ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இவன் வேற மாதிரி - சினிமா விமர்சனம்

3 posters

Go down

இவன் வேற மாதிரி - சினிமா விமர்சனம் Empty இவன் வேற மாதிரி - சினிமா விமர்சனம்

Post by சிவா Mon Dec 23, 2013 6:51 pm

இவன் வேற மாதிரி - சினிமா விமர்சனம் P10h

ஜாலி கேலி இளைஞர் பருவத்தில் ஒருவன் சமூகப் பொறுப்போடு யோசித்தால்... அவன் வேறு மாதிரிதானே!

சட்டக் கல்லூரிக் கலவரத்தில் மூன்று மாணவர்கள் பலியாகக் காரணமான சட்ட அமைச்சரைத் தண்டிக்க நினைக்கிறார் 'காமன் மேன்’ விக்ரம் பிரபு. அதற்காக பரோலில் வெளிவந்திருக்கும் அவரது தம்பி வம்சி கிருஷ்ணாவைக் கடத்துகிறார். வம்சி மீண்டும் சிறைக்குச் செல்லாததால், அமைச்சரின் பதவி பறிபோகிறது. வம்சி தன்னைக் கடத்தியவன் யார் என்று வெறிபிடித்துத் தேடுகிறார். விக்ரம் பிரபுவை அவர் கண்டுபிடித்தாரா... பழிதீர்த்தாரா?

'சட்டத்தைக் கையில் எடுக்கும் இளைஞன்’ என்ற ஒன் லைன்தான். ஆனாலும், ஆரம்பக் காட்சியிலேயே கதையை ஆரம்பிப்பது, சின்னச் சின்ன ட்விஸ்ட்கள், க்யூட் காதல் ஐடியாக்கள், பரபர ஆக்ஷன் எனப் படத்தை செம சுவாரஸ்யப்படுத்துகிறார் இயக்குநர் சரவணன்.

கொடூர வில்லனை இறுக்கமும் மூர்க்கமுமாகப் பந்தாடும் கேரக்டருக்கு விக்ரம் பிரபுவின் அபார உயரமும் அகல முகமும் ஓ.கே. ஆனால், மற்ற சமயங்களிலும் அதே இறுக்கம் தேவையா விக்ரம்? காதல் காட்சிகளில்கூட பற்களைக் கடித்துக்கொண்டேவா? ரிலாக்ஸ் ப்ரோ!

அத்தனை பெரிய கண்களில் அத்தனை காதலைக் கொட்டி நடித்திருக்கும் சுரபிதான் (அறிமுகம்) படத்தின் ஜாலி வைட்டமின். மந்திரிச்சுவிட்ட அப்பாவிக் கோழியாக மீன்தொட்டியோடு திரிவதும், 'மீன்தொட்டி மாதிரி குழந்தையையும் விட்டுட்டுப் போயிருவானோ’ என்று பதறுவதுமாக... இன்ச் பை இன்ச் ஈர்க்கிறார். வம்சியின் திமுதிமு உடலும் குறுகுறு பார்வையும் வில்லன் கேரக்டருக்கு நச்!

'இதுவே நல்ல பொண்ணுதான் சார்... 20 நிமிஷமா செல்லுக்கு ஒரு எஸ்.எம்.எஸ்., கால்கூட வரலை. இதைவிட வேற என்ன வேணும்?’ நீள... நீளமாகக் கடக்கும் காதல் காட்சிகளில் இப்படியான சிலபல வசனங்கள், செம!

மருத்துவமனையில் இரண்டு போலீஸ்காரர்களைக் கொன்று விட்டு வம்சி தப்பித்த செய்தியில் ஊரே அலறிக்கொண்டிருக்கிறது. அந்தச் சமயம் சுரபியைக் காணவில்லை என்றால், செம ஷார்ப் ஹீரோவின் சிந்தனை என்னவாக இருக்க வேண்டும்? ஆனால், விக்ரம் பிரபுவோ சுரபியை ஒருதலையாகக் காதலித்தவனைத் தேடுகிறார், அலமாரிகளைத் துழாவுகிறார். வில்லன், சுரபியை எங்கே பதுக்கியிருக்கிறான் என்பதுதான் திகீர் ட்விஸ்ட். ஆனால், அதைப் பார்வையாளர்களுக்குத் தெரிவித்த பிறகும், மிகப் பொறுமையாகக் கடக்கிறது க்ளைமாக்ஸ் காட்சிகள்.

'யதார்த்தமாக’ விக்ரம் பிரபுவும் சுரபியும் சந்தித்துக்கொண்டே இருப்பது, 'யதார்த்தமாக’ விக்ரம் பிரபுவின் பைக்கில் வில்லன் ஏறுவது, 'யதார்த்தமாக’ வில்லன் கோஷ்டி வக்கீல் சுரபியை முன்னரே பார்த்திருப்பது, 'யதார்த்த மாக’ கருங்காலி போலீஸிடம் சுரபியின் பெற்றோர் குற்றம் சொல்வது, 'யதார்த்தமாக’ சுரபி இருப்பிடத்தை விக்ரம் பிரபு கண்டுபிடிப்பது என இது மாதிரி இத்தனை 'யதார்த்தம்’கள் சாத்தியமா?

அந்த இடங்களில் கொஞ்சம் புது மாதிரி யோசித்திருக்கலாம்!

- விகடன் விமர்சனக் குழு
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

இவன் வேற மாதிரி - சினிமா விமர்சனம் Empty Re: இவன் வேற மாதிரி - சினிமா விமர்சனம்

Post by சிவா Mon Dec 23, 2013 6:55 pm

தினமலர் விமர்சனம்

பெரும் சினிமா பின்னணி கொண்ட விக்ரம் பிரபுவின் இரண்டாவது படம்.., "எங்கேயும் எப்போதும் முதல் படத்திலேயே முத்திரை பதித்த இயக்குநர் எம். சரவணனின் இரண்டாவது படம்.. என ஏகப்பட்ட "இரண்டாவது.. எதிர்பார்ப்புகளுடன் வெளிவந்தாலும் இந்த வாரத்திலும், இன்னும் சில வாரங்களிலும் முதல் இடத்தைப் பெற "முத்தாய்ப்பாய் வந்திருக்கும் திரைப்படம் தான் "இவன் வேற மாதிரி.

கதைப்படி சென்னை சட்டக்கல்லூரியில் சில வருடங்களுக்கு முன் போலீஸ் கண் எதிரே அவர்கள் கைகட்டி வேடிக்கை பார்க்க நடந்தேறிய கொலை வெறி மாணவர் அடிதடி தான் "இவன் வேற மாதிரி படத்திற்கான அடி நாதம்! அந்த வன்முறை சம்பவத்தில் வெகுண்டெழும் விக்ரம் பிரபு, அந்த அடிதடிக்கு காரணமான பதவி வெறிபிடித்த சட்ட அமைச்சர் உள்ளிட்ட சகலமானவர்களையும் புரட்டி எடுத்து சட்டத்தின் முன் நிறுத்துவதும், சாட்சியே இல்லாமல் கொல்வதும் தான் இவன் வேற மாதிரி படத்தின் மொத்த கதையும்!

இத்தனைக்கும் விக்ரம் பிரபு, சம்பந்தப்பட்ட சட்டக்கல்லூரி மாணவரா என்று கேட்டால் அதுதான் இல்லை. அப்புறம் பின்னே..?! அவர் "விஸ்காம் முடித்து சின்ன சின்ன போட்டோ கிராபி வேலைகள் செய்யும் புகைப்பட கலைஞர். அவருக்கு சட்டக்கல்லூரி அடிதடியில் ஆக்ரோஷம் பீறிடுவதற்கான காரணம் என்ன? எனும் கதையுடன், கதாநாயகி சுரபி, விக்ரம் பிரபுவின் காதலையும் (அப்போ நாயகி சுரபி சட்டக்கல்லூரி மாணவியாக்கும்... என நீங்கள் நினைத்தால்... அதுவும் இல்லை..என்பது தான் ஸ்கிரீன்பிளே மேஜிக்!) கலந்து கட்டி கலர்புல்லாக அதே நேரம் லவ், ஆக்ஷன், சென்டிமென்ட் திரில்லராக இவன் வேற மாதிரி திரைப்படத்தை புதுமாதிரியாக தந்திருக்கிறார் இயக்குநர் எம். சரவணன். அதற்காக அவருக்கு ஒரு ஹேட்ஸ் ஆப் சொல்லியே ஆக வேண்டும்!

இயக்குநர் எம். சரவணனின் எதிர்பார்ப்பை அவர் கற்பனையில் உருவாக்கிய குணா "அலைஸ் குணசேகரன் பாத்திரமாகவே மாறி நடித்து, அடித்து உடைத்து தூள் பரத்தியிருக்கிறார் விக்ரம் பிரபு. "கும்கியில் ஒரு மாதிரி விக்ம் பிரபு என்றால் இதில் "வேற மாதிரி விக்ரம்! பிரபு (இளைய திலகத்தை சொன்னோம்..!) கவலையை விடுங்கள் குட்டி 16 அடி அல்ல தாத்தா நடிகர் திலகத்திற்கும் சேர்த்து 64 அடி பாயும்!

புதுமுகம் சுரபி டில்லி பொண்ணாம்! செவத்த சேலத்து பக்கம் பொண்ணு மாதிரி மாலினியாகவே மாறி நடிப்பில் பொளந்து கட்டியிருக்கிறார். அதுவும் விக்ரம் பிரபு தந்த மீன்களும் தொட்டியும் கையுமாக முன்பாதியில் கடும் காதல் தவம் புரியும் அம்மணி, பின் பாதியில் தன் காதலன் ஒரு நல்ல விஷயத்திற்காக அமைச்சர் தம்பி அண்ட் கோவினரை அடித்து, அடைத்து உதைத்திருக்கிறார் என தெரிந்ததும் அதை காட்டிக்கொள்ளாமல் விக்ரமை தொடர்ந்து காதலித்து வில்லனின் கைகளில் சிக்கி உண்மையை சொல்ல மறுத்து திருஷ்டி பொம்மையாகும் இடங்கள் கண்ணீர் இல்லாதோர் கண்களையும் கரைத்து விடும்!.

அரவிந்தன் ஐ.பி.எஸ்., ஆக கணேஷ் வெங்கட்ராமன், சட்டத்துக்கு புறம்பான சட்ட அமைச்சராக வள்ளி ஹரிராஜன், அவரது தம்பியாக வம்சி கிருஷ்ணா, அம்மா சார்மிளா, புதிய அப்பாக்கள், நாயகியின் புதுமுக தங்கை எல்லோரும் பாத்திரமறிந்து பளீச்சிட்டிருக்கிறார்கள்.

சி. சத்யாவின் இசையில் லவ்வுல... லவ்வுல விழுந்துட்டேன்... என்னை மறந்தேன் இது தான் உள்ளிட்ட ஆறு பாடல்களும் எங்கேயும் எப்போதும் பட சாயலிலேயே இருந்தாலும் அதுவும் இவன் வேற மாதிரி படத்துக்கு ப்ளஸ் தான்! சக்தியின் ஒளிப்பதிவு படத்திற்கு மேலும் சக்தி கூட்டுகிறது. சண்டை பயிற்சியாளர் ராஜசேகரின் அதிரடியும் அசத்தம்!

நாயகி சுரபியை காணோம் என போலீஸ் ஸ்டேஷன் வரும் இரு வீட்டு பெற்றோரிடமும், போலீசார் இந்த காதலன் இல்லாமல் பொண்ணுக்கு வேறு காதலர் யாரும் உண்டா? எனக் கேட்டு விட்டு, இப்படி கேட்கறதால எங்களை மாதிரி போலீஸை தப்பா நினைக்காதீங்க... உங்க பொண்ணை பத்தி உங்களுக்கு நல்ல அபிப்ராயம் தான் இருக்கும். ஆனா அந்தப் பொண்ணை தேட இதுமாதிரி டீடெயில் எல்லாம் உதவியா இருக்கும் எனும் வசனத்தில் ஆகட்டும், விக்ரம் பிரபு - சுரபி வீட்டினர் இவர்கள் காதல் தெரிந்து முதன் முதலில் சந்திக்கும் காட்சியில், இவர் வீட்டினருக்கு அவரும், அவர் வீட்டினருக்கு இவரும் குடிக்க ஏதோ பானம் எடுத்து செல்லுகின்ற காட்சியில் ஆகட்டும் புரட்சி படைத்திருக்கிறார் இயக்குநர்.

அதேநேரம் முன்பாதியில் தெரியும் சற்றே குறைவான வேகம், வாட்ச் மேன் கொலையை தாமதமாக துப்பு துலக்குவது உள்ளிட்ட ஒரு சில குறைகள் இருந்தாலும் "இவன் வேற மாதிரி - ரொம்ப புது மாதிரி.!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

இவன் வேற மாதிரி - சினிமா விமர்சனம் Empty Re: இவன் வேற மாதிரி - சினிமா விமர்சனம்

Post by vasudevan31355 Mon Dec 23, 2013 8:09 pm

நன்றி சிவா! சில குறைகளைத் தவிர்த்துப் பார்த்தால் ரொம்ப நாளைக்கு அப்புறம் ஒரு நல்ல படம். விக்ரம் பிரபு செம்மையாகப் பண்ணியிருக்கிறார். அவரது உயரமும். அதிரடி ஆக்ஷன்களும் அமிதாப்பை ஞாபகப் படுத்துகின்றன. இரண்டாவது படத்தையும் சூப்பர் டூப்பர் ஹிட்டாகக் கொடுத்து விட்டார். இதே போன்ற நல்ல கதையாக தெரிந்தெடுத்து நடித்தால் வெகு சீக்கிரம் முன்னணிக்கு வந்து விடுவார்.

அவரை வாழ்த்துவோம்.
vasudevan31355
vasudevan31355
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 569
இணைந்தது : 11/11/2013

Back to top Go down

இவன் வேற மாதிரி - சினிமா விமர்சனம் Empty Re: இவன் வேற மாதிரி - சினிமா விமர்சனம்

Post by krishnaamma Mon Dec 23, 2013 8:15 pm

நான் பார்த்துவிட்டேன்..................ஓகே ரகம் தான் படம் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

இவன் வேற மாதிரி - சினிமா விமர்சனம் Empty Re: இவன் வேற மாதிரி - சினிமா விமர்சனம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum