ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Yesterday at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Aug 20, 2024 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Aug 20, 2024 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Aug 20, 2024 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

உத்தம் சிங் பிறந்தநாள் - சிறப்பு பகிர்வு

4 posters

Go down

 உத்தம் சிங் பிறந்தநாள் - சிறப்பு பகிர்வு Empty உத்தம் சிங் பிறந்தநாள் - சிறப்பு பகிர்வு

Post by சிவா Thu Dec 26, 2013 3:52 pm


டிசம்பர் 26: உத்தம் சிங் பிறந்தநாளையொட்டி சிறப்பு பகிர்வு

 உத்தம் சிங் பிறந்தநாள் - சிறப்பு பகிர்வு P125a

ஆங்கிலேயரே ஆண்டிருக்கலாம் என்பவர்கள், இந்தச் சம்பவத்தையும், அதைத் தொடர்ந்து நடந்த நிகழ்வுகளையும் கட்டாயம் அறிந்துகொள்ள வேண்டும்.

ஆங்கிலேய அரசு 1919இல் ரவுலட் சட்டத்தை கொண்டு வந்தது. விசாரணையே இல்லாமல், காரணமே சொல்லாமல் இந்தியர்களை கைது செய்ய முடியும் என கொடிய நடைமுறையை ஆங்கிலேய அரசு அறிவித்தது. பஞ்சாபில் முக்கியமான தலைவர்கள் கைது செய்யப்பட்டார்கள். ரவுலட் சட்டத்தை பயன்படுத்தி 581 பேர் கைது செய்யப்பட்டார்கள் ; நூற்றி ஏழு பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது,264 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. கூடவே ஆங்கிலேயர் ஒரு தெருவில் தோன்றினால் அவருக்கு தலை குனிந்து வணக்கம் செலுத்த வேண்டும் ; தவழ்ந்தும் செல்ல வேண்டும். தவறினால் கடுமையான தண்டனைகள் விதிக்கப்பட்டது. சில இடங்களில் வன்முறைகளும் வெடித்தன. காந்தியடிகள் அமிர்தசரஸ் நகருக்குள் நுழைய தடை வேறு விதிக்கப்பட்டு இருந்து. சத்யபால் கிட்ச்லு எனும் இரு தலைவர்களை நாடு கடத்தவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்தது. அதை எதிர்த்து ஜாலியன் வாலா பாக்கில் கூட்டம் நடந்தது.

அன்றைக்கு சீக்கியர்களின் பண்டிகையான பைசாகி திருநாள் அதற்காகவும் எண்ணற்ற மக்கள் கூடியிருந்தார்கள். பஞ்சாபில் நிலைமை கொதிநிலையில் இருக்கிறது புரட்சி வர வாய்ப்பிருக்கிறது என அம்மாகாணத்தின் காவல் துறை அதிகாரி ரெஜினால்ட் ஓ டயர் முடிவு செய்தான். பார்க்கில் 20,000 மக்கள் கூடியிருந்தார்கள். தொன்னூறு பேர் கொண்ட படைகளோடு வாகனங்களில் மெஷின் கன்களை எடுத்துக்கொண்டு வந்தது அவன் படை. வெளியேற வழியாக இருந்த ஒரே குறுகலான பாதையை அடைத்து கொண்டார்கள். எந்த வித எச்சரிக்கையும் கொடுக்காமல் எந்த அறிவிப்பும் இல்லாமல் இந்தியர்களுக்கு பாடம் கற்பிக்க வேண்டும் என்று சொல்லிக்கொண்டு ரெஜினால்ட் ஒ டயர் உத்தரவு தர, ஐம்பது பேர் கொண்ட படை அப்பாவி மக்கள் நோக்கி 1,650 ரவுண்டுகள் சுட்டது. மக்கள் செத்து விழுந்தார்கள். பல பேர் கிணற்றில் விழுந்து இறந்து போனார்கள். நெரிசலிலும் பலபேர் இறந்து போனார்கள். அதிகாரப்பூர்வ மதிப்பீடு 379 பேர் இறந்தார்கள்; ஆயிரத்தி இருநூறு பேர் காயமடைந்தார்கள் என்றது. ஆங்கிலேயே மருத்துவரே எண்ணிக்கை ஆயிரத்துக்கு மேல் இருக்கும் என்றார்.

மாகாண ஆளுநர் மைக்கேல் டயர் ரெஜினால்ட் டயர் செய்ததை சரி என்று ஆதரித்தான். ”நீங்கள் செய்த செயல் சரியானது. அதை நான் அங்கீகரிக்கிறேன்’’ என்று சொன்னான். ஹண்டர் கமிஷன் இந்நிகழ்வை விசாரிக்க அமைக்கப்பட்டது. ‘‘நான் மக்களைச் சுட வேண்டும் என்று முடிவு செய்துகொண்டுதான் வந்தேன். மெஷின் கன்களை வைத்திருந்த வாகனங்கள் உள்ளே வரும் அளவுக்கு இடமில்லை. இல்லையென்றால் இன்னமும் பல பேரை கொன்றிருப்பேன். மேலும், இதில் எந்த வருத்தமும் இல்லை. அவர்களை நான் எச்சரித்திருக்கலாம். ஆனால் ,அப்படி எச்சரித்து துரத்தி இருந்தால் மீண்டும் வந்து என்னைப் பார்த்து சிரித்து இருப்பார்கள். அவர்களை மருத்துவமனைக்கு கொண்டு போக நான் எண்ணவில்லை. அது என் வேலையும் இல்லை. சுட்டேன் சுட்டேன் இந்தியர்களை இந்திய மண்ணிலேயே சுட்டேன்’’ என டயர் கொக்கரித்தான். மேலும் குண்டுகள் தீர்ந்து போய் விட்டதாலேயே இவ்வளவு கம்மியான மக்களை கொல்ல முடிந்ததாக வருத்தமும் தெரிவித்தார் டயர்.


Last edited by சிவா on Thu Dec 26, 2013 3:56 pm; edited 1 time in total
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

 உத்தம் சிங் பிறந்தநாள் - சிறப்பு பகிர்வு Empty Re: உத்தம் சிங் பிறந்தநாள் - சிறப்பு பகிர்வு

Post by சிவா Thu Dec 26, 2013 3:53 pm


உத்தம் சிங்…

பெரும் நெருக்கடியின் காரணமாக வெறுமனே பதவியை விட்டு மட்டும் அனுப்பினார்கள். பதவியை விட்டு நீக்கப்பட்ட பொழுதும் பல லட்சம் ரூபாயை அவன் செய்த அற்புத செயலுக்கு ஆங்கிலேயர்கள் நிதி திரட்டி கொடுத்தார்கள்.மார்னிங் போஸ்ட் பத்திரிக்கை 26,000 பவுண்டுகள் திரட்டி அந்த கொலை பாதகத்தை கொண்டாடியது. இங்கிலாந்து நாடாளுமன்றம் அச்செயலை ஆதரித்து தீர்மானம் வேறு போட்டது.

இந்த படுகொலையை நேரில் பார்த்த உத்தம் சிங் இரு அதிகாரிகளையும் கொல்ல உறுதி பூண்டான். நேரடியாக இங்கிலாந்து போகாமல் கென்யா, ஆஸ்திரியா, அமெரிக்கா, ஜெர்மனி என அலைந்து அவனை கொல்ல இங்கிலாந்து சென்றார். பன்றி தொழுவத்தில் வேலை பார்த்தார். பசி வாட்டி எடுக்க இருபாதாண்டு கால வெறியை அடக்கி வைத்திருந்தார். ரெஜினால்ட் ஒ டையர் ஏற்கனவே இறந்து போக இயற்கை முந்திக்கொண்டது என வருத்தப்பட்டார்.

காக்ஸ்டன் ஹாலுக்கு மைக்கேல் டயர் மற்றும் ஜெட்லாண்ட் எனும் இந்திய விவகாரங்களுக்கு பொறுப்பான அமைச்சர் ஆகியோரை வந்ததும் குறிபார்த்து ஆறு முறை சுட்டார். இறந்து போனான் டயர் . அந்த வேலை முடிந்ததும் கம்பீரமாக ஓடாமல் அங்கேயே நின்ற உத்தம் சிங் ,"என்னுடைய வேலை முடிந்தது ; என் நெஞ்சின் கனல் தணிந்தது !" என்று அறிவித்தார்.

கோர்ட் படியேறிய பொழுது ,"டயர் தூக்கு தண்டனைக்கு உரியவன் அதைத்தான் நான் தந்தேன் !" என்று உறுதிபட சொன்னார் உத்தம் சிங். தன் பெயரை கேட்டபொழுது “ராம் முகம்மது சிங்” எனச் சொல்லி மதங்களுக்கு அப்பாற்பட்டவர்கள் நாங்கள் என புரியவைத்தான்.

‘‘சுட்டேன் சுட்டேன்… ஆங்கிலேயனை ஆங்கிலேய மண்ணில் சுட்டேன்!”என்று சொல்லி கம்பீரமாக தூக்கு மேடை ஏறினான் அந்த வீரன். தன்னுடைய பிணம் ஆங்கிலேய மண்ணில் புதைக்கப்படக்கூடாது என்கிற அளவுக்கு தேசபக்தி ஊறியிருந்தது அவரிடம். டைம்ஸ் பத்திரிக்கை சுதந்திர போராட்ட வீரன் அவர் என்று புகழாரம் சூட்டியது. யானை போல பழி வாங்காமல் ஓயமாட்டார்கள் இந்தியர்கள் என்று ஜெர்மனி வானொலி அறிவித்தது.

அவனன்றோ இளைஞன். சமீபத்தில் இங்கிலாந்தின் பிரதமர் கேமரூன், இந்தியா வந்தபொழுது அந்நிகழ்வுக்கு மன்னிப்பு கேட்காமல் ஆங்கிலேய அரசு உறுதியாக இருப்பது சரியே என்கிற தொனியில் பேசினார் என்பது கூடுதல் தகவல். உத்தம் சிங் பிறந்தநாள் இன்று.

விகடன்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

 உத்தம் சிங் பிறந்தநாள் - சிறப்பு பகிர்வு Empty Re: உத்தம் சிங் பிறந்தநாள் - சிறப்பு பகிர்வு

Post by சிவா Thu Dec 26, 2013 3:59 pm

படுகொலை நடந்த 21 ஆண்டுகள் கழித்து, 1940, மார்ச் 13-ம் தேதி... ஒரு மேடையில் பேசிவிட்டு இறங்கும்போது மைக்கல் ஓ டயரைச் சுட்டுத்தள்ளினார்.

உத்தம் சிங்குக்குத் தூக்குத் தண்டனை விதித்தது இங்கிலாந்து அரசு.

''என்னைத் தூக்கில் போட்டதும், என்னை லண்டனிலேயே புதைத்துவிடுங்கள். இத்தனை ஆண்டுகள் எங்கள் நாட்டை ஆள்வதுபோல, உங்கள் நாட்டின் ஆறடி நிலத்தை இந்தியன் ஒருவன் நிரந்தரமாக அபகரித்துக் கொண்டான் என்பது அழியாத அவமானமாக இருக்கட்டும்'' என்று கர்ஜித்தார் உத்தம் சிங்.

வழக்கம்போல சுதந்திர இந்தியா உத்தம்சிங்கைக் கண்டுகொள்ளவில்லை. 1971-ம் ஆண்டு இந்திரா காந்தி இங்கிலாந்தில் இருந்து உத்தம் சிங்கின் அஸ்தியை வரவழைத்து மரியாதை செய்தார்!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

 உத்தம் சிங் பிறந்தநாள் - சிறப்பு பகிர்வு Empty Re: உத்தம் சிங் பிறந்தநாள் - சிறப்பு பகிர்வு

Post by ராஜா Thu Dec 26, 2013 4:08 pm

 உத்தம் சிங் பிறந்தநாள் - சிறப்பு பகிர்வு 3838410834 நன்றி நன்றி நன்றி மாவீரன் உத்தம் சிங்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

 உத்தம் சிங் பிறந்தநாள் - சிறப்பு பகிர்வு Empty Re: உத்தம் சிங் பிறந்தநாள் - சிறப்பு பகிர்வு

Post by DERAR BABU Thu Dec 26, 2013 7:52 pm

 உத்தம் சிங் பிறந்தநாள் - சிறப்பு பகிர்வு 3838410834 நன்றி 
DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி

பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

Back to top Go down

 உத்தம் சிங் பிறந்தநாள் - சிறப்பு பகிர்வு Empty Re: உத்தம் சிங் பிறந்தநாள் - சிறப்பு பகிர்வு

Post by Muthumohamed Thu Dec 26, 2013 9:37 pm

வரலாற்று தகவல் பகிர்வுக்கு நன்றி அண்ணா



 உத்தம் சிங் பிறந்தநாள் - சிறப்பு பகிர்வு M உத்தம் சிங் பிறந்தநாள் - சிறப்பு பகிர்வு U உத்தம் சிங் பிறந்தநாள் - சிறப்பு பகிர்வு T உத்தம் சிங் பிறந்தநாள் - சிறப்பு பகிர்வு H உத்தம் சிங் பிறந்தநாள் - சிறப்பு பகிர்வு U உத்தம் சிங் பிறந்தநாள் - சிறப்பு பகிர்வு M உத்தம் சிங் பிறந்தநாள் - சிறப்பு பகிர்வு O உத்தம் சிங் பிறந்தநாள் - சிறப்பு பகிர்வு H உத்தம் சிங் பிறந்தநாள் - சிறப்பு பகிர்வு A உத்தம் சிங் பிறந்தநாள் - சிறப்பு பகிர்வு M உத்தம் சிங் பிறந்தநாள் - சிறப்பு பகிர்வு E உத்தம் சிங் பிறந்தநாள் - சிறப்பு பகிர்வு D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

 உத்தம் சிங் பிறந்தநாள் - சிறப்பு பகிர்வு Empty Re: உத்தம் சிங் பிறந்தநாள் - சிறப்பு பகிர்வு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» ‘காந்தியும், வெள்ளாடும்...!’ சித்தரஞ்சன் தாஸ் பிறந்தநாள் சிறப்புப் பகிர்வு
» வைகை புயல் வடிவேலு பிறந்தநாள் சிறப்பு பகிர்வு
» ஜாலியன் வாலாபாக் படுகொலைக்கு பழிதீர்த்த வீரன் உத்தம் சிங்- நினைவு நாள்
» இயக்குனர் சிகரம் இயக்குனர் கே. பாலச்சந்தர் பிறந்த நாள் சிறப்பு பகிர்வு - பொக்கிஷ பகிர்வு
» ஆர்.கே.லக்ஷ்மண் நினைவு தின சிறப்பு பகிர்வு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum