ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:47 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 10:46 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 10:46 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 10:42 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 10:40 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 10:39 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 10:37 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 10:35 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 10:33 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 10:32 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 10:31 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 10:31 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 10:30 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 1:19 am

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Today at 12:56 am

» காவல் தெய்வம்
by ayyasamy ram Today at 12:31 am

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Today at 12:29 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:37 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:50 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:49 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 8:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:28 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:12 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 7:03 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:02 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:27 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:18 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:43 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:06 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:39 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 3:08 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:48 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 1:17 pm

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 11:47 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 11:45 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:44 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:43 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:42 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 11:41 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 11:29 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 9:23 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 9:18 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 7:49 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 4:15 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 4:10 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 4:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கெஜ்ரிவால் டெல்லி முதல்வராகிறார்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு

+6
krishnaamma
ராஜா
சதாசிவம்
ayyasamy ram
N.S.Mani
சிவா
10 posters

Page 5 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

Go down

கெஜ்ரிவால் டெல்லி முதல்வராகிறார்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு - Page 5 Empty கெஜ்ரிவால் டெல்லி முதல்வராகிறார்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு

Post by சிவா Tue Dec 24, 2013 6:19 am

First topic message reminder :


70 இடங்களைக் கொண்ட டெல்லி மாநில சட்டசபைக்கு நடந்த தேர்தலில் பா.ஜ.க. 32, ஆம் ஆத்மி 28, காங்கிரஸ் 8, சுயேட்சைகள் 2 இடங்களில் வெற்றி பெற்றனர். ஆட்சி அமைக்க தேவையான 36 இடங்கள் எந்த கட்சிக்கும் கிடைக்காததால் அங்கு ஆட்சி அமைப்பதில் இழுபறி ஏற்பட்டது. அதிக இடங்களில் வெற்றி பெற்ற கட்சி என்ற அடிப்படையில் பா.ஜ.க.வை ஆட்சி அமைக்க டெல்லி துணைநிலை கவர்னர் நஜீப்சிங் அழைத்தார். ஆனால் ஆட்சி அமைக்க பா.ஜ.க. மறுத்து விட்டது.

இதையடுத்து 2–வது அதிக இடங்களை பிடித்த கட்சியான ஆம்ஆத்மி கட்சிக்கு கவர்னர் நஜீப்சிங் அழைப்பு விடுத்தார். அதை ஏற்று கவர்னரை சந்தித்த ஆம்ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் 23–ந் தேதி வரை அவகாசம் கேட்டார். கடந்த 6 நாட்களாக அவர் டெல்லியில் 280 கூட்டங்களை நடத்தி ஆட்சி அமைப்பது குறித்து மக்களிடம் கருத்து கேட்டார். அவர்கள் ஆட்சி அமைக்க ஆதரவு தெரிவித்தனர்.

பேஸ்புக், டுவிட்டர், எஸ்.எம்.எஸ். மூலமாகவும் ஆம்ஆத்மி கட்சி கருத்து கேட்டது. சுமார் 6½ லட்சம் பேர் தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர். அதில் பெரும்பாலானவர்கள் ஆம்ஆத்மி கட்சி ஆட்சி அமைக்க வேண்டும் என்றனர். இதை ஏற்று ஆம்ஆத்மி கட்சி டெல்லியில் ஆட்சி அமைக்க முடிவு செய்தது. இன்று பகல் 11 மணியளவில் டெல்லி காசியாபாத்தில் மக்கள் முன்னிலையில் நடந்த ஆம்ஆத்மி கட்சியின் அரசியல் விவகாரக்குழு கூட்டம் நடந்தது. அதில் ஆட்சி அமைக்கலாம் என்று அதிகாரப்பூர்வமாக முடிவு எடுக்கப்பட்டது. இது தொடர்பாக ஆம் ஆத்மி கட்சி மூத்த தலைவர்களில் ஒருவரான மணீஷ் சிசோடியா கூறுகையில், ‘‘280 மக்கள் சபை கூட்டங்களை நாங்கள் நடத்தினோம். அதில் 257 கூட்டங்களில் ஆம்ஆத்மி ஆட்சி அமைக்க மக்கள் சம்மதித்துள்ளனர்’’ என்றார்.

அவரைத் தொடர்ந்து 11.20 மணிக்கு பேசிய அரவிந்த் கெஜ்ரிவால், ‘‘டெல்லியில் ஆம்ஆத்மி ஆட்சி அமைக்கிறது என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இதை கேட்டதும் திரண்டிருந்த ஆம்ஆத்மி கட்சித் தொண்டர்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர். பிறகு ஆம்ஆத்மி கட்சி மூத்த தலைவர்களுடன் கெஜ்ரிவால் கவர்னர் மாளிகைக்கு புறப்பட்டு சென்றார். மதியம் 12.30 மணியளவில் அவர் கவர்னர் நஜீப்சிங்கை சந்தித்து பேசினார். அப்போது கெஜ்ரிவால் ஆட்சி அமைக்க உரிமை கோரினார். அதோடு ஆம்ஆத்மி கட்சி எம்.எல்.ஏ.க்கள் தன்னை சட்டசபை கட்சித் தலைவராக தேர்வு செய்து நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை கொடுத்தார்.

கெஜ்ரிவாலின் கடிதத்தை கவர்னர் நஜீப்சிங் ஏற்றுக் கொண்டார். ஆம்ஆத்மி ஆட்சி அமைக்க அவர் சம்மதம் தெரிவித்தார். அப்போது கெஜ்ரிவால், பதவி ஏற்பு விழாவை ‘‘ஜந்தர் மந்திர்’’ பகுதியில் நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

ஊழலுக்கு எதிராக ஜந்தர் மந்திர் பகுதியில் நடந்த போராட்டங்கள் தான் கெஜ்ரிவாலை நாடெங்கும் பிரபலப்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது. எனவேதான் பதவி ஏற்பு விழாவை ஜந்தர்மந்திரில் நடத்த கெஜ்ரிவால் விரும்புகிறார். அரவிந்த் கெஜ்ரிவால் 26–ந்தேதி (வியாழக்கிழமை) பதவி ஏற்பார் என்று தெரிய வந்துள்ளது. அவர் பதவி ஏற்றதும் சட்டசபை கூட்டப்படும். எம்.எல்.ஏ.க்கள் பதவி ஏற்பார்கள். அந்த கூட்டத்திலேயே சில அறிவிப்புகளை நிறைவேற்ற கெஜ்ரிவால் திட்ட மிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

குறிப்பாக லோக்பால் மசோதாவை அவர் கொண்டு வர திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. கெஜ்ரிவால் ஆட்சியில் நீடிக்க காங்கிரஸ் கட்சி நிபந்தனையற்ற ஆதரவு கொடுப்பதாக வாக்குறுதி அளித்திருப்பதாக கூறப்படுகிறது. சட்டசபையில் கெஜ்ரிவால் பெரும்பான்மை பலத்தை நிரூபித்து காட்ட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் அப்போது காங்கிரஸ் கட்சி ஆதரவு கொடுக்கும். மற்றபடி காங்கிரசிடம் இருந்து ஆம்ஆத்மி நேரடி ஆதரவை பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 20/09/2008

http://www.eegarai..net

Back to top Go down


கெஜ்ரிவால் டெல்லி முதல்வராகிறார்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு - Page 5 Empty Re: கெஜ்ரிவால் டெல்லி முதல்வராகிறார்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு

Post by விஸ்வாஜீ Mon Dec 30, 2013 3:05 pm

இவரின் அதிரடி செயல்பாடுகள் ஆரம்பிக்க 3 மாதங்கள் ஆகுமா?
விஸ்வாஜீ
விஸ்வாஜீ
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1334
இணைந்தது : 25/09/2011

Back to top Go down

கெஜ்ரிவால் டெல்லி முதல்வராகிறார்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு - Page 5 Empty Re: கெஜ்ரிவால் டெல்லி முதல்வராகிறார்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு

Post by சிவா Mon Dec 30, 2013 6:25 pm

vishwajee wrote:இவரின் அதிரடி செயல்பாடுகள் ஆரம்பிக்க 3 மாதங்கள் ஆகுமா?


இப்பொழுது இவரால் எதுவும் அதிகமாகச் செயல்பட முடியாது என்பதே அனைவரின் கணிப்பாகவும் உள்ளது!

காங்கிரஸ் நிச்சயம் இவரது செயல்பாடுகளுக்கு முட்டுக்கட்டையாகத்தான் இருக்கும்! இவர் இப்ப்பொழுது ஆரம்பிக்கும் நலத்திட்டங்கள் ஆட்சி கவிழ்க்கப்பட்டு அடுத்து இவர் பெரும்பான்மையில் வெற்றிபெற உதவும் எனக் கூறுகிறார்கள்!

கணிப்புகள் நிரந்தரம் அல்ல, காலம்தான் அனைத்திற்கும் பதில் கூற வேண்டும்!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 20/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கெஜ்ரிவால் டெல்லி முதல்வராகிறார்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு - Page 5 Empty Re: கெஜ்ரிவால் டெல்லி முதல்வராகிறார்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு

Post by சிவா Mon Dec 30, 2013 8:11 pm

சாலையோர சிறுவர்கள் முதல் கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ் பணியாளர்கள் வரை; நம்பிக்கை நட்சத்திரம் அரவிந்த் கெஜ்ரிவால்

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தங்களுக்கு உதவி புரிவார் என்ற நம்பிக்கையில், கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ் விமான நிறுவன பணியாளர்கள் மற்றும் டெல்லியின் சாலையோரங்களில் வசிக்கும் சிறுவர்கள் அவருக்கு ஒரு கடிதத்தை எழுதியுள்ளனர்.

டெல்லி மக்களின் பேராதரவை பெற்று முதலமைச்சராக பதியேற்று இருக்கும் அரவிந்த் கெஜ்ரிவாலின் அலுவலகத்திற்கு வந்த முதல் கடிதம் டெல்லியின் சாலையோரங்களில் வசிக்கும் சிறுவர்கள் அனுப்பியது.

அக்கடிதத்தில், சாலையோரங்களில் வசிக்கும் சிறுவர்களுக்கு சட்டப்பூர்வ அடையாளம் அளிக்கப்படவேண்டும், அனைத்து அரசு சலுகைகளும் அவர்களுக்கும் நடைமுறைப்படுத்தப்படவேண்டும், சிறுவர்களை வேலைக்கு அமர்த்துபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும், அவர்கள் எளிதாக கருத்துக்களை தெரிவிக்கும் வகையில் அரசுடன் அவ்வபோது சந்திப்புகள் ஏற்பாடு செய்யப்பட வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதே போல, கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ் விமான நிறுவன பணியாளர்கள் தங்கள் சம்பள பாக்கியை பெற டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் உதவியை கேட்க உள்ளனர்.

கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனம் தங்களுக்கு 17 மாத சம்பளம் தர வேண்டியுள்ளதாக கூறிய பணியாளர்கள், இது குறித்து முக்கிய கட்சிகளின் உதவியை கேட்டும் அவர்கள் தங்கள் கோரிக்கைக்கு செவி சாய்க்கவில்லை எனக் கூறியுள்ளனர்.

எனவே டெல்லி முதலமைச்சரின் உதவியை நாட முடிவு செய்திருப்பதாக அவர்கள் தெரிவித்தனர். சாமானிய மனிதர்களின் பிரச்னைகளை தீர்க்கப் போவதாக கூறியுள்ள கெஜ்ரிவால், தங்களுக்கும் உதவுவார் என நம்புவதாக கிங்ஃபிஷர் ஏர்லைன் விமான பணியாளர்கள் தெரிவித்தனர்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 20/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கெஜ்ரிவால் டெல்லி முதல்வராகிறார்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு - Page 5 Empty Re: கெஜ்ரிவால் டெல்லி முதல்வராகிறார்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு

Post by சிவா Tue Dec 31, 2013 8:01 pm

மூன்று நாளில் முடிந்ததை செய்வோம்-கெஜ்ரிவால்

புதுடில்லி: 'ஆட்சியை காங்., அல்லது பா.ஜ., கவிழ்த்தாலும் எங்களுக்கு கவலையில்லை. பதவியில்இருக்கம் மூன்று நாட்களில், எங்களால் முடிந்ததை மக்களுக்கு செய்துவிட்டு போவோம்,' என்று, டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறி உள்ளார்.

டில்லி சட்டசபையில், காங்கிரஸ் ஆதரவுடன் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி அமைத்துள்ளது. முதல்வராக அரவிந்த் கெஜ்ரிவால் பொறுப்பேற்றுள்ளார். தேர்தல் பிரசாரத்தின் போது, ஆம் ஆத்மி, பொதுமக்களுக்கு பல வாக்குறுதிகளை அளித்தது. அவற்றில், நாள் ஒன்றுக்கு 700 லிட்டர் இலவச குடிநீரும், மின் கட்டணத்தில் 50 சதவீதம் குறைப்பு என்ற இரண்டு வாக்குறுதிகள் முக்கியமானவை. இவற்றில், இலவச குடிநீர் திட்டம் நாளை முதல் அமல்படுத்தப்பட உள்ளது.

அடுத்தகட்டமாக, மின் கட்டணத்தில் 50 சதவீதம் குறைப்பு என்ற அறிவிப்பு மிக விரைவில் வெளியிடப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், டில்லிக்கு மின்சாரம் வழங்கும் நிறுவனங்களில் ஆய்வு நடத்த முதல்வர் கெஜ்ரிவால் உத்தரவிட்டுள்ளார். மின் கட்டணத்தை பற்றி விவாதிக்க, அமைச்சரவை கூட்டத்தையும் அவர் கூட்டி உள்ளார்.

மின் நிறுவனங்களுக்கு கடந்த ஆட்சியின் போது சலுகை காட்டப்பட்டதா, அதில் ஊழல் ஏதேனும் நடந்துள்ளதா என்பதை அறியவே இந்த சோதனை நடத்தப்படுவதாகவும், இதனால், முக்கிய அதிகாரிகள் சிலரும், காங்கிரஸ் முக்கிய பிரமுகர்களும் சிக்குவார்கள் என தகவல்கள் வெளியாகி உள்ளன. இது, ஆம் ஆத்மி கட்சிக்கு ஆதரவை கொடுத்து வரும் காங்கிரஸ் கட்சிக்கு பெரும் நெருக்கடியையும், எரிச்சலையும் ஏற்படுத்தி உள்ளதாக கூறப்படுகிறது.

ஆனால், காங்கிரஸ் இதை மறுத்துள்ளது. 'நாங்கள் எந்த மின் நிறுவனத்திற்கும் சலுகை காட்டவில்லை. புதிய அரசு சோதனை நடத்துவதை நாங்கள் வரவேற்கிறோம். அவர்கள் தாரளமாக நடத்தலாம். இந்த சோதனையில் தவறு நடந்ததற்கான ஆதாரங்கள் சிக்கினால், அதன் அடிப்படையில், சம்பந்தப்பட்ட அரசியல்வாதிகள் மீதோ, அதிகாரிகள் மீதோ கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என டில்லி காங்கிரஸ் தலைமை கூறி உள்ளது.

இருப்பினும், ஆட்சி அமைந்த சில நாட்களிலேயே தொல்லை தரும் ஆம் ஆத்மி கட்சிக்கு அளித்து வரும் ஆதரவை விலக்கி கொள்ள வேண்டும் என, டில்லி காங்கிரசில் குரல்கள் ஒலிக்க துவங்கிவிட்டன. வரும் ஜனவரி 3ம் தேதி, ஆம் ஆத்மி ஆட்சியை தொடர, நம்பிக்கை ஓட்டெடுப்பு நடத்த வேண்டும். இதற்கு, காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்களின் ஆதரவு நி்ச்சயம் தேவை. இந்நிலையில், நம்பிக்கை ஓட்டெடுப்பில் காங்கிரஸ் காலை வாரலாம் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், 'காங்கிரசோ, பா.ஜ.,வோ ஆட்சியை கவிழ்த்தால் அது குறித்து நாங்கள் கவலைப்பட போவதில்லை. பதவியில் இருக்கும் மீதம் உள்ள மூன்று நாட்களில், முடிந்ததை டில்லி மக்களுக்கு செய்துவிட்டு போவோம்,' என்றார்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 20/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கெஜ்ரிவால் டெல்லி முதல்வராகிறார்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு - Page 5 Empty Re: கெஜ்ரிவால் டெல்லி முதல்வராகிறார்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு

Post by சிவா Tue Dec 31, 2013 8:04 pm

புதுடில்லி: டில்லியில், கடந்த சனிக்கிழமை, ஆம் ஆத்மி கட்சித் தலைவர், அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் அவர் தலைமையிலான அமைச்சரவை பதவியேற்ற போது, உற்சாக மிகுதியில், கோஷம் எழுப்பிய, போலீஸ்காரர், சஸ்பெண்ட்செய்யப்பட்டார்.

கெஜ்ரிவால் பதவியேற்ற போது, ராஜேஷ் குமார் என்ற அந்த போலீஸ்காரர், முழு சீருடையில், பாதுகாப்பு பணிக்காக வநதிருந்தார்.

மேடை தடுப்பு ஒன்றில் ஏறி நின்று, அரவிந்த் கெஜ்ரிவால் வாழ்க' என, கோஷம் எழுப்பினார். இவ்வாறு, பல முறை அவர், கோஷமிட்டதோடு, டில்லி போலீசை, கெஜ்ரிவால் கட்டுப்பாட்டில் கொண்டு வர வேண்டும் எனவும், முழக்கமிட்டார். அவரை, சக போலீசார், கீழிறக்கி விட்டனர்.

இந்த விவகாரம், போலீஸ் அதிகாரிகளுக்கு தெரிய வந்தது. நேற்று, ராஜேஷ் குமார், சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

இவர், ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்தவர். 2010 முதல், டில்லி போலீசில் பணியாற்றி வருகிறார்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 20/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கெஜ்ரிவால் டெல்லி முதல்வராகிறார்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு - Page 5 Empty Re: கெஜ்ரிவால் டெல்லி முதல்வராகிறார்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு

Post by சிவா Tue Feb 10, 2015 9:24 pm

'என்னை அச்சுறுத்தும் பெரும் வெற்றி' அரவிந்த் கெஜ்ரிவால் முதல் பேச்சு

புதுடில்லி: டில்லியில் யாரும் எதிர்பார்க்காத அளவிற்கு மாபெரும் வெற்றியை பெற்றுள்ள ஆம் ஆத்மியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் கட்சி தலைமை அலுவலகத்தில் கட்சி தொண்டர்களை சந்தித்து பேசினார்.

டில்லியில் தேசிய கட்சிகளான பா.ஜ.,(4) மற்றும் காங்கிரஸ் ( 0) குறைந்த இடங்களை பெற்று பெரும் சரிவை சந்தித்துள்ளது. இந்த தோல்வியால் பா.ஜ., கவனத்துடன் இருக்க வேண்டும் என சுப்பிரமணிய சுவாமி கருத்து தெரிவித்துள்ளார். மக்கள் எண்ணத்தை பா.ஜ., புரிந்து கொள்வதில் தோல்வி அடைந்து விட்டது என டில்லி பா.ஜ., தலைவர் உபாத்யாயா கூறியுள்ளார்.

இந்த தேர்லை பொறுத்தவரை ஆம் ஆத்மிக்கு பெரும் வெற்றி கிட்டியுள்ளது. இது அனைத்து அரசியல் கட்சியினரையும் அதிர வைத்துள்ளது.

ஊழல் - வி.ஐ.பி., கலாச்சாரம் ஒழிப்போம் : தேர்தல் முடிவுகள் வந்து கொண்டிருந்த போது அரவிந்த்கெஜ்ரிவால் தொண்டர்கள் மத்தியில் பேசுகையில்: என்னை அச்சுறுத்தும் அளவிற்கு மக்கள் வெற்றியை தந்துள்ளனர். வெற்றி தந்த மக்களுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன். இந்த பெரும் வெற்றியால் ' இறுமாப்புடன் நாங்கள் இருக்க மாட்டோம் '- கட்சி தொண்டர்கள் யாரும் அகந்தை கொள்ள கூடாது. மக்கள் எங்களிடம் பெரிய பொறுப்பை தந்துள்ளனர் . எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. இது ஆம்ஆத்மியின் வெற்றி .இவர்கள் எதிர்பார்ப்பை நாங்கள் நிறைவேற்றுவோம். ஏழை, பணக்காரன் என அனைவரும் சமமாக பாவிக்கப்படுவர். ஊழல் - வி.ஐ.பி., கலாச்சாரம் ஒழிப்போம். பிரமாண்ட வெற்றியை தந்த மக்களுக்கு சல்யூட் அடிக்கிறேன். பெரும் மாற்றத்திற்கான நேரம் வந்துள்ளது. உண்மையான சவால்கள் துவங்கியிருக்கிறது. டில்லியின் வளர்ச்சிக்கு அனைவருடனும் இணைந்து செயல்படுவேன். தனியாக எதுவும் செய்ய மாட்டேன். பாரத் மாதக்கி ஜே., என பேச்சை முடித்தார். தொண்டர்கள் கெஜ்ரிவால், கெஜ்ரிவால் என கோஷம் எழுப்பினர்.


கெஜ்ரிவால் டெல்லி முதல்வராகிறார்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு - Page 5 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 20/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கெஜ்ரிவால் டெல்லி முதல்வராகிறார்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு - Page 5 Empty Re: கெஜ்ரிவால் டெல்லி முதல்வராகிறார்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு

Post by சிவா Tue Feb 10, 2015 9:25 pm

கருத்துக்கணிப்பையும் மிஞ்சிய வெற்றி ; ஆம் ஆத்மி தொண்டர்கள் கொண்டாட்டம்

புதுடில்லி: டில்லி சட்டசபை தேர்தலில் பல்வேறு கருத்துக்கணிப்பையும் மிஞ்சி ஆம் ஆத்மி பெரும் வெற்றியை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. 70 தொகுதிகள் கொண்ட டில்லி சட்டசபையில் 35 முதல் 45 தொகுதிகள் வரை ஆம் ஆத்மி வெற்றி பெரும் என பல்வேறு முன்னணி நிறுவனங்கள் நடத்திய கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டது.

பா.ஜ., தரப்பில் கருத்துக்கணிப்புக்கள் தவறானது என்றும் நாங்களே வெற்றி பெறுவோம் என்றும் சமாதானம் சொல்லிக்கொண்டிருந்தது. ஆனால் ஆம் ஆத்மி பெரும்பான்மைக்கும் மேல் வெற்றியை தொட்டுள்ளது. தற்போதைய ஓட்டு எண்ணிக்கை நிலவரப்படி ஆம் ஆத்மி 67 தொகுதிகளிலும், பா.ஜ., 3 தொகுதிகளிலும், வெற்றி பெறும் என தெரிகிறது. இது வரலாற்றில் இல்லாத அளவிற்கு வெற்றி ஆகும். காங்கிரஸ் கட்சிக்கு ஒரு தொகுதி கூட கிடைக்கவில்லை.

சுயேச்சை ஒரு இடத்திலும் முன்னணி வகித்து வருகிறது. கிரண் பேடியும் பின்னடைவு: பா.ஜ., முதல்வர் வேட்பாளர் கிரண்பேடியும் தோல்வியை தழுவினார். கிருஷ்ணாநகர் தொகுதியில் போட்டியிட்ட அவர் ஆம்ஆத்மி வேட்பாளரிடம் குறைவான ஓட்டு வித்தியாசத்தில் தோல்வியுற்றார். காங்., பிரசார தலைவர் அஜய்மக்கான் தோல்வி அடைந்தார்.

தோல்விக்கு பொறுப்பேற்பு; இந்த தோல்விக்கு தான் முழு பொறுப்பை ஏற்று கொள்வதாக கிரண்பேடி கூறியுள்ளார். இந்த மேட்சில் அரவிந்த் கெஜ்ரிவால் என்ற தனி மனித சக்தி வெற்றி பெற்றுள்ளது. என கூறியுள்ளார்.இதில் மோடியை குறை கூற கூடாது என தெரிவி்த்தார்.


கெஜ்ரிவால் டெல்லி முதல்வராகிறார்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு - Page 5 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 20/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கெஜ்ரிவால் டெல்லி முதல்வராகிறார்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு - Page 5 Empty Re: கெஜ்ரிவால் டெல்லி முதல்வராகிறார்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு

Post by சிவா Tue Feb 10, 2015 9:27 pm

ஆம் ஆத்மி வெற்றி குறித்து தலைவர்கள் கருத்து

கையில் துடப்பக்கட்டையுடன் களம் இறங்கிய ஒரு சாமான்யன் இரு பெரும் தேசிய கட்சிகளை வீழ்த்தி இருக்கிறார்.

தனி மெஜாரிட்டியுடன் டெல்லி மாநில அரியணையை அரவிந்த் கெஜ்ரிவால் கைப்பற்றி உள்ளார். இந்த இமாலய வெற்றி இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்துள்ளது.

இதுபற்றி தமிழக அரசியல் தலைவர்களின் கருத்துக்கள் வருமாறு:–

டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் (பா.ஜனதா மாநில தலைவர்):–

இந்த தோல்வி துரதிருஷ்டவசமானதுதான். மக்கள் தீர்ப்பை ஏற்றுக் கொள்கிறோம். இந்த தோல்வியை பா.ஜனதாவுக்கோ, பிரதமர் மோடிக்கோ பின்னடைவாக கருத முடியாது. ஏனென்றால் மோடி பிரதமர் ஆன பிறகு நடைபெற்ற அனைத்து மாநில தேர்தல்களிலும் பா.ஜனதா வெற்றி பெற்றுள்ளது.

செய்ய முடியாத விஷயங்களை சொல்லி மக்களை ஏமாற்றி கெஜ்ரிவால் வெற்றி பெற்றுள்ளார். எதிர்க்கட்சிகள் பிரசாரம் செய்வது போல் டெல்லி தேர்தல் மோடி அரசின் குறியீடு அல்ல. வருங்காலத்தில் கட்சியின் வளர்ச்சியை எந்த வகையிலும் இந்த தேர்தல் முடிவு பாதிக்காது. இந்த தேர்தலில் மோடி முன்னிறுத்தப்படவில்லை. பேடிதான் முன்னிறுத்தப்பட்டார்.

கெஜ்ரிவால் ஒரு மாய தோற்றத்தை உருவாக்கி வெற்றி பெற்றுள்ளார். இது ஆம் ஆத்மிக்கு தற்காலிக வெற்றி. பா.ஜனதாவுக்கு தற்காலிக தோல்வி அவ்வளவுதான்.

டி.கே.எஸ்.இளங்கோவன் (தி.மு.க.):–

பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பு பா.ஜனதா அளித்த வாக்குறுதி வேறாகவும் வெற்றி பெற்ற பிறகு அதன் செயல்பாடு வேறாகவும் அமைந்துள்ளது.

கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறார்கள். அதற்கான தண்டனைதான் இது.

காங்கிரஸ் இன்னும் தங்களை சரிசெய்து கொள்ள வேண்டும். பாராளுமன்ற தேர்தல் தோல்வியில் இருந்து அவர்கள் இன்னும் மீளவில்லை. உள்கட்சி குழப்பமும் அதிகமாக இருப்பது தெரிகிறது.

கோபண்ணா (காங்கிரஸ்):– தலைநகர் டெல்லியை 15 ஆண்டுகளாக காங்கிரஸ் ஆண்டது. அதற்கு ஒரு மாற்றம் உருவாக வேண்டும் என்ற சிந்தனை மக்களிடையே எழுந்தது. அதனால்தான் 2013–ல் நடந்த தேர்தலில் யாருக்கும் மெஜாரிட்டி கிடைக்கவில்லை. காங்கிரஸ் 8 இடங்களை கைப்பற்றியது.

மத்தியில் பா.ஜனதா ஆட்சி அமைந்த 9 மாதங்களில் டெல்லி மாநகர மக்கள் மோடிக்கு எதிராக மாறி உள்ளனர். அதனால்தான் பா.ஜனதா தோற்கடிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீரங்கம் தொகுதியை கைப்பற்ற எப்படி அனைத்து அமைச்சர்களும் முற்றுகையிட்டு இருக்கிறார்களோ அதேபோல் அனைத்து கேபினட் மந்திரிகளும் டெல்லி மாநிலத்துக்கு அனுப்பப்பட்டார்கள். 120 எம்.பி.க்களுக்கு தேர்தல் பொறுப்பு வழங்கப்பட்டது. இவ்வளவு பகீரத பிரயத்தனம் செய்த பிறகும் மோடி அலை தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.

காங்கிரஸ் மோசமான தோல்வியை பெற்றதற்காக வருத்தப்படும் நாங்கள் பா.ஜனதா தோற்கடிக்கப்பட்டதால் மகிழ்ச்சி அடைகிறோம். மாற்றத்தை விரும்பும் மக்கள் ஆம் ஆத்மி நல்லாட்சியை தரும் என்ற நம்பிக்கையில் வெற்றி பெற செய்துள்ளனர். காங்கிரஸ் பெற வேண்டிய வெற்றியை ஆம் ஆத்மி பெற்றுள்ளது.

தலைநகரில் மதவாத சக்திகள் வீழ்த்தப்பட்டிருப்பது ஒரு வகையில் சந்தோஷம். பாராளுமன்ற தேர்தலில் 60 சட்டமன்ற தொகுதிகளிலும் பெரும்பான்மை பெற்ற பா.ஜனதா 9 மாதங்களில் வீழ்த்தப்பட்டுள்ளது. மக்கள் சரியான பாடத்தை புகட்டி இருக்கிறார்கள்.

ஜி.கே.வாசன் (த.மா.கா. தலைவர்):– டெல்லி சட்டசபைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்றிருக்கிறது. ஜனநாயகத்தில் மக்களின் தீர்ப்பை அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

மத்தியில் ஆட்சி புரிகின்ற பாரதீய ஜனதா கட்சி தனது மதவாதக்கொள்கை, மக்கள் நலத் திட்டங்களை முடக்க நினைப்பது, மதத்தின் பெயரால் பிரிவினை ஏற்படுத்த முயற்சிப்பது போன்ற பல்வேறு நடவடிக்கைகளை மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்பதை இத்தேர்தல் முடிவு எடுத்துக்காட்டுகிறது.

மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை மறந்து வெறும் கோஷங்களை மட்டும் வைத்து ஆட்சி புரிகின்ற பா.ஜ.க வின் வேஷம் கலையத் தொடங்கியிருக்கின்றது.

பொதுத்தேர்தல் முடிவுகளுக்கு பிறகும் கூட காங்கிரஸ் கட்சியின் செயல்பாட்டில் மக்களுக்கு நம்பிக்கை ஏற்படவில்லை. அதன் வெளிப்பாடுதான் அவர்களுக்கு கிடைத்த தோல்வி. மேலும் மாநில உணர்வுகளுக்கு மதிப்பளித்து, செயல்படும் கட்சியின் மீது மக்கள் நம்பிக்கை வைத்து வாக்களிக்கிறார்கள் என்பதை தேர்தல் முடிவு காட்டுகிறது.

தனது ஆட்சி பலம் மற்றும் அதிகார பலத்தைப் பயன்படுத்தி வெற்றி பெறலாம் என நினைத்த பா.ஜ.க விற்கு மக்கள் தக்க பாடம் புகட்டியிருக்கிறார்கள்.

ஜி.ராமகிருஷ்ணன் (மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு செயலாளர்):– 2013 சட்டமன்ற தேர்தலில் ஆம் ஆத்மிக்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை. பா.ஜனதாவுக்கு அதிகமான இடங்களும் கிடைத்தது. ஓட்டு சதவீதமும் அதிகமாக கிடைத்து இருந்தது.

இந்த தேர்தலில் ஆம் ஆத்மி தனி மெஜாரிட்டி பெற்றுள்ளது. பா.ஜனதாவுக்கு ஓட்டு சதவீதமும் இல்லை. சீட்டும் மிகவும் குறைந்துள்ளது. காங்கிரசுக்கு ஓட்டும் இல்லை. சீட்டும் இல்லை.

பா.ஜனதா அரசு கடந்த 9 மாதங்களில் கடைப்பிடித்து வரும் தவறான நவீன தாராள மயமாக்கல் கொள்கை, அப்பட்டமான மதவாதம் ஆகியவற்றுக்கு மக்கள் பாடம் புகட்டி இருக்கிறார்கள். டெல்லி தீர்ப்பு வரவேற்கத்தக்கது.


கெஜ்ரிவால் டெல்லி முதல்வராகிறார்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு - Page 5 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 20/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கெஜ்ரிவால் டெல்லி முதல்வராகிறார்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு - Page 5 Empty Re: கெஜ்ரிவால் டெல்லி முதல்வராகிறார்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு

Post by சிவா Tue Feb 10, 2015 9:28 pm

ஆம் ஆத்மி வெற்றி எதிரொலி; டெல்லியில் துடைப்பத்தின் விலை 'திடீர்' உயர்வு


டெல்லி சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி அமோக வெற்றி பெற்றுள்ளதை தொடர்ந்து அங்கு துடைப்பத்தின் விலை திடீரென உயர்ந்துள்ளது. தேர்தல் முடிவு வெளியான இன்று அங்கு ஒரு துடைப்பம் ரூ.200 வரை விற்கப்பட்டது. வழக்கமாக அந்த துடைப்பங்கள் ரூ.30-50 வரை மட்டுமே விற்கப்பட்டு வந்தது. ஆம் ஆத்மி வெற்றி அடைந்த செய்தி வெளியானதும் துடைப்பங்களை வாங்க கட்சி ஆதரவாளர்கள் கடைகளுக்கு படையெடுத்தனர். திடீர் படையெடுப்பால் கடைகளில் ஸ்டாக் இல்லாத காரணத்தினால் ஆங்காங்கே துடைப்பத்தின் விலை தாறுமாறாக உயர்ந்தன. விலை உயர்ந்தாலும் ஆம் ஆத்மி ஆதரவாளர்கள் வெற்றியை கொண்டாட துடைப்பத்தை வாங்கிக் கொண்டுதான் இருக்கிறார்கள்.


கெஜ்ரிவால் டெல்லி முதல்வராகிறார்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு - Page 5 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 20/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கெஜ்ரிவால் டெல்லி முதல்வராகிறார்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு - Page 5 Empty Re: கெஜ்ரிவால் டெல்லி முதல்வராகிறார்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு

Post by சிவா Tue Feb 10, 2015 9:29 pm

‘ஆம் ஆத்மி’யின் வெற்றி ‘அரசியல் பூகம்பம்’: சர்வதேச பத்திரிகைகள் புகாழரம்


டெல்லி சட்டசபை தேர்தலில் ‘ஆம் ஆத்மி’ கட்சி பெற்ற வெற்றி, ஓர் அரசியல் பூகம்பம் என்று அமெரிக்காவின் புகழ்பெற்ற நியூயார்க் டைம்ஸ் புகழாரம் சூட்டி உள்ளது. மிகப்பெரும் வெற்றி மூலம் பிரதமராக நரேந்திர மோடி தேர்ந்தெடுக்கப்பட்டு ஒரு ஆண்டு கூடாத நிலையில், புதிய அரசியல் கட்சியால், பிரதமர் மோடியின் கட்சி நசுக்கப்பட்டு இருப்பதாகவும் கூறியுள்ளது.

‘மோடி பிரதமரான பிறகு, பா.ஜனதாவுக்கு முதலாவது அரசியல் பின்னடைவு ஏற்பட்டு இருக்கிறது. அக்கட்சிக்கு அதிர்ச்சி தோல்வி ஏற்பட்டுள்ளது’ என்று மற்றொரு பிரபல அமெரிக்க பத்திரிகையான ‘வாஷிங்டன் போஸ்ட்’ கூறியுள்ளது.

அமெரிக்க செய்தி சேனலான சி.என்.என்., ‘மேலே சென்ற எல்லாமே கீழே வந்துதான் ஆக வேண்டும்’ என்ற ஐசக் நியூட்டனின் விதியை சுட்டிக்காட்டி, பா.ஜனதாவின் தோல்வியை வர்ணித்துள்ளது. இங்கிலாந்து செய்தி சேனலான பி.பி.சி., பிரதமர் மோடிக்கு முதலாவது பெரும் பின்னடைவு ஏற்பட்டு இருப்பதாக கூறியுள்ளது.


கெஜ்ரிவால் டெல்லி முதல்வராகிறார்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு - Page 5 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 20/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கெஜ்ரிவால் டெல்லி முதல்வராகிறார்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு - Page 5 Empty Re: கெஜ்ரிவால் டெல்லி முதல்வராகிறார்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 5 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

Back to top

- Similar topics
» 200 யூனிட் வரை மின் கட்டணம் இலவசம்: 201 முதல் 400 வரை 50% மானியம்...டெல்லி முதல்வர் அரவிந்த கெஜ்ரிவால் அறிவிப்பு
» டெல்லி மக்களுக்கு கிடைத்த வெற்றி - அரவிந்த் கெஜ்ரிவால் பெருமிதம்
» டெல்லி முதல் மந்திரியாக 3வது முறையாக பதவியேற்றார் அரவிந்த் கெஜ்ரிவால்
» கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க பிளாஸ்மா வங்கி துவக்கம் : டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் தகவல்
» ஆர்.கே.நகர் தொகுதியில் டி.டி.வி.தினகரன் போட்டி அதிகாரப்பூர்வ அறிவிப்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum