புதிய பதிவுகள்
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am

» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 பிரியாணி – திரை விமர்சனம் (வெங்கட் பிரபு கிச்சன் – ரசிகர்கள் தான் சிக்கன்) - Page 2 Poll_c10 பிரியாணி – திரை விமர்சனம் (வெங்கட் பிரபு கிச்சன் – ரசிகர்கள் தான் சிக்கன்) - Page 2 Poll_m10 பிரியாணி – திரை விமர்சனம் (வெங்கட் பிரபு கிச்சன் – ரசிகர்கள் தான் சிக்கன்) - Page 2 Poll_c10 
65 Posts - 63%
heezulia

24 Posts - 23%
வேல்முருகன் காசி

8 Posts - 8%
mohamed nizamudeen

4 Posts - 4%
sureshyeskay

1 Post - 1%
viyasan

இந்த மாத அதிக பதிவர்கள்

257 Posts - 44%

221 Posts - 38%

29 Posts - 5%
Dr.S.Soundarapandian
 பிரியாணி – திரை விமர்சனம் (வெங்கட் பிரபு கிச்சன் – ரசிகர்கள் தான் சிக்கன்) - Page 2 Poll_c10 பிரியாணி – திரை விமர்சனம் (வெங்கட் பிரபு கிச்சன் – ரசிகர்கள் தான் சிக்கன்) - Page 2 Poll_m10 பிரியாணி – திரை விமர்சனம் (வெங்கட் பிரபு கிச்சன் – ரசிகர்கள் தான் சிக்கன்) - Page 2 Poll_c10 
21 Posts - 4%

17 Posts - 3%
prajai

12 Posts - 2%
Rathinavelu

8 Posts - 1%
Guna.D

7 Posts - 1%
T.N.Balasubramanian

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிரியாணி – திரை விமர்சனம் (வெங்கட் பிரபு கிச்சன் – ரசிகர்கள் தான் சிக்கன்)

Page 2 of 2 Previous  1, 2

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Dec 21, 2013 4:33 pm

First topic message reminder :

 பிரியாணி – திரை விமர்சனம் (வெங்கட் பிரபு கிச்சன் – ரசிகர்கள் தான் சிக்கன்) - Page 2 ZNuSB9QSuWH0Lw2mSjUA+karthi-haniska-biriyani-movie-stills-550x280

இது ஜாலியான கதை கொண்ட படம் என்பதால், நாமும் சும்மா ஜாலியாகவே ஒரு விமர்சனம் செய்வோம்.

காரமான கதையில், காமெடி கிஸ்மிஸ்களை வழி நெடுக தூவி, நடுவே லெக் பீஸ் (கவர்ச்சி) ஒன்றையும் வைத்து, கையில் கிடைத்த தன் அப்பா காலத்து பழைய மசாலா சரக்கையெல்லாம் சேர்த்து இனிப்பும், புளிப்பும், கசப்புமாக ‘பிரியாணி’ சமைத்திருக்கிறார் இயக்குநர் வெங்கட் பிரபு.

ஆனால் சாப்பிட்டு முடித்தவுடன் தான் தெரிகிறது. அதில் பெரிய ‘மட்டன் பீஸ்’ ஒன்று கிடக்கிறது என்று.

யார் அந்த ‘மட்டன் பீஸ்’ என்று யோசிக்கிறீர்களா? அட நம்ம கார்த்தி தான்.

தொடர்ந்து தோல்விப் படங்களாக கொடுத்து வந்த கார்த்தியின் நடிப்பு பசியை ‘பிரியாணி’ ஆவது தீர்க்கும் என்று நினைத்தால், இந்த படத்திலும் குடியும், பெண்களிடம் ஜொள் விடுவதும், அசட்டுத்தனமாக சிரிப்பதும் என்று மீண்டும் பலிகடாவாக்கப்பட்டுவிட்டார் என்றே தோன்றுகிறது.

படம் தொடங்கியது முதல் இடைவேளை வரை பிரேம்ஜி தான் நமக்கு ‘பிளாஷ்பேக்’ கதை சொல்கிறார்.

இடைவேளைக்கு பிறகு, “போலீஸ் துரத்தும், ஓடிகிட்டே இருப்பாங்க… இவங்களே குற்றவாளியை தேடி கண்டுபிடிப்பாங்க. கடைசில போலீஸ் வரும்” என்று பக்கத்து சீட்டில் உள்ளவர் கதை சொல்ல ஆரம்பிக்கிறார் (பிரேம்ஜி குரல் – “என்ன கொடுமை சார் இது?”)

சமீபத்தில் வெளிவந்த படங்களில், ‘டிவிஸ்ட்’ என்ற பெயரில், கிளைமாக்ஸில் நாம் எதிர்பார்க்காத ஒரு கதாப்பாத்திரத்தை குற்றவாளியாக காட்டுகிறார்கள்.

அதே போல், இந்த படத்திலும் அப்படி ஒரு கதாப்பாத்திரத்தை கிளைமாக்ஸில் கை காட்டுகிறார் வெங்கி…

ஆனால் படம் பார்ப்பவர்களுக்கு அந்த குறிப்பிட்ட கதாப்பாத்திரத்தின் மேல் சந்தேகம் வந்துவிடக்கூடாது என்பதற்காக, இன்னொரு கதாப்பாத்திரம் மேல் நமது சந்தேகத்தை திசை திருப்ப அவர் கடும் முயற்சிகள் செய்திருக்கிறார்…

சக்தி சரவணன் ஒளிப்பதிவு சுமார் ரகம். யுவன் சங்கர் ராஜாவிற்கு இது 100 வது படமாம். ஆனால் மனதை தொடும் இசை என்று படத்தில் சொல்லிக்கொள்ளும் படியாக இல்லை.

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Dec 22, 2013 10:59 am

சிவா wrote:இதற்கு மேல் நடிகர் கார்த்தி படங்களைப் பார்க்க யாரும் தியேட்டர் பக்கமே செல்ல மாட்டார்கள் என்பது மட்டும் உறுதி..! இவர் வேறு தொழிலை தேடிச் செல்வது சிறந்தது...!

இவரது இந்த வீழ்ச்சிக்குக் காரணம் தன்னை உயர்த்தியவர்களை மதிக்க மறந்தது தான்..!
மேற்கோள் செய்த பதிவு: 1040243

ஓரிரு படம் நல்ல ஓடியதுமே இவர்களை போன்றவர்களுக்கு ரஜினி , கமல் போல ஆயிட்டோம்னு நினைப்பு

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Dec 22, 2013 11:41 am

அடடே அஞ்சு ரூபா காக்கா பிரியாணியா? கா கா கா

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Dec 23, 2013 6:58 pm

தினமலர் விமர்சனம்

உடனடியாக சாப்பிட ஏதாவது தேவை என்றால் "உப்புமா கிண்டுவார்கள்... கார்த்திக்கு உடனடியாக ஒரு வெற்றி தேவை என்பதால் "பிரியாணி கிண்டி இருக்கிறார்கள். ஆனால் உஷாராக கார்த்தியும், அவரது உறவு தயாரிப்பாளர் கே.ஈ.ஞானவேல் ராஜாவும் அதை வெங்கட்பிரபுவை விட்டு சமைத்து, கார்த்தியின், "பிரியாணி, வெங்கட்பிரபுவின், "டயட் என விளம்பரப்படுத்தி வெற்றி பெற முயற்சித்திருக்கிறார்கள். "பசி - ருசி அறியாது என்பது போல் படமும் அவர்களுக்கு "பீஸ் புல்லாக வந்திருக்கிறது! ரசிகர்களுக்கு.?!

கதைப்படி சுகன் - கார்த்தியும், பரசுராம் - பிரேம்ஜி அமரனும் நான்காம் வகுப்பு படிக்கும் காலந்தொட்டு நண்பர்கள். வகுப்பில் முதல் மாணவனாக தேறும் பிரேம்ஜி, கார்த்தியின் சகவாசத்திற்கு பின் தான் சகல துன்பங்களையும் அனுபவிக்க ஆரம்பித்ததாக கதை சொல்ல ஆரம்பிக்கிறார். அதுவும் எப்படி? முடியாத பாலத்தில் படுவேகமாக ஒரு காரில், பின்னால் போலீஸ் வாகனங்கள் துரத்த பறந்து வந்து கீழே விழும் நிலையில் பிரேம்ஜி கதை சொல்ல ஆரம்பிக்கிறார்.

அதாகப்பட்டது, பிரேம்ஜி பார்த்து ஜொள் விடும் பெண்களை எல்லாம் இராத்திரி எந்நேரம் ஆனாலும் ஒரு பிளேட் பிரியாணி திண்ணாது, உறங்கபோகாத கார்த்தி உஷார் பண்ணி ஓரங்கட்டுவது ஒருபக்கம் என்றால், கதாநாயகி ஹன்சிகாவையும் சின்ஸியராக மற்றொருபக்கம் லவ்வுகிறார் கார்த்தி! நட்புக்காக எல்லாவற்றையும் பொறுத்துக் கொண்டு கார்த்தியை சகித்து கொள்ளும் பிரேம்ஜியும், கார்த்தியும் ஒருநாள் தங்களது பிரியாணி மற்றும் பெண் சபல புத்தியால் பிரபல கிரானைட் தொழில் அதிபர் நாசர் கொலையில் வகையாக சிக்குகின்றனர். அப்புறம்? அப்புறமென்ன, தங்களது புத்தி சாதுர்யத்தால் தங்களை வலை வீசித்தேடும் போலீஸ்க்கும், நாசரின், ராம்கி உள்ளிட்ட உறவுகளுக்கும் தண்ணிகாட்டி உண்மை குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்தி கார்த்தி, பிரேம்ஜி இருவரும் தப்பித்து, ஹன்சிகா கழுத்தில் தாலி கட்டு(ஹீ, ஹீ... கார்த்தி மட்டும்தான்...)வது தான் "பிரியாணி படத்தின் மொத்தகதையும்!

சுகனாக, கார்த்தி ஒருசில இடங்களில் அண்ணன் சூர்யா சாயலில் தெரிவது மட்டுமின்றி, "சிங்கம் சூர்யா மாதிரி ஆக்ஷ்ன் காட்சிகளிலும் அடித்து தூள் பரத்தியிருக்கிறார். ஹன்சிகாவுடனான காதலில் அவ்வளவு ஒட்டுதல் இல்லை! காரணம் வூட்வுக்காரம்மாவா? அல்லது படம் முழுக்க பீஸ்களாக (கார்த்தி - பிரேம்ஜி பாணியில்) பவனி வரும் பெண்களா? என்பது கார்த்திக்கே வெளிச்சம்!

ஹன்சிகா, நம் டிவி நிருபராக வந்து போகிறார். கார்த்தியுடன் கொள்ளும் ஊடலிலும், காதலிலும் அவ்வளவாக ஈர்ப்பு இல்லை! என்னாச்சு ஹன்ஸ்? சிம்புவுடனான நிஜ ஊடல், கூடல் தான் காரணமா..?!

பிரேம்ஜி அமரன் படம் முழுக்க காமெடி என்ற பெயரில் "வாவ் என வாயை பிளந்தபடி கலாய்க்கிறார். நல்லவேளை கடிக்கவில்லை! அதேநேரம் நான் உன் கேர்ள்ப்ரண்ட் அல்ல, ப்ரண்ட் என்று "பன்ச் டயலாக் பேசுவதெல்லாம் ரொம்ப ஓவர்!

பிரியாணி படத்தின் மொத்தத்திற்கு பெரிய "லெக்பீஸ் மாயவாக வரும் மாண்டி தக்கார் தான். வாவ்! அம்மணி ஆடி அசத்தும் அந்த ஒற்றை பாடல் போதும் மொத்த படத்திற்கும்! ஆனாலும் அநியாமாய் அவரை, உமா ரியாஸ் ரயிலில் தள்ளி விடுவது கொடுமை!

வில்லன் மாதிரி பூச்சாண்டி காட்டி நல்லவராகி விடும் ராம்கி, நாசர், சம்பத், உமா ரியாஸ், ஜெய்பிரகாஷ், சாட் ஆண்டர்சன் தொடங்கி கெஸ்ட் ரோலில் வரும் ஜெய், விஜய் வஸந்த், விஜயலட்சுமி எல்லோரும் "லெக்பீஸ் பிரியாணியில் எக்ஸ்ட்ராவாக கிடைக்கும் துண்டங்கள் எனும் வகையில் ஆறுதல்!

யுவன்சங்கர்ராஜாவின் இசையில் ஆறேழு பாடல்கள். ஆனாலும், "மிசிசிபி... பாடல் மட்டும் மனதில் நிற்கிறது. காரணம் யுவன் மட்டுமல்ல, அதில் ஆடும் மாயாவும் தான்! ஹீ... ஹீ...!!

சக்திசரணவணனின் ஒளிப்பதிவு தான் வெங்கட்பிரபுவின் எழுத்து - இயக்கத்தில் "பிரியாணி படத்தை பல இடங்களில் தூக்கி நிறுத்துகிறது. ஆனாலும் லாஜிக் இல்லாத கதை, தலையை சுற்றி மூக்கை தொட முயன்றிருக்கும் திரைக்கதை எல்லாம் சேர்ந்து "பிரியாணியை இன்னும் கொஞ்சம் வேகவைத்திருக்கலாமோ? என கேட்க வைத்து விடுகின்றன!

மொத்தத்தில், "பிரியாணி, "பீஸ்கள் (அழகிய பெண்கள்) இருந்தும் இல்லாதது மாதிரி தெரியும் "குஸ்கா!

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Dec 23, 2013 6:59 pm

சி.பி.செந்தில் குமாரின் விமர்சனம்

ஹீரோவும், அவரோட ஃபிரண்டும் சின்ன வயசுல இருந்தே கிளாஸ்மேட். அப்போ இருந்தே ஹீரோ காதல் இளவரசன். மடங்காத ஃபிகரெல்லாம் அவருக்கு மடங்கிடும். நண்பர் ரூட் போட்ட பொண்ணை இவர் கரெக்ட் பண்ணிடுவாரு. வில்லன் ஒரு கோடீஸ்வரர். நெம்பர் டூ இல்லீகல் பிஸ்னெஸ்ல நெம்பர் ஒன். அவரோட செட்டப் கில்மா லேடி, வாலண்ட்ரியா ஹீரோவை ஹோட்டல் ரூமுக்கு கூப்பிடுது. ஹீரோவும், நண்பரும் போறாங்க. ஏதோ மாத்திரையைக்கலந்து கொடுத்துடுது. மப்பும், மயக்கமும் தெளிஞ்சு பார்த்தா அந்த லேடியைக்காணோம்.

கோடீஸ்வரர் வில்லன் கொலை செய்யப்பட்டு கிடக்கார். போலீஸ் இவங்களைத்துரத்துது. யார் கொலையாளி ?

1. ஹீரோ மேல சின்ன வயசுல இருந்தே கடுப்பா இருக்கும் கூட இருக்கும் நண்பனா?

2. வில்லனோட சொத்துக்கும், நிர்வாகத்துக்கும் ஆசைப்பட்டு அவரோட இடத்தை அடைய நினைக்கும் ராம்கியா?

3. போலீஸ் சதியா ?

இந்த 3 சந்தேகங்களைக்கிளப்பி பின் பாதியில் அழகிய திருப்பங்களோட க்ரைம் த்ரில்லர் கதை கொடுதிருக்காங்க.

படத்தின் ஹீரோ இயக்குநர் வெங்கட் பிரபுதான். அவருக்குனு என்ன எதிர்பார்ப்பு இருக்கோ அதை கச்சிதமா நிறைவேற்றிட்டார். முன் பாதி வரை கிளாமர், காமெடி, பின் பாதியில் சஸ்பென்ஸ், சேசிங்க் இதுதான் இவரோட ஃபார்முலா. நல்லாவே ஒர்க் அவுட் ஆகி இருக்கு.

கார்த்திக்கு 3 சறுக்கல்களுக்குப்பின் கிடைத்த ஹிட் படம். நல்ல வேளை, இந்தப்படம் ஹிட் ஆகலைன்னா மேரேஜ் ஆன ராசி தான் சரி இல்லைன்னு சொல்லி இருப்பாங்க. பல பெண்கள் தானாக வந்து வலிய லவ்வும் ப்ளேபாய் கேரக்டர். கமல் , சிம்பு மாதிரி ஆட்கள் செய்ய வேண்டிய கேரக்டர். ஜாலியா செஞ்சு இருக்கார்.பெரும்பாலும் திரைக்கதையும், இயக்கமும் தான் இந்தப்படத்தில் முன்னிலை என்பதால் பல குறைகள் தெரியல. வெல்டன் கார்த்தி.

பிரேம்ஜிக்கு உண்மையில் லக் தான். தம்பிக்கு முக்கியத்துவம் வரும் மாதிரி கேரக்டரை ரெடி பண்ணி படம் பூராவும் ஹீரோவுக்கு இணையா வர வெச்சது நல்ல ஐடியா. இடைவேளை வரை பொண்ணுங்களைப்பார்த்து 2 பேரும் ஜொள் விடுவதே கலகலப்பு.

ராம்கி முக்கிய ரோல். நல்ல வில்லத்தனம். நாசர் தான் அந்த கோடீஸ்வரர். அதிக வாய்ப்பில்லை.ஆனா மகளிர் மட்டும்ல நாகேஷ் பிணமா நடிச்சது போல் இவர் ஃபிரிட்ஜ்க்குள் பிணமா நடிக்கும் காட்சிகள் எல்லாம் குட்.

ஹன்சிகா தான் நாயகி. ஒப்புக்குச்சப்பானி மாதிரி, படத்துல இவருக்கு வேலை அதிகம் இல்லை.

மாயா கேரட்கரில் கில்மா லேடியாக வரும் மாண்டி தாக்கர் தான் மெயின் கேரக்டர். செம கிளாமர். அந்தக்கால சில்க் ஸ்மிதாவை நினைவுபடுத்துகிறார்.

உமா ரியாஸ்கான்க்கு செம கேரகட்ர். விஜய் சாந்தி போல் அவர் போடும் ஃபைட்டுக்கு தியேட்டரில் விசில் சத்தம் பறக்குது. அவரது முகபாவனைகள், நடிப்பு, பாடி லேங்குவேஜ் பிரமாதம்.

ஈகரையன்
ஈகரையன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 376
இணைந்தது : 07/08/2013

Postஈகரையன் Mon Dec 23, 2013 9:17 pm

சிவா wrote:தினமலர் விமர்சனம்

மொத்தத்தில், "பிரியாணி, "பீஸ்கள் (அழகிய பெண்கள்) இருந்தும் இல்லாதது மாதிரி தெரியும் "குஸ்கா!
மேற்கோள் செய்த பதிவு: 1040482

நச்   பிரியாணி – திரை விமர்சனம் (வெங்கட் பிரபு கிச்சன் – ரசிகர்கள் தான் சிக்கன்) - Page 2 3838410834 

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Dec 23, 2013 10:06 pm

அருண் wrote:நல்ல வேலை ப பீஸ்க்கு  ஆசைப்பட்டு பிரியாணி வாங்க தியேட்டருக்கு போகல.. சிரி 

தெளிவாக பீசின் ருசியை அறியத்தந்தமைக்கு நன்றி தல!

இந்தப் படத்தைப் பார்க்க ஏன் திரையரங்கிற்கு செல்கிறீர்கள்! இதோ இங்கு பாருங்கள்!

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Dec 26, 2013 5:36 pm

பிரியாணி - சினிமா விமர்சனம்

ஓர் இரவு, ஒரு பிரியாணி, ஓர் அழகி, ஒரு கொலை... தடதடக்கும் துரத்தல் மிரட்டலே படம்!

உதவி இயக்குநர்: சார் கதை..?

வெங்கட் பிரபு: டோன்ட் வொர்ரி!

உ. இயக்குநர்: சார் லாஜிக்..?

வெ.பிரபு: கண்டுக்க மாட்டாங்கப்பா!

உ. இயக்குநர்: சார்..?!

வெ.பிரபு: அட, கார்த்தி இருக்காரு... ஹன்சிகா, பிரேம்ஜி இருக்காங்க... மற்றும் நம் உறவினர்கள் எல்லாம் இருக்காங்க... பார்த்துக்கலாம்!

- இப்படியாக முடிவெடுத்து, தனது பார்ட்டி பட்டாளத்துடன் 'பிரியாணி டின்னர்’ அடித்திருக்கிறார் இயக்குநர் வெங்கட் பிரபு. பீர், ஃபிகர், பிரியாணி, காமெடி, காதல், சஸ்பென்ஸ், க்ரைம், கிளப், மப்பு... என சகல மசாலாக்களையும் கலந்து கட்டியிருக்கிறார்கள். இடைவேளை ப்ளாக்கில்தான் கதையே ஆரம்பம். அதுவரை கார்த்தி - பிரேம்ஜி இடையிலான ஃபிகர் உஷார் அத்தியாயங்கள் மட்டுமே!

'உனக்காகத்தான் மச்சான் நம்பர் வாங்குனேன்... ஆனா பாரு, கொடுக்க மறந்துட்டேன்!'' என்று பிரேம்ஜியை சதாய்க்கும்போதும், பார்க்கும் பெண்களை எல்லாம் வசீகரமாகக் கவரும்போதும்... செம காஸனோவா கார்த்தி!

''நீ ஆசைப்படுறது எல்லாம் உனக்குக் கிடைக்குது ஓ.கே. ஆனா, நான் ஆசைப்படுறதும் உனக்கே கிடைக்குதே அது எப்படி?'' என்று போங்கு வாங்கிப் பொங்குவதும், புலி டான்ஸ் போடுவதுமாகக் கலகல பிரேம்ஜி. ஹன்சிகா இருந்தும், விசில் விசிறிகளுக்கு வேலை வைப்பது என்னவோ, 'ஹிட் ஹாட்’ மாண்டி தக்கர்.

'இவர் டைரக்டரோட க்ளோஸ் ஃப்ரெண்ட். டேட்ஸ் ஃப்ரீயா இருக்குனு நடிச்சுக் கொடுத்திருக்கார்’ என்று ஜெய்க்கு கார்டு போடுவதில் இருந்து, 'எனக்கு சண்டை சீன் இல்லையா?’ என்று சாம் ஆண்டர்சன் விரக்தியாவது வரை, பிரியாணியில் ஆங்காங்கே நச் நச் லெக் பீஸ்!

ஃபிரிட்ஜுக்குள் பிணம், டி.வி. சேனல் டிராமா, ஹிட் வுமன் அதிரடிகள், அத்தனை விவரமான சி.பி.ஐ. அதிகாரி, கார்த்தியை சட்டென நிரபராதி என்று நம்புவது... ம்ஹும்... எந்த லாஜிக்குக்கும் மெனக்கெடாமல் லெஃப்ட் இண்டிகேட்டர் போட்டு ரைட்டில் திரும்புகிறது திரைக்கதை!

100-வது படத்தில் 'டீன் டியூன்’ அடித்து இளமை விருந்து படைத்திருக்கிறது யுவனின் இசை!

'நீங்க ரெண்டு பேரும் காரைப் பத்தி மட்டும்தானே பேசிட்டு இருக்கீங்க?’, 'டேய்... போன உடனே வேலையை முடிச்சுடு... பாட்டுலாம் பாடிட்டு இருக்காத...’ - போன்ற 'அசைவ’ வசனங்கள், உங்களுக்கு அலர்ஜி இல்லையென்றால், சொல்லலாம் ஒரு பிளேட் 'பிரியாணி’!

விகடன் விமர்சனக் குழு

Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக