ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Today at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஏர் ஏசியா - டோனி பெர்னாண்டஸ்

Go down

ஏர் ஏசியா - டோனி பெர்னாண்டஸ் Empty ஏர் ஏசியா - டோனி பெர்னாண்டஸ்

Post by டார்வின் Fri Dec 27, 2013 2:35 pm

ஏர் ஏசியா - டோனி பெர்னாண்டஸ் DO8nWlsRS9S33b91IuPw+300px-Tony_Fernandes
அந்தோனி பிரான்சிஸ் பெர்னாண்டஸ் CBE அல்லது டோனி பெர்னாண்டஸ் (மலாய்: Tony Fernandes; பிறப்பு: 30 ஏப்ரல்1964) என்பவர் மலேசியத் தொழில்முனைவர். ஏர் ஏசியா எனும் மலிவு விலை விமானச் சேவையை உருவாக்கியவர். இப்போது எல்லோரும் பறக்கலாம் (Now everyone can fly) எனும் வாசகத்தை உலகத்திற்கு அறிமுகம் செய்தவர்.
பெர்னாண்டஸ் பங்கு பாத்திரங்களை விற்பனை செய்யும் ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்தவர். தம்முடைய வீட்டை அடைமானம் வைத்து வணிகத்துறையில் ஈடுபட்டார். நொடித்துப் போன ஒரு நிறுவனத்தை தன்னம்பிக்கை, அயராத உழைப்பு, விடாமுயற்சிகளினால் நிலைநிறுத்தினார்.
ஆசிய நாடுகளில் பல மலிவுவிலை விமானச் சேவைகள் தோற்றம் காண்பதற்கு முன்னோடியாகத் திகழ்கின்றவர். இப்போது 88 ஏர்பஸ் விமானங்களுக்கு உரிமையாளர். மலேசியாவில் ஏறக்குறைய 9000 பேருக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கிக் கொடுத்து இருக்கிறார். டோனி பெர்னாண்டஸ் இப்போது மலேசியப் பணக்காரர்களில் ஒருவராக உள்ளார்.

பிறப்பும் கல்வியும்
டோனி பெர்னாண்டஸ், கோலாலம்பூர் பொது மருத்துவமனையில் 1964 ஏப்ரல் மாதம் 30ஆம் தேதி பிறந்தார். கோலாலம்பூர் புக்கிட் பிந்தாங் மையத்திற்குப் பின்னால் இருக்கும் திரேச்சர் சாலை பகுதியில் வளர்ந்தார். தற்சமயம் திரேச்சர் சாலை, ஜாலான் சுல்தான் இஸ்மாயில் என்று அழைக்கப்படுகிறது. பின்னர் அவர் ஐந்தாவது வயதில் இங்கிலாந்தில் உள்ள அலிஸ் ஸ்மித் பள்ளிக்கு அனுப்பப்பட்டார்.
டோனி பெர்னாண்டஸின் தந்தையார் ஓர் இந்தியக் குடிமகன். கோவாவைச் சேர்ந்தவர். அவர் ஒரு மருத்துவர். வெகு நாட்களாக கொல்கத்தாவில் பணிபுரிந்தார். பின்னர், சில காலத்திற்கு தொழில் மலேசியா புரிய வந்தார். வந்த இடத்தில் டோனி பெர்னாண்டஸின் தாயாரைச் சந்தித்தார். திருமணம் செய்து கொண்டார்.

தாயார் எனா பெர்னாண்டஸ்
டோனி பெர்னாண்டஸின் தாயார் எனா பெர்னாண்டஸ் போர்த்துகீசிய இனத்தவர். இவர் மலாக்காவைச் சேர்ந்தவர். அவர் ஓர் இசைக்கலை ஆசிரியர். மலேசியாவில் அவர் Tupperware எனும் நெகிழிப் பாண்டங்களை விற்பனை செய்யும் வியாபாரத் துறையிலும் இருந்தார். டோனி பெர்னாண்டஸுக்கு 16 வயதாக இருக்கும் போது அவருடைய தாயார் இறந்து போனார். தாயாரின் இறப்பு டோனி பெர்னாண்டசைப் பெரிதும் பாதித்தது. அதனால் அவர் வெளி உலகத் தொடர்புகளை முற்றாக ஒதுக்கினார். தன் முழு கவனத்தை படிப்பிலும் பணம் சம்பாதிப்பதிலும் திசை திருப்பினார்.

விமானச்சேவை விண்ணப்பம்
1977இல் இருந்து 1983 வரை இங்கிலாந்து, சுரே எனும் நகரில் இருக்கும் எப்சோம் கல்லூரியில் மேல்படிப்பைத் தொடர்ந்தார். 1987-இல் லண்டன் பொருளாதாரப் பள்ளியில் பயின்று பட்டம் பெற்றார். 1987-1989 வரை சர் ரிச்சர்ட் பிரான்சனுக்கு சொந்தமான விர்ஜின் இசைத்தட்டு நிறுவனத்தில் நிதித்துறை தணிக்கையாளராகப் பணிபுரிந்தார். பிரான்சன் இங்கிலாந்தின் நான்காவது பெரிய பணக்காரர். 1991 இல் சான்றளிக்கப்பட்ட பட்டயக் கணக்காளர்கள் சங்கத்தின் இணை உறுப்பினரானதுடன் 1996 இல் சக உறுப்பினரானார். 1992லிருந்து 2001 வரை வார்னர் இசைக் குழுமத்தில் தென்கிழக்காசிய துணைத் தலைவராகப் பதவி வகித்தார். இந்தக் கட்டத்தில் தான் மலேசியாவில் ஒரு மலிவுவிலை விமானச் சேவையைத் தொடங்க அரசாங்கத்திடம் உரிம விண்ணப்பம் செய்தார். அந்த விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது.

பிரதமருடன் சந்திப்பு
2001 ஆம் ஆண்டில் ஏர் ஆசியா விமானச் சேவை மலேசிய அரசாங்கத்திற்குச் சொந்தமாக இருந்தது. அந்த விமான நிறுவனம் திவாலாகி விழுந்து சரிந்து கொண்டிருந்தது. அந்தக் கட்டத்தில் மறுபடியும் டோனி பெர்னாண்டஸ் மலிவு விலை விமானச் சேவைக்கு உரிமம் கேட்டு மலேசிய அரசாங்கத்திடம் விண்ணப்பம் செய்து இருந்தார். அவருடைய விண்ணப்பம் மறுபடியும் நிராகரிக்கப்பட்டது.
மனம் தளராத டோனி பெர்னாண்டஸ், அப்போதைய பிரதமர் துன் மகாதீரைச் சந்திக்க அனுமதி கேட்டார். அந்த கோரிக்கையும் தள்ளுபடி செய்யப்பட்டது. அப்போது மலேசிய உள்நாட்டு வாணிப, பயனீட்டாளர் துறை அமைச்சின் பொதுச் செயலாளராக இருந்த டத்தோ பாமின் ரெஜாப் என்பவரின் நட்பு டோனி பெர்னாண்டஸுக்கு கிடைத்தது.
அவர் மூலமாக பிரதமர் துன் மகாதீரைச் சந்திக்க ஓர் அரிய வாய்ப்பும் கிடைத்தது. ’புதிதாக ஒரு விமானச் சேவை வேண்டாம். முடிந்தால் நட்டத்தில் போய்க் கொண்டிருக்கும் ஏர் ஆசியா விமானச் சேவையை எடுத்து நடத்திப் பார். உன் அதிர்ஷ்டம்’ என்று ஐந்தே நிமிடங்களில் பேசி டோனி பெர்னாண்டஸை வீட்டிற்கு அனுப்பி வைத்தார் பிரதமர் துன் மகாதீர்.
அப்போது டோனி பெர்னாண்டஸுக்கு வயது 37. உலகச் சாதனை ஒன்றைச் செய்யப் போகிறோம் என்று அறிந்திராத வயது. பிரதமர் துன் மகாதீரின் கருத்துகளை ஒரு சவாலாக எடுத்துக் கொண்டு விமானச் சேவை உலகில் காலடி எடுத்து வைத்தார் டோனி பெர்னாண்டஸ்.

ஏர் ஆசியா விமானச் சேவை



மலிவுவிலை விமானச்சேவை ஸ்கைடிராக் விருது.
2001ஆம் ஆண்டு ஏர் ஆசியா விமான நிறுவனத்திற்கு 40 மில்லியன் ரிங்கிட் கடன் இருந்தது. அந்த நிறுவனத்தை மலேசிய அரசாங்கத்தின் டி. ஆர். பி.ஹைகாம் நிறுவனம் நடத்தி வந்தது. இரண்டே இரண்டு பழைய போயிங் 737-300 ரக விமானங்கள் மட்டுமே சேவையில் இருந்தன. ஆனால், ஏர் ஆசியா விமானச் சேவையை தூக்கி நிறுத்த முடியும் என்று டோனி பெர்னாண்டஸ் நம்பினார். அந்த நிறுவனத்தை ஒரே ஒரு ரிங்கிட் மூலதனத்தில் வாங்கிக் கொண்டார்.
2003ஆம் ஆண்டு தாய்லாந்து, இந்தோனேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளுக்கு தன்னுடைய விமானச் சேவையை விரிவுபடுத்தினார். ஏர் ஆசியா விமான நிறுவனம் படிப்படியாக வளர்ச்சி அடைந்தது. இப்போது 25 நாடுகளில் உள்ள 400 நகரங்களுக்கு தன் அனைத்துலகச் சேவையை வழங்கி வருகிறது. அதன் துணை நிறுவனங்களாக தாய் ஏர் ஆசியா (Thai AirAsia), இந்தோனேசியா ஏர் ஆசியா (Indonesia AirAsia) எனும் இரு நிறுவனங்கள் உள்ளன.
'டோனி பெர்னாண்டஸுக்கு கிறுக்குப் பிடித்துப் போய் விட்டது. அதனால் தான் ஏர் ஆசியா விமான நிறுவனத்தை வாங்கியிருக்கிறார்' என்று சொன்னவர்கள் அவரை இப்போது நம்பிக்கையின் நட்சத்திரமாகப் புகழ்கின்றார்கள். அவருடைய அணுகுமுறையைப் பயன்படுத்தி உலகின் பல நாடுகளில் பல மலிவு விலை விமானச் சேவைகள் தொடங்கப்பட்டுள்ளன.
ஏர் ஏசியா - டோனி பெர்னாண்டஸ் ISEAfChiQQuii7CEPeu0+800px-SkyTrax_Award

சாதனைகள்

டோனி பெர்னாண்டஸின் மிகப்பெரிய சாதனை ஏர் ஆசியா உள்நாட்டு விமானச் சேவையை அனைத்துலக விமானச் சேவையாக மாற்றியமைத்ததே. ஏர் ஆசியா விமானச் சேவை தோற்றுவிப்பதற்கு முன்னர் ஆசிய வட்டாரத்தில் திறந்த வான்வெளி ஒப்பந்தங்கள் (open-skies) இல்லாமல் இருந்தது.
2003 ஆம் ஆண்டில் திறந்த வான்வெளி ஒப்பந்தங்கள் உருவாக்கம் பெறுவதற்கு டோனி பெர்னாண்டஸ் முழுமூச்சாக ஈடுபட்டார். அதற்கு பிரதமர் துன் மகாதீரும் உறுதுணையாக இருந்தார். தென்கிழக்கு ஆசிய நாடுகளில் மலிவுவிலை விமானச் சேவைகள் தோற்றம் காண்பதற்கு முன்னோடியாக இருந்தவர் டோனி பெர்னாண்டஸ். அதன் பயனாக பல மலிவுவிலை விமானச் சேவைகள் தோன்றியுள்ளன.

wikipedia,,
டார்வின்
டார்வின்
மூத்த உறுப்பினர்


பதிவுகள் : 862
இணைந்தது : 03/02/2009

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum