ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மரபணு மாற்றமும் புரியாதஎதிர்ப்பும்

2 posters

Go down

மரபணு மாற்றமும் புரியாதஎதிர்ப்பும்      Empty மரபணு மாற்றமும் புரியாதஎதிர்ப்பும்

Post by கவின் Tue Dec 24, 2013 5:22 pm



எனது நண்பர் ஒருவர், பி.எச்டி. பட்டம் பெற்ற விவசாய விஞ்ஞானி. அவர் சமீப காலமாக கடும் கோபத்திலிருக்கிறார். காரணம், அண்மைக் காலத்தில் மரபணு மாற்றம் செய்யப்பட்ட பருத்தி, கத்தரிக்காய் போன்ற பயிர்களுக்கு எதிராகச் செய்யப்பட்டு வரும் பிரசாரம்தான். விஞ்ஞானம் வீசை என்ன விலை என்று கேட்கிற அரசியல்வாதிகள்தான் விவசாயத் தொழில்நுட்பச் சாதனைகளைப் பற்றிச் சந்தேகங்களை எழுப்பிக் கொண்டிருக்கிறார்கள்.

நம் நாட்டில் யார் வேண்டுமானாலும் நீதிமன்றத்தில் வழக்கு போட்டு அணு உலைகளை அமைப்பது முதல் திரைப்படங்களை வெளியிடுவது வரையான எல்லாக் காரியங்களையும் தடை செய்து விட முடிகிறது.

மரபணு மாற்றப் பயிர்களைப் பற்றி ஆய்வு செய்யுமாறு உச்சநீதிமன்றம் நியமித்த தொழில்நுட்ப வல்லுநர் குழு, மரபணு மாற்றச் சோதனைகள் காலவரையின்றி நிறுத்தி வைக்கப்பட வேண்டும் என்று பரிந்துரைத்திருக்கிறது. சோதனை செய்யப்படாமல் மரபணு மாற்றப்பட்ட பயிர்கள் நல்லவையா கெட்டவையா என்று எப்படி தெரிந்து கொள்ள முடியும்?

பயிர் உயிரித் தொழில்நுட்பத்தை ஒழுங்குபடுத்துவதற்காக ஓர் ஆணையத்தை அமைப்பதற்கான மசோதாவை நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தக்கூட விடாமல் அரசியல்வாதிகளும் எதிர்ப்பாளர்களும் தடுத்து விட்டார்கள். அவர்களுடைய எதிர்ப்பு அறிவியல் முன்னேற்றப் பாதை அடைபட்டுப் போனதற்குக் காரணமானது.

பயிர் உயிரித் தொழில்நுட்பம் என்பது பாசிலஸ் தூரிஞ்சென்சிஸ் என்ற கிருமியின் ஜீன்களைப் புகுத்தி பருத்தியிலும் கத்தரிக்காயிலும் மரபணு மாற்றம் செய்வது மட்டும்தான் என்கிற அறியாமையில் அவர்கள் ஆழ்ந்திருக்கிறார்கள்.

கிருமி என்றதும் பாமர மக்களும் பயப்படுகிறார்கள். வேறு தாவரங்களின் ஜீன்களைப் புகுத்தி எல்லா வகையான உணவு தானியப் பயிர்களிலும் ஊட்டச்சத்து அதிகரிப்பு, வெள்ள மிகை நீர், வறட்சியின் குறை நீர் போன்ற இடையூறான சூழல்களைச் சமாளிக்கிற திறன், உப்பு நீரில் வளரும் திறன் போன்ற திறமைகளை அதிகரிப்பதற்காக உலகெங்கும் மரபணு மாற்றச் சோதனைகள் செய்யப்பட்டு வருகின்றன. பயிர்த் தொழில்நுட்பவியலில் மரபணு மாற்றம் என்பது ஒரு பகுதி மட்டுமே.

பயிர்த்தொழில் வரலாற்றில் ஆதி காலத்திலிருந்தே இத்தகைய சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வந்திருக்கின்றன. ஆதியில் நெல், கோதுமை போன்றவை காட்டுப்புதர்களாக உண்ண முடியாத தானியங்களோடுதான் தோன்றின. அவற்றில் சில செடிகளில் தற்செயலாக ஏற்பட்ட மரபணு மாற்றங்களின் காரணமாக சுவையான தானிய மணிகள் தோன்றின. ஆதி மனிதர்கள் அத்தகைய செடிகளிலிருந்து தானியங்களை எடுத்து விதைத்து உணவுப் பயிர்களை வளர்த்தார்கள்.

மகரந்தச் சேர்க்கையே ஒரு வகையான மரபணு மாற்றச் செயல்பாடுதான். இயற்கையான மின்னல், மண்ணின் கதிரியக்கச் சேர்மங்கள் போன்றவற்றால்கூட பயிர்களில் மரபணு மாற்றங்கள் ஏற்பட முடியும். அவ்வாறுதான் ஒற்றை ùஸல் ஆல்காக்களும் பாசிகளும் பரிணாம மாற்றமடைந்து இன்றைய மாமரமாகவும் தென்னை மரமாகவும் ஆயின.

மரபியல், ஜீன் போன்ற விஷயங்கள் தெரியாத காலத்திலிருந்தே, நல்ல உணவு தரும் தாவரங்களிலிருந்து விதைகளை எடுத்து அவற்றை மட்டுமே அதிக அளவில் நட்டுப் பயிரிட்டுப் பயனடையும் முறைகளை மனிதர்கள் கற்றுக் கொண்டிருக்கிறார்கள்.

கடந்த 25 ஆண்டுகளாக ஐரோப்பாவில் செய்யப்பட்டு வரும் ஆய்வுகளில், மரபணு மாற்றப் பயிர்கள் மூலம் மனிதருக்கோ, விலங்குகளுக்கோ தீங்கு ஏற்பட்டதாக நிரூபணமாகவில்லை.

அதற்கு மாறாக அவற்றைப் புறக்கணித்ததால் பயிரியல் ஆய்வுகளில் தொய்வு, விவசாயிகளுக்கும் விவசாயம் சார்ந்த தொழில் நிறுவனங்களுக்கும் வருவாய் இழப்பு ஆகியவை ஏற்பட்டன. மக்களுக்கு மலிவான உணவு பெறும் வாய்ப்பு மறுக்கப்பட்டது. விவசாய விஞ்ஞானிகள் தமது ஆய்வுகளுக்கு வாய்ப்பளிக்கும் நாடுகளுக்கு குடிபெயர்ந்தனர். புதுப் புனைவுகள் தோன்றும் சாத்தியக்கூறுகள் மறைந்தன. விளைச்சல் அதிகரிப்பு முயற்சிகளும் அதன் காரணமாக கூடுதல் வருவாய் வாய்ப்புகளும் முடங்கின. இதையெல்லாம் நான் சொல்லவில்லை. 2012-ஆம் ஆண்டில் வெளியான ஓர் அறிக்கை பட்டியலிடுகிறது.

டாபோடில் என்ற மலர்ச் செடியிலிருந்தும், மண்ணில் வாழும் ஒரு கிருமியிலிருந்தும் எடுக்கப்பட்ட ஜீன்களைப் புகுத்தி தங்க அரிசி என்ற நெல் பயிர் வகையை உருவாக்கிய இன்கோ பாட்ரிக்கஸ் என்ற விஞ்ஞானி நியாயமான காரணமில்லாதவையும் காரிய சாத்தியமில்லாதவையுமான சட்டவிதிகள் மரபணு மாற்ற ஆய்வுகளுக்கு அர்த்தமற்ற கட்டுப்பாடுகளை விதித்துள்ளன எனவும் அதன் காரணமாக பல கோடி மக்களுக்குப் பசி, ஊட்டச்சத்துக் குறைபாடுகள் ஆகியவற்றிலிருந்து விடுதலை பெறும் வாய்ப்புகள் பறிக்கப்படுகின்றன எனவும் வருத்தப்படுகிறார்.

இந்தியாவில் பிட்டி கத்தரிக்காய்க்கு விதிக்கப்பட்ட தடை விவசாய ஆய்வுகளின் பேரிலான ஆர்வத்தை மழுங்கச் செய்துள்ளது. விவசாயத் தொழில்நுட்ப ஆய்வுகள் செய்ய ஆயிரக்கணக்கான நிபுணர்கள் தேவை. சீனாவில் 6,000 ஆய்வர்கள் விவசாய ஆய்வுகளில் டாக்டர் பட்டம் பெற்றிருக்கிறார்கள். இந்தியாவில் ஒட்டுமொத்தமாக எல்லாத் துறைகளையும் சேர்த்து டாக்டர் பட்டம் பெற்றவர்களின் எண்ணிக்கை 8,900தான்.

மரபணு மாற்றப்பட்ட பயிர்களால் சுற்றுச்சூழலும் உடல்நலமும் தீங்கடையவில்லை என விவரிக்கும் ஆயிரக்கணக்கான ஆய்வுக் கட்டுரைகள் உலகெங்கிலும் வெளியிடப்படுகின்றன. கடந்த 15 ஆண்டுகளாக பிட்டி சோளம், பிட்டி சோயா போன்றவற்றை உண்டு வருகிற மனிதர்களோ கால்நடைகளோ பாதிக்கப்பட்டதாக நம்பகமான தகவல்கள் இல்லை. பருத்தியை இறக்குமதி செய்து கொண்டிருந்த இந்தியா பிட்டி பருத்தி விளைச்சல் காரணமாக முதன்மையான பருத்தி ஏற்றுமதி நாடாக மாறியுள்ளது.

ஆனால் இந்திய அரசு பயிர்களுக்கு வறட்சி, வெள்ளம், நிலத்தின் வளக் குறை, உயர் வெப்பம், மிகைக் குளிர் போன்றவற்றைச் சமாளிக்கும் திறனை அளிக்கிற ஒரு புரதத்தையும், இப்போதுள்ளதை விட நூற்றில் ஒரு பங்கு நைட்ரஜன் சத்து மட்டுமே தேவைப்படுகிற திறனை அளிக்கிற ஒரு ஜீனையும் கண்டுபிடித்த இந்திய விஞ்ஞானிகளுக்குக் காப்புரிமை அளிக்க மறுத்துள்ளது.

நிலத்துக்குள் ஆழமாக வேர்களைச் செலுத்தி நீரையும் ஊட்டச் சத்துகளையும் பெரும் செயல்திறனுடன் உள்கவரும் தாவரங்களின் ஜீன்களை மற்ற பயிர்களுக்குள் புகுத்தவும், ஒரே ஒரு அயல் ஜீனை பயிர்களுக்குள் புகுத்தி பல வகையான பீடைகளைத் தாங்கும் திறனை வழங்கவும் இந்தியாவில் ஆய்வுகள் நடைபெறுகின்றன. அவை இந்தியர்களால் உருவாக்கப்பட்டவை எனில் நம் நாட்டு மக்களுக்கு ஜீன் மாற்றப் பயிர்களைப் பற்றி அவசியமற்ற அச்சம் தோன்றாது.

பல இந்திய ஆய்வகங்களில் இத்தகைய பயிர்களை உருவாக்க உதவும் துப்புகள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. ஆனால் கள ஆய்வுகளை மேற்கொள்ள முடியாததால் அவற்றுக்கு காப்புரிமை கொண்டாட முடியவில்லை.

நிதிப் பற்றாக்குறை, சோதனைப் பயிர்கள் தோல்வியுறுவது, ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட தரமான அறிவியல் சஞ்சிகைகள் இல்லாமை, அரசின் அலட்சியம், பதவி மற்றும் ஊதிய மேம்பாட்டுக்கான வழிகள் இல்லாமை போன்ற பல காரணிகள் நமது ஆய்வர்களை ஆர்வமிழக்கச் செய்கின்றன.

சீனா பன்னாட்டு நிறுவனங்களுடன் போட்டியிடும் வகையில் தன்னாட்டு ஆய்வர்களை பிட்டி அரிசி பற்றிய ஆய்வுகளில் ஈடுபடுத்தி வருகிறது. பயமுறுத்தும் பிட்டி என்ற பெயரைச் சூட்டாமலே இந்திய அரசும் மரபணு மாற்றப் பயிர்களில் ஆய்வு செய்ய அனுமதிக்கலாம்.

ஆனால் இந்திய அரசிடம் அதற்கு ஏற்ற விவசாயத் தொழில்நுட்ப ஆய்வு பற்றிய கொள்கை ஏதுமில்லை. அடிக்கடி நிபுணர்களைக் கூட்டி மரபணு மாற்ற உத்திகள் மூலம் எந்தப் பயிருக்கு எந்தவிதமான அனுகூலப் பண்புகளை உண்டாக்க முடியும் என்று கண்டறிய அரசின் விவசாயத் துறை முயல வேண்டும்.

விவசாயம் ஒரு பரம்பரைத் தொழில் என்ற நிலையை மாற்றி அதை ஓர் அறிவுசார் தொழில்துறை என்ற நிலைக்கு உயர்த்த வேண்டும். அதற்கேற்ற வகையில் விவசாயிகளுக்குத் தினம் தினம் அன்றாட அறிவியல் தகவல்களையும் தொழில்நுட்ப உதவிகளையும் வழங்க வேண்டும்.

பிட்டி பயிர் எதிர்ப்பாளர்களின் முதன்மையான கவலை மான்சான்டோ போன்ற பன்னாட்டு நிறுவனங்கள் விதைக் காப்புரிமை மூலம் ஏகபோகங்களை உருவாக்கிக் கொண்டு நம் நாட்டின் விவசாயத்தின் போக்கை நிர்ணயிக்கும் வலிமையைப் பெற்றுவிடக் கூடும் என்பதுதான்.

பன்னாட்டு நிறுவனங்களைப் போலவே இந்திய அரசு மற்றும் தொழில் நிறுவனங்கள் ஆய்வகங்களில் புதுப் புனைவுகளை உருவாக்கவும் அவற்றை கள ஆய்வுகள் மூலம் உறுதிப்படுத்தவும் தேவையான பண வசதியையும் நிர்வாக ஆற்றலையும் வழங்கி உதவலாம்.

நம்நாட்டு விஞ்ஞானிகள் கலப்பினப் பயிர்களை உருவாக்குவதில் மட்டுமே இதுவரை முனைந்திருக்கிறார்கள். இனிமேலாவது அவர்கள் மரபணு மாற்ற உத்திகளைக் கண்டறிய ஊக்குவிக்கப்பட வேண்டும்.

நன்றி : தினமணி
கவின்
கவின்
பண்பாளர்


பதிவுகள் : 170
இணைந்தது : 30/09/2013

Back to top Go down

மரபணு மாற்றமும் புரியாதஎதிர்ப்பும்      Empty Re: மரபணு மாற்றமும் புரியாதஎதிர்ப்பும்

Post by ராஜா Tue Dec 24, 2013 6:01 pm

விஞ்ஞானி என்றெல்லாம் சொல்லுறீங்க , உங்க அளவிற்கு எங்களுக்கு அறிவு கிடையாதுங்க. நாங்கல்லாம் அதிகம் படிக்காத நாட்டுப்புறம். எதோ இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் ஐயா உளறுவதை கேட்டுகிட்டு இத்தனை நாள் உங்களையெல்லாம் தப்பா நினைச்சுட்டோம்.
மகரந்தச் சேர்க்கையே ஒரு வகையான மரபணு மாற்றச் செயல்பாடுதான். இயற்கையான மின்னல், மண்ணின் கதிரியக்கச் சேர்மங்கள் போன்றவற்றால்கூட பயிர்களில் மரபணு மாற்றங்கள் ஏற்பட முடியும். அவ்வாறுதான் ஒற்றை ùஸல் ஆல்காக்களும் பாசிகளும் பரிணாம மாற்றமடைந்து இன்றைய மாமரமாகவும் தென்னை மரமாகவும் ஆயின.

உங்களுடைய அறிவியல் பூர்வமான கண்டுபிடிப்புக்கு மிக்க நன்றி , நீங்கள் சொல்லும் இந்த மரபணு மாற்றங்கள் ஒரே நாளில் இயற்கை தாய் தன்னுடைய லேபில் வைத்து மாற்றியதில்லை
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum