புதிய பதிவுகள்
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Yesterday at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Yesterday at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Yesterday at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Yesterday at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Yesterday at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Jun 03, 2024 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Jun 03, 2024 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Jun 03, 2024 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Mon Jun 03, 2024 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Mon Jun 03, 2024 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஜென் கதைகள் - Page 2 Poll_c10ஜென் கதைகள் - Page 2 Poll_m10ஜென் கதைகள் - Page 2 Poll_c10 
21 Posts - 66%
heezulia
ஜென் கதைகள் - Page 2 Poll_c10ஜென் கதைகள் - Page 2 Poll_m10ஜென் கதைகள் - Page 2 Poll_c10 
11 Posts - 34%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஜென் கதைகள் - Page 2 Poll_c10ஜென் கதைகள் - Page 2 Poll_m10ஜென் கதைகள் - Page 2 Poll_c10 
63 Posts - 64%
heezulia
ஜென் கதைகள் - Page 2 Poll_c10ஜென் கதைகள் - Page 2 Poll_m10ஜென் கதைகள் - Page 2 Poll_c10 
32 Posts - 32%
T.N.Balasubramanian
ஜென் கதைகள் - Page 2 Poll_c10ஜென் கதைகள் - Page 2 Poll_m10ஜென் கதைகள் - Page 2 Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
ஜென் கதைகள் - Page 2 Poll_c10ஜென் கதைகள் - Page 2 Poll_m10ஜென் கதைகள் - Page 2 Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜென் கதைகள்


   
   

Page 2 of 2 Previous  1, 2

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Dec 27, 2013 4:12 am

First topic message reminder :

ஷிசிரி கோஜுன் என்ற ஜென் துறவி. அவருடைய ஆசிரமத்துக்குள் ஒரு திருடன் புகுந்துவிட்டான்.

திருடனைப் பார்த்த துறவி பயப்படவில்லை. பதறவில்லை. ‘உனக்கு என்ன வேணுமோ, எடுத்துக்கோப்பா!’ என்று சொல்லிவிட்டார்.

இதைப் பார்த்த திருடனுக்கு ஆச்சர்யம். ஆனால் அதற்காக வலியக் கிடைப்பதை விடமுடியுமா? கண்ணில் பட்ட பொருள்களையெல்லாம் சுருட்டிக்கொண்டு கிளம்பினான்.

அவன் புறப்படும் நேரம், ஷிசிரி கோஜுன் அவனை அழைத்தார். ‘கொஞ்சம் பொறுப்பா!’

‘என்ன சாமி? போலிஸைக் கூப்பிடப்போறீங்களா?’

‘அதெல்லாம் இல்லை. என்கிட்டேயிருந்து இத்தனை பொருள் எடுத்துகிட்டுப் போறியே, எனக்கு நன்றி சொல்லமாட்டியா?’

‘சொல்லிட்டாப் போச்சு. ரொம்ப நன்றி!’ என்றான் திருடன். ஓடி மறைந்துவிட்டான்.

சில நாள்கள் கழித்து, போலிஸ் அந்தத் திருடனைப் பிடித்துவிட்டது. அவன்மீது வழக்குத் தொடுத்தார்கள். சாட்சி சொல்ல ஷிசிரி கோஜுனை அழைத்தார்கள். அவரும் வந்தார். நீதிபதிமுன் நின்றார். ‘ஐயா, இந்த இளைஞனை எனக்குத் தெரியும். ஆனால் இவன் திருடன் இல்லை!’ என்றார்.

‘என்னங்க சொல்றீங்க? எல்லாரும் இவனைத் திருடன்னுதானே சொல்றாங்க?’

‘இருக்கலாம். ஆனால் என்னைப் பொறுத்தவரை நான் இவனுக்குச் சில பொருள்களைக் கொடுத்தேன். அவன் அதற்கு நன்றி சொல்லிவிட்டுச் சென்றான். கணக்கு சரியாகிவிட்டது!’


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Dec 27, 2013 4:17 am

ஓர் ஏழைக் குடும்பம். தங்கள் மகனை நன்கு படிக்கவைத்துப் பெரிய ஆளாக்கவேண்டும் என்று நினைத்தார்கள். ஒரு ஜென் துறவியின் ஆசிரமத்துக்கு அனுப்பிவைத்தார்கள்.

முதல்நாள், துறவி தன்னுடைய சிஷ்யனிடம் ஒரு மண் பாத்திரத்தைக் கொடுத்தார். ‘ஆத்துல போய்த் தண்ணி பிடிச்சுகிட்டு வா’ என்றார்.

சிஷ்யன் சுறுசுறுப்பாக ஓடினான். பானை நிறையத் தண்ணீர் பிடித்துக்கொண்டு வந்தான்.

‘சரி, இப்போ எல்லாச் செடிக்கும் இந்தத் தண்ணியைக் கொஞ்சம் கொஞ்சமா இறைச்சு ஊத்து’ என்றார் குருநாதர்.

சிஷ்யன் ஊற்ற ஆறம்பித்தான். சில நிமிடங்களுக்குள் அவனுடைய கையெல்லாம் வலிக்க ஆரம்பித்துவிட்டது. ஆனாலும் பொறுத்துக்கொண்டு வேலையை முடித்தான். பானை காலியாகிவிட்டது.

குருநாதர் மீண்டும் அவனை விரட்டினார். ‘ஓடு, மறுபடி ஆத்துல தண்ணி பிடிச்சுகிட்டு வா!’

இப்படித் தினமும் ஏழு முறை அவன் ஆற்றில் இருந்து தண்ணீர் பிடித்து வரவேண்டும். அதைச் செடிகளுக்கு இறைத்து ஊற்றவேண்டும். இதைத் தவிர வேறு எந்தப் பாடமும் அவர் அவனுக்குச் சொல்லித்தரவில்லை.

சிஷ்யன் கடுப்பாகிவிட்டான். ‘செடிங்களுக்குத் தண்ணி ஊத்தறது அவசியம்தான். அதுக்காகத் தினமும் ஏழு வாட்டியா?’ என்று நினைத்தான். ‘இந்தத் துறவிகிட்ட பாடம் படிக்கலாம்ன்னு வந்தா இவர் என்னைக் கொத்தடிமைமாதிரி நடத்தறாரே, என்ன செய்யறது?’

அடுத்த நாள், அந்த ஜென் துறவி ஒரு மேஜைமுன் உட்கார்ந்து படித்துக்கொண்டிருந்தார். சிஷ்யன் அவர் முன்னே போய் நின்றான். ‘நான் கிளம்பறேன்’ என்றான்.

‘ஏன்?’

‘நீங்க எனக்கு எதுவுமே கத்துத்தரலியே. இனிமேலும் இங்கே இருந்து எனக்கு என்ன பிரயோஜனம்?’ ஆத்திரத்தோடு மேஜைமீது குத்தினான் அந்த சிஷ்யன்.

மறுவிநாடி, கனமான அந்த மர மேஜை இரு துண்டுகளாகி விழுந்தது. அதை ஆச்சர்யத்தோடு பார்த்த சிஷ்யனுக்கு, தான் இத்தனை நாளாகக் கற்றுக்கொண்ட ‘பாடம்’ விளங்கத் தொடங்கியது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Dec 27, 2013 4:17 am

ஒரு ஜென் மாஸ்டர். அவரிடம் பல மாணவர்கள் பாடம் பயின்றுவந்தார்கள்.

சில மாதங்கள் கழித்து, ஒரு மூதாட்டி அவருடைய ஆசிரமத்துக்குள் கோபமாக நுழைந்தார். ‘யோவ் வாத்யாரே, நீ செய்யறது உனக்கே நியாயமாப் படுதா?’ என்று கூச்சல் போட ஆரம்பித்தாள்.

‘அம்மா, கோபப்படாதீங்க, என்ன விஷயம்? நிதானமாச் சொல்லுங்க!’ என்றார் ஜென் மாஸ்டர்.

’என் மகனும், அவனோட சிநேகிதனும் ஒரே நாள்லதான் உங்க ஆசிரமத்துல சிஷ்யர்களாச் சேர்ந்தாங்க’ என்றார் அந்த மூதாட்டி. ‘ஆறு மாசமா ரெண்டு பேரும் ஒரேமாதிரிதான் படிக்கறாங்க. ஆனா இன்னிக்கு, என் மகனைவிட அவனோட சிநேகிதன் அதிக புத்திசாலியா இருக்கான், நிறைய விஷயங்களைத் தெரிஞ்சுவெச்சிருக்கான், இதுக்கெல்லாம் என்ன அர்த்தம்?’

‘என்ன அர்த்தம்? நீங்களே சொல்லுங்களேன்!’

’நீங்க உங்க மாணவர்கள் மத்தியில பாரபட்சம் காட்டறீங்க, ஒரு பையனுக்கு நல்லாச் சொல்லிக்கொடுத்துட்டு இன்னொரு பையனை ஒதுக்கறீங்க!’

ஜென் மாஸ்டர் சிரித்தார். ‘அம்மா, கோயில்ல ஒரு மணியைக் கட்டியிருக்கோம், அதை நீங்க மெதுவா அடிச்சா கொஞ்சமா சத்தம் கேட்கும், பலமா அடிச்சா ரொம்ப தூரத்துக்குக் கேட்கும். இல்லையா?’

‘ஆமா, அதுக்கும் இதுக்கு என்ன சம்பந்தம்?’

‘குரு-ங்கறவர் அந்த மணியைப்போலதான், மாணவன் எந்த அளவு சிரத்தை எடுத்துகிட்டுப் படிக்கறானோ, அந்த அளவு அவனால அந்த குருவைப் பயன்படுத்திக்கமுடியும், அவர்கிட்டேயிருந்து விஷயங்களைக் கிரகிச்சுக்கமுடியும், இதையெல்லாம் செய்யாம சும்மா உட்கார்ந்திருக்கவும் முடியும். புரியுதா?’

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Dec 27, 2013 4:17 am

சுஸூகி ரோஷி என்பவர் புகழ் பெற்ற ஜென் மாஸ்டர். அவரிடம் பல இளைஞர்கள் பாடம் படித்துவந்தார்கள்.

அந்த இளைஞர் கூட்டத்தில் ஒரு பெண். அவள் தன்னுடைய குருநாதரை நேசிக்கத் தொடங்கிவிட்டாள்.

இது தவறு என்பது அவளுக்கு நன்றாகத் தெரிந்திருந்தது. ஆனாலும் அவளால் தன்னைக் கட்டுப்படுத்திக்கொள்ள முடியவில்லை. காதல் எண்ணங்கள் அவளைத் துரத்தித் துரத்தி அடித்தன.

ஒருநாள், அவள் தன் குருநாதரைத் தனிமையில் சந்தித்தாள். தனது பிரச்னையைச் சொன்னாள். ‘இப்போது நான் என்ன செய்யவேண்டும் குருவே?’ என்று கேட்டாள்.

சுஸூகி ரோஷி சிரித்தார். ‘பெண்ணே, நீ நினைப்பதில் தவறில்லை!’ என்றார். ‘நம் இருவருக்கும் தேவையான காதல் உன்னிடமே சுரந்துகொண்டிருக்கிறது!’

‘அப்படியானால், நீங்கள் என்னைத் திருமணம் செய்துகொள்வீர்களா?’ ஆவலுடன் கேட்டாள் அந்தப் பெண்.

‘அது முடியாது!’ என்றார் சுஸூகி ரோஷி. ‘காரணம், நம் இருவருக்கும் தேவையான கட்டுப்பாடு என்னிடம் சுரந்துகொண்டிருக்கிறது!’

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Dec 27, 2013 4:18 am

ஒரு ஜென் துறவி. காட்டில் எளிய குடிசை அமைத்துக்கொண்டு வாழ்ந்துவந்தார்.

அன்றைக்கு அந்தக் காட்டில் ஒரு திருடன் உலவிக்கொண்டிருந்தான். இந்தக் குடிசையைப் பார்த்தவுடன் அவன் முகத்தில் வெளிச்சம். ‘இங்கே ஏதாவது சிக்கும்’ என்கிற நம்பிக்கையுடன் உள்ளே நுழைந்தான்.

ஆனால், அந்தக் குடிசை துடைத்துவைக்கப்பட்டதுபோல் காலியாக இருந்தது. மையத்தில் தியானம் செய்துகொண்டிருந்த அந்தத் துறவியைத்தவிர வேறு யாரும், எதுவும் அங்கே இல்லை.

திருடன் ஏமாந்துபோனான். திரும்பிச் செல்ல முயன்றான்.

‘கொஞ்சம் நில்லப்பா’ என்றார் துறவி. ‘நீ எதற்காக இங்கே வந்தாய் என்பது எனக்குத் தெரியும். ரொம்ப தூரம் பயணம் செய்து வந்துள்ள உன்னை வெறும் கையோடு அனுப்ப எனக்கு மனம் இல்லை.’

திருடன் அவரை எரிச்சலுடன் பார்த்தான். ‘அதுக்காக? என்ன செய்யப்போறீங்க?’

ஜென் துறவி தன்னுடைய ஆடைகளைக் கழற்றி அவனிடம் கொடுத்தார். ‘இந்தா, இந்தத் துணிகளை என்னுடைய பரிசாக ஏற்றுக்கொள்!’

திருடன் திருதிருவென்று விழித்தான். ஏதோ கிடைத்தவரை லாபம் என்று அந்தத் துணிகளைச் சுருட்டிக்கொண்டு ஓடினான்.

நிர்வாணமாக இருந்த துறவி ஜன்னல் வழியாக வெளியே வானத்தைப் பார்த்தார். ‘பாவம், அவனுக்கு இந்த அழகான நிலாவைப் பரிசாகக் கொடுத்திருக்கலாம்!’

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Dec 27, 2013 4:18 am

சுவாங் ட்ஸு என்பவர் நான்காம் நூற்றாண்டில் வாழ்ந்த சீன மேதை. ஜென் மாஸ்டர்.

ஒருமுறை அவருடைய சிஷ்யர் ஒருவர் கேட்டார், ‘குருவே, நீங்கள் எத்தனையோ பெரிய மனிதர்களைச் சந்தித்திருக்கிறீர்கள். அவர்களில் உங்களுடைய மனத்தைக் கவர்ந்தவர் யார்?’

சுவாங் ட்ஸு சிரித்தார். ‘என்னுடைய மனத்தைக் கவர்ந்த அந்த மனிதரை நான் இன்னும் சந்திக்கவில்லை.’

‘அப்படியா? யார் அவர்?’

‘வார்த்தைகளை மறந்த ஒருவர்!’

‘புரியவில்லையே!’

சுவாங் ட்ஸு விளக்கத் தொடங்கினார். ‘நீங்கள் வலை வீசி மீன் பிடிக்கிறீர்கள். மீன் கிடைத்தவுடன் வலையை என்ன செய்வீர்கள்?’

’தூர வீசிவிடுவோம்!’

’ஆக, வலை தூர வீசப்படும்வரை, உங்களுக்கு மீன் இன்னும் கிடைக்கவில்லை என்று அர்த்தம். இல்லையா?’

‘ஆமாம் குருவே!’

‘அதேபோல், முயலைப் பொறி வைத்துப் பிடிக்கிறோம். முயல் கிடைத்தவுடன் பொறியைத் தூர வீசிவிடுகிறோம். இல்லையா?’

’உண்மைதான். அதற்கென்ன?’

’வலை, பொறிபோலதான் நாம் பேசும் வார்த்தைகளும். அவை உயர்ந்த கருத்துகளைக் கொண்டுசெல்லும் வாகனங்கள். நாம் அந்தக் கருத்தைப் புரிந்துகொண்டவுடன், வார்த்தைகள் மறந்துபோகும்’ என்றார் சுவாங் ட்ஸு. ‘ஆனால் நான் சந்தித்த எவரும் வார்த்தைகளை இன்னும் மறக்கவில்லை. தொடர்ந்து அவற்றோடுதான் மன்றாடிக்கொண்டிருக்கிறார்கள், அப்படியானால் உலகப் பேருண்மைகளை அவர்கள் இன்னும் புரிந்துகொள்ளவில்லை என்றுதானே அர்த்தம்?’

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Dec 27, 2013 4:18 am

தஹுய் ஜொன்காவ் என்பவர் பன்னிரண்டாம் நூற்றாண்டு சீனாவில் வாழ்ந்த ஜென் துறவி.

அந்தக் காலத்தில் துறவிகள் எல்லோரும் நெடுநேரம் தியானத்தில் அமர்ந்திருப்பது வழக்கம். பல துறவிகள் ராத்திரி நேரத்தில்கூடச் சரியாகத் தூங்காமல் தியானம் செய்வார்கள். அந்தப் பயிற்சிதான் அவர்களுக்குப் பல பேருண்மைகளைப் புரியவைப்பதாக அனைவரும் நம்பினார்கள்.

ஆனால் இந்த விஷயத்தில் தஹுய் ரொம்ப வித்தியாசமானவர். அவர் தியானத்தில் அமர்வதே அபூர்வம். நினைத்த நேரத்தில் சாப்பிடுவார். நினைத்த நேரத்தில் தூங்குவார்.

இதைப் பார்த்து எரிச்சலான சில இளம் துறவிகள் தஹுய் ஜொன்காவை நெருங்கினார்கள். தங்களுடைய கோபத்தைச் சொன்னார்கள்.

தஹுய் சிரித்தார். ‘நண்பர்களே, நான்மட்டுமில்லை, நீங்கள்மட்டுமில்லை, இந்தப் பூமியில் யாரும் மணிக்கணக்காக வெறுமனே கண் மூடி அமர்வதன்மூலம் ஞானத்தைப் பெற்றுவிடமுடியாது!’

‘பின்னே?’

’கடந்த பதினேழு வருடங்களாக நான் தொடர்ந்த தியானத்தில் இருக்கிறேன், ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு நிமிடமும்!’ என்றார் தஹுய். ‘நான் தேநீர் அருந்தும்போதும் சரி, சாப்பிடும்போதும் சரி, குளிக்கும்போதும் சரி, தூங்கும்போதும் சரி, எனக்குள் இருக்கும் தேடல் குறையவில்லை, மறையவில்லை, அதைத் தொந்தரவு செய்ய யாரையும் நான் அனுமதிப்பதில்லை!’

‘அந்தத் தொடர்ச்சியான தேடல்தான், எனக்கு ஞானத்தைப் பெற்றுத் தரும் என்று நான் நம்புகிறேன். அமைதியாகத் தவம் செய்வதைவிட, நம்முடைய வழக்கமான செயல்களுக்கு நடுவிலும் ஞானத் தேடலை மறந்துவிடாமல் இருப்பதுதான் ரொம்பக் கஷ்டம்!’

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Dec 27, 2013 4:18 am

கல்லூரியில் ஜென் வகுப்பு. ப்ரொஃபஸர் சுவாரஸ்யமாகப் பாடம் நடத்திக்கொண்டிருந்தார். ‘பு ஜி-ன்னா என்ன தெரியுமா?’

‘புஜ்ஜி-ன்னா தெரியும் சார்’ என்றான் ஒரு குறும்புப் பையன். ‘எங்கம்மா என்னை அப்படிதான் கொஞ்சுவாங்க!’

ப்ரொஃபஸர் கோபப்படவில்லை. ‘புஜ்ஜி இல்லை, பு ஜி’ என்றார். ‘ஜென் மாஸ்டர் ரின்ஜாய் அடிக்கடி சொல்லிப் பிரபலப்படுத்தின வார்த்தை இது, அப்டீன்னா, செயல் எதுவும் இல்லாத வெற்றிடம்-ன்னு அர்த்தம்!’

‘வெட்டியா உட்கார்ந்திருக்கறது, அப்படிதானே சார்?’ யாரோ பின் வரிசையிலிருந்து இப்படிக் கேட்டதும் வகுப்பில் சிரிப்பலை.

’இல்லை’ என்றார் ப்ரொஃபஸர். ‘ஜென் தத்துவம் சோம்பேறித்தனத்தை ஊக்குவிக்கறதில்லை, இயற்கையோட போக்குல நம்மோட செயலைக் கலந்துடச் சொல்லுது, அப்போ அந்தச் செயல் தனியாத் துருத்திகிட்டுத் தெரியாது. அதான் பு ஜி!’

‘அது எப்படி சார் முடியும்?’ என்றான் ஒரு பையன். ‘மத்த ஜென் தத்துவங்களைப் பத்தி எனக்குத் தெரியாது, ஆனா இந்த பு ஜி எதார்த்தத்தில சாத்தியமே இல்லை-ன்னு நினைக்கறேன். நாம எதைச் செஞ்சாலும் அதைச் செய்யறோம்-ங்கற உணர்வு நமக்குள்ள இருந்துகிட்டுதானே இருக்கும், அதை மறக்கடிக்கறது எப்படி?’

‘நாமே வலிய உட்கார்ந்து அதை மறக்க முயற்சி பண்ணினா சிரமம், ஆனா அந்த எண்ணமே நமக்கு வராதபடி தடுத்துட்டா சுலபம்’ என்றார் ப்ரொஃபஸர்.

’அதான் எப்படி?’

‘நீ எப்படி நடக்கறே? எப்படி மூச்சு விடறே? அதைப்பத்தியெல்லாம் என்னிக்காவது யோசிச்சதுண்டா? அதுபாட்டுக்குத் தானா ஆட்டோபைலட்ல நடக்குது. இல்லையா?’

‘அ-ஆமா!’

’அதைத்தான் பு ஜி-ன்னு சொல்றார் ரின்ஜாய்’ என்று முடித்தார் ப்ரொஃபஸர். ‘சுவாசம்மாதிரி, நடைமாதிரி, கை அசைவுகள் மாதிரி நம்மோட ஒவ்வொரு செயலும் இயற்கையோட ஒன்றிப்போயிடணும், அதைச் செஞ்சுகிட்டிருக்கோம்-ங்கற நினைப்பே எழக்கூடாது. அதுதான் பர்ஃபெக்ட் ஜென் வாழ்க்கை!’

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Dec 27, 2013 4:19 am

ஜப்பானில் ஓர் அரசன். அவனுக்கு ஜென் படிக்கவேண்டும் என்று ஆசை.

அவனுடைய நாட்டில் ஒரு புகழ் பெற்ற ஜென் மாஸ்டர் இருந்தார். அவரிடம் பல நூறு சீடர்கள் படித்துவந்தார்கள்.

ஆனால், இவன்தான் ராஜாவாச்சே, ஜென் மாஸ்டரைத் தன் அரண்மனைக்குக் கூப்பிட்டு அனுப்பினான். ‘ஐயா, தயவுசெஞ்சு என்னை உங்க சீடனா ஏத்துக்கோங்க’ என்றான்.

அந்த மாஸ்டர் சாதுவான ஆசாமி. ‘சரி’ என்று உடனே சம்மதித்துவிட்டார்.

அரசனுக்கு ரொம்ப சந்தோஷம். ‘குருவே, முதல் பாடம் ஆரம்பிக்கறதுக்கு முன்னாடி, நான் ஒரு கேள்வி கேட்கலாமா?’

‘கேளுப்பா’ என்றார் குருநாதர்.

‘ஜென் அப்டீன்னா என்ன?’

குருநாதர் யோசித்தார். ‘எனக்கு 1 நாள் அவகாசம் கொடு. பதில் சொல்றேன்’ என்றார்.

ஒரு நாள் முடிந்தது. அரசன் அவரைச் சந்திக்க வந்தான். ‘குருவே, என் கேள்விக்குப் பதில் கிடைச்சதா?’

’இல்லை’ என்றார் குருநாதர். ‘எனக்கு இன்னும் ஏழு நாள்கள் அவகாசம் வேணும்!’

அரசனுக்கு எரிச்சல். ஆனாலும் குருவாச்சே. சம்மதித்தான்.

ஏழு நாள்கள் கழித்து, அரசன் மீண்டும் குருவைச் சந்திக்கச் சென்றான். ‘குருவே, ஜென் அப்டீன்னா என்ன? இப்பவாச்சும் சொல்லுங்க’ என்றான்.

’எனக்கு இன்னும் ஒரு வருஷம் அவகாசம் வேணும்’ என்றார் குருநாதர்.

அரசன் கடுப்பாகிக் கத்த ஆரம்பித்துவிட்டான். ‘யோவ், நீ குருவா, டுபாக்கூரா? தெரிஞ்சா பதில் சொல்லு, இல்லாட்டி வெளியே போ, ஏன் இப்படி இழுத்தடிக்கறே?’ என்றான்.

‘நான் என்னப்பா செய்யறது? ஜென் பற்றி யோசிக்க யோசிக்கதானே புதுப்புது கேள்விகள் பிறக்கின்றன? அதற்கெல்லாம் பதில் கண்டுபிடிக்க இன்னும் இன்னும் நேரம் தேவைப்படுகிறது’ என்று அமைதியாகச் சொன்னார் அந்தக் குருநாதர்.

Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக