழுது, ஒரு ஸ்பூன் நெய் அவசியம் தடவணும்…
by ayyasamy ram Sat Oct 26, 2024 10:54 am

» எழுத்தறிவித்தோன் இறை…
by ayyasamy ram Sat Oct 26, 2024 10:53 am

» எழுத்தறிவித்தவன் இறை – வெண்பா போட்டியில் வென்றவை
by ayyasamy ram Sat Oct 26, 2024 10:51 am

» குரைக்கிற நாய் கடிக்காது…!
by ayyasamy ram Sat Oct 26, 2024 10:49 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Fri Oct 25, 2024 11:24 pm

» UDAYANAN NOVEL REQUEST
by prajai Fri Oct 25, 2024 11:18 pm

» வாங்க சட்டை எடுக்கலாம்!
by ayyasamy ram Fri Oct 25, 2024 7:27 pm

Top posting users this week
ayyasamy ram
'டீ விற்கலாம்.. நாட்டை விற்கக் கூடாது!'' - மும்பையில் பொங்கிய மோடி! Poll_c10'டீ விற்கலாம்.. நாட்டை விற்கக் கூடாது!'' - மும்பையில் பொங்கிய மோடி! Poll_m10'டீ விற்கலாம்.. நாட்டை விற்கக் கூடாது!'' - மும்பையில் பொங்கிய மோடி! Poll_c10 
கண்ணன்
'டீ விற்கலாம்.. நாட்டை விற்கக் கூடாது!'' - மும்பையில் பொங்கிய மோடி! Poll_c10'டீ விற்கலாம்.. நாட்டை விற்கக் கூடாது!'' - மும்பையில் பொங்கிய மோடி! Poll_m10'டீ விற்கலாம்.. நாட்டை விற்கக் கூடாது!'' - மும்பையில் பொங்கிய மோடி! Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

'டீ விற்கலாம்.. நாட்டை விற்கக் கூடாது!'' - மும்பையில் பொங்கிய மோடி!

Go down

'டீ விற்கலாம்.. நாட்டை விற்கக் கூடாது!'' - மும்பையில் பொங்கிய மோடி! Empty 'டீ விற்கலாம்.. நாட்டை விற்கக் கூடாது!'' - மும்பையில் பொங்கிய மோடி!

Post by சிவா Sat Dec 28, 2013 3:41 pm

'டீ விற்கலாம்.. நாட்டை விற்கக் கூடாது!'' - மும்பையில் பொங்கிய மோடி! 1546421_603235123082922_1692923164_n

ஐந்து மாநிலத் தேர்தல் வெற்றிக்குப் பிறகு மேலும் சுறுசுறுப்பாகிவிட்டது பி.ஜே.பி. அந்தக் கட்சியின் நம்பிக்கை நட்சத்திரமான நரேந்திர மோடி மீண்டும் தனது பேரணியைத் தொடங்கிவிட்டார்.

நரேந்திர மோடிதான் பி.ஜே.பி-யின் பிரதமர் வேட்பாளர் என்று முடிவானதும் அந்தக் கட்சி அனைத்து மாநிலங்களிலும் புதுப்புது தலைப்புகளில் விழா ஏற்பாடுசெய்து அவரைப் பிரபலப்படுத்தி வருகிறது. முதன்முறையாக ஹைதராபாத் நகரில் மோடியின் பொதுக்கூட்டமும் பேரணியும் நடந்தது. அந்தக் கூட்டத்தில் கலந்துகொள்பவர்களுக்குக் கட்டணம் வசூலிக்கப்பட்டது. திருச்சியில் இளந்தாமரை மாநாடு, டெல்லியில் விகாஷ் பேரணி, அடுத்து போபால் என்று கடந்த செப்டம்பரில் பேரணிகள் நடந்தன. அக்டோபர் மாதம் பாட்னாவில் 'ஹங்கர்’ பேரணி நடந்தது. அதன்பிறகு நவம்பர் 17-ம் தேதி பெங்களூருவில் 'இந்தியா வெற்றி பெற’ பேரணியும், 20, 21-ம் தேதிகளில் வாரணாசி மற்றும் ஆக்ராவில் 'வெற்றிச் சங்கு’ பேரணியும் மோடியின் 'மெகா ஷோ’க்களாக வட இந்தியாவில் அரங்கேறியது. இந்தப் பேரணிகளின் தொடர்ச்சியாகக் கடந்த வாரம் மும்பையில் பேரணி நடந்தது. இதற்கு 'மஹா கர்ஜனா’ என்று பெயர் சூட்டியிருந்தனர்.

10 ஆயிரம் டீக்கடைக்காரர்கள்!

மெகா சிட்டி மும்பையில் மெகா கட்டடங்கள் சூழ்ந்திருக்கும் இடம் பாந்த்ரா குர்லா வளாகம். இங்குள்ள எம்.எம்.ஆர்.டி.ஏ. என்ற மெகா மைதானத்தில் நரேந்திர மோடியின் மஹா கர்ஜனை மிகப் பிரமாண்டமாக அரங்கேறியது. மகாராஷ்ட்ராவின் மண்ணின் மைந்தரான பால்தாக்ரே மறைவுக்கு லட்சம் பேர் கூடினர் என்றால் மோடியின் கர்ஜனைக்கு அதைவிட மூன்று நான்கு மடங்கு மக்கள் திரண்டனர். போலீஸ் சொல்லும் கணக்கே ஐந்து லட்சம் பேர்.

கூட்டத்துக்கு அழைப்புவிடுத்து ஒரு கோடி எஸ்.எம்.எஸ்-கள் அனுப்பி வைக்கப்பட்டதாம். 4,000 பஸ்கள் நகருக்குள் வந்ததாகச் சொல்கிறார்கள். 25 சிறப்பு ரயில்கள் விடப்பட்டன. 20-க்கும் மேற்பட்ட குறுகிய தூர ரயில்கள் பேரணிக்கு வந்தவர்களை அழைத்து வந்தன. மேல்மட்டத்தினர் வருகையை உறுதி செய்ய முன் இருக்கை பதிவாக ஆன்-லைன் ரிஜிஸ்ட்ரேஷன் ஏற்பாடுகளும் செய்யப்பட்டன. சுமார் 60 ஆயிரம் பேர் ஆன்-லைனில் புக்கிங் செய்து பிரின்ட் அவுட் எடுத்து வந்தனர். இவர்களுக்குச் சிறப்பு இருக்கைகள். இவை தவிர ஆரஞ்சு நிற வி.வி.ஐ.பி. பாஸ்கள், பச்சை மற்றும் நீல நிற வி.ஐ.பி. பாஸ்கள் எனத் தனித்தனி நுழைவுகள்... இருக்கைகள். வெளிநாட்டுத் தூதர்கள் முதல் கார்ப்பரேட் முதலாளிகள் வரை அழைக்கப்பட்டனர்.

தொழிலதிபர்கள், டாக்டர்கள், வழக்கறிஞர்கள், கல்வியாளர்கள், சார்ட்டட் அக்கவுன்டென்ட்கள், வர்த்தகர்கள் என இந்தத் துறையைச் சார்ந்தவர்களையும் மகாராஷ்ட்ரா பி.ஜே.பி. குறிவைத்தது. இவர்களை இந்தப் பேரணியில் கலந்துகொள்ள சிறப்பு அழைப்புவிடுத்தது. இந்த லிஸ்ட்டில் டீக்கடைக்காரர்களுக்கும் சிறப்பு அழைப்பு. நரேந்திரமோடி ஆரம்ப காலத்தில் டீக்கடையில் வேலை பார்த்தவர் என்பதால், 'டீக்கடைக்காரர் பிரதமர் ஆக முடியாது’ என்று சமாஜ்வாதிக் கட்சி எம்.பி-யான நரேஷ் அகர்வால் ஏடாகூடமாகக் கருத்தை வெளியிட்டார். இதற்குப் பதிலடியாக பி.ஜே.பி-யும் இந்தத் தொழில் முனைவோர்களுக்குச் சிறப்பு அழைப்புவிடுத்தது. சுமார் 10 ஆயிரம் டீக்கடைக்காரர்களும் ஆவேசத்தோடு இந்தப் பேரணியில் கலந்துகொண்டனர்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

'டீ விற்கலாம்.. நாட்டை விற்கக் கூடாது!'' - மும்பையில் பொங்கிய மோடி! Empty Re: 'டீ விற்கலாம்.. நாட்டை விற்கக் கூடாது!'' - மும்பையில் பொங்கிய மோடி!

Post by சிவா Sat Dec 28, 2013 3:42 pm

டிஜிட்டல் கோட்!

முதன் முறையாகக் கீழ்நிலைப் பணியாளர்களான 'பூத் பிரமுக்’குகள் என்று சொல்லப்படும் வாக்குச்சாவடி பிரமுகர்களுக்குப் பச்சை நிற அழைப்பிதழ் தந்து வி.ஐ.பி. பகுதியில் அமர்த்தப்பட்டனர். இவர்கள் தலா 10 பேரை கூட்டத்துக்கு அழைத்துவர வேண்டும். இவர்களால் அழைத்து வரப்பட்டவர்கள்தான் பேரணியாக வந்தனர். இந்த சிறப்பு அழைப்பாளர்களின் அழைப்பிதழ்கள் டிஜிட்டல் மார்க்குடன் இருந்தன. இவர்கள் இரண்டு மூன்று அடுக்கு உடல் சோதனை, வெடிகுண்டு கருவி சோதனைகள் தவிர்க்கப்பட்டு, இந்த அழைப்பிதழில் உள்ள டிஜிட்டல் கோட் வேர்ட் மூலம் பரிசோதனை செய்யப்பட்டு உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.

மும்பை சிவாஜி பார்க்-கை விட நான்கு மடங்கு பெரியது பாந்த்ரா குர்லா எம்.எம்.ஆர்.டி.ஏ. மைதானம். பொதுமக்களும் தொண்டர்களும் வெட்ட வெளியில் நடுப்பகல் 28 டிகிரி வெயிலில் உட்கார்ந்து அமைதியாக ஒரு சிறிய அசம்பாவிதமும் இல்லாமல் மோடியின் கர்ஜனையைக் கேட்டனர்.

மும்பை பேரணிக்கு அழைப்பு விடுத்து கூட்டத்தைக் கூட்ட பழைய அணுகு முறையான பஸ், ரயில்களை விட்டாலும் எஸ்.எம்.எஸ்., இ-மெயில், பொதுக் கூட்ட ரிசர்வேஷன், சமூக வலைதளங்கள் என பல்வேறு வகைகளையும் கையாண்டு கூட்டத்தைக் கூட்டியது. மோடி மேடையில் பேச கூட்டத்துக்கு நடுவே வைக்கப்பட்டிருந்த கணினிகள் மூலம் சுமார் 60-க்கும் மேற்பட்ட சமூக வலைதள மீடியாக் கலைஞர்கள் மோடியின் பேச்சையும் படத்தையும் டிவிட்டரிலும் பேஸ்புக்கிலும் நிமிடத்துக்கு ஒருமுறை சோஷியல் மீடியாவில் ஏற்றிக்கொண்டிருந்தனர்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

'டீ விற்கலாம்.. நாட்டை விற்கக் கூடாது!'' - மும்பையில் பொங்கிய மோடி! Empty Re: 'டீ விற்கலாம்.. நாட்டை விற்கக் கூடாது!'' - மும்பையில் பொங்கிய மோடி!

Post by சிவா Sat Dec 28, 2013 3:43 pm


கூட்டணி பற்றி மூச்!

இப்போதெல்லாம், மோடியின் பேச்சில் மூன்று விவகாரங்கள் கண்டிப்பாக இடம்பெறுகின்றன.

1. அவர் சாதாரண டீக்கடைக்காரன் என்பது, 2. உள்ளூர் விவகாரங்களைத் தனது குஜராத்தோடு ஒப்பிடுவது, 3. காங்கிரஸ் மற்றும் ராகுல்.

ஒரு விஷயத்தில் மோடியும் பி.ஜே.பி-யும் எச்சரிக்கையாக இருக்கிறார்கள். திருச்சியில் எப்படி அ.தி.மு.க., தி.மு.க-வைப் பற்றிப் பேசுவதைத் தவிர்த்தாரோ அதே மாதிரி மும்பையில் தேசியவாத காங்கிரஸைப் பற்றியோ சிவசேனாவைப் பற்றியோ மோடி பேசவில்லை. அதிலும் கூட்டணிக் கட்சியான சிவசேனாவை இந்தப் பேரணிக்கு சம்பிரதாயத்துக்குக்கூட அழைக்கவில்லை. இதே மாதிரி உ.பி-க்குச் சென்ற போதும் சமாஜ்வாடி கட்சியையோ பகுஜன் சமாஜ் பற்றியோ வாய் திறக்கவில்லை. தேர்தல் முடிவுக்குப் பின்னர் யார் எங்கு வருவார்கள்? எங்கே போவார்கள்? என்பதில் உஷாராக இருக்கிறார் மோடி. மும்பை பேரணி மூலமாக சிவசேனாவை மறைமுறைமாக வழிக்கு கொண்டுவரவைப்பதும் தங்களுக்கும் கூட்டம் உண்டு நிரூபித்ததும்தான் சாதனை.

''இது சர்க்கரை வியாதி ஆட்சி!''

வழக்கம் போல காங்கிரஸை வறுத்தெடுத்தார் மோடி. ''டீ-யை விற்பது தவறில்லை. நாட்டை விற்பதுதான் தவறு. ஃபெக்கி ஆண்டு கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, 'ஊழல் மக்களின் ரத்தத்தை உலரவைக்கும்’ என்று பேசியிருக்கிறார். டெல்லியில் ஊழலை எதிர்த்துப் பேசும் காங்கிரஸ் தலைவர்கள் மகாராஷ்ட்ராவில் ஊழல் தலைவர்களைக் காப்பாற்றுகிறார்கள். இதுதான் காங்கிரஸ். ஓட்டுக்காக மொழியாலும் வகுப்புவாதத்தாலும் நாட்டைப் பிரித்தது காங்கிரஸ்தான்.

சமீபத்தில் நாடாளுமன்றத்தில் ஒரு கேள்வி கேட்கப்பட்டது. 'சிறுபான்மையினர் வசிக்கும் 90 மாவட்டங்களுக்குப் பிரதமர் சிறப்பு திட்டங்களை அறிவித்திருந்தாரே அந்தத் திட்டத்துக்கு எவ்வளவு செலவழிக்கப்பட்டது? என்பது அந்தக் கேள்வி. 'ஒரு பைசாகூட செலவழிக்கப்படவில்லை’ என்பது பதில். இவர்கள்தான் சிறுபான்மையினர் பற்றிப் பேசி நீலிக்கண்ணீர் வடிக்கிறார்கள். காங்கிரஸ் ஆட்சி என்பது சர்க்கரை வியாதிக்கு உள்ளான மாதிரி. ஒரு முறை சர்க்கரை வியாதிக்கு உட்பட்டுவிட்டால் உடலின் மற்ற பாகங்களும் மோசமாகிவிடும்.

இப்படியாகிவிட்ட டயாபெட் ஆட்சியை அகற்ற 'காங்கிரஸ் இல்லாத இந்தியா’ என்ற இயக்கத்தை இங்கே தொடங்குகிறோம். காந்தி இதே மும்பையில் 'வெள்ளையனே வெளியேறு’ இயக்கத்தைத் தொடங்கியது மாதிரி நாமும் இந்த 'காங்கிரஸ் இல்லாத இந்தியா’ இயக்கத்தை இங்கே தொடங்கி சர்க்கரை வியாதி ஆட்சிக்கு முற்றுவைப்போம். 2014 தேர்தலுக்காக நான் வாக்கு கேட்கவில்லை. 'வோட் ஃபார் இந்தியா’வுக்காகத்தான் கேட்கிறேன்'' என்று உரையை முடித்தார் மோடி.

தொடர்ந்து, ''நான் சில கோஷங்களை வைக்கிறேன் நீங்களும் முழக்கமிட வேண்டும்'' என்றார்.

'பரம்பரை ஆட்சியை ஒழிக்க வோட் ஃபார் இந்தியா, ஊழலை ஒழிக்க வோட் ஃபார் இந்தியா, பணவீக்கத்தை ஒழிக்க வோட் ஃபார் இந்தியா, மோசமான நிர்வாகம் போக்க வோட் ஃபார் இந்தியா, நாட்டின் ஒற்றுமை காக்க வோட் ஃபார் இந்தியா’ என்று மோடி முழங்கினார்... கூட்டத்தினரும் முழங்கினார்கள்.

விகடன்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

'டீ விற்கலாம்.. நாட்டை விற்கக் கூடாது!'' - மும்பையில் பொங்கிய மோடி! Empty Re: 'டீ விற்கலாம்.. நாட்டை விற்கக் கூடாது!'' - மும்பையில் பொங்கிய மோடி!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» பருப்பு வகைகளை கிலோ ரூ.120க்கு மேல் விற்கக் கூடாது !
» மும்பையில் நரேந்திர மோடி.. விமான நிலையத்தில் பிரம்மாண்ட வரவேற்பு
» மும்பையில் தேசிய சினிமா அருங்காட்சியகம் பிரதமர் மோடி திறந்து வைத்தார்
» மும்பையில் கல்வாரி என்று பெயரிடப்பட்டுள்ள நீர்மூழ்கிக் கப்பலை நாட்டுக்கு அர்ப்பணித்தார் பிரதமர் மோடி
» கழிப்பறை சுவர்களில் காந்தி, மோடி படம் கூடாது'

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum