புதிய பதிவுகள்
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» கருத்துப்படம் 19/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:44 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 7:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by ayyasamy ram Yesterday at 5:18 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Jun 18, 2024 9:36 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 9:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jun 18, 2024 8:19 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jun 18, 2024 7:13 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm

» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm

» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:57 pm

» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:49 pm

» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:48 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 1:23 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 18, 2024 1:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:53 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:21 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:04 pm

» திருப்பதி பெருமாளுக்கு கறிவேப்பிலையும் கனகாம்பரமும் ஆகாது ஏன்...?
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:46 am

» ஓவியத்தில் விந்தை --மாறியது புகைப்படமாக
by T.N.Balasubramanian Mon Jun 17, 2024 6:30 pm

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by Dr.S.Soundarapandian Mon Jun 17, 2024 2:28 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
5 பைசா Poll_c105 பைசா Poll_m105 பைசா Poll_c10 
53 Posts - 42%
heezulia
5 பைசா Poll_c105 பைசா Poll_m105 பைசா Poll_c10 
32 Posts - 25%
Dr.S.Soundarapandian
5 பைசா Poll_c105 பைசா Poll_m105 பைசா Poll_c10 
28 Posts - 22%
T.N.Balasubramanian
5 பைசா Poll_c105 பைசா Poll_m105 பைசா Poll_c10 
6 Posts - 5%
ayyamperumal
5 பைசா Poll_c105 பைசா Poll_m105 பைசா Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
5 பைசா Poll_c105 பைசா Poll_m105 பைசா Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
5 பைசா Poll_c105 பைசா Poll_m105 பைசா Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
5 பைசா Poll_c105 பைசா Poll_m105 பைசா Poll_c10 
304 Posts - 50%
heezulia
5 பைசா Poll_c105 பைசா Poll_m105 பைசா Poll_c10 
179 Posts - 30%
Dr.S.Soundarapandian
5 பைசா Poll_c105 பைசா Poll_m105 பைசா Poll_c10 
58 Posts - 10%
T.N.Balasubramanian
5 பைசா Poll_c105 பைசா Poll_m105 பைசா Poll_c10 
26 Posts - 4%
mohamed nizamudeen
5 பைசா Poll_c105 பைசா Poll_m105 பைசா Poll_c10 
21 Posts - 3%
prajai
5 பைசா Poll_c105 பைசா Poll_m105 பைசா Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
5 பைசா Poll_c105 பைசா Poll_m105 பைசா Poll_c10 
3 Posts - 0%
JGNANASEHAR
5 பைசா Poll_c105 பைசா Poll_m105 பைசா Poll_c10 
2 Posts - 0%
Anitha Anbarasan
5 பைசா Poll_c105 பைசா Poll_m105 பைசா Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
5 பைசா Poll_c105 பைசா Poll_m105 பைசா Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

5 பைசா


   
   

Page 1 of 2 1, 2  Next

சின்னக் கண்ணன்
சின்னக் கண்ணன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 410
இணைந்தது : 19/12/2013

Postசின்னக் கண்ணன் Wed Dec 25, 2013 12:01 pm

வழக்கம் போல நெஞ்சு நிரம்பச்
சுற்றி விட்டு இயந்திரக் குதிரை
திண்ணையில் ஏற்றி உள்ளே சென்றால்
அடுத்த கட்டில் கொசுவலை உள்ளே
அமர்ந்த வாறே நிமிர்ந்து பார்த்து
கண்களில் கோபம் கவலை எல்லாம்
தெறிக்க ஆனால் குறுநகை யுடனே
அப்பா கேட்டார் என்ன துரைவாள்
ஊர்த்தூ செல்லாம் குடித்தே ஆச்சா?

இல்லை அப்பா ட்யூஷன் என்றே
உள்ளே சென்று அம்மா கொடுத்த
உணவை முழுக்க வேகமாய் விழுங்கி
கூடந்தன்னில் படுக்கை விரித்து
கண்ணை மூட அருகினில் இருந்த
தமக்கையின் குழந்தை கனவில் பயந்து
காலைப் போட்த் தள்ளி விட்டேன்

தூக்கம் ஏனோ வராமல் போக
அருகில் இருந்த குட்டி வானொலி
சன்னமாய்க் காதில் வைத்தால் யாரோ
பெண்மகள் ஊட்டிக் குளிரினைப் பற்றிச்
சொல்லிக் கொண்டே நாதனைத் தேட
திடீரென ஒருகை பார்த்தால் அப்பா...
முகத்தில் அதிர்ச்சி கண்கள் முழுக்க
வலியில் நிறைந்து வலது கையால்
இட து கை பிடித்துத் துடித்துத் துடித்து

என்னமோ தெரியலை வலிக்குது கண்ணா
என்ற குரலும் குழறலாய் வரவே
தூக்கம் எல்லாம் பறந்து போக
தாவித் தரையில் அமர வைத்தால்
என்கை முழுக்க ஈரம் படர்ந்த்து
அவ்வளவு வியர்வை அப்பா மேலே

அப்பா அப்பா கவலைப் படாதே
என்றே பதறி ஏதோ சொல்ல
உள்ளே இருந்து உறக்கம்கலைந்து
அண்ணா, மன்னி, அம்மா வரவும்
இருபுறம் இருவர் இருகை பிடித்து
மெல்ல நட த்திக் கூட்டிச் சென்று

வாசலில் குதிரை ரிக்‌ஷா வண்டி
எதுவும் இருக்கா என்றே பார்க்க
வேண்டாம் ஹாஸ்பிடல் பக்கம் தானே
நடந்தே போலாம் நட த்திச் சென்றால்
வந்து பார்த்த டாக்டர் முகத்தில்
பதற்றம் குழப்பம் எல்லாம் சேர

யாரது அங்கே உடனே இவரை
அந்த அறைக்கு அழைத்துப் போப்பா
இன்னும் பலவாய்க் கட்டளை இட்டு
எங்கள் பக்கம் சொன்னார் கொஞ்சம்

கஷ்டம் தானிது மார்பில் அடைப்பு
என்றே தோன்றுது இருந்தும் எங்கள்
சிறப்பு வைத்தியர் சீக்கிரம் வருவார்
நீங்கள் இந்த மாத்திரை கொஞ்சம்
வேகமாய்ச் சென்று வாங்கி வாங்க

அம்மா உடைந்து அழவா ரம்பிக்க
அண்ணா மன்னி ஆறுதல் சொல்ல
மாத்திரை லிஸ்ட்டை எடுத்துக் கொண்டு
வீடு வந்து வண்டி உதைத்தால்
பிரச்னை செய்து கிளம்ப மறுக்க
பொறுமை பறக்க சைக்கிளை எடுத்து
மிதித்து இரவின் டவுன்ஹால் ரோட்டில்
கிழித்துப் பறந்து மருந்துக் கடையில்

கேட்டால் இல்லை ஸாரி நீங்கள்
வெத்தலைப் பேட்டைக் கருகில் உள்ள
கடையில் சென்று கேட்டுப் பாரும்...

கடைகள் கடைகள் அலைந்து திரிந்தால்
ம்ஹீம் மாத்திரை இல்லவே இல்லை..
திரும்பி வந்தால் டாக்டர் சொன்னார்
பரவா யில்லை வலியின் தன்மை
குறைக்கத் தானது மயக்க மருந்து
கொடுத்து இருக்கேன் உடம்பு கொஞ்சமும்
அசங்கா வண்ணம் பார்த்துக் கொள்க..

இரண்டு தின்ங்கள் என்னை ஈன்ற
தகப்பன் பேசாமல் தவிக்க விட்டு
மயங்கிய நிலையில் மரணம் தழுவ..

சோக்க் குளத்தில் மெல்ல மெல்ல
கரைப்பக்கம் வரத்தான் முயற்சித்த போதில்
ஏனோ கொஞ்சம் உறுத்தல் மனதில்
அந்த மாத்திரை மட்டும் இருந்தால்
ஒருசில வார்த்தை பேசியும் இருப்பார்
அப்படி என்ன விலைதான் அதற்கு..

ஒரு நாள் மெடிக்கல் ஷாப்பில் ஏதோ
வாங்கச் செல்கையில் அந்த மாத்திரை
பற்றி நினைவு பாய்ந்து வந்திட
விலையைக் கேட்டால் சொன்னான் அவனும்
ஐந்து பைசா....ஆனால்..இல்லை..!

**
மதுரையில் எங்கள் வீடு எட்டுகட்டு வீடு..அப்பா இருந்த்து இரண்டாம் கட்டு..இது பல வருடம் முன் எழுதியது..ம்ம் நாளை அவருக்கு நினைவு நாள்..

**
சின்னக் கண்ணன்

vasudevan31355
vasudevan31355
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 569
இணைந்தது : 11/11/2013

Postvasudevan31355 Wed Dec 25, 2013 2:57 pm

ஐந்து பைசா மாத்திரை இல்லாமல் அப்பாவை இழந்த ஆழ்ந்த சோகம் சின்னக் கண்ணன் கவிதையில் என் நெஞ்சைப் பிளந்தது உண்மை.

jayaravi
jayaravi
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 267
இணைந்தது : 28/11/2013

Postjayaravi Wed Dec 25, 2013 9:22 pm

டியர் CK - மனதை பிழித்து எடுத்துவிட்டது உங்கள் கவிதை - எனக்கும் தந்தை இல்லை - அதன் வலி 5 பைசாக்கும் மேலாக - பிரிக்க முடியாதவர்கள் நம்மை பெற்றவர்கள் - பிரிக்க தூண்டுவது எவளவோ உள்ளது அதில் இந்த 5 பைசாவும் அடங்கும் - தொடுருங்கள் உங்கள் பதிவுகளை

அன்புடன் ரவி


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Dec 26, 2013 3:20 pm

என்னவென்று சொல்வது, இதைத்தான் விதி வலியது எனக் கூறுவார்களோ?

தங்களின் மனப் பாரத்தை எங்களுடன் பகிர்ந்ததற்கு நன்றி சின்ன கண்ணன்!

jayaravi
jayaravi
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 267
இணைந்தது : 28/11/2013

Postjayaravi Thu Dec 26, 2013 3:30 pm

Inspiration from 5 paise - thanks CK for prompting me to share my days with my father in his last days ------


வேலையின் பளுவில் சற்றே தோய்ந்து கிடந்தேன் - என் தந்தையின் மெதுவான நடை என்னை நோக்கி வந்துகொண்டிருந்தது - அவர் அருகில் வருவது தெரிந்தும் இமைகள் திறக்க மறுத்தன-  மெதுவாக அவர் கைகள் என் தோளில் விழுந்தன  -  ரவி  என்னை நாளை  போஸ்ட் ஆபீஸ்க்கு கூட்டிக்கொண்டு   போகிறாயா ? எனக்கு எங்கிருந்து தான் அந்த பாழாப்போன கோபம் வந்ததென்றே தெரியவில்லை  -  என்ன அவசரம் Post Office க்கு ? நீங்கள்  ஏன் செல்லவேண்டும் ?   நான் பார்த்துகொள்கிறேன் -  

அப்பா ஒன்றுமே சொல்லாமல் அந்த இடத்தை விட்டு நகர்ந்து செல்கிறார் - என்னிடம் எவ்வளவோ பேச வேண்டும் என்று என்னிடம் வந்தவரை  வார்த்தைகளால் விரட்டி அனுப்பி விட்டேன் - என்ன பதவியில் இருந்து என்ன பயன் ?  ஒரு நிமிடத்தில் பண்பை  இழந்து விட்டேனே !!

நாட்கள் வேகமாக செல்ல ஆரம்பித்தன - அப்பாவுடன் அதிகமாக பேச வேலையின் சுமை அனுமதிக்க வில்லை - ஒன்று  இரண்டு வார்த்தைகளில்   மகன் - தந்தை உறவின் மகிமையை அப்பாவிற்கு உணர வைத்து கொண்டிருந்தேன் - அவர் உள்ளத்தை ஓட்டை படுத்தி கொண்டு இருந்தேன்--  கேட்ட கேள்விகளையே கேட்டு கொண்டுஇருந்தார்.

அம்மாவிடம்  மெதுவான குரலில்  அப்பா பேசுவது காதில் விழுந்தது - ஏன்  ரவி இப்படி  கத்துகிறான்  -  உடம்புக்கு ஏதாவது பிரச்சனையா?

நாட்கள்  வேகமாக சென்று கொண்டிறந்தது  -  

என் அப்பா ஒரு குழந்தையய் போல கேட்ட கேள்விகளையே கேட்டு கொண்டிருந்தார் - அவரின் பேச்சுகளில் அதிகமாக வெளிப்பட்டது போஸ்ட் ஆபீஸ் , பென்ஷன் ஆபீஸ் மட்டுமே .  டாக்டர் அவரை பரிசோதித்தபின் இடி விழும்போல ஒரு முடிவை சொன்னார் - என் அப்பாவிர்க்கு வந்திருப்பது Alzheimer’s disease  அத்துடன்  டாக்டர் விடவில்லை - ஒரு சின்ன blood clot  மூளைக்கு கிழே உள்ளது & மூளை  சிறிது சிறிதாக குறுகிக்கொண்டே  வருகிறதாம் - இவள்ளவு நாட்கள் தான் என்னோடு இருப்பார் என்பதை புரிந்துகொள்ளும்படி சொல்லிவிட்டார்    -  

எப்படி பட்ட மனிதர் , எவள்ளவு பேர்களை வாழ வைத்தவர் - வேலையில் ஒரு நேர்மை , ஒரு கண்ணியம் , குணத்தில் ஒரு கட்டுப்பாடு - முடிவு ஒரு கண்ணியத்தையும் , கட்டுபாடையும் தொலைத்து விட்டதே !!  இவருக்கா இந்த நிலைமை??  அழுது அழுது எல்லா கண்ணீரையும் செலவழித்துவிட்டேன் - அன்று முதல் என் கோபம் என்னை விட்டு விலகி சென்றது - தினமும் அவரை குளிப்பாட்டுவதும் , பூஜை அறையில் உட்காரவைப்பதும் , வெளியில் கொண்டு செல்வதும் என் பழக்கமாகி விட்டது - எவள்ளவோ பேசுவார் - அதில் அர்த்தம் இருக்காது ,ஆனால் அதை என் இறைவனை வணங்கும் பாடலாக எடுத்துக்கொண்டேன் - என் மழலையை ரசித்தவரின் மழலையை ரசிக்க ஆண்டவன் எனக்கும் ஒரு வாய்ப்பு கொடுத்தானே !

என் அப்பா சில மாதங்களில் எங்களை விட்டு பிரிந்து விட்டார் - ஒரு ராஜாவாக ஆட்சி புரிந்தவர் , ஒரு குழந்தையாக மாறி தெய்வத்துடன் கலந்து விட்டார் - இருக்கும் பொழுது அவர்களின் அருமை தெரிவதில்லை - அவர்கள் சென்றபின் அவர்களின் அருமை மறைவதில்லை - என் அம்மாவும் அவர் சென்ற சில மாதங்களில் அவருடன் சேர்த்துவிட்டார் - எல்லோரும் இருந்தும் யாருமே இல்லாததைபோன்ற  ஒரு  பிரமை - அந்த பிரமையினால் தினமும் அவர்களுடன்  மானசீகமாக பேசிகொண்டுதான் இருக்கிறேன்

அன்புடன் ரவி

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Dec 26, 2013 4:00 pm

மனம் கனக்கும் கவிதை



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
vasudevan31355
vasudevan31355
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 569
இணைந்தது : 11/11/2013

Postvasudevan31355 Thu Dec 26, 2013 10:22 pm

ரவி சார்,

என்ன சொல்வது? நெஞ்சில் இடி இறங்கியது போன்ற ஒரு உணர்வு. தங்கள் தந்தையின் நிலையை அறிந்து துடித்தது என் மனது. நாம் எல்லோருமே இப்படித்தானா? அப்பா அம்மாவைப் பொருத்தவரையில் அவர்கள் மேல் நமக்குப் பாசம் இல்லாமல் இல்லை. அதை வெளிப்படுத்த நமக்குத் தெரிவதில்லை. சதா அவர்கள் மேல் கடுகடு என்றிருப்பதே நமக்கு வழக்கமாகி விட்டது. அவர்கள் நம்மை விட்டுப் பிரிந்தவுடன் நாம் அவர்களை நினைத்துக் கதறுகிறோம். அவர்கள் இருக்கும் போது நம் ஆத்மார்த்தமான அன்பை நாம் அவர்களுக்கு அளிக்க வேண்டும். ஆனால் தாங்களோ அதை தங்கள் தந்தை உயிருடன் இருக்கும் போதே உணர்ந்து அவர்க்கான பணிவிடைகளை செய்யத் துவங்கியது நீங்கள் செய்த பாக்கியம்.

நாம் நம் அன்பை வெளிக்காட்டுவதில் என்ன தயக்கம்! இவ்வளவு பேசும் நானும் என் அம்மாவிடம் அடிக்கடி எரிந்து விழுவேன். ஆனால் அது அவர்களின் நன்மை கருதியே இருக்கும். தங்களின் மனமுருக்கும் பதிவைக் கண்டதும் இனி நானும் அவர்களிடம் கோபப் படாமல் இருக்க முயற்சி செய்ய வேண்டும் என்று உறுதி கொள்கிறேன். அதற்காக தங்களுக்கு நன்றி சொல்கிறேன்.

தாய் தந்தையை தாங்கள் இழந்திருந்தாலும் உங்கள் உடன் பிறந்த சகோதரராய் நாங்கள் இருக்கிறோம். ஒருவர் மீது ஒருவர் மாறா அன்பு கொண்டுள்ளோம். கோபங்களைத் தவிர்ப்போம். புத்தர் போதித்த அன்பு வழியில் நடப்போம்.


தங்களின் பதிவு பல பேருக்கு ஒரு பாடம்.

நன்றி ரவி சார்.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35011
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Dec 26, 2013 10:46 pm

பெற்றவர்கள் உயிர் விலை மதிப்பற்றவர்கள்.
நாம் அதை புரிந்து கொள்ளும் போது அவர்கள் இருப்பது இல்லை.
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
சின்னக் கண்ணன்
சின்னக் கண்ணன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 410
இணைந்தது : 19/12/2013

Postசின்னக் கண்ணன் Fri Dec 27, 2013 5:50 pm

வாசு சார், ஜெய ரவி, ரமணீயன், ஜாஹீராபானு – நன்றி
ரவி, உங்கள் தந்தை தாயைப் பற்றிய செய்தி மனம் கனக்க வைத்தது..வாசு சாரை நான் வழிமொழிகிறேன்..


veeyaar
veeyaar
பண்பாளர்

பதிவுகள் : 213
இணைந்தது : 14/11/2013

Postveeyaar Mon Dec 30, 2013 7:40 am

சின்னக் கண்ணன் சார்
தங்களுடைய கவிதை நெஞ்சில் இறக்கிய சுமை என்றென்றும் நீங்காது. சோகத்தின் சுமை இன்றியமையாததாகும். ஒரு மனிதனை மனிதனாக வைத்திர்கும் ஒரே ஆயுதம்.
தலைவர் சொல்வார் அன்புக்கரங்களில்

தன்னைப் போல பிறரை எண்ணும் தன்மை வேண்டுமே - அந்தத்
தன்மை வர உள்ளத்திலே கருணை வேண்டுமே
பொன்னைப் போல மனம் படைத்தால் செல்வம் வேறில்லை - இதைப்
புரிந்து கொண்ட ஒருவனைப் போல் மனிதன் வேறில்லை..

அந்த மனிதனை உருவாக்குவது சோகம்... குறிப்பாக ஒரு மனிதன் உயிர் பெறுவது பெற்றோரால், அவன் மனிதனாவது அவர்களின் மறைவுக்குப் பின்னால் தான் என்பதே இப்பூவுலகில் நியதியாக இருக்கிறது.

என்றாலும் அதையும் மீறி இயல்பாகவே நற்குணம் படைத்தோர் இல்லாமல் இல்லை. நல்லோர் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லார்க்கும் பெய்யெனப் பெய்யும் மழை என்பது போன்று எத்தனையோ நல்ல உள்ளங்கள் இருக்கின்றன. அதற்குக் காரணம் அந்த உள்ளங்களுக்கு பாசம் என்ற உறுதியான வேலி.

அந்த வேலியின் சிறப்பைத் தங்கள் கவிதை மிக அழகாகவும் உருக்கமாகவும் எடுத்துரைக்கிறது. அதைக் கவிதை என்று ஒரு அடையாளத்திற்காகச் சொன்னேனே தவிர, அது தங்கள் உள்ளத்தின் உரைகல் என்பதே உண்மை. அது தங்கள் உள்ளத்தை மட்டுமல்ல நம் ஒவ்வொருவரின் உள்ளத்தையும் பிரதிபலிக்கும் சக்தி வாய்ந்த கண்ணாடி

பெற்றோரிடம் கோபத்தைக் காட்டியிருக்கிறேன் நானும். ஆனால் அதிகமில்லை. தாய் தந்தை இருவருக்குமே இறுதி நாட்களில் பணிவிடை செய்திருக்கிறேன். ஒரு புறம் அவர்கள் பிரிந்து விடுவார்களோ என்கிற துயரம் துக்கம், பதைப்பு என்றிருந்தாலும் அவர்களுக்கு சேவை செய்யும் வாய்ப்பு வாழ்வின் பயனைத் தந்தது என்ற லேசான மகிழ்வும் இருந்தது.

வாசு சார், ரவி மற்றும் அனைத்து நண்பர்களைப் போலவே நானும் உணர்கிறேன். நிழலின் அருமை வெயிலில் தெரியும். பெற்றோரின் அருமை அவர்கள் இல்லாத போது தெரியும்.

என்றாலும் இருக்கும் போது அவர்களுடன் அன்புடன் நடந்து கொண்ட காலங்கள் மன நிறைவை எனக்குத் தருகின்றன. விவரம் அறியாத வயதில் கோபமாய் பேசி யிருந்தாலும் மனிதனாக உணரத் தொடங்கிய பின் அவை மெல்ல என்னிடமிருந்து விலகி விட்டது உள்ளபடியே மகிழ்ச்சி.

அன்புடன்
ராகவேந்திரன்

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக